31.7.14

Astrology: Popcorn Post 49. திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

 

Astrology: Popcorn Post 49. திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)


31.7.2014

உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும் அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.

காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான். எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.

அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்துவைத்தார்கள்.

இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.

பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு  அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை. பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.

முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.

32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை. வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்

ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும். அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?

உண்மைதான்.

நேரம் வராவிட்டால் என்ன செய்வது?

இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்

2.ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.

3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்

4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.

5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்

6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்

பாப்கார்ன் பொட்டலம் 200 கிராம் அளவுதான். இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்

==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. திருமணத்தை பற்றியே
    தினந்தோறும் பதிவு வருகிறதே

    கவணத்தை வேறு பக்கம்
    காட்டக் கூடாதா?

    ReplyDelete
  2. Whether all comments should be satisfied or anyone. if all, it is very difficult for any person's marriage.

    Yesterday i was educating the importance of astrology with my friends. One of my friend questioned, how the prosperity changes for Twins (one is right handed, calm , interested in Bharathanatiyam & Art other is very naughty, left handed, Sportive and talkative - this example is based on my brother's twin daughters - aged 7). Please throw some light on it.

    ReplyDelete
  3. என் அம்மாவின் காலத்தில் வீட்டின் புழக்கடையில் ஒரு பூசணிக்காயோ, பரங்கிக்காயோ துளிர்விட்டுவிட்டால், அது பெரியதாக வளர்வதற்குள் ஒரு திருமணம் நிச்சயித்து,அந்தக் காயையே கல்யாணத்திற்குப் பயன் படுத்துவார்களாம்.குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்ட பின்னர் சிறிது சிறிதாக
    திருமண வயது உயர்ந்து வந்து, இன்று திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது.

    ReplyDelete
  4. ஆடி முடிந்தால் ஆவணி கல்யாணகாலம்தானே.

    ReplyDelete
  5. வணக்கம் குரு

    இந்த பதிவு எங்களுடைய சந்தேகங்களுக்கு விடையளிப்பதாக உள்ளது. விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    ஏழாம் வீட்டதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கினால் ..????
    பாப் கான் கொறிக்க சுவை..

    ReplyDelete
  7. வணக்கம்.

    அதிகமான வேலையின் காரணமாக சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் வகுப்பு அறைக்கு தாமதமாக் வந்ததற்க்கு மன்னிக்கவும்.
    இன்றைய‌ கால‌ க‌ட்ட‌த்தில் இள‌ய‌ த‌லைமுறைக்கு ப‌ல‌ முறை எடுத்து கூறியும் கேட்காம‌ல் உள்ளார்க‌ள்.
    அவ‌ர்க‌ளுகுகாக‌ நான்தான் பிரார்த்த‌னை செய்து கொண்டு இருக்கிறேன். அவ‌ர்க‌ள் அதை ப‌ற்றி ச‌ட்டையே செய்ய‌வில்லை. என்ன‌ செய்வ‌து.
    200கிராம் பாப்கார்ன் க்கு 6 ப‌தில் மிக‌வும் நன்றாக‌ உள்ள‌து.

    ReplyDelete
  8. /////Blogger வேப்பிலை said...
    திருமணத்தை பற்றியே
    தினந்தோறும் பதிவு வருகிறதே
    கவனத்தை வேறு பக்கம்
    காட்டக் கூடாதா?/////

    ஆஹா. உத்தரவு சுவாமி! எட்டுத் திக்கிலும் காட்டுவோம். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  9. ////Blogger Karthikraja K said...
    Whether all comments should be satisfied or anyone. if all, it is very difficult for any person's marriage.
    Yesterday i was educating the importance of astrology with my friends. One of my friend questioned, how the prosperity changes for Twins (one is right handed, calm , interested in Bharathanatiyam & Art other is very naughty, left handed, Sportive and talkative - this example is based on my brother's twin daughters - aged 7). Please throw some light on it./////

    நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    என் அம்மாவின் காலத்தில் வீட்டின் புழக்கடையில் ஒரு பூசணிக்காயோ, பரங்கிக்காயோ துளிர்விட்டுவிட்டால், அது பெரியதாக வளர்வதற்குள் ஒரு திருமணம் நிச்சயித்து,அந்தக் காயையே கல்யாணத்திற்குப் பயன் படுத்துவார்களாம். குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்ட பின்னர் சிறிது சிறிதாக திருமண வயது உயர்ந்து வந்து, இன்று திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது./////

    ஆமாம். பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

    ReplyDelete
  11. ////Blogger Kalai Rajan said...
    ஆடி முடிந்தால் ஆவணி கல்யாணகாலம்தானே./////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு
    இந்த பதிவு எங்களுடைய சந்தேகங்களுக்கு விடையளிப்பதாக உள்ளது. விளக்கத்திற்கு நன்றி./////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    ஏழாம் வீட்டதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கினால் ..????
    பாப் கான் கொறிக்க சுவை..////

    அலசல் பாடங்களில் அந்த பாபகர்த்தாரி யோகத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேனே சாமி!

    ReplyDelete
  14. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்.
    அதிகமான வேலையின் காரணமாக சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் வகுப்பு அறைக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
    இன்றைய‌ கால‌ க‌ட்ட‌த்தில் இள‌ய‌ த‌லைமுறைக்கு ப‌ல‌ முறை எடுத்து கூறியும் கேட்காம‌ல் உள்ளார்க‌ள்.
    அவ‌ர்க‌ளுகுகாக‌ நான்தான் பிரார்த்த‌னை செய்து கொண்டு இருக்கிறேன். அவ‌ர்க‌ள் அதை ப‌ற்றி ச‌ட்டையே செய்ய‌வில்லை. என்ன‌ செய்வ‌து.
    200கிராம் பாப்கார்ன் க்கு 6 ப‌தில் மிக‌வும் நன்றாக‌ உள்ள‌து./////

    நேரம் இருக்கும்போது நீங்கள் வந்தால் போதும். இது இணைய வகுப்பு. வருகைப் பதிவேடு எல்லாம் இல்லை! நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை நண்பரே!

    ReplyDelete
  15. திருமணத்தை நினைத்தால் தன ஐயா கவலையாக உள்ளது. நீங்கள் கூறிய அமைப்பில் ஒரு 3 அமைப்பு இருந்தும். சனி திசையில் சுக்கரன் புத்தி வந்தும் நடந்த பாடில்லை. வயதும் 30 இற்கு நெருங்கி விட்டது. இன்னும் 1 வருடம் 4 மாத காலமே உள்ளது. பிறர் திருமணத்தை மாதம் வரை கணிக்க முடிந்த என்னால் என் திருமணம் சுக்கரன் புத்தி முடியும் முன் நடை பெறுமா என்பது சந்தேகமாவே உள்ளது... நீங்கள் கூறிய படி கடவுளை முழமையாக நன்புகிறேன் !!!! முடிந்தால் என் திருமணம் நடை பெரும் காலத்தை மட்டும் கூறினால் ஒரு அளவு நிம்மதி அடைவேன் !!!!!

    உங்கள் ஆர்வமுள்ள மாணவன்

    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com