அடிப்படைத் தேவைகளும் அவசர வாழ்க்கையும்!
மனிதர்களில் இரண்டு வகைகள் என்று நான் அடிக்கடி சொல்வேன்.
ஒன்று பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடும்
மனிதன். இரண்டாவது பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது
என்று தெரியாத மனிதன். அதாவது கொட்டுகின்ற பணத்தை எங்கே
சேர்த்து வைப்பது? அல்லது எங்கே ஒளித்து வைப்பது அல்லது எங்கே பத்திரமாக முதலீடு செய்வது என்று தெரியாமல் அல்லாடும் மனிதன்.
பணத்தை விடுங்கள். மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்ன?
இருக்க இடம். உடுக்க உடை,.உண்ண உணவு, குடிக்கத் தண்ணீர்
ஆகிய நான்கும்தான் அடிப்படைத் தேவைகளாகும். உங்கள் மொழியில்
சொன்னால் ரோட்டி, கப்டா, மக்கான், அவுர் பானி. சின்ன வீடாக
இருந்தாலும் ஆரோக்கியமான சூழலில் இருக்கும் வீடு. நான்கே
உடைகள் என்றாலும் அழுக்கில்லாமல் துவைத்த உடைகள்.
கூழாலானாலும் வயிற்றை நிறப்பும் உணவு. கிருமிகளற்ற சுத்தமான
குடி நீர் இவைதான் அடிப்படைத் தேவைகள்.
செளகரியமான வாழ்க்கை கிடைத்தால் சந்தோஷம்தான். கிடைக்கா
விட்டால் துவண்டுபோய் படுத்துவிடக்கூடாது. நல்ல காலம் வரும்
வரை இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டும். சக மனிதன் உதவிக்கு வருவான் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இன்றைய அவசர வாழ்க்கையில் யாருக்கும் எதற்கும் நேரமில்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை!
நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ பரவாயில்லை. வறண்ட பகுதிகளில்
கூட கண்மாய்கள், கிணறுகள் உள்ளன. மக்கள் குடிக்கும் நீருக்குக்
கஷ்டப்படுவதில்லை. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் தண்ணீர்க் கஷ்டம். ஒரு குடம் தண்ணீருக்கு 3 அல்லது 6 கிலோ மீட்டர்
தூரம் நடந்து சென்று பிடித்துக் கொண்டுவர வேண்டும்.
நம்மில் சிலருக்கு அது தெரியும். பலருக்கு அது தெரியாது. நம்மால்
ஒன்றும் செய்ய முடியாது. சுதந்திரம் வாங்கி 67 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால் நிலைமை இன்றுவரை மாறவில்லை. மாநில அரசும், மத்திய
அரசும் என்ன செய்கின்றன என்று தெரியவில்லை.
ஆனால் இதைக் கேள்வியுற்ற அமெரிக்கப் பெண்மணி ஒருவர், தன்னால் முடிந்த தீர்வு ஒன்றைச் சொல்லி அந்தப் பகுதி மக்களின் சிரமங்களைக்
குறைத்தார். என்ன செய்தார் அவர்? கீழே கொடுத்துள்ளேன். படத்துடன் செய்தி உள்ளது. படித்துப் பாருங்கள்.
அன்புடன்
வாத்தியார்
=========================================
அந்தப் பெண்மணியின் மனித நேயத்தைப் பாராட்டுவோம்.
வாழ்த்துவோம்.நம்மால் முடிந்தது அது ஒன்றுதான்!
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=================================================================
அந்த இயந்திரம் வேலை செய்வது எப்படி என்பது அந்தக்காணொளியில் இன்னும் விரிவாகச் சொல்லி இருக்கலாம்.
ReplyDeleteஉண்மையாகவே நம்மை விட ஊக்கம்/மனிதாபிமானம் மிகுந்தவர்கள் தான் மேற்கத்திய மக்கள்.
ஐயா
ReplyDeleteமனிதன் தேவையை விட்டுவிட்டு எதை தேடுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் அலையும் இந்த காலத்திலும் மனிதத் தன்மை மிக்கவர்கள் உள்ளனர் என்பதை நினைக்கும் போது அவர்களின் ஆக்கபூர்வ சிந்தனைக்கு சல்யூட் அடிப்போம்.
எம்.திருமால்
பவளத்தானூர்
A salute to the great .
