கற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்
----------------------------------------------------------------------------------
ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.
அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான
கற்றல் மட்டுமே…எனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.
ஆனால் குருவின் இந்த ‘வேகம்’ மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக்
கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே
இருக்கிறாரே’ என்று குற்றம் சாட்டினான்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத்
தூக்கி வெளியே கொண்டு போய் வை’ என்றார்.
விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல்
தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே… மிகவும் கனமாக உள்ளது’ என்று தன்
தோல்வியை ஒப்புக் கொண்டான்.
‘சரி… அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொண்டு போய் வை’ என்றார் ஞானி.
அட… நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன!
‘கண்ணா… உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன்
மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம்
கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால்
அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும்
இருக்கும்’ என்று விளக்கினார் ஞானி.
மாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது!
தொடர்ந்து ஞானி இப்படிச் சொன்னார்…
நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.
ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு
குட்டிக் கதை சொல்கிறேன்…
ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக
வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோல் மேல் போட்டு
கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை
பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.
எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க
முடிகிறது என்று பலரும் கேட்டனர்.
ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.
எப்படி?
‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.
பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம்
படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத்
தெரியாது. சுகமாகத் தெரியும்.
அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க
வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின்
மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.
இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல.
படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார்.
-------------------------------------------
ஜோதிடப் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இதுதான்
முறை சாமிகளா!
அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
intha paadam mulumaiyaga purinthathu guruve. ini ellam sugame
ReplyDeleteMayavanathan
Mannargudi
ஐயா,
ReplyDeleteதங்களின் ஜோதிடப் புதிர் பகுதிக்கு என்னால் பின்னூட்டம் எழுத முடிவதில்லையே என்று வேதனைப்படுகிறேன். ஏனெனில், நான் மிகச் சொற்ப நாட்கள் மட்டுமே படிக்க முடிந்தது. தொடர முடியாத நெருக்கடி நிலை. ஆனால் கடந்த இருமாதங்களாகத் தொடர்ந்து வகுப்பில் இருக்கின்றேன்.பத்தகம் வாங்கியுள்ளதால் படித்தும் வருகின்றேன். சிற்சிவ சந்தேகங்கள் உள்ளன.அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? வகுப்பறை மாணவர்கள் யாராவது அணுகப்படவேண்டுமா? ஏனெனில், அவை அடிப்படை பாட சந்தேகங்கள்!?
நான் கேள்வி கேட்டதோ, கேட்கப்பட்ட விதமோ தவறானால் என்னை மன்னித்து கடிதத்தைப் பிரசுரிக்காமல் இருந்துவிடவும். நன்றி.
ஆசிரியப் பெருமானே,
ReplyDeleteஇன்றைய தங்கள் பதிவில் மிக நல்ல, எளிமையான உதாரணங்களோடு ஆசிரியர் மற்றும் நல் மாணவரது இலக்கணத்தை வரைந்து காண்பித்துள்ளீர்கள். பல முறை படித்தேன். நன்றி ஆசானே.
Respected Sir,
ReplyDeleteHappy morning... very interesting post...
Have a pleasant day.
With kind regards,
Ravichandran M
Story telling is a great art. I have heard a lots of them when i was a kid through my grand mother and great grand uncle all filled with immense sense of humour. Your story telling reminds me of those days. You have mastered this art to perfection.
ReplyDeleteஅருமையான பாடம் வாத்தியாரே!!!
ReplyDeleteசரி. விவேகமாகவே கற்றுக்கொள்கிறோம்...
Very nice, Sir.
ReplyDeleteUngal kartu kodukkum murai migamum unnathamagum ethanal karpavargal anaivarum elithagavum payanullathagam karpathu sulapam
ReplyDeleteVaadhiyaar ayyaa sorry for asking about old lesson here. I already posted in ur old lesson but i doubt if it will catch your view. currently I am reading your lessons 231 - 240. It seems you have sent the lessons through email only (related to yogams). Kindly send me and enable me to read them. My details
ReplyDeleteName: Sriram
Age: 35
Email: sriram1114@gmail.com
Place: Kuwait (basically from Chennai)
Also I would like to receive your current email lessons. Is it possible to receive previous email lessons too or is there any link for those
Kindly excuse for the disturbance
I am very blessed to find a guru like you
Sriram
வணக்கம் ஐயா
ReplyDelete////Blogger Maya Upathy said...
