1.9.14

Short Story: சிறுகதை: குப்பாஞ்செட்டியின் கோரிக்கை!



மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

அடியவன் எழுதி, சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளியாகி,
அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை
உங்களுக்காக இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------
சிறுகதை: குப்பாஞ்செட்டியின் கோரிக்கை!                        

வழக்கமாகக் கதை சொல்லும் உத்தியில் இருந்து விலகி
4 கடிதங்கள் மூலமாக முழுக்கதையையும் சொல்லியிருக்கிறேன்.
படித்துப் பாருங்கள்.

குப்பாஞ் செட்டிக்கு மன உளைச்சல். தன் மன உளைச்சலுக்கு ஒரு
தீர்வை நாடும் முகமாக, அதை கோரிக்கை என்ற பெயரில் நீண்ட
கடிதமாக்கி தன் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தார்.தன் பங்காளிகள் 280 பேர்களூக்கும், தன் தந்தைவழி
உறவினர்கள், அதாவது குப்பாஞ்செட்டியின் அத்தை வழிச்
சொந்தங்கள், மற்றும் சகோதரிகள் வழிச் சொந்தங்கள் சுமார் 100 பேர்களுக்கும், அது போல தன் தாயார்வழிச் சொந்தங்கள், அதாவது அவருடைய தாயாரின் உடன் பிறப்புக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் சுமார் 120 பேர்களுக்கும் ஆக மொத்தம் சுமார் 500 பேர்களுக்கும் எழுதிய பொதுக் கடிதம் அது.

ஏ4 அளவு காகிதத்தில் 3 பக்கக் கடிதம். அதை அச்சிட்டு, அனைவருக்கும்
நூல் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். அதற்கு பதிலாக உடனடியாக
வந்த 3 கடிதங்களும் கூடவே உள்ளன. படித்துப் பாருங்கள்

                               ************************************
சென்னை
7.7.2014

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய உறவினர்கள் அனைவருக்கும்,
                 
சித.முரு. குப்பாஞ்செட்டி பணிவாக எழுதிக் கொண்டது. முதற்கண் என்னுடைய அன்பான வணக்கங்கள்!

உறவுகள் என்பது இறைவனால் நமக்கு அளிக்கப்பெற்ற வெகுமதியாகும். எத்தனை பணம் செலவழித்தாலும் யாரும் அதைத் தனித்துப் பெற
முடியாது. கேட்டும் பெறமுடியாது. அது இறைவனால் நமக்கு அளிக்கப்
பெற்ற வரம் என்பதுதான் உண்மை. ஆகவே உறவினர்கள்
அனைவரையும் இறைவன் எனக்கு அளித்த பரிசாக மதிக்கிறேன். போற்றுகிறேன்.

”சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
    எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது” 

என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். எத்தனை பெரிய விஷயம்
அது. சர்வ சாதாரணமாக  இரண்டே  வரிகளில் அதை எழுதி வைத்துள்ளார் அந்த மகாகவி!

தாய் தந்தை ஆகிய இருவரையும் எப்படி நாம் கேட்டுப் பெற முடியாதோ, அப்படி உறவுகளையும் நாம் கேட்டுப்  பெற முடியாது. ஆகவே நமக்குக் கிடைத்துள்ள உறவுகளை வித்தியாசமின்றி நேசிக்க வேண்டும்; அவர்கள்
அனைவரிடமும் அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் அப்பச்சி எங்களுக்குச்  சொல்லிக் கொடுத்த முதல் பாடம்.

அதை இன்றுவரை நான் தவறாமல் கடைப் பிடித்து வருகிறேன்.

ஒவ்வொரு முறையும் எனது உறவுகளைச் சந்திக்கும் போதும்,
மேலும் ஊருக்கு வந்து உறவினர்களின் வீட்டு  விஷேசங்களில்
கலந்து கொள்ளும் போதும் நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

வரும்போது உள்ள சந்தோஷம், உங்களை எல்லாம் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது இருப்பதில்லை.

ஆண்டிற்கு சுமார் 120 அழைப்பிதழ்கள் வருகின்றன. சராசரியாக
மாதம் 10 என்று வைத்துக்கொள்ளுங்களேன். எல்லாம் விதம் விதமான நிகழ்வுகள், மற்றும் விழாக்களுக்கான அழைப்பிதழ்கள். சில உபரி அழைப்புக்கள் குறுஞ் செய்தியாக அலைபேசி மூலமும் வருகின்றன

திருமண நிகழ்வுகள். 59ஆம் ஆண்டு உக்கிரரத சாந்தி, 60ஆம் ஆண்டு
மணி விழா, 70ஆம் ஆண்டு பீமரத சாந்தி, 80ஆம் ஆண்டு முத்து விழா,
புது மனை புகு விழா, பிறந்த குழந்தையை வீட்டிற்கு அழைத்துக்
கொள்ளும் நிகழ்ச்சி, விளையாட்டுப் பெட்டி வேவு போன்றவற்றிற்கான அழைப்பிதழ்கள்தான் அவற்றில் அதிகமாக இருக்கும்.

பொதுப் படைப்பு, பங்காளிகளுக்குச் சொந்தமான சிவன் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்ச விழா, மகா சிவராத்திரி விழா, கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாண நிகழ்வுகளுக்கும் சென்று கலந்து கொண்டு வருகிறேன்.

ஆடி மாதம் அம்மன் கோவிலில் நடைபெறும்  புள்ளிப் பொங்கல்
நிகழ்ச்சிக்கு,  ஒவ்வொரு ஆண்டும், தவறாமல் என் மனைவியுடன்
சென்று வருகிறேன்.

இவைகள் தவிர உறவினர்கள் காலமான செய்தி வரும்போது
உடனடியாகப் புறப்பட்டுச் சென்று கேதங்களில் கலந்து கொண்டு
விட்டும் வருகிறேன்.

வரும் அழைப்புக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, எல்லாவற்றிலும் கலந்து கொள்ளும் ஆசையும், ஆர்வமும் உள்ளது. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக அது முழுமையாக சாத்தியப்படுவதில்லை.

சென்ற ஆண்டில் 60 முறைகள் சென்னையில் இருந்து ஊருக்குச்
சென்று திரும்பியிருக்கிறேன்.

எனக்கு விடுப்பு பிரச்சினை கிடையாது. அதாவது லீவு கேட்டு
வாங்கும் பிரச்சினை இல்லை. நான்கு நிறுவனங்களில் பகுதி
நேரக் கணக்காளராகப் பணி புரிகிறேன். கணினியில் அவர்களுடைய,
வரவு செலவுக் கணக்குகளைப் பதிந்து தர வேண்டும். ஊருக்குச்
செல்வதால் அந்தப் பணியில் தொய்வு விழுகாது. ஞாயிற்றுக்
கிழமைகளில் பணி செய்து அவற்றைச் சரி செய்து விடுவேன்.
ஆகவே அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.

