30.4.14

Short story:சிறுகதை: பராமரிப்பு நிதி-பகுதி 2

 
Short story: சிறுகதை: பராமரிப்பு நிதி - பகுதி 2

Maintenance Fund

(இக்கதையின் முதல் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு இங்கே வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
       

சாமி வீட்டில், விளக்கிருந்த பகுதிக்குக் கீழே உள்ள தரையைத் தோண்டி, ஐந்து அடி ஆழம் வெட்டி எடுத்தவுடன் இரண்டு செப்புத் தவலைகள் கண்ணில் பட்டன என்று முன் அத்தியாயத்தில் எழுதியிருந்தேன் அல்லவா?

சற்று சிரமப்பட்டு மேலே தூக்கி வைத்த பிறகுதான் அவைகள் என்ன வென்று தெரிந்தன. அந்தக் காலத்துத் தவலைகள். ஒவ்வொன்றும் 30 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு இருக்கும். துணியை வைத்துத் துடைத்தவுடன், சொ.அ.சொ என்ற அவர்களுடைய வீட்டு விலாசம் இரண்டு தவலைகளிலும் பளிச்சிட்டது. மேலே மூடிகள் ஈயத்தால் பற்ற வைக்கப்பெற்று சீலிடப்பெற்றிருந்தன!

புதையல்தான் அவைகள் என்று உறுதியாகத் தெரிந்தது.

பழநியப்ப அண்ணன் எப்போதுமே பதற்றம் இல்லாமல் நிதானமாகச் செயல் படக்கூடியவர். சீனுக் கொத்தனாரை வைத்துக் கொண்டு அப்போதே அதைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தவர், தன் சின்னத்தம்பியிடம் சொல்லி அந்தத் தவலைகளை அடுத்து இருந்த அவனுடைய இரட்டை அறையில் வைத்துப் பூட்டச் சொல்லி, சாவியை வாங்கி வைத்துக் கொண்டதோடு, காலையில் அய்யா படத்திற்குப் பூஜை செய்து விட்டு அவற்றைப் பிரித்துப் பார்ப்போம், இப்போது நேரமாகிவிட்டது, வாருங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுப் படுப்போம், மற்றவற்றைக் காலையில் பார்ப்போம் என்று சொல்லிவிட்டார்.

”இது விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்,. உன் மனைவி மக்களிடம் கூட சொல்ல வேண்டாம்” என்று சீனுக் கொத்தனாரையும் எச்சரித்து அனுப்பி வைத்தார். தன் தம்பிகள் நால்வரிடமும் அதே விஷயத்தைச் சொல்லி எச்சரித்து வைத்தார்.

                                    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்குத் தன் தம்பிகள் நான்கு பேர்களையும் வைத்துக் கொண்டு, சற்றுக் கனமாக இருந்த ஒரு தவலையின் மூடியைத் திறந்து பார்த்தபோது, ஆச்சரியம், பரவசம், மகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளும் ஒரு சேர அவர்களை அனைத்துக் கொண்டன.

அதன் உள்ளே ஒரு கெட்டிக் கழுத்திரு, ஒரு கெளரிசங்கம், ஏறாளமான தங்கக் காசுகள் மற்றும் இரண்டு ஓலைச்சுவடிகள் இருந்தன. அடுத்த தவலையையும் திறந்து பார்த்தார்கள். அதில் ஏறாளமான தங்கக் காசுகள் மட்டும் குவியலாக இருந்தது.

அத்தனை தங்கக் காசுகளுமே  5 அவுன்ஸ் மற்றும் 10 அவுன்ஸ் காசுகளாக இருந்தன. பெரிய அளவு காசுகளாக இருந்தன. தங்கக் காசுகளின் ஒரு பக்கம் அமெரிக்க சுதந்திர தேவியின் முகமும் மறுபக்கம் இரட்டைக் கழுகின் குறீயீடுகளும் பதிவாகியிருந்தன. 1900 ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டும் இருந்தது.


பொறுமையாக காசுகளைத் தரையில் கொட்டி எண்ணியபோது முதல் தவலையில் 750 காசுகளும் இரண்டாவது தவலையில் 500 காசுகளும் இருந்தன. மொத்தம் 1,250 தங்கக் காசுகள்.

பழநியப்ப அண்ணன் வங்கியில் பணி செய்தபோது, வங்கியின் தங்க நாணயப் பிரிவில் சில மாதங்கள் பணி செய்திருந்ததால், தங்கத்தைப் பற்றிய பூரண அறிவு அவருக்கு உண்டு. ஒரு அவுன்ஸ் என்பது இன்றைய எடை மாற்றில் 31 கிராமிற்குச் சமம். மொத்த காசுகளின் எண்ணிக்கையை மனதிற்குள் கணக்கிட்டுப் பார்த்தபோது அசந்துவிட்டார். பவுன் காசுகளாக 39 கிலோ தங்கமும், கழுத்திரு மற்றும் கெளரி சங்கத்தைக் கணக்கில் சேர்த்தால் சுமார் 40 கிலோ அளவிற்குத் தங்கம் இருந்தது. இன்றைய மதிப்பில் சுமார் 12 கோடி
ரூபாய் பெறுமானத்திற்கு அவைகள் இருந்தன.

 (திரைப்பட நடிகை சினேகா கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணம்தான் கழுத்திரு என்பது. கழுத்து உரு என்பது மருவி கழுத்திரு என்றாகி விட்டது. இதுதான் பாரம்பரியத் திருமாங்கல்யம். திருமணத்தன்று மணமகன், மணமகளூக்குக் கழுத்தில் கட்டுவார். அணிவிப்பார். தினசரி வழ்க்கையில் அதை அணிந்து கொள்வதில்லை. அதன் எடை அந்தக் காலங்களில் 100 பவுன் அல்லது 108 பவுன்கள் தங்கத்தில் செய்வார்கள். இப்போதும் பல செல்வந்தர் வீடுகளில் செய்கிறார்கள். இன்று கடுமையாக உயர்ந்துள்ள தங்கவிலையின் காரணமாக பல நடுத்தரக் குடும்பங்கள் இந்த நகையை 21 பவுன்கள் அல்லது 16 பவுன்களில் செய்கிறார்கள். உங்கள் தகவலுக்காக இந்தச் செய்தி)

அவற்றை அப்படியே அந்த அறையில் பத்திரப் படுத்திவிட்டு, ஓலைச் சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு  வெளியே வந்தார்கள்

ஓலைச் சுவடிகள் இரண்டில் ஒன்றை எடுத்துப் பார்த்தபோது, பாட்டையா காலத்தில் அவர் செய்த தான தர்மங்கள், செய்த இடங்கள், கோவில்கள் என்று செலவு தொகையுடன் விபரமாகக் குறிப்பிடப்பெற்றிருந்தது.

அதை வைத்து விட்டு, மற்றொரு ஓலைச் சுவடியைப் படித்தபோதுதான், புதையலைப் பற்றிய முழு விபரமும் தெரிய வந்தது.

கதையின் நீளம் கருதி அவற்றைச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்.

அந்த வீட்டைச் சொக்கலிங்கம் செட்டியார் 1895 ஆம் ஆண்டு கட்டத் துவங்கி 1898ஆம் ஆண்டு கட்டி முடித்து நிறைவு செய்தபோது மொத்தம் செலவான தொகை அறுபத்தி மூன்றாயிரம் ரூபாய் என்றும், வீட்டிற்குப் பாதுகாப்பு நிதியாக அதே அளவிற்கு, அதாவது அறுபத்தி மூன்றாயிரம் ரூபாய்களுக்கு
தங்கக்காசுகளாக வாங்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கெட்டிக் கழுத்திரும், கெளரிசங்கமும் தன்னுடைய தாயார் தகப்பனாரு
டையது என்றும் குறிப்பிட்டிருந்தார்.பின்னாளில் குடும்பத்திற்கு ஏதாவது நெருக்கடி அல்லது கஷ்டம் வந்தால் அதைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது என்றும் குறிப்பிட்டிருந்தார். புதையலைப் பற்றிய செய்தி யாருக்கும் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, அதை சங்கேத மொழியில் எழுதி தன்னுடைய பெட்டியடிப் பெட்டியில் பிள்ளைகள்
ஜாதகங்களுடனும் மற்றும் தேவார, திருவாசக ஓலைச் சுவடிகளுடனும் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டிருந்த கால கட்டத்தில் ஒரு பவுனின் விலை பதின்மூன்று ரூபாய்தான். கொத்தனாருக்கு சம்பளம் நாளொன்றுக்கு நாலணா. அதாவது 25 காசுகள். சித்தாளுக்கு அதில் பாதிதான் சம்பளம். சுமார் 100 கிலோ கொண்ட அரிசி மூட்டையின் விலை ஆறு ரூபாய்கள் மட்டுமே. விலை வாசி அந்த அளவில்தான் இருந்தது. அதனால்தான் அத்தனை கிலோ தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பது சாத்தியமாயிற்று.

பாட்டையா தான் தர்மமாகச் செய்த பசுமடங்கள், நந்தவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் இல்லாமல், தான் கட்டிய வீட்டிற்கும், பராமரிப்பு, பாதுகாப்பு நிதி வைத்துவிட்டுப் போயிருப்பது அப்போதுதான் அவர்களுக்குத்
தெரிய வந்தது. அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை!


                                                          $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

தங்கக் காசுகளை 5 பகுதிகளாக்கி, ஒரு பகுதியை மட்டும் இங்கே நிறுத்திக் கொண்டு, மற்ற நான்கு பகுதிகளையும் தன் தம்பிகள் நான்கு பேர்களிடமும் கொடுத்து, உடனே புறப்பட்டுச் சென்று காரைக்குடியில் உள்ள லாக்கர்களில் வைத்துவிட்டு வரச் சொன்னார்.

வலிய வந்த அந்த செல்வத்தில், தாங்கள் ஒரு காசைக்கூட எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், பாட்டையாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, சிறிது சிறிதாக அந்தக் காசுகளை விற்று, அறக்கட்டளைக்குள் கொண்டுவந்துவிடலாம் என்றும் முடிவு செய்தார்கள். அத்துடன் நாற்பது அல்லது ஐம்பது லெட்ச ரூபாய் செலவு செய்து தங்கள் வீட்டை முழுமையாகப் புதிப்பித்து விடலாம் என்றும் முடிவு செய்தார்கள். அதுபோல அறக்கட்டளையின் மூலம் பல தர்ம காரியங்களைச் செய்வது என்றும் முடிவு
செய்தார்கள்

சீனுக் கொத்தனாரை சரிக்கட்டுவதற்கு, அவருக்கு ஐந்து அல்லது ஆறு லெட்ச ரூபாய் கொடுத்துவிடுவது என்றும் அதை, அவருடைய சின்ன மகளுக்கு திருமணம் பேசச் சொல்லி ,திருமணச்  செலவிற்காகக் கொடுத்துவிடலாம் என்றும் முடிவு செய்தார்கள்.

பாட்டைய்யா பெரிய சிவ பக்தர். அவருடைய நினைவாக உள்ளூரில் உள்ள நகரச்சிவன் கோவிலுக்கு ஒரு பெருந்தொகையைத் தர்மாகக் கொடுப்பது என்றும் முடிவு செய்தார்கள்.

