30.7.14

Astrology: quiz 64: Answer: வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க!

 

Astrology: quiz 64: Answer: வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க!

புதிர் எண் 64ற்கான விடை

30.7.2014


நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

”அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை?”

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகருக்கு அவருடைய  திருமணம் அதீத தாமதமாகி அவருடைய 42ஆவது வயதில் நடைபெற்றது.

ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.






கும்ப லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சனீஷ்வரன் 11ல். அது நல்ல அமைப்பு.
ஏழாம் அதிபதி சூரியன் வர்கோத்தமம் பெற்று வலுவாக உள்ளார். அதாவது ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் உள்ளார்.
ஏழாம் வீட்டின் மேல் குரு பகவானின் பார்வை (9ஆம் பார்வை)
ஆகவே இந்த அமைப்புக்களால் ஜாதகருக்குத் திருமணம் நடைபெற வேண்டும். நடைபெற்றது.

ஆனால் அதீத தாமதமாக அவருடைய 42ஆவது வயதில் நடைபெற்றது. அதுவும் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக விவாகரத்தான பெண்மணி ஒருவரை விரும்பி மணந்து கொண்டார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது.

தாமதத்திற்குக் காரணம்:
களத்திரகாரகன் சுக்கிரனும் சனீஷ்வரனும் சேர்ந்து இருப்பது தீமையானது.தடையானது. அதீத தாமதத்திற்கு அது ஒரு முக்கிய காரணம். சுக்கிரனின் மேல் உள்ள வேறு 3 கிரகங்களின் ஆதிக்கத்தால் அவர் ஒரு விவாகம் ரத்தான பெண்ணை மணந்து கொள்ள நேரிட்டது.
28 வயதில் துவங்கிய சந்திர திசையில் அவருக்குத் திருமணம் நடைபெறவில்லை. சந்திரனுடன் லக்கினாதிபதி, சுக்கிரன் ஏழாம் வீட்டுக்காரன் ஆகிய மூவருக்குமே தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மேலும் 34 வயதில் துவங்கிய எழரைச் சனியின் பாதிப்பால் சிக்குண்ட அவருக்கு 41வயதுவரை திருமணம் நடைபெறவில்லை.

கோள்சார சனி மிதுனத்திற்கு வந்தவுடன் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) தனது பாதிப்புக்களை விலக்கிக் கொண்டு ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார். அவருடன் சேர்ந்து இருக்கும் சுக்கிரனும் அதற்கு உதவி செய்தார்.

தசாநாதன் சந்திரனாக இருந்து ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனியின் பிடியில் இருந்தால், அந்தக் காலகட்டத்தில் நன்மையான மேட்டர்கள் எதுவும் நடக்காது. அதை மனதில் வையுங்கள்
----------------------------------------
போட்டியில் மொத்தம் 22 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அவர்களில் 2 பேர்கள் மட்டும் தாமதத்தைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். (******* )அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.

பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
******** ///////Blogger Srinivas said...
    The native is born on 30-Nov-1960 at around 12.20pm, considering chennai as birth place.
    1. Lagnathipathi Shani is in 11th house with 2nd and 11th lord Guru and yogakaraka and bhagyathipathi Sukran.
    Grahayutham in 11th house. Chevvai (in Vagram) is aspecting lagnathipathi, Sukran and lagnathipathi.
    2. Lagnam has Maandhi and ketu and Maandhi is aspecting 7th house. So this would have caused delays 2nd house lord Guru is aspecting 3rd house, 5th and 7th house.
    7th house lord Suryan is in 10th house.
    3. Yogakaraka Sukran is aspecting 5th house (purva punya sthanam).
    Marriage of the native would have got delayed. The native might have got married in Chandra dasa
    or chevvai dasa.

