Astrology: கேள்வி வந்ததும் பதில் வந்ததா?
பதில் வந்ததால் கேள்வி வந்ததா?
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
- கவியரசர் கண்ணதாசன்
கேள்வி வந்ததும் பதில் வந்ததா?
பதில் வந்ததால் கேள்வி வந்ததா?
-----------------------------------------------
Astrology: Your doubts and my answers
நேற்றையப் பதிவைப் படித்துவிட்டு 3 சீனியர் மாணவர்கள் கேட்டுள்ள கேள்விகளையும், அதற்கான பதில்களையும் கிழே கொடுத்துள்ளேன். பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்தால் அது பலரையும் சென்றடையாது. ஆகவே அவற்றைத் தனிப் பதிவாக இன்று வலை ஏற்றியுள்ளேன்
-------------------------------------------------------------------------------------
1
Chandrasekaran Suryanarayana
Chandrasekaran Suryanarayana has left a new comment on your post "Astrology: Quiz 57: answer வெற்றி மீது வெற்றி வந்த...":
/////நல்ல அலசல். தாங்கள் எந்த சர்ஃப் போட்டு அலசினீர்கள் என்று தெரிந்தால் நாங்களும் அதே போல் அலசுவோம்./////
எந்த சோப்புத்தூளை வேண்டுமென்றாலும் பயன் படுத்துங்கள். அடித்துத் துவைக்க வேண்டும். உங்கள் ஊரில் அடித்துத்துவைக்கக் கல் இருக்காது. அதனால் ப்ரஷ் வைத்து நன்றாகத் தேய்த்துத் துவைக்கலாம்:-))))))
/////1. லக்கினாதிபதி நவாம்சத்தில் உச்சமாகி இருந்தால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா.( quiz 57 சனி நவாம்சத்தில் துலா ராசியில் உச்சம்) உதாரணம் ரஜினி ஜாதகம் போல் இதையும் ஏன் எடுத்துக்கொள்ளகூடாது.//////
தவறு. ரஜினி சிம்ம லக்கினக்காரர். அவருடைய லக்கினாதிபதி சூரியன். அவருடைய 2ஆம் வீட்டுக்காரர் புதன்தான் நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார். ஆகவே 2ஆம் வீட்டைக் கணக்கிட அதை எடுத்துக்கொண்டோம். அதுபோல இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி நவாம்சத்தில் உச்சம் எனும்போது, அது லக்கினத்திற்கான கணக்கில் மட்டுமே வரும். வெளிநாட்டு வாய்ப்பிற்கு எப்படி வரும்? அது லக்கினாதிபதியின் ஏரியா அல்லவே. அதாவது அது லக்கினாதிபதியின் மினிஸ்ட்ரி அல்லவே! (areas not related to lagna lord)
--------------------------------------------
நீசம் என்பது ஊனம். நீசபங்கம் என்பது ஊனம் நீக்கப்பட்ட நிலை.
Neecha Bhanga (Cancellation of debilitation)
The nichha graha represents a handicap. The nichha graha gives initially, a variety of humiliation or failure. The praise and nobility does come, but only after one suffers some measure of disability and embarrassment
ஊனம் நீக்கப்பட்டிருந்தாலும், இயற்கையான வலிமை இருக்குமா? இருக்க வேண்டிய வலிமை முழுமையாக இருக்குமா? சொல்லுங்கள்
---------------------------------------------
/////2. ராசியில் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் 10ம் வீட்டில் துலா ராசியில் சனியுடன் கூட்டு. நீசபங்கம் ஆகியுள்ளார்./////
எத்தனை இடங்களில் ஒரே விதிமுறையைப் பயன் படுத்துவீர்கள்? ராசிக்கும் பயன் படுத்துவீர்கள். அம்சத்திற்கும் பயன்படுத்துவீர்களா? ராசிக்கு மட்டுமே அது செல்லும். யோகங்களும் அப்படித்தான். ராசியை மட்டுமே வைத்துப் பார்க்க வேண்டும். Navamsam is the magnified version of a rasi chart அதை மனதில் வையுங்கள்.
