21.4.14

Astrology: அகர முதல எழுத்தை எல்லாம் தகர சிலேட்டில் எழுதிய காலம்!

 
 திண்ணை வைத்த வீடுகள்
 
 Astrology: அகர முதல எழுத்தை எல்லாம் தகர சிலேட்டில் எழுதிய காலம்!

அந்தக் காலத்தில் வீட்டிற்கு வீடு திண்ணைகளை வைத்துக் கட்டியிருப் பார்கள். திண்ணைகளால் பல உபயோகங்கள் இருந்திருக்கின்றன.
பள்ளிக்கூடங்களே இந்தத் திண்ணைகளில்தான் நடந்திருக்கின்றன. இப்போது திண்ணைகள் எல்லாம் கிடையாது. எல்லாம் சிட் அவுட்டாக
மாறிவிட்டன.

இந்தத் திண்ணைகளைப் பற்றியும், திண்ணைப் பள்ளிக்கூடங்களையும் பற்றி அறிந்து கொள்ள எழுத்தாளர் திரு.இராம.கிருஷ்ணன் அவர்களின்
வலைத்தளத்தைப் பாருங்கள். அதற்கான சுட்டி: http://valavu.blogspot.in/2004/11/2.html விரிவாக எழுதியுள்ளார்.

தமிழ்த்தாத்தா திரு. உ.வே.சாமிநாதன் அவர்களின் என் சரித்திரம் நூலையும் படித்துப் பாருங்கள். அக்காலக் கல்வியின் நிலைமையைக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுவார்

அதெல்லாம் சுமார் 180 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அப்போது காகிதம், பேனா என்று எழுது பொருட்கள் இல்லாத காலம்.ஐந்து வயதில் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் பிள்ளைகளை முதலில் மணலில்தான் எழுதிப் பழக்குவார்கள். பிறகு எழுத்தாணி பிடிக்கவும் ஓலைகளில் எழுதவும் பயிற்சி கொடுப்பார்கள்

அந்தக் காலத்தில் வாத்தியார் என்றாலே, அவர் கையில் இருக்கும் பிரம்புதான் ஞாபகத்திற்கு வரும். சரியாகப் படிக்காவிட்டால் பிரம்படிதான். அடியாத மாடு படியாது என்ற சித்தாந்தம். சொல்லிக்கொடுக்கும் பாடங்களை எல்லாம் மனப்பாடம் செய்ய வைப்பார்கள். ஒப்புவிக்கச் சொல்லும்போது சரியாகச் சொல்ல வேண்டும். பின்னி எடுத்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் பாடங்கள் எல்லாம் ஏடுகளில்தான் இருந்திருக்கின்றன. ஆசிரியர் ஏட்டில் இருப்பதைச் சொல்லிக் கொடுக்க, மாணவர்கள்
மனத்தால் சொல்லிப் பழக வேண்டும். பிறகு மணலில் எழுதிப் பழகவேண்டும்.

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, குறள் என்று ஒவ்வொன்றாய்ப் படிப்பது விரிவாகும். அத்துடன் வீடுகளில் தேவாரம், நாலாயிர திவ்வியப்
பிரபந்தம், சிவபுராணம், விநாயகர் அகவல் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கப் படிக்க வேண்டும். கணிதத்தில் 16ஆம் வாய்ப்பாடு வரை
மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்பிக்க வேண்டும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று எண் கணக்குகள் கொஞ்சங் கொஞ்சமாய்

விரிவடையும். வர்க்க மூலம், பரப்பளவு, கன அளவு என்று கணக்கின் அத்தியாயங்களும் கூடிக் கொண்டே போகும். அத்தனைக்கும் நடைமுறைப் பயிற்சிதான். அத்தனை கணக்குகளும் வாழ்க்கையோடு தொடர்பு உடையதாக இருக்கும். பறவைகள், மரங்கள், இயற்கை அறிவியல் ஆகிய படிப்புக்கள் மாணவர்கள் இயல்பான வாழ்க்கையில் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்கள். அவற்றைப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கும் வழக்கம் இல்லாமல் இருந்திருக்கிறது.

