14.4.14

Astrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக!

 
 பொன்மகளே வருக! பொருள் அனைத்தும் தருக!


Astrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக!
விஜய வருடத்திற்கு டாடா சொல்லிவிட்டு, புதிதாய்ப் பிறக்கும் ’ஜய’ வருடத்தை வரவேற்போம். பெயரிலேயே ஜெயம் இருப்பதைப் பாருங்கள்

14.4.14 திங்கட்கிழமையன்று காலை 6:06 மணிக்கு, சுக்லபட்ச சதுர்த்தசி திதி, அஸ்த நட்சத்திரம் 2-ம் பாதத்தில் (கன்னிராசி) மேஷ லக்கினம் முதல் பாதத்தில் ஆண்டு பிறக்கிறது. மற்ற விபரங்கள் எல்லாம், அதாவது பஞ்சாங்கச் சொற்களுடன் கூடிய மற்ற விபரங்கள் எல்லாம் அவசியம் இல்லை!

நான் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பஞ்சாங்கத்தை வாங்கி விட்டேன். நமக்கெல்லாம் அது அவசியம்.

வாசன் திருக்கணித பஞ்சாங்கம் - விலை ரூ.86:00

கிரக கோள்சாரங்கள், சுப முகூர்த்த நாட்கள், விரத நாட்கள், அமாவாசை, பெளர்ணமி திதிகள், திருத்தலங்களில் நடைபெறவுள்ள உற்சவங்கள் போன்றவற்றை முன்கூட்டியே  தெரிந்து கொள்ளலாம்.  தசா புத்தி அட்டவணை, திருமணப் பொருத்தங்கள். நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கான பெயர் வைப்பதற்கு உரிய முதல் எழுத்துக்கள் போன்றவைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

ராகுகாலம், எமகண்டம், சுப ஹோரைகள் போன்ற பல விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சிரமப்பட வேண்டாம். இந்த செய்திகள் எல்லாம் இணையத்தில் கிடைக்கும். என்ன தேடிப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

இடைக்காடர் என்னும் சித்தர் அருளிய வருட பலன்கள் கொடுக்கப்பெற்றிருக்கும்.

இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவர். ஆமாம் பழநி மலையில் உள்ள முருகப்பெருமானை வடிவமைத்தவர் இந்த போக முனிவர்தான். தான் முக்தியடையும் முன்பாக தனது சீடர்களுக்குக் கட்டளை இட்டுச் சென்றவர் அவர். புலிப்பாணியைப் பழநியிலும், இடைக்காடரைத் திருவண்ணாமலையிலும் இருந்து இறைத் தொண்டாற்றி வரும்படி போக முனிவர் கட்டளையிட்டார் என்று சொல்வார்கள்.  அதற்குச் சான்றாக இடைக்காடரின் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. எண்ணற்ற நூல்களை இடைக்காடர் இயற்றியுள்ளார்.

சரி இந்தப் புது வருடத்திற்கான பலனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் இடைக்காடர்?

பாடலைப் பாருங்கள்:

ஜய வருடந் தன்னிலே செப்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ்விளையும் - நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறைமேல்


இந்த ஆண்டில் தானியங்கள் அதிகமாக விளையுமாம்.விளையும். மக்கள் மனத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம். நாட்டை ஆள்வோர் சாதி, மதபேதம் பார்க்காமல் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்களாம். ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டாகுமாம். இந்த ஜய வருடம் அனைத்து தரப்பினருக்கும் நிம்மதியையும், வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையுமாம். இப்போதைக்கு இது போதும்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

  1. வாத்தியார் ஐயாவுக்கும், சக தோழர்களுக்கும் அடியேனின் ஜய வருட வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    ஆற்காடு சீதாராமையர் பஞ்சாங்கம் பல நல்ல தக‌வல்களுடன் அமைந்துள்ளது.
    கிரஹ மாற்றங்களுக்கு (கோள்சாரம்) ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கட்டமாக‌ 365 கட்டங்கள் அமைத்து ஒரே இடத்தில் கொடுத்துள்ளார்கள்.

