5.4.13

ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல்.

ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல். 

வெள்ளி மலர்

இன்றைய வெள்ளி மலரை (பக்தி மலரை) ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது! . ஆமாம்! இயக்குனர் திரு.ஏ.பி. நாகராஜன் அவர்களுக்கு கவியரசர் கண்ணதாசன் எழுதிக் கொடுத்த  பாடல்  இது!

கேட்டு மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------------

"வெள்ளிமலை மன்னவா! வேதம் நீ அல்லவா!
முன்னோர்க்கும் முன்னவா! மூண்ட கதை சொல்லவா!

(வெள்ளிமலை)

அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா!
ஐம்புலனும் எங்கள் அடைக்கல மல்லவா?
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீங்கவரும் சிவாயமல்லவா!

(வெள்ளிமலை)

வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன!
சேனை அசுரர் குல ஜெயக்கொடிதான் சொல்வதென்ன!
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு!
அபயக்கரம் நீட்டு! உன அருள் வடிவைக் காட்டு!"

(வெள்ளிமலை)

படம் - கந்தன் கருணை - வருடம் 1967

இந்தப் பாடல் திருமதி எஸ்.வரலெட்சுமி அவர்கள் தன்னுடைய கணீர்க் குரலால், உணர்வுபூர்வமாகப் பாடி கவியரசரின் வரிகளாலும் படத்தில் இடம் பெற்ற காட்சி அமைப்புக்களாலும், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிய பாடல் என்றால் அது மிகையல்ல!

பாடலின் காணொளி வடிவம்
http://www.youtube.com/watch?v=gV-7Nih8-0Y
our sincere thanks to the person who uploaded the song in the net


வருத்தமான செய்தி:

நாளை (சனிக்கிழமை) வகுப்பு உண்டு.Special Class
வீட்டில் Broadband net  வசதி இல்லை. அலுவலகத்தில் மட்டுமே அந்த வசதி என்று சொல்பவர்களுக்கு விதி விலக்கு உண்டு. மற்றவர்கள் வரவேண்டும்.
இல்லாவிட்டால் திங்கட்கிழமை பெஞ்ச்சின் மேல் நிற்கவேண்டியதாக இருக்கும்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++==

14 comments:

  1. அருமையான பாடல். இசை, அவர் அதை பாடிய விதம், குரல் இவை எல்லாமே நன்றாக அமைந்து விட்டது.

    சனிக் கிழமை வருவதில் பிரச்சினை இல்லை. வீட்டில் 4G Wireless Broadband வசதி இருக்கிறது. அடுத்து fibre optic digital technology என்ற ஒன்று இருக்கிறது. அதற்கு மாறலாம் என்று இருக்கிறேன். அதன் வேகம் 10 mbs முதல் 30 mps வரை இருக்கிறது.

    ReplyDelete
  2. காணொளி வடிவம் பார்த்து மகிழ்ந்தேன்.

    வாத்தியாரின் அறிவிப்பின் படி, இன்றே வகுப்புக்கு வந்து விட்டேன். தொடர்ந்தும் வருவேன்,
    நன்றி!!

    ReplyDelete
  3. ஆஹா கண்ணனாரின் படைப்புகள் வகுப்பறையில் அவவப்போது நிறைந்து மணம் ப்ரப்புகிறது படைப்பின் ஆற்றல் கருத்துக்கு அப்பாற்பட்டது.
    கவிஅரசர் தானே மீண்டும் பிறந்தால் அன்றி வேறு எவராலும் இப்படி த்தரமுடியாது,
    நன்றி ஐயா,
    வளர்க‌ தங்கள் சேவை.
    கவியின் கஜானவில் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே.
    அவ்வப்போ பதிவில் விடுங்கள்

    ReplyDelete
  4. ஐய்யாவிற்க்கு வணக்கங்கள்.
    வெள்ளி மலரில் வெள்ளிமலை மன்னவனின் கானம்-வெள்ளியில் செய்த மணி ஓசை போன்று காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.Conducting a special class on tomorrow is not a bad, but good news. Any special article going to be posted in special class,please?.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  5. ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல் வெள்ளிக்கிழமையில் ரசிக்ககொடுத்தமைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  6. நாளைய வகுப்புக்கு
    நாமும் வருவோம்..

