Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?
இளம் தம்ப்திகள் ஒரு பழைய வீட்டிற்குக் குடிபோனார்கள். அது மாடி வீடு.
பக்கத்து வீட்டு பெண்மணி, அந்த அதிகாலை நேரத்தில், துணிகளைத் துவைத்து முடித்து, கொடிக் கம்பியில் காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.
அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி தன் கணவனிடம் சொன்னாள்: “பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே துவைக்க வில்லை. அங்கங்கே அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை சோப்பை மாற்றினால், துணிகள் பளிச்சிடலாம்"
அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன், அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.
அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.
ஒரு மாதம் ஓடி விட்டது.
அன்று காலையில், ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில் காயப் போட்டிருக்கும் துணைகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி. அவைகள் சுத்தமாகவும், பளிச்சென்றும் இருந்தன!
ஆச்சரியம் மேலிட, தன் கணவனிடம் சொன்னாள்: “இந்த அதிசயத்தைப் பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி, சரியாகத் துவைத்து இருக்கிறாள். அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை!? ”
அவளுடைய் அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான்: “இன்று அதிகாலையில் எழுந்து, நமது வீட்டு ஜன்னலை நான் நன்றாக துடைத்திருக்கிறேன். collins Liquid போட்டுத் துடைத்திருக்கிறேன்.”
மனைவி வாயடைத்துப்போய் விட்டாள். அவளால் மேற் கொண்டு ஒன்றும் பேச முடியவில்லை.
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

மிகவும் நல்ல பதிவு....
ReplyDeleteகுருவிற்கு வணக்கம் ,
ReplyDeleteநல்ல கருத்து ,
நம்மை நாம் முதலில் பார்க்கவேண்டும்
நன்றி
vanakam sir
ReplyDeleteஅய்யா வணக்கம் . அடுத்தவர்களை குறை சொல்லும்போது , தன்னை அளவீடு செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்து கதையில் தெளிவாக தெரிகின்றது . நன்றி
ReplyDeleteஅடுத்த வீட்டு சன்னலை
ReplyDeleteஅப்படி பார்ப்பதே தவறு என்று
உணராத அந்த அம்மணி இந்த
உண்மையையா உணர போகிறாள்
குறை சொல்லும் மனப்பாங்கு
குறைவாக இன்று எல்லோரிடமுண்டு
வருந்தட்டும் அவர்கள் எனபாருமுண்டு
திருந்தட்டும் அவர்கள் என்பாருமுண்டு
தவறுகளை நியாயப் படுத்துவது தான்
தவறு,நிறையும்குறையும் எதார்த்தமே
இன்று இந்த பாடலினை
இப்போ சுழல விடுகிறோம்..
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
(முதல் வரி கண்டுபிடியுங்கள்)
Dear Sir,
ReplyDeleteWish you a Happy and Prosperous New Year 2013!
Regards
Ashok Kumar
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
ReplyDeleteவாழ்க்கைப் பாடம் ..!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
வாத்தியார் ஐயாவிற்கும், அன்பு சகோதர சகோதிரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வரும் புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவன் அருள்வாராக!
ReplyDeleteவண்க்கம் ஐயா,30 வயதிற்கு மேல் ல்க்னத்தை வைத்து பலன் சொல்வதற்கு பதிலாக, சந்திர ராசியை வைத்து பலன் சொல்லவேண்டும் என்று கூறுகிறார்களே அது சரீங்களா? நன்றி ஐயா.
ReplyDeleteஅனைவருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
////Blogger Prasanna Venkatesh said...
ReplyDeleteமிகவும் நல்ல பதிவு....////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
///Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம் ,
நல்ல கருத்து ,
நம்மை நாம் முதலில் பார்க்கவேண்டும்
நன்றி////
கரெக்ட்! நன்றி உதயகுமார்!
////Blogger eswari sekar said...
ReplyDeletevanakam sir/////
நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
ReplyDeleteBlogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம் . அடுத்தவர்களை குறை சொல்லும்போது , தன்னை அளவீடு செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்து கதையில் தெளிவாக தெரிகின்றது . நன்றி/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
///Blogger அய்யர் said...
ReplyDeleteஅடுத்த வீட்டு சன்னலை
அப்படி பார்ப்பதே தவறு என்று
உணராத அந்த அம்மணி இந்த
உண்மையையா உணர போகிறாள்/////
உணர மாட்டார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் சுவாமி?
////Blogger arul said...
ReplyDeletenice post////
நல்லது. நன்றி!
////Blogger Ashok said...
ReplyDeleteDear Sir,
Wish you a Happy and Prosperous New Year 2013!
Regards
Ashok Kumar/////
உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
வாழ்க்கைப் பாடம் ..!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!////
உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
////Blogger Geetha Lakshmi A said...
ReplyDeleteவாத்தியார் ஐயாவிற்கும், அன்பு சகோதர சகோதிரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வரும் புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவன் அருள்வாராக!////
உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
////Blogger Geetha Lakshmi A said...
ReplyDeleteவண்க்கம் ஐயா,30 வயதிற்கு மேல் ல்க்னத்தை வைத்து பலன் சொல்வதற்கு பதிலாக, சந்திர ராசியை வைத்து பலன் சொல்லவேண்டும் என்று கூறுகிறார்களே அது சரீங்களா? நன்றி ஐயா.////
இல்லை. தவறு!
////Blogger kimu said...
ReplyDeleteஅனைவருக்கும்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.////
உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
வாழ்த்துக்களுடன்
வாத்தியார்