Astrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்!
ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. ஒரு ஜாதகத்தில் அக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கும்போது, அந்த ஜாதகனுக்கு அக்கிரகங்களின் குணங்களும் சேர்ந்துகொள்ளும்
ஒருவருடைய ஜாதகத்தில், லக்கின அதிபதியும், லக்கினத்தில் வந்து அமரும் கிரகமும் அல்லது கிரகங்களும், லக்கினத்தைப் பார்க்கும் கிரகமும் அல்லது கிரகங்களும் சேர்ந்து ஜாத்கனின் குணத்தை நிர்ணயம் செய்யும்
மேற்சொன்ன அமைப்பில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் ஜாதகத்தில் மேலோங்கி நிற்கிறதோ, அந்தக் கிரகத்தின் குணமே ஜாதகனுக்கு அதிகமாக இருக்கும்
சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் ஜாதகன் நல்ல குணங்கள் நிரம்பியவனாக, பலராலும் விரும்பப் படுபவனாக இருப்பான். அதற்கு நேர் மாறாக சனி, ராகு அல்லது போன்ற தீய கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், ஜாதகன் அவனுக்கு மட்டுமே நல்லவனாக இருப்பான்:-)))
1
சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். எத்தனை துன்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடனேயே இருப்பார்கள்.
2.
சிலர் எப்போதும் அழுது வழிந்துகொண்டே இருப்பார்கள். தங்கள் மகிழ்ச்சியை ஒருபோதும் வெளிப்படுத்தவே மாட்டார்கள்
3.
சிலர் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு போகும் குணத்துடன் இருப்பார்கள்.
4.
சிலர் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கும் அல்லது வாக்குவாதம் செய்து சண்டையிடும் குணத்துடன் இருப்பார்கள்.
5.
சிலர் அன்பான மனைவி மக்களுடன் கூட எரிச்சலுடன் பேசுபவர்களாக இருப்பார்கள்.
6
சிலர் அதற்கு மாறாக அன்பில்லாத உற்வுகளுடன் கூட கனிவாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.
7.
சிலருக்கு எல்லா விஷயத்திலும் ரசனையும் ஈடுபாடும் இருக்கும்
8.
சிலருக்கு எதையும் ரசிக்கும் உணர்வோ, லாபம் இல்லாத எதிலும் ஈடுபாடோ இருக்காது
9.
சிலர் முன்பின் தெரியாதவர்களிடம் கூட கலகலப்பாகப் பேசும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்
10
சிலர் நன்றாகத் தெரிந்தவர்களிடம் கூடபேசும் பழக்கமின்றி உம்மன்னா மூஞ்சி ஆசாமியாக இருப்பார்கள்
11.
சிலர் ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களாக, வெள்ளந்தியாக இருப்பார்கள்
12.
சிலர் கள்ளம் கபடு சூது வாது நிறைந்தவர்களாக எதையும் மறைத்துப் பேசுபவர்களாக இருப்பார்கள்
13.
சிலரைப் பார்த்தாலே கவர்ந்திழுப்பவர்களாக இருப்பார்கள். நமக்கே வலியச் சென்று அவர்களிடம் பேசும் ஆசை உண்டாகும்
14.
சிலரைப் பார்த்தலே பயம் உண்டாகும் தோற்றத்தில் இருப்பார்கள். நமக்கு ஒதுங்கிப்பொகும் எண்ணம்தான் உண்டாகும்
15
சிலர் தேவையில்லாத சின்ன விஷயத்திற்குகூட கவலைப் படுபவர்களாக இருப்பார்கள் அல்லது கோபப் படுபவர்களாக இருப்பார்கள்.
16
சிலர் இடியே விழுந்தாலும் கவ்லைப் படாதவர்களாக, எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்
17
சிலர் பரோபகாரிகளாக் யாருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்
18.