/////3. புதன் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் உரியவர் அல்லவா? பாக்கியாதிபதியாக புதன் ஏன் வேலை செய்யவில்லை.(அஷ்டவர்கத்தில் 39 பரல் உள்ளது). அர்த்தமில்லாமல் போய்விடுமா? ///////
புதன் தனித்திருந்தால் மட்டுமே சுபக்கிரகம். தீய கிரகத்துடன் சேரும்போது அசுபகிரகமாகிவிடுவார். இந்த ஜாதகத்திற்கு ராகுவின் சேர்க்கை அவரை அசுபமாக்கிவிட்டது. அசுபனாகிவிட்டதால் அவர் நன்மைதரும் வேலைகளைச் செய்யவில்லை. ஆறாம் இடத்தின் வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அதைச் செய்தார். இதைச் செய்யாமல் விட்டுவிட்டார்
/////4. முதல் விதியை வைத்து மட்டும் முடிவு கூறினால் உபவிதியின் பலன் தேவையில்லையா.( உப விதி: நவாம்சம், அஷ்டவர்க்கம், யோகம்..)
5. எப்பொழுது முதல் விதியை கடைபிடிக்கவேண்டும். எப்பொழுது உப விதியை கடைபிடிக்கவேண்டும் என்று தாங்கள் மேலும் விளக்கமாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்./////
தேவையில்லை என்று யாராவது சொல்வார்களா? முழு ஜாதகத்தையும் அலசுவதற்கு (அதாவது எல்லா வீடுகளையும் அலசுவதற்கு) அவைகள் தேவைப்படும். அதாவது நீங்கள் குறிப்பிட்டுள்ள உபவிதிகள் தேவைப்படும்.
இங்கே கேட்கப்பட்டது ஒரே ஒரு கேள்வி.( Foreign placement to the native) அதற்குப் போய் எதற்காக முழுமையாக அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்?
இரண்டுபேர் பயணிக்க மோட்டார் சைக்கிள் போதும். நான்கு பேர்கள் என்றால் கார் வேண்டும். நாற்பது பேர்கள் என்றால் பஸ் வேண்டும். அந்தக் கணக்குதான்.
திறமையான இருதய நோய் மருத்துவர், நாடியைப் பிடித்துப் பார்த்தும். ஸ்டெதஸ்கோப்பை வைத்து இதயத் துடிப்பைப்பார்த்தும் இருதயம் ஒழுங்காக இருக்கிறதா அல்லது இல்லையா என்று கண்டு பிடித்துவிட மாட்டாரா?(A good cardiologist will initially find out the disorders of the heart by seeing the pulse and heart beat of the person) அவருக்கே சந்தேகம் வரும் நிலையில்தானே ECG & Other tests களை எடுத்துவரச் சொல்வார்.
ஒரு கேள்வி அல்லது ஒன்பது கேள்விகள் என்ற கணக்கு எல்லாம் இல்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் உபவிதிகள் அனைத்தையும் பயன்படுத்தலாம்!
நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! எனக்குத் தெரிந்த மற்றும் கற்றுணர்ந்த அளவிற்கு உங்கள் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியுள்ளேன்.
பதில் போதுமானதாக இல்லை என்றால், நீங்கள் மீண்டும் கேட்கலாம்
-------------------------------------------------------------------
2
Blogger Kirupanandan A said...
///// நீங்கள் சொன்ன காரணங்களைப் படித்துப் பார்த்தால் தலைதான் சுற்றுகிறது.//////
ஜோதிடமே தலைசுற்றல் மேட்டர்தான். எனக்கு ஜோதிடத்தைக் கற்றுக்கொள்ளும்போது பலமுறை தலைசுற்றியிருக்கிறது. அதுபோல சில கணிப்புக்கள் தவறாகிவிடும்போதும் தலை சுற்றியிருக்கிறது.
//////புதன் 6ம் அதிபதியானாலும் 9ம் அதிபதியாகவும் வருகிறார். 9ம் இடத்திற்கான பலனைக் கொடுக்காததற்கு என்ன காரணம் என்று சொல்லவில்லை. //////
இதற்கான பதில் முன்பகுதியில் உள்ளது. படித்துக்கொள்ள வேண்டுகிறேன்
//////7ம் அதிபதி சந்திரன் நீசமானதும் வெளிநாடு போக முடியாததற்கும் என்ன சம்பந்தம்./////
என்ன 7ஆம் அதிபதியை அத்தனை குறைவாக மதிப்பிட்டுவிட்டீர்கள்? காதலுக்கும் அவர் வேண்டும் (5th & 7th lords combination) கம்பி நீட்டுவதற்கும் (வெளிநாடு போவதற்கும்) அவர் தயவு வேண்டும்.