    Tuesday, July 29, 2014 9:44:00 PM/////

--------------------------------------------
********* /////Blogger Manikandan said...
    திருமணம் நிச்சயமாக நடைபெற்று இருக்கும்.
    1. லக்கணாதிபதி, குடும்ப ஸ்தானாதிபதி , களத்திர காரகன் மூவரும் கூட்டணியாக 11.ல்.
    2. களத்திர ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் 10-ம் வீட்டிலும் , வர்கோதததமம் பெற்றும் உள்ளார்.
    ஆனால்,
    ராகு மற்றும் கேது வின் ஆதிக்கம் 7-ம் வீட்டில் + செவ்வாய் பார்வை மூவர் கூட்டணி மீது.
    செவ்வாய் மற்றும் சனி நேர் பார்வை தாமத / காதல் திருமணத்திற்கு காரணமாய் இருக்கிறது.
    Tuesday, July 29, 2014 11:13:00 PM//////
===============================================

1
//////Blogger karthi said...
    thirumanam nadanthu irukkum
    7 m idathirkku guruvin parvai irukku
    7 m aathi suriyan 10 il irukkinrar
    kalathirakaraganudan guruvum lagnathipathi sanium ullarkal
    Tuesday, July 29, 2014 7:23:00 AM/////

-----------------------------------------
2
/////Dallas Kannan said...
    Respected Sir
    Not sure if it is trick question.
    Since you ask us to only answer to the question, I am not going to say anything about Rahu being in 7th house or Sukra/Mars Parivarthanai in navamsa...
    He is definitly married. He got married after 21 in Sun dasa.
    1. 7th lord sun is in kentram, friends house and vargothamam.
    2. Lknathipathi in 11th house/uchham in Navamsa
    3. 2nd/11th lord in his own 11th place and looks at 7th house.
    Tuesday, July 29, 2014 9:29:00 AM/////

--------------------------------------------
3
/////Blogger rm srithar said...
    Respected sir
    1. He got marriage from other religion (Rahu is in seventh house)
    2. But Marriage life is not satisfied he got Divorcee / Widow.
    Sukran is join with Virayathipathee Saturn.
    Regards
    Rm.Srithar
    Tuesday, July 29, 2014 10:38:00 AM/////