சிலர் தாமுண்டு தம் வேலை உண்டு என்று தன்னலம் மட்டுமே உள்ளவர்களாக இருப்பார்கள்
19
சிலர் தர்ம சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள்
20
சிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பது, அதைச் சேர்ப்பது என்று ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் உடையவர்களாக இருப்பார்கள்
இப்படி எழுதிக்கொண்டே போக்லாம்.
நூற்றுக் கணக்கான குண வேறுபாடுகள் உள்ளன.
எல்லாக் குழந்தைகளும் ஒரு தாயின் வயற்றில்தான் உருவாகின்றன் என்றாலும் முகங்கள் வேறுபடுவதுபோல குணங்களும் வேறுபடும்!
ஏன் ஒரு தாய் வயிற்றிலேயே பிறந்த இரண்டு குழந்தைகளின் குணம் கூட ஒன்றுபோல் இருப்பதில்லை
என்ன காரணம்?
பதிவின் துவக்கத்தில் உள்ள முதல் எட்டு வரிகளைப் படியுங்கள்! அதுதான் காரணம்
லக்கினத்தைவைத்துத்தான் குணம் அமையும் என்றாலும், 3, 6 8 மற்றும்; 12ஆம் வீடுகளைவைத்தும் சில குணாதிசய்ங்கள் சேர்ந்து கொள்ளும்
எந்தக் குணமும் அடுத்தவர்களைப் பாதிக்காத அளவில் இருப்பது முக்கியம்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்
பாடம் தொடரும்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

மிக்க நன்றி
ReplyDelete17 ,18 ஆகியவற்றில் கூறியுள்ள குணங்கள்தான் அடியேனுக்கு மனதில் பதிந்தது.18ல் கூறியபடி இனி பொது வேலைகள் வேண்டாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போவோம் என்று ஒதுங்கினாலும் தானாக வந்து பல வேலைகளில் ஈடுபட வைத்து விடுகிறது கிரஹ சூழல்."இறைவா பல செயல்களால் உன்னை மறக்கிறேன்.உன்னை மறவாமல், மனதில் இருத்தி சேவைகளைத் தொடர அருள் புரிவாய்" என்றே வேண்டுகிறேன்.
ReplyDeleteபல்வேறுபட்ட மன நிலைகளை தொகுத்து கொடுத்து இருப்பது நன்றாக உள்ளது. நன்றி ஐயா.
ஐயா, காலை வணக்கம். லக்னத்தில் கிரஹங்களும், பார்வைகளும் இல்லாதபொழுது. லக்ன அதிபதியை மட்டும் வைத்து குணத்தை முடிவு செய்திடலாமா?
ReplyDeleteகாலை வணக்கம், அன்பர்களே.
ReplyDeleteஅதிசயமாக இன்று காலை வானில் மேகமின்றி வெயிலான் உதித்தான். சான்றோள் அடி சேர்ந்து பணிந்து கற்றவர் நெஞ்சில் ஐயங்கள் இன்றி நல்லறிவு உதிப்பதை ஒக்கும் அக்காட்சி.
நற்பாடம் நல்கிய வாத்தியாருக்கு எனது நன்றிகள் உரித்தாகின்றன.
நமது பிறவிக்குணத்தில் இருந்து கொஞ்சம் இங்கே எடுத்து விடுவோம். அன்பர் சஞ்சய் அவர்களின் கேள்விக்கு விடை தர முயற்சிக்கிறேன். இம்முயற்சி எதற்கெனில், அவ்விதம் செய்யுங்கால் என் புரிதலில் தவறிருப்பின் வாத்தியார் திருத்தலாம் அல்லவா!
லக்கினத்தில் கிரகங்களும் அதன் மேல் பார்வைகளும் இல்லை எனில், என்ன? லக்கினாதிபதி என்று ஒருவர் உள்ளாரே, அவர் உள்ள இடம், அவர் பார்க்கும் இடம், அவரைப்பார்க்கும் கிரகங்கள், அவர் நிலை (உச்ச நீச்சம், திரிகோண/கேந்திரம், அஷ்டகவர்க்கம்), லக்கினத்தின் அஷ்டகவர்க்க பரல்கள், தலைவர் (லக்கினாதிபதி) சென்று அமர்ந்த வீட்டின் பரல்கள் (ஐயா ஜம்மென்று உள்ளாரா இல்லை பே பே என முழிக்கிறாரா என தெரியணுமே), இதெல்லாம் உண்டே.
