14.2.14

Astrology: Valentine Day வால் அறுந்த தினம்!

 

Astrology: Valentine Day வால் அறுந்த தினம்!

இன்று காதலர்கள் தினம் என்று வெள்ளைக்காரன் பட்டியலிட்டுருக் கிறான்.பர்கர்ரிலிருந்து ப்ளாக் அண்ட் ஒயிட் விஸ்கிவரை நமக்கு வெள்ளைக்காரன் சரக்கு எல்லாம் பிடித்துப்போய்விட்டதால், காதலர் தினத்தையும் நாம் கொண்டாடுவோம்.

ஒளிந்தும் ஒளியாமலும், வீட்டிற்குத் தெரிந்தும் தெரியாமலும், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு வாழ்த்தைச் சொல்லி வைப்போம்.வாழ்க அவர்களுடைய காதல்! வளர்க அவர்களுடைய நேசம்!

நான் காதலுக்கு எதிரியல்ல! எங்கள் காலத்தில் காதலிக்கவெல்லாம் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஒரு பெண்ணைத் தொடர்ந்தால், கடிதம் கொடுத்தால் செருப்படி விழுகும். சடங்கான பெண்களை எல்லாம் தனியாக வெளியே அனுப்பமாட்டார்கள். வீட்டிற்கு யாராவது புதியவர்கள் வந்தால் அவர்கள், ஓடிப் போய் கதவிற்குப் பின்னால் நின்று கொண்டு விடுவார்கள். நடந்து போகின்ற அல்லது கடந்து போகின்ற அழகான பெண்களை அல்லது லட்சணமான பெண்களைத் தூரத்தில் இருந்து ரசிக்கலாம். அது மட்டுமே அக்காலத்தில் சாத்தியம்.

புத்தகங்களிலும், சினிமாக்களிலும் பார்த்த காதல்கள்தான் அந்தக் காலத்து இளைஞர்களுக்குத் தெரிந்த காதல்!

பொன்னியின் செல்வன் தொடரைப் படித்த காலத்தில் வந்தியத்தேவன் குந்தவை நாச்சியாரின் மேல் கொண்ட காதலையும், வானதி, அருள்மொழி வர்மனின் மீது கொண்ட காதலையும் ரசித்து உருகாதவர்கள் இருந்திருக்க முடியாது.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்

(சிட்டுக்குருவி)

பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..

(சிட்டுக்குருவி)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.... ஹோய்..

(சிட்டுக்குருவி)


என்ற பாடலுக்கு செல்வி (அந்தக் காலத்தில் அவர் செல்விதானே) சரோஜாதேவி அபிநயம் பிடித்து முகபாவம் காட்டும்போது மயங்காதவர்களே இருந்திருக்க முடியாது.

காதலைக் கனவில் மட்டும் கண்டவர்களுக்கெல்லாம், கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்தான் அந்தக்காலத்து வேதம்!
-----------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

இப்போது நிலைமை தலை கீழாகி விட்டது. பொறியியற் படிப்பு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை, கைகொள்ளாத அளவிற்கு ஊதியம் என்று எல்லாம் மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் எல்லாம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.

Education
Employment
Economical Freedom
Exposure
Ego


என்று ஐந்து ஈ’க்கள் கிடைத்த வேகத்தில் எல்லாம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. காதலையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.SMS, Face Book, email களில் காதல் செட்டாகிவிடுகிறது. Flipcartல் onlineமூலம் சாமான்கள் வாங்குவதைப் போல காதலை வாங்கிவிடலாம்.

காதலிக்கும்போது தெரியாத பல விஷயங்கள் கல்யாணத்திற்குப் பிறகுதான் தெரியவரும். பையன் தம்’ அடிப்பான், தண்ணியடிப்பான் என்பதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவரும். அதுபோல அம்மணி காலை எட்டு மணிவரைக்கும் எழுந்திருக்க மாட்டாள், சமைக்க மாட்டாள். வீட்டை ஒதுங்க வைக்க மாட்டாள். போட்டது போட்டபடி கிடக்கும். வேளா வேளைக்கு சரவணபவனே கதி என்பதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

தெரிந்தால் என்ன ஆகும்? சகித்துக்கொண்டு போனால், குடும்ப வாழ்க்கை தொடரும். இல்லை என்றால் குடும்ப நீதி மன்றங்களில் முடிவிற்கு வந்துவிடும். இருவரில் ஒருவர் சங்கை எடுத்து ஊதிவிடுவார்கள்.
---------------------------------------------------------------------
அடிப்படையாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

காலதேவன் ஒரு மோசமான Match Maker. அவன் ரயிலையும் தண்டவாளத்தையும்தான் ஜோடி சேர்ப்பான். ரயிலுக்கு ரயிலைச் சேர்க்கமாட்டான். வண்டி எப்படி ஓடும்? கணவன் ரயில் என்றால், மனைவி தண்டவாளமாக இருப்பாள். மனைவி ரயில் என்றால், அவளுக்கு வரும் கணவன் தண்டவாளமாக இருப்பான்.

Made for each other சேர்க்கை எல்லாம் சினிமாவில் மட்டும்தான். வாழ்க்கையில் இருக்காது. லட்சத்தில் ஒரு ஜோடி இருக்கலாம். அது அவர்கள் வாங்கி வந்த வரம். Exemption will not become example
---------------------------------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் பல, காதல் சம்பந்தப்பட்டதாக இருக்கும். எங்கள் காதல் நிறைவேறுமா என்று பார்த்துச் சொல்லுங்கள்...ப்ளீஸ் என்ற வேண்டுகோளில் துவங்கும். மூன்று வருடங்களாக காதலிப்பதாகக் கால விளக்கமும் இருக்கும்.

காதல் என்று வந்துவிட்ட பிறகு, எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்? பொருத்தம் இல்லை என்றால் காதலை விட்டு ஒழிக்க முடியுமா? முடியாதல்லவா? ஆகவே நடப்பது நடக்கட்டும். காதலிப்பவரையே மணந்து கொள்ளுங்கள் என்று பதில் எழுதி அனுப்பிவிடுவேன்
----------------------------------------------------------------------
சரி காதல் யாருக்கு வெற்றி அடையும்?

ஜாதகத்தில் 5ஆம் வீடும் 7ஆம் வீடும் வலிமையாகவும் ஒன்றுக்கொண்டு தொடர்பு உடையதாகவும் இருப்பவர்களுக்கு காதல் வெற்றியடையும்.

லக்கினம், எழாம் வீடு, இரண்டாம் வீடு ஆகையவை வலிமையாகவும் ஒன்றுக்கொண்டு தொடர்பு உடையதாகவும் இருப்பவர்களுக்கு நல்ல மனைவி, நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

காதல் ஆகட்டும் அல்லது பேற்றோர் பார்த்துச் செய்து வைத்த திருமணம் ஆகட்டும் எல்லாம் விதிப்படிதான் அமையும். வருபவள் தேவதையாகவும் இருக்கலாம் அல்லது பிசாசாகவும் இருக்கலாம். அதுபோல வருபவன் அன்பான நாயகனாகவும் இருக்கலாம் அல்லது அடாவடியான வில்லனாகவும் இருக்கலாம். எல்லாம் ஜாதகத்தில் விதித்தபடிதான் இருக்கும்.

அது பற்றி விபரமாக இன்னொரு நாள் நீண்ட கட்டுரையொன்றைக் கேலக்சி வகுப்பில் எழுதுகிறேன். (இங்கே எழுதினால் திருட்டுப்போகும் சாமிகளா!)
-------------------------------------------------------------------
பதினெட்டு வயதில் எல்லோருக்குமே வால் உண்டாகிவிடும். உலகமே என் காலடியில் என்ற நினைப்போடு கன்னியவள் இருப்பாள். உலகத்தையே என் கையில் சுழல வைக்கிறேன் என்ற மதமதப்போடு காளையவன் இருப்பான்.

காதல் வயப்படும்போது அந்த வால் அறுந்துபோகும்.

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே


இதுபோன்று உருகி உருகிக் காதலிக்கும்போது இருவருடைய வால்களும் அதுவாகவே அறுந்து விழுந்துவிடும்! அல்லது காதல் சூட்டில் கரைந்து போய்விடும். அல்லது தேய்ந்து போய்விடும். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் காதலர்கள் தினத்தை - வால்ண்டைன் டே என்பதை வாலறுந்த தினம் என்றும் சொல்லலாம். தவறொன்றுமில்லை:-)))))

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

  1. நானும் காதலர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாத்தியார் சொன்னதை வைத்துப் பார்த்தால் அவரது நிலையை கீழ்கண்ட பாடல் சொல்கிறது. "காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
    வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை" இதற்கும் கவியரசர் கண்ணதாசன்தான் வருகிறார்.