அதே வாரத்தில் இன்னொரு அதிசயமும் நடந்தது. பழநியப்ப அண்ணனின் மகன் சொக்கலிங்கம் அமெரிக்காவில் ஒரு மிகப் பெரிய கணினி மென் பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறான் என்று சொன்னேன் அல்லவா? அவன் இணைய இணைப்புள்ள செல்போன்களில், நாட்டு நடப்பு செய்திகளை அவ்வப்போது தன்னிச்சையாக இழுத்துக் கொடுக்கும் ஒரு மென்பொருளை வடிவமைக்க, அவன் வேலை பார்த்த நிறுவனமே, அதை ஒரு அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு விற்று அதில் கிடைத்த பெரும் தொகையில்  ஒரு பகுதியை ஊக்கத் தொகையாக அவனுக்கு வழங்கியதாம். வழங்கிய தொகை 16 மில்லியன் டாலர்களாம். இந்திய மதிப்பில் சுமார் நூறு கோடி ரூபாய்களாம். எல்லா ஊடகங்களிலும் அச்செய்தி வெளியாக, இந்தியப் பத்திரிக்கைகளும் அவனுடைய படத்துடன் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன.

அடுத்த நாள் ஊர் முழுக்க அதே பேச்சாக இருந்தது.

அவன் தன் தந்தையாருக்கு தனது அலைபேசியின் மூலம் பேசி, மிக்க மகிழ்ச்சியுடன் அந்தச் செய்தியைச் சொன்னான்.அத்துடன், வீட்டைப் புதிப்பிக்க இருக்கும் தகவலையும், பாட்டைய்யா பெயரில் துவங்க
இருக்கும் அறக்கட்டளையைப் பற்றிய தகவலையும் கேட்டுவிட்டு, தன் பங்களிப்பாக ஒரு பெருந்தொகையைத் தர விரும்புவதாகவும் சொன்னான்.

அறக்கட்டளைக்கு அவன் கொடுத்த பணத்தின் மூலம், புதையல் செய்தி வெளிவராமல் அமுங்கிப் போய்விட்டது.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை.

எல்லா வேலைகளும் மளமளவென்று நடந்தன!

செய்தியைக் கேள்விப்பட்டு, இடக்கு செய்த மூன்று பேர் குடும்பங்களில் இருந்து, பெண்கள் வந்திருந்து, பராமரிப்பு வேலையில் தங்களையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லியதுடன், தங்கள் பங்கு அறைகளையும் திறந்து விட்டு பராமரிப்பு வேலைகளுக்கு ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள்.ஆறே மாதங்களில் வீடு பளபளத்தது. புதிதாய்க் கட்டிய வீடு போல் ஆகிவிட்டது.

நகரச் சிவன் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாயையும், நகரப் பள்ளிக் கூடத்திற்கு ஒரு கோடி ரூபாயையும் இவர்கள் நிதியாகக் கொடுக்க அதுவும் உள்ளூர் மக்களுக்கு பரபரப்பு மற்றும் மகிழ்ச்சி உரிய செய்தியானது.

                                     $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சொ.அ.சொ குடும்பத்தார்களுக்கு, உள்ளூர் நகரத்தார்களின் சார்பாக பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நகரச்சிவன் கோவிலின் முன் பகுதியில் இருந்த அலங்கார மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை பாராட்டுவிழா நடைபெற்றது.

பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள பழநியப்ப அண்ணனும், அவருடைய தம்பிகள் நான்கு பேரும் அங்கே சென்றபோது, அவர்கள் வீட்டைச் சேர்ந்த மற்ற மூன்று பேர்களும், அங்கே முன்பாகவே வந்து அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். கடைசித் தம்பி, பழநியப்ப அண்ணனின் காதில் கிசுகிசுத்தான்.

“என்ன அண்ணே, அவர்கள் மூன்று பேர்களும் வந்திருக்கிறார்கள்?”

பழநியப்ப அண்ணன் சுருக்கமாக ஒற்றை வரியில் பதில் சொன்னார்:

“கோவில் காரியக்காரர்களை விட்டு நான்தான் அவர்களைக் கூப்பிடச் சொன்னேன்”

“எதற்காக அண்ணே?”

“அவர்களும் சொ.அ.சொ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே அப்பா! அதை மறுக்கமுடியுமா? குடும்பப் பெருமையில் அவர்களுக்கும் பங்கு உண்டல்லவா? அதை மறுப்பது எப்படித் தர்மமாகும்? எப்படி நியாயமாகும்?  அதனால்தான் கூப்பிடச் சொன்னேன். நான் சொல்லியதாகச் சொல்லவும் சொன்னேன். அதனால்தான் வந்திருக்கிறார்கள். குடும்பப் பெருமை என்பது காசு பணத்தில் இல்லை. குடும்ப அங்கத்தினர்களின் ஒற்றுமையில்தான் அது இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவதில்தான் இருக்கிறது. அதை உணர்ந்து அவர்கள் இனி நம்மோடு ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.”

பழநியப்ப அண்ணனின் நம்பிக்கை வீண் போகவில்லை.

அன்று நடந்த விழாவில் பழநியப்ப அண்ணனின் மூத்த அண்ணனுக்குத்தான் முதல் மரியாதை செய்யப்பெற்று மாலை அணிவிக்கப்பெற்றது. மற்றவர்களுக்கு வயது வரிசைப்படி அடுத்தடுத்து செய்யப்பெற்றது.

சொ.அ.சொ குடும்பத்தாரின் சார்பில் ஏற்புரையை மூத்த அண்ணன்தான் நல்கினார்.

“இத்தனை நாட்களாக என் வயதிற்கு உரிய பக்குவம் இன்றி, சித்தம் போக்கு சிவன் போக்கு என்று மனம்போனபடி இருந்துவிட்டேன். என் தம்பி பழநியப்பன்தான் என் கண்களைத் திறந்துவிட்டான். ஊர் மக்கள்
ஒன்றாகக் கூடி எங்கள் குடும்பத்தாரைக் கெளரவப் படுத்தும் விதமாக இத்தனை பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். நகரத்தார்களுக்குப் பல சிறப்புக்கள் உண்டு. தனித் தன்மையான பல குண நலன்கள் உண்டு. இறையுணர்வு, தர்ம சிந்தனை ஆகிய இரண்டும் அவற்றுள் முக்கியமானதாகும். இப்போது இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள் - குடும்ப ஒற்றுமைதான் அது! ஒற்றுமை உணர்வு இல்லாத மனிதனிடம் எத்தனை இறையுணர்வு இருந்தாலும் அது பயன்படாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார். சக மனிதனுடன், சக உடன் பிறப்புக்களுடன் ஒற்றுமை கொள்ளாத மனிதன், எப்படி இறைவனுடன் ஒன்ற முடியும்? எப்படி இறையடி சேரமுடியும்.....?


அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. நா தழுதழுத்துவிட்டது. கண்கள் கலங்கி விட்டன!

அவருக்கு மட்டுமா? அவருடைய தம்பிகளின் கண்களும் பனித்துவிட்டன!

                                        $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.4.14

Short story: சிறுகதை: பராமரிப்பு நிதி

 

Short story: சிறுகதை  பராமரிப்பு நிதி
 

(Maintenance Fund)


மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி இந்த மாதம் 20ஆம் தேதி இதழில் வெளிவந்த சிறுகதை இது. நீங்கள் படித்து மகிழ அதை இன்று இங்கே
பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------------   

"மன்னார்குடி மதிலழகு
வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர் தேரழகு
சொக்கலிங்கம் சொல்லழகு!


என்பார்களாம் உள்ளூர்க்காரர்கள். உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்ல, வட்டகையைச் சேர்ந்த பொதுமக்களும் அப்படித்தான் சொல்வார்களாம்.
அப்படிப்பட்ட சீமானாக, சொற்சிலம்பமாடும் பேச்சாளராகத் திகழ்ந்தவர் எங்கள் பாட்டையா சொக்கலிங்கம் செட்டியார்” என்று பெருமைப்
பட்டுக்கொள்வார், நமது கதையின் நாயகரான பழநியப்ப செட்டியார்.

அப்படி பாட்டையாவின் பெருமைகளை அடிக்கடி சிலாகித்துச் சொல்பவர், சமயங்களில் குறையாக இப்படியும் சொல்வார்: “எங்கள் பாட்டையா
பர்மாவிற்குப்போய் நிறைய சம்பாதித்து, உள்ளூரில் இத்தத் தண்டி வீட்டைக் கட்டியவர், இதைப் பராமரிப்பதற்கென்று ஒரு நிதியை ஏற்படுத்தி
வைக்காமல் போய்விட்டார்”

“என்ன பானா ளானா சொல்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!” என்று யாராவது கேட்டால், “திருவாரூர், திருக்குறுங்குடி, திருக்கோலக்கா, திருவிடைமருதூர், திருநெல்லிக்கா என்று ஐந்தாறு ஊர்களில் பசுமடம் கட்டிக்கொடுத்ததோடு, நந்தவனங்களுக்கும் இடம் வாங்கிக்கொடுத்தார். அத்துடன் அவற்றைப் பராமரிப்பதற்கென்று அங்கங்கே விளைநிலங்களையும் வாங்கி, அதையும் சேர்த்துக் கோவில் நிர்வாகத்திடம் கொடுத்தாராம். அதுபோல எங்கள் பெரிய வீட்டிற்கும் செய்திருந்தால், இப்போது அதைப் பராமரிப்பதில் இடியப்பச் சிக்கல் இருக்காது”

“ஏன் அவருடைய கொள்ளுப்பேரர்கள் என்று எட்டுப் பேர்கள் இன்று இருக்கிறீர்களே, எல்லோரும் நல்லாத்தானே இருக்கிறீர்கள். ஒற்றுமையாகச்
சேர்ந்து செய்ய வேண்டியதுதானே?”

“தன்னைப் பேணித்தனம் உள்ளே நுழைந்து, ஒற்றுமையை அடித்து விரட்டிவிட்டது. வாரிசுதாரர்கள் எட்டுப் பேர்களில்  மூன்று பேர்கள்  எதற்கும்
ஒத்து வரமாட்டேன் என்கிறார்கள். தாங்களும் செய்ய மாட்டார்கள். அடுத்தவனையும் செய்ய விடமாட்டார்கள்.”

“அதற்குக் அடிப்படைக் காரணம் என்ன?”

“அடிப்படைக் காரணம், வெளிப்படைக் காரணம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை. வீடு எப்போது இடியும் என்று  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வீடு இடிந்தால், வீட்டில் இருக்கும் உத்திரம், தூண்கள், நிலைகளுடன், வீடு இருக்கும் 33 சென்ட் இடத்துடன் அருகில் தோட்டமாக இருக்கும் 67
சென்ட் இடத்தையும் விற்றுக் காசாக்கி, தங்கள் பங்கை வாங்கிக் கொண்டு போய் விடலாம் என்றிருக்கிறார்கள்”

“வீடு என்ன விலைக்குப் போகும்?”

“சோனா மேனா வீடு மூன்று கோடிக்குப் போனதாம். எங்கள் வீடு நான்கு கோடிக்குப் போகும்!”

“வந்தால், போனால் தங்குவதற்கு?”

“வந்தால், போனால், இருந்தால், சென்றால் தங்குவதற்கென்று உள்ளூரிலும், வசிக்கும் ஊர்களிலும், ஒன்றுக்கு இரண்டாக பங்களாக்களைக் கட்டிக்
கொண்டுள்ளார்கள். சென்றால் தங்குவதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களில் Share & Stay Properties நிறுவனங்களில் உறுப்பினர்களாக
இருக்கிறார்கள். பத்துப் பெரிய ஊர்களில் நகர விடுதிகள் இருக்கின்றன. வேறு என்ன வேண்டும்?”

“கஷ்டம்தான்!” என்று சொல்லிவிட்டுக் கேள்வி கேட்பவர்கள் அத்துடன் கழன்று கொண்டு விடுவார்கள்.

ஆனால் இதையே ஒருமுறை பழநியப்ப அண்ணன் தன் மனைவி வள்ளியம்மை ஆச்சியிடம் சொன்னபோது, ஆச்சி , செட்டியாரைக் கழற்று
கழற்றென்று கழற்றிவிட்டார்கள்.