ஆனால் இப்போது பயணச் செலவுதான் முக்கியமான பிரச்சினை.

விலைவாசி உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு போன்ற
காரணங்களால், ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று
திரும்புவதால், எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து சுமார்
இரண்டாயிரம் ரூபாய் செலவாகிறது. சென்ற ஆண்டு மட்டும்
சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது.

அத்துடன் சென்னையில் இருந்து  ஆம்னி பஸ் மூலம் ஊருக்குச்
செல்வதற்கு சுமார் 9 மணி நேரம் பயணம் செய்ய  வேண்டியதாக
உள்ளது. அடிக்கடி அவ்வாறு பயணிப்பதால் அலுப்பு ஏற்பட்டாலும்
அது பெரிதாகத் தெரிவதில்லை.

பயணச் செலவுதான் படுத்தி எடுக்கிறது.

என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்
அச்செலவுகளை எப்படி சமாளிக்க முடியும் என்பதை நீங்களே
சொல்லுங்கள்!

செலவிற்காகப் பயந்து செல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
ஒருவர் வீட்டிற்கு வராததை, அடுத்த முறை  அவர்களைச் சந்திக்கும்
போது அவர்கள் அதைக் குறையாகச் சொல்கிறார்கள். “என்னப்பா
வராமல் விட்டு விட்டாய்?”  என்கிறார்கள்.

ஒரே வீட்டிற்கு அடுத்தடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுக்குச்
சென்று அடுத்ததற்குச் செல்லாமல் விட்டாலும், மனக் குறைதான் மிஞ்சுகிறது.

இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தேன். சென்னையை விட்டு,
ஊருக்கே வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டால் நல்லது என்று
தோன்றியது. அனைவருடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல்
சென்று அவர்களை மகிழ்விப்பதுடன், நாமும் மகிழலாம் என்று
தோன்றியது.

எனக்கு 55 வயதாகிறது. உழைத்துச் சம்பாதித்து, சென்னைத்
தெருக்களில் உழன்றது போதும் என்று ஊருக்கே வந்துவிட்டால்,
 சொந்த ஊர் என்ற நிம்மதியோடு வாழ்க்கை இனியதாகிவிடும்.

ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. ஊரில் வருமானத்திற்கு வழியில்லை.

கையில் சொத்து சுகங்களும் இல்லை. சேமிப்பும் இல்லை. எங்கள்
அப்பச்சி காலத்தில் இருந்தே அதே நிலைதான். கடவுள் புண்ணியத்தில்
பூர்வீக வீடு மட்டும் நன்றாக உள்ளது. எனக்கு அவ்வீட்டில் நான்கில்
ஒரு பங்கு என்பதுடன், முகப்பு அறையும் என் பங்கில் உள்ளதால்
தங்கும் பிரச்சினை இல்லை. அத்துடன் சென்னையைப் போல வீட்டு வாடகைப் பிரச்சினையும் இல்லை. ஊருக்கு வந்து சேர்ந்தால் அங்கே
தங்கிக் கொள்ளலாம்.

விலைவாசிகளும் சென்னையை விடக் குறைவுதான்.

ஆனால் வருமானத்திற்கு என்ன செய்வது என்பது மட்டும் புலப்பட
வில்லை! என் சிற்றறிவிற்கு எட்டவுமில்லை. ஆகவே இக்
கோரிக்கையைப் படிக்கும் உங்களில் ஒரு சிலராவது நல்ல
யோசனையைச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது,
அதனால் இந்த நீண்ட கடிதத்தை எழுதியுள்ளேன்.

உங்களுடைய மேலான ஆலோசனையை நல்கும்படி தாழ்மையுடன், கேட்டுக்கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
குப்பாஞ்செட்டி

                          ************************************

திருச்சி
10.7.2017

அன்புள்ள குப்பாஞ்செட்டிக்கு,

        உன் சித்தப்பா நடராஜன் செழுதிக்கொண்டது. நலம். நலமே விளைக!

உன் கடிதம் கிடைத்தது. படித்துப் பார்த்தேன்.

ஊருக்கு வந்து செல்வதில் உள்ள சிரமங்களை விரிவாக எழுதியுள்ளாய். ஆனால் கடிதத்தை ஆழமாகப் படிக்கும்போது, நீ உதவி கேட்டு
எழுதியதைப் போன்ற தொனிதான் தென்படுகிறது.

நகரத்தார்கள் தர்மம் மிக்கவர்கள். உதவி செய்வதற்கும், தான தர்மம் செய்வதற்கும் யோசிக்காதவர்கள். உடனே செய்யக்கூடியவர்கள்.
ஆனால்  தர்மம் செய்வதில் அவர்களிடையே சில கோட்பாடுகள் உண்டு.

கோவில் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள் இருக்கிறார்கள்.
கல்விக்கு உதவுபவர்கள் இருக்கிறார்கள். திருமணங்களுக்கு
உதவுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடப்புச் செலவுக்கு யாரும்
உதவ மாட்டார்கள்.

அதாவது பிறருடைய சொந்த செலவிற்கு யாரும் உதவ முன் வரமாட்டார்கள்.

நகரத்தார்களுக்கு சைவமும், தமிழும் எப்படி இரு கண்களோ அதுபோல சுயமரியாதையும், குடும்ப கெளரவமும்  இரு கண் இமைகளாகும். இது போன்ற கோரிக்கைகளை யாருக்கும் இனி எழுதாதே!. இன்றைய சுழ்நிலையில்  பலருக்கும் நேரமின்மைதான் பெரிய பிரச்சினை.
உன்னுடைய கடிதத்தை எத்தனை பேர்கள் படித்து, உனக்குப்  பதில் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார். அப்போது உனக்கு
உண்மை பிடிபடும்.

அழைப்பிதழ்கள் என்பது முதலில் உனக்கு தகவலைத் தெரியப்
படுத்துவதற் காக வருவது. அழைப்பிதழ் வரவில்லை  என்றால்,
தெரிந்த பிறகு, அழைப்பிதழ்கூட அனுப்பாமல் விட்டு விட்டார்களே
என்று நீ வருத்தப்பட மாட்டாயா?

ஆகவே அழைப்பிதழ்களை சீரியசாக எடுத்துக்கொண்டு
அவதிப்படாதே. உன்னால் முடிந்தவற்றிற்கு மட்டும் நீ  வந்தால்
போதும். எல்லாவற்றிற்கும் வரவேண்டும் என்ற ஆசையை
விட்டுவிடு. நீ வராவிட்டால் உன்னை யாரும் அடிக்கப்
போவதில்லை. உன்னைக் கண்டிக்கப்போவதில்லை. ஆண்டு
முழுவதும்  நீ வராமல் இருந்தாலும் யாரும் கண்டு கொள்ளப்
போவதில்லை. பாவம், முடியவில்லை போலிருக்கிறது என்று
நினைத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். என் அனுபவத்தில் நான் எவ்வளவோ பார்த்திருக்கிறேன்.

