5.3.14

Astrology: Quiz: காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம்!

 
Astrology: Quiz: காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம்! 

Quiz No.44: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி நான்கு

5.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்வி. அந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அய்யனின் ஜாதகம். இளமைக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட ஜாதகம். இளமைக் காலத்தில் கண் கலங்காத நிலைதான் முக்கியம். வயதான காலத்தில் மனம் பக்குவப்பட்டுவிடும். எதற்கும் கலங்காத நிலை வந்துவிடும்.

கேள்விகள்:
1. ஜாதகரின் கல்வி நிலைப்பாட்டை அலசி எழுதுங்கள். அதாவது அவர் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டுவரை படித்தவரா அல்லது பட்டதாரியா? அல்லது உயர்நிலை பட்டதாரியா? என்று எழுதுங்கள்
2.ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா? அல்லது திருமணம் கூடி வந்து, ஜாதகர் தன் வாழ்க்கைத் துணையை, காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம்! என்று வர்ணித்துப்பாடிய ஜாதகமா?

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

 அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

35 comments:

  1. Respected Sir
    AS this chart looked very familiar, out of curiosity checked the owner of the chart and it is Mr. K. Kamaraj.

    Since I know who it is I am not participating in the test as it is cheating.

    Honestly, I would have failed even if I have participated in the test.

    Waiting for your analysis.

    ReplyDelete
  2. Result:
    1) The native had less education, he would have completed primary schooling. The native is a clever person had interest in arts and good creativity because of mutual aspects of moon and venus.

    2) The native has delayed marriage after the age of 30.The spouse may be more matured or of same age as the native. The native had unhappy married life because of weak 2nd house and 7th lord's coownership of 8th house.

    Reason for studies:
    1) 2nd lord sun in 12th house with vidyakaraka also in the 12th house. few good points are budha adithya yogam in 12th house(weak) and venus(Subhagraha) in 2nd house would have enabled him to complete primary schooling (basic education).
    2) Saturn in 7th house would have caused delay in marriage. Sukra kalatrakaraka in 2nd house(enemy house) also caused delay. He would have got married at Budha dhasa sukra bukthi.

    This is a tricky horoscope to interpret, Waiting for the answers from Sir.

    ReplyDelete
  3. ஆம். அய்யன் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டவர்; லக்னாதிபதி எட்டில் பாபகர்த்தாரியில் மாட்டியிருக்கிறார். சுக்கிரன் பார்வையினால் ஓரளவு நிம்மதி.

    1) படிக்கும் காலத்தில் வந்த வக்ர சனியும், பன்னிரண்டில் மறைந்த கல்வி காரகனும் ஆரம்பக் கல்வியைக்கூட கொடுக்கவில்லை. ஆனால் இனிமையாக உலக விஷயங்களைப் பேசும் ஆற்றலை இரண்டில் நின்ற சுக்கிரன் கொடுத்தார்.

    2) ஏழில் நின்ற சனியும், பகை வீட்டில் நின்ற களத்திர காரகனும், அடுத்தடுத்து வந்த (களத்திரத்திற்குச்) சாதகமில்லா தசைகளும் திருமணத்தைத் தரவில்லை.

    மூன்றாம் இடத்தில் நின்ற க்ரூர கிரகங்கள் அசாத்திய தைரியத்தைக் கொடுத்திருக்கும்.

    ReplyDelete
  4. அய்யா,தாங்கள் அளித்துள்ள ஜாதகம் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.அதை தாங்கள் அலசியதை நான் படித்துள்ளேன் அய்யா.பிறந்த தேதி 15/07/1903.

    ReplyDelete
  5. Respected Sir,

    Kadaga lagnam adhipathy Chandran 8-il and 7-il aatchi petra sani and avaradhu 10-m paarvai 4-il. 4-m adhipathy Sukran 2-il.

    Guru dhasa mudindhaudan Sani dhasa avar Kalviyai thadai seithiruppar. and Budhan 12-il. He is a School Droupout.

    Sani 7-il indicates Late marriage. Guru dhasa and Sani dhasa mudindhaudan Budhan Dhasa, Budhan dhasavil subha virayam(Marriage Nadandhirukkum) kudumbasthanathil amarndha sukra bukthiyil thirumanam nadai peruvadharku vaipugal ulladhu aanal Dhasa nadhanukku bukthi nadhan 3-il iruppadhal nadandhirukkuma endru theriyavillai but budhanukku chandran 9il and chandranukku budhan 5-il so kattayam thirumanam chandran bukthiyil nadandhirukka vaipugal miga adhigam..

    Thank You.

