31.1.14

வேலவா....வடி வேலவா!

 

வேலவா....வடி வேலவா! 

 பக்தி மலர்

வேலவா.... வடிவேலவா என்ற பல்லவியுடன் துவங்கும் பெங்களூர் ரமணியம்மாள் அவர்களின் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
our sincere thanks to the person who uploaded this song in the net!




வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=====================================================

30.1.14

Astrology: புன்னகை அள்ளிவர நடைபோடும் பொன்மயிலே! அன்பெனும் பள்ளியிலே மாணவி ஆனவளே!


Astrology: புன்னகை அள்ளிவர நடைபோடும் பொன்மயிலே! அன்பெனும் பள்ளியிலே மாணவி ஆனவளே!

நேற்றுப் பதிவில் கொடுத்திருந்த ஜாதகம் திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். அந்த ஜாதகத்திற்கு உரிய பிரபலம் யார் என்று தெரிந்தால், ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். கீழே கொடுத்துள்ளேன்.

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

ஆமாம்! ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் பிடித்த இன்னிசைக்குச் சொந்தக்காரர் இசையரசி, பிரபல பாடகி  லதா மங்கேஷ்கர் அவர்களின் ஜாதகம்தான் அது!

அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் 28.9.1929ஆம் தேதி சனிக்கிழமையன்று பிறந்தவர். இரவு 23:51 மணிக்குப் பிறந்தவர்.

திருமணம் மறுக்கப்பெற்றால் என்ன? அது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்!
(It is a part of the life) அவர் அரசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஜாதகத்தை இன்று  அலசி நாளை பதிவிட உள்ளேன். வெளியூர் சென்றிருந்தவன் இன்று காலையில்தான் கோவைக்குத் திரும்பினேன். தற்சமயம் நேரம் இல்லை! அனைவரும் பொறுத்துக்கொள்ளவும்!

அவரைப் பற்றிய முழுத் தகவல்களுக்கு உரிய தளத்தின் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். க்ளிக்கிப் பாருங்கள்:
http://en.wikipedia.org/wiki/Lata_Mangeshkar


புதிர்ப்போட்டிக்குப் பதிலாக வந்த பின்னூட்டங்கள் மொத்தம் 45. அதில் சரியான விடையை எழுதியவர்கள் 22 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். போட்டில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். (I wish better luck for them next time)

சரியான விடைகள், எழுதிய அன்பர்களின் பெயருடன் கீழே உள்ளது!

அன்புடன் 
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger janani murugesan said...
மதிப்பிற்குரிய ஐயா,
ஜாதகிக்கு திருமணம் ஆகியிருக்காது.
7க்குடைய குரு 12ல்
7ல் 8க்குடைய சனி
சுக்ரன் 3ல் பகை வீட்டில்
5ல், 6க்குடைய செவ்வாய் + கேது
குழந்தைகள் இருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை as obvious.
Wednesday, January 29, 2014 7:40:00 AM
--------------------------------------------------------
2
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO.38
28th September 1929 23.51.00 PM (age- 84 years)
இந்தூர், மத்தியபிரதேஷத்தில், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகியின் பெயர் லதா மங்கேஷ்கர் இந்திய நாட்டின் புகழ் பெற்ற பாடகி.
திருமணம் நடைபெறவில்லை.
மிதுன லக்கினம்(30 பரல்)சிவந்த மேனி அழகுடன் இருப்பார். லக்கினாதிபதி புதன் 4ல் உச்சத்தில் சூரியனுடன் புத‍-‍‍ஆதித்திய நிபுன யோகத்தில். வர்கோத்திரமான புதன் நவாம்சத்திலும் உச்சம். சங்கீத‌த்தில் உயர்ந்த நிலைக்கு சென்றதிற்க்கு இதுவும் ஒரு காரணம்.
7ம் வீட்டு அதிபதி குரு லக்கினத்திற்க்கு 12ல் பகைவீட்டில் ரிஷபத்தில். ல‌க்கினத்தில் மாந்தி, 7ம் வீட்டில் சனி(3 பரல்) அமர்ந்திருப்பதால் திருமணம் நடைபெறவில்லை. 7ம் வீட்டில் 25 பரல்கள்.
களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீட்டில் சிம்ம ராசியில் பகை வீட்டில்.நவாம்சத்திலும் சுக்கிரன் சனி, கேதுவுடன் கூட்டு.
சந்திரனிலிருந்து 4ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டு.
இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள், பத்திர யோகம், சுனபா யோகம், சாமர யோகம், வசுமதி யோகம், நிபுன யோகம், உபயசர யோகம் என பல யோகங்கள் உள்ளன.
இந்த ஜாதகத்தை மேலும் நிறைய அலசலாம். ஆனால், கேட்ட கேள்வி திருமணம் மட்டும் என்பதால் இத்துடன் அல‌சலை நிருத்தி கொள்கின்றேன்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Wednesday, January 29, 2014 8:27:00 AM
----------------------------------------------------------
3
Blogger Ravi said...
7th Saturn.
7th lord in 12th house.
4th occupied by Mars and Ketu.
An unhappy / denied married life.
Wednesday, January 29, 2014 8:40:00 AM
--------------------------------------------------------------------
4
Blogger Kaven said...
வணக்கம் ஐயா. இது லதா மங்கேஷ்கரின் ஜாதகம். ஏழில் 8ஆம் அதிபதி சனி, லக்னத்தில் மாந்தி. ஏழாம் அதிபதி குரு 12ல் (7க்கு 6ல்) மறைவு. திருமண வாழ்வு இல்லை.
Wednesday, January 29, 2014 9:55:00 AM
--------------------------------------------------------------------
5
Blogger karuppiah Sakthi said...
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் திருமணம் மறுக்கப்பட்டுள்ள ஜாதகம் 
1) 8ஆம் அதிபதி சனி 7இல் அமர்ந்து லக்கணத்தையும் லக்கனதிபதியையும் தன் பிடியில் வைத்துள்ளார்.
2) 7 ஆம் அதிபதி குரு 12இல் மறைவு
3) 6ஆம் அதிபதி செவ்வாய் 5இல் உடன் கேது. 5 இல் கேது இருப்பது பொதுவாக சந்நியாச யோகத்தை தரும்.அத்துடன் செவ்வாயின் 8ஆம் பார்வையாக 7ஆம் அதிபதி குருவை பார்க்கிறார்
4) களத்திரக்காரகன் சுக்கிரன் பகை வீட்டில் அத்துடன் லக்கனத்துக்கு 3இல்.மேலும் புதனும் சுக்கிரனும் 2/12 அமைப்பில் உள்ளார்கள்
Wednesday, January 29, 2014 9:59:00 AM
--------------------------------------------------------------------
6
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
புதிர் பகுதி 38 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
மிதுன லக்கினக் காரரான இந்தப் பெண்மணியில் ஜாதகத்தில் லக்கினம் சுபகத்தாரி யோகத்தில் இருந்தாலும் மாந்தி இருப்பதால், திருமண வாழ்க்கை இருக்காது. 
களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனியும், களத்திர ஸ்தான அதிபதி குரு, 12ல் மறைந்து விட்டதும் அதை உறுதிப் படுத்துகிறது.
குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் ஆட்சி பெற்றிருந்தாலும், குருவின் பார்வை இல்லாததோடு, களத்திர காரகன் சுக்கிரனுக்கு 12ல் அமர்ந்து விட்டது. அதனால் திருமணமாகி குடும்பம் அமையாமல் போய்விட்டது.
Wednesday, January 29, 2014 10:41:00 AM
-----------------------------------------------------------------------
7
Blogger Saravanan J said...
Dear Sir,
Here I want to answer for the quiz no.38.
1. 7th lord Jupiter is present in rishaba rasi, from its place it is sixth place.it is not the good position.
2. 8th lord is present in 7th place(sani), which it shows natives kalathiram has been affected.
3. Mars has been adjoined with kethu. That it shows native may be MUTHIRKANNI.
4. But she may be the well educated woman
Wednesday, January 29, 2014 11:16:00 AM
------------------------------------------------------------------------
8
Blogger அருண் குமார் said...
லக்னத்தை சனி தான் 7-ஆம் பார்வையில் வைத்துள்ளார்.பூரண ஆயுள் உண்டு.
2-ஆம் வீடு :
2-ஆம் வீடு சந்திரன் ஆட்சி பலத்துடன் உள்ளார் குடும்பம்,சுகஸ்தானம் நன்றாக இருபின்னும்
சனியின் 8-ஆம் பார்வை முழுவதுமாக நன்மை கிடைக்காது.
4-ஆம் வீடு
லக்னதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்று 4-ஆம் வீட்டில் உள்ளார்.
உடன் சூரியன் + குருவின் 5-ஆம் பார்வை 4-ஆம் வீட்டிற்க்கு.
வீடு ,வாகன வசதிக்கு கூறவில்லை.
5-ஆம் வீடு
5-ஆம் வீட்டில் கேது குழந்தை பிறப்பில் பாதிப்பு இருக்கும் உடன் செவ்வாய் 5-ஆம் வீட்டில் (பகை வீட்டில்)+
ராகுவின் 7-ஆம் பார்வையுடன் குழந்தை பிறப்பு இல்லை என்றே கூறலாம்.
7-ஆம் வீடு
7-இல் சனி திருமண தடை ,தாமதம் . 7-க்கு உடையவன் ( குரு 12-இல் மறைவு)
குரு 7-ஆம் வீட்டிற்க்கு 6-இல் உள்ளார்.
சந்திரனுக்கு 7-ஐ எடுத்துக்கொண்டாலும் ,மகரம்( 8-ஆம் வீடு) சனி அதன்
அதிபதி அதற்கு 12-இல் உள்ளார் .
சுப கிரகங்களின் பார்வையும் இல்லை.
உடன் தசை கணக்கில் எடுக்கும் போது
புதன் தசை- 15 வருடம் பிறகு
கேது தசை - 7 வருடம் (திருமணத்திற்க்கு வாய்ப்பில்லை) பிறகு
சுக்கிர தசை 18 வருடம் (சுக்கிரன் பகை வீட்டில் அதுவும் 3-ஆம் வீட்டில்)
(திருமணத்திற்க்கு வாய்ப்பில்லை)
காலபோக்கில் ஜாதகிக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாமல் போயிருக்கலாம்.
மொத்தத்தில் இது ஒரு திருமணம் மறுக்க பெற்ற ஜாதகம்.
9-ஆம் வீடு
கும்பம் அதன் அதிபதி சனி அந்த இடத்திற்க்கு 11-இல் (தனுசில்) ,
சுக்கிரனின் 7-ஆம் பார்வையால்
சுக்கிர தசையில் கிடைக்க வேண்டிய பாக்கியம் கிட்டும்.
10-ஆம் வீடு
மீனம் அதன் அதிபதி குரு அதற்கு3-ஆம் வீட்டில்
சூரியன்- 7-ஆம் பார்வை +ஆட்சிபலத்துடன் உள்ள புதனின் பார்வை
15 வயது வரை கற்ற கல்வி துணை வரும்.
11-ஆம் வீடு
11-ஆம் வீட்டில் ராகு நட்பு வீட்டில் ,
மேஷம் அதன் அதிபதி செவ்வாய் தான் 7-ஆம் பார்வையில் வைத்துள்ளார்.
ஊர்ஊராக மாறி மாறி சென்று வேலை செய்து இருப்பார்
ராகுவால் திரை கடல் ஓடியும் திரவியம் தேடி இருப்பார்
-------------------------------------------------------------------------
9
Blogger JAWAHAR P said...
வணக்கம்
மணமாலை கொண்டு வரும் - திருநாளும் என்று வரும்?
திருநாள் வர வாய்ப்பு இல்லை
Wednesday, January 29, 2014 1:41:00 PM
--------------------------------------------------------------------------
10
Blogger C.Senthil said...
அய்யா,
DAOB: 28-செப்-1929
திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம். 
7-இல் சனி, 7-ஆம் அதிபதி லக்னத்திற்கு 12-இல், களத்திரகாரன் சுக்கிரன் 3-இல்.
Wednesday, January 29, 2014 3:10:00 PM
----------------------------------------------------
11
Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our today's Quiz No.38:
Date of birth : 28.09.1929
Time of birth : 11:30pm to 12:00pm
Place of birth: Indore, Madhya Pradesh, India
Name of the Native: Melody Queen LATA MANGESHKAR (84 years old)
SHE DID NOT MARRIED. MARRIAGE WAS NEVER HER CUP OF TEA.
MARRIAGE WAS DENIED AS PER HER HOROSCOPE.
SEVENTH HOUSE:
Eighth house auhtority saturn is sitting in seventh house and seventh house lord is sitting in twelfth house from langa and sixth house from its own house and not getting any good planets aspect. Hence she was not blessed to get marry.
SECOND HOUSE:
Second house lord Moon sitting in own house and eleventh house lord Mars aspects its own house(11th). Hence she is rich and having good voice.
FIFTH HOUSE:
Kethu alongwith Mars sitting in fifth house. This placement and companion not allowed her to think about marriage.
In short, Lagna lord exalted in Kendra(4th house) along with Sun and Jupiter aspects as it's fifth aspect. Its great yoga.
With kind regards,
Ravichandran M.
Wednesday, January 29, 2014 3:15:00 PM
--------------------------------------------------------------------
12
Blogger poigai said...
இந்த பெண் மணிக்கு கண்டிப்பாக திருமண வாழ்க்கை கிடையாது.அமைந்தாலும் ஊற்றிகொள்லும் .7 இல் சனிஸ்வரன்,8 இம் அதிபதி 7 இல்,7 இம் அதிபதி 12 இல் மறைவு , எந்த ஒரு சுப கிரகமும் 7 ம் வீட்டை பார்க்கவில்லை, மேலும் குழந்தை பாகியதுக்கான அமைப்பும் இல்லை.5 இல் கேது, செவ்வாய் மற்றும் 6 ம் அதிபதி.5 ம் அதிபதி 3 இல் மறைவு.
Wednesday, January 29, 2014 4:23:00 PM
---------------------------------------------------------------------------
13
Blogger jagvettri@gmail.com said...
திருமணம் மறூக்க பெற்ற ஜாதகம் .ஏழாம் அதிபதி குரு 12 இல், 8ஆம் அதிபதி சனி 7 இல் ,சுக்ரன் மூன்றில்.
மஙகள காரகன் செவ்வாய் கேதுவுடன் கூட்டு .சந்திரன் ஆட்சி பெற்றரதால் நல்ல குடும்பம் புத ஆதித்ய யோகம் உள்ளதால் நல்ல படிப்பு ஆனால் லகனதில் மாந்தி குணம் பற்றி அறிய வேண்டும்.
Wednesday, January 29, 2014 6:42:00 PM
-----------------------------------------------------
14
Blogger Manikandan said...
8க்கு உடையவன் 7-ல் . 7-ம் அதிபதி 7-க்கு ஆறாம் இடத்திலும் லக்கனதிற்க்கு 12-லும் மறைவு. சுப கிரகங்கள் பார்வையும் 7 இடத்திற்க்கு இல்லை. சுக்கிரன் 3-ல் மறைவு. ஆகையால் திருமணம் இல்லை
Wednesday, January 29, 2014 6:47:00 PM
-------------------------------------------------------------
15
Blogger Susheela kandhaswamy said...
ஐயா,
1.திருமணம் மறுக்கப் பட்ட ஜாதகம். 7ல் சனி, 7க்குடைய குரு 12 ல்
2.லக்னாதிபதி புதன் வலுவாக இருப்பதாலும் 2ல் சந்திரன் ஆட்சி பலத்துடன் இருப்பதாலும் படித்து வருமானம் உள்ள தொழில் அமைந்து விட்டது.
3.மூன்றில் 5க்குடைய சுக்ரன் மறைவு 5ல் செவ்வாய்+கேது அதனால் குழந்தைகள் இல்லை.
Wednesday, January 29, 2014 7:01:00 PM
---------------------------------------------------------
16
Blogger bg said...
1. லக்கினத்தில் மாந்தி.
2. 7 இல் சனி.
3. 7 ஆம் அதிபதி குரு 12 இல் விரயஸ்தானத்தில் உள்ளார்.
அது அவருக்கு பகை வீடு.
காரகன் சுக்கிரன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.
அது அவருக்கு பகை வீடு.
ஆகவே இந்த ஜாதகருக்கு திருமண வாழ்வு வாய்ப்பு குறைவு.
யோகம் – புத அதித்ய யோகம் உள்ளது.
பிறந்த வருடம் – 1930.
Wednesday, January 29, 2014 7:02:00 PM
----------------------------------------------------------------
17
Blogger Sanjai said...
மண வாழ்க்கை இல்லை, 
1. லக்னத்தில் மாந்தி (ஏழாம் பார்வை ஏழாம் வீட்டில்),
2. ஏழுக்குடையவன் பன்னிரெண்டாம் வீட்டில்.
3. எட்டுக்குடைய சனி ஏழில்.
Wednesday, January 29, 2014 8:15:00 PM
--------------------------------------------------------------
18
Blogger Ravi Sankar said...
Hi Sir, Greetings!
As 7th Lord in in 12th place from Lagna. 8th Lord (Saturn) is in 7th place and Venus is also in 3 rd place, there is no chance in getting married.
Thanks, Ravisankar. M
Wednesday, January 29, 2014 8:39:00 PM
---------------------------------------------------------------------
19
Blogger rm srithar said...
Dear Sir
Given Horoscope is Lata Mangeswar born on 29 september 1929 at Indore
She not got married
Reason
1. Seventh place Jupiter placed in 12th House
2. Saturn is placed in Seventh place. note Saturn is 8th house in charge.
3.Marriage incharge Venus is place in 3rd house.
4. Family house incharge place in second house ruling is good but karagathipathi standing in own house it will spoil karaga nasam, that means family life got lost.
Regards
rm.srithar
Wednesday, January 29, 2014 8:39:00 PM
--------------------------------------------------------------------------
20
Blogger vanikumaran said...
7ல் சனி, 7ம் அதிபதி குரு லக்கினத்திற்கு 12ல்,களத்திரகாரகன் சுக்கிரன் 3ல். திருமணதிற்கு எதிரான அமைப்பு. 
8ம் அதிபதி அதற்கு 12ல் இதுவும் திருமணதிற்கு எதிரான அமைப்பு உடன் 8ம் வீட்டிற்கு 6ம் வீட்டதிபதி செவ்வாய் பார்வை உள்ளது
சனி பார்வை சுகஸ்தானத்தில் சுகஸ்தானாதிபதி புதன் உடன் 3ம் வீட்டதிபதி சுகக்கேடு
Wednesday, January 29, 2014 8:59:00 PM
----------------------------------------------------------------
21
Blogger raghupathi lakshman said...
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
புதிர் 38க்குரிய விடை: இனிய பாடகி லதாமங்கேஷ்கர் அவர்களுடைய ஜாதகத்தை கொடுத்துள்ளீர்கள் என தெரிகிறது.திருமணதடையுள்ள ஜாதகம்.
*மிதுன லக்னம், கடகராசி.லக்னாதிபதி புதன் உச்சம் பெற்று 10ம் இடத்தை பார்வை செய்வது சிறப்பு.வாக்குகாரகன்,வாக்கு ஸ்தானாதிபதி இருவரும் வலுவான நிலையில்,சுபகிரகமான சந்திரன் இவருடைய குரலில்
இனிமையை தருகிறார்.
*குரு களத்திர ஸ்தானாதிபதியாகி 12ல் மறைந்ததுடன் 7ல்சனி அமர்ந்து
லக்னத்தை பார்ப்பதும் திருமணதடைக்கு காரணம் என அறியமுடிகிறது
*10ம் இடத்தை தன்பார்வையில் வைத்துள்ள புதன்,தனது தொழிலில் நிபுண‌த்துவத்தையும் 11ல் அமர்ந்த‌ ராகு பேரும் புகழும் கிடைக்கச்செய்தார்.
*4ம் இடமான சுகஸ்தானம் வலுத்து நிலபுலன்க‌ள் வாகன வசதிகளையும் கொடுத்த‌து
*சனி மூலந‌ட்ச்சத்திரத்தில் அமர்ந்ததுடன் ஏனைய கிரகங்கள் ராகு கேதுவின் பிடியில் உள்ளனர். காலசர்ப்ப தோசம் உள்ள ஜாதகம்
*5ல் செவ்வாய் கேது குழந்தை பாக்கியம் கிடையாது.
*லக்னம் சுபகர்த்தாரி யோகத்தில் ஊள்ளது சிறப்பு.
தங்களின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ஐயா.
நன்றி ல ரகுபதி
Wednesday, January 29, 2014 9:08:00 PM
---------------------------------------------------------------
22
Blogger Dallas Kannan said...
Respected Sir
No marriage for this chart.
Sani in 7th place.
7th lord Guru is in 12 place.
No Benefic look to 7th place or 7th lord.
Mars looks at 7th lord.
Sukra also in 3rd place and in enemy place.
since Chandra is 2nd lord is in its own place, the birth family is good.
I have to confess here, that I checked Google only after concluding above (honestly) to see if there is any famous personality to validate my answer. Looks like it is Latha Mangeshkar. Did not want to do it first. But could not control my curiosity. Sorry about it.
Wednesday, January 29, 2014 10:27:00 PM
------------------------------------------------------------------
அன்புடன் 
வாத்தியார்
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================

29.1.14

Astrology: மணமாலை கொண்டு வரும் - திருநாளும் என்று வரும்?