ReplyDeleteபயனுள்ள தகவல் . வாழ்த்துக்கள்
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteஅடிப்படைத் தேவைகள் என்ற வகையில் ராஜஸ்தான் மாநிலம் தேவை மற்றும் அதற்காக செய்யப்பட்டுள்ள மனித நேய மாற்று வசதிகள் செய்து தந்த அந்த புண்ணிய ஆத்மாவை போற்றி வணங்குவோம். என்னுடைய ஒரு சிறிய அனுபவம், 1977ல் ரஜஸ்தான் மாநிலம் அபுரோடு என்ற ஊரில் ஆரம்பித்து, சிரோஹி ரோடு, பாலி, நாடோல், பில்வாரா, பியாவர் வழியாக ஆஜ்மீர் மற்றும் டோவுசா எனும் ஊர் வரை பயணிக்கும்,(ஆயில் பைப்லைன் வேலையால்) வாய்ப்பு கிடைத்தது.அப்போது கிட்டத்தட்ட பூரா ராஜஸ்தானிலும் குட்டையில் தேங்கி நிற்க்கும் நீரையே மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ரோடு என்பது கிடையாது.ஆனால், 2005ல் அதே ராஜஸ்தானில் மீண்டும் பில்வாரா நகரில் இருந்து ஆஜ்மீர், ஜெய்ப்பூர், பியாவர் வழியாக சித்தோர்காட் வரை வேலை நிமித்தம் பயணிக்க வேண்டி வந்த போது அங்கு செய்து தரப்பட்டிருந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தபோது அசந்து போய்விட்டோம்.ஊர்களுக்கெல்லாம் தார் ரோடு வசதிகள், ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள், ஊர் தோறும் கை அடிப்பம்புகள், மற்றும் பிற வசதிகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டின.
இந்தியாவின் முதல் 6 வழிப்பாதை ஜெய்ப்பூரில் இருந்து நஸிராபாத் வரை 106 கி.மீ அமைக்கப்பட்டு அப்போதைய பிரதமர் வாஜ்பேயி அரசின் திரு.அத்வானி அவர்களால் அர்ப்பணிக்கப் பட்டது.
தற்போதைய ராஜஸ்தானின் வளர்ச்சி பிரமிப்பை தருவதுடன், தார்ப் பாலைவனத்தில் அமைந்துள்ள ஜெய்சல்மீர் என்ற நகரம் சுற்றுலாத்தலமாக சிறந்து விளங்குகின்றது.
இந்த குறிப்பு ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய வளர்ச்சி பற்றிய ஒரு சிறிய விளக்கத்திற்க்காக மட்டுமே தவிர சுய விளம்பரத்திற்க்காக இல்லை.
அன்புடன்,
-பொன்னுசாமி.
அருமை
ReplyDeleteநீங்கள் சொல்லும் தேவைகளுடன்
ReplyDeleteவாகனம் ஊர்ந்து செல்ல மற்றும்
வாழ்க்கைக்கு ஒரு துணை
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
இந்த அரசு என்ன செய்கிறது என
வியப்பாக கேட்பது புரிகிறது
விவரமாக சொல்லத்தான் முடியவில்லை
தகுதி அற்ற பிரதமர்
திறமையான மாநில முதல்வர் என
இரு துருவங்களே
இன்னமும் விடியமைக்கு காராணம்
கட்சிக்காக உழைக்கும்
ஆட்சியாளர்கள் நாட்டுக்காக உழைப்பதில்லை
பதவி பவிஷு படாடோபம் எல்லாமே ஊதிய
பலூனை போல வெடித்துவிடும் ஒரு நாள்.
இதை அறியாமல் கிடைத்த பதவியை கொண்டு
இந்த பதவிக்காலதிற்க்குள் எல்லா நாட்டையும்
சுற்றி பார்த்து விடுவேன் என பம்பரமாக
சுத்துகிறார் நம்பளை சுற்ற விட்டுவிட்டு
ஐயா,
ReplyDeleteஉண்மையில் இராஜஸ்தான் கிராம மக்தளின் தண்ணீர் சுமக்கும் சுமையைக் குறைத்துள்ள வகையில் நல்லது தானே ! அந்த இயந்திரம் எவ்வாறு வேலை செய்கிறது ?
புதிய தகவலுக்கு நன்றி, வாத்தியாரையா.
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅந்த இயந்திரம் வேலை செய்வது எப்படி என்பது அந்தக்காணொளியில் இன்னும் விரிவாகச் சொல்லி இருக்கலாம்.