    ReplyDelete
  6. லக்னாதிபதி சந்திரன் எட்டில். கல்விக்காரகன் குரு கேதுவுடன் கூட்டணி. ராகு செவ்வாய் பார்வை. நான்காம் அதிபதி சுக்ரன் இரண்டாம் வீட்டில் (4இற்கு 11-ல்) . லக்னாதிபதி பார்வை இருக்கிறது. ஆனால் சனியின் பார்வை நான்காம் வீட்டிற்கு. புத்திகாரகன் புதன் 12-ம் வீட்டில் அதனால் பள்ளி படிப்பை தாண்டுவதே கஷ்டம்.
    ஏழாம் அதிபதி சனி ஏழில். களதிரகாரகன் சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில். அதனால் திருமணம் நடந்து அதனால் குடும்ப வாழ்க்கை சுகப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  7. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    புதிர் 44 க்குரிய விடை: (ஐயா இது முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களுடயது.) 1.ஜாதகர் படிக்கவில்லை.
    2.திருமணம் ஆகவில்லை.(இரண்டும் மறுக்கப்பட்டஜாதகம்)

    *கடகலக்னம்,கும்பராசி.லக்னம் சுபகர்தாரி யோகத்தில்.லக்னாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில்.லக்னாதிபதி சுபரான சுக்கிரன் பார்வையில்.லக்கினம்
    சனியின் பார்வையில்.

    *8ல் லக்னாதிபதி மறைவு இளமையில் போராட்டமான,கடினமான‌
    வாழ்க்கையை தந்தது.

    *புதன்(கல்விக்காரகன்)உடன் சூரியன் 12ல் மறைவு.இளவ‌யதில் தந்தையையும் கல்வியையும் இழந்தார்.

    *களத்திர ஸ்தானாதிபதி சனி களத்திரஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று
    இருப்பினும் களத்திரதோசத்தை ஏபடுத்தி திருமணத்திற்க்கு தடை விதித்தார்.kalathira kaarakan sthaanathirku 8 il maraivu.

    *யோககாரகன் செவ்வாயுடன்(5மற்றும் 10க்குரியவன்)6,9க்குரியவனும்
    முழு சுபருமான குருவின் பார்வையையும் பெற்று(தர்மகர்மாதிபதி யோகமாக அமைந்து) வாழ்க்கையின் பின்பாதியில் தமிழக முதல்வராகவும் ஆனார்.பல
    நல்ல திட்டங்களை நிறைவேற்றிய மாமனிதர்.

    *பிற்காலத்தில் கிங் மேக்கராகவும் திகழ்ந்தவர்.இறுதியில் அரசியல் துறவரம்
    பூண்டவர்.

    நன்றி. ல ரகுபதி

    ReplyDelete
  8. மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி நாற்பத்தி நான்கிற்கான பதில்

    1. சனி திசை மற்றும் சனியின் 10 ம் பார்வை 4 ம் வீட்டின் மேல்.4 ம் வீட்டின் அதிபதி 2 ல் இருப்பதால்
    பள்ளி இறுதியாண்டுவரை படித்து இருப்பார்.
    2. களத்திரகாரன் 2 ல் இருப்பதாலும், 7 ஆம் இடத்து அதிபதி 7 ல் இருப்பதாலும் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    தாமத திருமணம்.
    சந்திரன் சுக்கிரனை பார்பதினால் அன்பான மனைவி கிடைத்து இருப்பார்கள்.


    இப்படிக்கு
    மு.சாந்தி

    ReplyDelete
  9. கேள்வி 1க்கான பதில்.

    *4ம் வீட்டில் தீய கிரகம் இல்லை.
    *4ம் வீட்டில் சனியின் பார்வை விழுகிறது.
    (சனி சுக்ரனின் நண்பன் அதோடு சனி 7க்கும் , 8க்கும் உரியவன் பெரும் பாதகனாக இருக்க மாட்டான்)

    *4 ற்கு உரிய சுக்ரன் அந்த வீட்டிற்கு 11 ல். அவனும் லக்னாதிபதியான சந்திரனின் பார்வையைப் பெறுகிறான்.
    கல்விக்கான கிரகம் புதன் உச்சம் பெற்றும், 2 ற்கு உரிய சூரியனோடு கூட்டு
    இவர்கள் இருவரும் 4ஆம் வீட்டிற்கு 9ல் இருப்பது சிறப்பு.

    *ஜாதகர் கட்டிட அல்லது ஏதாவது கட்டமைப்புத் துறையில் வடிவமைப்பு / சட்டதிட்ட வரையரையாளராக வரும் அளவிற்கான உயர் கல்வி துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

    *பத்திற்கு உரியவன் செவ்வாய் (நெருப்பு / ரத்தம்) ராகுவோடு (விஞ்ஞானம் / கெமிக்கல்) கூட்டாக இருப்பதால் (குருவின் பார்வையும் பெற்று) மருத்துவத் துறை ஆய்வாளர் / கணக்கராகவும் இருக்கும் அளவிற்கு சென்று இருக்கணும்.
    ++++++++++++++++++++++++++++++++++

    கேள்வி 2ற்கான பதில்.

