21.5.14

Astrology: quiz.54: ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே!

 

Astrology: quiz.54: ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே!

Quiz No.54: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தி நான்கு

21.5.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்வி. அந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது. எத்தனை வயதில் நிமிர்ந்து உட்கார்ந்தார்?
2.பார்த்த வேலை ஸ்திரமாகி நிம்மதி கிடைத்ததா? அல்லது கிடைக்கவில்லையா?

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.


அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. 1) 30 வயது வரை வாழ்க்கை கடும் போராட்டம். கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷம். அதுவும் 2-ல் கேது. ௮-ல் ராகு. சூரிய தசை, சந்திர தசை, செவ்வாய் தசை முடிந்து 9-ம் இட ராகு தசையில் பூமி/ அக்னி சம்பந்தமான தொழிலில் முன்னேற்றம் உண்டு.
    2) ஆனால் speculation அல்லது gambling மற்றும் வட்டி சம்பந்தமான வேலையாக இருப்பதால் வாழ்க்கை சுமார் தான்.ஸ்திரமான வாழ்க்கை கிடையாது. மேடு பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கை. மூன்று கிரஹங்கள் நீசம்.சனி மட்டும் ஆட்சி ஆனால் லக்னத்தில்.

    ReplyDelete
  2. என்னுடைய ஜாதகத்தை அலசலுக்கு
    எடுத்துக் கொள்ளும் வரை

    புதிர்களில் கலந்து கொள்வதில்லை
    புரிந்து கொண்டுபடி பதிவேற்றி

    உயிருடன் இருக்கும் போதே
    உறுப்பு தானம் என்பது போல்

    அலசலுக்கு ஆட்படுத்துங்கள்
    அதுவரை அன்புடன்

    ReplyDelete
  3. Respected Sir
    Here is my answer.
    1. After 36 (in sani Dasa)
    20 to 36 Guru dasa. Guru is 3rd and 12th lord and neecham.
    2. His will have stable job as he has dharma karmathipathi yogam (Sukra/Budha parivarthanai) and guru looks at 10th lord Sukra.

    Kethu starts the Kala sharba dosa. But Guru, Sukra, Butha and Chandran have more tan 5 parals.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 54 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    6 மற்றும் 9ம் பதியான புதன் 10ல், செவ்வாய் மற்றும் நீச்ச சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 10ம் பதியான சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகியிருப்பதால், தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்பட்டு வலுப்பெற்று இருப்பதாலும், சுக்கிரனுக்கு குரு பார்வை கிடைப்பதாலும் ஜாதகருக்கு பார்த்த வேலை ஸ்திரமாகி இருக்கும்.

    ஆனாலும் கால சர்ப்ப தோஷம் இருப்பதால் ராகு திசை முடிந்து குரு திசையில்தான் அதாவது அவருடைய 39வது வயதுக்குப் பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.

    ReplyDelete
  5. வணக்கம் குரு

    இந்த ஜாதகருக்கு வேலையில் புகழ் பெரும் அமைப்பு உள்ளது. ஏனெனில் தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளது ஆனால் அடமாதிபதியாகிய சூரியன் சேர்க்கையால் கிடைக்காது போல தோன்றினாலும் சூரியனுக்கு பத்தாமிடம் உகந்ததே அத்துடன் கர்மகாரகன் சனி ஆட்சிபலத்துடன் கூடவே குரு, சந்திரன் சேர்க்கை. பத்தில் மூன்று கிரக சேர்க்கை உள்ளதால் திருமணம் பாகியம் குறைவு. இது trumpeter, composer, teacher, music educator, and Artistic Director of Jazz at Lincoln Center in New York City, United States Wynton Marsalis அவர்களின் ஜாதகம் என்று நினைக்குறேன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  6. வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கம் ..