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ///கணவன் ரயில் என்றால், மனைவி தண்டவாளமாக இருப்பாள். ///

    இப்போ இருப்பதெல்லாம்
    இவர்கள் பக்கத்து தண்டவாளமாகதான்

    ///ஐந்து ஈ’க்கள் கிடைத்த வேகத்தில் எல்லாம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது.///

    அருமை ஐந்து ஈக்ககள் விளக்கம்
    அது அவர்களுக்கு உரைக்குமா?

    /// இருவரில் ஒருவர் சங்கை எடுத்து ஊதிவிடுவார்கள்.////

    வரும் காலங்களில் தாம்பத்யம்
    வராது பத்தாண்டுக்கு மேல்

    சேர்ந்து வாழ்பவர்களா? இவர்கள்
    சோர்ந்து போய்விடுவார்கள்..





    ReplyDelete
  4. சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்:
    "என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறாள். ஒன்று நான் அவளைவிட‌
    அதிகம் சம்பாதிக்க வேண்டும். அல்லது அவளுக்கு என்னைவிடக் குறைவாகச்
    சம்பளம் வர வேண்டும். அப்படிப்பட்ட காலம் வருமா என்று எங்கள் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்."

    நீங்கள் சொன்ன5Eக்களில் கடைசிE !

    நல்ல அறிவுரை. கேட்பவர்கள் கேட்டால் சரி.

    ReplyDelete
  5. உங்கள் வால் அறுந்த தினம் அருமை.

    ReplyDelete
  6. //////Blogger Kirupanandan A said...
    நானும் காதலர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    வாத்தியார் சொன்னதை வைத்துப் பார்த்தால் அவரது நிலையை கீழ்கண்ட பாடல் சொல்கிறது. "காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
    வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை" இதற்கும் கவியரசர் கண்ணதாசன்தான் வருகிறார்./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  7. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    சரியாகச் சொன்னீர்கள் ஐயா...
    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...
    வாழ்த்துக்கள்.../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!!

    ReplyDelete
  8. ////Blogger வேப்பிலை said...
    ///கணவன் ரயில் என்றால், மனைவி தண்டவாளமாக இருப்பாள். ///
    இப்போ இருப்பதெல்லாம்
    இவர்கள் பக்கத்து தண்டவாளமாகதான்
    ///ஐந்து ஈ’க்கள் கிடைத்த வேகத்தில் எல்லாம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது.///
    அருமை ஐந்து ஈக்ககள் விளக்கம்
    அது அவர்களுக்கு உரைக்குமா?
    /// இருவரில் ஒருவர் சங்கை எடுத்து ஊதிவிடுவார்கள்.////
    வரும் காலங்களில் தாம்பத்யம்
    வராது பத்தாண்டுக்கு மேல்
    சேர்ந்து வாழ்பவர்களா? இவர்கள்
    சோர்ந்து போய்விடுவார்கள்../////

    வருங்காலத்தில் அமெரிக்க, மேற்கத்திய கலாச்சாரம் அதிரடியாக நுழைந்துவிடும். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அதிகமாகிவிடுவார்கள். வருத்தமாக இருக்கிறது சுவாமி!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்:
    "என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறாள். ஒன்று நான் அவளைவிட‌
    அதிகம் சம்பாதிக்க வேண்டும். அல்லது அவளுக்கு என்னைவிடக் குறைவாகச்
    சம்பளம் வர வேண்டும். அப்படிப்பட்ட காலம் வருமா என்று எங்கள் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்."
    நீங்கள் சொன்ன5Eக்களில் கடைசிE !
    நல்ல அறிவுரை. கேட்பவர்கள் கேட்டால் சரி./////

    கேட்க வேண்டியவர்கள் கேட்க மாட்டார்கள். அதுதான் அவலம் சுவாமி! நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு, அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் சாலச் சிறந்தது!

    ReplyDelete
  10. ////Blogger Ramajayam ராமஜெயம் said...
    உங்கள் வால் அறுந்த தினம் அருமை./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ஐந்து ஈ க்களைப் பற்றி சரியாக சொன்னீர்கள் அய்யா!!

    "மாளிகை வாழ்வும் தோழியரும்
    பஞ்சணை சுகமும் பால் பழமும்
    படையும் குடையும் சேவகரும்
    ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
    கானல் நீர் போல் மறையாதோ"

    கவியரசர் சொன்னது போல் காதலர்களை இன்றைய தினம் காண்பது அரிது

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com