“அப்படியெல்லாம் உங்கள் பாட்டைய்யா ஒரு பராமரிப்பு நிதியை வைத்துவிட்டுப் போயிருந்தால், உங்கள் அண்ணன் அதை ஏமாற்றி
எடுத்துக்கொண்டிருப்பார். நீங்கள் கூடப் பிறந்தவர்கள் இத்தனை பேர் இருக்கும்போது, உங்கள் ஆத்தாவோட சீதனப் பணம், உங்க ஆத்தாவின்
சக்களத்தியாவோட நகைகள் என்று எல்லாவற்றையும் ஏதோ ஒரு ஆகாத போகாத கணக்கைச் சொல்லி  எடுத்துக்கொண்டு விட்டாரில்லையா?
அதைப் போல பாட்டைய்யா வச்சிட்டுப் போயிருந்தால் அதையும் சாப்பிட்டு முடித்திருப்பார். பொள்ளாச்சியில உள்ள  தென்னந்தோப்பை, அது
பொதுச் சொத்துன்னுகூடப் பார்க்காம உள்ளடி வேலை செஞ்சு, சுய குத்தகைக்கு விட்டிருக்காரே - உங்களால என்ன செய்ய முடிஞ்சுது?”

“என்ன செஞ்சு என்ன பிரயோசனம்? மனுஷன் நிம்மதியாவா இருக்காரு? அவரோட மகனுக்கு முப்பத்திரெண்டு வயசாகுது, இன்னும்
கல்யாணமாகலை! இவரோட வில்லங்கம் தெரிஞ்சு எவனும் பொண்ணு சொல்லிவிட மாட்டேங்கிறான்”

“பையன் வெளிநாட்டில நல்ல வேலையில இருக்கான். கல்யாணமாகிறதுக்கு முன்னாடி, அவங்கிட்ட கறக்கிற வரைக்கும் கறப்போம்னு இவர்தான்
கல்யாணம் செய்யாம அவனைத் துணியைப்போட்டு மூடி வச்சிருந்தாரு. இப்போ அவன் அங்கேயே ஒரு குஜராத்திப் பொண்ணோட குடும்பம்
நடத்திக்கிட்டு இருக்கானாம். ஊருக்குள்ள பேசிக்கிறாக!”

“தொலையறானுங்க, அவனுங்களை விடு. இப்ப வீட்டை ரிப்பேர் பண்ணனுமே - அதுக்கு என்ன பண்றது? அதைச் சொல்லு!”

”நீங்க பெரியப்பன், சித்தப்பன்,  மக்கள் என்று ஐந்து பேர்கள் ஒற்றுமையாத்தானே இருக்கிறீர்கள்? இடக்குப் பண்ற மூன்று பேரை விட்டுட்டு மத்தவங்க ஒன்னாச் சேர்ந்து வீட்டை ரிப்பேர் பண்ணிடுங்க!”

“அவங்ககிட்டே பெர்மிசன் வாங்க வேண்டாமா? நாம செய்யிறதுக்கு ஒத்துக்க மாட்டாங்களே - என்ன பண்றது?”

“எதுக்காக பெர்மிசன் வாங்கணும்? அவங்களுக்குப் பாத்தியமான அறைகள்ல கையை வச்சாத்தான் பெர்மிசன் வாங்கணும். முகப்பு, பெட்டகசாலை,
சுத்துப்பத்தி, வளவு, இரண்டாங்கட்டு, மூனாங்கட்டுன்னு பொதுப்பகுதியை ரிப்பேர் பண்றதுக்கு பெர்மிசன் ஒன்னும் தேவையில்லை. மதுரைக்
கோர்ட்ல இருக்கிற எங்க அண்ணன்கிட்ட கேட்டுட்டேன். பாதுகாப்புக்காக வேணும்னா, கோர்ட்டுல பொதுப் பெட்டிஷன் ஒன்றைக் கொடுத்து
இஞ்சக்சன் ஆர்டர் ஒன்றை வாங்கி வச்சிகிட்டா போதும்னார்.”

“ஆகா, இதுக்குத்தாண்டி ராசாத்தி, உங்கிட்ட யோசனை கேட்கிறது. முதல்ல அதைச் செஞ்சு வேலையைத் துவக்கி விடுகிறேன்டி”

”அதுபோல செலவு தொகையையும் குறிச்சு வச்சு, பின்னாடி ஒரு நல்லது கெட்டதுன்னு அவ்க வரும்போது, வம்படியா, நீங்க அதைக் கொடுத்தால்தான் நாங்க உங்க வீட்டு விசேடங்கள்ல கலந்துக்குவோம்னு சொல்லி, வசூல் பண்ணிடலாம்.”

ஆச்சியின் அறிவுத்திறனையும், யோசனைகளையும் பார்த்துப் பழநியப்ப அண்ணன் மனம் நெகிழ்ந்துபோய் விட்டார்!

நெகிழ்ந்ததோடு இல்லாமல் பழநி தண்டாயுதபாணிக்கு நூத்தி எட்டு ரூபாய் பணம் எடுத்து முடிந்து வைத்துவிட்டு, வளவிற்குள் தன்னுடன்
ஒற்றுமையாக இருக்கும் மற்ற நான்கு பேர்களுடன் பேசி,  ஒரு முடிவிற்கும் வந்தார்.

அதாவது தங்களுடைய பெரிய வீட்டைத் தான் முன்னின்று பராமரிப்பு வேலைகளைச் செய்வது என்ற முடிவிற்கு வந்ததோடு, ஒரு சஷ்டி தினத்தன்று தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் குன்றக்குடி முருகன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையையும் செய்துவிட்டு வந்து வேலையைத் துவங்கினார்.

என்ன ஆயிற்று?

அதற்குப் பிறகு நடந்ததுதான் அதி சுவாரசியமானது. தொடர்ந்து படியுங்கள்.

                                     &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பழநியப்ப அண்ணன் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேசிய வங்கி ஒன்றின் வட்ட மேலாளராக தில்லியில் பணியாற்றியவர். அவருக்கு பிள்ளைச்
செல்வமாக ஒரே ஒரு மகன்தான். அவன் பெயர் சண்முகநாதன். அவனை பிட்ஸ், பிலானியில் படிக்க வைத்து கணினிப் பொறியாளராக்கினார்.

அத்துடன் மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கும் அனுப்பி வைத்தார். அங்கே எம்.எஸ் படித்து முடித்தவுடன், அவனுக்கு அங்கேயே ஒரு பெரிய
நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. துவக்க சம்பளமே இந்திய மதிப்பில் ஆண்டுக்கு அறுபது லட்ச ரூபாய்கள் என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்.

க்ரீன் கார்டு பிரச்சினை ஏற்படும் முன்பாகவே, அவனுக்குத் திருமணத்தை செய்து வைக்க வேண்டுமென்று எண்ணியவர், தன் தங்கை மகள் சாலாவை
அவனுக்கு மணமுடித்து வைத்துவிட்டார். முடித்த கையோடு தம்பதியரை அமெரிக்காவிற்கும் அனுப்பி வைத்துவிட்டார்.

சாலா ஹைதராபாத்தில் வளர்ந்தவள். சரளமாக நான்கு மொழிகளைப் பேசுவாள். பொறியியல் படித்தவள். சி.டி.எஸ் நிறுவனத்தில் பணி செய்து
கொண்டிருந்தாள். தோது என்ற பெயரில் பைசா கூட பணம் வாங்கிக் கொள்ளாமல் அவளை மருமகளாக்கிக் கொண்டார். உறவினர் மத்தியில் அந்தத் திருமணம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.

முப்பது வயதைத் தாண்டியவர்கள் பலர் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, பழநியப்ப அண்ணன் தன்
மகனுக்குச் செய்தது நல்ல எடுத்துக்காட்டு என்று என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.

இறையருளால், சாலாவிற்கும் ஒரே ஆண்டில் ஒரு ஆண் மகவு பிறந்து அனைவரையும் மகிழ்வித்தது. பழநியப்ப அண்ணனும், தன் மனைவி
வள்ளியம்மை ஆச்சியுடன், சென்ற நவம்பரில்தான் பேரனைப் பார்த்துவிட்டு வருவதற்காக அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு வந்தார். பேரனுக்கும் தன்
பாட்டையாவின் பெயரையே - சொக்கலிங்கம் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தார். குழந்தை பிறந்த அன்றே அந்தப் பெயர்தான் அங்கே உள்ள
மருத்துவமனையில் பதிவு செய்யப்பெற்றது.

இதுதான் பழநியப்ப அண்ணனின் பூர்வ கதை. இப்போது பிரதானக் கதைக்கு வருவோம்.

பழநியப்ப அண்ணன் தன் தம்பிகள் இருவர், சிறிய தந்தையாரின் மகன்களில் இருவர் ஆகியோருடன், ஒரு நல்ல வளர்பிறை முகூர்த்த நாளன்று
தங்கள் வீட்டில் அதிகாலையில் கணபதி ஹோமத்தைச் செய்துவிட்டு, பராமரிப்பு வேலையைத் துவக்கினார்.

சீனுக் கொத்தனாரை வைத்து எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ளலாம் என்று அவரை எற்பாடு செய்திருந்தார். சீனுக் கொத்தனார் அந்தக் காலத்தில் அவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர். அவர் தன் ஆட்கள் நான்கு பேர்களுடன் வந்து முதல் நாள் வேலையைத் துவக்கினார்.

மூன்றாம்கட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்லும் நடைபாதை வாயிலில் இருந்த கதவு சரியில்லாமல் இருந்தது. கதவோடு இருந்த வெளிப்பக்கச்
சுவரில் ஒரு அரசமரம் முளைத்திருந்தது. பதினைந்தடி உயரம் வளர்ந்திருந்ததோடு நில்லாமல் சுவற்றிலும் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

அதன் வேர்கள் கணத்து இரு பிரிவுகளாக வீட்டிற்குள்ளும் உள்ளோடி இருந்தது.

முதலில் மரத்தை வெட்டினார்கள். அதன் பிறகு உள்ளோடி இருக்கும் வேர்களை அடியோடு எப்படி வெட்டி எடுப்பது என்று யோசிக்கும்போது. சீனுக்
கொத்தனார், சல்ஃபூரிக் ஆசிட் வாங்கி வேர் இருக்கும் பகுதிக்குள் ஊற்றி விடலாம் என்றார்.

பழநியப்ப அண்ணன் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை. அரசமரம், பிள்ளையாரின் அருள் பெற்ற மரம், அதில் ஆசிட்டை ஊற்றுவது முறையல்ல என்று சொல்லி,  சுவற்றைக் கெல்லி, வேரைத் தோண்டி எடுக்கச் சொல்லிவிட்டார். சுவற்றில் 4 அங்குல ஆழத்திற்குத் தோண்டிக்கொண்டே வந்து வேர்களை அகற்றத் துவங்கினார்கள். அனுமார் வால்போல சுவற்றில் நீண்டு கொண்டே சென்ற வேர், வீட்டின் நடுப்பகுதியில் இருந்த சாமி அறை
வரைக்கும் வளர்ந்திருந்தது. சாமி அறையின் வெளிப் பக்கச் சுவர் வரை தோண்டி முடிக்கும்போதுதான் அது நடந்தது.

அந்தப் பகுதியில் பெரிய உளி, சுத்தியலை வைத்துத் தட்டும்போது, டங், டங் என்ற ஓசை எழுந்தது.

சீனுக் கொத்தனார், பழநியப்ப அண்ணனிடம் வந்து,  சுவற்றில் அடிக்கும்போது எழும் ஓசையைச் சொன்னார். அத்துடன் இரண்டு முறைகள் அடித்தும்
காட்டினார்.

