4.10.15

Quiz: புதிருக்கான விடை: குதிரையும் கிடைத்தது. அமர்ந்து செல்ல தேரும் (Chariot) கிடைத்தது!


Quiz: புதிருக்கான விடை: குதிரையும் கிடைத்தது. அமர்ந்து செல்ல தேரும் (Chariot) கிடைத்தது! 

Quiz 97 விடை

4.10.2015
--------------------------------------------------
நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்திற்கான விடை! உங்கள் கணிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களை உரிய காலத்தில் அனுபவிப்பதற்கு,
நான் பலமுறைகள் சொல்லியபடி லக்கினமும் லக்கினாதிபதியும்
ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.

இந்த ஜாதகத்தில் அது நன்றாக அமைந்துள்ளது.

ஜாதகத்தைப் பாருங்கள்.


பாபகர்த்தாரி யோகம் எதுவும் இல்லாமல் லக்கினம் சுத்தமாக உள்ளது. லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே இருக்கிறார். அவருடன்
பாக்கிய  ஸ்தான அதிபதி  (9th Lord) புதனும், லாபஸ்தான அதிபதி
(11th Lord) சூரியனும் சேர்ந்திருக்கிறார்கள். வெற்றிகளுக்கு உரிய 3ஆம்
இடத்து அதிபதி  குருவும் உடன் இருக்கிறார்.

அத்துடன் துலா லக்கினத்திற்கு யோககாரகனான சனீஷ்வரன்
 7ம் இடத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேரடிப் பார்வையில் வைத்திருக்கிறார்.பத்தாம் இடத்து அதிபதி சந்திரன் கேந்திரத்தில்
(4ல்) அமர்ந்து 10ம் வீட்டைத் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருக்கிறார். உடன் 2ம் இடத்து அதிபதி செவ்வாயும் கூட்டாக இருக்கிறார்.

செவ்வாய் உச்சம் பெற்று உள்ளார்

செவ்வாயும் சனீஷ்வரனும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இத்தனை சிறப்புக்கள் உள்ளதால் ஜாதகனின் வாழ்க்கைப் பயணத்திற்கு குதிரையும் கிடைதத்து. அமர்ந்து செல்ல தேரும் (Chariot) கிடைத்தத்து.

விளக்கம் போதுமா?
-------------------------------------------
புதிர்ப் போட்டியில் 18 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 17 பேர்கள் ஜாதகருக்குக் குதிரையில் போகின்ற அமைப்பு என்கின்ற சரியான

பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியில்
வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!
-----------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------
1
Blogger kmr.krishnan said...1
குதிரை சவாரிதான். கழுதை கிடையாது.
kmrk1949@gmail.com
2
Blogger selvaspk said...
He will ride 5 horse chariot!!
3
Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
குதிரையில் போகிற அமைப்பு.
4
Blogger hamaragana said...
நல்ல நிபுணத்துவத்துடன் கூடிய வேலை.. தலைமை பண்பு ..செல்வாக்குடன் இருப்பார். **
5
Blogger katu raj said...
செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் செவ்வாய் சம்பந்தமான வேலை அமைந்திருக்கும்
6
Blogger shree said...
10ம் இடம் கடகம், அதன் அதிபதியும், செவ்வாயும் செர்ந்து பார்ப்பதால் குதிரையில் போகிற யோகம்.
7
Blogger C Jeevanantham said...
Since 10th lord and Lagna Lord joins, it created Raja Yoga. So He became wealthy through hardwork.
8
Blogger amuthavel murugesan said...
ஜாதகர் நல்ல வேலையில் இருந்து இருப்பார்.
மு.சாந்தி
9
Blogger Gajapathi Sha said...
Jathaganukku sevvai dasai suriya bhukthiyil(pathagathi adipathi) arasu velai kidaikkum
10
Blogger KJ said...
Native is in higher position in his profession.
11
Blogger shree said...
10ம் இடத்து அதிபதி 4ம் வீட்டில் இருந்து,உடன் செவ்வாயும் இருந்து , 7ம் பார்வையாக பார்ப்பதால், குதிரையில் செல்லும் யோகம்.
12
Blogger plastics said...
வாலிப வயதில் குதிரையில் செல்வது மட்டுமன்றி குதிரை ஓட்டுபவரையும் பெற்று செல்வசீமானாக திகழ்வார்.
டாக்டர். முரளிஸ்ரீனிவாசன்
13
Blogger Ramesh said...
லக்ன அதிபதி வலுவுடனும் ,தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் அதற்க்கு ஏழாம் பாவத்திலும் வழுவுடன் இருப்பதால் கழுதை அல்ல ,,குதிரையே
14
Blogger selvam velusamy said...
ஜாதகர் நல்ல வேலையில் இருக்க கூடிய அமைப்புதான்.
15
Blogger V.Karthi keyan said...
Kuthirai , 10 the lord in 4th house with exalted sevai
16
Blogger Rajam Anand said...
the native will live like a king travelling on horseback.
17
Blogger Chandrasekaran Suryanarayana said...
11ம் வீடு 44 பரல் மிகவும் பலம் நிறைந்துள்ளது. தன யோகத்தின் பயனாக நினைத்து பார்த்திருக்க முடியாத அளவிற்கு செல்வம் இருக்கும் .சிறு வயது
முதல் பண தட்டுபாடு இருக்காது.
இந்த ஜாதகத்தில் 18 யோகங்கள் உள்ளன.(சசி மங்கள , கஜகேசரி , தன யோகம் , பர்வத, மங்கள, சங்க, சரீர சவுக்கிய யோகம் , பிரம்ம, ராஜ
லஷண, அமலா, வசுமதி ......)
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. என் உறவினர் ஒருவருக்கு இதே அமைப்பு. லக்கினம் மாறியதால் பலன் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