    *லக்னம் கடகம் லக்னத்தை ஒன்பதிலே ஆட்சி பெற்ற குரு தனது பலமான ஐந்தாம் பார்வையில் வைத்து இருக்கிறான்.

    *அதே குரு ஐந்தாம் இடத்தையும் பார்வையில் வைத்து இருக்கிறான்
    ஐந்திற்கு உரியவன் அந்த வீட்டிற்கு ஒன்பதிலே இருக்கிறான்.

    *5.ற்கு கேந்திரத்தில் லக்னாதிபதியும் ஐந்திலே குருவும் இருப்பது ஒப்பு நோக்கியும்,

    *7ற்கு உரியவன் ஆட்சி பெற்றும் அவனுக்கு இரண்டில் சந்திரன் இருப்பதும்

    *7ற்கு உரிய சனி தனது பார்வையில் லக்னத்தை வைத்திருப்பதும் என்றும் ஒப்பு நோக்கினால்

    *குடும்பம் உண்டு...
    (சகோதரம் இருந்தும் உறவில் பாதகம் இருக்கும்)

    *திருமணம் நிச்சயம் உண்டு.

    *பொதுவாக குரு ஒன்பதில் இருப்பதனால் இந்த பாக்கியங்கள் எல்லாம் நிச்சயம் இருக்கும். அதுவும் அந்த வீடுகள் கடுமையாக வேறு வகையில் பாதிக்காத போது.

    +++இதிலே இளமையில் வறுமை ஞானம் இவைகள் எல்லாம் எதற்காக...+++

    *சூரியன் 12ல், சந்திரன் எட்டில் (இரண்டு ராஜாக்களும் மறைவு ஸ்தானத்தில்)

    *9ல் குரு அதனால் அந்த வீட்டில் குருவின் பார்வை இல்லை.. காரக தோஷம்.

    *கேது 9ல் தந்தையாரும் (பெரும்பாலும் இல்லை / இருந்தும் இல்லை) உபயோகம் இல்லை
    அப்படி இருப்பாரானால் தந்தை வழி உறவு சொத்துக்கள் மறுக்கப் பட்டும் இருந்து இருக்கணும்.

    *9ற்கு 12ல் சந்திரன் மேலும் சனியின் 3ம் பார்வையும் பெறுகிறது.

    +++பாக்கியம் கெட்டதால் இளமை கொடுமையாக இருந்து இருக்கும்+++

    *வெளி நாட்டிலோ அல்லது பிறந்த இடத்தில் இருந்து; வெகு தூரத்திலோ படிப்படியாக முன்னேறி மத்திம வயதில் சுகமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.

    *ஆக, இளமையில் வறுமை புரட்டிப் போட்டாலும்...

    *மிக உயர் கல்வி உண்டு....

    *சுக்ரன் (சந்திரன் பார்வை பெற்று) நன்றாக இருக்கிறான்... 7ற்கு உரியவன் நன்றாக இருக்கிறான்.
    அதனால் அவர் தனது துணைவியோடு காலங்களில் வசந்தம், கலைகளில் ஓவியம் என்று பாடி மகிழ்ந்திருப்பார்!

    என்பதே எனது கணிப்பு ஐயா!
    நன்றி!

    ReplyDelete
  10. வெற்றி பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    நன்றி...

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய ஐயா,
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கர்மவீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.
    கல்வி, திருமணம் இரண்டும் மறுக்க பெற்ற ஜாதகம்.
    2க்குடைய சூரியன் 12ல். ஆரம்ப கல்வி, குடும்பம் அமையாமல் போயிற்று.
    7ல் 7,8க்குடைய சனி, சுக்ரன் 2ல் பகை வீட்டில் அதனால் திருமணம் ஆகவில்லை.

    ReplyDelete
  13. Dear Sir,

    1. The person did not study beyond school level.

    4th lord in enemy place. Lagna lord in 8th place and aspects 4th lord sukran. Also Mars and ragu next to 4 th place.

    2.The person married late. Not happy in family life.

    7th lord in 7th sani own place and aspects lagna. Strong 7th lord. 2nd lord in 12th place friendly sign. So Family life will be with some problems. Lagna lord also does not support since it is in 8th place. Placement of sukran in 2nd place gives wealth, but in enemy place here.
    5th lord also does not support to marry, placed in enemy place with ragu and mandhi. Sani is also 8th lord placed in 7th. sani aspects kethu. Sani aspects 9th lord guru. Also guru is alongwith kethu. 2nd lord is with 12 th lord.