உண்மையாகவே நம்மை விட ஊக்கம்/மனிதாபிமானம் மிகுந்தவர்கள் தான் மேற்கத்திய மக்கள்./////
நீங்கள் கேட்டதற்காக அந்த இயந்திரம் வேலை செய்யும் முறையைக் கீழே கொடுத்துள்ளேன் கிருஷ்ணன் சார்!:
Girls and women carrying plastic jerry cans of water on their heads is a common sight in rural areas of poor countries. The WaterWheel eases that burden by storing water in a round 50-litre container that doubles as a wheel.
Designed after consultations with villagers in the dry northern Indian state of Rajasthan, the WaterWheel is made from high-quality plastic that can withstand rough terrain. It will sell for $25-$30, compared with $75-$100 for similar products.
"Our goal is to distribute on a large scale, on small margins to 10,000-20,000 customers a year," says Cynthia Koenig, founder and chief executive of Wello, a US social venture working on ways to deliver clean water in poor countries. Wello won a $100,000 Grand Challenges Canada prize to develop the WaterWheel.
/////Blogger Thirumal Muthusamy said...
ReplyDeleteஐயா
மனிதன் தேவையை விட்டுவிட்டு எதை தேடுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் அலையும் இந்த காலத்திலும் மனிதத் தன்மை மிக்கவர்கள் உள்ளனர் என்பதை நினைக்கும் போது அவர்களின் ஆக்கபூர்வ சிந்தனைக்கு சல்யூட் அடிப்போம்.
எம்.திருமால்
பவளத்தானூர்/////
நல்லது. நன்றி திருமால்
/////Blogger hamaragana said...
ReplyDeleteA salute to the great .//////
நல்லது. நன்றி கணபதியாரே!
/////Blogger Spalaniappan Palaniappan said...
ReplyDeleteபயனுள்ள தகவல் . வாழ்த்துக்கள்//////
நல்லது நன்றி மஸ்கட் பழனியப்பன்!
////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
அடிப்படைத் தேவைகள் என்ற வகையில் ராஜஸ்தான் மாநிலம் தேவை மற்றும் அதற்காக செய்யப்பட்டுள்ள மனித நேய மாற்று வசதிகள் செய்து தந்த அந்த புண்ணிய ஆத்மாவை போற்றி வணங்குவோம். என்னுடைய ஒரு சிறிய அனுபவம், 1977ல் ரஜஸ்தான் மாநிலம் அபுரோடு என்ற ஊரில் ஆரம்பித்து, சிரோஹி ரோடு, பாலி, நாடோல், பில்வாரா, பியாவர் வழியாக ஆஜ்மீர் மற்றும் டோவுசா எனும் ஊர் வரை பயணிக்கும்,(ஆயில் பைப்லைன் வேலையால்) வாய்ப்பு கிடைத்தது.அப்போது கிட்டத்தட்ட பூரா ராஜஸ்தானிலும் குட்டையில் தேங்கி நிற்க்கும் நீரையே மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ரோடு என்பது கிடையாது.ஆனால், 2005ல் அதே ராஜஸ்தானில் மீண்டும் பில்வாரா நகரில் இருந்து ஆஜ்மீர், ஜெய்ப்பூர், பியாவர் வழியாக சித்தோர்காட் வரை வேலை நிமித்தம் பயணிக்க வேண்டி வந்த போது அங்கு செய்து தரப்பட்டிருந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தபோது அசந்து போய்விட்டோம்.ஊர்களுக்கெல்லாம் தார் ரோடு வசதிகள், ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள், ஊர் தோறும் கை அடிப்பம்புகள், மற்றும் பிற வசதிகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டின.
இந்தியாவின் முதல் 6 வழிப்பாதை ஜெய்ப்பூரில் இருந்து நஸிராபாத் வரை 106 கி.மீ அமைக்கப்பட்டு அப்போதைய பிரதமர் வாஜ்பேயி அரசின் திரு.அத்வானி அவர்களால் அர்ப்பணிக்கப் பட்டது.
தற்போதைய ராஜஸ்தானின் வளர்ச்சி பிரமிப்பை தருவதுடன், தார்ப் பாலைவனத்தில் அமைந்துள்ள ஜெய்சல்மீர் என்ற நகரம் சுற்றுலாத்தலமாக சிறந்து விளங்குகின்றது.
இந்த குறிப்பு ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய வளர்ச்சி பற்றிய ஒரு சிறிய விளக்கத்திற்க்காக மட்டுமே தவிர சுய விளம்பரத்திற்க்காக இல்லை.