///////ஆட்சி பெற்ற கிரகத்தோடு இருந்தால் நீச பங்கம் உண்டு. அது வேலை செய்யவில்லையா. ஒரு பக்கம் ராகு மறு பக்கம் செவ்வாய் இருப்பது பாப கர்த்தாரி யோகம் என்றால் அதே இடத்தில் ஒரு பக்கம் சந்திரன், குரு, மறு பக்கம் புதன் இருப்பது சுபகர்த்தாரி யோகம் ஏன் இல்லை. ஒன்றை இன்னொன்று விழுங்கி விட்டதா?/////
ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள்? உள்நாட்டில் அவர் தொழில் செய்வதற்கு சுபகர்த்தாரி யோகம் உதவி செய்தது.
///////சுக்கிர தசை வரை சாதகம் இல்லை என்றால் அதன் பிறகு வரும் 8ம் அதிபதியான சூரிய தசை மட்டும் எப்படி நன்மையாக இருக்கும். இப்படியே போனால் வாழ் நாள் முழுக்க கஷ்டம் என்பதாகி விடும்./////
ஒரே ஒரு கேள்வி. அதற்கு வாய்ப்பில்லை. அதுதான் நிலைமை. அதை வைத்து வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டதுபோல வருத்தம் கொள்கிறீர்கள். ஜாதகர் வாழ் நாள் முழுக்க கஷ்டப்பட்டார் என்று யார் சொன்னார்கள்? ஒவ்வொரு மகா திசையிலும் வரும் உட் பிரிவுகளில் (sub- periods) மாற்றங்கள் இருந்திருக்குமே. நல்லது கெட்டது மாறி மாறி இருந்திருக்குமே இரவு பகலைப் போல!
யாருமே கடைசிவரை கஷ்டப்பட மாட்டார்கள். அதை மனதில் வையுங்கள்
---------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
///// 1. நீசம் ஆனாலும் சனி நீசபங்கம் ஆகியுள்ளார்.(நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீசபங்கம்.)
2. புதன் 6ம் இடத்துக்காரன் லக்கினத்தில் அமர்ந்தார். சரிதான். ஆனால் அவர் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் உரியவர் அல்லவா? பாக்கியாதிபதியாக புதன் ஏன் வேலை செய்யவில்லை?
3. ஏழாம் இடத்துக்காரரான சந்திரனும் நீசபங்கம்.//////
இந்த 3 சந்தேகங்களுக்குமான பதில் மேல் பகுதியில் உள்ளது. படித்துக்கொள்ள வேண்டுகிறேன்.
////4.யோககாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் 6 வது இடத்தினை தன் நேர்பார்வையில் வைத்துள்ளாரே! அதனால் 6ம் விட்டுக்காரனான புதனின் கெடுக்கும் தன்மை குறையாதா?/////
இடத்தை மட்டும்தானே பார்க்கிறார். சம்பந்தப்பட்ட நபரைப் பார்க்கவில்லையே!
/////5.பூசம் அனுஷம் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு முதலில் சனி, புதன் கேது சுக்கிரன் ஆகிய தசாதான் வரும்.சாதாரணமாக ஒருதசா வேலை செய்யும் விதம் பற்றிச் சொல்லும் போது, மூன்று பகுதிகளாகச் சொல்லுவார்கள்.
அந்த தசாவின் கிரஹம் நின்ற இடம்,அந்த கிரஹத்தின் வீடுகள் அந்த லக்கினத்திற்கு எவையோ அவை. இந்த ஜாதகருக்கு சுக்கிர தசா 12, 5, 11
ஆகிய இடங்களின் பலனை கொடுக்க வேண்டும். எது எப்போது வேலை செய்யும் என்பதனை நடந்த பிறகுதான் கணிக்க வேண்டும்.///
எனக்கு இது புது செய்தி!