பொதுவாக, சுபர் லக்கினாதிபதி என்றால் அவர் மேல் பார்வைகள் இல்லாமல் அவர் மட்டும் நல்ல நிலைமையில் இருந்து விட்டால் போதும். லக்கினமும் காலியாக இருத்தல் நன்று. நற்கிரகங்கள் அவ்விடத்தில் இருந்தாலோ நற்பார்வைகள் விழுந்தாலோ கூடுதல் நன்மை. இங்கே கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். பொத்தாம்பொதுவாக சுபர் என்கிற போது இன்னொரு கேள்வி வரும். அவர் "இந்த ஜாதகத்தில் லக்கினத்துக்கு சுபரா?" இல்லை "அவரளவில் இயல்பில் சுபரா?" என்று. உதாரணமாக, இயல்பில் மிக நல்லவர் குரு; அவரே ஆறாம் வீட்டு அதிபதியாக வந்து, சேர்க்கை சரியில்லாமல் இருந்தால்? போதாத நேரமாக அதற்கு மற்ற கிரக அமைப்பும் ஒத்து ஊதி வைத்தால்? ஹிட்லர் ஜாதகத்தினை பார்க்கலாம். மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு "கையில் காயம் பட்ட குரங்குக்கு கையில் மிளகுபொடி தூவி, கண்ணையும் கட்டி, கல்லையும் ஊட்டி ஒரு தேளும் கொட்ட விட்டது போல" என. அப்படி ஆனால் என்ன ஆகுமோ அது நடக்கும் வாய்ப்பு உண்டு.
இந்த வள வளா கொழ கொழா கதை எல்லாம் வேண்டாம். நறுக்குத்தெரித்தாற்போல சொல்லுனதேன்றால் அது இஃதே:
பொதுவாக, லக்கினாதிபதி வலிமையாக (சுயவர்க்கத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பரல்களுடன்) இருந்தால் வேறு விஷயங்களை அவ்வளவாக நோண்டி நுங்கெடுத்து, தோண்டி துழாவ வேண்டியதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
+++++
சரி இதற்கு மேல் போனால் அப்புறம் டீச்சர் வர்றதுக்கு லேட்டானா துடுக்குப்பையன் கிளாஸ் எடுக்கராப்போல நீ ஏண்டா இங்க வந்து ஒரே அலம்பல் பண்ணுறே என திட்டு விழும் அபாயம் உள்ளதால், நான் அப்பாவி போல அப்பீட் ஆகிறேன். பெரியோர் பொறுப்பர் :)
நன்றி, வணக்கம்.
+++++
பிரியங்களுடன்
புவனேஷ்
Looking forward to sunsequent classes :)
ReplyDeleteமுகத்தை பார்த்து குணம் சொல்லும்
ReplyDeleteகலை ஒன்று உண்டு அது pottu pori
கருமைய பதிவு 9 வாரங்களில்
தாயின் செயல்பாடுகளால் குழந்தையின்
லக்கினத்தை முறை செய்யும் கலையும் உண்டு
லாபமோ நட்டமோ
ஒருவருக்கு பிடிப்பது மற்ற
ஒருவருக்கு பிடிக்காது
இன்னமும் சிலர்..
பிடிக்காமல் செய்வது போல்
பிடித்த வேலையை செய்வார்கள்
அதற்கு
வாழ வைத்த இறைவன் மீது பொறுப்பை போடுவார்கள்
வாழ வசவாளர்கள்..