-----------------------------------------
4
/////Blogger seethalrajan said...
    குருஜி வாணக்கம்,
    லக்னாதிபதி 11ல் உடன் பாக்யாதிபதி சுக்ரன் அதுமட்டுமா ஆட்சி பெற்ற குருவும் அங்கேயே அமர்ந்து இருக்கிறார், மிக மிக சிறப்பான அமைப்பு.
    7ல் ராகு இருந்தாலும் எந்த பதிப்பும் இருகாது இந்த அன்பருக்கு, ஏனெனில் அந்த வீட்டு அதிபதி 10ல் பலமாக அம்ர்ந்து இருகிறார் அதுவும் வர்கோத்துவம் பேற்று அத்துடன் குரு பார்வை 7ம் வீட்டுகு கிடைக்கிறது. ஒரே ஒரு குறை சூரியன் லக்னாதிபதிக்கு 2/12 அமர்ந்து இருபதுதான். அதாலால் மறு திருமணம் நடைபெறும்.
    மனைவி அரசங்க அதிகரியா இருபார். சூரிய திசையிலெ திருமணம் நடை பெற்று இருகும். நன்றி
    Tuesday, July 29, 2014 10:40:00 AM/////
----------------------------------------------
5
//////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!
    புதிர் எண்: 64 இற்கான பதில் !!!
    குறிப்பிடப்பட்ட அன்பர் கும்ப லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி லாபஸ்தானத்தில் லாபாதிபதி குருவுடன். லக்கினாதிபதி சனி, யோகம் மற்றும் களத்திரகாரகன் சுக்கரனுடன் கிரக யுத்தம். இருந்தாலும் ஏழாமதிபதி சூரியன் நட்பு வீட்டில் மற்றும் வர்கோதமத்தில். முதல் நிலை கேந்திரவீடான பத்தாம் வீட்டில். மேலும் முதல் நிலை சுபகிரகம், மற்றும் குடும்பஸ்தானாதிபதி குருவின் ஒன்பாதம் விசேச பார்வையில் ஏழாம் வீடு.ஏழில் ராகு இருந்ததால் தார தோஷம். இவை அனைத்தும் இருந்தாலும் ஏழாமதிபதியின் (சூரியன்) திசை 28 வயது வரை உள்ளது. சூரிய திசை சுக்கர புத்தியில் 28 ஆம் வயதில் திருமணம் நடைபெற்று இருக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு !!!!!
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, July 29, 2014 10:58:00 AM/////
--------------------------------------------------
6
/////Blogger Sakthivel K said...
    dear sir.
    அன்பருக்கு திருமனம் நடந்திருக்கும்
    சூரியதிசையில் நடந்திருக்கும்
    2ம் அதிபதி குரு 11ல் ஆட்சி!
    குரு 7ம் இடத்தை பார்வை செய்கிரது
    7 ம் அதிபதி 10ல் திக்பலம் !!!
    5 ம் அதிபதி 9ல் பாக்யவான் !!!
    k.sakthivel
    Tuesday, July 29, 2014 11:02:00 AM/////
---------------------------------------------------------
7
//////Blogger amuthavel murugesan said...
    திருமணம் நடைபெற்று இருக்கும்.
    1. 7 ஆம் இடத்து அதிபதி 10ல் , குருயின் 9 ம் பார்வை 7 ம் வீட்டின் மேல்.களத்திரகாரன் 11 ல் இருப்பதாலும் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    இப்படிக்கு
    மு.சாந்தி
    Tuesday, July 29, 2014 11:58:00 AM/////
----------------------------------------------
8
/////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் நமது வகுப்பறை சார்பாக,ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதக அன்பருக்கு
    திருமணம் நடை பெற்றுள்ளது.
    அவருடைய சந்திர தசா குரு புக்தியில் சுக்கிரன் அந்தரத்தில் அவருடைய 30 வயதிற்க்கு மேல் திருமணம் நடந்துள்ளது.    அலசல்:
    1). கும்ப லக்னமாகி,லக்னாதிபதி சனி 11ல், அந்த வீட்டதிபன் ஆட்சி பெற்ற குருவுடனும்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் கூட்டணி.அத்துடன் லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதியான சனியின் பார்வை.
    2). ஏழாமிடத்தில் ராகு இருப்பினும்,இரண்டாம் அதிபதி ஆட்சி பெற்ற குருவின் பார்வை திருமணத்தை நடத்தி வைத்துள்ளது.
    3). லக்கின அதிபதி 11ல். 2ம் பதி 11ல். களத்திரகாரகன் 11ல். 7ம் பதி சூரியன் உச்ச கேந்திரமான 10ம் வீட்டில்.