என்ன, நாளைக்கு உன் வீட்டில் ஒரு விஷேசம் என்றால் யாரும்
வராமல் விட்டு விடுவார்களே என்ற கவலை உனக்கு இருக்கலாம். அதெல்லாம் தேவையில்லாத கவலை. அதை அன்றைய தேதியில்
பார்த்துக் கொள்ளலாம்.

சென்ற மாதம் நம் பங்காளி சிதம்பரம் வீட்டில் நடந்த அவன் மகள் திருமணத்திற்கு எத்தனை பேர்கள் வந்தார்கள் தெரியுமா? பணத்திருப்பை வாங்கிப் பார். வந்தவர்கள் மொத்தம் 50 புள்ளிகள்தான். மிச்சமுள்ள 230 புள்ளிகள் ஏன் வரவில்லை? ஒரே வாரத்தில் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் நம்மூரில் 14 திருமணங்கள்  நடைபெற்றதாலும், சிதம்பரம் வீட்டுத்
திருமணம் கடைசி முகூர்த்தத்தன்று நடைபெற்றதாலும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் என்ன  குறைந்து விட்டது? திருமணம் நடக்காமலா போய்விட்டது? எதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே உன் பொருளாதார நிலைமை இடம் கொடுத்தால் மட்டுமே
நீ ஊருக்கு வா! இல்லை என்றால் வராதே!

அதுபோல சென்னையை விட்டு விட்டு ஊருக்கு வந்து செட்டிலாகும் யோசனையை விட்டு விடு. கனவில்கூட அதை  நினைக்காதே!

அன்பன்,
அரு. நடராஜன்.

                               *********************************

கோவை
11.7.2014

அன்புசால் பங்காளி குப்பாஞ்செட்டிக்கு,

     உங்களுடைய கடிதம் கிடைத்தது. மனம் நெகிழ்ந்துபோய் விட்டேன். உறவுகளைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த  வாசகம் அற்புதமானது.

     உங்களுக்கு நானும் என் தம்பி லெட்சுமணனும் உதவி செய்வதாக
முடிவு செய்துள்ளோம். ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் தருகிறோம்.
அதாவது இருவரும் சேர்ந்து ஆண்டு ஒன்றிற்கு இருபதாயிரம் ரூபாய் தருகிறோம்.

நீங்கள் ஊருக்கு வந்து விடலாம். அடுத்த மாதம் ஊருக்கு வரும்போது உங்களைப் பார்த்து அப்பணத்தைத் தருகிறேன். இது போல் வேறு
சிலரும் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன். அதனால் உங்களுடைய
வாழ்வாதாரப் பிரச்சினை தீர்ந்து விடும்.

    முருகப் பெருமானை வணங்குங்கள். அவர் உங்கள் நற்செயல்களுக்குத் துணை நிற்பார்!

அன்புடன்,
பங்காளி
நா. பரமசிவம்
கோவை
                             **********************************

மதுரை
12.7.2014

அன்பிற்கு உரிய தம்பி குப்பாஞ்செட்டிக்கு,

         சோம. பழநியப்பன் எழுதிக் கொண்டது.

உங்கள் கடிதத்தைப் பார்த்தேன். நீங்கள் எனக்கு எழுதவில்லை. உங்கள் சின்னத்தாவின் கணவர்  திரு.தியாகராஜன் அவர்களுக்கு எழுதிய
கடிதத்தை அவர் என்னிடம் காண்பித்தார்.அவர் என்னுடைய நெருங்கிய
நண்பர். மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்.

நகரத்தார்களில் இதுவரை யாரும் இப்படி ஒரு பொதுக் கடிதம் எழுதியதில்லை. அந்த வகையில் உங்களை நான்  பாராட்டுகிறேன்.
அத்துடன் உங்கள் வெகுளித்தனத்தையும், உறவுகளை நேசிக்கும்
பண்பையும் வெகுவாகப் பாராட்டுகிறேன்.

நான் ஒரு தேசிய வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்து விட்டுப்
பணி ஓய்வில், மதுரை அண்ணா நகரில் வசிக்கின்றேன். நானும் உங்கள் ஊரைச் சேர்ந்தவன்தான்.

உங்களுக்கு என்னால் உதவ முடியும். நீங்கள் ஊருக்கு வந்து அதே
கணக்கு எழுதும்பணியைச் செய்யலாம். காரைக்குடியில் இருக்கும்
இரண்டு நிறுவனங்களிடம் பேசி விட்டேன். அவர்கள் பகுதி நேர
வேலை தருவதாக உறுதியளித்துள்ளார்கள். இரண்டிற்கும் உரிமையாளர் ஒருவர்தான். கட்டுமானம், மற்றும் ஸ்டீல் பிஸினெஸ் என்று  இரண்டு பிஸினெஸ்களைச் செய்கிறார்கள். அவர்களுடைய சிட்டை மற்றும் குறிப்புக்களை நீங்கள் கணினியில் உள்ளிட்டுப் பதிந்து கொடுத்தால்
போதும். மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளம் தருவார்கள். தினமும் 3 மணி நேர அளவு வேலை இருக்கும். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்தால் போதும். வாரம் இரண்டு முறைகள் நம் ஊரில் இருந்து காரைக்குடிக்குச் சென்று அவர்களைப் பார்த்து கணக்குகளை வாங்கிக் கொண்டுவந்தால் போதும். மற்ற பணிகளை எல்லாம் நீங்கள் உங்கள்
வீட்டில் இருந்தே செய்யலாம்.கணக்குகளைத் தணிக்கை செய்யும் வேலைகளை எல்லாம் அவர்களுடைய ஆடிட்டர் பார்த்துக் கொள்வார்.
மாதம் ஒருமுறை எழுதிய கணக்குகளை நீங்கள் ஒரு பென் டிரைவில்
காப்பி செய்து அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும். மேலும்
இரண்டு கடைகளில் வேலை வாங்கித் தருகிறேன். அதுவும் இது
போன்று பகுதி நேரவேலைதான். ஒவ்வொரு கடைக்கும் தினமும்
ஒரு மணி நேர அளவில் வேலை இருக்கும். நீங்கள் அவர்களிடமும்
சிட்டை குறிப்புக்களை வாங்கிக் கொண்டு சென்று உங்கள் வீட்டில் இருந்தபடியே அந்த வேலைகளையும் செய்யலாம். சென்னையில் கிடைப்பதைவிட, அதிகமான  வருமானம் உங்களுக்கு இங்கே
கிடைக்கும்.

