6.3.14

Astrology: பறவைகளில் அவர் மணிப்புறா, பாடல்களில் அவர் தாலாட்டு!

 

Astrology: பறவைகளில் அவர் மணிப்புறா, பாடல்களில் அவர் தாலாட்டு!

Quiz 44 உங்களின் பதில்கள்!~

நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகம் கர்ம வீரர் திரு.காமராஜர் அவர்களின் ஜாதகம். வேண்டுமென்றேதான் கொடுத்திருந்தேன். முன்பே பதிவில் இட்ட, அலசிய ஜாதகம்தான். எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் கண்டு பிடிக்கின்றீர்கள் என்று தெரிந்து
கொள்ளும் ஆவலில்தான் மீண்டும் பதிவில் கொடுத்தேன்.

என் ஆர்வம் வீண்போகவில்லை! பத்துப் பேர்கள் அதைக் கண்டு பிடித்து, தங்களின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள்
அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களின் பின்னூட்டங்களை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அத்துடன் அலசலில் ஒரே ஒரு விடை
சரியாக வந்துள்ளது. அதையும் தொடர்ந்து கொடுத்துள்ளேன். அந்த அன்பருக்கும் எனது பாராட்டுக்கள்.கலந்துகொண்ட மற்ரவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
//////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    AS this chart looked very familiar, out of curiosity checked the owner of the chart and it is Mr. K. Kamaraj.
    Since I know who it is I am not participating in the test as it is cheating.
    Honestly, I would have failed even if I have participated in the test.
    Waiting for your analysis.
    Wednesday, March 05, 2014 5:41:00 AM/////