சுவாமி விவேகானந்தர் சொல்வார்கள் தனிமனிதனின் செயல் பாடுகள் ஜீன்ஸ் என்று கொள்ள வேண்டாம் அதே வேளையில் ஒரு மனிதன் தனது கர்ம வினைப்படி எதை எல்லாம் செய்ய வேண்டுமோ அதற்கு ஏதான தாய் தந்தை குடும்ப சூழலிலே பிறக்கிறான் என்றே கொள்ளுதல் வேண்டும் என்பார்.
ReplyDeleteஅதையே தாங்கள் வாங்கிவந்த வரம் என்றும் சொல்வதை அறிகிறேன்...
மிகவும் சுவாரஸ்யமான விசயங்களை பற்றியத் தொடக்கம்...
அருமையானப் பதிவு. நன்றிகள் ஐயா!
எத்தனை வகை குணங்கள் அத்தனையும் பட்டியல் இட்டது சூப்பர்.
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteநல்ல ஓர் அழகாண பதிவு
நன்றி
லக்கினத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது என நான் சொன்னதற்கு காரணமும் சொல்லி விடுகிறேன்.
ReplyDeleteதீய கிரகங்கள் வேண்டாம். அது அனைவரும் அறிந்ததே. நல்ல கிரகங்களும் என் வேண்டாம் என்கிறேன்?
லக்கினத்தை விட அவை பிற வீடுகளில் அமர்வது சிறப்பு என்பதால். எடுத்துக்காட்டாக, இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஒன்பதாம் வீடு, பத்தாம் வீடு, படஈநோன்றாம் வீடு. இவைகளில் அவை இருப்பது நல்லது. ஒரு கிரகம் ஒரு இடத்தில தான் இருக்க இயலும் யென்னும் போது, சுபர்கள் லக்கினதிலும் ஏழாம் வீட்டிலும் இருப்பதை விட மேற்கூறிய வீடுகளில் இருப்பது நலம். சில விதி விலக்குகள் உண்டு. தனுசு லக்கினத்துக்கு சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருப்பது நல்லதல்ல. போக்கென்று போய் விடும் என்பார்களே, இருந்தும் இல்லாத நிலை என்பார்களே அது போல. அதாவது தேவலை, இயல்பில் நல்லவரே பெரிதளவில் வில்லனாகும் அபாயம். ஏன்? நானே சொல்லி விட்டால் சுவாரஸ்யம் போய் விடும். முக்கால்வாசி நண்பர்களுக்கும் அது தெரியும்.
அதனால் லக்கினத்தை பொறுத்த மட்டில், லக்கினாதிபதி நல்ல நிலையிலும் லக்கினம் காலியாக, நல்ல பரல்களை பெற்றால் சாலச்சிறந்தது என அபிப்ராயப்படுகிறேன்.
பிழையிருப்பின் பொறுக்கவும். திருத்தவும்.
நன்றி, வணக்கம்.
+++++
பிரியங்களுடன்
புவனேஷ்
மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயங்களைத் தொகுத்து அளித்தமை சிறப்பு. நன்றி ஐயா பகிர்விற்கு!
ReplyDelete////Blogger Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி////
நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////Blogger kmr.krishnan said...
ReplyDelete17 ,18 ஆகியவற்றில் கூறியுள்ள குணங்கள்தான் அடியேனுக்கு மனதில் பதிந்தது.18ல் கூறியபடி இனி பொது வேலைகள் வேண்டாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போவோம் என்று ஒதுங்கினாலும் தானாக வந்து பல வேலைகளில் ஈடுபட வைத்து விடுகிறது கிரஹ சூழல்."இறைவா பல செயல்களால் உன்னை மறக்கிறேன்.உன்னை மறவாமல், மனதில் இருத்தி சேவைகளைத் தொடர அருள் புரிவாய்" என்றே வேண்டுகிறேன்.
பல்வேறுபட்ட மன நிலைகளை தொகுத்து கொடுத்து இருப்பது நன்றாக உள்ளது. நன்றி ஐயா.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Sanjai said...