////// 6.பத்தாம் வீட்டுக்காரன் 12ல் மறைந்தால் தூரதேசத்தில் வேலை என்பதே கணக்கு./////
சரிதான். 9ஆம் வீட்டுக்காரன் கொடி அசைக்காமல் பத்தாம் வீட்டுக்காரன் எப்படி வண்டியைக் கிளப்புவான். 10ஆம் வீட்டுக்காரன் 12ல் மறைந்தால் செய்யும் தொழிலில் விரையம் ஏற்படும் என்பதும் விதி. பத்தாம் வீட்டுக்காரன் மட்டும் போதும் என்றால், தொழிலில் விரையம் இல்லாமல் இங்கே குப்பை கொட்டாமல் பலரும் வெளிநாட்டிற்கு மகிழ்ச்சியாகப் போயிருப்பார்களே சுவாமி!
12ஆம் வீட்டுக்காரன் தன் வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறானே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?
//// 7.சுக்கிரனுக்கு 9ம் இடத்துக்காரனான புதனுடன் சம்பந்தம் இல்லை என்று ஒரு கூற்று. லக்னத்துக்கு என்று வரும் போது புதன் 6ம் வீட்டு அதிபன் என்று கொள்வது; 10ம் வீடு என்று வரும் போது புதன் 9ம் அதிபனாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?////
தொழில், வேலை எல்லாம் பாக்கியம். blessings, fortunes, gains - அதனால்தான் இங்கே அவனை பாக்கியாதிபதி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். சரிதானே சுவாமி?
8.சுக்கிரன் பாபகர்த்தாரியில் உள்ளாரா? 4க்கும் 11க்கும் உரிய செவ்வாயை எப்படி இந்த ஜாதகருக்கு பாபக் கிரஹமாகக் கொள்ளத்தகும்? லக்கினத்துக்கு செவ்வாய் உச்சமானவர் ஆயிற்றே. மேலும் அவர் தன் வீட்டிலேயே அமர்ந்துள்ளாரே!
வீடுகளுக்கு உள்ள விதிமுறைகள் வேறு. யோகங்களுக்கு உள்ள விதிமுறைகள் வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்
///////7.சனியும் செவ்வாயும் சஷ்டாஷ்டகமாக இருந்தாலும் குரு பகவான் செவ்வாயுடனேயே இருந்தும் ஒன்றும் பலன் இல்லையா?/////
குரு பகவான் தனகாரகன் (Lord for finance) என்பது பொது விதி. ஆனால் இந்த ஜாதகத்திற்கு அவர் பன்னிரெண்டாம் வீட்டிற்கு உரியவர். அதை ஏன் மறந்து விட்டீர்கள்?
////// 8. மூன்றாம் இடமான மீனத்தை, வெற்றி ஸ்தானத்தை, குரு பார்த்தாரே, அதற்குப் பயன் ஒன்றும் இல்லையா?//////
இல்லை என்று யார் சொன்னது? ஜாதகர் வெளிநாடு போகவில்லையே தவிர, மற்றபடி ஒரு வெற்றியைக்கூட அவர் பெறவில்லை என்று யாரும் சொல்லவில்லையே?
//////இந்த ஜாதகர் வாழ்க்கை நமக்குத் தெரிந்ததால் 'போஸ்ட் மார்டம்' செய்து அவர் விருப்பம் நிறைவேததற்கு ஜாதகக் காரணங்களைக் கண்டு பிடித்து விட்டோம். இதே அமைப்புள்ள ஜாதகர், இன்னும் 'இன்னிங்ஸ்' துவங்காதவர், 'நான் வெளிநாடு போவேனா?'என்று கேட்டால் இந்தக் காரணங்களால் போக மாட்டாய் என்று சொல்வதா? அல்லது போவதற்கான காரணங்களை 'பாசிடிவா'கக் கண்டு பதில் சொல்வதா? எது சரி?/////
இந்த சந்தேகத்திற்கு நமது மலேசிய நண்பர் ஆனந்த் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில் பதில் சொல்லியிருக்கிறார். அதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
சிறந்த பாடல் பகிர்வு
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteஎங்களுடைய சந்தேகங்களை மிக எளிமையாக, தெளிவாக, விஸ்தீரமாக தாங்கள் பதில் கூறியதற்க்கு பணிவன்புடன் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
தங்களுடைய கடமை உணர்வை நினைத்து பல முறை வியந்துள்ளேன்.
சந்திரசேகரன் சூரியநாரயணன்
போற்றத்தகுந்த, மிகவும் ரசிக்கத்தக்க பதிவு அய்யா.