    நன்றியுடன்,
    பொன்னுசாமி.
    Tuesday, July 29, 2014 12:11:00 PM/////
-------------------------------------------------
9
//////Blogger bg said...
    பிறந்த நாள் நவம்பர் 30 1960
    திருமண நடைபெற வாய்ப்பு உள்ளது.
    7 ஆம் அதிபதி சூரியன் பத்தில்.
    தன் (சூரியன்) திசையில் நடத்தி வைப்பார்.
    மேலும் குரு ஏழாம் வீட்டை பார்க்கிறார்.
    காரகன் மற்றும் யோகாதிபதி சுக்கிரன் 11 இல் உடன் லாபாதிபதி மற்றும் 2 ஆம் இடத்து அதிபதி குரு மற்றும் லக்கினாதிபதி சனியுடன் உள்ளார்.
    மேலும் 10 இடத்தின் அதிபர் 5 இல் இருந்து 11 ஆம் இடத்தை பார்க்கிறார்.
    Tuesday, July 29, 2014 12:46:00 PM////
----------------------------------------------
10
//////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    7இல் ராகு இருந்தாலும் 7க்குடைய சூரியன் ராசியில் கேந்திரமாகிய 10மிடதில் மற்றும் வர்கோதமம், லக்னாதிபதி சனி ராசியில் யோகாதிபதி சுக்கிரன் மற்றும் குடும்பாதிபதியும் லபாதிபதியும்மான குருவுடன் லாப ஸ்தானத்தில் சேர்க்கை அத்துடன் நவாம்சத்தில் உச்சம். ஆகவே திருமணம் நிச்சயம் சற்று தாமதமாக நடந்திருக்கும். அதாவது இந்த ஜாதகருடைய 27வது வயதில் சூரிய திசை சுக்கிரன் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். காரணம் செவ்வாயின் பார்வையில் சனி, குரு, சுக்கிரன் மற்றும் அயன சயன போக ஸ்தானம்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, July 29, 2014 4:11:00 PM/////
-----------------------------------------------------
11
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 64 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    கும்ப லக்கின ஜாதகரான இவருக்கு,
    லக்னாதிபதியான சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள். அவர்கள் இருவரும் குடும்ப ஸ்தான அதிபதி குருவுடன் சேர்க்கை பெற்று லாபஸ்தானத்தில் இருப்பதாலும் களத்திர ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைப்பதாலும் அவருடைய 27 வது வயதில் திருமணம் ஆகி இருக்கும்.
    Tuesday, July 29, 2014 4:39:00 PM//////
----------------------------------------------
12
//////Blogger murali krishna g said...
    அய்யா ,
    அன்பர் அஸ்வினி-4. கேது நட்சத்திரம். மேஷா ராசி கும்ப லக்னம். அன்பருக்கு நிச்சயம் திருமணம் உண்டு! லக்னத்தில் கேது ஏழில் ராகு.இருந்தாலும் 11-ல் இருந்து இரண்டாம் அதிபதியான குரு தன்னுடைய ஆட்சி வீடான தனுசில் இருந்து ஏழாம் வீட்டை ஒன்பதாம் பார்வை பார்க்கிறார். வலுவான பார்வை. அவர் லக்னாதிபதி சனியுடனும் களத்திர காரகன் சுக்கிரனுடனும் கூட்டு வேறு ! அவனே திருமணத்தை நடத்தி முடிப்பான் !. ஏழாம் அதிபதி சூரியன் கேந்திரத்தில் நல்ல ஷட்பலத்துடன் இருக்கிறார். ராகு சூரியனின் வீட்டில் வலிமை குறைந்து காணப்படுகிறார் !. நவம்சத்தில் ஏழில் சனி இருந்தாலும் அவர் உச்சம் பெற்று இருக்கிறார் !. அதனால் திருமணம் நிச்சயம் உண்டு !
    எப்போது என்றால் சூரிய தசையில் குரு அல்லது சுக்கிர புக்தியில் நடந்திருக்கும் !
    Tuesday, July 29, 2014 6:51:00 PM//////
-------------------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
    இந்த அன்பர் 30 நவம்பர் 1960, பகல் 12மணி 24 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடத்தினை சென்னை என்றே எடுத்துக்கொண்டேன்.
    ஜாதகத்தின் சிறப்புக்கள்:
    லக்கினாதிபதி சனைச்சரன் 11ம் இடத்தில் இருப்பது.
    குடும்ப ஸ்தானதிபதி குருபகவான் 11ம் இடத்தில் இருப்பது.
