17.2.14

Astrology: Quiz No.41 என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?

 

Astrology: Quiz No.41 என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?

கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். யாருடைய ஜாதகம் அது?

அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்

கூகுள் ஆண்டவரைப் பிடித்து, Name search, Celebrity Search, year serch, image search என்று என்ன சேட்டை வேண்டுமென்றாலும் செய்யுங்கள். ஆனால் ஜாதகத்தின் சொந்தக்காரர் யாரென்று சரியாகச் சொன்னால் போதும்!



லால்குடியார் தசா இருப்பு எங்கே என்று கேட்பார்:
சந்திர திசையில் 4 வருடங்கள் 2 மாதங்கள் 21 நாட்கள்

க்ளூ வேண்டுமா?

அது இல்லாமலா?

ஜாதகர், கவியரசர் கண்ணதாசனுக்கு மிகவும் வேண்டியவர்! அவரைப் போலவே இவரும் இப்போது உயிருடன் இல்லை!

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்

=====================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. கவிஞர் "வாலி". கட்டத்தை வைத்து சொல்ல வில்லை. Clueவை வைத்து சொல்கிறேன்.

    ReplyDelete
  2. 'கண்ணன்' தான் அந்த வேண்டப்பட்டவர். 19-July-3228 BC; நள்ளிரவு ரோஹிணி நக்ஷத்திரம்.
    'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்'.

    வாத்தியார் கொடுத்துள்ள பாடலும் முதலில் 'கண்ணனுக்காகவே' எழுதப்பட்டு, பின்னர் திரைப்பாடலாக மாற்றப் பட்டது.

    ( பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவா” என்றார். பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார்.

    அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை 'அவள்' என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.

    "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா?"

    இதில் ‘அவன்' என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

    மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். ‘எப்படி கவிஞரய்யா இது...?’ என்று. சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றிக் கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.

    படம் - பாலும் பழமும்; thanks http://www.goldentamilcinema.net/)

    ReplyDelete
  3. Respected Sir,

    My answer for our today's Quiz No.41:

    Date of birth : 19.07.3228 BC
    Time of birth : Midnight
    Place of birth : Madura, India

    Name of the Native : LORD KRISHNA (The supreme personality of Godhead)

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜாதகம். நான் எங்கேயும் தேட வேண்டியதில்லை. எனக்கு மனப்பாடமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் புதிர் 41க்கு விடை: கண்ணன் (கிருஷ்ணர்) ஜாதகம்.

    ReplyDelete
  6. எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்காத ஜாதகம் கடைசியில் யூகத்தால் கிடைத்தது. இது கடவுள்
    ”ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்”

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்,

    இது ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜாதகம்!

    பிறந்த தேதி: 19.07.3228 (கி.மு)

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி - என்ற கவிஞரின் வரிகளைப் போலவே, எங்கெங்கோ தேடித்தேடி இறுதியில் கண்ணனைக் கண்டுகொண்டேன்.

    நன்றிகள் பல!!!

    வெங்கடேஷ் கிருஷ்ணன் (எ) இளையபல்லவன்

    ReplyDelete
  8. ஐயா வணக்கம் புதிர்விடை: கண்ணனின் தாசன் கண்ணதாசன் பகவான் கிருஷ்ணர்

    ReplyDelete
  9. Lord Sri krishna
    D O B : 19 th July 3228 B.C.

    ReplyDelete
  10. Sir, I couldn't find this combination, I am waiting to see the answer.
    Thanks
    satya

    ReplyDelete
  11. கவிஞர் கண்ணதாசனுக்கு பிடித்தவர்
    1. பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.13th April 1930 (1930-1959)29 வயதில் மரணம் அடைந்தவர்)
    அழ‌கான‌வ‌ர். வாத்தியார் கொடுத்துள்ள ஜாதகத்திற்க்கு ரிஷ‌ப‌ ல‌க்கின‌த்தில் உள்ள‌ ச‌ந்திர‌னுக்கு பொருத்த‌மான‌வ‌ர். 7ல் ச‌னி. புன‌ர்ப்பு தோஷ‌ம், தன்னுடைய இளம் மனைவியை 5 மாத குழ‌ந்தையுடன் தனியாக விட்டு விட்டு 29 வய‌தில் ம‌ர‌ண‌ம் எய்தினார். புதன் ஊச்ச‌த்தில். குறுகிய காலத்தில் 56 சினிமா ப‌ட‌ங்க‌ளுக்கு 196 பாட‌ல் எழுதினார்.ம‌ற‌க்க‌முடியாத‌ பாட‌ல் " காத‌லிலே தோல்வியுற்றாள் க‌ன்னி ஒருத்தி". 4ல் சூரிய‌ன் ஆட்சி குருவுட‌ன். த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் இட‌த்தில் சிற‌ந்த‌ க‌விஞ‌ர் என்ற‌ பெய‌ர் எடுத்தார்.6ம் வீட்டுஅதிப‌தி சுக்கிர‌ன் 3ம் வீட்டில் ராகு, செவ்வாயுட‌ன். மேலும், கேதுவின் 7ம் பார்வை 3ம் வீட்டிலுள்ள‌ சுக்கிர‌ன் மீது. த‌வ‌றான‌ ம‌ருத்துவ‌ சிகிச்சியினால் ம‌ர‌ண‌ம் அடைந்தார்.

    அல்ல‌து

    2. இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன்.

    ஆனால், வாத்தியார் கொடுத்த ஜாதகம், யாருடையதோ ?
    பொருத்திருந்து பார்ப்போம்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com