ReplyDeleteஆனாலும் application of அஷ்டக வர்க்கம் இதில் சொல்லப்படவில்லையே. பரல் கணக்கு இதில் ஒத்துவராதோ?
ReplyDeleteநீச கிரகம் சில விதிமுறைகளின் கீழ் நீச பங்கம் அடையும். சிலர் நீச பங்க ராஜயோகம் என்று சொல்வதுண்டு. இப்படியொரு ராஜயோகம் இருக்கிறதா, அல்லது பெயருக்கு மட்டும்தான் ராஜயோகமா, எந்த நிலைகளில் அது வெறும் நீச பங்கமாக இருக்கும், எந்த நிலைகளில் நீச பங்கம், ராஜயோகமாக மாறும் என்பது நீண்ட ஆராய்ச்சிக்குரிய விஷயம்? பி வி ராமன் அவர்கள் ஒரு நீச கிரகம் எந்த நிலையில் நீச பங்கம் அடையும் என்று தனது Three Hundred Important Combinations என்ற புத்தகத்தில் விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
ReplyDeleteஅலசல் பாடங்களுக்கு நான் க்ளூ கொடுப்பதில்லை. கொடுக்காத போது, அது எப்படி சதியாகும் அன்பரே?
ReplyDeleteநீங்கள் கொடுக்கும் தலைப்பு பெரும்பாலும் "க்ளூ" வாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன். இந்த முறை நீங்கள் கொடுத்த தலைப்பு "வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும்!" என்பது ஜாதகருக்கு வெளி நாட்டு யோகத்தில் வெற்றி கிடைத்திருக்கும் என்பது போல் உள்ளது. இனி மேல் கவனமாக இருப்பேன். பொறுமையாக எல்லாருடைய கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கம் எழுதியுள்ளீர். நன்றி.
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்
ReplyDeleteசூழ்நிலை காரணமாக இந்த வார புதிரையும் அதற்க்கான விளக்கங்களையும் நான் தாமதமாக இன்றுதான் படிக்க நேர்ந்தது.
மிக அருமையான வாதி பிரதிவாதி போல் நடந்த கேள்வியும் விளக்கமான
பதிலும் என்னை ஆர்வமுரச்செய்தது.எளிய முறையில் புரியும்படியான விளக்கம் கொடுத்த தங்களுக்கு நன்றி.
மிக பொறுமையுடன் தெளிவாக விளக்கம் கொடுத்த ஆசிரியர் ஐயா அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.
நன்றி ஐயா
ல ரகுபதி
இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.
ReplyDeleteஎல்லோருடைய சந்தேகங்களுக்கும் நீங்கள் பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்துள்ளது.மிக்க நன்றி ஐயா!தங்கள் கடமை உணர்வு அபாரம்.
//இதே அமைப்புள்ள ஜாதகர், இன்னும் 'இன்னிங்ஸ்' துவங்காதவர், 'நான் வெளிநாடு போவேனா?'என்று கேட்டால் இந்தக் காரணங்களால் போக மாட்டாய் என்று சொல்வதா? அல்லது போவதற்கான காரணங்களை 'பாசிடிவா'கக் கண்டு
பதில் சொல்வதா? எது சரி?//
ஜாதகம் எப்படி இருந்தாலும் ஒரு இளைஞன் நம்மிடம் பலன் கேட்டால் 'ஜாதகப்படி கிரஹங்கள் சாதகமாக இல்லாவிடினும்,நீ தீவிர முயற்சி செய்து ஆண்டவனிடம் வேண்டினால் போகலாம்' என்று சொல்ல வேண்டுமே அல்லாது
அவரை அவ நம்பிக்கை அடையும் வண்ணம் சொல்வது கூடாது என்பதுதான் என் கருத்து.
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கும் வணக்கம்
ReplyDeleteசக மாணவ தோழர்களுக்கு வணக்கம் ..
அலசல் அசாதரணமாக இருக்கிறது ...ஒவொரு கேள்விகளும் சரிதான் என் தோன்றும் நேரம் வாத்தியார் அய்யாவின் விளக்கம் ஆகா .......