தேவைப்பட்டால், உங்களுக்கு ஒரு புதுக் கணினியை வாங்கித்
தரவும் நான் தயாராக உள்ளேன். ஒருவருக்கு உதவி செய்தால்
முழுமையாகச் செய்ய வேண்டும். அதற்காகத்தான் இதைச் செய்ய விழைகிறேன்.

நம் ஊர்களில் வாய்ப்பு இல்லை என்ற உங்களுடைய எண்ணத்தை
மாற்றிக் கொள்ளுங்கள். இப்படித்தான் ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையில்லாமல் அவதிப்பட்ட நகரத்தார் இளைஞர் ஒருவருக்கு
சிறு வியாபாரம் செய்யும் வழி முறையைச் சொல்லிக் கொடுத்தேன்.
அவர் இப்போது குறைந்த முதலீட்டில் வியாபாரம் செய்து மாதம்
பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.  தஞ்சாவூர், ஆறுமுகநேரிப் பகுதிகளில் இருந்து வாழை இலைகளை மொத்தமாக வரவழைத்து, இங்கே உள்ள திருமண வீடுகள், மற்றும் உணவு
விடுதிகளுக்கு சப்ளை  செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு ஆச்சி கைம்பெண் நிலையில் இரண்டு குழந்தைகளை வைத்துக்
கொண்டு அவதிப்பட்டார். அவருக்கு உள்ளூர் வங்கியில் ஒரு லட்ச
ரூபாய் கடனாக வாங்கிக் கொடுத்தேன். அந்த ஆச்சி  செட்டி நாட்டுப் பலகாரங்களைச் செய்து (snacks) விற்கத் துவங்கியவர், ஒரே ஆண்டில் இப்போது 6 பேர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்துவிட்டார்.

ஆகவே இறைவன் எங்கும் இருப்பதைப் போல, வாய்ப்புக்களும் எங்கும் உள்ளன. நாம்தான் அதைக் கவனிக்கத் தவறுகிறோம்.

நீங்கள் உங்கள் விருப்பப்படி சென்னை விட்டு விட்டு நம் ஊருக்கே
வந்து தங்கிவிடலாம். உங்களுக்கு என்னாலான உதவிகளை
முழுமனதோடு செய்வதற்குத் தயாராக உள்ளேன்.

இறுதியாக ஒன்று. நான் ஏன் வலியவந்து உங்களுக்கு உதவ
விரும்புகிறேன் என்பதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது.
கோவில்களின் திருப்பணிகளு க்கு பொருள் கொடுப்பதைப் போல சக மனிதர்களுக்கு உதவி  செய்வதும் ஒரு திருப்பணிதான். அதாவது திருப்பணிக்குச் சமமானது. ஒரு குடும்பத்தை நிலை நிறுத்துவதற்கு 
உதவி செய்த மனத் திருப்தி இருக்கும். ஆகவேதான் பலருக்கும் நான் 
உதவி செய்து கொண்டிருக்கிறேன்

நேரில் சந்திப்போம். நிறையப் பேசுவோம். எனது முகவரி மற்றும்
அலைபேசி எண்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

அன்பான உள்ளங்களைப் போற்றி மகிழும்,
அன்பன்,
சோம.பழநியப்பன்.

                         **********************************
பிறகு என்ன நடந்தது?

குப்பாஞ்செட்டி ஊருக்கு வந்து விட்டார். சோம. பழநியப்பனை,
அந்த பழநி அப்பனாகவே நினைத்து வழிபட்டுக்கொண்டிருக்கிறார். குப்பாஞ்செட்டியின் கனவுகள் எல்லாம் நனவாகிவிட்டது.
அதைவிட வேறு என்ன  வேண்டும்?

                     *************************************
கதை எப்படி உள்ளது?. ஒரு வரி எழுதிவிட்டுச் செல்ல வேண்டுகிறேன்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

59 comments:

  1. அருமையான திருப்பணி!

    குப்பாஞ்செட்டிக்கு உதவி கிடைத்தது மகிழ்ச்சி. அதிர்ஷ்டசாலி அவர்.

    ஆனால் எத்தனை பேர் முன் வந்து உதவுகிறார்கள் என்பது.......

    ReplyDelete
  2. எங்கும் நிறைந்துள்ள வாய்ப்புக்களை நாம் தான் கவனிக்க தவறுகிறோம் என்ற அழகான கருத்தை ஆசிரியர் அவர்கள் , அவருடைய நடைமுறையில் கடிதம் மூலம் நன்றாக எழுதியதற்க்கு என்னுடைய பாராட்டுக்கள். மன திருப்தியுடன் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆழமான கருத்தையும் எழுதியதற்க்கு மேலும்,என்னுடைய பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. Vanakkam ayya

    Super uravukal eppdi irukavendum enpatharu oru eduthukkatu. Pinnitinga sir

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கங்கள்,
    மிக அருமையான் தன்னம்பிக்கை கதை. மிக பயனுள்ளதாக இருந்தது. வாலி அவர்கள் எழுதிய”ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்” என்ற வரிகளை மாணவன், ரெங்கா.

    ReplyDelete
  5. மனிதரில் இத்தனை நிறங்களா என வியக்கவைத்தது..

    கோரிக்கை இப்படி சுமுகமாக நிறைவேறியது உற்சாகம் அளிக்க்றது..!

    ReplyDelete
  6. வாத்தியாருக்கு வணக்கம்,

    கடிதம் அருமை. அதன் பொருள் உண்மை. வங்கி பொது மேலாளர் பதில் தர்மம்.

    சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வாழ்பவர்கள், மற்ற சிறு நகரங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இத்தகைய மனப்பாங்கு அவர்களுக்கு எப்போதும் ஓங்கி இருக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். இவர்கள் அந்த பெரு நகரகளிலேயே வாழ்ந்து விட்டு போகட்டும். இவர்கள் சிறு நகரங்களில் உள்ள சுக, சவுரியங்களை அறியாத பேதைகள். இங்கு வந்தாலும் பெரு நகர பெருமையை பேசாமல் இவர்களுக்கு தூக்கம் வராது. இவர்களை போல பெரும்பான்மையான அறிவிலிகள் பெரு நகரங்களுக்கு குடி பெயர்ந்து, எங்கள் சிறு நகர விலைவாசியையும், கூட்ட நெரிசலையும் கட்டு படுத்த உதவட்டும். இவர்களை போன்றவர்கள் சிறு நகரங்களில் முக்கியமாக நிலங்கள் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவதையும் கேவலமாக நினைக்க கடவாராக.
    அப்போதுதான் சிறு நகர சாமானியன் தனது பொட்டு வருமானத்தில் சிட்டு போல வாழ முடியும்.