ReplyDeleteஐயா, காலை வணக்கம். லக்னத்தில் கிரஹங்களும், பார்வைகளும் இல்லாதபொழுது. லக்ன அதிபதியை மட்டும் வைத்து குணத்தை முடிவு செய்திடலாமா?////
அடுத்து வரவுள்ள பதிவையும் படியுங்கள் சஞ்சை!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கம், அன்பர்களே.
அதிசயமாக இன்று காலை வானில் மேகமின்றி வெயிலான் உதித்தான். சான்றோள் அடி சேர்ந்து பணிந்து கற்றவர் நெஞ்சில் ஐயங்கள் இன்றி நல்லறிவு உதிப்பதை ஒக்கும் அக்காட்சி.
நற்பாடம் நல்கிய வாத்தியாருக்கு எனது நன்றிகள் உரித்தாகின்றன.
நமது பிறவிக்குணத்தில் இருந்து கொஞ்சம் இங்கே எடுத்து விடுவோம். அன்பர் சஞ்சய் அவர்களின் கேள்விக்கு விடை தர முயற்சிக்கிறேன். இம்முயற்சி எதற்கெனில், அவ்விதம் செய்யுங்கால் என் புரிதலில் தவறிருப்பின் வாத்தியார் திருத்தலாம் அல்லவா!
லக்கினத்தில் கிரகங்களும் அதன் மேல் பார்வைகளும் இல்லை எனில், என்ன? லக்கினாதிபதி என்று ஒருவர் உள்ளாரே, அவர் உள்ள இடம், அவர் பார்க்கும் இடம், அவரைப்பார்க்கும் கிரகங்கள், அவர் நிலை (உச்ச நீச்சம், திரிகோண/கேந்திரம், அஷ்டகவர்க்கம்), லக்கினத்தின் அஷ்டகவர்க்க பரல்கள், தலைவர் (லக்கினாதிபதி) சென்று அமர்ந்த வீட்டின் பரல்கள் (ஐயா ஜம்மென்று உள்ளாரா இல்லை பே பே என முழிக்கிறாரா என தெரியணுமே), இதெல்லாம் உண்டே.
பொதுவாக, சுபர் லக்கினாதிபதி என்றால் அவர் மேல் பார்வைகள் இல்லாமல் அவர் மட்டும் நல்ல நிலைமையில் இருந்து விட்டால் போதும். லக்கினமும் காலியாக இருத்தல் நன்று. நற்கிரகங்கள் அவ்விடத்தில் இருந்தாலோ நற்பார்வைகள் விழுந்தாலோ கூடுதல் நன்மை. இங்கே கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். பொத்தாம்பொதுவாக சுபர் என்கிற போது இன்னொரு கேள்வி வரும். அவர் "இந்த ஜாதகத்தில் லக்கினத்துக்கு சுபரா?" இல்லை "அவரளவில் இயல்பில் சுபரா?" என்று. உதாரணமாக, இயல்பில் மிக நல்லவர் குரு; அவரே ஆறாம் வீட்டு அதிபதியாக வந்து, சேர்க்கை சரியில்லாமல் இருந்தால்? போதாத நேரமாக அதற்கு மற்ற கிரக அமைப்பும் ஒத்து ஊதி வைத்தால்? ஹிட்லர் ஜாதகத்தினை பார்க்கலாம். மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு "கையில் காயம் பட்ட குரங்குக்கு கையில் மிளகுபொடி தூவி, கண்ணையும் கட்டி, கல்லையும் ஊட்டி ஒரு தேளும் கொட்ட விட்டது போல" என. அப்படி ஆனால் என்ன ஆகுமோ அது நடக்கும் வாய்ப்பு உண்டு.
