17.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14

ஜோதிடத் தொடர் - பகுதி 14

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
பூர நட்சத்திரம் (சிம்ம ராசி)

இது சுக்கிரனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. மகம்
5. உத்திரம்
6. சித்திரை
7. விசாகம்
8. கேட்டை
9. மூலம்
10. உத்திராடம்
11. அவிட்டம்
12. சதயம்
13. பூரட்டாதி
14. ரேவதி

ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் உத்திராடம் 2, 3 4 ஆம் பாதங்கள், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் மகர ராசிக்கு உரியனவாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில் ரேவதி நட்சத்திரம் மகத்திற்குப் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது..

கடக ராசிக்குரிய நட்சத்திரங்களில், சிம்மத்திற்கு உரிய நட்சத்திரங்களில் எதுவும் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 12/1 position to each rasi என்பது இல்லை!.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் உண்டு. என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

ரோஹிணி பொருந்தாது!

மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி, திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் மத்தியமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும் மத்திய பொருத்தம். என்றால் சராசரி! அதாவது average. வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை!
 -------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. வண்க்கம் ஐயா,6/8,8/6,12/1 என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நட்சத்திரம்,ராசியை தவிர்த்த ஜோதிடர்கள் 1/12 நிலைப்பாட்டில் உள்ள நட்சத்திரம்,ராசியை தவிர்க்காததற்கு காரணம் ஏதாவது உள்ளதுங்களா? நன்றி ஐயா.

    ReplyDelete
  2. கீதா லக்ஷ்மி அவர்களின் கேள்வியினை நான் வழிமொழிகிறேன். கவலை வேண்டாம் கீதா லக்ஷ்மி, பூரத்துக்கு கன்னி ஒன்று - பன்னிரண்டு. ஆனால் கண்ணியில் இருந்து பார்க்கிற பொழுது பன்னிரண்டு ஒன்று ஆகி விடும் அல்லவா? இன்னும் ஒரு நக்ஷத்திரம் தான் பாக்கி. கன்னி வந்து விடும். அப்புறம் சிம்மம் பன்னிரண்டு - ஒன்று என்ற கணக்கில் பொருந்தாது! ஹீ ஹீ!
    இரு பக்கமும் பார்க்க வேண்டும் அல்லவா!

    ReplyDelete
  3. ////Blogger Geetha Lakshmi A said...
    வண்க்கம் ஐயா,6/8,8/6,12/1 என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நட்சத்திரம்,ராசியை தவிர்த்த ஜோதிடர்கள் 1/12 நிலைப்பாட்டில் உள்ள நட்சத்திரம்,ராசியை தவிர்க்காததற்கு காரணம் ஏதாவது உள்ளதுங்களா? நன்றி ஐயா.////

    நமது வகுப்பறை மாணவக் கண்மணியின் விளக்கம் கீழே உள்ளது. பாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  4. /////Blogger Bhuvaneshwar said...
    கீதா லக்ஷ்மி அவர்களின் கேள்வியினை நான் வழிமொழிகிறேன். கவலை வேண்டாம் கீதா லக்ஷ்மி, பூரத்துக்கு கன்னி ஒன்று - பன்னிரண்டு. ஆனால் கன்னியில் இருந்து பார்க்கிற பொழுது பன்னிரண்டு ஒன்று ஆகி விடும் அல்லவா? இன்னும் ஒரு நக்ஷத்திரம் தான் பாக்கி. கன்னி வந்து விடும். அப்புறம் சிம்மம் பன்னிரண்டு - ஒன்று என்ற கணக்கில் பொருந்தாது! ஹீ ஹீ!
    இரு பக்கமும் பார்க்க வேண்டும் அல்லவா!/////

    கரெக்ட்! நன்றி புவனேஷ்வர்!

    ReplyDelete
  5. படத்தில் மாப்பிள்ளை உடை சூப்பர். இந்த உடைக்கு பெயர் தெரியுமா யாருக்காவது?

    ReplyDelete
  6. ////Blogger Bhuvaneshwar said...
    படத்தில் மாப்பிள்ளை உடை சூப்பர். இந்த உடைக்கு பெயர் தெரியுமா யாருக்காவது?/////

    திரைப்படங்களில் costume தயாரிப்பாளர்கள் நாயர்களுக்குத் தைக்கும்/தயாரிக்கும் உடைகளில் ஒன்று அது! பெயர்களை அவர்களே சொன்னால்தான் உண்டு சாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com