    பெரு நகர மக்களுக்கு(இவர்களின் விதி வலியது), வாத்தியார் எந்த அறிவுரையும் கூறாமல் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு, சிறு நகர சாமானியனை காப்பாராக.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.

    ReplyDelete
  7. அன்பின் ஐயா..
    இன்று விடியற்காலையில் - இரவுப் பணி முடித்துத் திரும்பும் போது தான் - விடுபட்ட உறவுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.. அறைக்கு வந்து கணினியைத் திறந்து நோக்கினால் தங்களின் சிறுகதை.. உறவுகளை நுட்பமாக பின்னிப் பிணைத்த அருமையான சிறுகதை. சிறுகதை என்று கூட சொல்லக் கூடாது. நமக்கு அருகில் நடக்கின்ற விஷயமாக இருக்கின்றது.

    தாங்கள் வரையும் கதைகளில் மனித நேயம் நிறைந்து வழிகின்றது. வாழ்க நலம்!..

    ReplyDelete
  8. கதை ஓர் தன்னம்பிக்கை டானிக் .அருமை .

    ReplyDelete
  9. ////Blogger துளசி கோபால் said...
    அருமையான திருப்பணி!
    குப்பாஞ்செட்டிக்கு உதவி கிடைத்தது மகிழ்ச்சி. அதிர்ஷ்டசாலி அவர்.
    ஆனால் எத்தனை பேர் முன் வந்து உதவுகிறார்கள் என்பது.......//////

    வாங்க துளசி டீச்சர் வாங்க!
    சிறுகதைகளைப் பதிவிட்டால் உங்கள் பின்னூட்டம்தான் முதல் பின்னூட்டமாக இருக்கும். அதற்கு விஷேசமாக ஒரு நன்றி!
    முன்வந்து உதவுபவர்கள் அபூர்வமாக இருந்தாலும், இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன்!

    ReplyDelete
  10. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    எங்கும் நிறைந்துள்ள வாய்ப்புக்களை நாம் தான் கவனிக்க தவறுகிறோம் என்ற அழகான கருத்தை ஆசிரியர் அவர்கள் , அவருடைய நடைமுறையில் கடிதம் மூலம் நன்றாக எழுதியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். மன திருப்தியுடன் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆழமான கருத்தையும் எழுதியதற்கு மேலும்,என்னுடைய பாராட்டுக்கள்./////

    உங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே! இந்தப் பாராட்டுக்கள் அடுத்த கதைக்கு (எழுதுவதற்கு) ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும்!

    ReplyDelete
  11. //////Blogger Prakash Kumar said...
    Vanakkam ayya
    Super. uravukal eppdi irukavendum enpatharu oru eduthukkatu. Pinnitinga sir/////

    நல்லது. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    மிக அருமையான தன்னம்பிக்கை கதை. மிக பயனுள்ளதாக இருந்தது. வாலி அவர்கள் எழுதிய”ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்” என்ற வரிகளை மாணவன், ரெங்கா.////

    உண்மைதான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    மனிதரில் இத்தனை நிறங்களா என வியக்கவைத்தது..
    கோரிக்கை இப்படி சுமுகமாக நிறைவேறியது உற்சாகம் அளிக்கிறது..!/////

    உங்களுடைய நல்ல மனம் வாழ்க! உற்சாகம் அடைகிறது அல்லவா - அதற்காகச் சொல்கிறேன். நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. /////Blogger BLAKNAR said...
    வாத்தியாருக்கு வணக்கம்,
    கடிதம் அருமை. அதன் பொருள் உண்மை. வங்கி பொது மேலாளர் பதில் தர்மம்.
    சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வாழ்பவர்கள், மற்ற சிறு நகரங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இத்தகைய மனப்பாங்கு அவர்களுக்கு எப்போதும் ஓங்கி இருக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். இவர்கள் அந்த பெரு நகரகளிலேயே வாழ்ந்து விட்டு போகட்டும். இவர்கள் சிறு நகரங்களில் உள்ள சுக, சவுரியங்களை அறியாத பேதைகள். இங்கு வந்தாலும் பெரு நகர பெருமையை பேசாமல் இவர்களுக்கு தூக்கம் வராது. இவர்களை போல பெரும்பான்மையான அறிவிலிகள் பெரு நகரங்களுக்கு குடி பெயர்ந்து, எங்கள் சிறு நகர விலைவாசியையும், கூட்ட நெரிசலையும் கட்டு படுத்த உதவட்டும். இவர்களை போன்றவர்கள் சிறு நகரங்களில் முக்கியமாக நிலங்கள் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவதையும் கேவலமாக நினைக்க கடவாராக.
    அப்போதுதான் சிறு நகர சாமானியன் தனது பொட்டு வருமானத்தில் சிட்டு போல வாழ முடியும்.
    பெரு நகர மக்களுக்கு(இவர்களின் விதி வலியது), வாத்தியார் எந்த அறிவுரையும் கூறாமல் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு, சிறு நகர சாமானியனை காப்பாராக.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி./////

    எனக்குப் பரவலாக நகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் என்று சுற்றிய அனுபவம் உண்டு! எங்கும் சாமானியர்கள் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன். அவர்களைக் கடவுள் காப்பாற்றுவார்! உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger துரை செல்வராஜூ said...
    அன்பின் ஐயா..
    இன்று விடியற்காலையில் - இரவுப் பணி முடித்துத் திரும்பும் போது தான் - விடுபட்ட உறவுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.. அறைக்கு வந்து கணினியைத் திறந்து நோக்கினால் தங்களின் சிறுகதை.. உறவுகளை நுட்பமாக பின்னிப் பிணைத்த அருமையான சிறுகதை. சிறுகதை என்று கூட சொல்லக் கூடாது. நமக்கு அருகில் நடக்கின்ற விஷயமாக இருக்கின்றது.
    தாங்கள் வரையும் கதைகளில் மனித நேயம் நிறைந்து வழிகின்றது. வாழ்க நலம்!..//////

    மனித குணங்களில் நேய உணர்வுதான் முக்கியம். அதுதான் என் கதைகளில் வெளிப்படுகிறது. உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger lrk said...
    கதை ஓர் தன்னம்பிக்கை டானிக் .அருமை ./////

    உங்களின் பாராட்டு என்னைப் போன்று எழுதுபவர்களுக்கு டானிக். நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. Respected Sir
    Great Story written in a different way. Loved it.
    Oppurtunities are everywhere and we failed to look at it.. great point..

    ReplyDelete
  18. Excellent narration. This almost resembles the story of Ramakrishna Paramahamsa with respect to heling the needy. May God bless you with you much more inspirational stories to write and derive happiness out of the same.