எண்ணையும் எழுத்தையும் மட்டுமே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று வலியுறுத்தியும்
சொல்லியிருக்கிறார்கள்.

மொழியும், கணிதமும்தான் கற்பிக்கப்பெற்றிருக்கிறது. ஆனால் முறையாகக் கற்பிக்கபெற்றிருக்கிறது. சிரத்தையோடு கற்பிக்கப்பெற்றிருக்கிறது.
கற்பித்தலில் அதுதான் முக்கியம்.

இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அனுபவம் பெற்ற மாணவர்கள், புதிய மாணவர்களுக்குப் போதிப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.
-----------------------------------------------------------
1850ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் காகதம், ஊற்றுமை பேனா போன்ற எழுது பொருட்களெல்லாம் பயன் பாட்டிற்கு வந்திருக்கிறது. அது நம் நாட்டிற்கு
1920ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் பரவலாக புழக்கத்திற்கு வந்திருக்கிறது.

அதற்கு முன்னால் என்ன செய்தார்கள்?

அதை விரிவாக நாளை பார்ப்போம்

அன்புடன்
வாத்தியார்

===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. என்ன ஆனது என்று தெரியவில்லை. சில நாட்களாக வகுப்பறைக்குள்ளேயே நுழைய முடியவில்லை. வைரஸ் ஏதாவது தாக்கி விட்டதா?

    ReplyDelete
  2. சில சரித்திர கதை கொண்ட திரைப்படங்களில் கோழி இறகில் எழுதுவதைப் பார்த்திருக்கிறோம். இதைதான் பிறகு விரிவாகச் சொல்லப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கள் நாட்டில் முந்தைய காலத்தில் இருந்தே திண்ணை வைத்து வீடு கட்டியதில்லை. மொட்டை மாடியும் கிடையாது. ஓடு வேய்ந்த கூரைகள்தான். இவை (மொட்டை மாடி) இந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஒத்து வராது. வருடம் முழுக்க மழை பெய்யும். கோடைக் காலம் என்ற ஒன்று கிடையாது.

    ReplyDelete
  3. அப்பாடி! ஒரு வழியாக 'ஹைஜாக்'கில் இருந்து வகுப்பறை தப்பித்து வந்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி இவ்வாறு நடக்காமல் இருக்க தாங்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மூன்று நாட்களும் நானும் மனத் தவிப்புடன் தான் இருந்தேன். இதனைச் சரிசெய்ய எனக்கு தொழில்நுட்ப விஷயம் ஏதும் தெரியவில்லை என்பது வருத்தமாகவும் இருந்தது.

    திண்ணைப்பள்ளிக் கூடம் பற்றி தமிழ்த் தாத்தா எழுதியுள்ளது ஒரு முழு சித்திரத்தை அளிக்கவல்லது.

    இளமைக்கல்வி என்ற 10வது அத்தியாயத்தில் இந்தக் கல்வி முறை பற்றி விரிவாக எழுதியுள்ளார்."பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள்" என்று எழுதுகிறார்.1855ல் பிறந்து 1860ல் படிப்பைத் துவங்கிய தமிழ்த் தாத்தாவின் கூற்று ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவது.விரும்பிய அனைவருக்கும் கல்வி கிடைக்க வழி இருந்தது என்பது தெரிய வருகிறது.யாரும் யாருடைய அறிவுக்கும் தடை போடவில்லை.

    நமது திண்ணைப் பள்ளிக்கூடத்தினை கண்டு அதன் பின்னரே இங்கிலாந்தில் ஏழைகளுக்கு கல்வி அளிக்க ஆங்கிலேய அரசு முயற்சி எடுத்தது.

    'மதராஸ் மானிடோரியல் சிஸ்டம்' பற்றி விரிவாகக்கட்டுரை அனுப்பலாமா?
    வெளியிடுவீர்களா?

