20.9.15

Quiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்?


Quiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்?

20.9.2015

சில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கும். ஜாதகர் பிரபலமானவராக இருப்பார். நமது கணிப்பு தவறாகிவிடும்.

நேற்றையப் புதிரில் கொடுத்திருந்த ஜாதகமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஜாதகர் உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மூவரில் ஒருவர். 
அதைச் சொன்னால்தான்தான் தெரியும்.

ஆனால் ஜாதகத்தைச் சட்டென்று பார்த்தால் தெரியாது. குழப்பும். ஆமாம் இரண்டில் உள்ள சனீஷ்வரன் குழப்புவார்.

விருச்சிக லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி செவ்வாய் எட்டில்!
பாக்கியநாதன்  (9th Lord) சந்திரன் நீசம்
இரண்டில் (தன ஸ்தானத்தில்) சனி
மூன்று நிலைப் பாடுகளுமே சரியில்லை

சுகாதிபதி சுக்கிரன் நீசம் (ஆனாலும் அவன் உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்துடன் இருக்கிறான்)
இரண்டில் சனி இருந்தாலும், அந்த வீட்டின் மேல் அதன் அதிபதியும், தனகாரகனுமான குருவின் பார்வை உள்ளது.

ஆகவே ஓரளவு நிதித் தட்டுப்பாடு இல்லாத ஜாதகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தரானது எப்படி?

ஜாதகத்தில் 26 யோகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேலை செய்து 
ஜாதகரை செல்வத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

யோகங்களின் முக்கியத்துவம் அப்போதுதான் நமக்குப் பிடிபடும்

ஜாதகர் யார் தெரியுமா?

வாரன் பஃபெட் (Warren Buffet) உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்.



இந்த ஜாதகத்தை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

யோகங்களைப் பற்றியும், அதாவது முக்கியமான யோகங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு யோகங்களைப் பற்றிய பாடங்களை நடத்தலாம் என்று உள்ளேன். இப்போது அல்ல! அடுத்தடுத்து 3 புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு! பொறுத்திருங்கள்
---------------------------------------------------------------
நேற்றைய போட்டியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 36 பேர்கள்
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். Participation is important. அவர்களில்
 25 பேர்கள் ஜாதகர் ஓட்டை அண்டா/நிதி நெருக்கடி உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

திருவாளர் கெளடா போனுசாமி அவர்கள், ஜாதகம் யாருடையது என்று கண்டுபிடித்து எழுதியுள்ளார். அவருடைய சமயோசிதத்திற்கு பாராட்டு. அவருடைய பின்னூட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

///////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
நல்ல அண்டா. திருவாளர். வாரென் பஃபெட் அவர்கள் எப்படி ஓட்டை அண்டாவாக முடியும்.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Saturday, September 19, 2015 7:45:00 PM /////

அதேபோல ஸ்ரீனிவாச ராஜுலு அவர்களும் வாரன் பஃபெட்டும் அதே தேதியில் பிறந்தவர் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------
சரியான விடையை அல்லது ஒட்டிய விடையை எழுதியவர்கள் மொத்தம்
9 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பெயரும் எழுதிய பின்னூட்டமும் தொகுத்துக் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.