-----------------------------------------------
2
//////Blogger bala subramani said...
    அய்யா,தாங்கள் அளித்துள்ள ஜாதகம் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.அதை தாங்கள் அலசியதை நான் படித்துள்ளேன் அய்யா.பிறந்த
தேதி 15/07/1903.
    Wednesday, March 05, 2014 8:41:00 AM/////
-----------------------------------------------
3
/////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    புதிர் 44 க்குரிய விடை: (ஐயா இது முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களுடயது.) 1.ஜாதகர் படிக்கவில்லை.
    2.திருமணம் ஆகவில்லை.(இரண்டும் மறுக்கப்பட்டஜாதகம்)
    *கடகலக்னம்,கும்பராசி.லக்னம் சுபகர்தாரி யோகத்தில்.லக்னாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில்.லக்னாதிபதி சுபரான சுக்கிரன்
பார்வையில்.லக்கினம்
    சனியின் பார்வையில்.
    *8ல் லக்னாதிபதி மறைவு இளமையில் போராட்டமான,கடினமான‌
    வாழ்க்கையை தந்தது.
    *புதன்(கல்விக்காரகன்)உடன் சூரியன் 12ல் மறைவு.இளவ‌யதில் தந்தையையும் கல்வியையும் இழந்தார்.
    *களத்திர ஸ்தானாதிபதி சனி களத்திரஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று
    இருப்பினும் களத்திரதோசத்தை ஏபடுத்தி திருமணத்திற்க்கு தடை விதித்தார்.kalathira kaarakan sthaanathirku 8 il maraivu.
    *யோககாரகன் செவ்வாயுடன்(5மற்றும் 10க்குரியவன்)6,9க்குரியவனும்
    முழு சுபருமான குருவின் பார்வையையும் பெற்று(தர்மகர்மாதிபதி யோகமாக அமைந்து) வாழ்க்கையின் பின்பாதியில் தமிழக முதல்வராகவும்
ஆனார்.பல
    நல்ல திட்டங்களை நிறைவேற்றிய மாமனிதர்.
    *பிற்காலத்தில் கிங் மேக்கராகவும் திகழ்ந்தவர்.இறுதியில் அரசியல் துறவரம்
    பூண்டவர்.
    நன்றி. ல ரகுபதி
    Wednesday, March 05, 2014 10:01:00 AM/////
-----------------------------------------------
4
////Blogger janani murugesan said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கர்மவீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.
    கல்வி, திருமணம் இரண்டும் மறுக்க பெற்ற ஜாதகம்.
    2க்குடைய சூரியன் 12ல். ஆரம்ப கல்வி, குடும்பம் அமையாமல் போயிற்று.
    7ல் 7,8க்குடைய சனி, சுக்ரன் 2ல் பகை வீட்டில் அதனால் திருமணம் ஆகவில்லை.
    Wednesday, March 05, 2014 11:27:00 AM////
----------------------------------------------
5
//////Blogger bg said...
    பிறந்த நாள் : ஜூலை 15 1903
    கர்ம வீரர் காமராசர் ஜாதகம்.
    புதிர் எண் 1 இல் கொடுக்கப்பட்டு உள்ளது.
    Strength
    Jupiter at 9 is a blessed horoscope.
    3 planets at own house.
    Saturn(7), Jupiter (9) and Mercury (12) at own house.
    8 th house @ papakarthari. It is good.
    12 th house@ Vipareetha raja yoga. It is also good.
    12 – putha aadhitya yoga also there.
    5 th lord and 9 th lord aspecting each other.
    Weakness
    Yogathipathi MA @ 3 with RA and MDI
    Education
    But as per horoscope
    4 th house – aspected by SA.
    Karaka ME at ninth house from 4th.
    4 th house owner also in 2 nd house.(11 nth place).
    So the person expected to get good education.
    Marriage
    SA – at 7nth place delays marriage.
    As karaka VE aspected by lagnathipathi MO , there is chance for marriage.
    Wednesday, March 05, 2014 12:59:00 PM/////
-----------------------------------------------
6
/////Blogger ravichandran said...   
Respected Sir,
    My answer for our today's Quiz No.44:
    1. He had dropped out of school ( in sixth std.)
    2. Marriage was never his cup of tea. ( He had never married) - Marriage was denied.
    Reason 1:
    i) Second house lord Sun is sitting twelfth house from lagna. Its bad.
    ii) Vidyakaraga also is sitting in twelfth house from lagna along with second house lord (Sun). Its worst.
    Because of above mentioned two reasons,his education was not blessed at primary level itself.
    Reason 2:
    i)In seventh house, Saturn is sitting. It's Kalathra dhosa.
    ii) Second house (family)lord is sitting twelfth house from lagna. Hence family life was not blessed. He had not married.
    In short, This is the horoscope of late Shri Kamarajar (Karma veerar)
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 05, 2014 1:25:00 PM//////
-----------------------------------------------
7
//////Blogger இளைய பல்லவன் said...
    ஐயா வணக்கம்!
    15.07.1903ல் பிறந்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர், கர்ம வீரர் காமராஜரின் ஜாதகம்.
    இந்த ஜாதகம் ஏற்கனவே 19.8.2013 அன்று முதல் புதிராகக் கேட்கப்பட்டுள்ளது.
    பதில்கள்:-
    1. 11 வயதிற்கு மேல் பள்ளிக்குச் செல்லாதவர்.
    2. திருமணமாகாதவர்.
    அலசல்கள்:-
    1. கல்விக்குக் காரகன் புதன் 12ல் மறைவு. ஆட்சி வீடாயினும், சனியின் பார்வையால் பள்ளி செல்ல இயலாத நிலை. மேலும் 4ம் இடத்து அதிபதி
சுக்கிரன் பகை வீட்டில்.
    2. 7ம் வீட்டில் ஆட்சி பெற்ற சனி. 2ல் கடக லக்கினத்திற்கு பாதகாதிபதியான, களத்திரகாரகன் சுக்கிரன். இவர்கள் இருவரும் திருமண
யோகத்தைத் தடுத்து நிறுத்தினர்.
    ஆனால் மேற்கூறிய காரணங்களே, அவர் பெருந்தலைவராவதற்கும் பேச்சாற்றலில் சிறந்து விளங்கியதற்கும் காரணங்களாயின. 9ல் சேர்க்கை
பெற்ற குருவும் கேதுவும், அவருக்கு 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
    நன்றி அய்யா!!
    இளைய பல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்.
    Wednesday, March 05, 2014 4:16:00 PM//////
-------------------------------------------------
8
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ NO. 44
    வணக்கம்.
    1. திண்னை பள்ளிக்கூடத்தில் படித்தவர். 11 வது வயதில் படிப்பை நிருத்தியவர் (1914) கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்
    2. திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்
    15.07.1903 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு கடக லக்கினத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். திரு. காமராஜர் அவர்களுடைய ஜாதகம்.
    லக்கினாதிபதி சந்திரன்(4 பரல்) 8ல் பாபகர்தாரி யோகத்தில் (9ல் கேது, 7ல் சனி)
    கடக லக்கினகாரர்களுக்கு குரு எந்த வித யோகத்தையும் தரகூடியவர் அல்ல. நன்மை செய்ய கூடிய சுக்கிரனும் பகை வீட்டில் சென்று
அமர்ந்துவிட்டான்.
    யோககாரன் செவ்வாய் மட்டுமே. செவ்வாய் அவரை முதல் அமைச்சராக்கினான்.
    அந்த காலகட்டத்தில் 7 வயதில்தான் பள்ளிகூடம் செல்ல அனுமதிப்பார்கள்.இந்த ஜாதகருக்கு 7 வயது முதல் 25 வயது வரை சனி தசை. இந்த
ஜாதகருக்கு சனி வக்கிரம்.
    4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் பகை வீடான சிம்ம ராசியில் 2ம் வீட்டில். கர்மகாரகன் சனிக்கு 8ல் சுக்கிரன் இருக்கலாகாது (8/6) .கல்விக்கு
தடங்கள். சனியின் 10ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருப்பதால் கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
    5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 3ம் வீட்டில் ராகு, மாந்தியுடன் கூட்டு. 9ம் வீட்டினில் உள்ள வக்கிரமான் குருவின் 7ம் பார்வையால் கல்விக்கு மேலும்
தடங்கள். வில்லனான 6ம் வீட்டு அதிபதி குருவின் பார்வை 5ம் வீட்டு அதிபதி மீது.
    2ம் வீட்டு அதிபதி சூரியன் லக்கினத்திற்க்கு 12ல் மேலும் காரகன் புதனுடன் கூட்டு 12ல். கல்விக்கான நஷ்ட்டம்.
    ஆகவே கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
    திருமண யோகத்திற்க்கு எதிரான அமைப்புகள்.
    லக்கினாதிபதி 8ல் பாபகர்தாரி தோஷம், 7ம் வீட்டு அதிபதி சனி 7ல், 2ம் வீட்டு அதிபதி சூரியன் 12ல் பலம் குறைந்து 3 பரல்களுடன்,
களத்திரகாரகன் சுக்கிரன் பகை வீட்டில்.
    சனி, சுக்கிரன் 8 / 6 பார்வை 2ம் வீட்டின்மீது இருப்பதால் குடும்பம் இருக்காது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, March 05, 2014 5:01:00 PM/////
------------------------------------------------
9
/////Blogger dhana lakshmi said...
    Quiz-44