    யோககாரகனும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 11ல் நிற்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை 7ம் இடத்திற்கு இருப்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை சந்திரனின் மேல் இருப்பது.
    ஏழாம் அதிபன் சூரியன் கேந்திரம் ஏறி 10ல் நின்றது.
    ஜாதகத்தின் எதிர்மறைகள்:
    லக்கினத்திலேயே கேதுவும் மாந்தியும் நின்றது.
    ஏழாம் இடத்தில் ராகு நின்றது.
    12ம் இடத்திற்கு செவ்வாய் பார்வை
    லக்கினாதிபதியை செவ்வாய் பார்ப்பது.
    களத்திரகாரக‌னை செவ்வாய் பார்ப்பது.
    எட்டாம் இடத்திற்கு செவ்வாய் பார்வை.
    எட்டம இடத்திற்கு சனியின் பார்வை.
    இந்த ஜாதகருக்கு 28 வயதில் திருமணம் சந்திர தசா சந்திரபுக்தியில்.
    40 வயதில் செவ்வாய் தசா சனிபுக்தியில் மண முறிவு.
    Tuesday, July 29, 2014 7:42:00 PM//////
----------------------------------------------
14
/////Blogger praba karan said...
    அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு,
    இது என்னுடைய முதல் முயற்சி. தவறு(கள்) இருப்பின் மன்னிக்கவும். classroom2007-ல் 170வது பாடப்பகுதி வரை படித்துள்ளேன். தெரிந்த ஜோதிட அறிவை வைத்து என்னுடைய பதிலைப் பதிவுச்செய்துள்ளேன்.
    I.திருமணம் நடக்கும். ஆனால் தாமதமாகும்.
    திருமணம் நடப்பதற்கான அமைப்புகள்:
    1. 7-ஆம் அதிபதி சூரியன் நன்மை பயக்கும் ராசிகளில் ஒன்றான விருட்சகத்தில் இருப்பது.
    2. சுக்கிரனும்,குருவும் சேர்ந்து 11 ஆம் வீட்டில் இருப்பது.
    3. 7-ஆம் வீட்டின் மீதுள்ள குருவின் 9-ஆம் சிறப்புப்பார்வை.
    4. வர்த்தக்கோமம் ஆகியுள்ள 7-ஆம் அதிபன்.
    தாமதமான திருமணத்திற்குக் காரணங்கள்:
    1. 7இல் உள்ள ராகு மற்றும் லக்கனத்திலிருந்து 7-ஆம் பார்வையைச் செலுத்தும் கேது.
    2. சனியின் பிடியில் உள்ள சுக்கிரனும்,குருவும் மற்றும் அம்சத்தில் 7-ல் உள்ள சனி.
    II.திருமணம் சூர்ய மஹா தசை ,குரு அல்லது சுக்கிர புக்தியில் நடக்கும்.
    இதுவரை வகுப்பின் வெளியிலிருந்து உங்களின் பாடங்களை உங்களின் அனுமதியின்றிக் கவனித்துவந்தேன். என்னுடைய முதல் வருகையைப்பதிவுச் செய்து வகுப்பைத் தொடர தங்களின் அனுமதியை வேண்டிக்கொள்கிறேன்.
    இங்கனம்,
    உலோ.பிரபாகரன்
    Tuesday, July 29, 2014 8:06:00 PM/////
----------------------------------------------
15
/////Blogger thozhar pandian said...
    7ல் இராகு, 7ம் வீட்டு சூரியன் அந்த வீட்டிற்கு 4ம் வீடான 10ல் வர்கோத்தமம் பெற்றிருக்கிறார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 11ல், 7ம் வீட்டிற்கு 5ல் இருக்கிறார். 2ம் வீடான குடும்ப ஸ்தான அதிபதியான குரு பகவானும் 11ல் களத்திரகாரகருடன் இருக்கிறார். இருப்பினும் களத்திரகாரகருக்கும், குரு பகவானிற்கும், சனி கூட்டும், செவ்வாயின் பார்வையும் உள்ளது. ஆனால் சனி இலக்கினாதியும் கூட. 1ல் மாந்தியும் கேதுவும் 7ல் இராகுவும் உள்ளனர். இதனால் ஜாதகருக்கு திருமணம் சூரிய மகா தசையில் சுக்கிர புத்தியில் நடந்திருக்கும்.
    Tuesday, July 29, 2014 10:28:00 PM//////
--------------------------------------------
16
/////Blogger Laksh Mannan said...
    திருமணம் நடை பெற்றிருக்கும்..
    23,24 வயதில்....
    குரு வின் 9பார்வை 7ஐ பார்ப்பதால்...
    Tuesday, July 29, 2014 10:34:00 PM//////
----------------------------------------
17
/////Blogger C Jeevanantham said...
    Dear sir
    The person got married two times minimum. 2nd lord is with sukran and sani. 7th place rahu. Multiple marriage and not satisfied.
    Tuesday, July 29, 2014 11:39:00 PM/////