அன்புடன்
வாத்தியார்
======================================
1
Blogger Hello Hello said...
thanakaragan guru lapakaragan sevaiudan kuttani kasu thangum
Friday, September 18, 2015 5:50:00 AM 
---------------------------------------
2
/////Blogger KJ said...
Respected Sir,
Native can be a Rich person.
1.Lagnathypathy with Guru aspects second house
2.Though Saniswaran in second house, Due to Guru's aspect he will play quiet music :-)
3.11th place Neesabangam Raja yogam.. Budan with Sukran (Nibuna yogam)
4. May be he become Rich due to hard work , Sevvai aspects third house also.
5. 10th house owner in tenth place (Suriyan), may be investor, or Government official
Thanks,
Sathishkumar GS
Friday, September 18, 2015 12:21:00 PM //////
------------------------------------------------
3
/////Blogger asbvsri said...
Quiz No: 95 Answer
இரண்டாம் வீடு அண்டா. இரண்டாம் வீட்டுக்காரர் இரண்டாம் வீட்டை லக்னாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
11 ஆம் அதிபதி புதன் உச்சத்தில் ஆட்சி / மூலத்திரிகோண வீட்டில்.
7 ஆம் / 12 ஆம் அதிபதி சுக்ரன் நீச்ச வீட்டில் நீச்ச பங்கமாகி வலுவாகியுள்ளார்.
சனி இரண்டாம் வீட்டில். 9 ஆம் அதிபதி சந்த்ரன் நீச்சமாகி லக்னத்தில். பிறப்பில் ஏழையாக இருந்திருப்பார்.
பிறப்பு சனி மஹாதசை 7 வயதில் முடிந்தபின் உச்ச புதனின் 17 ஆண்டுகள் ஜாதகர் சிற்ப்பாக வாழ்ந்திருப்பார். பின்னர் வந்த 7 வருடங்களில் கேதுவின் சிறிய சலசலப்பிற்கு பிறகு 20 வருடங்கள் சுக்ரனின் தசையில் 30 வயதிற்கு மேல் பணம் சேர்த்து பணக்காரராகியிருப்பார்.
K R Ananthakrishnan - Chennai
Friday, September 18, 2015 12:48:00 PM //////
-------------------------------------------------
4
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஆகஸ்டு 1930ல் பிறந்தவர். அனுஷ நட்சத்திரம்.கொடுக்கப்பட்டுள்ள லக்கினத்திற்காக, பிறந்த நேரத்தை காலை 11 45 என்று எடுத்துக் கொண்டால்
தசா இருப்பைச் சரி செய்ய முடியவில்லை.
30 வயதிற்கு மேல் வந்த சுக்கிர தசாவில் சுயமாகச் சம்பாதித்து பணம் கையில் தங்கியது. சுக்கிரன் நீச மடைந்தாலும் நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீசபங்க ராஜ யோகம் என்பதனாலும், ஆறாம் இடத்தில் இருந்த ராகுவாலும் பணவரவு இருந்தது.லக்கின அதிபனும், குருவும் சேர்ந்து இரண்டாம் இடத்தினைப் பார்த்ததால் சேமிக்க முடிந்தது.சனியின் காலில் பிறந்தவராதலால் இரண்டில் நின்ற சனி தடுக்கவில்லை.
முற்றிலும் ஓட்டை அண்டா அல்ல. தண்ணீர் பிடித்து வைக்கலாம்.
Friday, September 18, 2015 12:56:00 PM ///////
-------------------------------------------------
5
//////Blogger Narayanan V said...
Nee cha panga rajayougam is there.
He would have come up step by step well
v narayanan
advocate
Friday, September 18, 2015 9:11:00 PM ////////
-----------------------------------------------
6
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 95க்கான பதில்.
ஜாதகர் பிறந்த நேரம் : 30 Aug 1930 பகல் 12:30 மணி
விருச்சிக லக்கினம், விருச்சிக ராசி. லக்கினதிபதி செவ்வாய் எட்டில் மறைந்தாலும் அவர் அங்கு குருவுடன் கூடி இரண்டாம் இடத்திலுள்ள வக்கிர சனியை கட்டுக்குள் வைத்திருப்பதால், ஜாதகரின் ஓட்டை அண்டா குணத்தை சற்றே மாற்றி பணத்தை சேமிக்கும் குணத்தை வழங்கி மேலும் முன்னேற வைத்திருப்பார். 11ம் இடத்தில் 33பரல் அதற்கு கை கொடுத்திருக்கும். அங்கு புதன் உட்சமாகி சுக்கிரன் நீச பங்கம் அடைந்துள்ளார் என்பது கவனிக்கதக்கது.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Saturday, September 19, 2015 9:53:00 AM /////
---------------------------------------------
7
////OpenID guest2015 said...
saturn in 2nd house aspected by mars and jupiter. lagna lord and dhana karaka jupiter in 8th house. Debilitated moon in 1st house. However 11th lord exalted mercury and venus gives neecha bhanga raja yoga. This aspect might have given him a decent wealth during their respective dasa bhukti.
thanks
Saturday, September 19, 2015 10:44:00 AM /////
--------------------------------------------
8
////Blogger Radha Sridhar said...
குரு வணக்கம்.
இரண்டாம் அதிபதி எட்டில் லக்கினதிபதியுடன் அமர்ந்து தன/தன் வீட்டை பார்க்கிறார். நன்மை. சுக ஸ்தானாதிபதி சனீஸ்வரர் இரண்டாம் வீட்டில் அமர்வது நன்மை. நல்ல அண்டா.
Saturday, September 19, 2015 11:47:00 AM /////
------------------------------------------------------
9
////Blogger Gouthaman R said...
ஜாதகர் நன்கு பணம் சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றுள்ளார். காரணம், 11ம் வீட்டதிபதி புதன் 11ல் உச்சம் & 10ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் சூரியன் & 2ம் வீட்டில் குருவின் சிறப்பு பார்வை.
பிழையிருந்தால் மன்னிக்கவும், அடியேன் இப்போதுதான் தொடக்க கல்வி நிலையில் உள்ளேன்.
-ரா. கௌதமன்.
Saturday, September 19, 2015 7:53:00 PM /////
--------------------------------------------------
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களின் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒரு வாத்தியார் (நம்ம குருதேன்!!!) வெளியிட்ட ”வகுப்பறை ஜோதிடம்” என்ற நூலின் வழி காட்டுதலே இந்த பதில்.
    வாத்தியார் இன்னும் நூல்கள் எழுதவிருக்கின்றார்.வாத்தியாருக்கு (குருவிற்க்கு)மனம் நிறைய “ஓஓஓ........போடலமா?
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  2. அய்யா,
    தனது சொத்தில் 99% நன்கொடை வழங்க உள்ளார்..
    அவ்வாறு செய்தால் ஓட்டை ஆண்ட ஆகிவிடாதா.....