இந்த வள வளா கொழ கொழா கதை எல்லாம் வேண்டாம். நறுக்குத்தெரித்தாற்போல சொல்லுனதேன்றால் அது இஃதே:
பொதுவாக, லக்கினாதிபதி வலிமையாக (சுயவர்க்கத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பரல்களுடன்) இருந்தால் வேறு விஷயங்களை அவ்வளவாக நோண்டி நுங்கெடுத்து, தோண்டி துழாவ வேண்டியதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
+++++
சரி இதற்கு மேல் போனால் அப்புறம் டீச்சர் வர்றதுக்கு லேட்டானா துடுக்குப்பையன் கிளாஸ் எடுக்கராப்போல நீ ஏண்டா இங்க வந்து ஒரே அலம்பல் பண்ணுறே என திட்டு விழும் அபாயம் உள்ளதால், நான் அப்பாவி போல அப்பீட் ஆகிறேன். பெரியோர் பொறுப்பர் :)
நன்றி, வணக்கம்.
+++++
பிரியங்களுடன்
புவனேஷ்////
ஆமாம். லக்கினாதிபதியைப் பார்க்க வேண்டும். அவருடைய பங்களிப்பு முக்கியம்! உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி புவனேஷ்!
////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteLooking forward to sunsequent classes :)////
நல்ல்து. நன்றி!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteமுகத்தை பார்த்து குணம் சொல்லும்
கலை ஒன்று உண்டு அது pottu pori
கருமைய பதிவு 9 வாரங்களில்
தாயின் செயல்பாடுகளால் குழந்தையின்
லக்கினத்தை முறை செய்யும் கலையும் உண்டு
லாபமோ நட்டமோ
ஒருவருக்கு பிடிப்பது மற்ற
ஒருவருக்கு பிடிக்காது
இன்னமும் சிலர்..
பிடிக்காமல் செய்வது போல்
பிடித்த வேலையை செய்வார்கள்
அதற்கு
வாழ வைத்த இறைவன் மீது பொறுப்பை போடுவார்கள்
வாழ வசவாளர்கள்../////
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பேதம் கிரகங்களுக்கு இல்லை சுவாமி! யார் மீது பொறுப்பைப் போட்டாலும் அவர்கள் செய்வதைச் செய்யாமல் விடுவதில்லை!
ReplyDelete////Blogger ஜி ஆலாசியம் said...
சுவாமி விவேகானந்தர் சொல்வார்கள் தனிமனிதனின் செயல் பாடுகள் ஜீன்ஸ் என்று கொள்ள வேண்டாம் அதே வேளையில் ஒரு மனிதன் தனது கர்ம வினைப்படி எதை எல்லாம் செய்ய வேண்டுமோ அதற்கு ஏதான தாய் தந்தை குடும்ப சூழலிலே பிறக்கிறான் என்றே கொள்ளுதல் வேண்டும் என்பார்.
அதையே தாங்கள் வாங்கிவந்த வரம் என்றும் சொல்வதை அறிகிறேன்...
மிகவும் சுவாரஸ்யமான விசயங்களை பற்றியத் தொடக்கம்...
அருமையானப் பதிவு. நன்றிகள் ஐயா!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!!
/////Blogger thanusu said...
ReplyDeleteஎத்தனை வகை குணங்கள் அத்தனையும் பட்டியல் இட்டது சூப்பர்./////
இன்னும் எழுதலாம். உங்களின் நேரத்தையும் பொறுமையையும் கருதி முக்கியமானவற்றைக் கொடுத்துள்ளேன் நண்பரே!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நல்ல ஓர் அழகான பதிவு
நன்றி/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி உதயகுமார்!!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteலக்கினத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது என நான் சொன்னதற்கு காரணமும் சொல்லி விடுகிறேன்.
தீய கிரகங்கள் வேண்டாம். அது அனைவரும் அறிந்ததே. நல்ல கிரகங்களும் என் வேண்டாம் என்கிறேன்?