    ReplyDelete
  14. dear sir...
    aiyan patithavar. pattam petravar !!!

    aiyan tirumanam anavar !!!

    7 el sani aatchi, 2 el sukran athanaal tirumanam anavar.

    4 am athipathi 2 el eruppathum
    pudhan aatchi petrathun
    2 am athipathi suriyan pudhanutan
    enainthu puthathihya yokam petrathun
    kalvi karka vaithirugkum !!!
    sani thisaiel siramathai koduthirugkum
    astamathipathi sani. sara raasiel ninru thisai natathiyathal.
    7 vayathugku mel siramathai koduthirugkum
    guru 9 el erunthu lagnathi paarthadal meendu vanthiruppaar
    bye...

    ReplyDelete
  15. பிறந்த நாள் : ஜூலை 15 1903
    கர்ம வீரர் காமராசர் ஜாதகம்.
    புதிர் எண் 1 இல் கொடுக்கப்பட்டு உள்ளது.
    Strength
    Jupiter at 9 is a blessed horoscope.
    3 planets at own house.
    Saturn(7), Jupiter (9) and Mercury (12) at own house.
    8 th house @ papakarthari. It is good.
    12 th house@ Vipareetha raja yoga. It is also good.
    12 – putha aadhitya yoga also there.
    5 th lord and 9 th lord aspecting each other.
    Weakness
    Yogathipathi MA @ 3 with RA and MDI
    Education
    But as per horoscope
    4 th house – aspected by SA.
    Karaka ME at ninth house from 4th.
    4 th house owner also in 2 nd house.(11 nth place).
    So the person expected to get good education.
    Marriage
    SA – at 7nth place delays marriage.
    As karaka VE aspected by lagnathipathi MO , there is chance for marriage.

    ReplyDelete
  16. Respected Sir,

    My answer for our today's Quiz No.44:

    1. He had dropped out of school ( in sixth std.)

    2. Marriage was never his cup of tea. ( He had never married) - Marriage was denied.

    Reason 1:
    i) Second house lord Sun is sitting twelfth house from lagna. Its bad.

    ii) Vidyakaraga also is sitting in twelfth house from lagna along with second house lord (Sun). Its worst.

    Because of above mentioned two reasons,his education was not blessed at primary level itself.

    Reason 2:
    i)In seventh house, Saturn is sitting. It's Kalathra dhosa.

    ii) Second house (family)lord is sitting twelfth house from lagna. Hence family life was not blessed. He had not married.

    In short, This is the horoscope of late Shri Kamarajar (Karma veerar)

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  17. ayya, kalvi thadaipatta jaathagam. athigapatcham 6m vaguppu varai padithiruppaar. Kaaranam Adutha dasa naathan sani matrum kalvi kaaragan budhan 6-8 nilayil ullaargal. Adhu mattumindri, 4m veettu athipathy, sukkiran matrum sani 6-8 nilayil ullaargal. Idhu kalvi nilaikku nalla amaippu alla. Aaanal, thirumanam nadandirukkum. kaaranam lagnathirukku 8il lagnathipathy chandran marainthaalum, lagnathipathy chandiran matrum kalathirakkaaragan sukkiran oruvarai oruvar 7m paarvayil paarkindrargal. Kalathirakaaragan 2il pagai veettil irundhaalum,Lagnathipathy chandiran sukkiranai 7m paarvaiyil paarpadhaal, kandippaaga thiruman nadandirukkum. Matrum, 7m athipathy sani 7il than sondha veettil iruppadhaal sani thisay, guru puthiyil thirumanam nadandirukka athiga vaaippullathu. kaaranam, paagyaathipathy guru 9il than sondha veettil irundhu kondu lagnathai than paarvaiyil vaithullaar.
    Anbudan,
    Mu.Prakaash.