    ReplyDelete
  3. Sir
    I m happy that my answer/analysis is correct.
    Also I mentioned He may be Investor. Ella pugalum ungalukum iraivanukum matume.
    Thanks
    Sathishkumar GS

    ReplyDelete
  4. Sir

    Like you said this horoscope is so strong if you dive deep in to it. badhakathipathy moon is debilitated. Retrograded planets will always follow the planets aspecting them. Here saturn will take the positive energy from jupiter and mars. if jupiter aspects ketu one would become very very rich. Mandi in 10th house will bring fame. so there is no such negative things as we see it.
    hence all dasha bhuktis right from mercury, ketu, venus,sun, moon, mars gave him a lot of success . lagna lord and jupiter in 8th house will make him live long too..

    thanks
    sree

    ReplyDelete
  5. சரியாகச் சொல்லியவர்கள் பட்டியலில் அடியேன் பெயரைப் பார்த்த‌டவுடன்தான்
    நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஏனெனில் அந்த அளவு குழப்பிய ஜாதகம் இது.
    ஒரு சமயம் பூவா தலையா போட்டுப் பார்த்து பதிலை எழுதிவிடலாம என்று
    கூட நினைத்தேன்.ஆனாலும் சுக்கிரனின் நீசபங்க நிலை, சுக்கிர தசா,புதனின் உச்ச நிலை ஆறாம் இட ராகு ஆகியவை என்னை ஈர்த்து அவற்றிற்குத் தகுந்த சரியான பதிலினைச் சொல்ல வைத்தனர்.
    மிக்க நன்றி ஐயா!