    1. கல்விகாரகன் புதன் 12-ல், அது கல்விக்கு உகந்த இடமல்ல. லக்கினாதிபதி மறைவு, சூரியன் 2மிடம் குடும்பம்,வாக்கு இடத்திற்கு உரியவரும்
மறைவு. எனவே பள்ளிபடிப்பு தடைபட்டிருக்கும்.
    2.திருமணம் இல்லை. 7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் குடும்ப வாழ்க்கை இல்லை.
    இந்த ஜாதகத்திற்குரியவர் கர்மவீரர் காமராஜர் - 15-07-1903
    காமராஜரைப் பற்றி அறியாதவர் யார் இருக்க முடியும்?
    சுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்டவர்.
    Regards
    J.Dhanalakshmi
    Wednesday, March 05, 2014 11:15:00 PM/////
------------------------------------------------
10
Blogger thozhar pandian said...
    கர்ம வீரரின் ஜாதகம். வாத்தியார் அய்யா மன்னிக்கவும். இந்த ஜாதகத்தை ஏற்கனவே பார்த்ததினாலும் இவர் எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி என்பதாலும், எனக்கு தெரிந்துவிட்டது. அதனால் எனக்கு இந்த புதிருக்கு மதிப்பெண்கள் வேண்டாம். இருந்தாலும் அலச
விரும்புகிறேன்.
    இலக்கினாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் போராட்டமான வாழ்க்கை. 7 வயதில் இருந்து 26 வயது வரை ஜாதகருக்கு சனி தசை. அதன் பிறகு
வரும் புதன் தசையில் இருந்துதான் ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு ஒளி பிறந்திருக்கும்.
    4ம் வீட்டுக்கார சுக்கிரன் அந்த வீட்டிற்கு 11ல் இருந்தாலும் கல்விகாரகர் புதன் ஆட்சி வீட்டில் இருந்தாலும் இலக்கினத்திற்கு 12ல் மறைவு. 4ம்
வீட்டிற்கோ, 4ம் வீட்டு அதிபதிக்கோ சுப கிரக பார்வை இல்லை. அதனால் கல்வி இல்லை.
    7ல் சனி. சொந்த வீட்டில் இருந்தாலும் களத்திரகாரகர் சுக்கிரன் 7ம் வீட்டிற்கு 8ல் மறைவு. 7ம் வீட்டிற்கு சுப கிரக பார்வை இல்லை. 2ல்
சுக்கிரன் இருந்தாலும் 2ம் வீட்டுக்கார சூரியன் இலக்கினத்திற்கு 12ல் மறைவு. அதனால் திருமணம் நடைபெறவில்லை.
    கடக இலக்கினம். அரசியலில் ஈடுபட்டார். 9ல் குரு இலக்கினத்தை தனது விசேஷ பார்வையில் வைத்திருக்கிறார். அழியா புகழ் பெற்றார்.
    கல்வி, திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். என்ன இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன‌, கர்ம வீரரை போல வருமா? வாழ்க கர்ம வீரரின்
புகழ்.
    Thursday, March 06, 2014 1:42:00 AM
--------------------------------------------------
==============================================================
அலசலில் வந்த சரியான விடை:
1
/////Blogger Srinivasa Rajulu.M said...
    ஆம். அய்யன் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டவர்; லக்னாதிபதி எட்டில் பாபகர்த்தாரியில் மாட்டியிருக்கிறார். சுக்கிரன் பார்வையினால் ஓரளவு
நிம்மதி.
    1) படிக்கும் காலத்தில் வந்த வக்ர சனியும், பன்னிரண்டில் மறைந்த கல்வி காரகனும் ஆரம்பக் கல்வியைக்கூட கொடுக்கவில்லை. ஆனால்
இனிமையாக உலக விஷயங்களைப் பேசும் ஆற்றலை இரண்டில் நின்ற சுக்கிரன் கொடுத்தார்.
    2) ஏழில் நின்ற சனியும், பகை வீட்டில் நின்ற களத்திர காரகனும், அடுத்தடுத்து வந்த (களத்திரத்திற்குச்) சாதகமில்லா தசைகளும் திருமணத்தைத் தரவில்லை.
    மூன்றாம் இடத்தில் நின்ற க்ரூர கிரகங்கள் அசாத்திய தைரியத்தைக் கொடுத்திருக்கும்.
    Wednesday, March 05, 2014 8:23:00 AM/////
-------------------------------------------------------
வாத்தியாரின் அலசல்:


 அவர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது!

லக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல் உற்றார். போராட்டமான  வாழ்க்கை அமைந்தது.

சூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது.
'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்”
என்னும் பழமொழி அவர் விஷயத்தில் உண்மையானது.

அத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல!

7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி,  மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போயிற்று.

ஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம்  இருந்தது. அது அவருக்குப் பல  வழிகளில் கை கொடுத்தது.

ஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குரு சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக்  கவனியுங்கள். அவை இரண்டும் அவருக்கு புத்தி சாதுர்யத்தையும்,சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும்  பெற்றுத்தந்ததுடன், எடுத்த காரியங்களில் வெற்றிகளையும் பெற்றுத்தந்தன!

இரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி பலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.இரண்டும்  திரிகோண, கேந்திர பலத்துடன் இருப்பதையும் பாருங்கள் அவைகள் அவருக்குத் தலமைப் பதவியைப் பெற்றுத்  தந்தன.

கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான 3 ஆம்
இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான  பாக்கியஸ்தானத்தைப் பார்த்ததால் பல
யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.

பாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி தசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல் அமைச்சர் பதவியைத் தந்துவிட்டுப்போனது!

இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் -அதுவும் குறிப்பாக ராகு  கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும்

அன்புடன்
வாத்தியார்

______________________________________________

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. Oops! Totally out of focus!

    Let me revise with the correct answers!!!

    Thanks sir.

    ReplyDelete
  2. சிறந்த கற்பித்தல் பணி

    ReplyDelete
  3. மிகவும் அருமை.

    ReplyDelete
  4. Respected Sir
    I thought Sani in his own house will not give kalathira dosam like Mars in Mesha/Viruchigam will not give "Sevvai Dosam" even if it is 4th or 7th or 8th or 12th place.
    I guess 2nd lord in 12th place played a bigger role.

    ReplyDelete
  5. ////Blogger G Alasiam said...
    Oops! Totally out of focus!
    Let me revise with the correct answers!!!
    Thanks sir.////

    அதனால் என்ன? விடுங்கள் ஆலாசியம். அடுத்த வாய்ப்புக்களில் பார்த்துக்கொள்வோம்!

    ReplyDelete
  6. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த கற்பித்தல் பணி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger bg said...
    மிகவும் அருமை./////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. Your social service is very good sir thirugnanam s

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com