Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 13
ஜோதிடத் தொடர் - பகுதி 13
இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
மக நட்சத்திரம் (சிம்ம ராசி)
இது கேதுவின் நட்சத்திரம்.
1. கார்த்திகை
2. பூசம்
3. ஹஸ்தம்
4. சுவாதி
5. விசாகம்
6. அனுஷம்
7. திருவோணம்
8. சதயம்
ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
இவற்றுள் திருவோண நட்சத்திரம் மகர ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.
மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில் மகத்திற்குப் பொருத்தமான நட்சத்திரம் எதுவும் இல்லை. ஆகவே இந்த 8/6 நிலைப்பாடு வராது. வரவே வராது. கவலை வேண்டாம்.
பூச நட்சத்திரம் கடக் ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். சிம்மத்திற்குக் கடகம் பன்னிரெண்டாம் வீடு. (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரத்தையும் விலக்கிவிடுவது நல்லது.
அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்
அஸ்விணி, மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் மகம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் உண்டு. என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் பொருந்தாது!
பரணி, ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி பூராடம் முதல் பாதம் (மட்டும்) மத்தியமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும் மத்திய பொருத்தம். என்றால் சராசரி! அதாவது average. வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
பயனுள்ள கட்டுரை வாசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
ReplyDeleteமக நக்ஷத்திரதுக்கு கன்னியும்பொருந்தாதே? ஒன்று-பன்னிரண்டு என கன்னிக்கு சந்திரன் மறைந்து போவார் அல்லவா?
அதெல்லாம் கிடக்கட்டும். குண விஷேஷங்களிலேயே, என்னுடைய சொந்த அனுபவத்தில் கன்னிக்கும் சிம்மத்துக்கும் ஒத்துப்போகாதே? (நான் கன்னி ராசி, எனக்கு அண்ணன் சிம்ம ராசி - மகம்). பொதுவாக, பெண்களாகவே இருந்தாலும் கூட அவர்களுடைய dominating/domineering குணம் எனக்கு ஒவ்வுவதில்லை. தப்பித்தவறி சேர்த்து வைத்தால் முட்டிக்கொண்டு தானே நிற்கும்? (உன் புத்திக்கு எங்கே போனாலும் நீ முட்டிக்கொண்டு தாண்டா நிப்பே என்று வாத்தியார் சொன்னால், நான் என்ன செய்ய?) :-)))))
ஆனால் இது (நான் குணம் பற்றி சொன்னது) ராசியை மட்டும் பொறுத்ததில்லை. லக்ன விசேஷமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னமோ போங்க.
இறைவன் துணை! நடப்பது நடக்கும். போட்டது முளைக்கும். ஊழ்வினை உண்டு. அதான் ஏதோ ஒன்று கட்டம் கட்டி எழுதியாச்சு போர்க்கும் போதே. இனிமே தலையால தண்ணி குடிச்சாலும் மாறப்போறதில்லை. இனி புது ஜாதகம் வேண்டாம், பிறவியே வேண்டாம் நு ஒரு முடிவில் இருக்கிறேன். ஆதலால் இனி ஜாதகம் அது இது என்று மண்டையை போட்டு குழப்பிக்கொள்வதில்லை.
அன்புடன்
புவனேஷ்வர்
வண்க்கம் ஐயா, ஒரே நட்சத்திரம்,ஒரே ராசி, இருக்கும் மணமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி கூறியுள்ளது நல்ல தகவல். நன்றி ஐயா.
ReplyDeleteVATHIYAR AYYA, VANAKKAM. THANKALIN MEL NILAI VAKUPPIL SERNTHU PADIKKA ASAI. ANUMATHIKKA VENDUKIREN. NANRI
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபயனுள்ள கட்டுரை வாசித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா!/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
மக நக்ஷத்திரதுக்கு கன்னியும்பொருந்தாதே? ஒன்று-பன்னிரண்டு என கன்னிக்கு சந்திரன் மறைந்து போவார் அல்லவா?
அதெல்லாம் கிடக்கட்டும். குண விஷேஷங்களிலேயே, என்னுடைய சொந்த அனுபவத்தில் கன்னிக்கும் சிம்மத்துக்கும் ஒத்துப்போகாதே? (நான் கன்னி ராசி, எனக்கு அண்ணன் சிம்ம ராசி - மகம்). பொதுவாக, பெண்களாகவே இருந்தாலும் கூட அவர்களுடைய dominating/domineering குணம் எனக்கு ஒவ்வுவதில்லை. தப்பித்தவறி சேர்த்து வைத்தால் முட்டிக்கொண்டு தானே நிற்கும்? (உன் புத்திக்கு எங்கே போனாலும் நீ முட்டிக்கொண்டு தாண்டா நிப்பே என்று வாத்தியார் சொன்னால், நான் என்ன செய்ய?) :-)))))
ஆனால் இது (நான் குணம் பற்றி சொன்னது) ராசியை மட்டும் பொறுத்ததில்லை. லக்ன விசேஷமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னமோ போங்க.
இறைவன் துணை! நடப்பது நடக்கும். போட்டது முளைக்கும். ஊழ்வினை உண்டு. அதான் ஏதோ ஒன்று கட்டம் கட்டி எழுதியாச்சு போர்க்கும் போதே. இனிமே தலையால தண்ணி குடிச்சாலும் மாறப்போறதில்லை. இனி புது ஜாதகம் வேண்டாம், பிறவியே வேண்டாம் நு ஒரு முடிவில் இருக்கிறேன். ஆதலால் இனி ஜாதகம் அது இது என்று மண்டையை போட்டு குழப்பிக்கொள்வதில்லை.
அன்புடன்
புவனேஷ்வர்
மகத்திற்குப் பொருந்தும் என்று எழுதியுள்ள 8 நட்சத்திரங்களில், மகம் நட்சத்திரத்தை நான் குறிப்பிடவில்லையே சாமி! அதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை?
////Blogger Geetha Lakshmi A said...
ReplyDeleteவண்க்கம் ஐயா, ஒரே நட்சத்திரம்,ஒரே ராசி, இருக்கும் மணமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி கூறியுள்ளது நல்ல தகவல். நன்றி ஐயா.////
நல்லது. நன்றி சகோதரி!
/////Blogger Satheesh Kumar said...
ReplyDeleteVATHIYAR AYYA, VANAKKAM. THANKALIN MEL NILAI VAKUPPIL SERNTHU PADIKKA ASAI. ANUMATHIKKA VENDUKIREN. NANRI/////
மின்னஞ்சல் மூலம் வாருங்கள். உங்களைப் பற்றி எழுதுங்கள்1 வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
சீர்காழியின் பக்திப்பாடலின் ஒலிச்சுட்டியும் ஏற்றியிருந்தால் மிக நன்றாக இருக்கும்
ReplyDeleteநன்றி
sir barani illaye sir
ReplyDelete////Blogger Ravindranath sharma said...
ReplyDeleteசீர்காழியின் பக்திப்பாடலின் ஒலிச்சுட்டியும் ஏற்றியிருந்தால் மிக நன்றாக இருக்கும்
நன்றி/////
யோசனைக்கு நன்றி. அடுத்து முயல்கிறேன்!
/////Blogger manikandaprakash said...
ReplyDeletesir barani illaye sir/////
இருக்கிறதே ராசா! மத்திம பொருத்தம் என்று எழுதியுள்ள கடைசி பத்தியைப் பாருங்கள்!