    மிக்க நன்றி ஐயா!
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  2. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தேசப்பிதா காந்தி ஜெயந்தி என்னை பொறுத்தவரை ”அச்சச்சோ!” என்றாகிவிட்டது.
    நேற்றைய புரட்டாசி 3வது சனிக்கிழமையும், குடும்ப விசேஷத்தின் காரணமாகவும் புதிரை பார்க்கும் பாக்கியம் கிட்டாமல் போய்விட்டது.எனினும் புதிரின் விடைகள் மற்றும் வாத்தியாரின் விளக்கம் தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சியே!.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  3. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ஜாதகத்தில் உள்ள ஒரு சிறப்பை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.
    லக்கினத்தில் அமர்ந்த குரு, புதன் திக்பலம் - லக்கினத்திற்கு 4ல் அமர்ந்த சந்திரன் திக்பலம் - 7ல் அமர்ந்த சனி திக்பலம் - நீச்சம் பெற்ற சனியை நீச்சம் பெற்ற சூரியன் நேர்ப்பார்வையில் இருப்பது ஒரு ராஜயோகம் - நீச்சபஙம் பெற்ற சனியும் ஆட்சி பெற்ற சுக்கிரனும் நேர்ப்பார்வையில் மஹாலஷ்மி யோகம் - நம்ம முனுசாமி புலிப்பாணி சொல்லியபடி ஆட்சி பெற்ற சுக்கிரனுக்கு 4ல் சந்திரன் (அல்லது) சந்திரனுக்கு 4ல் சுக்கிரனோ ,இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருப்பின் இடியென குமுறும் தாரையோகம்- யோக ஜாதகத்திற்கு நல்ல உதாரண ஜாதகம் இது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  4. Similar horoscope discussed by B.V. RAMAN IN volume 2 page 292 chart no 144. Dula lagnam, 4th house moon, 7th house sani, 8th house guru, 9th house mars, 6th house sukurnan in meena rasi.
    The relationship between 10th house cancer, moon, mars explains naive medical profession. 10th lord moon in Kendra influenced by 3 planets gave him a post of authority. 10th house cancer is aspected by its lords moon. 10th lord moon is in Capricorn aspected by mars and saturn. Native retired as state inspector general of civil profession.
    I suggest to teacher, discussion between the student for analysis of horoscope after the each quiz result .

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    என் உறவினர் ஒருவருக்கு இதே அமைப்பு. லக்கினம் மாறியதால் பலன் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
    மிக்க நன்றி ஐயா!
    kmrk1949@gmail.com/////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    ஜாதகத்தில் உள்ள ஒரு சிறப்பை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.
    லக்கினத்தில் அமர்ந்த குரு, புதன் திக்பலம் - லக்கினத்திற்கு 4ல் அமர்ந்த சந்திரன் திக்பலம் - 7ல் அமர்ந்த சனி திக்பலம் - நீச்சம் பெற்ற சனியை நீச்சம் பெற்ற சூரியன் நேர்ப்பார்வையில் இருப்பது ஒரு ராஜயோகம் - நீச்சபஙம் பெற்ற சனியும் ஆட்சி பெற்ற சுக்கிரனும் நேர்ப்பார்வையில் மஹாலஷ்மி யோகம் - நம்ம முனுசாமி புலிப்பாணி சொல்லியபடி ஆட்சி பெற்ற சுக்கிரனுக்கு 4ல் சந்திரன் (அல்லது) சந்திரனுக்கு 4ல் சுக்கிரனோ ,இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருப்பின் இடியென குமுறும் தாரையோகம்- யோக ஜாதகத்திற்கு நல்ல உதாரண ஜாதகம் இது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி பொன்னுசாமி!

    ReplyDelete
  7. அன்புடன் வணக்கம் வாத்தியார் ஐயா ..

    பரவாயில்லை கொஞ்சம் தேறி இருக்கிறேன் ..
    நன்றி அய்யா..

    ReplyDelete
  8. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    இந்த ஜாதகம் வெளியிடப்பட்டுள்ள விதம் நம்மூர் கணக்கிற்க்கு தோதாக வராததால் தாங்களே யார் ஜாதகம் என தெளிவு படுத்தினால் மிக்க நலம். ஜே ஆர் டி டாட்டா அல்லது லட்சுமி மிட்டல் அல்லது மேஜர் ஜெனரல் மானெக்‌ஷா போன்றவர்களுடையதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது என கருதுகின்றேன்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com