சுதாகரித்துக் கொண்ட பழநியப்ப அண்ணன், “சாமி வீட்டின் உட் பகுதியில் தரையில் இருக்கும் படைப்புச் சாமான்களால் அந்த ஓசை ஏற்படலாம்.
அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். வெட்டி எடுத்ததுவரை போதும். முதலில் சுவற்றில் நோண்டிய பகுதிகளில் சிமெண்டைப் பூசி சரி பண்ணுங்கள்.

மற்றதை நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறி அவர்களின் கவனத்தைத் திருப்பினார்.

மாலை 4 மணிக்கு அந்த வேலைகள் முடிந்தவுடன், வேலையாட்கள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு, தன் தம்பிகள் நான்கு பேர்களுடன்
வீட்டிற்குள் அமர்ந்து ரகசியமாக ஆலோசனை செய்தவர், ஒரு முடிவிற்கு வந்தார்.

தரையைத் துளை போட்டு வெட்டி எடுக்கும் சின்ன இயந்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொன்னார். சாமி வீட்டில், விளக்கிருந்த பகுதிக்குக் கீழே
உள்ள தரையைத் தோண்டினார்கள். 4 அடிக்கு  4 அடி பள்ளம் வெட்டினார்கள். ஐந்து அடி ஆழம் வெட்டி எடுத்தவுடனேயே அது கண்ணில் பட்டது.

இரண்டு செப்புத் தவலைகள் கண்ணில் பட்டன.

சற்று சிரமப்பட்டு மேலே தூக்கிவிட்டார்கள். அந்தக் காலத்துத் தவலைகள். ஒவ்வொன்றும் 30 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு இருக்கும். துணியை
வைத்துத் துடைத்தவுடன், சொ.அ.சொ என்ற அவர்களுடைய வீட்டு விலாசம் இரண்டு தவலைகளிலும் பளிச்சிட்டது. மேலே மூடிகள் ஈயத்தால் பற்ற
வைக்கப்பெற்று சீலிடப்பெற்றிருந்தன!

புதையல்தான் அவைகள்.

என்ன இருக்கும்?

திறந்து பார்த்தால் அல்லவா தெரியும்!

(தொடரும்)

கதையின் நீளத்தைக் கருதி கதையின் அடுத்த பகுதி நாளை வெளிவரும்!
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.4.14

பரமசிவன் கழுத்தில் இருந்து என்ன கேட்டது பாம்பு?

 

பரமசிவன் கழுத்தில் இருந்து என்ன கேட்டது பாம்பு?

ஒரு திரைப்படம். அதில் நாயகனுக்கும், நாயகிக்கும் பிணக்கு ஏற்பட்டுவிடுகிறது. இருவரும் வேலைக்குச் செல்கின்றவர்கள்.பதவி உயர்விலும், வாங்கும் சம்பளத்திலும் நாயகி நாளும் உயர, நாயகனுக்குத் தன்முனைப்பு (Ego) காரணமாகத் தன் மனைவியின் உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாத மனஉளைச்சல்

அதற்குக் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதினார்

மனதளவில் கணவனும், மனைவியும் சம அளவு சக்கரங்களாக இருந்தால்தானே வாழ்க்கையெனும் வண்டி ஓடும்! (மனதளவில்) ஒரு சக்கரம் பெரியதாகவும், ஒரு சக்கரம் சிறியதாகவும் இருந்தால் வாழ்க்கையெனும் வண்டி எப்படி ஓடும்? அதைவலியுறுத்திக் கவியரசர் அவர்கள்
எழுதிய வரிகள்:

"வ‌ண்டி ஓடச் ச‌க்க‌ர‌ங்க‌ள் இர‌ண்டு ம‌ட்டும் வேண்டும்
அந்த‌ இர‌ண்டில் ஒன்று சிறிய‌தென்றால் எந்த‌ வ‌ண்டி ஓடும்"


தன் மனைவி உயரத்தான் தேய்பிறை நிலவுபோலத் தேய்ந்து விடதாகவும், அதனால் தன் மன அமைதியை இழந்து விட்டதாகவும் நினைக்கும் கணவனின் மன நிலையை அப்படியே பாடலில் கொண்டு வந்து விட்டார் கவியரசர்

"நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நில‌வும் வானும் போலே
நான் நில‌வு போல‌ தேய்ந்து வந்தேன் நீ வ‌ளர்ந்ததாலே
என்னுள்ள‌ம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்ம‌தி ஏது"


கருடனுக்குப் பயந்து வாழ் வேண்டிய பாம்பு, தான் பரமசிவன் கழுத்தில் இருக்கும் அகம்பாவத்தில் என்ன கருடா செளக்கியமா?" என்று கேட்பதைப் போல தன் மனைவி தன்னை நடத்துவதாக இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு நாயகன் புலம்பும் மன நிலைமையை விளக்குவதாக அமைந்த பாடல் இது.

அதன் சிறப்பு என்னவென்றால் கணவனாக திரு.முத்துராமன் அவர்களும், மனைவியாக செல்வி ஜெயலலிதா அவர்களும் சிறப்பாக நடித்து வெற்றி கண்டு பல திரையரங்குகளில் நூறு நாட்களுக்குமேல் ஓடி விழாக்கண்ட வெற்றிப்படமான 'சூரியகாந்தி' என்ற திரைப் படத்தில் வரும் பாடல் இந்தப் பாடல்!

இந்தப் பாடலைப் படத்தில் வரும் ஒரு விழாவில் கவியரசரே மேடையில் நின்று பாடுவதுபோலவும், அரங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்
நாயகனுக்கும், நாயகிக்கும் செய்தியாகச் சொல்வது போலவும் காட்சி அமைந்திருக்கும்!

பாட்டை இன்று பதிந்துள்ளேன். படித்து மகிழுங்கள் ஒளி மற்றும் ஒலி வடிவம் வேண்டுமென்றால் இணையத்தில் உள்ளது. கேட்டு மகிழுங்கள்!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!


என்ற் வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்
------------------------------------------------
"பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது கருடா செளக்யமா? யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன்)

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு- ஒளவை சொன்னது
அது - ஒளவை சொன்னது!
அதில் - அர்த்த‌ம் உள்ள‌து

(பரமசிவன்)

வ‌ண்டி ஓடச் ச‌க்க‌ர‌ங்க‌ள்
இர‌ண்டு ம‌ட்டும் வேண்டும் - அந்த‌
இர‌ண்டில் ஒன்று சிறிய‌தென்றால்
எந்த‌ வ‌ண்டி ஓடும்?

உனைப்போலே அள‌வோடு உற‌வாட‌ வேண்டும்
உய‌ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உற‌வு கொள்வ‌து
அது - சிறுமை என்ப‌து
அதில் - அர்த்தம் உள்ளது!

(பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நில‌வும் வானும் போலே! - நான்
நில‌வு போல‌ தேய்ந்து வந்தேன்
நீ வ‌ளர்ந்ததாலே

என் உள்ள‌ம்- எனைப் பார்த்துக்
கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்ம‌தி ஏது - இது
க‌ண‌வ‌ன் சொன்ன‌து
இதில் அர்த்த‌ம் உள்ளது"


படம்: சூரியகாந்தி - வருடம் 1973
இசை: எம்.எஸ்.வி அவர்கள்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
குரல்: திரு.டி.எம்.எஸ் அவர்கள்

====================================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.4.14

Devotional: உங்கள் துன்பங்கள் நீங்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

Devotional: உங்கள் துன்பங்கள் நீங்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பக்தி மலர்   

சிவபுராணம்

மாணிக்க வாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம். மொத்தம் 95 வரிகள். தினமும் ஒரு முறையாவது இதைப் பாராயணம் செய்யுங்கள். உங்கள் துன்பமெல்லாம் நீங்கும். திருவாசகத்திற்கு
உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் பெருமை பெற்ற திருவாசகத்தின் முதல் பதிகம் இது!
----------------------------------------------------
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே!

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......
....... வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே!

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து!

திருச்சிற்றம்பலம் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==========================================================

24.4.14

Monkeys in the net. இணையத்தில் திரியும் குரங்குகள்

Monkeys in the net. இணையத்தில் திரியும் குரங்குகள்

குரங்குகளைப் பற்றி, நிறையக் கதைகள் உண்டு. சுவாரசியமாக இருக்கும். ஆனால் மனிதர்கள் குரங்குகளைப் போல சேட்டை செய்தால் சுவாரசியாமாக இருக்காது.

இணையத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள், மாமனிதர்கள் இருக்கிறார்கள். குரங்குகளும் - அதாவது குரங்கு குணமுடையவர்களும் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மனிதக் குரங்கு நம் வகுப்பறைக்கு வந்து வகுப்பறையைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டது.

வகுப்பறையைத் திறக்க முடியாத சூழ்நிலை!

அதாவது நம் வகுப்பறையை முடக்கும் நோக்கத்துடன்  Malware ஒன்றை எழுதி, வகுப்பறைக்குள் யார் நுழைந்தாலும் அடுத்த நிமிடமே அந்தக் குரங்கு திரியும் காட்டிற்குப் போகும்படி செய்துவிட்டது.

நான் 15 ஆண்டுகளாக கணினியை உபயோகிக்கிறேன். எட்டு ஆண்டுகளாக வலைப் பதிவுகளில் எழுதிவருகிறேன். பல்சுவை & வகுப்பறை ஆகிய இரண்டு பதிவுகளிலும் சேர்த்து இதுவரை 2,000ற்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளேன்.

நான் பொறியாளரும் அல்ல தொழில்நுட்ப வல்லுனரும் அல்ல! கணினியை உபயோகிக்கத் தெரியும். அவ்வளவுதான்

திகைத்துப்போய்விட்டேன். இரண்டு நாட்களாக மனை உளைச்சல் வேறு.

வகுப்பறைக் கண்மணிகள் நிறையப் பேர்களிடம் இருந்து மின்னஞ்சல் குவிந்துவிட்டன. விசாரித்த அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!

நம் வகுப்பறை மாணவர் ஒருவர்தான் கதைவைத் திறக்க உதவி செய்தார். அவர் பெயர் திருவாளர் விஜய். பெங்களூர்க்காரர். அவருக்கு என்னுடைய சார்பாகவும், உங்களுடைய சார்பாகவும் நம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே


என்ற கவியரசரின் வரிகளை நினைவு கூர்ந்துவிட்டு,  இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். தலைவன் என்பது இங்கே இறைவனைக் குறிக்கும்! அந்தக் குரங்கைத் தண்டிக்கும் பொறுப்பை இறைவனிடமே விட்டு விடுகிறேன்.

என் ஆக்கங்கள் என்றும் குறையாத உற்சாகத்துடன் தொடரும். உங்களுடைய மேலான அன்பையும், அதரவையும் தொடர்ந்து நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

நன்றி,
வணக்கம்,
மற்றும் என்றும் மாறாத
அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.4.14

Astrology: அகர முதல எழுத்தை எல்லாம் தகர சிலேட்டில் எழுதிய காலம்!

 
 திண்ணை வைத்த வீடுகள்
 
 Astrology: அகர முதல எழுத்தை எல்லாம் தகர சிலேட்டில் எழுதிய காலம்!

அந்தக் காலத்தில் வீட்டிற்கு வீடு திண்ணைகளை வைத்துக் கட்டியிருப் பார்கள். திண்ணைகளால் பல உபயோகங்கள் இருந்திருக்கின்றன.
பள்ளிக்கூடங்களே இந்தத் திண்ணைகளில்தான் நடந்திருக்கின்றன. இப்போது திண்ணைகள் எல்லாம் கிடையாது. எல்லாம் சிட் அவுட்டாக
மாறிவிட்டன.

இந்தத் திண்ணைகளைப் பற்றியும், திண்ணைப் பள்ளிக்கூடங்களையும் பற்றி அறிந்து கொள்ள எழுத்தாளர் திரு.இராம.கிருஷ்ணன் அவர்களின்
வலைத்தளத்தைப் பாருங்கள். அதற்கான சுட்டி: http://valavu.blogspot.in/2004/11/2.html விரிவாக எழுதியுள்ளார்.

தமிழ்த்தாத்தா திரு. உ.வே.சாமிநாதன் அவர்களின் என் சரித்திரம் நூலையும் படித்துப் பாருங்கள். அக்காலக் கல்வியின் நிலைமையைக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுவார்

அதெல்லாம் சுமார் 180 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அப்போது காகிதம், பேனா என்று எழுது பொருட்கள் இல்லாத காலம்.ஐந்து வயதில் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் பிள்ளைகளை முதலில் மணலில்தான் எழுதிப் பழக்குவார்கள். பிறகு எழுத்தாணி பிடிக்கவும் ஓலைகளில் எழுதவும் பயிற்சி கொடுப்பார்கள்

அந்தக் காலத்தில் வாத்தியார் என்றாலே, அவர் கையில் இருக்கும் பிரம்புதான் ஞாபகத்திற்கு வரும். சரியாகப் படிக்காவிட்டால் பிரம்படிதான். அடியாத மாடு படியாது என்ற சித்தாந்தம். சொல்லிக்கொடுக்கும் பாடங்களை எல்லாம் மனப்பாடம் செய்ய வைப்பார்கள். ஒப்புவிக்கச் சொல்லும்போது சரியாகச் சொல்ல வேண்டும். பின்னி எடுத்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் பாடங்கள் எல்லாம் ஏடுகளில்தான் இருந்திருக்கின்றன. ஆசிரியர் ஏட்டில் இருப்பதைச் சொல்லிக் கொடுக்க, மாணவர்கள்
மனத்தால் சொல்லிப் பழக வேண்டும். பிறகு மணலில் எழுதிப் பழகவேண்டும்.

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, குறள் என்று ஒவ்வொன்றாய்ப் படிப்பது விரிவாகும். அத்துடன் வீடுகளில் தேவாரம், நாலாயிர திவ்வியப்
பிரபந்தம், சிவபுராணம், விநாயகர் அகவல் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கப் படிக்க வேண்டும். கணிதத்தில் 16ஆம் வாய்ப்பாடு வரை
மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்பிக்க வேண்டும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று எண் கணக்குகள் கொஞ்சங் கொஞ்சமாய்

விரிவடையும். வர்க்க மூலம், பரப்பளவு, கன அளவு என்று கணக்கின் அத்தியாயங்களும் கூடிக் கொண்டே போகும். அத்தனைக்கும் நடைமுறைப் பயிற்சிதான். அத்தனை கணக்குகளும் வாழ்க்கையோடு தொடர்பு உடையதாக இருக்கும். பறவைகள், மரங்கள், இயற்கை அறிவியல் ஆகிய படிப்புக்கள் மாணவர்கள் இயல்பான வாழ்க்கையில் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்கள். அவற்றைப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கும் வழக்கம் இல்லாமல் இருந்திருக்கிறது.

எண்ணையும் எழுத்தையும் மட்டுமே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று வலியுறுத்தியும்
சொல்லியிருக்கிறார்கள்.

மொழியும், கணிதமும்தான் கற்பிக்கப்பெற்றிருக்கிறது. ஆனால் முறையாகக் கற்பிக்கபெற்றிருக்கிறது. சிரத்தையோடு கற்பிக்கப்பெற்றிருக்கிறது.
கற்பித்தலில் அதுதான் முக்கியம்.

இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அனுபவம் பெற்ற மாணவர்கள், புதிய மாணவர்களுக்குப் போதிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.
-----------------------------------------------------------
1850ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் காகதம், ஊற்றுமை பேனா போன்ற எழுது பொருட்களெல்லாம் பயன் பாட்டிற்கு வந்திருக்கிறது. அது நம் நாட்டிற்கு
1920ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் பரவலாக புழக்கத்திற்கு வந்திருக்கிறது.

அதற்கு முன்னால் என்ன செய்தார்கள்?

அதை விரிவாக நாளை பார்ப்போம்

அன்புடன்
வாத்தியார்

===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.4.14

Devotional: மனதில் என்றும் நிலைத்து நிற்பவன் அவன்!

 
Devotional: மனதில் என்றும் நிலைத்து நிற்பவன் அவன்!

பக்தி மலர்

18.4.2014

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை
பயிர் வளர்க்கும் மழையது போல் ... அருளவந்தனை
நான் பட்ட துன்பம் எட்ட ஓட ... பார்வை தந்தனை
முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

பழநி மலையில் வீற்றிருக்கும் ... தண்டபாணியே
ஞானப் பழமாக இனித்திருக்கும் ... அழகு தெய்வமே
மழலையாக தவழ்ந்து வந்த ... குழந்தை வேலனே
என் மனத்திலென்றும் நிலைத்து நின்ற ... சுவாமிநாதனே
முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

காட்டுகின்றக் காட்சியெல்லாம் ... கண்டுகொள்கிறேன்
உன் கருணை ஒன்றை நம்பியன்றோ ... காத்திருக்கிறேன்
ஆட்டுகின்றக் கோலை நோக்கி ... ஆடிவருகிறேன்
உன் அன்பு என்னும் கோயில் நோக்கி ... ஓடி வருகிறேன்

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை
முருகா ... முருகா ... முருகா ... முருகா ... .   

பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.4.14

Humour - நகைச்சுவை: கால் சென்ட்டர் கலாட்டாக்கள்!

 
Humour - நகைச்சுவை: கால் சென்ட்டர் கலாட்டாக்கள்!

கால் சென்ட்டர் கலாட்டாக்கள்!

கால் சென்ட்டர் என்றால் சும்மாவா? எத்தனை கலக்கலான நிகழ்வுகள். சிலவற்றைக் கொடுத்துள்ளேன்.அதிலும் கடைசி ஒன்றைப் படித்துப்பாருங்கள் - அசத்தலாக உள்ளது! கால் சென்ட்டர் பேச்சுக்கள்: ( வாடிக்கையாளருக்கும் பணியாளருக்கும் இடையே நடந்த பேச்சுக்கள்)
------------------------------------------------------------------------------------------------------------
1.
”என்னம்மா இரண்டு நாளா 0800 2100 ங்கிற நம்பரைச் சுற்றிக்கிட்டே இருக்கேன் லைன் கிடைக்க மாட்டேங்குதே?”

“எங்கேயிருந்து இந்த நம்பரைப் பிடித்தீர்கள்?”

“ஸ்பென்சர் பிளாசவில இருக்கிற டிராவல் கம்பெனி ஆபீஸ்லதாம்மா! கதவு மேலே எழுதியிருந்துச்சே அம்மா?”

“அது ஆபீஸ் திறந்திருக்கும் நேரத்தைக் குறிப்பது!”
----------------------------------------------------------------------------------------------------------
2
Samsung Electronics

Caller: 'Can you give me the telephone number for Jack?'

Operator: 'I'm sorry, sir, I don't understand who you are talking about'.

Caller: 'On page 1, section 5, of the user guide it clearly states that I need to unplug
the fax machine from the AC wall socket and telephone Jack before cleaning. Now,
can you give me the number for Jack?'

Operator: 'I think you mean the telephone point on the wall'.
------------ --------- --------- --------- --------- --------- --------- ----
3
RAC Motoring Services

Caller: 'Does your European Breakdown Policy cover me when I am traveling in Australia ?'

Operator:&nbsap; ' Doesn't the product name give you a clue?'
------------ --------- --------- --------- --------- --------- --------- ----
4
Then there was the caller who asked for a knitwear company in Woven.

Operator: 'Woven? Are you sure?'

Caller: 'Yes. That's what it says on the label; Woven in Scotland '.
------------ --------- --------- --------- --------- --------- --------- ----
5
On another occasion, a man making heavy breathing sounds from a phone box told a
worried operator: 'I haven't got a pen, so I'm steaming up the window to write the number on'.
----------- --------- --------- --------- --------- --------- --------- ----
6
Tech Support: 'I need you to right-click on the Open Desktop'.

Customer: 'OK'.

Tech Support: 'Did you get a pop-up menu?'.

Customer: 'No'.

Tech Support: 'OK. Right-Click again. Do you see a pop-up menu?'

Customer: 'No'.

Tech Support: 'OK, sir. Can you tell me what you have done up until this point?'.

Customer: 'Sure. You told me to write 'click' and I wrote 'click''.
------------ --------- --------- --------- --------- --------- --------- ----
7
Tech Support: 'OK. In the bottom left hand side of the screen, can you see
the 'OK' button displayed?'

Customer: 'Wow. How can you see my screen from there?'
------------ --------- --------- --------- --------- --------- --------- ----
8
Caller: 'I deleted a file from my PC last week and I have just realised that I need it.
If I turn my system clock back two weeks will I have my file back again?'.

------------ --------- --------- --------- --------- --------- --------- ----
9
There's always one. This has got to be one of the funniest things in a long time. I think this guy
should have been promoted, not fired. This is a true story from the Word Perfect Helpline,
which was transcribed from a recording monitoring the customer care department.
Needless to say the Help Desk employee was fired; however,

he/she is currently suing the Word Perfect organization for 'Termination without Cause'.
Actual dialogue of a former Word Perfect Customer Support employee.
(Now I know why they record these conversations! ):

Operator: 'Ridge Hall, computer assistance; may I help you?'

Caller: 'Yes, well, I'm having trouble with Word Perfect. '

Operator: 'What sort of trouble??'

Caller: 'Well, I was just typing along, and all of a sudden the words went away.'

Operator: 'Went away?'

Caller: 'They disappeared. '

Operator: 'Hmm So what does your screen look like now?'

Caller: 'Nothing.'

Operator: 'Nothing??'

Caller: 'It's blank; it won't accept anything when I type.'

Operator: 'Are you still in WordPerfect, or did you get out??'

Caller: 'How do I tell?'

Operator: 'Can you see the C: prompt on the screen??'

Caller: 'What's a sea-prompt?'

Operator: 'Never mind, can you move your cursor around the screen?'

Caller: 'There isn't any cursor: I told you, it won't accept anything I type.'

Operator: 'Does your monitor have a power indicator??'

Caller: 'What's a monitor?'

Operator: 'It's the thing with the screen on it that looks like a TV. Does it have a little light
that tells you when it's on??'

Caller: 'I don't know.'

Operator: 'Well, then look on the back of the monitor and find where the power cord goes into it.
Can you see that??'

Caller: 'Yes, I think so.'

Operator: 'Great. Follow the cord to the plug, and tell me if it's plugged into the wall.

Caller: 'Yes, it is.'

Operator: 'When you were behind the monitor, did you notice that there were two cables
plugged into the back of it, not just one??'

Caller: 'No.'

Operator: 'Well, there are. I need you to look back there again and find the other cable.'

Caller: 'Okay, here it is.'

Operator: 'Follow it for me, and tell me if it's plugged securely into the back of your computer.'

Caller: 'I can't reach.'

Operator: 'Uh huh. Well, can you see if it is??'

Caller: 'No.'

Operator: 'Even if you maybe put your knee on something and lean way over??'

Caller: 'Oh, it's not because I don't have the right angle - it's because it's dark.'

Operator: 'Dark??'

Caller: 'Yes - the office light is off, and the only light I have is coming in from the window.

Operator: 'Well, turn on the office light then.'

Caller: 'I can't.'

Operator: 'No? Why not??'

Caller: 'Because there's a power failure.'

Operator: 'A power....... .. A power failure? Aha, Okay, we've got it licked now.

Do you still have the boxes and manuals and packing stuff your computer came in??'

Caller: 'Well, yes, I keep them in the closet.'

Operator: 'Good. Go get them, and unplug your system and pack it up just like it was
when you got it. Then take it back to the store you bought it from..'

Caller: 'Really? Is it that bad?'

Operator: 'Yes, I'm afraid it is.'

Caller: 'Well, all right then, I suppose. What do I tell them??'

Operator: 'Tell them you're too stupid to own a computer!!!! !

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- -----
இது மீள்பதிவு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது இன்னொரு வலைத்தளமான பல்சுவைப் பதிவில் (http://devakottai.blogspot.in) வெளிவந்தது. வகுப்பறை அன்பர்களுக்காக அதை இன்று இங்கே வலை ஏற்றியுள்ளேன்.படித்து மகிழட்டுமே என்று கொடுத்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.4.14

True Story: உண்மை நிகழ்ச்சி: சோகமும் சுகமானதுதான்!

 
 Beethoven

 True Story: உண்மை நிகழ்ச்சி: சோகமும் சுகமானதுதான்!

தலைப்பைப் பார்த்துவிட்டு, 'சோகம் எப்படி சுகத்தைத் தரும்? என்று கேட்டு எவரும் வாதம் செய்ய வேண்டாம்.

இசைமேதை பீத்தோவனின் கதையைச் சொல்லியிருக்கிறேன்.கடைசி வரி வரை படியுங்கள்.அப்புறம் தெரியும் சோகம் எப்படி சுகப்படுமென்று!

நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர் ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்தான் இசை மேதை பீத்தோவன்!

உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா?

சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்!

உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)

விதி எப்பொழுதும் எதிர் அணியில்தான் ஆடும் எண்பார்கள்.

பீத்தோவனுக்கு விதி எதிர் அணியில் ஆடியதோடு, அவரைப்பல முறை காயப்படுத்தியும், ஒருமுறை ஆட்டத்தை விட்டு வெளியேற்றவும் முயன்றிருக்கிறது.

ஆமாம்! ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல்தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்று விட்டுத் திரும்பி யிருக்கிறார்.

கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார். பீத்தோவனுக்கு இளம் வயதில் பசியே பாடமாகவும், வறுமையே வாய்ப்பாடாகவும், இருந்திருக்கிறது. ஒருபக்கம், தினமும் குடித்துவிட்டு அகால நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிவந்து அனைவரையும் அடித்துத் துவைக்கும் தந்தை. மறுபுறம், ஏழு குழந்தைகளைப்பெற்று அதில் மூன்று குழந்தைகளை வறுமைக்குத் தாரைவார்த்துவிட்டு, மிச்சம் இருக்கும் குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் தாய் மரியா. சந்தோஷத்தையே அறியாத வாழ்க்கை!

பீத்தொவனின் தந்தை ஜோஹன் ஜெர்மெனி நாட்டின் பான் (Bonn) நகரில் இருந்த இசை அரங்கம் ஒன்றில்  வாத்தியக்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அது ஒன்றுதான் சற்று ஆறுதலான விஷயம். தன்
தந்தையிடம், அவர் நல்ல மன நிலையில் இருக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட பீத்தோவன்,

தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு இசையில் ஒரு மேதைத்தனத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்

17.12.1770 ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன், தனது 20வது வயதில் ஜெர்மெனியை விட்டுக் குடிபெயர்ந்து,

வீயன்னா நகருக்குத் (Vianna, Austria) தன் நண்பன் ஒருவனுடன் போய்ச் சேர்ந்திருக்கிறார். அங்கே பல அரங்கங்களில் வாசித்ததோடு, இசைக்கான 'இசைக் குறிப்பேடுகளை' (Notes) எழுதிக் கொடுத்தும் பிரபலமடைந் திருக்கிறார்.அவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பியானோ இசைக்கலைஞன், இசையமைப்பாளர், இசைப் பயிற்சியாளர் என்று தன்னுடைய பல்முனைத் திறமைகளை வெளிக்காட்டி மக்களை அசரவைத்தவர் அவர். அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்களைப் போல தேவாலயம் (Church) எதிலும் வேலைக்குச் சேர்ந்து பிழைப்பைக்
கவனிக்காமல், கடைசிவரை தன்னிச்சையாகவே இருந்து வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளோடு போராடிய மாமனிதர் அவர். இசைப் புரவலர்களால் (Patrons) அவருடைய பணத்தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவர் பிறந்த தேதி தெரிய வந்ததில் கூட ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது. அவர் மிகவும் பிரபலமானவுடன், அவருடைய பிறந்த நாளைத் தெரிந்து கொள்ள விரும்பிய ரசிகர்களுக்கு, அவர் பிறந்த கிராமத்தையும், வருடத்தையும், மாதத்தையும் மட்டுமே சொல்ல ஆள் இருந்திருக்கிறது. தேதியைச் சொல்ல ஆளில்லை.

விடுவார்களா ரசிகர்கள்? பிறந்த குழந்தைக்கு அது பிறந்து 24 மணி நேரங்களுக்குள் ஞானஸ்தானம் செய்யும் வழக்கம் இருந்ததால், அவர் பிறந்த கிராமத்திலுள்ள தேவாலயத்தின் பதிவேடுகளில் இருந்து, அவருடைய
பெற்றோர்களின் பெயரைச் சொல்லித் தேதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒருவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விபத்து ஏற்பட்டால் எப்படி இருக்கும்?

பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்தமாதிரி என்பார்கள் - அதாவது பனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி தவறித் தடால் என்று விழுந்தவனை, அவன் என்ன ஏது என்று நிலைப்படும் முன்பாக, அந்தப் பக்கம்
தெறிகெட்டுப் பாய்ச்சலில் ஓடிவந்த காளை மாடு ஒன்று மிதித்து விட்டுப் போனதாம்.அப்படி ஒரு இரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில் ஏற்பட்டது.

மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல் போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். அவளுடைய பெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின்
காதல் காணாமல் போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும் முழுவதும் பழுதாகிவிட்டன.

எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்கு அது இல்லாமல் கெட்டுக்  குட்டிச்சுவராகப்  போய்விட்டது என்றால் அவன் எப்படி இசைப்பான்?

ஆனாலும் இசைத்தார். அதுதான் பீத்தோவனின் மன வலிமை.காது கேட்ட காலத்தில் அவர் இசைத்தஇரண்டு சிம்பொனிகளை விட, காது பழுதான பிறகு அவர் இசைத்த மூன்று புது சிம்பொனிகள் அற்புதமாக அமைந்தன. அவருக்கு சரித்திரத்தில்இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன!

கட்டுரையின் நீளம் கருதி அவர் முத்தாய்ப்பாய் தன்னைப் பற்றித் தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்த முக்கியமான வரியைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"

நிதர்சனமான உண்மை!

மெழுகுவர்த்தி உருகித்தான், தன்னை எரித்துக்கொண்டுதான் ஒளியைக் கொடுக்கிறது. பீத்தோவனும் அப்படித்தான் தன்னுடைய உருக்கத்தில்தான் இந்த உலகிற்கு அற்புதமாக இசையைக் கொடுத்துவிட்டுப் போனார். அவருடைய சோகங்கள்தான் சுகமான இசையாக வெளிப்பட்டன!.

16.3.1827ம் தேதியன்று, தனது இசையரங்கில் சேர்த்துக்கொள்ளக் காலன் அவரைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்.

சோகத்திலும் ஒரு சுகம் உண்டு. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!

இது மீள்பதிவு. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது இன்னொரு வலைத்தளமான பல்சுவைப் பதிவில் (http://devakottai.blogspot.in) வெளிவந்தது. வகுப்பறை அன்பர்களுக்காக அதை இன்று இங்கே வலை ஏற்றியுள்ளேன்.

எப்படி இருக்கிறது? ஒரு வார்த்தை பின்னூட்டத்தில் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.4.14

Humour: நகைச்சுவை: மூட்டுவலி ஏன் வருகிறது?

 
Humour: நகைச்சுவை: மூட்டுவலி ஏன் வருகிறது?

தமிழ்ப் புத்தாண்டின் முதல் பதிவை நகைச்சுவையுடன் துவங்குவோம் என்று இன்று ஒரு குட்டிக்கதையை வலை ஏற்றியுள்ளேன். நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே அதைப் படியுங்கள். நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்


Over to Mini story
--------------------------------------------
ஒரு முழுக்குடிகாரன் ரயில் பயணித்துக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் விஸ்கி மற்றும் இன்னபிற சாராய நெடிகள். உடைகள் அழுக்காக இருந்தன. அவன் குளித்து இரண்டு அமாவாசைகளாவது ஆகியிருக்கும் போல! அவன் ஆடைகளில் லிப்ஸ்டிக் கறைகள் இருந்தன (நோட் திஸ் பாயிண்ட்). சட்டைப் பையில் பாதி குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த ஜின் பாட்டில் ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் அவன் சலமின்றி, அன்றைய செய்தித்தாள் ஒன்றைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான்.

ரயிலில் கூட்டமில்லை.

எதிரில் சந்நியாசி ஒருவர் அமர்ந்து சக பயணியாக அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும், அவன் திடீரென்று சந்நியாசியை நோக்கிக் கேட்டான்.

"சுவாமி, மூட்டு வலி எதனால் வருகிறது?"

"எப்படிப்பட்ட மூட்டுவலி?" இது சாமியார்

"கை, கால்களை மடக்கி நீட்ட முடியாத - குறிப்பாக நடக்க முடியாத, ஏன் அடியெடுத்து வைக்க முடியாத அளவிளான மூட்டுவலி!"

அவர் உடனே, அவனுக்குப் பதில் சொன்னார்.

"மகனே, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைதான் அதற்குக் காரணம். அதிகமான குடி, அளவில்லாத பெண் சகவாசம், தினசரி, குளிக்கும் பழக்கமின்மை,
சுகாதாரமில்லாத உணவுகளை உண்ணுதல் போன்றவைகள்தான் அதற்குக் காரணம்"

"நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று சொன்னவன், மறுபடியும் செய்தித்தாளில் மூழ்கி விட்டான்.

இப்போது, சாமியாருக்குச் சற்று வருத்தமாகிவிட்டது. அதிகப் படியான வார்த்தைகளைச் சொல்லி அவனைப் பயமுறுத்தி விட்டோமோ என்ற
ஆதங்கம் ஏற்பட்டது.

உடனே அவனுடன் பேச ஆரம்பித்தார்.

"மூட்டுவலிக்கான காரணத்தை நான் கடுமையாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். கவலைப் படாதே! எத்தனை நாட்களாக உனக்கு மூட்டு
வலி?"

அந்தக் குடிகாரன் மெல்லிய குரலில் பதில் சொன்னான்:

"எனக்கு எந்த வலியும் இல்லை சாமி. நம்மூர் ஆசிரமத்தில் உள்ள பெரிய சாமியாருக்குக் கடுமையான மூட்டுவலி என்று பேப்பரில் போட்டிருக்கிறான்.
அதனால்தான் கேட்டேன்"
=====================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.4.14

Astrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக!

 
 பொன்மகளே வருக! பொருள் அனைத்தும் தருக!


Astrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக!
விஜய வருடத்திற்கு டாடா சொல்லிவிட்டு, புதிதாய்ப் பிறக்கும் ’ஜய’ வருடத்தை வரவேற்போம். பெயரிலேயே ஜெயம் இருப்பதைப் பாருங்கள்

14.4.14 திங்கட்கிழமையன்று காலை 6:06 மணிக்கு, சுக்லபட்ச சதுர்த்தசி திதி, அஸ்த நட்சத்திரம் 2-ம் பாதத்தில் (கன்னிராசி) மேஷ லக்கினம் முதல் பாதத்தில் ஆண்டு பிறக்கிறது. மற்ற விபரங்கள் எல்லாம், அதாவது பஞ்சாங்கச் சொற்களுடன் கூடிய மற்ற விபரங்கள் எல்லாம் அவசியம் இல்லை!

நான் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பஞ்சாங்கத்தை வாங்கி விட்டேன். நமக்கெல்லாம் அது அவசியம்.

வாசன் திருக்கணித பஞ்சாங்கம் - விலை ரூ.86:00

கிரக கோள்சாரங்கள், சுப முகூர்த்த நாட்கள், விரத நாட்கள், அமாவாசை, பெளர்ணமி திதிகள், திருத்தலங்களில் நடைபெறவுள்ள உற்சவங்கள் போன்றவற்றை முன்கூட்டியே  தெரிந்து கொள்ளலாம்.  தசா புத்தி அட்டவணை, திருமணப் பொருத்தங்கள். நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கான பெயர் வைப்பதற்கு உரிய முதல் எழுத்துக்கள் போன்றவைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

ராகுகாலம், எமகண்டம், சுப ஹோரைகள் போன்ற பல விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சிரமப்பட வேண்டாம். இந்த செய்திகள் எல்லாம் இணையத்தில் கிடைக்கும். என்ன தேடிப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

இடைக்காடர் என்னும் சித்தர் அருளிய வருட பலன்கள் கொடுக்கப்பெற்றிருக்கும்.

இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவர். ஆமாம் பழநி மலையில் உள்ள முருகப்பெருமானை வடிவமைத்தவர் இந்த போக முனிவர்தான். தான் முக்தியடையும் முன்பாக தனது சீடர்களுக்குக் கட்டளை இட்டுச் சென்றவர் அவர். புலிப்பாணியைப் பழநியிலும், இடைக்காடரைத் திருவண்ணாமலையிலும் இருந்து இறைத் தொண்டாற்றி வரும்படி போக முனிவர் கட்டளையிட்டார் என்று சொல்வார்கள்.  அதற்குச் சான்றாக இடைக்காடரின் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. எண்ணற்ற நூல்களை இடைக்காடர் இயற்றியுள்ளார்.

சரி இந்தப் புது வருடத்திற்கான பலனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் இடைக்காடர்?

பாடலைப் பாருங்கள்:

ஜய வருடந் தன்னிலே செப்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ்விளையும் - நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறைமேல்


இந்த ஆண்டில் தானியங்கள் அதிகமாக விளையுமாம்.விளையும். மக்கள் மனத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம். நாட்டை ஆள்வோர் சாதி, மதபேதம் பார்க்காமல் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்களாம். ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டாகுமாம். இந்த ஜய வருடம் அனைத்து தரப்பினருக்கும் நிம்மதியையும், வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையுமாம். இப்போதைக்கு இது போதும்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.4.14

Devotional: நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே!

 
 மேலே படத்தில் உள்ள முருகன் கோவில் - எந்த ஊரில் உள்ளது?
 
Devotional: நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

பக்தி மலர்

11.4.2014

கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்

நீ ...
(கற்பனை என்றாலும் ... )

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
(கற்பனை என்றாலும் ... )

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை என்றாலும் ... )

கந்தனே உனை மறவேன் ...     


பாடலைப் பாடியவர் 'பத்மஸ்ரீ' T.M. செளந்தரராஜன்
பாடலாக்கம்: கவிஞர் வாலி (T.S. ரெங்கராஜன்)

=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.4.14

மலைமேல் இருக்கும் போலீஸ்காரர்!

 

மலைமேல் இருக்கும் போலீஸ்காரர்!

பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது!

தந்தையும், பதினைந்து வயது மகனும் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் இருந்தது.

பையன் பொறுப்பில்லாதவன். விளயாட்டுப்பிள்ளை. அம்மா செல்லம். சொல்வதைக் கேட்கமாட்டான்.

ஆகவே, தந்தை தன்னுடைய டிராவல் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, "டேய், முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே கேன்டீன் இருக்கிறது. போய்க் காப்பி சாப்பிட்டுவிட்டு, ரயிலில் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்த்து வாங்கிக்கொண்டு வருகிறேன். நீ இங்கேயே இரு. உன் சூட்கேசைப் பார்த்துக் கொள். எம்ப்டி சூட்கேஸ் மட்டுமே 1,500 ரூபாய் விலை. ஜாக்கிரதை!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

பையன் சுவாரசியமில்லாமல் மண்டையை அசைத்து அவரை அனுப்பி வைத்தான்.
++++++++++++++++++++++++++++++++++++
சென்றவர் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார்

பையனையும் காணவில்லை அவனுடைய பெட்டியையும் காணவில்லை.

பதற்றமாகிவிட்டது.

அந்த பிளாட்பாரத்தின் வலதுபுறம் சற்றுத் தள்ளி ஒரு குளிர்பானக் கடை இருப்பதும், பையன் அங்கே நிற்பதும் தெரிந்தது.விரைந்தார். பையன் கண்களை மூடியவாறு பெப்சியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.

"டேய் ராசா, நான் வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்?"

"தாகமா இருந்துச்சு நைனா, அதான் பெப்சி குடிக்க வந்தேன்"

"பெட்டி எங்கேடா ராசா?"

"அதை நாம நின்ன இடத்துல வச்சுட்டுத்தான், இங்க வந்தேன்"

சட்டென்று தந்தையின் ப்ளட் பிரஷர் எகிறி விட்டது. காட்டுக் கத்தலாகக் கத்தினார்

"டேய் அறிவு கெட்டவனே, உன் மேம்போக்குத்தனத்துக்கு அளவே இல்லையா?"

"இப்ப என்ன ஆச்சுன்னு  இப்படிக் கத்தறே நைனா?"

"பெட்டி அங்கே இல்லை. யாரோ லவட்டிக் கொண்டு போய் விட்டான். நான் நினைத்தபடியே ஆகிவிட்டது."

பையன் கூலாகச் சொன்னான்,"பெட்டியை எடுத்துக் கொண்டு போனவன் திரும்ப நம்மகிட்டதான் வருவான் நைனா "

"எப்படிடா அறிவுகெட்டவனே?"

"சாவி எங்கிட்டயில்ல இருக்கு!"
----------------------------------------------------------------
இணையத்தில் எழுதுகிற அத்தனை பேர்களின் நிலையும், அந்தப் பையனின் நிலைதான்.

அத்தனை பேர்களும் அப்பாவிகள். சாவி நம்மிடம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அதாவது வலைப்பூ நம்மிடம், நம் பெயரில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.

எழுதும் ஆக்கங்கள் எல்லாம் எப்படி எப்படித் திருடப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்?

இணையத்தில் எழுதுபவர்களில் சகம்தான் சுயமாக எழுதுபவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிக்பாக்கெட் ஆசாமிகள். கத்திரிக்கோல் ஆசாமிகள். கொஞ்சம் அசந்தால் உங்கள் பர்சை மட்டுமல்ல, சட்டையையும் லவட்டிக் கொண்டு போய் விடுவார்கள். பதிவுகளைக் கட் & பேஸ்ட் செய்து தங்கள் வலைப்பூக்களில் தாங்கள் எழுதியதைப் போல பதிவிட்டுக் கொள்வார்கள்! அதைப் படிக்க ஒரு கூட்டம் சேராதா என்ற நைப்பாசைதான் வேறென்ன?
----------------------------------------------------------------
திருட்டைப் பற்றி நான் கவலைப் படவில்லை. படுவதில்லை. மலைமேல் இருக்கும் போலீஸ்காரர் (தமிழ்க் கடவுள்) அதை பார்த்துக் கொள்வார். அதற்குப் பெயர்தான் இறை நம்பிக்கை!

அன்புடன்
வாத்தியார்

===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.4.14

Astrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை!

 
Astrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை!

Quiz 50: புதிருக்கான விடை!

நேற்றையப் புதிரில் ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து அவருடைய குழந்தை பாக்கியத்திற்கான வீட்டை அலசச் சொல்லியிருந்தேன்.
வழக்கம்போல நிறையப் பேர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி!

அந்த ஜாதகிக்கு, அவருடைய கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தை பிறக்கவில்லை. அந்த ஜாதகிக்குக் குழந்தை இல்லை. அதுதான் சரியான விடை

ஜாதகத்தைப் பாருங்கள்

விருச்சிக லக்கின ஜாதகி.

லக்கினாதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில். பாக்கியாதிபதி சந்திரனும் ஆறாம் வீட்டில் ஆறாம் வீடு கேடானது’
சுகஸ்தானத்தில் (4ல்)கேது

1.  ஐந்தாம் அதிபதி, சனியுடன் சேர்க்கை
2. ஐந்தாம் வீடு, பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு புறம் கேது, மறுபுறம் செவ்வாய்
3. ஒன்பதாம் வீட்டில் (பாக்கிய ஸ்தானத்தில்) எட்டாம் வீட்டுக்காரன் புதன் டென்ட் அடித்துக் குடியிருக்கிறான். அது பாக்கியங்களூக்குக் கேடானது.
4. அத்துடன் ஒன்பதாம் வீட்டின் மேல் செவ்வாயின் பார்வை.
5. ஒன்பதாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில். ஒருபுறம் சூரியன். இன்னொருபுறத்தில் ராகு

பெண்களுக்கு ஒன்பதாம் வீடு அதி முக்கியமானது. அது முழுதாகக் கெட்டிருக்கிறது. அத்துடன் ஐந்தாம் வீடும் கெட்டிருக்கிறது. பாபகர்த்தாரி யோகம் வலிமையானது. அதிக கேடுகளை விளைவிக்கக்கூடியது.

அக்காரணங்களால், ஜாதககிக்குக் கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட்டு, அவளால் கருத்தரிக்க இயலாமல் போய்விட்டது. விளைவு: குழந்தை இல்லை

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
கலந்து கொண்ட 34 பேர்களில் 13 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களில் சரியான விடையை எழுதிய அன்பர்களின்
பெயர்களைத் தொகுத்துக்கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது
வாழ்த்துக்கள். Better luck for them next time!
----------------------------------------------------------------------------------------
1
/////Blogger kmr.krishnan said...
    சனைச்சரன் நிற்பது பூராடம் மூன்றாம் பாதத்தில்.குரு பகவான் நிற்பது மூலம் இரண்டாம் பாததில். மாந்தி, சனியால் லக்கினமும், குருபகவானும்
பாப‌கர்த்தாரியில்ல் மாட்டிக்கொண்டனர். விருச்சிக லக்கினம் என்பதால் குருவே 5ம் இடத்து அதிபதி. அதிபதியும், காரகனுமான் குருபகவான்
அடிவாங்கிவிட்டார்.
    5ம் இடமும் செவ்வாய் கேதுவால் பாபகர்த்தாரியில் சிக்கிவிட்டது. 9க்கு உடைய
    சந்திரனும் 6ல் சென்று மறைந்துவிட்டார்.
    சுக்கிரன் அஸ்தங்கதம்,குருவக்கிரம்!
    அம்மையாருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 5:14:00 AM///////
--------------------------------------------------------------------------------------
2
Blogger S Balaji said...
    ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் கிடையாது, காரணங்கள்:
    (1) லக்கிணாதிபதி ஆறாம் இடத்தில்.
    (2) ஐந்தாம் வீடு அதிபதி மற்றும் காரகன் (குரு) ஆட்சியுடன் இருந்தாலும் அந்த வீடு பாப கர்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
    (3) மேலும் குருவின் பார்வை அந்த வீட்டில் விழவில்லை.
    நன்றியுடன்
    ச. பாலாஜி.
    Tuesday, April 08, 2014 11:08:00 AM//////
-----------------------------------------------------------------------

