Astrology பிறவிக் குண்ம் எப்படியடா போகும்?
Post dated 15.10.2012
ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.
முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்? என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக் கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?
சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான் நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.
அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல் மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில் சொன்னால் அந்த ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.
ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார், மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு வழிபாடு செய்வார்.
ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம் வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர் நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி கொடுங்கள்” என்றார்கள்
”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.
”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.
“சென்று வாருங்கள்” என்றார்.
அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.
“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்
மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார் சுற்று முற்றும் பார்த்தார். அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்: “இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும் இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”
அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள். திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்கள்.
சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”
“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”
“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.
அப்படியே செய்தார்கள்.
மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார், "பாகற்காயில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா?”
சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள், "இல்லை ஐயா, எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”
இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில் சொன்னார். "எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம் போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின் இயற்கைக் குணம் மாறாது!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது. அதைப் பிறவிக் குணம் என்பார்கள். அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.
மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்
எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!
அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான். எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும் அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள்
என்று சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.
அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம் என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.
எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள முடியாது.
ஏன் அப்படி?
அதுதான் வாங்கி வந்த வரம்!
உங்கள் மொழியில் சொன்னால், பிறந்த லக்கினத்தாலும், மற்றும் பிறந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புக்களாலும் ஏற்படுவது அது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Benefic planets such as Jupiter, Venus, Mercury and the luminous Moon do very well in first house. However, the presence of the malefics such as Rahu, Ketu, Saturn and Mars can create very difficult situations in life. Strongly afflicted, it produces difficult birth or even infant mortality. It can also cause psychological, emotional and physical disorders.
லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும் கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப் பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரும்போது மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள் கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.
லக்கினங்களைப் பற்றித் தொடர்ந்து அலசுவோம்.
நாளை, முதலில் மேஷ லக்கினம்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் பெரியோர்களுக்கும்,
ReplyDeleteகாலை வணக்கங்கள்.
+++++
தாயின் அறிவுரையும் தந்தையின் ஆலோசனையும், குருவின் உபதேசமும், நல்லோர் மொழிகளும், பர்குடியில் பிறந்து சிறந்த கர்பினையே தன ஆபரணமாக பூண்ட மந்திரியன்ன மனைவியென்னும் மங்கை நல்லாள் அணைப்பும், அவள் மூலம் பெற்றெடுத்த மழலை மொழியும்,, இறைவன் புகழும், அவன் அடியார் மாண்பும் எத்துணை முறை துய்த்தாலும் திகட்டாது. தங்கள் பாடமும் கதைகளுக்கும் அஃதே! பழைய பாடங்களை இது வரை எத்துணை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. செப்புங்கால் எனது நன்றிகள் இங்கே கூடுதுறையாருக்கும் உரித்தாக வேண்டும்,
கதை நன்று. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே யென்னும் வாக்கினை நினைவு படுத்தும் வாக்கு.
தங்கள் பாடம் படித்து நான் ஒரு பாடல் வக்தேவியினை துதித்து அவளருளால் இயற்றினேன்:
எத்துணைதான் அன்புசெய்து நட்டாலும் கீழ்மக்கள்
கிட்டுபொருள் தாம்கொண்டு கைவிடுவர் - தொல்லுலகில்
அட்டபாலும் அம்பாகும் வேர்பெய்து வளர்த்திடினும்
எட்டிமரம் காய்க்காது மா!
பொருள்: எத்துணை தான் நாம் அன்பு செய்து நட்பு பாராட்டி இருந்தாலும், கீழ்மக்கள் நம்மிடம் கிடைக்கும் பொருளை சுருட்டிக்கொண்டு, சமயம் நேர்ந்த போழ்து நமக்கு உதவாமல் கைவிடுவர். தொன்மையான இந்த உலகில், சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய பாகும் (அம்பாகும் = அம + பாகும் = இனிய பாகும்) எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது (கசப்பும் விடமும் உள்ள எட்டிக்காயை தான் தரும்)
தங்கள் பாடங்களை மேலும் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
இந்த வாரம் தங்களுக்கு இனிமையும் பயனும் செறிந்ததாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
நன்றி,
புவனேஷ்
Sir, very good story with useful info. In lagnam, both budhan and sevvai (means one good and one bad)sits, how effects will be. Native has good habit or bad habit. Which planet occupy more effect. My next question is , in most of the families, father and son has same character(both good and bad habits) but horoscop differs for both. In those case how we should take.