--------------------------------------------------------
18
//////Blogger Ajith M S said...
    ஏழாமிடத்தில் ராகு இருப்பினும் யோகாதிபதியான சுக்கிர சாரம் பெற்றும் குடும்பாதிபதியான குருவின் (ஆட்சி பலத்துடன் இருக்கிறார்) பார்வையைப்பெற்ற ராகு திருமணத்திற்கு இடையூறு செய்ய மாட்டார்.. வாழ்க்கைத்துணை வழியே சிற்சில பிரச்சனை அல்லது சிறு பிரிவு இருந்திருக்கக்கூடும்
    குடும்பாதிபதி, யோகாதிபதி மற்றும் லக்னாதிபதி லாபத்தில் நிற்பதால் மிக இளைய வயதில் திருமணம் ஆகி இருக்கும்.. இள வயதில் வந்த சுக்கிரதசை 21 வயது முடிய.. சுக்கிரதசை முடிவதற்குள் திருமணம் ஆகி இருக்கும்..
    Wednesday, July 30, 2014 12:01:00 AM//////
------------------------------------------------
19
//////Blogger Narayanan V said...
    kandipaka suriya thisaiyil thirumanam nadanthirukum
    Wednesday, July 30, 2014 12:09:00 AM//////

-------------------------------------------
20
///////Blogger sivaradjane said...
    ஐயா வணக்கம்..
    லக்கினத்தில் மாந்தி.உடன் கேது ,7 ல் ராகு. 7 ம் அதிபதி சூரியனும், சுக்கிரன் ,குரு, லக்னாதிபதி சனி ஆகியோர் 1 -12 நிலையில் கிரக யுத்தத்தில் உள்ளனர். இவர்களின் மேல் 'செவ்வாயின் பார்வையும் உள்ளது.
    ஆயினும் 7 - ம் அதிபர் சூரியன் 'வர்கோத்தமம்' அடைந்து வலுவாக உள்ளார். அம்சத்தில் சூரியனும் ,களத்திரகாரகன் 'சுக்கிரனும் ஒன்றாக உள்ளனர். லக்கினாதிபதி 'சனியும் அம்சத்தில் உச்சமாக உள்ளார். மேலும் 7 ம் வீட்டை 'குரு' தன் விசேஷ 9 - ம் பார்வையால் பார்க்கிறார்.
    ஆகவே இந்த ஜாதகருக்கு சூரிய திசையில் திருமணம் நடந்திருக்கும் . இது காதல் திருமணமாக இருந்திருக்கும்.
    sivarajan
    (pondicherry)
    Wednesday, July 30, 2014 1:40:00 AM/////
============================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. களத்திரகாரகனும் சனியும் சேர்ந்து இருப்பது தீமை என்று சொல்லியுள்ளீர்கள்.
    இந்த ஜாதகருக்கு சனி லக்கினாதிபதி.சுக்கிரன் யோககார‌கன்.மேலும் சனியும் சுக்கிரனும் பகைவர்கள் அல்ல.அப்படியிருக்கும் போது அவர்களுடைய கூட்டு எப்படி தீமை செய்யும் ஐயா?

