13.1.14

Astrology: Quiz 36 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 36 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி முப்பத்தியாறு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர். அரசியல்வாதி.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

30 comments:

  1. அறிஞர் கா. ந. அண்ணாதுரை அவர்களுடையது

    ReplyDelete
  2. Vanakkam.

    This Horoscope is belongs to Sri. C.N.Annadurai
    DOB: 15th September 1909
    Birth Time : 9.30 AM
    Birth Place: Kanjeepuram, Tamil Nadu
    Birth star: Uththaram
    Day: Wednesday

    Chandrasekaran Suryanarayana

    ReplyDelete
  3. Arignar Anna born on sep 15, 1909 at 9.30am.

    ReplyDelete
  4. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    quiz 36க்குரிய‌ விடை:
    Dr. C N அண்ணாதுரை அவர்கள் ஜாதகம்.

    *திமுக கட்சியை உருவாக்கியவர்.
    *காங்கிரஸ்கட்சி அல்லாதொரு கட்சியின் ஆட்சியை முதன்முதலில் தமிழகத்தில்
    ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
    *ந‌மக்கெல்லாம்'தமிழ்நாடு'கொடுத்தவர்.

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  5. சௌம்ய வருடம் ஆவணி மாதத்தில் சுக்லபக்ஷம் உத்திர நக்ஷத்திரத்தில், காஞ்சிபுரத்தில் பிறந்து திராவிட இயக்கத்தில் வளர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றி, ஒன்றரை கோடி மக்கள் சோகமாய்ச் சூழ நிற்க (அந்தக் காலத்து கின்னஸ் சாதனை), பிரியாவிடை பெற்றுக் கொண்ட திரு சி.என்.அண்ணாதுரை அவர்கள். (1909-செப்-15 காலை 10மணி சுமார்)

    ReplyDelete
  6. Dear Sir

    Good morning.The native of the horoscope is Mr C.N.Anna durai.

    the DOB is 15.09.1909

    ReplyDelete
  7. நாங்கள் விரும்புபவரின் ஜாதகம்
    நம் அலசல் பகுதியில் வர

    என்ன செய்ய வேண்டும்
    எப்படி அனுப்ப வேண்டும்

    அனுமதி கிடைக்குமா
    அலசவும் ஆலோசிக்கவும்

    ReplyDelete
  8. மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி முப்பத்தியாறுக்கான பதில்
    அண்ணாதுரை
    மு.சாந்தி

    ReplyDelete
  9. ஐயா இது கா. ந. அண்ணாதுரை அவர்களின் ஜாதகம் DOB 15 September 1909

    ReplyDelete
  10. Respected Sir,

    My answer for our today's Quiz no.36:

    Date of birth : 15.09.1909
    Time of birth : 08:00am to 9:00am
    Place of birth: Kancheepuram

    Name of the Native: Shri. C.N. Annadurai (founder of Dravida Munnetra Kazhagam)

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  11. இது தென்னாட்டு பெர்னாட்ஷா, காஞ்சித்தலைவன், அறிஞர் அண்ணாவின் ஜாதகம்! (எங்கள் ஊர்க்காரர் என்பது எனக்குப் பெருமை) எனது வலைப்பதிவும் பெயரும் காஞ்சித்தலைவன்-தான்.

    மூன்று கிரகங்கள் - ஆட்சி; கேது - உச்சம்; ராகு - நீசம்; எந்த கிரகமும் பகையில் இல்லை.

    லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி - எழுத்துத் துறையிலும், பேச்சாற்றலிலும், திரைத்துறையிலும் முன்னேற்றத்தை அளித்தது.

    2ல் கேது - செல்வத்தைத் தரவில்லை. ஆனால் உச்சமடைந்து ஞானத்தைத் தந்தார். 'அறிஞர்' என்ற அடைமொழிக்கும் காரணமானார்.

    6ல் சனி - எதிர்ப்பவர்களை ஏமாற்றம் கொள்ளச்செய்தது. மேலும் செவ்வாயுடன் கூட்டணி தலைமைப் பண்புக்கு உதாரணம்.

    12ல் சந்திரன் குரு - கஜகேசரி யோகம். குரு 12ல் மறைந்தாலும், துலா லக்கினத்திற்கு பாதகராவதால், 12ல் மறைந்து, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் 12ல் புதன் ஆட்சி.

    லக்னாதிபதியே, மாரகஸ்தானாதிபதியும் ஆனதால், சனி திசையில் சுக்கிரபுத்தியில் மறைந்தார்.

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 36 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 15.09.1909 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சராக ஆகி, மிகவும் புகழ்பெற்ற திரு. C. N. அண்ணாதுரை அவர்கள்.