/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The lady does not have child.
    Because the 5th lord is with Saturn and aspected by 12th lord sukran.
    lagna lord in 6th and hence not supporting.
    9th lord chandran in 6th and not supporting.
    Thanking you sir.
    Tuesday, April 08, 2014 12:11:00 PM///////

-----------------------------------------------------------
4  
////Blogger SIVA said...
    அய்யா இவர் குழந்தை பாக்கியம் அற்றவர் அப்படி பிறந்தாலும் குறையுள்ள குழந்தையாக இருப்பின் பிழைத்திருக்கும் ., என் என்றால் ஐந்தாம்
அதிபதி குரு வக்கிரமடைந்து இரண்டாம் இடத்தில அதாவது தன்னுடைய வீட்டிற்கு பத்தாமிடத்தில் முன்றாமிட வக்கிர சனியுடன் . எட்டாமிட
கிரகங்களின் பார்வையுடன்
    Tuesday, April 08, 2014 4:29:00 PM/////
-------------------------------------------------------------

/////Blogger venkatesh r said...
    கொடுக்கப்பட்ட ஜாதக அம்மணிக்கு குழந்தை பிறந்திருக்க வாய்ப்பில்லை.
    விருச்சிக லக்னம்,மேஷ ராசி ஜாதகி.
    1.லக்னாதிபதி 6ல் பாக்யாதிபதி சந்திரனுடன் மறைந்து விட்டார்.
    2.ஜாதகிக்கு 24 வயதிற்கு மேல் வந்த ராகு தசையில் தாமத திருமணம் நடந்து இருக்கும். அதனால் பல்வேறு சிரம்த்தின் இடையில் தாம்பத்திய
ஜீவனம்.
    3.ஐந்தாம் பாவம் பாபகர்த்தாரியின் பிடியில்.
    4.ஐந்துக்கு அதிபதியும், குழந்தை பிறப்பிற்கு காரகானான குரு சனியுடன் 2ல் எனக்கு என்ன போச்சு என்று அமர்ந்து விட்டார்.
    5.5ம் பாவத்திற்கு எந்த சுபக் கிரக பார்வையும் இல்லை.
    6.உடல் காரகனான சூரியன், சனியின் நேர் பார்வையில் உள்ளார். அதனால் அவ்வப்போது சுகவீனமற்று இருந்திருப்பார்.
    அதனால் ஜாதகிக்கு குழந்தைகள் இல்லை.
    Tuesday, April 08, 2014 5:03:00 PM//////
-------------------------------------------------------------------
6
/////Blogger S.Namasu said...
    Dear sir:
    My Answer for Quiz no.50:-
     Jathakiku Kulanthai pakkiyam irrukka vaippu kuraivu.
    Reasons:
    1.5th house is in "pabakarthari" amaippil ullathu.
    2.Lakkana athipathi is in 6th house. Marivu shthanam porattamana valkkai(sasimangala yogam - not good in 6th house)
    3.5th house lord "Kuru" in 2nd house with, 3rd & 4th house lord "Sani" causes for delay.
    3."Manthi" is in 12th house, so "Ayana sayana" problems.
    4.("Sukkira" thasi till 18.3.18,"Suriya" thasi till 25.3.18 age) both lord are occupied in 8th house. BAD period.
    5.("Chanthira thasai" till 35.3.18, "Chevvai thasai" till 42.3.18 age) both lord are occupied in 6th house. BAD period.
    SUBAM.
    Tuesday, April 08, 2014 5:37:00 PM//////

--------------------------------------------------------------------------
7
//////Blogger vanikumaran said...
    குழந்தைக்கு 5ம் வீடு,அதிபதி,காரகன் குரு நிலைமை இவற்றில்
    1. 5ம் வீடு பாபக்கத்தாரி யோகதில்,
    அதிபதி மற்றும் காரகன் குரு 2ம் வீட்டில் ஆட்சியாகி உடன் 3ம் அதிபதி சனியால் கெட்டார்.
    2. 5க்கு 5ம் இடம் 9ம் பெண்களுக்கு குழந்தை பாக்கியத்தில் முக்கியம் என்பதால்,
    9ம் இடம் 8ம் அதிபதி புதனால் கெட்டது. 9ம் அதிபதி 6ம் மறைவு ஸ்தானத்தில் உடன் ஆட்சி பெற்ற 6ம் அதிபதி.
    ஸ்திர லக்னமான விருச்சிக லக்னத்திற்கு 9ம் அதிபதி சந்திரன் பாதகாதிபதியாகி போக ஸ்தானத்தினை விரையம் ஆக்கினார்.உடன் 6ம் அதிபதி செவ்வாய் பார்வை.
    யோகாதிபதி குரு சனியால் கெட்டார்
    3. மேலும் 12ல் அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தியும் சுகஸ்தானத்தில் கேதுவும் போக வாழ்வினை கெடுத்ததால்
    ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 6:17:00 PM/////
---------------------------------------------------------------------
8
////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குருவே,
    இந்த ஜாதகிக்கு திருமணம்மாகிருக்க வாய்ப்பு இல்லை. காரணம் 7ம் இடத்திற்கும் களதிரதிர்க்கும் உரிய சுக்கிரன் 8இல் மறைவு உடன் சூரியன்
சேர்கை சனியின் நேரடி பார்வையில், குருவும் பார்க்கிறார் ஆனால் சனியுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார். அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய
ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் கூடவே நடந்த தசாக்களும் சாதகமாக இல்லை. கூடவே சுக ஸ்தானத்தில் கேது, அயன
சயன போக ஸ்தானத்தில் மாந்தி. இவற்றையும்மீறி திருமணம் நடந்திருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லை காரணம் 5ம் இட அதிபதியும் புத்திர காரகனுமாகிய குரு சனியின் சேர்கை மற்றும் சூரியனின் பார்வையில், சுக்கிரனும் பார்க்கிறார் ஆனால் சூரியனுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.
அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் அதுவும் அட்டமாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில்.
குழந்தை பாக்கியத்திற்கு பெண்கள் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் மிகவும் முக்கியம்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, April 08, 2014 6:33:00 PM//////
------------------------------------------------------------------
9
/////Blogger Raja Murugan said...
    அய்யா வணக்கம், லக்கினதிபதியும், பாக்கியதிபதியும், 6 ல் மறைந்துள்ளார்கள் எனவே ஜாதகர் வாழ்க்கை போராட்டமானது,
    6 ம் அதிபதி 6 ல் நோயுள்ளவர்.
    ஐந்தாம் அதிபதி குரு 2 ல் சனியுடன் 2 ல் சனி குடும்பம் பிரச்சனை அதிகம்.
    லக்கினாதிபதி,ஐந்து,ஒன்பதாம் ஆகிய அதிபதிகள் 6,8,12 ல் மறைந்தால் குழந்தை இல்லை.
    எந்த சுப கிரகங்களின் பார்வையும் ஐந்தாம் வீட்டின் மேல் இல்லை.
    ஐந்தாம் வீட்டின் பாக்கியாதிபதி செவ்வாய் 6 ல் மறைந்துள்ளார்.
    ஐந்தாம் வீட்டுக்கு ஐந்தாம் வீடு 6 ம் அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையில் உள்ளது.
    அயன சயன பாக்கியம் மாந்தி மற்றும் செவ்வாயின் 7,8 பார்வையில்.
    எனவே ஜாதகருக்கு குழந்தை இல்லை.
    Tuesday, April 08, 2014 8:31:00 PM//////
-----------------------------------------------------------------
10
/////Blogger Ramkumar KG said...
    ஐந்தாம் இடம் பாபக்ார்த்தரி யோகத்தில் மற்றும் இந்தம் அதிபதி சனியுடன் சேர்ப்பு மற்றும் சூரியன் பார்க்கப்படுவதால் மற்றும் சுப பார்வை 5
மற்றும் 5ஆம் அதிபதி மேல் இல்லாததால் குழந்தை பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 8:37:00 PM/////
--------------------------------------------------------------
11
///////Blogger dhana lakshmi said...
    Quiz-50
    குழந்தை இல்லை.
    புத்திர தோஷம் உள்ள ஜாதகம்.
சந்திரனக்கு 5ல் தீய கிரகம் இருந்தாலோ அல்லது 5ம் வீட்டீற்கு 2 பக்கம் தீய கிரகம் இருந்தாலோ
புத்திரதோஷம்.
    குருவும்,உடனிருக்கும் சனியும் வக்கிரமான நிலையில்,7ம் பார்வை உள்ள சுக்கிரன் அஸ்தங்கதமான நிலையில் மேலும் 2மிடத்தில் குருவுடன்
உள்ள வக்கிர சனி தடை ஏற்படித்திருக்கும்.
    Regards
    J.Dhanalakshmi
    Tuesday, April 08, 2014 11:37:00 PM//////
-----------------------------------------------------------------
12
Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    இன்றைய புதிருக்கான விடை: புத்திர பாக்கியம் இல்லாத,தடைஉள்ள ஜாதகம்.
    * விருச்சிக லக்னம்,மேச ராசி;லக்கினாதிபதி ஆட்சி பெற்று 6ல் மறைவு.
    *5க்குரிய புத்திர ஸ்தானதிபதியும் புத்திரகாரகனுமான குரு(வக்கிரம்} ஆட்சி பெற்று 3,4க்குரிய (5ம் ஸ்தானதிற்க்கு 12க்குரியவன்)வக்கிர சனியின்
சேர்க்கை யுடன் அமர்ந்து பலமிழந்தது.
    *இதை தவிர்த்து புத்திர ஸ்தானமானது பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. மேலும் லக்கினம் 3,7,9மற்றும்11ம் ஸ்தானங்கள் பாபகரத்தாரி
யோகத்தில் உள்ளது.
    *7க்குரிய சுக்கிரன் அஸ்தங்கமடைந்து 8ல் மறைவு,9க்குரிய பாக்கிய ஸ்தானா திபதியான சந்திரன் 6ல் மறைவு போன்றபலகீனமான நிலையில்
இருப்பதுடன் 5ம் இடத்தை சுபர் யாரேனும் பார்வை செய்யாது இருப்பதும்
    குறையே.
    சரியான விடையினை தெரிந்துகொள்ள ஆவல் ஐயா.
    நன்றி ல ரகுபதி
    Wednesday, April 09, 2014 12:43:00 AM/////
----------------------------------------------------
13
//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.50:
    The Native doesn't have child.
    The Native has to struggle a lot in her life time.
    This is an example horoscope for worst one.
    Reason:
    1. Five houses are affected by Baba kathri yoga. (First,Fifth,Seventh, Ninth and Eleventh houses)
    2. Lagna lord, Bagyathipathi and yogathipathi are in hidden places (i.e. 6th and 8th house)
    3. All benefic planets are affected severely.
    4. Fourth house is affected by Kethu.
    5. Fifth house is under baba kathri yoga as well as fifth house lord Jupiter is clutched by Saturn.This is puthra karaga also. affected very worst.
    6. Seventh house is affected by baba kathiri yoga as well as this house lord is in Eighth house and getting saturn aspect.
    7. Ninth house lord is sitting in sixth house as well as this house affected by baba kathiri yoga.
    8. Eleveth house is affected by baba kathri yoga as well as this house lord sitting in eighth house.
    9. Mandhi is sitting in twelfth house and affects sexual life as well as getting sixth house lord aspects.
    10. Second house is affected by Saturn. Family life is in trouble.
    Very worst horoscope .... Oh god ....Save her.....
    With kind regards,
    Ravichandran M.//////

==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!