14.9.12

கவிதைச் சோலை: மதியை விதியினால் மாய்க்கின்றவன்!



பக்திமலர்

இன்றைய பக்தி மலரை புதுக்குரலால் பாடப் பெற்ற பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் இளம் பாடகர் மது பாலகிருஷ்ணன்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------


காணொளியுடன் பாடல்
our sincere thanks to the person who uploaded the video clipping!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவிதைச் சோலை: மதியை விதியினால் மாய்க்கின்றவன்!
 
முதுகிலே கண்வைக்க முயலாத இறைவனோ
    முகத்திலே கண்ணை வைத்தான்
       முகம்பார்க்க விரும்பாது பகையான மனிதனோ
    முதுகையே பார்த்து நின்றான்
சதிகாரர் கையிலே பலியாக அஞ்சுவான்
    தர்மத்தை வேண்டி நின்றான்
       தர்மத்தின் தேவனோ தன்மையும் பிறரையும்
    சதிகாரர் கையில் வைத்தான்;
மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
    மடியிலே வைத்த மயிலே!
       மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

                   - கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. வணக்கம் ஐயா,
    என் மனத்தெல்லாம் அமைதியான ஜோதி வடிவத்தையும் லிங்க வடிவதிலும் லாயிக்கின்றது மற்றெல்லாம் உருவ வழிபாட்டில் பயம் அதிக சிந்தனை வருகிறது, சின்ன வயதில்,என் அப்பா பாட்டனார், வாழ்ந்து வளர்ந்த விரிஞ்சிபுரம் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வேன் ஸ்ரீ ருத்ரம் ஓதுவார்கள், பிறகு பூஜை பிரசாதம் சிவபுராணத்தை எங்கள் குடும்பம் அனைவரும் பாடுவோம், ஆனால் இப்பொழுதுள்ள கிரிவலம் பிரதோஷம் எல்லாம் எனக்கு தெரியாது,
    g r murugan

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    அற்புதமாய் ஓர் பக்தி பாடல் ,ஓர் நல்ல
    பாடகர், காலை முருகனின் அருள்
    நன்றி

    ReplyDelete
  3. ''மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
    மடியிலே வைத்த மயிலே!''

    சதியினால் தீயோர் தரும் துயரினை
    விதியென பொறுப்பதும் முறையோ
    பதியினைப் படைத்த தேவியே -நினைக்
    கதியென வரும் பக்தனைகாத்து நற்
    கதியினை தரும் அணங்கே!

    விதியேது மதியேது சதியேது -நினை
    கதியென்றே வந்து சரணடைந்த பின்னே
    இரவேது பகலேது இன்பமேது துன்பமேது
    இடைவிடாது நினைத் தொழும் போது
    இடைவெளிதான் ஏது அம்மே!

    கனவேது நினைவேது காணும் யாவும்
    நினதென்ற எண்ணம் மட்டும் நீங்காது
    எனதுள்ளே கருக்கொண்டு வளர்ந்திட்ட போது
    உறவேது பிரிவேது உண்மை உணர்ந்தபோது
    பிறப்பிறப்பேது நினதுபாதம் பற்றியபோது!

    ''மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
    மடியிலே வைத்த மயிலே!''

    கவியரசுவின் வரிகளே கரைகளென இருந்து பாயும் எனது கவி!

    அப்பன் முருகனின் பாடல் இனிய தேவ கானமென ஒலித்தது !

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. விதியால் மாய்க்கின்றவனை
    விரல் எழுத்தில் காட்டிய கவிகோவே

    உன்
    எண்ணங்களை எடுத்துச் சொல்லும்
    எம் கருத்தை ஏற்கவில்லையே..

    எழுத்தில் சொல்வது இவர்களுக்கு புரியலையாம்
    ஏட்டில் சொன்னால் படிக்க பொழுதில்லையாம்

    மாறுபட்ட உலகத்தில்
    மானிடனாய் பிறந்திட்டதாலே

    சாகும் வரை வாழ பழகுவது
    சாதரணமானதில்லை தானோ

    ReplyDelete
  5. கணொளியும் பாடலும் நல்ல தேர்வு. மது பாலகிருஷ்ணனின் குரலில் நல்ல காம்பீர்யம்.குழைவுகளும் நன்கு விழுகின்றன.

    தன் முதுகு யாருக்கும் தெரிவதில்லை.'ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு'என்னும் பொய்யா மொழிக்கு ஒரு விளக்கம் போன்ற கவியரசரின் கவிதையில் நல்ல சொல்லாட்சி.அளித்த உங்களுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  6. கவிஞர் ஹாலாஸ்யம் கவிதையும் அருமை.

    "கனவேது நினைவேது காணும் யாவும்
    நினதென்ற எண்ணம் மட்டும் நீங்காது
    எனதுள்ளே கருக்கொண்டு வளர்ந்திட்ட போது
    உறவேது பிரிவேது உண்மை உணர்ந்தபோது
    பிறப்பிறப்பேது நினதுபாதம் பற்றியபோது!"

    இரட்டைகள் பற்றிய இந்த வர்ணனை மனதில் நிற்கிறது.வாழ்க, வளர்க!

    ReplyDelete
  7. //உன்
    எண்ணங்களை எடுத்துச் சொல்லும்
    எம் கருத்தை ஏற்கவில்லையே..

    எழுத்தில் சொல்வது இவர்களுக்கு புரியலையாம்
    ஏட்டில் சொன்னால் படிக்க பொழுதில்லையாம்//

    என்ன, ஏது, எதற்கு, யாரிடம், .....ஒன்றும் புரியவில்லை
    கவியரசரே!மதுரை மீனாட்சியே!

    ReplyDelete
  8. Pakthi paravasam adienthen nantri vanagam, vagpuariyel seraa mudiymaa.

    ReplyDelete
  9. பக்தி பாடல் மற்றும் கவிதையோடு அந்தந்த வாரத்தின் ஆக்கங்களை முடித்துக் கொள்வது அருமை.

    ஆலாசியம் அவர்கள் தன் கவிதை எழுதும் திறனை அவ்வப் போது காட்டி வருகிறார். அதுவும் நன்று. நமக்கு கவிதையெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.

    ReplyDelete
  10. நல்ல பாடல்கள் தந்த அருமையான பதிவு. மலையாள மொழியில் மது பாலகிருஷ்ணனின் குரலினிமை கட்டிப் போடுகிறது. "மயில் வாகனமேறிப்போ மனமே!!, வேலழகன்டே கல்யாணம் காணாம்" வரியில் வரும் சங்கதிகள் அழகு. ஓம் என்னும் மந்திரத்தில் ஆடும் வேலனை எம்மொழியில் பாடினாலும் அழகுதானே!!!

    கவியரசரின் பாடல் சிறப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    கவியரசுவின் வரிகளே கரைகளென இருந்து பாயும் சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதையும் அற்புதம். மிக்க நன்றி.


    ReplyDelete
  11. எனது கவிதைகளை பின்னூட்டத்தில் வெளியிட அனுமதித்த ஐயாவிற்கும்,
    ரசித்து பாராட்டிய கிருஷ்ணன் சார் மற்றும் ