9.5.14

நல்ல மனம் வாழ்க!

 


நல்ல மனம் வாழ்க!

இன்றைய மனிதன் பணத்தைத்தான் பிரதானமாகக் கருதுகிறான். சொத்து வேண்டும். செல்வம் வேண்டும். வாழ்க்கை வசதிகள் அனைத்தும்
வேண்டும். அதுதான் அவனுடைய ஆசை. அவனுடைய ஒரே
குறிக்கோள். அதற்காகத்தான் பாடுபடுகிறான்.

அதற்கு அடுத்தபடியாக, பதவி, மற்றும் புகழுக்கு ஆசைப் படுகிறான்.

ஆனால் அவற்றை எல்லாம்விட முக்கியமானது ஒன்று இருக்கிறது.

அதுதான் நல்ல மனம். சக மனிதனை நேசிக்கும் மனம். சக மனிதனுக்கு உதவும் மனம்.

அப்படிப்பட்ட மனம் கொண்ட மனிதர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தது. வாய்ப்புக் கிடைக்கும்போது அவரை நேரில் சந்திக்க இருக்கிறேன்.

தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் தான் படித்த கோத்தகிரியில் ஒரு டீ எஸ்டேட்டையும், அதனுடன் ஒரு விருந்தினர் மாளிகையும் (Guest House) வாங்கிப் பராமரித்து வருவதோடு தன்னுடைய நண்பர்களுக்கும் அங்கே சென்று தங்குவதற்கு அனுமதியளித்து வருகிறார். அவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். என் நண்பர் ஒருவர் மூலமாக அந்த கெஸ்ட் ஹவுசின் சாவி கிடைத்தது.  பதினைந்து பேர்கள் சென்றோம். 4 நாட்கள் அங்கே தங்கினோம்.

அந்த guest house பார்ப்பதற்கு (தோற்றத்தில்) எளிமையாக இருந்தாலும் உள்ளே சகல வசதிகளும் உள்ளன.

Two master bedrooms with attached bath rooms. 2 main halls, full pledged kitchen, water heaters, room heaters, TV with dish antenna, DVD player, medicines for urgent needs என்று எல்லாம் உள்ளன. பின்புறம் பணியாட்களுக்கான குடில்கள் உள்ளன. 4 பசுமாடுகள் உள்ளன. கறந்தபால் கிடைக்கிறது. கறந்த பாலில் காப்பி சாப்பிட்டுப் பாருங்கள். அற்புதமாக இருக்கும்.

அந்தக் குளிருக்கு எல்லாமே அற்புதமாக உள்ளன.

அந்த இடம் கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோலூர்மட்டம் என்ற கிராமத்தில் உள்ளது. ஒரே ஒரு கஷ்டம் அங்கே எந்தக் கம்பெனி சிம் கார்டாக இருந்தாலும் சிக்னல் கிடைக்காது. செல்போன்கள் வேலை செய்யாது. டவர்கள் இல்லை. இணைய வசதிகள் இல்லை. எதிர்காலத்தில் வரலாம்.

கோத்தகிரியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் கிழக்கில் பயணித்தால் கொடநாடு உள்ளது. ஆமாம் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிரம்மாண்டமான டீ எஸ்டேட்டும், மாளிகையும் அந்தப் பகுதியில் தான் உள்ளது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்தான் கொடநாடு காட்சி முனை என்ற இடம் உள்ளது. அதுவும் பார்க்க வேண்டிய இடம்

கோத்தகிரியில் ஏராளமான தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் (Lodges, Hotels & Restaurents) உள்ளன. யார் வேண்டுமென்றாலும் சென்று வரலாம். கோவையில் இருந்து கோத்தகிரி 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

The trip was enjoyable and memorable.

நல்ல மனம் கொண்ட அந்த மனிதர், நீண்ட நாட்கள் நலத்துடன் வாழ வேண்டும்!

அந்தப் பயணத்தைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். இப்போது படங்களுடன் சில செய்திகள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------

எத்தனை விதமான பூக்கள் பாருங்கள். 

ஒரே இடம். ஒரே மண். ஒரே நீர், ஒரே சூரிய வெளிச்சம், ஒரே காற்று. ஆனால் வடிவங்களும் நிறங்களும் மாறுபடுகின்றன.