 

Astrology: மணமாலை கொண்டு வரும் -  திருநாளும் என்று வரும்?

Quiz No.38: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்தியெட்டு..

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின்  திருமண வாழ்க்கையை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.1.14

Short Story:சிறுகதை - எது பாவம்? எது புண்ணியம்?

 

Short Story:சிறுகதை - எது பாவம்? எது புண்ணியம்?

(பத்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பத்திரிக்கைகளிலும் எழுதுகிறேன். வலைப் பதிவுகளிலும் எழுதுகிறேன். கீழே கொடுத்துள்ள
கதையை உங்களுக்கு முன்பாகவே அறியத்தந்திருக்கிறேனா என்பது நினைவில் இல்லை. தேடிப் பார்ப்பதற்கும் நேரம் இல்லை. ஆகவே இதைப்
படிப்பவர்கள் - புதிதாகப் படிக்கின்றீர்கள் என்றால் சந்தோஷப் படுங்கள். முன்பே படித்திருந்தால் பழைய சாதம் என்று வருத்தப்படாதீர்கள்)


ஒரு துறவியும், அவருடைய சீடனும், திருத்தலம் ஒன்றிற்குப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார்கள்

இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. வோல்வா பேருந்துகளும், சதாப்தி ரயிலும் இல்லாத காலம். நடைப் பயணம்தான்

சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த களைப்பு. உடன் கடுமையான பசி. பெரியவர் பொறுத்துக்கொண்டார். சீடனால் முடியவில்லை

"சாமி, அதோ ஒரு கிராமம் தெரிகிறது. சிரமபரிகாரம் செய்து விட்டுப் போகலாமே" என்றான்

துறவியாரும் சரி என்று செயலில் இறங்கினார். வரப்பின் மேல் நடந்து, கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் நுழை வாயிலிலேயே ஒரு பெரிய பண்ணை வீடு இருந்து. பின்புறம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலபுலன்களுடன் கூடிய மிகப் பெரிய வீடு.

துறவி கதவைத் தட்டினார். திறக்கப் படவில்லை. மீண்டும், மீண்டும் நான்கைந்து முறை தட்டினார். கால்மணி நேரம் கடந்திருக்கலாம். கதவைத்
திறந்து கொண்டு பீமசேனன் தோற்றத்துடன் ஒரு மனிதன் வெளிப்பட்டான்.

அவன்தான் அந்தப் பெரும் பண்ணைக்கும், பண்ணை வீட்டிற்கும் சொந்தக்காரன். பாதித் தூக்கம் அவன் கண்களில் மிச்சம் இருந்தது

எரிச்சலோடு கேட்டான்,"என்ன வேண்டும்?"

துறவி, பொறுமையாகத் தாங்கள் யார் என்பதையும், எங்கு பயணிக்கின்றோம் என்பதையும் கூறிவிட்டு, தங்களுக்கு உணவு வழங்கும்படி வேண்டினார்.

அடிப்படைப் பண்பின்றி அவன் கோபமாக, "இதற்குத்தான் தட்டினீர்களா, சனியன் பிடித்தவர்களே! என் தூக்கத்தை வேறு கெடுத்துவிட்டீர்களே!
போய் வேறு இடத்தில் கேளுங்கள்" என்று சொல்லி, படார் என்று கதவை அறைந்து சாத்திவிட்டுத் திரும்பவும் தன் வீட்டிற்குள் சென்று விட்டான்.

அவன் நடத்தையைப் பார்த்துச் சீடனுக்கு அசாத்திய கோபம் வந்தது. ஆனால் குருபக்தியினால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஆனால் துறவி எதுவுமே நடக்காதது போல சாந்தமாக நின்றவர், தன் கைகளை உயர்த்தி, "ஆண்டவனே இவனுக்கு இன்னும் நான்கு மடங்கு
செல்வத்தைக் கொடுப்பாயாக!" என்று பிராத்தனை செய்தார்.

சீடன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான். குருவின் தவ வலிமை அவனுக்குத் தெரியும். அவர் பிராத்தனை செய்தால் அது நடந்துவிடும். ஆனாலும் இவர் ஏன் இந்தக் கிராகதகனின் நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றார் என்பது அவனுக்குப் பிடிபடவில்லை.பேசாமல் நின்றான்.

இறங்கி நடந்த துறவி, கிராமத்தை நோக்கி நடந்தார். சீடனும் தொடர்ந்தான். ஒரு குடிசை வீடு அவர்கள் கண்ணில் பட்டது. முன் பக்கம் திண்ணை.
அருகில் உள்ள கொட்டகையில் நான்கு பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன

துறவி,"தாயே!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

அடுத்த நொடியே, ஒரு மூதாட்டி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

"வாங்க சாமிகளா? என்ன சாமிகளா வேணும்?" என்று அன்புடன் கேட்டாள்

துறவி சொன்னார்

அவள் பதறி விட்டாள். அவள் வீட்டில் சற்று முன்தான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களைக் கழுவிப் போட்டிருந்தார்கள்

"சாமி நல்ல மோர் இருக்கிறது. ஆளுக்கு ஒரு செம்பு தரட்டுமா?" என்று தயக்கத்துடன் வினவினாள்.

கொண்டுவரச் சொல்லிவிட்டுத் துறவி திண்ணையில் அமர்ந்தார். சீடனையும் அமரச் செய்தார்.

இரண்டு பெரிய செம்புகளில் அமிர்தம் போன்ற சுவையுடன் மோர்
வந்தது. வாங்கி அருந்தினார்கள் பசி அடங்கிய பிறகுதான் இருவரும்
ஒருநிலைக்கு வந்தார்கள்.

துறவி அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார்

அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் வீட்டில் விதைவைக் கோலத்துடன் ஒரு மகள். பதினெட்டு வயதில் ஒரு பேத்தி. ஆக மூன்று பேர்கள்.

நான்கு பசு மாடுகளை வைத்து ஜீவனம். பால், தயிர், மோர் விற்று வயிறு வளர்ப்பதை நடிகை மனோரமா பாணியில் ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள்.

துறவி விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது, இப்படிச் சொல்லி ஆசீர்வதித்தார்: ."உன் பேத்திக்கு சீக்கிரம் திருமணம் ஆகும். நல்ல மணாளன்
கிடைப்பான். உன் மாடுகளில் இரண்டு இறந்துவிடும் ஆனாலும் நீ நன்றாக இருப்பாய்!"

சீடன் நொந்து போய்விட்டான்

அந்த அயோக்கியன் வீட்டில் உன் செல்வம் நான்கு மடங்கு பெருகட்டும் என்று சொன்னவர். ஏழையானாலும், பசிக்கு அற்புதமான மோர் கொடுத்த
இந்த மூதாட்டி வீட்டில் இரண்டு பசுமாடு சாகட்டும் என்கிறாரே, எதற்காக இப்படி சொல்கிறார்? என்று புரியாமல், குழப்பத்துடன் தன் குருவைத்
தொடர்ந்தான்.

அவன் மன ஓட்டத்தை ஊகம் செய்த துறவி அவராகவே முன்வந்து விளக்கம் சொல்லி அவன் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

"பண்ணைக்காரனிடம் அபரிதமான செல்வம் இருந்தும் பசித்தவர்க்கு உணவளிக்க மறுக்கும் பாவியாக இருக்கின்றான். அவன் செல்வம் நான்கு
மடங்கு பெருகினால், அவன் பாவமும் நான்கு மடங்கு பெருகும்.அதனால்தான் அவனை அப்படி ஆசீர்வதித்தேன். இந்தப் பெண்மணி தன் ஏழ்மையிலும் தர்மம் செய்யும் தயாநிதியாக இருக்கிறாள். நான்கு மாடுகளை மட்டுமே வைத்து இவள் செய்யும் தர்மம் (புண்ணியம்) இரண்டு மாடுகளை மட்டும் வைத்துச் செய்யும் போது இரண்டு மடங்காக மாறும். அதனால்தான் இங்கே அப்படி ஆசீர்வதித்தேன்"

புண்ணியத்தைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், என் சிற்றறிவிற்குத் தெரிந்தவரை ஓரளவு தெளிவு படுத்தியிருக்கிறேன்.


அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.1.14

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

 

எதிர்காலத்தில் இனி அதுவும் இலவசம்தான்!

நம் மக்களுக்கு மிகவும் பிடித்தது இலவசம். அதற்கு மயங்காதவர்களே கிடையாது. விருப்பப் படாதவர்களே கிடையாது (என்னையும் சேர்த்துத்தான்)

அதை நன்கு உணர்ந்த நம் அரசியல் பிரமுகர்கள், இலவசமாக ஒவ்வொன்றாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் இப்போது கொடுத்திருப்பது (துவக்கம்தான் என்றாலும்) இரண்டு கைகளையும் கூப்பி வரவேற்க வேண்டிய இலவசம்!
அப்படி எதைப் புதிதாகக் கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள் - தெரியும்!

V
V
V
V
V
V
V
V
V
V



பத்திரிக்கைச் செய்தி: நன்றி இந்து நாளிதழ் 24.1.2014

என்ன உண்மையிலேயே நல்ல செய்திதானே!

பெங்களூரில் பிள்ளையார்சுழி போட்டுத் துவங்கியிருக்கிறார்கள். பிறகு அதை தங்கள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த இருக்கிறார்கள். இதைப் பார்த்து மற்ற மாநிலங்களும் இந்த வசதியைத் தங்கள் மாநில மக்களுக்குக் கொடுக்கத்துவங்கும்.

வெளி மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் சென்ற மாதம் பார்த்தேன். ஒரு பெரிய வணிக வளாகத்தில் (பல தளங்களைக் கொண்ட அந்த வணிக வளாகத்தில் 250 கடைகளும், ஒரு தளத்தில் 5 சினிமா அரங்குகளும் உள்ளன) வைஃபி வசதியை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அங்கே செல்பவர்கள் தங்கள் மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போன்களின் மூலம் இணையத் தொடர்பை உண்டாக்கிக் கொள்ளலாம்.

இந்த வசதி மற்ற நாடுகளில் உள்ளதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!

அன்புடன்
வாத்தியார்

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.1.14

திருமண வாழ்க்கை எப்போது சீராகும்?

திருமண வாழ்க்கை எப்போது சீராகும்? 

திருச்செங்கொட்டுக்குச் சென்று வந்தால் - உன்
தலை மேல் கோடுகள் நேராகும்
என்ற பல்லவியுடன் துவங்கும் பக்திப் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

 திருப்பரங்குன்றம் சென்று வந்தால் உன் திருமண வாழ்க்கை சீராகும் என்ற வரி அசத்தலாக உள்ளது. ஆமாம், முருகனின் முதல் படை வீடு என்ற பெருமைக்குரிய ஸ்தலம் அது.

அன்புடன்
வாத்தியார் 
------------------------------
Our sincere thanks to the person who uploaded the song in the net 



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
======================================================

23.1.14

Astrology: ஏமாறச் சொன்னது நானா? என் மீது கோபம் தானா?

 

Astrology: ஏமாறச் சொன்னது நானா? என் மீது கோபம் தானா?

நேற்று பதிவில் கொடுத்திருந்த ஜாதகம் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான திரு. வாரன் பஃப்பெட் (Warren Buffett) அவர்களின் ஜாதகம்!

இப்போது சொல்லுங்கள், அவருக்கு என்ன பணக் கஷ்டம்? சேர்த்த பணத்தைக் காப்பாற்றுவதும் அந்த நம்பர் ஒன் நிலைமையைத் தக்க வைத்துக்கொள்வதும் தான் அவருக்கு உள்ள கஷ்டம்.

உங்களிடம் விளையாடுவதற்காக, ஜாதகத்தைக் கொடுத்த நான், கேள்வியை சற்று மாற்றி எழுதினேன். பணக்கஷ்டம் உள்ளதா? என்ற வார்த்தைகளைச் சேர்த்தேன்.

சிலர் எந்த ஜாதகத்தைக் கொடுத்தாலும், பிறந்த தேதியைக் கண்டு பிடித்து, இணையத்தில் ஆள் யார் என்று தேடுவார்கள். அவ்வாறு இருவர் தேடிக் கண்டிபிடித்து வாரென் பஃப்பெட்டின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

லக்கினத்தில் சனி இருப்பதையும், அவர் இரண்டாம் வீட்டுக்காரர், தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருக்கிறார் என்பதையும் வைத்து, ஜாதகரின் கையில் பணம் தங்காது என்றுதான் சட்டென்று சொல்லத் தோன்றும்.

ஆனால் ஜாதகத்தில் வேறு பல நல்ல அமைப்புக்கள் உள்ளன. இருபதிற்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அலசினால் விபரம் தெரியும். அந்த யோகங்கள்தான் (By placement and association of planets) அவரை உயர்த்திப் பிடித்தன!

30.8.1930ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அமெரிக்காவில் உள்ள ஒமாஹா நகரில் பிறந்த அவர், துவக்கத்தில் தன்னுடைய 24ஆம் வயது முதல் 3 வருட காலங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் பொன்மகள் வந்து அவருக்குக் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறாள்.

அவரும் முறைப்படியாக கோடி கோடியாகக் குவித்திருக்கிறார். இன்று அவருடைய ஒரு நாள் வருமானம் ரூ.223 கோடிகள் (அம்மாடியோவ்.....)

வாத்தியார் வெளியூர்ப் பயணத்தில் இருந்து இன்று காலைதான் வந்தேன். நீங்கள் எல்லாம் ஆர்வமாக இருப்பீர்கள் என்பதற்காக விடையைச் சுருக்கமாக எழுதிப் பதிவை வலை ஏற்றியிருக்கிறேன்.

இன்னொரு நாள் அவருடைய ஜாதகத்தை விரிவாக அலசுவோம்.

அவரைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி (URL Link):

http://en.wikipedia.org/wiki/Warren_Buffett

போட்டியில் கலந்து கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வாத்தியாரின் நன்றி உரித்தாகுக!

அன்புடன்,
வாத்தியார்

===============================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.1.14

Astrology: பொன்மகள் வருவாளா? பொருள் கோடி தருவாளா?

 
Astrology: பொன்மகள் வருவாளா? பொருள் கோடி தருவாளா?

Quiz No.37: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்தியேழு

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அய்யனின் ஜாதகம். அய்யனின் நிதி நிலைமையை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.அவருக்குப் பணக் கஷ்டம் உள்ளதா? இல்லையா? இருந்தால் அது எப்போது தீரும். எழுதுங்கள்


 அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
------------------------------------------------------------------------------------------

21.1.14

Astrology: யார் தீர்த்தமாட வேண்டும்?

 
 
===============================================================
Astrology: யார் தீர்த்தமாட வேண்டும்?

யார் வேண்டுமென்றாலும் தீர்த்தமாடலாம். புண்ணிய நதிகளில் நம்பிக்கை யோடு நீராடி, அருகில் கரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபடுதல் நன்மை பயக்கும். குறிப்பாகக் காரியத் தடைகள்உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷமுள்ளவர்கள் நீராட வேண்டும். அதிலும் புத்திர தோசம் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தீர்த்தமாட வேண்டும்.

பல நதிகளில் மின் உற்பத்திக்காக அணைகளைக் கட்டி ஆறுகளில் நீரோட்டத்தைக் குறைத்துவிட்டார்கள்.

வைகை, காவேரி போன்ற ஆறுகள் நீரின்றி வறண்டுபோய்விட்டன. பல இடங்களில் மணல் திட்டுக்கள்தான் உள்ளன. அந்த மணலையும் போட்டி போட்டுக்கொண்டு பொக்லைன், ஜே.பி.சி போன்ற இயந்திரங்களை
வைத்து அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே ராமேஸ்வரம்தான் தீர்த்தமாடுவதற்கு உரியதும், பழம் பெருமை மிக்கதும் ஆகும். புத்திரபாக்கியக் குறைபாடு உள்ளவர்கள், ஒரு முறை அங்கே சென்று, கோவிலுக்கு எதிரே உள்ள கடலில் நீராடி, இராமநாத சுவாமியை மனம் உருக பிரார்த்தனை செய்துவிட்டு வந்தால், குறை நீங்கிக் குழந்தை பிறக்கும்.
--------------------------------------------------------
ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, காரகன் குரு ஆகியோர்கள் வலிமையற்று இருப்பது குறைபாடாகும். அதைப் பற்றி முன்பு பலமுறை எழுதியுள்ளேன். புதிதாக ஒரு செய்தியையும் குறிப்பிட்டுக் கீழே எழுதியுள்ளேன்.அதையும் படியுங்கள்.

ஐந்தாம் வீட்டுக்காரனும் ஆறாம் வீட்டுக்காரனும் ஜாதகத்தில் ஒன்று சேர்ந்திருந்தால் (Association of 5th and 6th Lord) அது புத்திர தோசமாகும்.
அதுவும் அவர்களின் சேர்க்கை முன்றாம் வீட்டில் இருப்பது, இருக்கும் நிலைமை மிகவும் மோசமானதாகும்.

அவர்களின் மேல் குரு பார்வை இருப்பது அதற்கு விதிவிலக்காகும். அதை மனதில் கொள்க!

இந்த விதியை (Rule) விளக்கும் பழைய பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆரப்பா அயன்விதியை அறையக்கேளு
    அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன்கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திரதோஷம்
    சிவசிவாயிது மூன்றில் சேர்ந்துநிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
    கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
    பலனுண்டுபல தீர்த்த மாடச்சொல்லே!

    - புலிப்பாணி முனிவரின் பாடல்

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================

20.1.14

Astrology: கேதுவால் என்ன கிடைக்கும்?

Astrology: கேதுவால் என்ன கிடைக்கும்?

சில பாடங்களை கதைகளை உதாரணமாகச் சொல்லி, நடத்தினால் எளிதில் புரியும். கேதுவால் என்ன கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பதை
ஒரு கதையின் மூலம் இன்று சொல்ல விளைகிறேன். படித்துப் பாருங்கள்!
-------------------------------------------------------------------------
கதையின் தலைப்பு: அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன் ஒருவன் இருந்தான்.அவனுடைய நாடு நன்றாக இருந்தது. அவனது ஆட்சியில் நாட்டு
மக்களும் நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று குழந்தைகள். நித்தமும் அரண்மனையில் சண்டைகள். சச்சரவுகள்.வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில் ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத் தினமும் துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம் விளைவிப்பவர்களை அல்லது குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி
மக்களை தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி. தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான்.
அனைத்தும் அவனை அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை. செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் குறிப்பிட்டு, அழுகாத குறையாக தன்னுடைய மனக்குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா என்று இளம் துறவி ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால்,எல்லாப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும் சொன்னார். அதோடு அந்த இளம் துறவி தற்சமயம் பல்லவ நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச்
சொன்னான். முதன்மந்திரியும், நான்கு வீரர்கள் துணையுடன், உடனே புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அரசர்களைவிடத்தான் மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச் சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய வேலை என்றும் சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான் முக்கியம் கொடுப்பதில்லை  என்றும் சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்க வில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால் நடைப் பயணம்
மேற்கொண்டிருப்பதாகவும், திரும்பும் வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார். அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும்
கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில் பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது
செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது என்ற முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம் ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு
வாரங்கள் கழித்து அரசன் நினைவு படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச்
சொல்லி மேலும் ஒருமாத காலத்தை ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து
தினங்களுக்குள் அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில் சிலரது மூளை அற்புதமாக வேலை செய்யும். மந்திரியின் மூளையும் அப்படியொரு
வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு வந்து நிறுத்திட மந்திரி முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும்
முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாததால் போலியான ஒருவனைக் கொண்டு வந்து
நிறுத்தினால் யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத் தேடி, மந்திரி பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக இருந்த பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக் கிடைத்தான்.மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி, என் கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான்
பார்த்துக் கொள்கிறேன்"

முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன் மந்திரியை எதிர்கொள்வது எப்படி?
------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப் பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப் பெற்றது. பட்டையாக விபூதி  பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு என்னென்ன பதில்கள் அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின் பெயரை மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது.

மொத்தமாகப் பயிற்சி அளிக்கப் பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில் அவன் உட்கார வைக்கப்பட்டான். அரண்மனை பல்லக்கு ஒன்று
அனுப்பட்டது. அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக
இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல் மலர்களால் அலங்கரிகப்பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர்
நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

கதையின் அடுத்த பகுதியும், கேதுவைப் பற்றிய தகவலும், கேதுவால் ஏற்படும் துன்பங்களுக்கான பரிகாரமும் நாளை வெளியாகும். இங்கெயல்ல!
galaxy2007 வகுப்பில் வெளியாகும். இங்கே எழுதினால், பதிவு திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கே வெளியாகும்.  அங்கே எழுதுபவைகள் எல்லாம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் புத்தகமாக வரவுள்ளன. அப்போது அனைவரும் படிக்கலாம்!

(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

===================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.1.14

தைப்பூசம்

 


------------------------------------------------------------------------------------------------------------------

தைப்பூசம்

ஆண்டு தோறும் தை மாதம் பெளர்ணமி திதியும் பூச நசத்திரமும் ஒன்றாகக் கூடி வரும் நன்னாளில் முருகப்பெருமானுக்கு, அவர் அருள் பாலிக்கும் எல்லா ஆலயங்களிலும் கொண்டாடப் பெறும் பண்டிகைதான் தைபூசத் திருவிழா. நம் நாட்டில் மட்டுமல்ல, அண்டை நாடுகளான இலங்கை, மலேசியா, மொரிசியஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார் ஆகிய தேசங்களிலும் அங்கே முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களிலும் முருக பக்தர்களால், கொண்டாடப் பெறுகின்றது.

அன்னை பராசக்தி தீய சக்திகளை அழிப்பதற்காக முருகப் பெருமானுக்கு வடிவேல் வழங்கிய நாளும் அதுதான். வைகாசித் திங்களில் பெளர்ணமித் திதியும் விசாக நட்சத்திரமும் ஒன்றாகக் கூடிவரும் நன்னாள்தான் முருகப்பெருமானின் அவதார நாளாகும். அதை மனதில் வையுங்கள்.

தைப்பூசத் திருவிழா பழநியம்பதியில் அதி விமரிசையாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து முருகப்பெருமானை - பழநிஅப்பனை வழிபடுவோம்.

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------------------
புஷ்பவனம் திரு.கே.முத்துசாமி அவர்கள் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்
----------------------------


Our sincere thanks to the person who uploaded this song in the net
----------------------------------------------------------------------------------------------
நேற்றைய புதிருக்கான விடை:

படம் 1
முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களுடன் இருப்பவர்கள் பழம் பெருமை வாய்ந்த திரைப்பட நட்சத்திரங்கள்

இடமிருந்து வலம்: திருமதி.செளகார் ஜானகி. திருமதி. பி.சுசீலா, திருமதி.ராஜஸ்ரீ, திருமதி.அஞ்சலி தேவி, முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா, திருமதி.ஜமுனா, திருமதி.பி.சரோஜாதேவி, திருமதி.சுகுமாரி திரு.சோ.ராமசாமி, குமாரி சச்சு

படம் 2

பிரபல இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி

விடையைச் சரியாக எழுதிய அத்தனை பேர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றியும்
உரித்தாகுக!

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=========================================================

16.1.14

உங்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு போட்டி உள்ளது! உள்ளே வாருங்கள்!

உங்களின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு போட்டி உள்ளது! உள்ளே வாருங்கள்!

வகுப்பறை 14.1.2007ம் தேதி பொங்கல் நன்னாளில்தான் துவங்கபெற்றது.
ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று எட்டாம் ஆண்டில் நுழைகின்றோம்.
அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்.
http://classroom2007.blogspot.in/2007/01/blog-post.html

எனக்கு வாத்தியார் பட்டத்தை முன்பே (அதாவது எனது பல்சுவைப் பதிவில்) வழங்கியவரும், எனது பதிவுலக நண்பருமான திருவாளர்.கோவி,கண்ணன் அவர்கள்தான் அதில் முதல் பின்னூட்டம் இட்டவர். இந்த  இனிய தருணத்தில் அவரை நினைவு கூற விரும்புகிறேன்.அத்துடன் எனது நன்றியும் அவருக்கு உரித்தாகுக!





அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------
கீழே இரண்டு படங்கள் உள்ளன. அதில் உள்ளவர்கள் யார் யாரென்று சொல்லுங்கள். எல்லோரையும் கண்டு பிடித்துவிட்டால், நீங்கள் அதி புத்திசாலிதான் - மறுப்பதற்கில்லை!

படம் 1

 படம் 2

க்ளூ வேண்டுமா?
அனைவருமே பிரபலங்கள்தான்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================================

14.1.14

பொங்கல் வாழ்த்துக்கள்!

 

பொங்கல் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள் மற்றும் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

பொங்கலை முன்னிட்டு நாளை வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 16.1.2014 வியாழக்கிழமையன்று நடைபெறும்.

நேற்று வெளியான புதிருக்கான விடை:

அறிஞர் அண்ணா அவர்களின் ஜாதகம் அது. சரியான விடையை எழுதிய அத்தனை பேர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

15.9.1909ஆம் தேதியன்று காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரத்தில் பிறந்தவர் அவர்!


அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.1.14

Astrology: Quiz 36 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 36 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி முப்பத்தியாறு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர். அரசியல்வாதி.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

10.1.14

முருகா முருகா முருகா... வருவாய் மயில் மீதினிலே!

முருகா முருகா முருகா... வருவாய் மயில் மீதினிலே!

பக்தி மலர் 

திரு.உன்னி கிருஷ்ணன் அவர்களின் இனிய குரலில் ஒலிக்கும் முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள். 

அன்புடன்
 வாத்தியார் 
--------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
Our sincere thanks to person who uploaded this song in the net




வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

9.1.14

Short Story, சிறுகதை: இறந்தவன் எங்கே போகிறான்?

 
Short Story, சிறுகதை: இறந்தவன் எங்கே போகிறான்?

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 5

(எங்கள் அப்பச்சி (MY Father) சொன்ன கதைகள் வரிசையில் இது ஐந்தாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து விரிவாக்கம் செய்து, எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம்)

தலைப்பு: பிறவிப் பயன்!

கொட்டு முளக்கத்தோடு ஒருவர் இறுதி யாத்திரை சென்று கொண் டிருந்தார். கண்ணீரும் கம்பலையுமாக முன்னால் சென்று கொண்டிருந்த அவருடைய மகன்களுடன், உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 100 பேர்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆற்றில் குளித்துவிட்டு எதிரில் வந்து கொண்டிருந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஒருவர், வருகிறவர்களுக்கு வழிவிட்டு, அருகில் இருந்த வீட்டுத் திண்ணை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டார். அவர்கள் யாரையும் தொட்டு விடக்கூடாது என்று எண்ணி அப்படிச் செய்தார்.

ஆனால் அவர் ஏறி நின்றது ஒரு தாசியின் வீடு. ஏறிய பிறகுதான் அவருக்கு அது நினைவிற்கு வந்தது. அறியாமல் நடந்து விட்டது. வீட்டிற்குப்போய் மீண்டும் ஒரு முறை குளித்து விட்டால் போகிறது என்று தன் மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டார்.

வீட்டின் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. தாசி தன் வீட்டு வேலைக்காரியிடம் சொன்னாள், "அடியே அஞ்சலை, உலக அலைக்கழிப்பும், அவதியும் நீங்கி ஆத்மா ஒன்று விடுதலையாகிப் போய்க்கொண்டிருக்கிறது. அது சொர்க்கத்திற்குப் போகிறதா அல்லது நரகத்திற்குப்போகிறதா என்று போய்ப் பார்த்துவிட்டு வா!"

வேலைக்காரியும் விளக்குமாற்றைக் கீழே போட்டுவிட்டுக் கதவைத்திறந்து கொண்டு, சென்று கொண்டிருந்த இறுதிப் பயணக் கூட்டத்தோடு தானும் கலந்து செல்லத் துவங்கினாள்.

திண்ணை மீது நின்று கொண்டிருந்த நம் கதாநாயகருக்கு மிகுந்த ஆச்சரியம் ஆகிவிட்டது. "அடடா! நாமும் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக எவ்வளவு நூல்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறோம்? எத்தனை இடங்களில் பிரசங்கம் செய்திருக்கிறோம்? இந்தத் தாசிக்குத் தெரிந்தது மட்டுமல்ல தாசியின் வேலைக்காரிக்குத் தெரிந்த வித்தை நமக்கு தெரியாமல் போய்விட்டதே?  அது எப்படி, இறுதி யாத்திரை செல்பவன் ஒருவன் சொர்க்கத்திற்குப் போகிறானா அல்லது நரகத்திற்குப் போகிறானா என்று கண்டு பிடிக்க முடியும்?" என்று மின்னாலாய் மனதிற்குள் எண்ணங்கள் சுழன்றடிக்க, கடைசியில் தாசியையே வெளியில் அழைத்து விபரத்தைச் சொல்லி, விடையைக் கேட்டார்.