    மேலும் வருடத்தின் அனைத்து நாட்களுக்கும் லக்கின ஆரம்பம் முடிவு அட்டவணையாக்கி அளித்துள்ளார்கள்.விலை 79.30. (2007ல் விலை48.70)

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    தங்க‌ளுக்கும் வகுப்பறை மூத்தோர்க்கும் நண்பர்களுக்கும் இனிய தமிழ்
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


    நன்றி
    ல ரகுபதி

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய ஆசிரியருக்கும் வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. நித்திரையை கலைக்கும்
    சித்திரையே நமக்கு புத்தாண்டு

    ஜெயவருடம் இவரை
    ஜெயிக்க வைக்குமா என

    காத்திருக்கின்றோம் இவரை போல
    கால மாற்றம் தவிர்க்க முடியாததே

    வாழ்த்துக்கள் உடன்
    வளம் சேர்க்க

    உழைப்பையும்
    உண்மையையும் நம்புவோம்

    வெற்றிகள் எப்போதும்
    மற்றவர்களை புண்படுத்தாபடி

    கைகோர்த்து நடப்போம் இருவர்
    பையிலும் பணம் சேரட்டுமென

    படித்தவை நிலைக்கவும் நல்லன
    படிக்கவும் அருள் கிடைக்கட்டும்

    வளங்களுடன்
    பலமான நலங்கள் சேரட்டும்

    வாழ்த்துக்களும்
    வணக்கங்களும்

    ReplyDelete

  6. வணக்கம்!

    சித்திரைத் திங்கள் செழித்துச் சிறப்புறும்
    நித்திரை நீங்கும் நிலத்து!

    பொன்மகளே வாவென்று போற்றி மகிழ்ந்தீா்!
    பன்னலங்கள் வாய்க்கும் படா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. ஜய வருட - இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. அன்புடையீர்.. வணக்கம்..
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  9. அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வணக்கம் குரு,

    தமிழ் புத்தாண்டு வாழ்த்திர்க்கு நன்றி. உங்களுக்கும், வகுப்பறை மாணவ மணிகளுக்கும் எனது உளம் கனிந்த நல் வாழ்த்துகள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  11. Respected sir,

    My heartful and sincere Tamil New Year wishes to you and all of our classroom students.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  12. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாத்தியார் அய்யா மற்றும் வகுப்பறை சகோதரர்கள் அனைவருக்கும் ஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் சமர்ப்பிக்கின்றோம்.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  14. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. குருவிற்கு வணக்கம், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். - முருகன் சோமசுந்தரம் பிள்ளை.

    ReplyDelete
  16. //இந்த ஆண்டில் தானியங்கள் அதிகமாக விளையுமாம்.//

    அதாவது விளை நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு போகாமல் இருக்கும் பட்சத்தில். (இதற்கு மேல் எழுதினால் அரசியல் பேசுவதாக ஆகிவிடும்)

    வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டே வருக. புதுப் பொலிவைத் தருக.

    ReplyDelete
    Replies
    1. உங்க பிளாக் என்னாச்சு

      Delete
  17. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete

  18. respected sir,

    wishing you a happy and prosperous new year


    Lakshmi Nagarajan

    ReplyDelete
  19. வகுப்பறை முகப்பில் மாற்றம்
    வளர்ச்சியை தந்துள்ளது..

    பெண்கள் முதல் வரிசையில்
    பெருமை சேர்க்க அமைந்துள்ளது

    தொழில் நுட்ப மேம்பாட்டில்
    லேப் டேப்பில் மாணவிகள்..

    பின் வரிசையில் யோசிப்பவர் யார்
    முன் வரிசை மாணவர்

    சிங்கை செல்வர்
    சீர்மிகு ஆலாசியம் அவர்களின்

    வாழ்த்தை எதிர்பார்த்தேன்
    வருவார் வாழ்த்து தருவார் என

    காத்திருக்கின்றேன்
    கனவுகளுடன்... கடமைகளுடன்..

    ReplyDelete
  20. இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. மதிப்பிற்குரிய ஆசிரியருக்கும் வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  22. அனைவருக்கும் ஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா அவர்களுக்கும், வகுப்பறை சக மாணவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    இந்த ஜய‌ ஆண்டு நான் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்று ஆட்சி மாற்றம். அரசியல் பேசுவதாக யாரும் தயை கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம். தெய்வ பக்தியும் தேச பக்தியும் கொண்ட ஒருவர் இந்திய திருநாட்டை ஆண்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வியாழ பகவான் ஜூன் மாதம் முதல் கடகத்தில் உச்ச குருவாக வலம் வரப்போகிறார். மக்களிடையே இதனால் பொதுவாக தெய்வ பக்தி அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  24. thanks for sharing siddhar prediction for the tamil new year

    ReplyDelete
  25. ஐயா அவர்களுக்கும் வகுப்பறையில் உள்ள சக தோழர்,தோழி-களுக்கும்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஜெ.தனலஉஷ்மி.

    ReplyDelete
  26. மதிப்பிற்குரிய ஐயாவிற்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com