லக்கினத்தை விட அவை பிற வீடுகளில் அமர்வது சிறப்பு என்பதால். எடுத்துக்காட்டாக, இரண்டாம் வீடு, நான்காம் வீடு, ஒன்பதாம் வீடு, பத்தாம் வீடு, படஈநோன்றாம் வீடு. இவைகளில் அவை இருப்பது நல்லது. ஒரு கிரகம் ஒரு இடத்தில தான் இருக்க இயலும் யென்னும் போது, சுபர்கள் லக்கினதிலும் ஏழாம் வீட்டிலும் இருப்பதை விட மேற்கூறிய வீடுகளில் இருப்பது நலம். சில விதி விலக்குகள் உண்டு. தனுசு லக்கினத்துக்கு சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருப்பது நல்லதல்ல. போக்கென்று போய் விடும் என்பார்களே, இருந்தும் இல்லாத நிலை என்பார்களே அது போல. அதாவது தேவலை, இயல்பில் நல்லவரே பெரிதளவில் வில்லனாகும் அபாயம். ஏன்? நானே சொல்லி விட்டால் சுவாரஸ்யம் போய் விடும். முக்கால்வாசி நண்பர்களுக்கும் அது தெரியும்.
அதனால் லக்கினத்தை பொறுத்த மட்டில், லக்கினாதிபதி நல்ல நிலையிலும் லக்கினம் காலியாக, நல்ல பரல்களை பெற்றால் சாலச்சிறந்தது என அபிப்ராயப்படுகிறேன்.
பிழையிருப்பின் பொறுக்கவும். திருத்தவும்.
நன்றி, வணக்கம்.
+++++
பிரியங்களுடன்
புவனேஷ்/////
லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் அமர்ந்து, தன் பார்வையில் லக்கினத்தை வைத்திருப்பது சிறப்பான அமைப்பாகும்!
/////Blogger ravi krishna said...
ReplyDeleteமிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயங்களைத் தொகுத்து அளித்தமை சிறப்பு. நன்றி ஐயா பகிர்விற்கு!////
நல்லது. நன்றி நண்பரே!
//லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் அமர்ந்து, தன் பார்வையில் லக்கினத்தை வைத்திருப்பது சிறப்பான அமைப்பாகும்!//
ReplyDeleteகும்ப லக்கின பெண் குழந்தைக்கு லக்கினாதிபதி எழில் இருந்தால் நலமா?
சினம் கொள்ளாது ஐயம் தீர்க்க வேண்டும். இந்த பாயின்ட் மனசில் வந்ததால் தான் லக்கினாதிபதி எழில் அமர்வது பற்றி அடியேன் எழுதவில்லை.
///Blogger Bhuvaneshwar said...
ReplyDelete//லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் அமர்ந்து, தன் பார்வையில் லக்கினத்தை வைத்திருப்பது சிறப்பான அமைப்பாகும்!//
கும்ப லக்கின பெண் குழந்தைக்கு லக்கினாதிபதி எழில் இருந்தால் நலமா?
சினம் கொள்ளாது ஐயம் தீர்க்க வேண்டும். இந்த பாயின்ட் மனசில் வந்ததால் தான் லக்கினாதிபதி எழில் அமர்வது பற்றி அடியேன் எழுதவில்லை////.
கும்பத்தின் அதிபதி சனி என்பதால் உங்களுக்கு இந்த சந்தேகம். சனியாக இருந்தால் என்ன? அவர் தனக்குத்தானே எப்படிக் கெடுதல் செய்வார். அவர் ஏழில் இருப்பது (கேந்திரம்) நல்லதே! ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார். அதைவிட முக்கியமாக வெற்றியைக் கொடுப்பார். கும்பத்திற்கு இரண்டுதான் பலன். சனீஷ்வரன் அந்த லக்கினத்திற்கு லக்கினாதிபதி அத்துடன் விரைய ஸ்தானத்திற்கும் அதிபதி. அவர் லக்கினத்திற்கு ஏழில் இருப்பது வெற்றியையே தரும். 6, 8, 12ஆம் இடங்களில் இருந்தால் அதற்கு மாறான விளைவுகள்!
Very nice post sir.
ReplyDeleteThanks.