    ReplyDelete
  18. (1) படிப்பு: லக்னத்திற்கு இரண்டிற்கு உரிய சூரியன் மற்றும் மூன்றுக்கு உரிய புதன் பன்னிரண்டிலும், ஐந்துக்கு உரிய செவ்வாய் (கடக லக்னத்திற்குரிய யோக காரகன்) மூன்றிலும் மறைவு. ஆகவே பள்ளிப் படிப்புக்கே வாய்ப்பு கிடையாது. (2) திருமண வாழ்க்கை: களத்திரகாரகன் ஐந்து பரல்களுடன் குடும்ப ஸ்தானத்திலும், ஏழுக்குரிய சனி சொந்த வீட்டில் ஐந்து பரல்களுடன் லக்னத்தைத் தன் நேரடிப் பார்வையில் வைத்திருப்பதாலும், கண்டிப்பாக திருமணம் உண்டு. பெரும்பாலும் சனி தசையில் சுக்கிர புத்தியில் (1933 to 1936) திருமணம் நடந்திருக்க வேண்டும். ஜாதகர் பிறந்தது 14-௦7-19௦3 at ௦6:௦5 AM. (பிறந்த இடம் சென்னை என்று கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது). ஆசிரியர் கடக லக்ன பாடத்தில் கூறிய உள்ள 'கடக லக்னத்திற்கு குரு எந்த யோகத்தையும் தரகூடியவன் அல்ல' என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் திரிகொணத்தில் (9) உள்ள குரு 9 - ஆம் பார்வையாய் 5 - ஆம் இடத்தை பார்ப்பதால் குடும்பம், குழந்தை கொடுக்கவேண்டும் பொறுப்பு உண்டு. கொசுறு: (1) பத்தாம் பாவத்தில் உள்ள 38 பரல்கள் ஜாதகருக்கு நல்ல வேலையை கொடுக்கும் (2) லக்னத்தில் உள்ள 3௦ பரல்கள் ஜாதகரை சிறந்த தன்னம்பிக்கை உடையவராக உருவாக்கும் (3) ஆசிரியர் பழைய அஷ்டவர்க்க பாடங்களில் கூறியுள்ளபடி, மறைவு ஸ்தான பரல்கள் 3+6+8+12 =1௦5 பரல்கள். கேந்திர பரல்கள் 1+4+7+1௦=125. திரிகோண பரல்கள் 1+5+9=86. கேந்திர பரல்களை விட மறைவு ஸ்தான பரல்கள் குறைவாக அதற்கேற்றவாறு பலன்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  19. 1.Jathagar Uyar Nilai Patathari.4 ku uriya Sukiran 2 - il.Higher Studies ku undana 9 il Guru (atchi)+ Kethu.So Research study ethavathu panna vaipu undu.Kalvikaragan Bhudan 12-il Irunthalum avan Atchi.So nantraga paditu irupar.

    2.Nalla thirumana valkai.7 am athipathi Atchi.Avar Sani yaga irupathal thirumanam sirithu late aga nadai petru irukalam.Anal sani dasakul thirumanam mudinthu irukum..Kagaragan Sukiran 2 il pagai.Sukiran methu lagna athipathi parvai.So thirumana valkai nandraga irunthu irukum.

    ReplyDelete
  20. ஐயா வணக்கம்!

    15.07.1903ல் பிறந்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர், கர்ம வீரர் காமராஜரின் ஜாதகம்.

    இந்த ஜாதகம் ஏற்கனவே 19.8.2013 அன்று முதல் புதிராகக் கேட்கப்பட்டுள்ளது.

    பதில்கள்:-
    1. 11 வயதிற்கு மேல் பள்ளிக்குச் செல்லாதவர்.
    2. திருமணமாகாதவர்.

    அலசல்கள்:-

    1. கல்விக்குக் காரகன் புதன் 12ல் மறைவு. ஆட்சி வீடாயினும், சனியின் பார்வையால் பள்ளி செல்ல இயலாத நிலை. மேலும் 4ம் இடத்து அதிபதி சுக்கிரன் பகை வீட்டில்.

    2. 7ம் வீட்டில் ஆட்சி பெற்ற சனி. 2ல் கடக லக்கினத்திற்கு பாதகாதிபதியான, களத்திரகாரகன் சுக்கிரன். இவர்கள் இருவரும் திருமண யோகத்தைத் தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் மேற்கூறிய காரணங்களே, அவர் பெருந்தலைவராவதற்கும் பேச்சாற்றலில் சிறந்து விளங்கியதற்கும் காரணங்களாயின. 9ல் சேர்க்கை பெற்ற குருவும் கேதுவும், அவருக்கு 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.

    நன்றி அய்யா!!

    இளைய பல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்.

    ReplyDelete
  21. அய்யா,
    ஜாதகருக்கு 25-ஆவது சனி திசை குரு புத்தியில் திருமணம் நடந்து இருக்கும்,
    படிப்பு :-
    பள்ளி படிப்பை முடித்து இருக்க வாய்ப்பு இல்லை, காரணம் 4-ஆம் அதிபதி சுக்கிரன் பகை வீட்டில், கல்வி காரகன் புதன் 12-இல்.

    ReplyDelete
  22. QUIZ NO. 44
    வணக்கம்.
    1. திண்னை பள்ளிக்கூடத்தில் படித்தவர். 11 வது வயதில் படிப்பை நிருத்தியவர் (1914) கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்
    2. திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்

    15.07.1903 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு கடக லக்கினத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். திரு. காமராஜர் அவர்களுடைய ஜாதகம்.

    லக்கினாதிபதி சந்திரன்(4 பரல்) 8ல் பாபகர்தாரி யோகத்தில் (9ல் கேது, 7ல் சனி)

    கடக லக்கினகாரர்களுக்கு குரு எந்த வித யோகத்தையும் தரகூடியவர் அல்ல. நன்மை செய்ய கூடிய சுக்கிரனும் பகை வீட்டில் சென்று அமர்ந்துவிட்டான்.

    யோககாரன் செவ்வாய் மட்டுமே. செவ்வாய் அவரை முதல் அமைச்சராக்கினான்.

    அந்த காலகட்டத்தில் 7 வயதில்தான் பள்ளிகூடம் செல்ல அனுமதிப்பார்கள்.இந்த ஜாதகருக்கு 7 வயது முதல் 25 வயது வரை சனி தசை. இந்த ஜாதகருக்கு சனி வக்கிரம்.

    4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் பகை வீடான சிம்ம ராசியில் 2ம் வீட்டில். கர்மகாரகன் சனிக்கு 8ல் சுக்கிரன் இருக்கலாகாது (8/6) .கல்விக்கு தடங்கள். சனியின் 10ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருப்பதால் கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.

    5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 3ம் வீட்டில் ராகு, மாந்தியுடன் கூட்டு. 9ம் வீட்டினில் உள்ள வக்கிரமான் குருவின் 7ம் பார்வையால் கல்விக்கு மேலும் தடங்கள். வில்லனான 6ம் வீட்டு அதிபதி குருவின் பார்வை 5ம் வீட்டு அதிபதி மீது.

    2ம் வீட்டு அதிபதி சூரியன் லக்கினத்திற்க்கு 12ல் மேலும் காரகன் புதனுடன் கூட்டு 12ல். கல்விக்கான நஷ்ட்டம்.

    ஆகவே கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.

    திருமண யோகத்திற்க்கு எதிரான அமைப்புகள்.

    லக்கினாதிபதி 8ல் பாபகர்தாரி தோஷம், 7ம் வீட்டு அதிபதி சனி 7ல், 2ம் வீட்டு அதிபதி சூரியன் 12ல் பலம் குறைந்து 3 பரல்களுடன், களத்திரகாரகன் சுக்கிரன் பகை வீட்டில்.
    சனி, சுக்கிரன் 8 / 6 பார்வை 2ம் வீட்டின்மீது இருப்பதால் குடும்பம் இருக்காது.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  23. Respected Sir
    Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
    KADAGA lagnum , kUMBA rasi

    Assessment Of Education:
    LAGNUM:
    1) aspected by Saturn who is the PAVATHIPATHI
    2) ASPECTED BY GURU who is the owner of 6th as well as 9th house
    LAGNATHIPATHI
    1) At 8th house
    2) AT PABAKARTHARI YOGUM
    3) ASPECTED BY VENUS WHO IS AT HIS ENEMY HOUSE
    FOURTH HOUSE:
    Made weak by SATURN WHO IS AT HIS OWN HOUSE
    Fourth house owner Venus at 2ND place ,but at his enemy house. He is at 8/6 position with Saturn
    PREDICTIONS
    Probably the person would have had his education upto high school level.

    Assessment Of Marriage life:
    1) Second house lord at 12th position.Second house aspected by lagnathipathi but who is weak by his position and by PABAKARTHARI YOGUM
    2) SEVENTH HOUSE AFFECTED BY SATURN
    3) No good planets aspecting seventh house
    4) Venus at enemy house
    PREDICTIONS
    The chance of getting married is less. Even if it happens the chance of separation from spouse is high

    Dr.Mohan
    Brunei

    ReplyDelete
  24. மதிப்பிற்குறிய வாத்தியார் அவர்களுக்கு:

    கேள்வி நெம்பர்:44

    1. ஜாதகர் உயர்நிலை பட்டதாரி

    காரணங்கள்:

    அ.கடக லக்னம், கும்ப ராசி, லக்ன அதிபதி சந்திரன் 8ம் வீட்டில் அமர்ந்து 2ம் வீட்டினை(சுக்கிரன்‍‍‍‍‍ கல்வி ஸ்தான அதிபதியை)பார்க்கிறார்.

    ஆ.கல்வி ஸ்தான அதிபதி (4ம் வீடு)சுக்கிரன் 2ம் வீட்டில் உள்ளார் அது அவருக்கு 11ம் இடம்.

    இ.கல்வி காரகன் புதன் சூரியனுடன் இனைந்து 12ம் இடதில் அமர்ந்து "புத ஆதித்ய" யோகம் கொடுக்கிறார்.

    ஈ.லக்கினத்தை 9ம் இடத்து அதிபதி (பாக்கிய ஸ்தானஅதிபதி)"குரு"பார்க்கிறார்.மற்றும் இந்த அமைப்பு "சட்ட கல்வியை" குறிக்கிறது ஆகையால் இவர் "வக்கீல் ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.


    2.ஜாதகருக்கு நிட்சயம் திருமணம் நடந்திருக்கும்.