இந்தப் பூக்களுக்கெல்லாம் வண்ணம் எங்கேயிருந்து கிடைக்கிறது? 

அதை மட்டும் சொல்லுங்கள். தெரியாவிட்டால் ஒரு விஞ்ஞானியிடம் கேட்டுச் சொல்லுங்கள்
---------------------------------------------------------------------------







Kotagiri is a panchayat town in The Nilgiris District in the Indian state of Tamil Nadu. Kotagiri is situated at an elevation of around 1793m above sea level and is one of the three popular hill stations located in the Nilgiris. This picturesque hill station is bounded by verdant green tea estates and offers a number of trekking options.

This old hill station has been developed around innumerable knolls and valleys. The Doddabetta Range is 22 km away. Catherine Falls, Elk Falls and Rangaswami Pillar are the major attractions near Kotagiri and you can trek to these places. Kodanad View Point offers a spectacular view of the gentle sloping hills and blue hills. There is another jungle trekking trail that leads you to a small stream of water.

The three popular trekking trails are Kotagiri - Kodanad; Kotagiri - St. Catherine Falls and Kotagiri - Longwood Shola. The Kotagiri - Kodanad trail leads you through splendid views of lush-green tea estates and the magnificent Moyar River. One has to cross through meadows to reach Kodanad.

Kodanad View point is a tourist spot near Kotagiri town, Nilgiri District, Tamil Nadu state, South India.[1] It is located about 18 km east of Kotagiri on the eastern edges of Nilgiris at 11°31′29″N 76°54′57″E. Due to the location it is also called the Terminus Country


Source: Wiki Maharaja
--------------------------------------------------------  
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. படத்தில் வாத்தியார் மிகவும் சோகமாக காட்சியளிப்பது போல் தெரிகிறது. அல்லது பயணக் களைப்பாக இருக்கலாம். பின்னால் நிற்பவர் சிறுவனா சிறுமியா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    ReplyDelete
  2. அன்புடன வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    எப்படி மனிதன் ஒரே மாதிரியான உறுப்புகள் கொண்டலும் மனம் வேறுபட்டு இருக்கிறது..
    அதே போல் இறைவன் படைப்பில் பூக்களும் வேறு வேறு நிறம் கொண்டவை சில மிக மிக அழகாக இருக்கும் ஆனால் பூஜைக்கு ஆகாது சில வாசனையாக இருக்கும் ஆனாலும் பூஜைக்கு ஆகாது

    .ஆனால் எல்லாம் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் .
    மனிதனும் கெட்ட மனம் இருந்தாலும்..??? ஏதாவது ஒருவகையல் நல்லவனே ...!! கூறியது எனது குரு தேவர்.
    நன்றி ..

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா,

    தங்களின் பகிர்வுக்கு நன்றி. இதை கேள்விப்படும்போது இந்த கலியுகத்தில் இப்படிப்பட்ட நல்லோர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

    // எத்தனை விதமான பூக்கள் பாருங்கள். ஒரே இடம். ஒரே மண். ஒரே நீர், ஒரே சூரிய வெளிச்சம், ஒரே காற்று. ஆனால் வடிவங்களும் நிறங்களும் மாறுபடுகின்றன.இந்தப் பூக்களுக்கெல்லாம் வண்ணம் எங்கேயிருந்து கிடைக்கிறது? அதை மட்டும் சொல்லுங்கள். தெரியாவிட்டால் ஒரு விஞ்ஞானியிடம் கேட்டுச் சொல்லுங்கள்//

    இங்குதான் இறைவனின் படைப்பின் விந்தை இருப்பதை கூறிய நீங்களே இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  4. அன்புடையீர்..
    பயணம் நல்லபடியாகஇருந்திருக்கும் .

    கண்ணுக்கு அழகிய குளுமையான படங்களுடன் குடநாடு பற்றிய பதிவு அருமை..

    ReplyDelete
  5. Respected Sir,

    Paarpadharku migavum ramyamaga ulladhu... Pagirndhamaiku Nandri.

