20.6.13

கவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது?

 

கவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது?

இன்றைய கவிதைச் சோலையை பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------
உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்
உள்ளங்க ளெல்லாம் தெளிவாகும்
பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும்

காலம் தெரிந்து கூவும் சேவலைக்
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது;
கல்லைத் தூக்கிப் பாரம்வைத்தாலும்
கணக்காய் கூவும் தவறாது

தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது;
சத்தியத்தையும் உலகில் எவனும்
சதியால் மறைக்க முடியாது

அன்புநெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்;
அறிவுக்கதவைச் சரியாய்த் திறந்தால்
பிறவிக்குருடனும் கண் பெறுவான்

வம்பும் கலகமும் சிக்கலும் தீர்ந்தால்
மனிதனை மனிதன் நம்பிடுவான்;
வாராதசமயம் வந்தே தீரும்
மடையனும் அதிலே திருந்திடுவான்!
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


(இதே கவிதையைக் கவிஞர் திரைப்படம் ஒன்றிற்குப் பாட்டாக எழுதியும் கொடுத்தார். படம்: பாதை தெரியுது பார்)

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

20 comments:

  1. பட்டுக்கோட்டையாரை நினைவில் வைத்து மிக மிக அற்புதமான ஒரு கவிதை தந்தமைக்கு நன்றிகள் ஐயா. முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை நம்மை தாக்கச்செய்யும் வரிகள்.

    ReplyDelete
  2. //உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்; பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
    பொய்யும் புரட்டும் பலியாகும்//

    மக்கள் கவிஞர் என்றால் சும்மாவா!... அவர் நிதர்சனமான உண்மைகளை எளிய சொற்களில் வார்த்தெடுத்தவர்!..

    ReplyDelete
  3. "உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்
    உள்ளங்க ளெல்லாம் தெளிவாகும்
    பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
    பொய்யும் புரட்டும் பலியாகும்"

    அருமையான பட்டுக் கோட்டையாரின் பாடல் ஐயா!

    உண்மையதை மறைக்க முடியாது உண்மையில்
    உண்மையில் இறைவன் வாழ்வதனால்

    உண்மையதை மறக்கவும் முடியாது உண்மையில்
    உண்மையது உன்னுள்ளத்தே இருப்பதனால்

    உண்மையதை மறுக்கவும் முடியாது உண்மையில்
    உண்மையாகவே உண்மையோடு வாழ்பவனால்.

    என்ற சிந்தனையோடு பகிர்விற்கு ன்றி கூறுகிறேன் ஐயா!

    ReplyDelete
  4. வணக்கம் ஆசிரியர் ஐயா,
    பட்டுக்கோட்டையாரின் பதிவு நன்று
    வகுப்பு சலிப்புத்தட்டாமல் அவ்வப்போது பாடல்கள் கவிதைகள் போன்ற இடை செருகல்கள்,
    வகுப்பறை நடத்தும் தனித்திறமை தஙகளுடையதே.
    நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த தென்றல் போல்.
    மிக நேர்த்தியாக ந்டத்துகிறீர்கள்.

    ReplyDelete
  5. உண்மை ஒரு நாள் வெளியாகும் என்பது வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்பதைதான் காட்டுகிறது.

    ReplyDelete
  6. அன்றைய பாடல் வரிகளை எவ்வளவு எளிதாக அதுவும் நயத்துடன் புரிந்து கொள்ள முடிகின்றது பாருங்கள்....

    ReplyDelete
  7. இந்தப் பாடலையே இப்போது உள்ள இசை அமைப்பாளர்களிடம் கொடுத்தால்
    பாடல் வரிகளை'பன்'னைப் பிய்ப்பது போல் பிய்த்து, இசைக்கருவிகளின் கூச்சலுக்குள் புதைத்து ஒன்றும் புரியாமல் செய்து விடுவார்கள்.

    படுக்கோட்டை பாட்டுக்கோட்டைதான். நல்ல கருத்துள்ள பாடலை கொடுத்ததற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  8. ///Blogger Sattur Karthi said...
    Good Morning Sir!////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger thanusu said...
    பட்டுக்கோட்டையாரை நினைவில் வைத்து மிக மிக அற்புதமான ஒரு கவிதை தந்தமைக்கு நன்றிகள் ஐயா. முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை நம்மை தாக்கச்செய்யும் வரிகள்.////

    ஆமாம். உங்களுடைய மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி தனூர் ராசிக்காரரே!!