    கே முத்துராமகிருஷ்ணன்
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  6. Good explanation sir. It is evident now that it is a long way to go in analysing correctly. The quiz is very useful.

    ReplyDelete
  7. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களின் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒரு வாத்தியார் (நம்ம குருதேன்!!!) வெளியிட்ட ”வகுப்பறை ஜோதிடம்” என்ற நூலின் வழி காட்டுதலே இந்த பதில்.வாத்தியார் இன்னும் நூல்கள் எழுதவிருக்கின்றார்.வாத்தியாருக்கு (குருவிற்க்கு)மனம் நிறைய “ஓஓஓ........போடலமா?
    அன்புடன்,
    -பொன்னுசாமி.//////

    என்னவேண்டுமென்றாலும் போடுங்கள் ராசா! இது மாணவர்களின் உலகம்!

    ReplyDelete
  8. /////Blogger jayakumar M said...
    அய்யா,
    தனது சொத்தில் 99% நன்கொடை வழங்க உள்ளார்..
    அவ்வாறு செய்தால் ஓட்டை ஆண்ட ஆகிவிடாதா.....//////

    தர்மம் செய்யும்போது அண்டா காலியாகலாமே தவிர, ஓட்டையாகாது நண்பரே1 அதை நினைத்துப் பாருங்கள்!

    ReplyDelete
  9. /////Blogger KJ said...
    Sir
    I m happy that my answer/analysis is correct.
    Also I mentioned He may be Investor. Ella pugalum ungalukum iraivanukum matume.
    Thanks
    Sathishkumar GS//////

    இல்லை உங்களின் கற்றலும் நினைவாற்றலுக்கும் பங்கு உண்டு சுவாமி!

    ReplyDelete
  10. ////OpenID guest2015 said...
    Sir
    Like you said this horoscope is so strong if you dive deep in to it. badhakathipathy moon is debilitated. Retrograded planets will always follow the planets aspecting them. Here saturn will take the positive energy from jupiter and mars. if jupiter aspects ketu one would become very very rich. Mandi in 10th house will bring fame. so there is no such negative things as we see it.
    hence all dasha bhuktis right from mercury, ketu, venus,sun, moon, mars gave him a lot of success . lagna lord and jupiter in 8th house will make him live long too..
    thanks
    sree////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    சரியாகச் சொல்லியவர்கள் பட்டியலில் அடியேன் பெயரைப் பார்த்த‌டவுடன்தான்
    நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஏனெனில் அந்த அளவு குழப்பிய ஜாதகம் இது.
    ஒரு சமயம் பூவா தலையா போட்டுப் பார்த்து பதிலை எழுதிவிடலாம என்று
    கூட நினைத்தேன்.ஆனாலும் சுக்கிரனின் நீசபங்க நிலை, சுக்கிர தசா,புதனின் உச்ச நிலை ஆறாம் இட ராகு ஆகியவை என்னை ஈர்த்து அவற்றிற்குத் தகுந்த சரியான பதிலினைச் சொல்ல வைத்தனர்.
    மிக்க நன்றி ஐயா!
    கே முத்துராமகிருஷ்ணன்
    kmrk1949@gmail.com//////

    உண்மைதான். உங்களின் நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger sriram1114 said...
    Good explanation sir. It is evident now that it is a long way to go in analysing correctly. The quiz is very useful./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. கிரக நிலைகளை ஆராய்ந்து மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகி, தவறான பதில் எழுத முற்படும்போது வாத்தியாரின் அஷ்டவர்க்க பாடம் கை கொடுத்தது.
    எனது பதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் வாத்தியாரின் அஷ்டவர்க்க பாடத்தின் நுணுக்கம். வெறும் பதில் மட்டுமே என்னுடையது.
    புகழ் வாத்தியாருக்கும், வகுப்பறைக்கும்.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com