ReplyDeleteintha paadam mulumaiyaga purinthathu guruve. ini ellam sugame
Mayavanathan
Mannargudi/////
நல்லது நன்றி நண்பரே!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteஐயா,
தங்களின் ஜோதிடப் புதிர் பகுதிக்கு என்னால் பின்னூட்டம் எழுத முடிவதில்லையே என்று வேதனைப்படுகிறேன். ஏனெனில், நான் மிகச் சொற்ப நாட்கள் மட்டுமே படிக்க முடிந்தது. தொடர முடியாத நெருக்கடி நிலை. ஆனால் கடந்த இருமாதங்களாகத் தொடர்ந்து வகுப்பில் இருக்கின்றேன்.பத்தகம் வாங்கியுள்ளதால் படித்தும் வருகின்றேன். சிற்சிவ சந்தேகங்கள் உள்ளன.அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? வகுப்பறை மாணவர்கள் யாராவது அணுகப்படவேண்டுமா? ஏனெனில், அவை அடிப்படை பாட சந்தேகங்கள்!?
நான் கேள்வி கேட்டதோ, கேட்கப்பட்ட விதமோ தவறானால் என்னை மன்னித்து கடிதத்தைப் பிரசுரிக்காமல் இருந்துவிடவும். நன்றி./////
மொத்தப் பதிவுகளையும் ஒருமுறை படித்துவிடுங்கள். சந்தேகங்கள் தீர்ந்துவிடும்!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteஆசிரியப் பெருமானே,
இன்றைய தங்கள் பதிவில் மிக நல்ல, எளிமையான உதாரணங்களோடு ஆசிரியர் மற்றும் நல் மாணவரது இலக்கணத்தை வரைந்து காண்பித்துள்ளீர்கள். பல முறை படித்தேன். நன்றி ஆசானே./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... very interesting post...
Have a pleasant day.
With kind regards,
Ravichandran M/////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!
/////Blogger sriram1114 said...
ReplyDeleteStory telling is a great art. I have heard a lots of them when i was a kid through my grand mother and great grand uncle all filled with immense sense of humour. Your story telling reminds me of those days. You have mastered this art to perfection./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteஅருமையான பாடம் வாத்தியாரே!!!
சரி. விவேகமாகவே கற்றுக்கொள்கிறோம்..///////
நல்லது. நன்றி லெக்ஷ்மிநாராயணன்!.
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery nice, Sir./////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger Gajapathi Sha said...
ReplyDeleteUngal kartu kodukkum murai migamum unnathamagum ethanal karpavargal anaivarum elithagavum payanullathagam karpathu sulapam///////
உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
///////Blogger sriram1114 said...
ReplyDeleteVaadhiyaar ayyaa sorry for asking about old lesson here. I already posted in ur old lesson but i doubt if it will catch your view. currently I am reading your lessons 231 - 240. It seems you have sent the lessons through email only (related to yogams). Kindly send me and enable me to read them. My details
Name: Sriram
Age: 35
Email: sriram1114@gmail.com
Place: Kuwait (basically from Chennai)
Also I would like to receive your current email lessons. Is it possible to receive previous email lessons too or is there any link for those
Kindly excuse for the disturbance
I am very blessed to find a guru like you
Sriram/////
மின்னஞ்சல் பாடங்கள் என்று எதுவும் தனியாக இல்லை. எல்லாவற்றையும் பதிவில் ஏற்றியுள்ளேன். மொத்தப்பதிவுகளையும், பொறுமையாக வரிசையாக ஒருமுறை படியுங்கள். எல்லாம் வசப்படும்!
/////Blogger siva kumar said...
ReplyDeleteவணக்கம் ஐயா/////
நல்லது. நன்றி ராசா!
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteபுதிர் போட்டி என்பது வாத்தியாரின் பாடங்கள் மாணவக்கண்மனிகளின் ஆர்வமும் புரிதலின் தண்மையையும் அறிந்துகொள்வதற்காக என்பது எனது தாழ்மையான கருத்து.
இதில் யார் திறமையானவர் என்பதல்லாமல் எத்தனை மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறிந்துகொள்வதே!.
வெற்றி தோல்வி பற்றி கவலைப் படாமல் புதிருக்கான தெளிவை அறிந்து கொள்வதே நல்லது என்பதே எனது கருத்து.
அன்புடன்,
- பொன்னுசாமி.