    Regards,
    Chandrasekharan.A

    ReplyDelete
  6. ஐயா,
    நாங்களே உல்லாசப் பயணம் போயிருந்தது போல படங்கள் குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் படங்களைப் பத்திரப்படுத்த (save) செய்ய முடியவில்லை.

    அ.நடராஜன்

    ReplyDelete
  7. அய்யாவுக்கு வணக்கம், கோடை விடுமுறையை பசுமையான, குளிர்ச்சியான இடத்தில் கழித்திருக்கிர்கள் என்பது படங்களில் இருந்து தெரிகிறது. தங்களின் அனுபவத்தை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  8. கோத்தகிரி பயணம் முன்னுரைக் கட்டுரையும்,புகைப்படங்களும் அருமை.

    தொழிலதிபர்கள், கம்பெனிகள் பலவும் இது போன்ற விருந்தினர் விடுதிகளைக்
    கட்டிவைத்துள்ளனர். ஊட்டி கொடைக்கானல், திருக்குற்றால‌ம் போன்ற குளு குளு
    வாசஸ்தலங்களில் இவை ஏராளம் உள்ளன.

    உங்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது எங்க‌ளுக்கெல்லாம் கிடைத்த மாதிரி.உங்கள் கைவண்ணத்தில் நேரில் சென்று வந்ததைப் போன்ற‌ உணர்வினை
    சொற்களால் ஏற்படுத்தி விடுவீர்கள்.

    நன்றி ஐயா!

    ReplyDelete
  9. Respected Sir,

    Welcome back..... you enjoyed the summer holidays....

    Have a pleasant day.

    ReplyDelete
  10. தங்கள் பயன்தரும் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  11. ////Blogger Kirupanandan A said...
    படத்தில் வாத்தியார் மிகவும் சோகமாக காட்சியளிப்பது போல் தெரிகிறது. அல்லது பயணக் களைப்பாக இருக்கலாம். பின்னால் நிற்பவர் சிறுவனா சிறுமியா என்று கண்டுபிடிக்க முடியவில்லை./////

    ஆமாம் களைப்பில்தான் அந்தத்தோற்றம். சரியாகச் சொன்னீர்கள். அந்த விருந்தினர் இல்லத்தின் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சிறுமி அவள்.

    ReplyDelete
  12. ////Blogger hamaragana said...
    அன்புடன வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    எப்படி மனிதன் ஒரே மாதிரியான உறுப்புகள் கொண்டலும் மனம் வேறுபட்டு இருக்கிறது..
    அதே போல் இறைவன் படைப்பில் பூக்களும் வேறு வேறு நிறம் கொண்டவை சில மிக மிக அழகாக இருக்கும் ஆனால் பூஜைக்கு ஆகாது சில வாசனையாக இருக்கும் ஆனாலும் பூஜைக்கு ஆகாது
    .ஆனால் எல்லாம் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் .
    மனிதனும் கெட்ட மனம் இருந்தாலும்..??? ஏதாவது ஒருவகையல் நல்லவனே ...!! கூறியது எனது குரு தேவர்.
    நன்றி ..////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  13. ////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் அய்யா,
    தங்களின் பகிர்வுக்கு நன்றி. இதை கேள்விப்படும்போது இந்த கலியுகத்தில் இப்படிப்பட்ட நல்லோர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
    // எத்தனை விதமான பூக்கள் பாருங்கள். ஒரே இடம். ஒரே மண். ஒரே நீர், ஒரே சூரிய வெளிச்சம், ஒரே காற்று. ஆனால் வடிவங்களும் நிறங்களும் மாறுபடுகின்றன.இந்தப் பூக்களுக்கெல்லாம் வண்ணம் எங்கேயிருந்து கிடைக்கிறது? அதை மட்டும் சொல்லுங்கள். தெரியாவிட்டால் ஒரு விஞ்ஞானியிடம் கேட்டுச் சொல்லுங்கள்//
    இங்குதான் இறைவனின் படைப்பின் விந்தை இருப்பதை கூறிய நீங்களே இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா.
    நன்றி
    செல்வம்////

    வண்ணப்பூவினில் காயை வைத்தவன்
    சிப்பிஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்”
    என்ற கவியரசரின் வரிகளை நினைவு படுத்தவே அந்தக் கேள்வியைக் கேட்டேன். அதை நீங்கள் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது நன்றி!