    ReplyDelete

  4. சிவமயம்
    அன்பின் உபாத்தியாருக்கு அனந்த கோடி நமஸ்காரம்,
    தங்கள் லாபநோக்கமில்லா சேவை நோக்கமே என்னை கோடி வணக்கம் செய்யவைத்தது என்றால் மிகையாகாது.நானும் தங்கள் ஏகலைவன் தான், அருச்சுனன் ஆக முடியவில்லை எல்லோரும் அருச்சுனன் ஆக முடியுமா என்ன தாங்கள் அடிக்கடி சொல்வது போல் எல்லாம் வாங்கி வந்த வரம்,ஒவ்வோர் நாளும் உங்கள் சரஸ்வதியையும் நவக்கிரகங்களையும் அப்பன் முருகனையும் உங்களையும் வணங்கி தான் அடுத்த வலைக்கு போவேன். சில நாள் findindia.net க்கு சென்றது நான் அதிர்ச்சியடந்தேன். என் துர்ரதிஸ்டம் என மிக வேதனை அடைந்து மகனை கூப்பிட்டு Norton ல் அந்த குரங்குகளை அடைக்க சொன்னேன் ஆனால் அவர்களாலும் முடியவில்லை அவர்களும் நான் பிடிக்கறாமாரி பிடிக்கிறன் நீ பிடிபாடதாமாதிரி நடி என்று வியாபாரம் செய்கிரார்கள்போலும் பின் ஜோசித்தேன் நான் உங்கள் பணிக்கு ஒரு பங்களிப்பும் செய்யமுடியத நிலையில் இருப்பதால் நீங்கள் தான் பூட்டிவிட்டீர்களோ என் எண்ணினேன் ஆனால் இன்று பெரு மகிழ்ச்சி என் வாழ்வில் நான் சீரோ ஆனால் தங்கள் எழுத்துக்கள் என் நம்பிக்கையை வளர்க்கின்றது எவ்வளவு காலமாக தங்களுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்க முயன்றும் இன்றுதான் அவன் அருளால் அவன் தாள் வணங்க முடிந்தது. கோடி நன்றி அன்பின் குருவே. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், மீண்டும் அன்பு நன்றிகள். மீண்டும் சந்திப்போம்.அன்புடன் Vickna Sai.London.

    ReplyDelete
  5. ////Blogger Kirupanandan A said...
    என்ன ஆனது என்று தெரியவில்லை. சில நாட்களாக வகுப்பறைக்குள்ளேயே நுழைய முடியவில்லை. வைரஸ் ஏதாவது தாக்கி விட்டதா?/////

    ஆமாம். இப்போது உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட பல மாணாக்கர்களின் ஆசியால் எல்லாம் சரியாகிவிட்டது!

    ReplyDelete
  6. /////Blogger Kirupanandan A said...
    சில சரித்திர கதை கொண்ட திரைப்படங்களில் கோழி இறகில் எழுதுவதைப் பார்த்திருக்கிறோம். இதைதான் பிறகு விரிவாகச் சொல்லப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கள் நாட்டில் முந்தைய காலத்தில் இருந்தே திண்ணை வைத்து வீடு கட்டியதில்லை. மொட்டை மாடியும் கிடையாது. ஓடு வேய்ந்த கூரைகள்தான். இவை (மொட்டை மாடி) இந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஒத்து வராது. வருடம் முழுக்க மழை பெய்யும். கோடைக் காலம் என்ற ஒன்று கிடையாது./////

    வருடம் முழுக்க மழை பெய்யுமா? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதே சாமி. பேசாமல் அங்கே வந்து விடலாமா? குடியுரிமை கிடைக்குமா?
    வேண்டாம். இங்கே கிடைக்கும் மற்ற 100 கணக்கான விஷயங்கள் அங்கே கிடைக்க வாய்ப்பில்லை!
    இளையராஜாவின் பாட்டுத்தான் நினைவிற்கு வருகிறது. சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊரைப் போலாகுமா?