    ReplyDelete
  10. ////Blogger துரை செல்வராஜூ said...
    //உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்; பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
    பொய்யும் புரட்டும் பலியாகும்//
    மக்கள் கவிஞர் என்றால் சும்மாவா!... அவர் நிதர்சனமான உண்மைகளை எளிய சொற்களில் வார்த்தெடுத்தவர்!..////

    ஆமாம். உங்களுடைய மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger G Alasiam said...
    "உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்
    உள்ளங்க ளெல்லாம் தெளிவாகும்
    பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
    பொய்யும் புரட்டும் பலியாகும்"
    அருமையான பட்டுக் கோட்டையாரின் பாடல் ஐயா!
    உண்மையதை மறைக்க முடியாது உண்மையில்
    உண்மையில் இறைவன் வாழ்வதனால்
    உண்மையதை மறக்கவும் முடியாது உண்மையில்
    உண்மையது உன்னுள்ளத்தே இருப்பதனால்
    உண்மையதை மறுக்கவும் முடியாது உண்மையில்
    உண்மையாகவே உண்மையோடு வாழ்பவனால்.
    என்ற சிந்தனையோடு பகிர்விற்கு நன்றி கூறுகிறேன் ஐயா!/////

    உங்கள் பாராட்டுக்கள் எல்லாம், நல்லதொரு பாடலைத் தந்த பட்டுக்கொட்டையாரையே சேரும். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. ////Blogger சர்மா said...
    வணக்கம் ஆசிரியர் ஐயா,
    பட்டுக்கோட்டையாரின் பதிவு நன்று
    வகுப்பு சலிப்புத்தட்டாமல் அவ்வப்போது பாடல்கள் கவிதைகள் போன்ற இடை செருகல்கள்,
    வகுப்பறை நடத்தும் தனித்திறமை தஙகளுடையதே.
    நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த தென்றல் போல்.
    மிக நேர்த்தியாக ந்டத்துகிறீர்கள்./////

    எழுத்திலும், பதிவுகளிலும் சுவாரசியமும், வெரைட்டியும் வேண்டும். இல்லை என்றால் நானே படிக்க மாட்டேன். பிறகு மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger Ak Ananth said...
    உண்மை ஒரு நாள் வெளியாகும் என்பது வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்பதைதான் காட்டுகிறது./////

    ஆமாம். உண்மைக்கு ஒரே வடிவம்தான். வேலன் கையில் இருக்கும் வேலைப் போல! எங்கே என்றாலும் அது தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  14. /////Blogger Advocate P.R.Jayarajan said...
    அன்றைய பாடல் வரிகளை எவ்வளவு எளிதாக அதுவும் நயத்துடன் புரிந்து கொள்ள முடிகின்றது பாருங்கள்.../////

    அன்றைய இசை மேதைகள் எல்லாம் அதனால்தான் இன்றளவும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். நன்றி சார்!

    ReplyDelete
  15. //////Blogger kmr.krishnan said...
    இந்தப் பாடலையே இப்போது உள்ள இசை அமைப்பாளர்களிடம் கொடுத்தால்
    பாடல் வரிகளை'பன்'னைப் பிய்ப்பது போல் பிய்த்து, இசைக்கருவிகளின் கூச்சலுக்குள் புதைத்து ஒன்றும் புரியாமல் செய்து விடுவார்கள்.
    படுக்கோட்டை பாட்டுக்கோட்டைதான். நல்ல கருத்துள்ள பாடலை கொடுத்ததற்கு நன்றி ஐயா!/////

    உண்மைதான். அத்துடன் இன்றைய பாடல்வரிகளும் எளிமையாக, பொருள் பொதிந்ததாக, மக்கள மனதில் பதிவதாக இல்லை. உதாரணம்:

    “அரைச்ச மாவை அரைப்போமா?
    துவைச்ச துணியைத் துவைப்போமா?”

    ReplyDelete
  16. "தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
    வாசம் மறைவது கிடையாது;
    சத்தியத்தையும் உலகில் எவனும்
    சதியால் மறைக்க முடியாது"

    இறைவார்த்தைகள் பட்டுக்கோட்டையார் வடிவில்....... மிகவும் அருமை ஐயா... உங்கள் நினைவுட்டலுக்கு.....

    ReplyDelete

  17. “அரைச்ச மாவை அரைப்போமா?
    துவைச்ச துணியைத் துவைப்போமா?”

    இந்த வரிகளில் நல்ல கருத்து இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதில் உள்ள 'அசிங்கம்' புரிகிறதா? இதையெல்லாம் ஒரு பாடல் என்று எழுதியவரை என்னவென்று சொல்வது? இவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்களா? செய்தாலும் செய்வார்கள், யார் அறிவார்.

    ReplyDelete
  18. ////Blogger Remanthi said...
    "தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
    வாசம் மறைவது கிடையாது;
    சத்தியத்தையும் உலகில் எவனும்
    சதியால் மறைக்க முடியாது"
    இறைவார்த்தைகள் பட்டுக்கோட்டையார் வடிவில்....... மிகவும் அருமை ஐயா... உங்கள் நினைவுட்டலுக்கு...../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger Thanjavooraan said...
    “அரைச்ச மாவை அரைப்போமா?
    துவைச்ச துணியைத் துவைப்போமா?”
    இந்த வரிகளில் நல்ல கருத்து இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதில் உள்ள 'அசிங்கம்' புரிகிறதா? இதையெல்லாம் ஒரு பாடல் என்று எழுதியவரை என்னவென்று சொல்வது? இவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்களா? செய்தாலும் செய்வார்கள், யார் அறிவார்./////

    உண்மைதான் சார்! நெருங்கிக் கேட்டால், காலத்தின் கட்டாயம் என்பார்கள். அத்துடன் இன்றைய இளம் ரசிகர்கள் மேல் பழியைப் போடுவார்கள்.
    உங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com