தாசி புன்முறுவலோடு பதில் சொன்னாள் "அய்யா. இது உப்புப் பெறாத சாதாரண விஷயம். செத்தவனோடு கூடப் போகிறவர்கள் பேசிக்கொண்டு போவதைக் கேட்டால் போதும் அது தெரிந்து விடும். நல்ல மனுஷனப்பா, நாலு பேருக்கு உதவியாக இருந்தானப்பா, காசு பணம் பார்க்க மாட்டானப்பா, ஓடி வந்து உதவி செய்வானப்பா, பரோபகாரியப்பா என்று அவர்கள் சொன்னால் அவன் சொர்க்கத்திற்குப் போகிறானென்று அர்த்தம். அப்படி யாரும் பேசவில்லை என்றால், அவன் கிராதகன், நரகத்திற்குத்தான் போகிறான் என்று அர்த்தம்"

நம் ஆசாமி அதிர்ந்துபோய் செயலற்று நின்று விட்டார்

கற்றது கையளவு: கல்லாதது கடலளவு!

”மனிதன் பிறவி எடுத்தது, நாலு பேருக்கு நன்மை செய்வதற்காகத்தான். தன்னைப் பேணியாக அதாவது சுயநலம் மிக்கவனாக இருக்கக்கூடாது. பிறவிப் பயன் அதுதான்” என்பதை வலியுறுத்துவதற்காக எங்கள் அப்பச்சி, இந்தக் கதையைச் சொல்வார்கள்.

=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.1.14

Astrology: வரவேண்டும் நல்ல துணை; தர வேண்டும் வாழ்வுதனை!

 

Astrology: வரவேண்டும் நல்ல துணை; தர வேண்டும் வாழ்வுதனை!

நேற்றையப் புதிருக்கான சரியான விடை:

ஏழாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று திரிகோண வீட்டில் இருந்தாலும் கேதுவின் சேர்க்கை, மற்றும் ராகுவின் பார்வையால், அவர் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்.களத்திரகாரகன் சுக்கிரன் எட்டாம் வீட்டுக்காரனான சூரியனுடன் கூட்டணி. அவரும் பாதிக்கப்பெற்றிருக்கிறார்.அதனால் உரிய வயதில் திருமணம் நடைபெறவில்லை. மிகவும் தாமதமாக நடைபெற்றது. 39 வயதில் திருமணம் நடைபெற்றது.

பாக்கியஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான், ஏழாம் வீட்டுக்காரனை தன்னுடைய விசேடப் பார்வையால் பார்ப்பதாலும், தன்னுடைய ஐந்தாம், பார்வையால் களத்திரகாரகன் சுக்கிரனைப் பார்ப்பதாலும், தாமதமாகிக் கொண்டிருந்த ஜாதகியின் திருமணத்தை தன்னுடைய மகா திசை துவங்கியதும் நடத்தி வைத்தார். அதாவது அவர்கள் இருவரையும் சரிக்கட்டி நடத்தி வைத்தார்.

ஒற்றைவரியில் பதில் சொன்னால்: ஆதீத தாமதத்துடன் திருமணம் நடைபெற்றதற்கான உதாரண ஜாதகம் இது!


============================================================================
விடையைச் சரியாக, அல்லது மிகவும் நெருங்கிப் பதில் சொன்னவர்கள் 5 பேர்கள். அவர்களின் பெயரை, அவர்களுடைய கணிப்புக்களுடன் பதிவிட்டுள்ளேன். அந்த ஐவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுகள். அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.Better luck next time!
-----------------------------------------------------------------------------
1
Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதி சனி இராகுவுடன் 11ம் வீட்டில். வாழ்க்கையில் எல்லாமே தானாகவே கிடைக்கும். 2ம் வீட்டு அதிபதியும் சனி பகவானே. அவர் அந்த வீட்டிற்கு கேந்திர ஸ்தானத்தில் இருக்கிறார்.
    7ம் வீட்டு அதிபதி சந்திரன் உச்சம் பெற்று திரிகோண வீட்டில் இருக்கிறார். உடன் நீச கேது. நீச பங்க இராஜயோகம். களத்திரகாரகன் சுக்கிரன் இலக்கினத்தில் இருந்து 7ம் வீட்டை பார்க்கிறார். இவர் எட்டாம் வீட்டு சூரியனோடு இருந்தாலும், குரு திரிகோணத்தில் 9ம் வீட்டில் இருந்து இலக்கினத்தையும், இலக்கினத்தில் இருக்கும் சுக்கிரனையும், பாக்கியாதிபதி புதனையும், 8ம் வீட்டு சூரியனையும், 5ம் வீட்டில் இருக்கும் சந்திரனையும் பார்க்கிறார். ஆனால் சனியும் இலக்கினத்தையும் அதில் உள்ள கிரகங்களையும் தனது விசேஷ பார்வையால் பார்க்கிறார். இவர் இலக்கினாதிபதியாக இருப்பதால் பிரச்சனைகள் குறைவு. 7ம் வீட்டை செவ்வாய் பார்க்கிறார். அதனால் சற்று தாமதமான திருமணம். ஜாதகிக்கு திருமணம் வியாழ தசையில் இனிதே நடந்தேறி இருக்கும். 5ம் வீட்டு சுக்கிரன் இலக்கினத்தில் இருக்கிறார், 5ம் வீட்டில் சந்திரனும் கேதுவும் நீச பங்க இராஜ யோகத்தில் இருக்கின்றனர். 5ம் வீட்டிற்கும் 5ம் வீட்டு சுக்கிரனுக்கும் குரு மற்றும் சனி பார்வை உண்டு. புத்திர பாக்கியம் உண்டு.
    பெண்களுக்கு எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். எட்டாம் வீட்டு சூரியன் இலக்கினத்தில் இருப்பதால் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து கணவனை விட்டு பிரிந்து வாழ்வார்.
----------------------------------------------
2
Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The provided horoscope person lagna lord saturn in 11th place alongwith ragu aspects 7th lord moon.Since saturn in the place of mars, it creates some problems to 7th lord moon due to aspects.
    7th lord moon exalted with kethu. saturn moon aspects delays the marriage. and disturbs the marriage.
    But moon is exalted. Guru also in 9th place. Guru aspect the 7th lord moon. So the effect of saturn aspects reduces.
    Lagna sukran and mercury, sun (pagai) aspects the 7th place.
    Hence the marriage will be delayed and will face lot of difficulties.
    Thanking you.
-------------------------------------------------------------------------------------------------------
3
Blogger vanikumaran said...
    7ம் வீடு சனி பார்வையால் தாமதமான திருமணம் ஆகும்.
    7ம் அதிபதி 5ல் தாய், அல்லது தந்தை வழி உறவில் காதல் திருமணம் ஆகும்.
    7ம் அதிபதி சந்திரனுடன் கேது +12ம் அதிபதி பார்வை (விரையாதிபதி குரு) மற்றும் சனி + சந்திர பார்வை கணவர் தவறி இருப்பார், அல்லது பிரிந்திருப்பார்.
    ஆனால் 4ம் அதிபதி சுகாதிபதி செவ்வாய் ஆட்சி. சொத்து மூலம் சுகம்
    7ம் வீட்டை சனி 9ம் பார்வையால், செவ்வாய் 4ம் பார்வையாலும்,6ம் அதிபதி புதன் லக்னத்திலிருந்தும்,8ம் அதிபதி சூரியன் லக்னத்திலிருந்தும் பார்க்கின்றன. இது நல்ல அமைப்பு அல்ல.
------------------------------------------------------

Blogger Ravichandran said...
    Ayya,
    She must be having delayed married, but having troublesome life and She must be married to high, rich family person. Reason for delayed marriage - Saturn is looking Moon(Punarpoo dosam). Reason for marriage - Uccha Rahu is aspecting 7th house owner(Moon) & Neechapanga Rajayogam(combination of Uccha Moon and Neecha Ketu) and Kalathirakaran(Venus) is aspecting 7th house and he is Yogakaran for Magara lagna as well. Reason for troublesome marriage - 6th house owner(Bhudhan) & 8th house owner(Sun) aspecting 7th house and 12th owner(Guru) aspecting 7th house owner(Moon).
    Your Student,
    Trichy Ravi
------------------------------------------------------------------------ 
5
Blogger KJ said...
    Sir,
    Native could get late married but marriage life will be good. She will get good family. She will be beautiful.
-------------------------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.1.14

Astrology: மணமாலைக்கென்ன வழி? உன் மெளனம் என்ன மொழி?

 
Astrology: மணமாலைக்கென்ன வழி? உன் மெளனம் என்ன மொழி?

Quiz No.35: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி முப்பத்தைந்து.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின்  திருமண வாழ்க்கையை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.


அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-----------------------------------------------------------------------------------------------------------
நேற்றைய புதிருக்கான சரியான விடை:

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ஜாதகம்தான் அது!
1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம தேதியன்று அதிகாலை 4:02 மணிக்குக் கல்கத்தா நகரில் பிறந்தவர் அவர்.

சரியான விடையை எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமாரந்த நன்றி! மேலும் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!
=============================================================

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

6.1.14

Astrology: Quiz 34 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 34 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி முப்பத்திநான்கு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

இடைச் சேர்க்கை: குரு கடகத்தில் இருக்கிறார். அதைத் தவறாகக் கும்பத்தில் என்று குறிப்பிடப் பெற்றிருந்ததை இரு மாணவக் கண்மணிகள் சுட்டிக் காட்டினார்கள். இப்போது சரி பண்ணியுள்ளேன் (காலை 7:35 மணி) சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

வடநாட்டுக்காரர். கவிஞர். பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

3.1.14

சங்கே முழங்கு இங்கே முழங்கு!


இரண்டு மலர்கள்!

முதலில் பக்தி மலர். அடுத்தது தமிழ் மலர்
படித்து, கேட்டு மகிழுங்கள்.


அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
   தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே!.