    காரணங்கள்:

    அ.7ம் இடத்து அதிபதி சனி "ஆட்சி" பெற்று லக்கினத்தினை (7ம் பார்வை) பார்கிறார்

    ஆ.களத்திர காரகன் "சுக்கிரன்" 2ம் இடத்தில் "குடும்ப ஸ்தானதில்" உள்ளார்.(மேலும் இவர் கடக லக்கினத்திற்கு யோகக்காறர்)

    இ.லக்கின அதிபதி "சந்திரன்" 8ம் இடத்திலிருந்து 7ம் பார்வையாக‌ சுக்கிரனை பார்ப்பது முக்கியதுவம் பெறாது.

    ReplyDelete
  25. CLASS-44

    Results:

    Higer educated

    Married but delayed

    Reasons:

    For Education

    1. Sukran - Yogathipathi for kataga lagna placed 2nd house. He wil give all bhagyas. He also 4th and 11th lord

    2. Laknathipathi chandran aspects sukran.

    3. 2nd lord 3rd lord placed in 12th but offered bhutha aaditya yoga.

    For marriage:


    1. There is no use of guru - 6th lord

    2. Laknathipathi chandran placed in sanis house (punarpoo dhosh)

    3. Kalathra karagan sukran aspects chandran

    4. 7th lord sani aspects lagna - delay marriage

    5. Bhuthan dasa offererd marriage yoga - Good wife

    rameshraja1304@gmail.com

    ReplyDelete
  26. 1. நாலாம் வீட்டு அதிபன் சுக்கிரன் 2ல் அம்ர்ந்தாலும் இரண்டு பக்கங்களிலும்
    செவ்வாய்,மாந்தி, ராகு, சூரியனால் லக்கினம் உட்பட சூழ்ந்துள்ளதாலும், புத்திகாரகனான புதன் தன் வீட்டில் அமர்ந்தாலும் லக்கினத்திற்குப் பன்னிரண்டில் மறைந்ததாலும், பெரும்பாலும் சூரியனால் அஸ்தங்கதம் அடைய வாய்ப்பு இருப்பதாலும், ஜாதகர் பள்ளிப்படிப்பைத் தாண்டி இருக்க மாட்டார். 4ம் இடத்திற்கு சனியின் பார்வை வேறு!பள்ளியில் படித்திருப்பார்; ஆனால் அந்தப் படிப்பைவிட அனுபவப்படிப்பே அவருக்கு உதவும்.

    2. லக்னாதிபதியான தேய்பிறைச் சந்திரன் 8ல் மறைந்தது,7ம் இடத்தில் சனி அமர்ந்தது,அதற்கு குரு பார்வை இல்லை, சுக்கிரன் தீய கிரகங்களால் சூழப்பட்டது
    ஆகிட்யவை ஜாதகருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதைக் காட்டுகிறது.
    சுக்கிரன் சந்திரன் நேர்பார்வையில் இருப்பதால் திருமணம் ஆகாவிட்டாலும், திருமணத்தால் உண்டான செளகர்யங்களை அனுபவித்து இருப்பார்.

    ReplyDelete
  27. Respected Sir, Greetings!

    1. As Lagna Lord Moon is in 8th Place and Mercury is in 12th place he definitely had many struggles in education. But, 4th Lord is in 2nd place and Mercury is in own place (though it's in 12th Place), he should have finished his Bachelor Degree.
    2.2nd Lord Sun is in 11th position from 2nd house, Moon is directly looking 2nd house and mainly 7th house lord saturn is own place, he is married also.

    Ravisankar. M

    ReplyDelete
  28. திரு. காமராஜர் ஜாதகத்தில், 2ம் வீட்டு அதிபதி சூரியனும், புதனும் 12ல் ஒன்று சேர்ந்து இருந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான் என்பது ஜாதக விதி.
    இது இல்லாம‌ல் போனத‌ற்க்கு என்ன‌ கார‌ண‌ம் என்று தெரிந்துகொள்ள‌ ப‌ணிவ‌ன்புட‌ன் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  29. தட்டுத் தடுமாறி பள்ளிப் படிப்பு மட்டுமே படித்திருப்பார்.
    லக்னத்திற்கு 12-ல் மறைவு. மேலும் அஷ்டவர்க்த்திலும் பரல்கள்(3) குறைவு. ஆனால் அது புதனின் சொந்த வீடாக இருப்பதால் தடுமாறினாலும் பள்ளிப் படிப்பை முடித்திருப்பார். மனோகாரகன் சந்திரன் 8-ல் மறைவதும் அறிவை குறைப்பதே. இதுவும் கல்விக்கு உகந்தது அல்ல. கண்டிப்பாக பட்டப்படிப்பு படித்திருக்க மாட்டார்.