    ReplyDelete
  14. ////Blogger துரை செல்வராஜூ said...
    அன்புடையீர்..
    பயணம் நல்லபடியாகஇருந்திருக்கும் .
    கண்ணுக்கு அழகிய குளுமையான படங்களுடன் குடநாடு பற்றிய பதிவு அருமை../////

    ஆமாம். உண்மையில் பயணம் சிறப்பாகவே இருந்தது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Paarpadharku migavum ramyamaga ulladhu... Pagirndhamaiku Nandri.
    Regards,
    Chandrasekharan.A/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1

    ReplyDelete
  16. ////Blogger Ariyaputhiran Natarajan said...
    ஐயா,
    நாங்களே உல்லாசப் பயணம் போயிருந்தது போல படங்கள் குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் படங்களைப் பத்திரப்படுத்த (save) செய்ய முடியவில்லை.
    அ.நடராஜன்/////

    உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப் படுத்துங்கள். அந்தப் படங்களை இணைப்பாக அனுப்பிவைக்கிறேன்!

    ReplyDelete
  17. ///Blogger Raja Murugan said...
    அய்யாவுக்கு வணக்கம், கோடை விடுமுறையை பசுமையான, குளிர்ச்சியான இடத்தில் கழித்திருக்கிர்கள் என்பது படங்களில் இருந்து தெரிகிறது. தங்களின் அனுபவத்தை தெரிவியுங்கள்.////

    நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

    ReplyDelete
  18. ////Blogger kmr.krishnan said...
    கோத்தகிரி பயணம் முன்னுரைக் கட்டுரையும்,புகைப்படங்களும் அருமை.
    தொழிலதிபர்கள், கம்பெனிகள் பலவும் இது போன்ற விருந்தினர் விடுதிகளைக்
    கட்டிவைத்துள்ளனர். ஊட்டி கொடைக்கானல், திருக்குற்றால‌ம் போன்ற குளு குளு
    வாசஸ்தலங்களில் இவை ஏராளம் உள்ளன.
    உங்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது எங்க‌ளுக்கெல்லாம் கிடைத்த மாதிரி.உங்கள் கைவண்ணத்தில் நேரில் சென்று வந்ததைப் போன்ற‌ உணர்வினை சொற்களால் ஏற்படுத்தி விடுவீர்கள்.
    நன்றி ஐயா!////

    என் எழுத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  19. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Welcome back..... you enjoyed the summer holidays....
    Have a pleasant day./////

    ஆமாம். உண்மையில் பயணம் சிறப்பாகவே இருந்தது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    தங்கள் பயன்தரும் பகிர்வுக்குப் பாராட்டுகள்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. இதில் உள்ள படங்களை save செய்ய வழி இருக்கிறது. குறுக்கு வழியை சொல்லிக் கொடுத்து அதை சிலர் தவறாக பயன்படுத்தக் கூடும். வேண்டாம் என்றுதான் சொல்லவில்லை. வாத்தியாரே அதை மின்னஞ்சல் செய்வதாக சொல்லி விட்டாரே.

    ReplyDelete
  22. Welcome Back Sir. I am sure you are now fully rejuvenated.

    @Kirupanandan A: I feel you could have remained silent, without even suggesting. Vaathiyar has his own reasons for disabling right click.

    ReplyDelete
  23. In this you emphasized on helping others. In fact the base of our Sanatana Dharma resides always with this. The dasaavatara of Vishnu is only to help others. The Birth of Lord Subramanya is to help others. The same is root for Shiva, Parvathi, Lakshmi and Saraswathi. Almost in all our Smruti's the basic for anyone to be liked by God is helping the other.

    ReplyDelete
  24. நான்தான் எதையும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அதன் பிறகும் இப்படி ஒரு பின்னூட்டம் தேவையா. நான் சொன்னது வாத்தியார் இன்னும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான்.

    ReplyDelete
  25. அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம்.

    ஒரு நல்ல மனிதர் மூலம் தாங்களளுக்கு

    இயார்கையை ரசிக்க வாய்ப்பு கிடைதது.

    அந்த மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து

    கொண்டதற்கு மிகவும் நன்றி .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com