    17/OCT/61 2:15 PM பிறந்த இந்த ஜாதகர் , அஷ்டமா & அஷ்டமதிலுள்ள கிரகங்கள் மற்றும் மாரகதிபதிகளின் திசையை கடந்து தனது குரு திசையில் இப்போது இருக்கின்றார் பத்தில் புதன் ஆதித்ய யோகம் கேந்திரமாகிய பத்தில் இந்த யோகம் இருந்தால் தொழிலில் திறமையாக செயல்படலாம் .ஆகவே குரு திசையில் இவர் தொழிலில் நிமிர்ந்து நிற்பார்., இவருக்கு மூன்று கிரகங்கள் நீச பங்கம் ஆகின்றது .. குரு ,சுக்கிரன் , சூரியன் . இதில் முக்கியமானது என்னவென்றால் சுக்கிரனும் புதனும் தர்மகர்மாபதி யோகத்தில் பரிவர்தனை . மேலும் லக்கினத்தில் உள்ள தொழில்காரகன் சனி பார்வை பத்தில்., தனகாரகன் குரு பார்வை ஒன்பதாமிடதிற்கு ., பரல் கணக்கில் மிகவும் பலமான சுக்கிரன் மற்றும் குரு,
    இரண்டு மற்றும் ஏழாம் அதிபதிகளின் சேர்க்கை , சஸமகா மற்றும் கஜகேசரி யோகத்தால் திடமான மற்றும் நன்மையான குணாதிசயங்கள் இவருக்கு உண்டு., ..
    இரண்டில் கேது இருப்பதாலும் சுக்கிரன் பாப கர்தாரி யோகத்தில் இருப்பதாலும்,ஏழாம் அதிபதி சனியுடன் சேர்ந்திருப்பதாலும் இருப்பதாலும் திருமணம் காலதாமதமாக நடக்கும் .,

    எனது இந்த கணிப்பிற்கு தங்களது மேலான ஆலோசனைகளை எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
  7. Dear Sir,

    This person have kaala sarpa dosam leading by Kethu.
    Placement of neecha sukran in 9th help the native in later stage of life.
    1. After the age of 39 when guru dasa start , the native got improvement in the life. Even though guru is neecham, since it is placed in lagna it will do good to him.
    2. Until the age 39, he could not stand in one job, because Sun in neecham in 10th place, 10th lord sukran also neecham.
    But the lagna lord sani made him to work hard after the age of 39.

    Thanking you.

    C.Jeevanantham.

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய ஐயா,

    புதிர் எண் 54 இற்கான விடை:

    1) ஜாதகருக்கு ஒரு 26 வயது வரை காலசர்பதோசம் உண்டு. இளம் வயதில் கஷ்ட ஜீவனம்.
    2) தர்மகர்மாதிபதி யோகம். மகர லக்கினத்திற்கு சுக்கரனும், புதனும் யோகக்காரர்கள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை பெற்று இருப்பதுடன் சுக்கரன் நீசம் பெற்றாலும் 7 பரல்கள், புதனும் 6 பரல்களுடன் பலத்துடன் இருப்பதுடன் ராகு திசை 21 வயதில் தொடக்கம். ராகுவில் ராகுவும், குருவும் முடிந்த பின்னர் ஜாதகர் அசுர வளர்ச்சி பெற்று இருப்பார். ராகு திசை வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குரு திசையில் பல விரயங்கள் உண்டு.

    ReplyDelete
  9. Ayya,

    Please find my answers.

    1.Kala Sarpa Dosam - Headed by Ketu. So he has to fight in life to get everything. His life have improved in Guru Desa, i.e. After Age 37. But Overall life is fighting life only. The reasons are: 12th house(Virayasthan Adithpathi) owner Guru sitting in lagna.
    2. He didn't get permanent work and he didn't get peaceful life, because of work. The reasons are: 10th house owner(Sukran) sitting in 12th house from 10th house & Neecha Suriyan(that too 8th house owner) and 6th house owner(Bhudhan) in 10th house. I think he might have done Medical or Medical College or Old Papers business or job.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  10. 1. ஜாதகரின் 36 வயது வரை கால சர்பதோஷம் படுத்தி வைத்தது. ராகு தசா சந்திர புக்தி ஜுலை 1997 முதல் தான் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

    2.குருதசா பிப்ரவரி 2000 முதல் துவக்கம்.அதாவது 40 வயது போல பார்த்த வேலையில் உறுதித்த‌னமை ஏற்படடது.