    ReplyDelete
  7. Blogger kmr.krishnan said...
    அப்பாடி! ஒரு வழியாக 'ஹைஜாக்'கில் இருந்து வகுப்பறை தப்பித்து வந்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி இவ்வாறு நடக்காமல் இருக்க தாங்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மூன்று நாட்களும் நானும் மனத் தவிப்புடன் தான் இருந்தேன். இதனைச் சரிசெய்ய எனக்கு தொழில்நுட்ப விஷயம் ஏதும் தெரியவில்லை என்பது வருத்தமாகவும் இருந்தது.
    திண்ணைப்பள்ளிக் கூடம் பற்றி தமிழ்த் தாத்தா எழுதியுள்ளது ஒரு முழு சித்திரத்தை அளிக்கவல்லது.
    இளமைக்கல்வி என்ற 10வது அத்தியாயத்தில் இந்தக் கல்வி முறை பற்றி விரிவாக எழுதியுள்ளார்."பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள்" என்று எழுதுகிறார்.1855ல் பிறந்து 1860ல் படிப்பைத் துவங்கிய தமிழ்த் தாத்தாவின் கூற்று ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவது.விரும்பிய அனைவருக்கும் கல்வி கிடைக்க வழி இருந்தது என்பது தெரிய வருகிறது.யாரும் யாருடைய அறிவுக்கும் தடை போடவில்லை.
    நமது திண்ணைப் பள்ளிக்கூடத்தினை கண்டு அதன் பின்னரே இங்கிலாந்தில் ஏழைகளுக்கு கல்வி அளிக்க ஆங்கிலேய அரசு முயற்சி எடுத்தது.
    'மதராஸ் மானிடோரியல் சிஸ்டம்' பற்றி விரிவாகக்கட்டுரை அனுப்பலாமா?
    வெளியிடுவீர்களா?/////

    நமக்கெல்லாம் 48 வயதிற்குமேல்தானே கணினி கிடைத்தது. அதை உபயோகிக்க மட்டுமே கற்றுக்கொண்டோம். கணினி தொழில் நுட்ப விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்க நமக்கு யார் இருக்கிறார்கள்? அல்லது அதற்கான நேரமும் நமக்கு இருக்கிறதா?

    ReplyDelete
  8. /////Blogger p suntha said...

    சிவமயம்
    அன்பின் உபாத்தியாருக்கு அனந்த கோடி நமஸ்காரம்,
    தங்கள் லாபநோக்கமில்லா சேவை நோக்கமே என்னை கோடி வணக்கம் செய்யவைத்தது என்றால் மிகையாகாது.நானும் தங்கள் ஏகலைவன் தான், அருச்சுனன் ஆக முடியவில்லை எல்லோரும் அருச்சுனன் ஆக முடியுமா என்ன தாங்கள் அடிக்கடி சொல்வது போல் எல்லாம் வாங்கி வந்த வரம்,ஒவ்வோர் நாளும் உங்கள் சரஸ்வதியையும் நவக்கிரகங்களையும் அப்பன் முருகனையும் உங்களையும் வணங்கி தான் அடுத்த வலைக்கு போவேன். சில நாள் findindia.net க்கு சென்றது நான் அதிர்ச்சியடந்தேன். என் துர்ரதிஸ்டம் என மிக வேதனை அடைந்து மகனை கூப்பிட்டு Norton ல் அந்த குரங்குகளை அடைக்க சொன்னேன் ஆனால் அவர்களாலும் முடியவில்லை அவர்களும் நான் பிடிக்கறாமாரி பிடிக்கிறன் நீ பிடிபாடதாமாதிரி நடி என்று வியாபாரம் செய்கிரார்கள்போலும் பின் ஜோசித்தேன் நான் உங்கள் பணிக்கு ஒரு பங்களிப்பும் செய்யமுடியத நிலையில் இருப்பதால் நீங்கள் தான் பூட்டிவிட்டீர்களோ என் எண்ணினேன் ஆனால் இன்று பெரு மகிழ்ச்சி என் வாழ்வில் நான் சீரோ ஆனால் தங்கள் எழுத்துக்கள் என் நம்பிக்கையை வளர்க்கின்றது எவ்வளவு காலமாக தங்களுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்க முயன்றும் இன்றுதான் அவன் அருளால் அவன் தாள் வணங்க முடிந்தது. கோடி நன்றி அன்பின் குருவே. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், மீண்டும் அன்பு நன்றிகள். மீண்டும் சந்திப்போம்.அன்புடன் Vickna Sai.London.////

    உங்கள் மேலான அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com