    ReplyDelete
  13. முன்னாள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு C.N.அண்ணாதுரை அவர்கள்
    பிறந்த இடம் : காஞ்சிபுரம்
    பிறந்த நேரம் : செப்டம்பர் 15,1909, காலை 9.30 மணி அளவில்

    ReplyDelete
  14. அறிஞர் அண்ணாதுரை அவர்களின் ஜாதகம். DOB : 15/09/1909 POB : Kanchipuram TOB : 9.30 am

    ReplyDelete
  15. Respected Sir
    The horoscope belongs to MR.C.N.ANNADURAI,former CM of Tamilnadu
    Dr.Mohan
    Brunei

    ReplyDelete
  16. Dear Sir,

    The date of birth is 15th September 1909

    Mr. C.N.Annadurai, Former Chief Minister of Tamilnadu.

    Thanking you,

    C.Jeevanantham.

    ReplyDelete
  17. ஐயா வணக்கம் புதிர் 36க்கு விடை
    ஜாதகர் பெயர் - C.N.அண்ணதுரை (முன்னாள் தமிழாக முதல்வர் மற்றும் தி.மு.க வை தோற்றிவித்தவர்)
    நாள் - 15-09-1909
    நேரம் - காலை 9.30
    இடம் - காஞ்சிபுரம்.

    ReplyDelete
  18. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    தங்களுக்கும்,வகுப்பறை சகமாணவதோழ‌ர்களுக்கும் இனிய‌ தமிழர் திருநாளாம் 'தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்'
    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  19. Mr. C N Anna Durai, the former chief minister of Tamil Nadu.

    DOB: 15-09-1909

    Thanks,
    Ravisankar. M

    ReplyDelete
  20. வணக்கம் குரு.
    இது நமது முன்னால் முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்கள் ஜாதகம்.
    பிறந்தநாள் 15செப்டம்பர்1909. காலை 09.53 மணியளவில்.
    பிறந்த ஊர். காஞ்சிபுரம்.
    நன்றி.
    செல்வம்

    ReplyDelete
  21. வணக்கம் குரு.
    இது நமது முன்னால் முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்கள் ஜாதகம்.
    பிறந்தநாள் 15செப்டம்பர்1909. காலை 09.53 மணியளவில்.
    பிறந்த ஊர். காஞ்சிபுரம்.
    நன்றி.
    செல்வம்

    ReplyDelete
  22. முன்னாள் தமிழக முதல்வர், பேரறிஞர், திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள். எவ்வளவு விசேடமான ஜாதகம் இவருக்கு. இலக்கினாதிபதி சுக்கிரன் இலக்கினத்தில். 12ம் வீட்டில் குரு சந்திர யோகம், 12ம் வீட்டுக்காரனான உச்சம், மூல திரிகோணம் பெற்ற புதனுடன். உச்ச கேது, நீச இராகு. இலாபாதிபதி மற்றும் பாதகாதிபதி சூரியன் சொந்த வீட்டில், சனியும் செவ்வாயும் ஆறாம் வீட்டில் இருப்பது சற்று பிரச்சனை போலவே தெரிகிறது. அதே போல் தான் ஆயுள் ஸ்தானத்தில் நீச இராகுவும். ரோக ஸ்தானத்தில் ஆயுள் காரகரும், துலா இலக்கினத்திற்கு மாரக ஸ்தான அதிபதியுமான செவ்வாயும் இருந்ததால்தான் இவருக்கு புற்று நோய் ஏற்பட்டதோ? சனி தசை கேது புக்தியில் இந்த மாமனிதர் இன்னுயிர் நீத்தார்.

    சனி பகவான் துலா இலக்கினத்திற்கு யோக காரகர். அவர் ஆறில் மறைந்தார். இருப்பினும் அவர் தசையிலேயே (துலா இலக்கினத்திற்கு பாக்யாதிபதியான புதன் புக்தியில்) திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் ஆனார். அடுத்து வந்த கேது புக்தி அவரை இருக்க விடவில்லை. யோககாரகர் ஆறில் மறைந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தாலும், சனி பகவானுக்கு ஆறாம் இடம் நல்ல இடம் இல்லையோ? அல்லது அது கோச்சாரத்திற்கு மட்டும்தானா? வாத்தியார் அவர்கள் இதை விளக்குவார்களா?

    ReplyDelete
  23. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. அன்புடன் வாத்தியார் அய்யா &வகுப்பறை தோழர்கள் அனைவர்க்கும் மனம் நிறைந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
    s.n.ganapathi.

    ReplyDelete
  25. புதிருக்கான விடை:

    அறிஞர் அண்ணா அவர்களின் ஜாதகம் அது. சரியான விடையை எழுதிய அத்தனை பேர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
    15.9.1909ஆம் தேதியன்று காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரத்தில் பிறந்தவர் அவர்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com