    ஏழாம் வீட்டுக்கு 28 பரல். எனவே திருமணம் 28 வயதில் நடந்திருக்கும் என்று எழுதினேன். 28 வயதில் சந்திர தசா சந்திரபுக்தி வேறு.சந்திரன் சுய வர்கத்தில்
    7 பரல் பெற்று நல்ல வலிமை.ஆனாலும் அப்போது ஏழரைச்சனி என்பதை கணிக்கத் தவறி விட்டேன்.

    ReplyDelete
  2. அன்பர் பிரபாகர் அவர்களும் தாமத திருமணம் என்று குறிபிட்டு இருக்கிறார்

    ReplyDelete
  3. வணக்கம் குரு

    மகர கும்ப லக்னகாரர்களுக்கு சனி நல்லதுதானே செய்வார் அதுவும் தாங்கள் கூரியதுதானே. ஆனால் தற்போது சனி சுக்கிரன் சேர்க்கையாலும் திருமணம் தாமதம் ஆகியுள்ளதாக கூறுகிறீர்கள். நேரமிருப்பின் சற்று விவரிக்கவும்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  4. அய்யா,
    எனக்கு ஒரு சந்தேகம், most of the astrologer are telling combination of guru and sukkiran its bad combination because of Asura Guru(Sukkiran) and Raja Guru(Guru)will not give good thing. Please can you explain.
    Note:
    I read all lessons but you have mentioned its a good combination.

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா.
    புதிரில் கலந்து கொள்ள முடியவில்லை..!!![பயணம்.]
    வாத்தியார் அய்யா யா யா யா யா ...
    கேலக்சி வகுப்பில் உள்ளே நுழைய முடிய வில்லை...
    என்ன தவறு செய்தேன் ..!!!அய்யா ..எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம்.. !!!

    ReplyDelete
  6. அய்யா,
    ஏழாம் வீடு வலுவாக இருந்ததாலும் குரு பார்வை பெற்றதாலும் திருமணம் நடைபெற்றது என்றேன் !. சனி செவ்வாய் பரஸ்பர பார்வையால் காதல் அல்லது கலப்பு திருமணம் என்று தெரிந்தது !. ஆகவே தசா புக்தியை பார்கையில் சூரிய தசையில் நடைபெற்று இருக்கும் என்று கணித்தேன் ! சந்திர தசையிலோ அல்லது செவ்வாய் தசையிலோ இந்த ஜாதகருக்கு திருமணம் நடக்காது, ராகு தசையில் வாய்ப்பு உண்டு ஆனால் அது 42 வயதிற்கு மேல் வருவதால் காதல் திருமணம் இள வயதில் இருக்க வேண்டும் என்று கணித்தேன் ! ஆனால் காதல் திருமணம் 42 வயதில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ! மிகவும் கடினமாக தான் இருந்தது !. ஆனால், இந்த ஜாதகருக்கு விவாகரத்தான பெண் அமைந்து இருக்கிறது என்று கூறி உள்ளீர்கள் !. அதற்கு ஏதேனும் ஜோதிட ரீதியாக விளக்கம் உண்டா ?. நன்றி !

    ReplyDelete
  7. வாத்தியார் அய்யா,

    விசித்திரமான ஜாதகம்! பாடம் அறுமை...

    (நேற்று நான் Tour சென்றதனால் புதிர் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.அடுத்த போட்டியில் பங்கேற்க காத்திருக்கிறேன்.....)

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    களத்திரகாரகனும் சனியும் சேர்ந்து இருப்பது தீமை என்று சொல்லியுள்ளீர்கள்.
    இந்த ஜாதகருக்கு சனி லக்கினாதிபதி.சுக்கிரன் யோககார‌கன்.மேலும் சனியும் சுக்கிரனும் பகைவர்கள் அல்ல.அப்படியிருக்கும் போது அவர்களுடைய கூட்டு எப்படி தீமை செய்யும் ஐயா?
    ஏழாம் வீட்டுக்கு 28 பரல். எனவே திருமணம் 28 வயதில் நடந்திருக்கும் என்று எழுதினேன். 28 வயதில் சந்திர தசா சந்திரபுக்தி வேறு.சந்திரன் சுய வர்கத்தில்
    7 பரல் பெற்று நல்ல வலிமை.ஆனாலும் அப்போது ஏழரைச்சனி என்பதை கணிக்கத் தவறி விட்டேன்./////

    தீயகிரகங்களான சனி, ராகு & கேது ஆகியவற்றுடன் சுக்கிரன் சேரும்போது திருமணம் தாமதப்படும் என்பது பொது விதி. தங்களுடைய ஆதிபத்தியத்தையும் மீறி அவர்கள் செயல்படுவார்கள் என்பதுதான் உண்மை!