அருணகிரியார் அருளிய கந்தரலங்காரப் பாடல்

விளக்கம்:
நாட்கள் அடியேனை என்ன செய்யும்?
வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள்தான் என்ன செய்யும்?
கொடிய இயமனால்தான் என்ன செய்யமுடியும்?
குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும், சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும், பன்னிருதோள்களும், கடப்ப மலர் மாலையும், அடியேனுக்கு முன்வந்து தோன்றும்.
அவர் என்னைக் காத்தருள்வார்
=================================================
2.
தமிழ் மலர்

பாடல்: சங்கே முழங்கு சங்கே முழங்கு.
ஆக்கம்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
திரைப்படம்: கலங்கரை விளக்கம் (1965ஆம் ஆண்டு)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

(சங்கே முழங்கு) 


திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

(சங்கே முழங்கு)

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

=================================================
பாடலின் காணொளி வடிவம்:
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net!



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
======================================================

2.1.14

பாரதி சொன்ன மன உறுதி!

 

பாரதி சொன்ன மன உறுதி!

புத்தாண்டின் முதல் பாடத்தை மகாகவி பாரதியின் பாடலோடு துவங்குவோம்!
அத்துடன் ஆடோவில் பயணைப்பவர்களை எச்சரிக்கும் குறும்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளேன், அனைவரும் இரண்டையும் பாருங்கள்!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். இன்றையப் பதிவு தானியங்கி முறையில் (Auto Post) வெளியாகி உள்ளது. உங்கள் பின்னூட்டங்களும், அவற்றிற்கான பதில்களும் 3.1.2014  வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும். பொறுத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரியகடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்!

- மாகாகவி சுப்பிரமணிய பாரதி
----------------------------------------
2.
ஆட்டோவில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை வைத்து நமக்கு
வழங்கியிருக்கிறார்கள் மேன்மையானவர்கள் சிலர். அதைக் கீழே கொடுத்துள்ளேன் அனைவரும் பாருங்கள்.

Short Film (குறும்படம்) தலைப்பு: எங்கே போவணும்?




Our sincere thanks to the person who uploaded this video clipping in the net
---------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.1.14

Astrology: புது உற்சாகத்துடன் பிறக்கும் புத்தாண்டு!

 
வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், மேலும், வந்து எட்டிப் பார்த்துவிட்டு போகிறவர்கள் என்று அனைவருக்கும் வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு வளம் மிக்கதாக, மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும். உங்கள் கனவெல்லாம் நனவாகட்டும்.
 ------------------------------------------------------------------------------------------------------------------
Astrology: புது உற்சாகத்துடன் பிறக்கும் புத்தாண்டு!

இந்த ஆண்டு நான்கு பெரிய கிரகங்கள் தங்கள் பெட்டி படுக்கைகளுடன் வேறு ஊருக்கு (வேறு ராசிக்கு) குடிபோக இருக்கிறார்கள். வாருங்கள், அந்தந்த சமயங்களில் அவர்களின் தட்டு முட்டுச் சாமான்களைக் கட்டிக் கொடுத்து,  அவர்களை வழியனுப்பி வைப்போம். அதாவது பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வேலையை நாம் செய்வோம் என்கிறேன். (Packers and Movers are the people who help us to pack and move our belongings)

1.குரு பகவான்.

இந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதியன்று மிதுன ராசியில் உள்ள செக்போஸ்ட்டைக் கடந்து, கடக ராசிக்குப் பயணமாகிறார். அங்கே உள்ள ரிசார்ட்டில் அவர் ஒரு வருட காலம் தங்கி இருப்பார். மிதுனராசிக்காரகள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். தங்கள் வீட்டை சுத்தம் செய்துகொள்ளலாம். ஒருவருடமாக பட்ட அவஸ்தைகள் இனி இருக்காது. அதுபோல மீன ராசிக்காரர்களும், மகர ராசிக்காரர்களும், விருச்சிக ராசிக்காரர்களும், கன்னி ராசிக்காரர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆண்டு முழுவதும் இரவில் வீட்டில் தோசை அல்லது உப்புமா என்று வருத்தப் பட்டுக்கொண்டே சாப்பிடாமல், அன்னபூர்ணா, சரவண பவன், அடையார்ஆனந்த பவன், ரெஸிடென்சி, மெரிடியன் என்று வசதிக்குத் தகுந்தபடி குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சென்று, தினமும் இரவில் டின்னர் சாப்பிடலாம். குரு பகவானால் இந்தக் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எந்த உபத்திரவமும் ஒரு ஆண்டு காலத்திற்கு இருக்காது. மொத்ததில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

2.ராகு மற்றும் கேது.

இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி இடம் மாறுகிறார்கள். வேறு ஊரில் உள்ள கிரவுண்டுக்குச் சென்று அங்கே தங்கள் ஆட்டத்தைத் துவங்க இருக்கிறார்கள்.

3.சனீஷ்வரன்.

இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி முதல் சுமார் இரண்டரை ஆண்டு காலம் அவர் உங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். திரைகதை, வசனம், இயக்கம், படப்பிடிப்பு, இசை, எடிட்டிங், என்று எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்வார். படம் எப்படி அமையும் என்பது உங்களுடைய கதையைப் பொறுத்தது. அதாவது உங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்தது.

 உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி. அத்தனை பேர்களையும் வைத்துத் தனித்தனியாகப் படங்களை அவரால் இயக்க முடியுமா?

ஏன் முடியாது?

அவருக்கு சாத்தியமில்லாதது ஒன்றுமே இல்லை!

எத்தனை கோடி மக்களுக்கு  பல வசதிகளுடன் மின்னஞ்சல்கள்,கூகுள் டிரைவ்கள், ப்ளாக்குகள், லட்சக்கணக்கான நிறுவனங்களுக்கு விளம்பர வசதிகள், தேடு பொறிகளில் தேடிப் பல தகவல்களை எடுத்துப் படிக்கும் வசதிகள் என்று கூகுள் ஆண்டவர்  செய்து இன்று நம்மை அசத்திக் கொண்டி ருக்கும்போது, அவரைவிட கோடிக்கணக்கான அளவில் வலிமையுடைய சனீஷ்வரரால் அதைச் செய்ய முடியாதா?

கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால் ஒன்று, சனீஷ்வரனிடம் என்ன சூப்பர் கணினி இருக்கிறது? அதற்கு எத்தனை லட்சம் சர்வர்கள் இருக்கின்றன என்ற விபரம் மட்டும் தெரியவில்லை.

தெரிந்தால் என்ன செய்ய முடியும்?

”அதைப் போல நாமும் ஒன்றை நிறுவி அவரைக் கண்காணிக்கலாமே?”

”ஒரே நொடியில், அதைப் பஸ்பமாக்க அவராலும் அவருடைய தோழர்கள் ராகு மற்றும் கேதுவாலும்  முடியாதா என்ன?”

முதல் இரண்டு ஓவர்களிலேயே ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் பதினோரு விக்கெட்டுகளையும் சாய்த்து நம்மை ஆட விடாமல் செய்து விடமாட்டார் களா என்ன?

விரிவான பலன்களை அவரவர் இடம் மாறும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம். விரிவாக எழுதுகிறேன். இங்கே அல்ல! Galaxy2007 வகுப்பில்.

அன்புடன்,
வாத்தியார்

------------------------------------------
”வாத்தி (யார்), தலைப்புக்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் (என்ன விளக்கம்)?”

”இருக்கு ராசா! புத்தாண்டு புதனில், அதாவது புதன் கிழமையில் பிறக்கிறது. பொன் கிடைத்தாலும், புதனில் கிடைக்க வேண்டும் என்பார்கள். அதுதான் உற்சாகம் ராசா!”

==============================================
2


நேற்றைய புதிருக்கான விடை!

ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்!
மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில். அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி
ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.

நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை
மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்!

மொத்தம் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 35 பேர்கள். அவர்களில் 13 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். சரியான விடையை எழுதிய
அத்தனை பேர்களுக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அத்துடன் போட்டில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும்  எனது பாராட்டுக்கள்.
சிறப்பான பதிலை எழுதியவர்களின் பெயர்களை, அவர்கள் எழுதிய கணிப்புடன் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப்
பாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...

    லக்னாபதியும், கல்வி ஸ்தானதிபதியுமான புதன் 11ல் நின்றாலும், எட்டாம் அதிபதி சனி, மூன்றாம் அதிபதி சூரியனுடன் இருப்பதாலும், சூரியன் சனி
    கிரஹயுத்தத்தில் இருப்பதாலும், புதன் சூரியனால் அஸ்தங்கதம் அடைந்திருக்க வாய்ப்பு இருப்பதாலும் ஜாதகருக்கு படிப்பு கட்டைதான்.வாக்கு

ஸ்தானதிபதியும் மனோகாரகனுமான சந்திரன் நீச மடைந்து ஆறாம் விட்டுக்காரனான குருவுடன் நின்றதால் பேச்சு பாதிப்போ, அல்லது
மாற்றுத்திறனாளியாக இருக்க வாய்ப்புள்ளது. சகோதரர்கள் தயவில் வாழும் நபராக இருப்பார்.    அதிக பட்ச படிப்பு எட்டாவதுவரைதான் இருக்கும்.   
----------------------------------------------
2
Blogger jagvettri@gmail.com said..
.
    அறிவு மிக்கவர் ஆனால் படிப்பு வராது .4ஆம் அதிபதி புதன் 4க்கு எட்டாம் இடதிலும் புத ஆதித்ய யோகம் பெட்ராலும் எட்டாம் அதிபதி சனி
கூட்டு சரி வராது அதொடு அல்லாமல் நீச்ச சனி செவ்வாய் பரிவர்தனை மற்றும் பார்வை அவர்கள் முறையே எட்டுக்கும் ஆறுக்கும் அதிபதி.9பதாம்
இடதுக்கும் அதே நிலமை தான்.படித்திருந்தால் +2 வரை படிதிருக்கலாம்.   
------------------------------------------------
3  
Blogger JAWAHAR P said...

    Sir
    ஜாதகர் 7 அல்லது 8ம் வகுப்புவறை தான் படித்திருப்பார் (12 வயது வரை அவர் ஜாதகம் பலன் அவருக்கு இல்லை)
    3ம் அதிபதி 11ல் உச்சம் உடன் சனி உச்சம் பெற்ற செவ்வாய் பரிவர்தனை (நல்லவர்கள் ஆன குரு சந்திர யோகத்துடன் 6ல் மறைவு)லக்னாதி 4ம்
இட அதிபதி இவர்களுடன். ஜாதகர் பெரிய தாதா வெட்டு குத்துக்கு அஞ்சாதவர்
    நன்றி
    ஜவஹர்
-----------------------------------------------------

Blogger thozhar pandian said...

    நான்காம் வீட்டுக்காரரும் கல்விகாரகனுமான புதன் 4ம் வீட்டிற்கு எட்டாம் வீட்டில். கூடவே உச்ச சூரியனும் நீச சனியும். செவ்வாயின் பார்வையும்
புதன் மேல். செவ்வாய் இந்த இலக்கினத்திற்கு 6 (வில்லன்) மற்றும் 11ம் அதிபதி. வேறு எந்த சுப கிரக பார்வையும் இல்லை. குருவும் புதனும் அஷ்டக
சஷ்டக நிலையில் உள்ளனர். ஆதலால் ஜாதகரின் படிப்பு பள்ளியோடு முடிந்திருக்கும். பள்ளிப் படிப்பை கூட முடித்திருக்க மாட்டார்.
------------------------------------------------------
5   
Blogger karuppiah Sakthi said...

    வாத்தியார் அவர்களுக்கும், நமது வகுப்பறை மாணவர்களுக்கும், என் இனிய புத்தாண்டு நல் வாழ்துக்கள்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் உயர் கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
    4ஆம் அதிபதி புதன் தன்னுடைய இருப்பிடத்துக்கு 8இல் பகை வீட்டில் உள்ளார்.அத்துடன் செவ்வாயின் பார்வையில் உள்ளார்.உடன் சனியின்
கூட்டனி வேறு.
--------------------------------------------------------
6   
Blogger Saravanan J said...

    dear sir,
    in this chart the second house chandran is neecha, and in the second house kethu was present.so he can,t cross his lower level studies.
    4th house is budha, but budha present in mesha, it is the 8th place from the kanni, so we can sure that he can't crossed his lower studies,
kethu represnts the long time duration,   

------------------------------
7
Blogger C Jeevanantham said...

    Dear Sir,
    1. The given horoscope person's mercury is joint with sun. So he must be having good knowledge naturally. But closeness of saturn and neecha saturn does not allow him to study well.
    2. The 4th lord for studies is in placed 11th place along with sun and saturn. Saturn made him not to study proper.
    3. Exalted sukran aspect 4th place. So he is rich and spent his life by material enjoyment. Not got interest in studies. He enjoyed the wealthy
life.
    4. Guru does not aspect 4th lord or 4th place. So he had studied only upto the basic level. may be upto 8th or 9th standard.
    5. Also guru placed in 6th place,not favorable.

-------------------------------------------
8  
Blogger ravichandran said...

    Respected Sir,
    My answer for our today's Quiz No.33:-
    Education is denied to this Native.
    Even he has not completed his schooling.
    Reasons for not getting education are as follows:
    1. Fourth house authority (Mercury) is sitting eighth house from its own house. It's bad.
    2. The authority for education (Mercury) is associated with Saturn. It's worse.
    3. Vidyakaraga (Mercury) is getting sixth house authority (Mars) aspects. It's worst.
    Hence, The native wasn't blessed to study according to his horoscope.
    With kind regards,
    Ravichandran M.

-------------------------------------------------------------
9  
Blogger Subamohan Subbu said...

    Respected Sir
    My observations of this horoscope are as follows:
    I) PLANETS POSITION:
    a) Lagnathipathi & 4th LordMERCURY at 11th House in association with Saturn which is deblitated.
    b) Lagnum is Aspected by Saturn which is deblitated
    c) Mars at 8th Position is aspecting lagnathipathi
    d) Mercury in association with Sun ( combusted)
    Lagnum is made weak by Saturn and also lagathipahi because of Mars
    Moon is debilitated & Mars exalted
    PLANETARY ASSOCIATION:
    a) Association of Sun+Mercury –Budha Aditya yoghum
    b) Exchange of house between two malefic – Saturn & Mars
    c) Sun + Saturn – Neesa bangaum yogum
    d) Jupiter and Moon - 6 th house – bad position
    e) Jupiter aspecting Venus
    f) Venus aspecting 4th house
    Fourth house
    The lord of fourth house is at 8th Position from it along with Saturn and aspected by Mars. But the Fourth house is aspected by Venus which is at Kendra position but has Kendrathipathya doshum
    Results:
    1) Since the fourth lord is weak the person would have done School study and lost the opportunity to go to college.
    2) But he will be a skilful and intelligent man. His analytical capacity will be excellent.
    3) He will have easy gain and money in his life as the Lagnathipathi is at 11th house
    4) He will be interested in fine arts – May be Movie placback singer or Artist.
    5) Since the Karaga – Jupiter is at 6 th house he would have lost the opportunity to go for higher studies though he is very intelligent.
    6) All the yogas will give him fame and money – May be a politician also


    Dr.Mohan
    Brunei

------------------------------------------------------------
10 
Blogger dhana lakshmi said...

    ஐயா அவர்களுக்கு
    ஜாதகர் பள்ளிபடிப்பை பாதியில் விட்டவராக இருப்பார். 2மிடம் கேது இதனை செய்திருப்பார்.
    (தைன்ய பரிவர்த்தனை) 8மிடம் மற்றும் 11மிடம்.
    (3 கிரகம் உச்சம் 2 கிரகம் நீசம் )(உச்சமான செவ்வாய் பார்வை உச்சமான சுரியனி்ன் மேல்) சரியான குழப்பம்.
    பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்
----------------------------------------------------------------
11   
Blogger Ramasamy said...

    The native couldn't study beyond middle school level. The reasons are as below.
    1) For education, we should see the lagna lord, 2nd lord, 4th lord and 5th lord (higher education), mercury and guru's positions. Here both lagna lord and 4th lord is mercury, also he is karaga for education. Mercury is in 11th house with 8th lord saturn. This is 8th house from 4th house. Also
mercury is aspected badly by mars. So he is very weak.
    2) Guru is in 6th house.
    3) 2nd lord moon is neecham in 6th house.
    5th lord sukran is ucham. So the native will settle in life using his intelligence during his sukra dhasa period.
    Thanks,
    Ramasamy.

----------------------------------------------------
12 
Blogger Raja Murugan said...

    அய்யா, வணக்கம்.
    தங்கள் கொடுத்துள்ள ஜாதகம் மிகவும் ராஜயோகம் உள்ள ஜாதகம்.
    மிதுன லக்கனம்
    1.மேஷத்தில் சூரியன் சனி - நீசபங்க ராஜயோகம்
    2. விருச்சிகத்தில் குருசந்திர யோகம்
    3. செவ்வாய் மகரத்தில் உச்சம்
    4. மீனத்தில் சுக்கிரன் உச்சம்
    5. சனி செவ்வாய் பரிவர்த்தனை.
    அரசாளக் கூடிய ஜாதகம்
    இவை எல்லாம் இவரை வசதிகள், சொத்து, பணம், புகழ், இவற்றில் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கும் சந்தேகம் இல்லை.
    லக்கினத்திற்கு 6 ல் குரு மறைவதாலும்,
    கல்வி ஸ்தானத்தை எந்த சுப கிரக பார்வையும் இல்லாததாலும்,
    கல்வி ஸ்தானாதிபதியும், வித்தியகரகனும், லக்க்னதிபதியும் ஆன புதன் தன் கல்வி ஸ்தானத்திற்கு 8 ல் மறைவதலும்,
    கல்வி ஸ்தானத்திற்கு கல்வி ஸ்தானமான தனுசு ராசியை எந்த சுப கிரக பார்வை இல்லாததாலும்
    இவர் ஆரம்ப பாடசாலையுடன் படிப்பு முடிந்து இருக்கும்.
    நன்றியுடன் ராஜமுருகன்
------------------------------------------------------
13 
Blogger Chandrasekaran Suryanarayana said...

    Quiz No: 33
    வணக்கம்.
    ஜாதகர் படிக்காதவர்.
    பள்ளிக்கூட படிப்புடன் நிறுத்தியவர்.

    ஜாதகர் புத்திசாலியானவர்.
    மிதுன லக்கினத்திற்க்கு யோக காரன் சுக்கிரன். உச்சமான சுக்கிரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருந்தும், 4ம் வீட்டு அதிபதி புதன் 11ம்
வீட்டில் சனியுடன் அமர்ந்த்ள்ளார். லக்னாதிபதி புதனும், 4ம் வீட்டு அதிபதி புதனும், 11ம் வீட்டில் சனியுடன் கூட்டு சேர்ந்து புதன் அசுப கிரகமாக
மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.
    11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.
    வித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம். மேலும், 6ம் வீட்டில், நீச மான சந்திரனுடன் வக்கிரமான குரு சேர்ந்ததால் ஒரு பயனும் இல்லை.
    2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு
எற்படும். சனியின் 4ம் பார்வை (அர்த்தாஷ்ஷடம சனி) கேதுவை பார்ப்பதால் மேலும் படிப்பிற்க்கு தடங்கல். 16 வயதில் கேது மகா தசை
ஆரம்பித்ததால், பள்ளி படிப்பிற்க்கு மேல் கல்வி தடங்கல்.
    குருவின் 9ம் பார்வை 2ம் வீட்டினில் உள்ள கேதுவை பார்ப்பதால் குரு சண்டால யோகம் எற்பட்டது. மேலும் குரு வக்கிரமாக இருப்பதால்
படிப்பிற்க்கு ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.
    11ம் வீட்டிலுள்ள புதனுடன் சூரியன் சேர்ந்து புத-ஆதித்திய யோகம் உண்டாக்கி ஜாதகருக்கு நல்ல புத்தியை வழங்கினார். (Sun-Mercury
combination favours proficiency in mathematics)
    மேலும், 11ம் வீட்டிலுள்ள சூரியனுடன் சனி சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி இரண்டு பங்கு செல்வத்தை வழங்கினார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
---------------------------------------
அத்தனை பேர்களுக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

===========================================   

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!