ReplyDeleteThanks ,
Sathishkumar GS
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteகுணங்களை பற்றி
அருமையான கருத்து
நன்றி
யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ
ReplyDeleteஅவருக்கு அதை கொடுத்தது சிறப்பு
அதுவும் அவருடைய பிறவிகுணமோ
அது சரி..
முன்னால் ஒரு சுவாமியும்
பின்னால் ஒரு ஆனந்தாவும் சேர்த்தால்
சன்னியாசிதான்..என்ற நிலையில்
சரியான(?)பாதையில் சில கிராமங்கள்
ஆசிரமங்கள் எல்லாம் இப்போது..
ஆ... சிரமங்களான சமயத்தில்
மீண்டும் ஒரு கதை
மீள் பதிவாக வந்தமை சிறப்பே..
பச்சை காட்டும் புதனே நமக்கு
கச்சை கட்டி நிற்கிறார்
வரட்டும் நமது லக்கினம்
தரட்டும் வளங்களை சேர்த்தே
இந்த செய்தி மெய்யென சொல்ல
தலைப்பில் இரண்டு மெய்எழுத்து சேர்த்து (குண்ம்) வந்ததோ..
சரி இருக்கட்டும் இதுவும்
சரியாகத் தான் இருக்கும்..
ஆனால் சில நேரம் உப்புடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடும் பொது அதன் பிறவி குணம் சற்று மாறுபடும் அப்படிதான் மனிதனின் குணமும் எதனுடன் சேர்கிறோமோ அதன் தன்மை கொஞ்சம் நம்மை மாற்றிவிடும்
ReplyDelete// கோவை மு சரளா said...
ReplyDeleteஆனால் சில நேரம் உப்புடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடும் பொது அதன் பிறவி குணம் சற்று மாறுபடும் அப்படிதான் மனிதனின் குணமும் எதனுடன் சேர்கிறோமோ அதன் தன்மை கொஞ்சம் நம்மை மாற்றிவிடும் //
Well said Ma'm :)
Respected Sir,
ReplyDeleteThe way of your writing is so amazing.
We are all awaiting for your next post...
With kind regards,
Ravi
நாளை முதல் லக்னம்//// . புதியவர்களுக்காக மீண்டும் ஆத்திசூடி ஆரம்பம் என நினைக்கிறேன் . தொடருங்கள் அய்யா நன்றிகள்.
ReplyDeleteNice story
ReplyDeleteஎதோ ஒரு வகையில் லால்குடியார் பதிவில் வந்து நிற்கிறார்.
ReplyDeleteஅரிமாவின் அதட்டலுக்கும் பயந்துதான் லால்குடியார் பின்னூட்டம் போடும் நிலை. "ஏ, மிஸ்டர் கப்சிப் கபர்தார்" என்று எங்கிருந்தோ உருமும் சத்தம் நினைத்தாலே பயமாக் இருக்கிறது.
பிறவிகுணம் என்பதற்கும் நமது சமூகப் பகுப்பிற்கும் உறவு உண்டு.குலவிச்சை கல்லாமல் பாகம் படும். இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், அரிமா பயத்தால்.
ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார்: "ஒரு துறவியின் சுரைகுடுக்கை அவரோடு பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று வருகிறது. அதன் கசப்புத்தன்மை மாறுவதேஇல்லை. வேப்பமரம் காசியிலும் மற்ற இடங்களிலும் அதன் கசப்புத் தன்மையுடனேயே இருக்கிறது."
நம் இந்து அமைப்பில் ஆசிரமங்களும் மடங்களும் இப்போது உள்ள அமைப்பு முறையில் இருந்ததில்லை. வனாந்தரங்களில் தங்கள் ரிஷி பத்தினிகளுடன்
முனிவர்கள் தங்கியிருந்திருக்கலாம். ஸ்ரீ ராமர் கூட பரத்வாஜரை சந்திப்பதாக இராமாயணத்தில் வரவில்லையா?
புத்தமதத்தில்தான் முதல் முதலாக மடாலயங்கள் அமைப்பு ரீதியாகக்கட்டி நிறுவியுள்ளார்கள்.அதன்பின்னரே ஸ்ரீஆதிசங்கரர் காலத்தில் திக்குக்கு ஒன்றாக
சங்கர மடங்கள் நிறுவப்பட்டன.அதன் பின்னரே மடாதிபதிகள் தோன்ற ஆரம்பித்தனர்.
மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்:'சாதுக்களில் இருவகை. ஒருவர் 'குடீசக்'.மற்றொருவர் 'பஹூதக்' குடீசக் சாது ஊரெல்லாம் அலைந்துவிட்டு
இனி பார்க்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் ஒரே இடத்தில் குடிலை அமைத்து அமர்ந்துவிடுவார். பஹூதக் சாது வாழ்நாள் முழுதும் அலைந்து கொண்டே இருப்பார்'.
ஆசிரமங்கள் சாமியார்களுக்காக மட்டும் அல்ல. நமக்காகவும்தான். இல்லறத்தில் உழன்று கொண்டிருக்கும் சாதாரண மனிதனின் மனத்திற்கு சற்று ஆறுதலாக இளைப்பாற அமைக்கப்படுவதே ஆசிரமங்கள்.
தயானந்தா போன்ற சன்னியாசிகளின் உரையெல்லாம் கேட்டு எங்களுக்கெல்லாம் அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் ஐயாவுக்கு நானா சொல்லித் தர வேண்டும்?
இப்போதெல்லாம் நமக்கு ஜபமே 'அரிமா அரிமா அரிமா' என்றுதான்!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் பெரியோர்களுக்கும்,
காலை வணக்கங்கள்.
+++++
தாயின் அறிவுரையும் தந்தையின் ஆலோசனையும், குருவின் உபதேசமும், நல்லோர் மொழிகளும், பர்குடியில் பிறந்து சிறந்த கர்பினையே தன ஆபரணமாக பூண்ட மந்திரியன்ன மனைவியென்னும் மங்கை நல்லாள் அணைப்பும், அவள் மூலம் பெற்றெடுத்த மழலை மொழியும்,, இறைவன் புகழும், அவன் அடியார் மாண்பும் எத்துணை முறை துய்த்தாலும் திகட்டாது. தங்கள் பாடமும் கதைகளுக்கும் அஃதே! பழைய பாடங்களை இது வரை எத்துணை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. செப்புங்கால் எனது நன்றிகள் இங்கே கூடுதுறையாருக்கும் உரித்தாக வேண்டும்,
கதை நன்று. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே யென்னும் வாக்கினை நினைவு படுத்தும் வாக்கு.
தங்கள் பாடம் படித்து நான் ஒரு பாடல் வக்தேவியினை துதித்து அவளருளால் இயற்றினேன்:
எத்துணைதான் அன்புசெய்து நட்டாலும் கீழ்மக்கள்
கிட்டுபொருள் தாம்கொண்டு கைவிடுவர் - தொல்லுலகில்
அட்டபாலும் அம்பாகும் வேர்பெய்து வளர்த்திடினும்
எட்டிமரம் காய்க்காது மா!
பொருள்: எத்துணை தான் நாம் அன்பு செய்து நட்பு பாராட்டி இருந்தாலும், கீழ்மக்கள் நம்மிடம் கிடைக்கும் பொருளை சுருட்டிக்கொண்டு, சமயம் நேர்ந்த போழ்து நமக்கு உதவாமல் கைவிடுவர். தொன்மையான இந்த உலகில், சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய பாகும் (அம்பாகும் = அம + பாகும் = இனிய பாகும்) எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது (கசப்பும் விடமும் உள்ள எட்டிக்காயை தான் தரும்)
தங்கள் பாடங்களை மேலும் படிக்க ஆர்வமாக உள்ளேன்.
இந்த வாரம் தங்களுக்கு இனிமையும் பயனும் செறிந்ததாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
நன்றி,
புவனேஷ்////
உங்களுடைய ஆர்வம் வாழ்க! வளர்க! தொடர்ந்து படியுங்கள் புவனேஷ்!
ReplyDelete/////Blogger KJ said...
Sir, very good story with useful info. In lagnam, both budhan and sevvai (means one good and one bad)sits, how effects will be. Native has good habit or bad habit. Which planet occupy more effect. My next question is , in most of the families, father and son has same character(both good and bad habits) but horoscop differs for both. In those case how we should take.
Thanks ,
Sathishkumar GS/////
அவ்வாறு இருந்தால் இரண்டும் கலந்த குண்மாக இருக்கும்!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
குணங்களை பற்றி
அருமையான கருத்து
நன்றி/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger அய்யர் said...
ReplyDeleteயாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ
அவருக்கு அதை கொடுத்தது சிறப்பு
அதுவும் அவருடைய பிறவிகுணமோ
அது சரி..
முன்னால் ஒரு சுவாமியும்
பின்னால் ஒரு ஆனந்தாவும் சேர்த்தால்
சன்னியாசிதான்..என்ற நிலையில்
சரியான(?)பாதையில் சில கிராமங்கள்
ஆசிரமங்கள் எல்லாம் இப்போது..
ஆ... சிரமங்களான சமயத்தில்
மீண்டும் ஒரு கதை
மீள் பதிவாக வந்தமை சிறப்பே..
பச்சை காட்டும் புதனே நமக்கு
கச்சை கட்டி நிற்கிறார்
வரட்டும் நமது லக்கினம்
தரட்டும் வளங்களை சேர்த்தே
இந்த செய்தி மெய்யென சொல்ல
தலைப்பில் இரண்டு மெய்எழுத்து சேர்த்து (குண்ம்) வந்ததோ..
சரி இருக்கட்டும் இதுவும்
சரியாகத் தான் இருக்கும்../////
நல்லது. நன்றி விசுவநாதன்!! உங்கள் லக்கினம் என்ன?
//////Blogger கோவை மு சரளா said...
ReplyDeleteஆனால் சில நேரம் உப்புடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடும் பொது அதன் பிறவி குணம் சற்று மாறுபடும் அப்படிதான் மனிதனின் குணமும் எதனுடன் சேர்கிறோமோ அதன் தன்மை கொஞ்சம் நம்மை மாற்றிவிடும்/////
உப்பில் மட்டும் அல்ல - சர்க்கரைப் பாகில் அல்லது தேனில் ஊறவைத்தாலும் அதன் தனமை மாறிவிடும் சகோதரி!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDelete// கோவை மு சரளா said...
ஆனால் சில நேரம் உப்புடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடும் பொது அதன் பிறவி குணம் சற்று மாறுபடும் அப்படிதான் மனிதனின் குணமும் எதனுடன் சேர்கிறோமோ அதன் தன்மை கொஞ்சம் நம்மை மாற்றிவிடும் //
Well said Ma'm :)/////
உப்பில் மட்டும் அல்ல - சர்க்கரைப் பாகில் அல்லது தேனில் ஊறவைத்தாலும் அதன் தனமை மாறிவிடும் நண்பரே!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
The way of your writing is so amazing.
We are all awaiting for your next post...
With kind regards,
Ravi/////
ஆமாம் உங்களைப் போன்ற அன்பர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் படிப்பதால்தான் நானும் தொடர்ந்து எழுதுகிறேன்! உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Blogger thanusu said...
ReplyDeleteநாளை முதல் லக்னம்//// . புதியவர்களுக்காக மீண்டும் ஆத்திசூடி ஆரம்பம் என நினைக்கிறேன் . தொடருங்கள் அய்யா நன்றிகள்.////
மீண்டும் என்பதைவிட ஒரு புதிய கோணத்தில் இருக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள் தனுசு!
ReplyDelete////Blogger jeevan74 said...
Nice story////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஎதோ ஒரு வகையில் லால்குடியார் பதிவில் வந்து நிற்கிறார்.
அரிமாவின் அதட்டலுக்கும் பயந்துதான் லால்குடியார் பின்னூட்டம் போடும் நிலை. "ஏ, மிஸ்டர் கப்சிப் கபர்தார்" என்று எங்கிருந்தோ உருமும் சத்தம் நினைத்தாலே பயமாக் இருக்கிறது.
பிறவிகுணம் என்பதற்கும் நமது சமூகப் பகுப்பிற்கும் உறவு உண்டு.குலவிச்சை கல்லாமல் பாகம் படும். இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், அரிமா பயத்தால்.
ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார்: "ஒரு துறவியின் சுரைகுடுக்கை அவரோடு பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று வருகிறது. அதன் கசப்புத்தன்மை மாறுவதேஇல்லை. வேப்பமரம் காசியிலும் மற்ற இடங்களிலும் அதன் கசப்புத் தன்மையுடனேயே இருக்கிறது."
நம் இந்து அமைப்பில் ஆசிரமங்களும் மடங்களும் இப்போது உள்ள அமைப்பு முறையில் இருந்ததில்லை. வனாந்தரங்களில் தங்கள் ரிஷி பத்தினிகளுடன்
முனிவர்கள் தங்கியிருந்திருக்கலாம். ஸ்ரீ ராமர் கூட பரத்வாஜரை சந்திப்பதாக இராமாயணத்தில் வரவில்லையா?