    காதல் என்ற ரப்பர் பேன்ட்
    கட்டாயம் வகுப்பு அறைக்கு உண்டே!!

    மலரும் மணமும்
    மணக்கட்டும் ஞாயிறும்





    ReplyDelete

  7. கார்ட்டூன் பார்த்ததும்
    கல்வி பற்றி இப்படியே தோனுது

    கல்வியா..அது
    கையில் ஏந்தும் கலைப் பொருளா..

    வண்டியை பிள்ளை(களு)க்கு
    வாங்கி தருவது போல

    பட்டப்படிப்பினையும் மார்க்கு
    பார்த்து வாங்கி தந்து விடலாம்

    கல்வி துறையில்
    கட்டாயம் இப்போது மாற்றமில்லையெனில்

    ஏமாற்றம் தான் நம்
    இளையதலைமுறைகளுக்கு..

    பள்ளிக்கு அனுப்புவது
    பழகும் ஒழுக்கம் கற்பதற்கு; இன்று

    ஒழுக்கத்தையே இவர்கள்
    விழுங்கி கொண்டிருக்கும் போது

    பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல்
    படிப்பதே சிறந்தது..

    LKG படிப்புக்கு கட்டணம் 1 லட்சம்
    MBA படிப்புக்கு கட்டணம் 35 ஆயிரம்

    எந்த படிப்புக்கு மதிப்பு அதிகம்
    ஏன் இந்த அவலம்..

    எந்த பிள்ளைகளோடு பேசும் போதும்
    எத்தனை மார்க்கு என்ற கேட்பதுடன்

    அதிக மார்க்கு எடுக்காதே..
    அதில் ஆபத்து இருக்கு என

    அறிவுரை சொல்லுமளவிற்கு
    குறிப்புகள் நிறைய இருக்கு..

    இருக்கட்டும்
    இன்றைய வகுப்பில் சுழலும் பாடலை

    MS ராஜேஸ்வரியின் இனிய குரலை
    ராகத்தோடு கேட்டு மகிழுங்கள்..

    படித்ததினால் அறிவு பெற்றோர்
    ஆயிரம் உண்டு – பாடம்

    படிக்காத மேதைகளும்
    பாரினில் உண்டு

    கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும்
    படிப்பு வேண்டுமா – என்றும்

    குழந்தையைப் போல் வாழ்ந்து
    விட்டால் துன்பம் தோன்றுமா

    வாழை மரம் படித்ததில்லை
    கனி கொடு்க்க மறந்ததா

    வான் முகிலும் கற்றதில்லை
    மழை பொழிய மறந்ததா

    சோலையெல்லாம் கற்றதில்லை
    நிழல் கொடுக்க மறந்ததா

    சுதந்திரமாய்ப் பாடி வரும்
    குயிலும் பாடம் படித்ததா

    கல்வியில்லா கன்றுகளும்
    தாயை அழைக்கும்

    காட்டில் கவரிமானும்
    பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

    பள்ளி சென்று இவைகளெல்லாம்
    படித்ததில்லையே – நெஞ்சில்

    பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

    ReplyDelete
  8. ////Blogger Ak Ananth said...
    அருமையான பாடல். இசை, அவர் அதை பாடிய விதம், குரல் இவை எல்லாமே நன்றாக அமைந்து விட்டது.
    சனிக் கிழமை வருவதில் பிரச்சினை இல்லை. வீட்டில் 4G Wireless Broadband வசதி இருக்கிறது. அடுத்து fibre optic digital technology என்ற ஒன்று இருக்கிறது. அதற்கு மாறலாம் என்று இருக்கிறேன். அதன் வேகம் 10 mbs முதல் 30 mps வரை இருக்கிறது.////

    எங்கள் மண்ணீல் 3ஜியோடு சரி! வேகமும் சராசரியாக ஒரு எம்பி கொள்ளவிற்கு மேல் இருப்பதில்லை. நான் BSNL சந்தாதாரன். அதை வைத்துச் சொல்கிறேன்

    ReplyDelete
  9. ////Blogger V Dhakshanamoorthy said...
    காணொளி வடிவம் பார்த்து மகிழ்ந்தேன்.
    வாத்தியாரின் அறிவிப்பின் படி, இன்றே வகுப்புக்கு வந்து விட்டேன். தொடர்ந்தும் வருவேன்,
    நன்றி!!////

    நீங்கள்தான் சமர்த்தான மாணவராயிற்றே! சொல்லவும் வேண்டுமா?

    ReplyDelete
  10. ////Blogger சர்மா said...
    ஆஹா கண்ணனாரின் படைப்புகள் வகுப்பறையில் அவவப்போது நிறைந்து மணம் ப்ரப்புகிறது படைப்பின் ஆற்றல் கருத்துக்கு அப்பாற்பட்டது.
    கவிஅரசர் தானே மீண்டும் பிறந்தால் அன்றி வேறு எவராலும் இப்படி த்தரமுடியாது,
    நன்றி ஐயா,
    வளர்க‌ தங்கள் சேவை.
    கவியின் கஜானவில் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே.
    அவ்வப்போ பதிவில் விடுங்கள்////

    ஆஹா, தொடர்ந்து செய்தால் போயிற்று! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger GOWDA PONNUSAMY said...
    ஐய்யாவிற்க்கு வணக்கங்கள்.
    வெள்ளி மலரில் வெள்ளிமலை மன்னவனின் கானம்-வெள்ளியில் செய்த மணி ஓசை போன்று காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.Conducting a special class on tomorrow is not a bad, but good news. Any special article going to be posted in special class,please?.
    நன்றியுடன்,
    -Peeyes.////

    special class என்றால் specialஆக இருக்காதா? பொறுத்திருந்து பாருங்கள் பொன்னுசாமி!

    ReplyDelete
  12. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல் வெள்ளிக்கிழமையில் ரசிக்ககொடுத்தமைக்கு நன்றிகள்...////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger அய்யர் said...
    நாளைய வகுப்புக்கு
    நாமும் வருவோம்..
    காதல் என்ற ரப்பர் பேன்ட்
    கட்டாயம் வகுப்பு அறைக்கு உண்டே!!
    மலரும் மணமும்
    மணக்கட்டும் ஞாயிறும்/////

    வகுப்பறைக்குள் ரப்பர் பேன்ட் நாட் அலெள்ட்!



    ReplyDelete
  14. /////Blogger அய்யர் said...
    கார்ட்டூன் பார்த்ததும்
    கல்வி பற்றி இப்படியே தோணுது
    கல்வியா..அது
    கையில் ஏந்தும் கலைப் பொருளா..
    வண்டியை பிள்ளை(களு)க்கு
    வாங்கி தருவது போல
    பட்டப்படிப்பினையும் மார்க்கு
    பார்த்து வாங்கி தந்து விடலாம்
    கல்வி துறையில்
    கட்டாயம் இப்போது மாற்றமில்லையெனில்
    ஏமாற்றம் தான் நம்
    இளையதலைமுறைகளுக்கு..
    பள்ளிக்கு அனுப்புவது
    பழகும் ஒழுக்கம் கற்பதற்கு; இன்று
    ஒழுக்கத்தையே இவர்கள்
    விழுங்கி கொண்டிருக்கும் போது
    பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல்
    படிப்பதே சிறந்தது..
    LKG படிப்புக்கு கட்டணம் 1 லட்சம்
    MBA படிப்புக்கு கட்டணம் 35 ஆயிரம்
    எந்த படிப்புக்கு மதிப்பு அதிகம்
    ஏன் இந்த அவலம்..
    எந்த பிள்ளைகளோடு பேசும் போதும்
    எத்தனை மார்க்கு என்ற கேட்பதுடன்
    அதிக மார்க்கு எடுக்காதே..
    அதில் ஆபத்து இருக்கு என
    அறிவுரை சொல்லுமளவிற்கு
    குறிப்புகள் நிறைய இருக்கு../////

    கலியுகம். கலி முற்றிக் கொண்டிருக்கிறது. அப்ப்டித்தான் இருக்கும் சுவாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com