வாத்தியார் அய்யா பெருமை பட்டு கொள்ளலாம் ..இது போன்ற மாணவர்கள் கிடைத்தமைக்கு
கட கடைசி பெஞ்ச் மாணவன் s.n.ganapathi.[hamaragana]
"கூடுதுறை"க்குச் சென்று பார்த்தேன். அங்கு எட்டாம் வீட்டிற்கான லிங்க்கில் கிளிக் செய்து பார்த்தால் "sorry this page is not available " என்று வருகிறதே?
ReplyDeleteவாத்தியாரின் உழைப்பை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.
எட்டாம் வீட்டின் விளக்கங்களை மறைத்து விட்டீரா அய்யா..?
////Blogger Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த பாடல் பகிர்வு/////
பாடலின் முதன் 4 வரிகளை மட்டும்தானே போட்டேன் சுவாமி. அதற்கே பாராட்டா?
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteவணக்கம்.
எங்களுடைய சந்தேகங்களை மிக எளிமையாக, தெளிவாக, விஸ்தீரமாக தாங்கள் பதில் கூறியதற்க்கு பணிவன்புடன் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
தங்களுடைய கடமை உணர்வை நினைத்து பல முறை வியந்துள்ளேன்.
சந்திரசேகரன் சூரியநாரயணன்////
சராசரியாக தினமும் 4,000 பேர்கள் வந்து செல்லும் வகுப்பறைக்கு உரிய நேரத்தை நான் செலவிட வேண்டாமா? interest, involvement & dedication இல்லை என்றால் எந்த வேலையையும் திருந்தச் செய்ய முடியாது. நான் முதலில் கற்றுக்கொண்ட பாடம்: செய்வன திருந்தச் செய்!
உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger Govindasamy said...
ReplyDeleteபோற்றத்தகுந்த, மிகவும் ரசிக்கத்தக்க பதிவு அய்யா.////
அப்படியா? உங்களுடைய ரசனை உணர்வு வாழ்க! மேலும் வளர்க!
/////Blogger Govindasamy said...
ReplyDeleteஆனாலும் application of அஷ்டக வர்க்கம் இதில் சொல்லப்படவில்லையே. பரல் கணக்கு இதில் ஒத்துவராதோ?////
பரல்கள் எல்லாம் சைட் டிஷ். உப விதிகள்! சைட் டிஷ் இல்லாமல் உணவைப் பறிமாறியிருக்கேன். நன்றாக உள்ளதல்லவா?
////Blogger Kirupanandan A said...
ReplyDeleteநீச கிரகம் சில விதிமுறைகளின் கீழ் நீச பங்கம் அடையும். சிலர் நீச பங்க ராஜயோகம் என்று சொல்வதுண்டு. இப்படியொரு ராஜயோகம் இருக்கிறதா, அல்லது பெயருக்கு மட்டும்தான் ராஜயோகமா, எந்த நிலைகளில் அது வெறும் நீச பங்கமாக இருக்கும், எந்த நிலைகளில் நீச பங்கம், ராஜயோகமாக மாறும் என்பது நீண்ட ஆராய்ச்சிக்குரிய விஷயம்? பி வி ராமன் அவர்கள் ஒரு நீச கிரகம் எந்த நிலையில் நீச பங்கம் அடையும் என்று தனது Three Hundred Important Combinations என்ற புத்தகத்தில் விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்./////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும், மேலதிகத் தகவலுக்கும் நன்றி ஆனந்த்!
/////Blogger venkatesh r said...
ReplyDelete/////அலசல் பாடங்களுக்கு நான் க்ளூ கொடுப்பதில்லை. கொடுக்காத போது, அது எப்படி சதியாகும் அன்பரே?////
நீங்கள் கொடுக்கும் தலைப்பு பெரும்பாலும் "க்ளூ" வாக உதவியிருக்கிறது என்றுதான் சொல்ல வந்தேன். இந்த முறை நீங்கள் கொடுத்த தலைப்பு "வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும்!" என்பது ஜாதகருக்கு வெளி நாட்டு யோகத்தில் வெற்றி கிடைத்திருக்கும் என்பது போல் உள்ளது. இனி மேல் கவனமாக இருப்பேன். பொறுமையாக எல்லாருடைய கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கம் எழுதியுள்ளீர். நன்றி.////
சில சமயம் தலைப்புக்கள் உங்களை திசை திருப்பலாம். நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்!
////Blogger raghupathi lakshman said...
ReplyDeleteமதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்
சூழ்நிலை காரணமாக இந்த வார புதிரையும் அதற்க்கான விளக்கங்களையும் நான் தாமதமாக இன்றுதான் படிக்க நேர்ந்தது.
மிக அருமையான வாதி பிரதிவாதி போல் நடந்த கேள்வியும் விளக்கமான
பதிலும் என்னை ஆர்வமுரச்செய்தது.எளிய முறையில் புரியும்படியான விளக்கம் கொடுத்த தங்களுக்கு நன்றி.
மிக பொறுமையுடன் தெளிவாக விளக்கம் கொடுத்த ஆசிரியர் ஐயா அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.
நன்றி ஐயா
ல ரகுபதி/////
உங்கள் அனைவரின் அன்பை விட போற்றுதல் எல்லாம் பெரிய விஷயம் அல்ல! நன்றி நண்பரே!
Blogger kmr.krishnan said...
ReplyDeleteஇத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.
எல்லோருடைய சந்தேகங்களுக்கும் நீங்கள் பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்துள்ளது.மிக்க நன்றி ஐயா!தங்கள் கடமை உணர்வு அபாரம்.
//இதே அமைப்புள்ள ஜாதகர், இன்னும் 'இன்னிங்ஸ்' துவங்காதவர், 'நான் வெளிநாடு போவேனா?'என்று கேட்டால் இந்தக் காரணங்களால் போக மாட்டாய் என்று சொல்வதா? அல்லது போவதற்கான காரணங்களை 'பாசிடிவா'கக் கண்டு
பதில் சொல்வதா? எது சரி?//
ஜாதகம் எப்படி இருந்தாலும் ஒரு இளைஞன் நம்மிடம் பலன் கேட்டால் 'ஜாதகப்படி கிரஹங்கள் சாதகமாக இல்லாவிடினும்,நீ தீவிர முயற்சி செய்து ஆண்டவனிடம் வேண்டினால் போகலாம்' என்று சொல்ல வேண்டுமே அல்லாது
அவரை அவ நம்பிக்கை அடையும் வண்ணம் சொல்வது கூடாது என்பதுதான் என் கருத்து./////
அது உங்கள் கருத்து மட்டும் அல்ல! எல்லோருடைய கருத்தும், செயல்பாடும் அதுதான். ப்யூஸ் பிடிங்கி ஆர்வத்துடன் வருபவரை அனுப்பி வைப்பது தர்மம் ஆகாது! உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே
////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கும் வணக்கம்
சக மாணவ தோழர்களுக்கு வணக்கம் ..
அலசல் அசாதரணமாக இருக்கிறது ...ஒவொரு கேள்விகளும் சரிதான் என் தோன்றும் நேரம் வாத்தியார் அய்யாவின் விளக்கம் ஆகா .......
வாத்தியார் அய்யா பெருமை பட்டு கொள்ளலாம் ..இது போன்ற மாணவர்கள் கிடைத்தமைக்கு
கட கடைசி பெஞ்ச் மாணவன் s.n.ganapathi.[hamaragana]/////
எத்தனை நாட்களுக்குத்தான் கடைசி பெஞ்ச் மாணவனாகவே இருப்பீர்கள்? முதல் பெஞ்சிற்கு வாருங்கள். நாங்கள் அனைவரும் மகிழ்வோம் அல்லவா? நன்றி கணபதி சார்!
////Blogger Govindasamy said...
ReplyDelete"கூடுதுறை"க்குச் சென்று பார்த்தேன். அங்கு எட்டாம் வீட்டிற்கான லிங்க்கில் கிளிக் செய்து பார்த்தால் "sorry this page is not available " என்று வருகிறதே?
வாத்தியாரின் உழைப்பை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.
எட்டாம் வீட்டின் விளக்கங்களை மறைத்து விட்டீரா அய்யா..?/////
எட்டாம் வீட்டிற்கான பாடங்கள் மொத்தம் 10. அவைகள் முக்கியமான பாடங்கள். திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக, அவைகள் safe custodyயில் இருக்கின்றன நண்பரே! galaxy2007 வகுப்பில் அவற்றைப் பதிவிட்டுள்ளேன். அது மேல்நிலை வகுப்பு. அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அங்கே பதிவிட்டுள்ளேன்.