    ReplyDelete
  19. Dear Guruji,

    Even though each letter has different message for Kuppanchetti, each letter has given a valuable message to kuppanchetti and readers. Each letter Captures mindset of Nagarathars.

    Good stories. Excellent Screenplay

    ReplyDelete
  20. வணக்கம் சார்...
    1. சித்தப்பா நடராஜன். கெளரவமாக வாழவேண்டும் என நினைப்பவர் !!
    முடிந்தால் செய். இல்லையென்றால்
    அமைதியாய் இரு என்கிறார்.....
    2. அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து
    வருடம் 20ஆயிரம் தருவதாக சொல்கிறார்கள். பாராட்டலாம் !
    ஆனால் இது கடைசிவரை வருமா?
    கொடுப்பவர்கள் நிலையும் மோசமாகலாம்.
    3.சோம.பழனியப்பன் !
    மீன் வாங்கிகொடுக்கவில்லை.
    மீன் பிடிக்க பாடம்கொடுத்தார் !
    கம்யூட்டர் வாங்கிகொடுத்தது.
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    அவன் வாரி வாரி வழங்கும் போது
    வழ்ளள் ஆகலாம்...
    கலியுகத்தில் இப்படிபட்டவர்கள்
    இன்னும் இருக்கிறார்கள் !!!
    இதுக்கும் கொடுப்பினை வேண்டும் .
    K.சக்திவேல்

    ReplyDelete
  21. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Great Story written in a different way. Loved it.
    Oppurtunities are everywhere and we failed to look at it.. great point..//////

    ஆமாம். அந்த வரிகள் எழுதும்போது தானாக எழுதத்தோன்றியது ஆகும். ஆனால் அதுதான் கதைக்கு ஒரு வலிமையைக் கொடுத்தது. உங்களுடைய பாராட்டிற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  22. //////Blogger Ravi said...
    Excellent narration. This almost resembles the story of Ramakrishna Paramahamsa with respect to heling the needy. May God bless you with you much more inspirational stories to write and derive happiness out of the same./////

    நல்லது. உங்களுடைய சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger valli rajan said...
    Dear Guruji,
    Even though each letter has different message for Kuppanchetti, each letter has given a valuable message to kuppanchetti and readers. Each letter Captures mindset of Nagarathars.
    Good stories. Excellent Screenplay/////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே! பாராட்டுக்கள் என்பது என்னைப் போன்று எழுதுபவர்களுக்கு டானிக்.

    ReplyDelete
  24. /////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்...
    1. சித்தப்பா நடராஜன். கெளரவமாக வாழவேண்டும் என நினைப்பவர் !!
    முடிந்தால் செய். இல்லையென்றால்
    அமைதியாய் இரு என்கிறார்.....
    2. அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து
    வருடம் 20ஆயிரம் தருவதாக சொல்கிறார்கள். பாராட்டலாம் !
    ஆனால் இது கடைசிவரை வருமா?
    கொடுப்பவர்கள் நிலையும் மோசமாகலாம்.
    3.சோம.பழனியப்பன் !
    மீன் வாங்கிகொடுக்கவில்லை.
    மீன் பிடிக்க பாடம்கொடுத்தார் !
    கம்யூட்டர் வாங்கிகொடுத்தது.
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    அவன் வாரி வாரி வழங்கும் போது
    வள்ளல் ஆகலாம்...
    கலியுகத்தில் இப்படிபட்டவர்கள்
    இன்னும் இருக்கிறார்கள் !!!
    இதுக்கும் கொடுப்பினை வேண்டும் .
    K.சக்திவேல்//////

    உண்மைதான். உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சக்திவேல்!

    ReplyDelete
  25. Excellent story base line with different script style with a message. Thanks for sharing.

    ReplyDelete
  26. குருவிக்கு வணக்கம், தங்களின் சிறுகதை மிக அருமையாக உள்ளது. ஒரு அருமையான விஷயத்தை தெளிவாக தெரிவித்துள்ளிர்கள். உறவினர்களின் முக்கியத்துவம் பற்றியும், நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாத வருத்தம், அதற்கான மாற்று வழி பற்றி கடிதம் முலம் உறவினர்களிடம் கேட்டது மிக அருமையான விஷயம்.

    ReplyDelete
  27. Respected sir,

    Story is really super,
    Very good message, I like two points
    1. Relations are decided by god, we should not miss it. Properly it must be maintained.
    2. Opportunity should be every were, we should identify & utilise it.
    3.Lot of person struggling in city because of opportunity, They know City life is hell / Village life is heaven.
    Regards
    Rm.srithar

    ReplyDelete
  28. Respected Sir,
    Great message in the Story !
    Thanks
    Ashok

    ReplyDelete
  29. If we get one person like Soma Palaniappan in each place, our whole country will flourish why kuppanchetty alone. Wish to be like Soma Palaniappan.

    Very good story and narrated in a different way. Excellent

    ReplyDelete
  30. வித்யாசமான கதை தளம். படிக்கிறவங்களை கூடவே கூட்டிபோன சிறப்பான உங்க எழுத்துதான் பிரதானம்.ஆனால் இப்படி ஒருத்தர் எல்லாருக்கும் கடிதம் எழுதினா அவரை வெகுளினு சொல்றதா, இல்லை வாய்ப்புக்களை இப்படியெல்லாம் பெற முடியும் என்ற உலக ஞானம் தெரிஞ்சவர்னு புரிஞ்சிக்கிறதா?

    ReplyDelete
  31. super story sir...has got good message...

    ReplyDelete
  32. எதிர்பார்த்தா உதவி செய்யவேணும்
    என்னவோ போங்க

    ReplyDelete
  33. Respected sir,

    Very good post sir... nalla katturai sir.

    Thank you.

    ReplyDelete
  34. ச‌னிக்கிழமை மதிய வேளையில் "நீ உயிருடன் இருக்கிறாயா?"என்று தஞ்சை
    எல் ஐ சி யில் இருந்து ஒரு அலை பேசி அழைப்பு வந்தது.
    "ஏன் அதில் என்ன சந்தேகம் ? இதோ உங்களிடம் பேசுவது நானே தான். என் ஆவி அல்லவே!"என்றேன்.
    " என்ன ஜோக் அடிப்பதாக நினைப்பா? நீ உயிருடன் இருக்கிறாய் என்பதற்கான வருடாந்திர சான்றினை ஏன் இன்னும் அளிக்கவில்லை? சான்றினை அளிக்கும் வரை உன் மாத ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது."

    "ஆகா! உடனே நேரில் வந்து என் உயிருள்ள உடலை உங்களுக்குக் காண்பிக்கிறேன்.தயவு செய்து ஓய்வூதியத்தை நிறுத்தாமல் தொடருங்கள்" என்று அலறினேன்.ஏதோ பேயின் அலறல் என்று நினைத்து அலை பேசியை அவசரமாக அணைத்து விட்டார்கள்.