    ReplyDelete
  9. /////Blogger Manikandan said...
    அன்பர் பிரபாகர் அவர்களும் தாமத திருமணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்////

    சரி அவருக்கும் ஸ்டார் கொடுத்துவிடுவோம்! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு
    மகர கும்ப லக்னகாரர்களுக்கு சனி நல்லதுதானே செய்வார் அதுவும் தாங்கள் கூரியதுதானே. ஆனால் தற்போது சனி சுக்கிரன் சேர்க்கையாலும் திருமணம் தாமதம் ஆகியுள்ளதாக கூறுகிறீர்கள். நேரமிருப்பின் சற்று விவரிக்கவும்.
    நன்றி
    செல்வம்////

    நல்லது செய்வார். சரி நல்லதை மட்டும் செய்வார் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும். சனி, ராகு & கேது ஆகிய கிரகங்கள் தீய கிரகங்கள். melefic planets) தங்களுடைய வேலையைக் காட்டாமல் இருக்காது!

    ReplyDelete
  11. //////Blogger C.Senthil said...
    அய்யா,
    எனக்கு ஒரு சந்தேகம், most of the astrologer are telling combination of guru and sukkiran its bad combination because of Asura Guru(Sukkiran) and Raja Guru(Guru)will not give good thing. Please can you explain.
    Note:
    I read all lessons but you have mentioned its a good combination./////

    அது பொது விதி. ஆதிபத்தியத்தை வைத்து சில இடங்களில் அது செல்லாது!

    ReplyDelete
  12. //////Blogger murali krishna g said...
    அய்யா,
    ஏழாம் வீடு வலுவாக இருந்ததாலும் குரு பார்வை பெற்றதாலும் திருமணம் நடைபெற்றது என்றேன் !. சனி செவ்வாய் பரஸ்பர பார்வையால் காதல் அல்லது கலப்பு திருமணம் என்று தெரிந்தது !. ஆகவே தசா புக்தியை பார்கையில் சூரிய தசையில் நடைபெற்று இருக்கும் என்று கணித்தேன் ! சந்திர தசையிலோ அல்லது செவ்வாய் தசையிலோ இந்த ஜாதகருக்கு திருமணம் நடக்காது, ராகு தசையில் வாய்ப்பு உண்டு ஆனால் அது 42 வயதிற்கு மேல் வருவதால் காதல் திருமணம் இள வயதில் இருக்க வேண்டும் என்று கணித்தேன் ! ஆனால் காதல் திருமணம் 42 வயதில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ! மிகவும் கடினமாக தான் இருந்தது !. ஆனால், இந்த ஜாதகருக்கு விவாகரத்தான பெண் அமைந்து இருக்கிறது என்று கூறி உள்ளீர்கள் !. அதற்கு ஏதேனும் ஜோதிட ரீதியாக விளக்கம் உண்டா ?. நன்றி !//////

    ”சுக்கிரனின் மேல் உள்ள வேறு 3 கிரகங்களின் ஆதிக்கத்தால் அவர் ஒரு விவாகம் ரத்தான பெண்ணை மணந்து கொள்ள நேரிட்டது” என்று பதிவில் எழுதியுள்ளேனே ராசா! வேறு என்ன விளக்கம் வேண்டும்?

    ReplyDelete
  13. /////Blogger S.Namasu said...
    வாத்தியார் அய்யா,
    விசித்திரமான ஜாதகம்! பாடம் அருமை...
    (நேற்று நான் Tour சென்றதனால் புதிர் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.அடுத்த போட்டியில் பங்கேற்க காத்திருக்கிறேன்.....)/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  14. 5 நாட்கள் விடுமுறை முடிந்து இன்றுதான் வகுப்பறைக்கு வர முடிந்தது.

    விருச்சிக லக்ன ஜாதகர்களான எனது சகோதரர்கள் இருவருக்கு (இரட்டையர்கள்) 7ல் குரு, சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது. திருமணமாகி நன்றாகதான் இருக்கிறார்கள். ஒருவர் தேவ குரு, இன்னொருவர் அசுர குரு என்பதால் தீமையே செய்தாக வேண்டும் என்பதில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com