11.10.15

Quiz: புதிருக்கான விடை: வியாபார யோகம் இல்லாத ஜாதகம் அது


Quiz: புதிருக்கான விடை: வியாபார யோகம் இல்லாத ஜாதகம் அது

Quiz 98 விடை

11.10.2015
--------------------------------------------------
நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்திற்கான விடை! உங்கள் கணிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்.

மேஷ லக்கின ஜாதகம். ராசியும் மேஷ ராசிதான். லக்கினநாதன் செவ்வாய் 11ல்.ஆனாலும் கேதுவுடன் கூட்டு.
பத்தாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் சனீஷ்வரன். மறுபக்கம் கேது.
10ம் வீட்டு அதிபதி சனீஷ்வரன் அந்த வீட்டிற்கு 12ல்
சாதகமான அமைப்பில் இல்லை.
மேலும் வியாபாரத்திற்கு  உரிய கிரகமான (Planet for Trade) புதன் 12ல். (விரைய ஸ்தானத்தில் House of loss)
மேற்கூரிய காரணங்களால் வியாபாரம் தேறவில்லை. நஷ்டத்தில் முடிவடைந்தது.
வியாபார யோகம் இல்லை என்றால் வியாபாரத்தில் இறங்கக்கூடாது. வேலைக்குச் செல்வதுதான் உத்தமம்.
விளக்கம் போதுமா?
-------------------------------------------
புதிர்ப் போட்டியில் 28 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில்
4  பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!
-----------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------
-------------------------------
1
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 27 ஏப்ரல் 1960ல் காலை 5 மணி 35 நிமிடம் 41 விநாடிக்குப் பிறந்தவ்ர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகருக்கு24 வயதில் 6 ஜுன் 1984ல் ராகு தசா துவங்கிவிட்டது.2002 வரை 42 வயதுவரை தொடர்ந்தது.ஒரு மனிதனின் வளர்ச்சிக்காலத்தில் தசா புக்தி சரியில்லாமல் போனால் என்ன ஆகும் என்பதிற்கு இது ஒரு உதாரண ஜாதகம்.
ராகு, லக்னம் ராசிக்கு ஐந்தில் நின்றது பொருள் நாசம். மேலும் இரண்டாம் அதிபதி சுக்கிரன் லக்னம் ராசிக்கு12ல் மறைந்தது விரையத்தைக் கொடுத்தது.
லக்னாதிபதியானலும் அவரே எட்டாம் அதிபதியாகப் போய் செவ்வாய் லாப இடத்தில் கேது சம்பந்ததுடன் அமர்ந்தது சர்வ லாபஸ்தனத்திபாதித்தது.பத்தாம் இடம் சனி கேது செவ்வாயால் சூழப்பட்டு கர்ம ஸ்தானம் அடி வாங்கியது.
இவையெல்லாம் ஜாதகரின் தொழில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.
Friday, October 09, 2015 1:56:00 PM //////
------------------------------------------------------
2
////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 97
1..லக்னம் மேஷம் லக்னாதிபதி செவ்வாய் கேதுவுடன் 11ல்.
2,தொழில் ஸ்தானமான 10ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில்
3.சூரியன் உச்சம் ,சுக்கிரன் உச்சம் .நீசமான புதன் உச்சம் பெற்ற சுக்ரனுடன் சேந்து நீச பங்க ராஜ யோகம்
குரு ஆட்சி உடன் சனி ..இருந்தாலும் ???
4..10ம் வீட்டதிபதி கர்மகாரகநானா சனி தன வீட்டிற்கு 12ல் அது மிக பெரிய இழப்பு.
5, கடன் =6ம் வீட்டதிபதி புதன் 12 ல் விரயத்தில் ..10ம் வீட்டை சுபர் பார்வை இல்லை ..
***ஆகவே இவர் வியாபரம் செய்தால் நஷ்டம்தான் வரும் ..மீழ முடியாது ..!!***
Friday, October 09, 2015 6:30:00 PM /////
---------------------------------------------
3
/////Blogger Thanga raj said...
லகினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் உடன் கேது
தனகரகன் சனியுடன் சேர்ந்து குருசண்டாள யோகம்
தொழில்காரகன் தன வீட்டிற்க்கு மறைவில் ஆக சுய தொழில் எடுபடாது.
Saturday, October 10, 2015 5:51:00 PM /////
-----------------------------------------------
4
//////Blogger Gajapathi Sha said...
Ayya vannakkam, jathaganukku 6 matrum 12m grakanilai karanam viyaparam payanalikkavillai
Saturday, October 10, 2015 10:15:00 PM /////
---------------------------------------------------
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    வியாபார யோகமில்லாத ஜாதகம் - சரியான பதில் அளித்துள்ள நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ஒரு வேண்டிகோள், ஜாதகர் வேலைக்குச் சென்றாவது மேன்மை அடைந்தார என அறிந்து கொள்ள ஆவல்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் வாத்தியாரே!

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்....


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  3. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் 97 ல் தேர்ச்சி அளித்தமைக்கு நன்றி
    இருந்தாலும் வாத்தியார் அய்யாவின் அலசலை ஒட்டி ..நான் வரவில்லை . வியாபர காரகன் புதன் பற்றிய அலசல் இருந்திருக்க வேண்டும் அடுத்த முறை முயற்சிக்கிறேன் ...
    நன்றி

    ReplyDelete
  4. sir

    i see few good aspects in the horoscope like dharmakarmathipathy yoga, jupiter in 9th house (own) and exalted in navamsa.
    sun and moon in 1st house, venus exalted in both rasi and Navamsa. Mercury got neecha bhanga raja yoga. pl explain why things did n't turn good in jupiter dasha.

    thanks

    ReplyDelete
  5. //////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    வியாபார யோகமில்லாத ஜாதகம் - சரியான பதில் அளித்துள்ள நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ஒரு வேண்டிகோள், ஜாதகர் வேலைக்குச் சென்றாவது மேன்மை அடைந்தார என அறிந்து கொள்ள ஆவல்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.//////

    குரு திசையில் நீங்கள் நினைக்கின்றபடி செய்து மேன்மை அடைந்தார்!

    ReplyDelete
  6. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான விளக்கம் வாத்தியாரே!
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்....
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.////

    நல்லது. நன்றி லெக்‌ஷ்மி நாராயணன்!

    ReplyDelete
  7. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் 97 ல் தேர்ச்சி அளித்தமைக்கு நன்றி
    இருந்தாலும் வாத்தியார் அய்யாவின் அலசலை ஒட்டி ..நான் வரவில்லை . வியாபர காரகன் புதன் பற்றிய அலசல் இருந்திருக்க வேண்டும் அடுத்த முறை முயற்சிக்கிறேன் ...
    நன்றி//////

    நல்லது. அப்படியே செய்யுங்கள் கணபதியாரே!

    ReplyDelete
  8. ////OpenID guest2015 said...
    sir
    i see few good aspects in the horoscope like dharmakarmathipathy yoga, jupiter in 9th house (own) and exalted in navamsa.
    sun and moon in 1st house, venus exalted in both rasi and Navamsa. Mercury got neecha bhanga raja yoga. pl explain why things did n't turn good in jupiter dasha.
    thanks/////

    குரு திசையில் மேன்மையடையவில்லை என்று யார் சொன்னது? மேன்மையடைந்தார். ஆனால் வியாபாரம் செய்து அல்ல! அதே துறையில் வேலை செய்து மேன்மையடைந்தார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com