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா!

    கொடுத்து உள்ள ஜாதக அன்பர் மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்து உள்ளார். ஜாதகப்படி அவரின் 10மிடத்திற்கான அலசல் :

    1. கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷ ஜாதகர்.
    2. 21 வயதில் வேலைக்குச் செல்லும் சமயத்தில் ராகு தசை ஆரம்பித்து உள்ளது.
    2.10மிடத்தில் அஷ்டமாதிபதி சூரியனும், ஜாதக வில்லன் புதனும், செவ்வாயுடன் கூட்டு வைத்து உள்ளனர்.
    3.10மிட அதிபதி மற்றும் யோகாதிபதியான சுக்கிரன் 9ல், அதாவது 10மிடத்திற்கு 12ல் அமர்ந்து, பாபகர்த்தாரியின் பிடியில் நீசமடைந்து உள்ளார்.ஆனாலும் புதனுடன் பரிவர்த்தனையில் உள்ளார்.
    4.ஜாதகத்தில் இரண்டு சுபகிரங்கள் நீசமடைந்து உள்ளனர்.

    இவை எல்லாம் சேர்ந்து கொண்டு, ஜாதகரை கிட்டதட்ட 38 வயது வரை நிமிர்ந்து உட்கார இயலாமல் செய்து விட்டன. மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமலும், கிடைத்த சில வேலைகளில் பணி நிரந்தரமாகாமலும் மன‌ நிம்மதி இழந்திருப்பார்.

    அதற்கு பிறகு 38 வயதிற்கு மேல், குரு தசையில் ஜாதகர் ஒரு ஸ்திரமான சுய தொழிலை தொடங்கி அதில் வெற்றியும் பெற்று பணக்காரராகி இருப்பார்.

    அதற்கான காரணங்கள்:

    1)லக்னாதிபதி லக்னத்தில் இரண்டு சுபகிரகங்களுடன் அமர்ந்து உள்ளார்.
    2)10மிடத்திற்கு லக்னாதிபதியும், கர்மகாரகனுமான ச‌னியின் பார்வை உள்ளது.
    3) குருவின் 9ம் தனிப்பார்வை 10மிட‌ அதிபதியான‌ சுக்கிரனின் மேல்.
    4)10ல் புதனும், செவ்வாயும் சேர்ந்து தங்களின் இன்னொரு ஆதிபத்தியத்தின் காரணமாக (4,9) ராஜ யோகத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
    4)9மிடமும், 10மிடமும் பரிவர்த்தனை பெற்று உள்ளன.

    தங்களின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. Kethu is front runner in kalasarppa thosam. so he will be facing all difficulties in his life. But lagnathipathi is strong joined with Guru and chandhran where guru sees all main places of 5th,7th and 9th place giving good back up. Moreover 5th lord is 9th place and 9th lord,4th lord 1st lord and 7th lord are in trikona/kendhra hence he is having capability of overcoming all difficulties. the person will give jobs for other rather than working under somebody.