    7-ல் இருக்கும் சனி கண்டிப்பாக திருமணத்தை தாமதப்படுத்துவார். (மற்ற கிரகங்களும் எதிர் பலன் கொடுத்தால் மட்டுமே தடை படுத்துவார்)

    2-ல் சுக்கிரன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை பெறுவார்.

    ReplyDelete
  30. வணக்கம் அய்யா,
    ஜாதகர் கல்லூரி படிப்பு முடித்திருப்பார். திருமணம் தாமதமாக அதாவது 33 வயதிற்கு மேல் சுக்கிரதிசையில் நடந்திருக்கும்.
    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  31. Quiz-44

    1. கல்விகாரகன் புதன் 12-ல், அது கல்விக்கு உகந்த இடமல்ல. லக்கினாதிபதி மறைவு, சூரியன் 2மிடம் குடும்பம்,வாக்கு இடத்திற்கு உரியவரும் மறைவு. எனவே பள்ளிபடிப்பு தடைபட்டிருக்கும்.

    2.திருமணம் இல்லை. 7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் குடும்ப வாழ்க்கை இல்லை.

    இந்த ஜாதகத்திற்குரியவர் கர்மவீரர் காமராஜர் - 15-07-1903

    காமராஜரைப் பற்றி அறியாதவர் யார் இருக்க முடியும்?

    சுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்டவர்.

    Regards
    J.Dhanalakshmi

    ReplyDelete
  32. He is married and educated.

    Reason for mariage :
    7th god Saturn in his own house.
    he would have gat married in saturn period. His spouse might be opposite to him like in behavoiur, status, etc. So I dont think , he would have sing song... (unhappy married life for him)

    Reason for educated:
    Manthi in the 3 house and 4th house god sukran is not in good position, beoz of this his school education may get spoiled.
    Mecury is in good position and in his own house.
    Sun & mercury conjuction is good sign for master degree & 9th lord guru in his own house this is good sign for higher studies.

    ReplyDelete
  33. 2 மாதங்கள் உங்கள் பாடங்களை படித்த ஆர்வகோளாரினால் விடை எழுதுகிறேன்
    லக்னாதிபதி பார்வை +சுக்ரன் , 7இல் சனி யை மீறி திருமணம் நடத்தி வைத்து Eருக்கும்
    நன்கு படித்தவர்...

    ReplyDelete
  34. கர்ம வீரரின் ஜாதகம். வாத்தியார் அய்யா மன்னிக்கவும். இந்த ஜாதகத்தை ஏற்கனவே பார்த்ததினாலும் இவர் எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி என்பதாலும், எனக்கு தெரிந்துவிட்டது. அதனால் எனக்கு இந்த புதிருக்கு மதிப்பெண்கள் வேண்டாம். இருந்தாலும் அலச விரும்புகிறேன்.

    இலக்கினாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் போராட்டமான வாழ்க்கை. 7 வயதில் இருந்து 26 வயது வரை ஜாதகருக்கு சனி தசை. அதன் பிறகு வரும் புதன் தசையில் இருந்துதான் ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு ஒளி பிறந்திருக்கும்.

    4ம் வீட்டுக்கார சுக்கிரன் அந்த வீட்டிற்கு 11ல் இருந்தாலும் கல்விகாரகர் புதன் ஆட்சி வீட்டில் இருந்தாலும் இலக்கினத்திற்கு 12ல் மறைவு. 4ம் வீட்டிற்கோ, 4ம் வீட்டு அதிபதிக்கோ சுப கிரக பார்வை இல்லை. அதனால் கல்வி இல்லை.

    7ல் சனி. சொந்த வீட்டில் இருந்தாலும் களத்திரகாரகர் சுக்கிரன் 7ம் வீட்டிற்கு 8ல் மறைவு. 7ம் வீட்டிற்கு சுப கிரக பார்வை இல்லை. 2ல் சுக்கிரன் இருந்தாலும் 2ம் வீட்டுக்கார சூரியன் இலக்கினத்திற்கு 12ல் மறைவு. அதனால் திருமணம் நடைபெறவில்லை.

    கடக இலக்கினம். அரசியலில் ஈடுபட்டார். 9ல் குரு இலக்கினத்தை தனது விசேஷ பார்வையில் வைத்திருக்கிறார். அழியா புகழ் பெற்றார்.

    கல்வி, திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். என்ன இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன‌, கர்ம வீரரை போல வருமா? வாழ்க கர்ம வீரரின் புகழ்.

    ReplyDelete
  35. சனி தெசை என்பது திருமணத்திற்கு உகந்நதது அல்ல எனத் தெரிந்தாலும், 2-ம் இட சுக்கிரன் நன்மை செய்யும் என தவறாக எடையிட்டு விட்டேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com