    வாக்களித்தபடி இன்று காலையிலேயே கிளம்பி தஞ்சைக்குச் சென்றேன் ஆகவே இப்போதுதான் தங்கள் அருமையான கதையினை வாசிக்க முடிந்தது. அதனால் தாமதமான பின்னூட்டம்.

    இப்படியெல்லாம் கடிதம் எழுதுவார்களா என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

    மகாகவி பாரதியார் இதே போல ஒரு கடிதத்தை அச்சிட்டு தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.தன் பாடல்களை சிறு சிறு நூல்களாக அச்சிட்டு ஓரு நூல் எட்டணா விலையில் விற்பதாகவும் அதில் எவ்வளவு லாபம் வரும், தான் எப்படி வாங்கிய கடனை திருப்ப முடியும் என்றெல்லாம் கூறி தலைக்கு ரூ100/‍ கடன் அளிக்கும்படியும் கேட்டு எழுதினார். மிகச்சிலரே அளித்த‌னர்.பாவம்.

    சோம பழனியப்பனின் ஆலோசனையும் வழிகாட்டுதலும்தான் நடைமுறை சாத்தியம்.வேர்களை நோக்கிய மீள் திருப்பம், உறவுகளின் அவசியம் ஆகியவைகளை வலியுறுத்திய கதை புதிய உத்தியில் அருமையாக எழுதப்பட்டுள்ளது. நன்றாக உள்ளது. நன்றி ஐயா!

    கே.முத்துரமகிருஷ்ணன்(லால்குடி)
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  35. ///kmr.krishnan said...
    ச‌னிக்கிழமை மதிய வேளையில் "நீ உயிருடன் இருக்கிறாயா?"என்று தஞ்சை எல் ஐ சி யில் இருந்து ஒரு அலை பேசி அழைப்பு வந்தது.///

    இதுவாவது பரவாயில்லை..
    சென்றாண்டு life certificate தரவில்லை அதனால் போன வருடம் உயிரோடு இருந்தேன் என இப்போது life certificate கொண்டுவந்து கொடுங்கள் என கேட்டு வந்த அனுபவமும் எம்மிடம் உண்டு...

    அவ்வப்போது ரசித்து மகிழ
    அரசாங்கம் இப்படி

    வயோதிகத்தில்
    வாலிபத்தை வரவழைத்து பார்க்கிறது

    ReplyDelete
  36. வணக்கம் குரு

    கிராமத்தை விட்டுவிட்டு பெருநகரங்களுக்கு வந்து வேலை செய்யும் பலரது ஏக்கங்களை பிரதிபலிப்பதாக உள்ளது இந்த சிறுகதை. மிகவும் எளிமையாகவும் தத்ருபமாகவும் எங்கள் மனத்திரையில் ஒரு குரும்படத்தையே ஒட்டிவிடீர்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  37. uravukalai pattriya oru unnathanamana kathai.uravukalai patri vithiyasamana konathil sindhikkavaithathu thangalin ezhuthu. nichayama anaithu uravugalum soma pazhiniyappan pol iruppathillai endralum oru silravathu irukkirargal enbathil magizhchiyum kooda. arumaiyana kathai nanri aiya

    ReplyDelete
  38. vanakkam sir,

    nice story. Thanks for that.

    ReplyDelete
  39. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ''
    எங்கும் நிறைந்துள்ள வாய்ப்புகளை நாம்தான் கவனிக்க தவறுகிறோம். மேலும் உறவுகளில் [மனிதர்களில் ] மனபாங்கு ஒரு பிரசினை எப்பிடி அணுகுகிறார்கள் .என்பது சரியான பாடம் .வாத்தியார் வாத்தியாருதான் அய்யா எங்கே செட்டிநாட்டுல ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!.கடைசி கடிதம் ..கோவில்களுக்கு செய்வதும் ஒரு உறவு ஜனத்தை கைதூக்கி விடுவதும் ஒன்றுதான்..!! ...மீனை இலவசமாக கொடுக்காதே மீன்பிடிக்க தூண்டிலும் பிடிக்கவும் கற்று கொடு,, நமது அரசாங்கம் இதை படிக்கணும்..****இதுதான் சரியான முத்தாய்ப்பான கருத்து****அருமை.!!!...

    ReplyDelete
  40. அருமையான கதை. உறவுகளுக்கு உதவுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமான விஷயம்.

    ReplyDelete
  41. புலம்புவர்களுக்கு நெத்தியடி

    ReplyDelete
  42. /////Blogger B Sudhakar. said...
    Excellent story base line with different script style with a message. Thanks for sharing./////

    உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. ////Blogger Raja Murugan said...
    குருவிக்கு வணக்கம், தங்களின் சிறுகதை மிக அருமையாக உள்ளது. ஒரு அருமையான விஷயத்தை தெளிவாக தெரிவித்துள்ளிர்கள். உறவினர்களின் முக்கியத்துவம் பற்றியும், நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாத வருத்தம், அதற்கான மாற்று வழி பற்றி கடிதம் முலம் உறவினர்களிடம் கேட்டது மிக அருமையான விஷயம்.////

    உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி ராஜாமுருகன்!

    ReplyDelete
  44. /////Blogger rm srithar said...
    Respected sir,
    Story is really super,
    Very good message, I like two points
    1. Relations are decided by god, we should not miss it. Properly it must be maintained.
    2. Opportunity should be every were, we should identify & utilise it.
    3.Lot of person struggling in city because of opportunity, They know City life is hell / Village life is heaven.
    Regards
    Rm.srithar//////

    உண்மைதான். அதை உணர்ந்து எழுதிய உங்களுடைய மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. /////Blogger Ashok said...
    Respected Sir,
    Great message in the Story !
    Thanks
    Ashok//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  46. /////Blogger PS said...
    If we get one person like Soma Palaniappan in each place, our whole country will flourish why kuppanchetty alone. Wish to be like Soma Palaniappan.
    Very good story and narrated in a different way. Excellent//////

    உங்களின் எண்ணப்பகிர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. /////Blogger Parthiban Vellaichamy said...
    வித்யாசமான கதை தளம். படிக்கிறவங்களை கூடவே கூட்டிபோன சிறப்பான உங்க எழுத்துதான் பிரதானம்.ஆனால் இப்படி ஒருத்தர் எல்லாருக்கும் கடிதம் எழுதினா அவரை வெகுளினு சொல்றதா, இல்லை வாய்ப்புக்களை இப்படியெல்லாம் பெற முடியும் என்ற உலக ஞானம் தெரிஞ்சவர்னு புரிஞ்சிக்கிறதா?/////

    அதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிட்டேன் நண்பரே!
    நன்றி!