    ReplyDelete
  13. sir dob is not to be find out because 14.11.1961 as per thirukanitham entirely differed so please give date of birth

    ReplyDelete
  14. கேது கொடி பிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம். விலோமா யோகம். அவ்வளவு நல்லதல்ல. இலக்கினாதிபதி சனி, குரு மற்றும் சந்திரனுடன் இலக்கினத்தில். இலக்கினாதிபதி இலக்கினத்தில் இருப்பது சிறப்பு. குரு சந்திர யோகம் இலக்கினத்தில் இருப்பது மிக சிறப்பு. ஆனால் குரு பகவான் நீசம் பெற்றதோடு இல்லாமல், திருஷ்டியாக திருவாளர் மாந்தியும் இலக்கினத்தில் இருக்கிறார். 9 மற்றும் 10ம் வீட்டுக்காரர்கள் மகாபரிவர்த்தனை ஆகியிருந்தாலும், 10ம் அதிபதி சுக்கிரன் நீசம் மற்றும் பாக்கியாதிபதி புதன் 8ம் வீட்டு நீச சூரியனால் அஸ்தமனம் மற்றும் செவ்வாயின் கூட்டணியும் இருப்பதால் மகாபரிவர்த்தனையின் முழு பலனையும் பெற இயலாது. கால சர்ப்ப தோஷத்தால் 32 வயது வரை சிரமப்பட்ட‌ அன்பர், இராகு தசை முடியும் வரையிலும் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு, 38 வயதில், சற்று நிமிர்ந்திருப்பார். அன்பருக்கு 38 வயதில் நீசமான குரு தசை தொடங்கி இருக்கும். ஆனால் கிடைத்த வேலை ஸ்திரமாக இருந்திருக்காது. இதனால் நிம்மதி இன்றி காலத்தை கழித்திருப்பார். இதற்கு காரணம் கேது கொடி பிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம் மற்றும் 10ம் அதிபதி நீசமானது. மகர இலக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகரும் கூட. அவர் நீசம் அடைந்ததால் வாழ்வில் பெற வேண்டிய பல யோகங்கள் அன்பருக்கு கிடைக்காமல் போயிருக்கும். ஜாதகத்தில் 3 கிரகங்கள் நீசமாகியிருப்பதால் சிரமங்கள் பல.

    ReplyDelete
  15. இந்த ஜாதகத்தில் உள்ள

    சாதகங்கள்
    --------------------

    1) லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி
    2) ஏழாம் அதிபதி லக்னத்தில்
    3) இரண்டம் அதிபதி லக்னத்தில்
    4) 11ஆம் அதிபதி பத்தில்
    5) 9ஆம் அதிபதி பத்தில்
    6) யோகாதிபதி சுக்ரன் 9இல் குருவின் பார்வையில்
    7) குரு லக்னத்தில் நீசபங்கம்
    8) குரு பார்வையில் 5,9 இடங்கள்

    பாதகங்கள்
    -------------------
    1) லக்னத்தில் மாந்தி
    2) லக்னத்தில் 12ஆம் அதிபதி
    3) இரண்டில் கேது
    4) 10இல் 6,8ஆம் அதிபதிகளின் அட்டகாசம்
    5) காலசர்ப்ப தோசம்


    ரகு திசையின் முடிவில் 38 வயதிற்கு மேல் மேம்படுவர் .
    தொழிலில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேறுவார்.

    ReplyDelete
  16. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    கொடுக்க பட்ட ஜாதகம் மகர லக்னம் .மகர ராசி ..

    1.லக்னத்தில் சந்திரன் ,குரு லக்னாதிபதி சனி ..மாந்தி.
    2.கேது கொடிபிடிக்கும் கல சர்ப்ப தோஷம்
    3.மகர லக்னத்திற்கு யோகாதிபதி சுக்கிரன் தன வீட்டிற்கு 12ல் நீசமாகி போனான்
    4.10ம் வீட்டில் 3 பேர் கூட்டணி சூரியன் நீசம்
    5.9ம் வீடு பாபா கர்தாரி யோகத்தில் பாத்தாதர்க்கு அங்கு சுக்கிரன் [10ம் வீட்டுக்காரன் ]வேறு நீசமாக மாட்டி கொண்டு முழிக்கிறான்
    6.குரு தன 9ம் பார்வையாக 10ம் வீடுகாரனை பார்கிறான் ஆகவே எதோ ஒரு வேலை கிடைக்கும்

    ஆக ..இவர் ராஹு திசை கடைசி 36.வயதுக்கு மேல் எதோ ஒரு வேலையில் அமர்வார் .
    அதுவும் நிம்மதி இருக்காது .அதுவும் ஸ்திரமாக இருக்காது..