புத்தமதத்தில்தான் முதல் முதலாக மடாலயங்கள் அமைப்பு ரீதியாகக்கட்டி நிறுவியுள்ளார்கள்.அதன்பின்னரே ஸ்ரீஆதிசங்கரர் காலத்தில் திக்குக்கு ஒன்றாக
சங்கர மடங்கள் நிறுவப்பட்டன.அதன் பின்னரே மடாதிபதிகள் தோன்ற ஆரம்பித்தனர்.
மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்:'சாதுக்களில் இருவகை. ஒருவர் 'குடீசக்'.மற்றொருவர் 'பஹூதக்' குடீசக் சாது ஊரெல்லாம் அலைந்துவிட்டு
இனி பார்க்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் ஒரே இடத்தில் குடிலை அமைத்து அமர்ந்துவிடுவார். பஹூதக் சாது வாழ்நாள் முழுதும் அலைந்து கொண்டே இருப்பார்'.
ஆசிரமங்கள் சாமியார்களுக்காக மட்டும் அல்ல. நமக்காகவும்தான். இல்லறத்தில் உழன்று கொண்டிருக்கும் சாதாரண மனிதனின் மனத்திற்கு சற்று ஆறுதலாக இளைப்பாற அமைக்கப்படுவதே ஆசிரமங்கள்.
தயானந்தா போன்ற சன்னியாசிகளின் உரையெல்லாம் கேட்டு எங்களுக்கெல்லாம் அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் ஐயாவுக்கு நானா சொல்லித் தர வேண்டும்?
இப்போதெல்லாம் நமக்கு ஜபமே 'அரிமா அரிமா அரிமா' என்றுதான்!/////
ஒரு சுதந்திரப்போராட்ட வீரரின் மகன் நீங்கள். அத்துடன் சேலம் மண்ணில் பிறந்து வளர்ந்தவர் நீங்கள். பேச்சிற்குக்கூட பயம் என்று சொல்லாதீர்கள். இறைவன் மற்றும் மனசாட்சி ஆகிய இரண்டிற்கு மட்டுமே பயப்படுங்கள்.
"இந்திய ஞானமரபில் ஊர்சுற்றி என்ற ஆளுமையை இருசொற்கள் வழியாகச் சுட்டுகிறார்கள். பர்விராஜகன், அவதூதன். பர்விராஜகன் தன் நாட்டைத்துறந்து ஊர் ஊராக அலைபவன். அனுபவங்கள் முன் தன்னைத் திறந்து போடுபவன். அவ்வனுபவங்கள் வழியாக அவன் முதிர்ந்து கனிந்து ஞானியாக ஆகும்போது அவதூதனாகிறான். அப்போதும் அவன் ஊர்சுற்றிதான். காந்தி முதல் நிலையில் இருந்து கடைசி நிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஊர்சுற்றி."
ReplyDeleteகூறியவர் எழுத்தாளர் ஜெயமோகன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete//உப்பில் மட்டும் அல்ல - சர்க்கரைப் பாகில் அல்லது தேனில் ஊறவைத்தாலும் அதன் தனமை மாறிவிடும் நண்பரே!! //
ReplyDeleteஉண்மை தான் வாத்தியார் ஐயா. நான் மறுக்கவில்லை. சட்டென்று ஆமோதித்தான் காரணம், உப்பில் ஊறவைப்பது தானே ஊறுகாய் போடும் பொது நாம் பரவலாக செய்வது? அதனால் நல்ல பாயின்ட் என்று பாராட்டினேன். பாகிலும் தேனிலும் ஊறவைத்தாலும் பாகற்காயின் சுவை மாறும் என்பதில் சந்தேகமில்லை. மாறும் என்பதை விட கூடும் என்று சொல்லலாமோ? முழுக்கசப்பும் இன்றி முழு இனிப்பும் இன்று மூன்றாவது சுவையாக பரிணமிக்கும் அல்லவா?
கடவள் 337ஐ பல விதமாக சமைத்து போட்டிருக்கிறான். தின்றுதான் தீரவேண்டும். ஜிலேபியை நினைத்துக்கொண்டு பாகர்க்கையை திங்க வேண்டியதுதான். வாத்தியார் ஐயா
ReplyDeleteநம் எதிர் வினைகளும் (reactions) தீர்மானிக்க பட்டவை தானா?