அன்புடன்,
-பொன்னுசாமி.////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

////Blogger Nagendra Bharathi said...
ReplyDeleteஅருமை////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteநீங்கள் சொல்லும் தேவைகளுடன்
வாகனம் ஊர்ந்து செல்ல மற்றும்
வாழ்க்கைக்கு ஒரு துணை
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
இந்த அரசு என்ன செய்கிறது என
வியப்பாக கேட்பது புரிகிறது
விவரமாக சொல்லத்தான் முடியவில்லை
தகுதி அற்ற பிரதமர்
திறமையான மாநில முதல்வர் என
இரு துருவங்களே
இன்னமும் விடியமைக்கு காராணம்
கட்சிக்காக உழைக்கும்
ஆட்சியாளர்கள் நாட்டுக்காக உழைப்பதில்லை
பதவி பவிஷு படாடோபம் எல்லாமே ஊதிய
பலூனை போல வெடித்துவிடும் ஒரு நாள்.
இதை அறியாமல் கிடைத்த பதவியை கொண்டு
இந்த பதவிக்காலதிற்க்குள் எல்லா நாட்டையும்
சுற்றி பார்த்து விடுவேன் என பம்பரமாக
சுத்துகிறார் நம்பளை சுற்ற விட்டுவிட்டு ////
நல்லது உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!
///////Blogger வரதராஜன் said...
ReplyDeleteஐயா,
உண்மையில் இராஜஸ்தான் கிராம மக்தளின் தண்ணீர் சுமக்கும் சுமையைக் குறைத்துள்ள வகையில் நல்லது தானே ! அந்த இயந்திரம் எவ்வாறு வேலை செய்கிறது ?
புதிய தகவலுக்கு நன்றி, வாத்தியாரையா./////
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. நீங்கள் கேட்டுள்ள விபரம் கீழே உள்ளது:
Girls and women carrying plastic jerry cans of water on their heads is a common sight in rural areas of poor countries. The WaterWheel eases that burden by storing water in a round 50-litre container that doubles as a wheel.
Designed after consultations with villagers in the dry northern Indian state of Rajasthan, the WaterWheel is made from high-quality plastic that can withstand rough terrain. It will sell for $25-$30, compared with $75-$100 for similar products.
"Our goal is to distribute on a large scale, on small margins to 10,000-20,000 customers a year," says Cynthia Koenig, founder and chief executive of Wello, a US social venture working on ways to deliver clean water in poor countries. Wello won a $100,000 Grand Challenges Canada prize to develop the WaterWheel.
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!,
ReplyDeleteமனிதனின் ஒவ்வொரு சிந்தனையும் ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டாலும்,அந்த தீர்வை வியாபார நோக்கில் எப்படி காசாக மாற்றுவது என்ற வித்தைக்கும் வித்திடுகிறது. மேலை நாட்டை விட நம் இந்திய கலைஞர்கள் இதில் கை தேர்ந்தவர்கள்.
இந்த இயந்திரம் வேலை செய்யும் உத்திக்கு நமது நாட்டில், தரையை சமன் செய்ய உபயோகிக்கும் கை உருளையின்(Manual roller being used in cricket ground & in ROAD ROLLER FRONT WHEEL,where water or coolent oil being used for prevention of over heating) மெக்கானிசமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
எனினும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிடப்பட்ட தங்களின் பதிவு சிறப்புக்குரியது.
அன்புடன்,
-பொன்னுசாமி.
///////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!,
மனிதனின் ஒவ்வொரு சிந்தனையும் ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டாலும்,அந்த தீர்வை வியாபார நோக்கில் எப்படி காசாக மாற்றுவது என்ற வித்தைக்கும் வித்திடுகிறது. மேலை நாட்டை விட நம் இந்திய கலைஞர்கள் இதில் கை தேர்ந்தவர்கள்.
இந்த இயந்திரம் வேலை செய்யும் உத்திக்கு நமது நாட்டில், தரையை சமன் செய்ய உபயோகிக்கும் கை உருளையின்(Manual roller being used in cricket ground & in ROAD ROLLER FRONT WHEEL,where water or coolent oil being used for prevention of over heating) மெக்கானிசமே பயன்படுத்தப் பட்டுள்ளது.
எனினும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிடப்பட்ட தங்களின் பதிவு சிறப்புக்குரியது.
அன்புடன்,
-பொன்னுசாமி.//////
தங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!