    ReplyDelete
  17. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    இன்றைய புதிருக்கான விடை:
    1.33ம்வயதிற்க்கு மேல் நிமிர்ந்து உட்கார்ந்து இருப்பார்.

    2.ராகுத‌சை சுக்கிர புத்தியில் ஸ்திரமான வேலையை அடைந்து இருப்பார்.


    * மகர லக்கினம்,மகர ராசி லக்கினாதிபதி ஆட்சி.உடன் 12க்குரிய நீச்சகுரு.
    *கால‌ சர்பதோச ஜாதகம்.லக்கினம் செவ்வாயின் பார்வையில், இளமையில் போராட்டமான வாழ்க்கை.

    *5,10க்குரிய சுக்கிரன் யோகாதிபதியாகி 9க்குரிய புதனுடன் பரிவர்தனையாகி
    உள்ளார்.தர்மகர்மாதிபதி யோகம்.


    *அத்துடன் குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவது நன்மையான அமைப்பு.இதனால் வேலை ஸ்திரமாக வாய்ப்பு உண்டு.

    நன்றி ஐயா. விடையினை சரியா என தெரிந்து கொள்ள ஆவல்.

    ல ரகுபதி

    ReplyDelete
  18. Respected sir,

    Kalasarpa dhosam... 32 vayadhirku mele alladhu lagna paralgal vayadhirku pinbu nimirndhiruppar.

    10m adhibathy sukran 9il neecham and avarukku guru parvai. tholil karagan sani 10i parkiraar. 10m adhipathy and 9m adhipathy parivarthanai. sani and chevaai paraspara paarvai. 8m adhipathy 10il amarvu.

    partha velai sthiram illai adhanal nimmadhi illai.

    Thank You.

    ReplyDelete
  19. Respected sir,

    My answer for our today's Quiz No.54:

    1. He has relieved from Kala sharpa dhosa at the age of 38.

    2. He has settled in his job at the age of 40 (Guru dasa,Saturn sub period).

    Answer no.1:

    He has affected Viloma kala sharpa dhosa. It's very bad. Lakna having 26 parals but Ragu dasa was continued during that period. So he relieved from Kala sarpa dhosa at his age of 38.(at the end of Ragu dhasa)

    2. Tenth lord venus debiliated as well as baba kathiri yoga and tenth house affected by Sixth and Eigth lord. So business is not suitable for him. lagna lord also along with twelfth house lord.
    He has some what comfort in his job at the age of 40 (Jupiter dhasa sub period of Saturn)since Guru is aspecting Venus as well as Saturn aspecting tenth house.

    In Navamsa, Saturn is Varkothmam.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  20. ////Blogger வேப்பிலை said...
    என்னுடைய ஜாதகத்தை அலசலுக்கு
    எடுத்துக் கொள்ளும் வரை
    புதிர்களில் கலந்து கொள்வதில்லை
    புரிந்து கொண்டுபடி பதிவேற்றி
    உயிருடன் இருக்கும் போதே
    உறுப்பு தானம் என்பது போல்
    அலசலுக்கு ஆட்படுத்துங்கள்
    அதுவரை அன்புடன்
    Wednesday, May 21, 2014 8:46:00 AM/////

    வகுப்பறைக் கண்மணிகளின் ஜாதகத்தை வகுப்பறையில் அலசலுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதில் சில பிரச்சினைகள் உள்ளன. விவரிக்க முடியாது. மன்னிக்கவும்!

    ReplyDelete
  21. the above chart lagnathipathi got good position and 9th & 10th places interchanged makes raja yoha. so except rahu dasa all are not bad. and lagnathipathy dasa makes more lucky to him

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com