    ReplyDelete
  48. /////Blogger Regunathan Srinivasan said...
    super story sir...has got good message.../////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  49. ////Blogger வேப்பிலை said...
    எதிர்பார்த்தா உதவி செய்யவேணும்
    என்னவோ போங்க /////

    சரிங்க!

    ReplyDelete
  50. ////Blogger Chandrasekharan said...
    Respected sir,
    Very good post sir... nalla katturai sir.
    Thank you./////

    நல்லது. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. //////Blogger kmr.krishnan said...
    ச‌னிக்கிழமை மதிய வேளையில் "நீ உயிருடன் இருக்கிறாயா?"என்று தஞ்சை
    எல் ஐ சி யில் இருந்து ஒரு அலை பேசி அழைப்பு வந்தது.
    "ஏன் அதில் என்ன சந்தேகம் ? இதோ உங்களிடம் பேசுவது நானே தான். என் ஆவி அல்லவே!"என்றேன்.
    " என்ன ஜோக் அடிப்பதாக நினைப்பா? நீ உயிருடன் இருக்கிறாய் என்பதற்கான வருடாந்திர சான்றினை ஏன் இன்னும் அளிக்கவில்லை? சான்றினை அளிக்கும் வரை உன் மாத ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது."
    "ஆகா! உடனே நேரில் வந்து என் உயிருள்ள உடலை உங்களுக்குக் காண்பிக்கிறேன்.தயவு செய்து ஓய்வூதியத்தை நிறுத்தாமல் தொடருங்கள்" என்று அலறினேன்.ஏதோ பேயின் அலறல் என்று நினைத்து அலை பேசியை அவசரமாக அணைத்து விட்டார்கள்.
    வாக்களித்தபடி இன்று காலையிலேயே கிளம்பி தஞ்சைக்குச் சென்றேன் ஆகவே இப்போதுதான் தங்கள் அருமையான கதையினை வாசிக்க முடிந்தது. அதனால் தாமதமான பின்னூட்டம்.
    இப்படியெல்லாம் கடிதம் எழுதுவார்களா என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
    மகாகவி பாரதியார் இதே போல ஒரு கடிதத்தை அச்சிட்டு தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.தன் பாடல்களை சிறு சிறு நூல்களாக அச்சிட்டு ஓரு நூல் எட்டணா விலையில் விற்பதாகவும் அதில் எவ்வளவு லாபம் வரும், தான் எப்படி வாங்கிய கடனை திருப்ப முடியும் என்றெல்லாம் கூறி தலைக்கு ரூ100/‍ கடன் அளிக்கும்படியும் கேட்டு எழுதினார். மிகச்சிலரே அளித்த‌னர்.பாவம்.
    சோம பழனியப்பனின் ஆலோசனையும் வழிகாட்டுதலும்தான் நடைமுறை சாத்தியம்.வேர்களை நோக்கிய மீள் திருப்பம், உறவுகளின் அவசியம் ஆகியவைகளை வலியுறுத்திய கதை புதிய உத்தியில் அருமையாக எழுதப்பட்டுள்ளது. நன்றாக உள்ளது. நன்றி ஐயா!
    கே.முத்துரமகிருஷ்ணன்(லால்குடி)
    kmrk1949@gmail.com//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி அத்துடன் உங்களுடைய பாராட்டிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  52. /////Blogger வேப்பிலை said...
    ///kmr.krishnan said...
    ச‌னிக்கிழமை மதிய வேளையில் "நீ உயிருடன் இருக்கிறாயா?"என்று தஞ்சை எல் ஐ சி யில் இருந்து ஒரு அலை பேசி அழைப்பு வந்தது.///
    இதுவாவது பரவாயில்லை..
    சென்றாண்டு life certificate தரவில்லை அதனால் போன வருடம் உயிரோடு இருந்தேன் என இப்போது life certificate கொண்டுவந்து கொடுங்கள் என கேட்டு வந்த அனுபவமும் எம்மிடம் உண்டு...
    அவ்வப்போது ரசித்து மகிழ
    அரசாங்கம் இப்படி
    வயோதிகத்தில்
    வாலிபத்தை வரவழைத்து பார்க்கிறது/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி வெப்பிலையாரே!

    ReplyDelete
  53. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு
    கிராமத்தை விட்டுவிட்டு பெருநகரங்களுக்கு வந்து வேலை செய்யும் பலரது ஏக்கங்களை பிரதிபலிப்பதாக உள்ளது இந்த சிறுகதை. மிகவும் எளிமையாகவும் தத்ருபமாகவும் எங்கள் மனத்திரையில் ஒரு குரும்படத்தையே ஒட்டிவிடீர்கள்.
    நன்றி
    செல்வம்//////

    கதையைப் பற்றிய உங்கள் விமர்சனத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  54. //////Blogger padhu said...
    uravukalai pattriya oru unnathanamana kathai.uravukalai patri vithiyasamana konathil sindhikkavaithathu thangalin ezhuthu. nichayama anaithu uravugalum soma pazhiniyappan pol iruppathillai endralum oru silravathu irukkirargal enbathil magizhchiyum kooda. arumaiyana kathai nanri aiya/////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  55. //////Blogger sundari said...
    vanakkam sir,
    nice story. Thanks for that./////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  56. //////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ''
    எங்கும் நிறைந்துள்ள வாய்ப்புகளை நாம்தான் கவனிக்க தவறுகிறோம். மேலும் உறவுகளில் [மனிதர்களில் ] மனபாங்கு ஒரு பிரசினை எப்பிடி அணுகுகிறார்கள் .என்பது சரியான பாடம் .வாத்தியார் வாத்தியாருதான் அய்யா எங்கே செட்டிநாட்டுல ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!.கடைசி கடிதம் ..கோவில்களுக்கு செய்வதும் ஒரு உறவு ஜனத்தை கைதூக்கி விடுவதும் ஒன்றுதான்..!! ...மீனை இலவசமாக கொடுக்காதே மீன்பிடிக்க தூண்டிலும் பிடிக்கவும் கற்று கொடு,, நமது அரசாங்கம் இதை படிக்கணும்..****இதுதான் சரியான முத்தாய்ப்பான கருத்து****அருமை.!!!...//////

    கதையைப் பற்றிய உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. /////Blogger Kamala said...
    அருமையான கதை. உறவுகளுக்கு உதவுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமான விஷயம்./////

    உண்மைதான்! ஆனால் அதுபோன்ற நல்ல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  58. /////Blogger Karthikraja K said...
    புலம்புவர்களுக்கு நெத்தியடி/////

    கதையைப் பற்றிய உங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  59. Ayya,

    I was trying to read this for more than 4days, but finally read it.Awesome.. I feel it narrates my life little but in that.Even i used to help voluntarily.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com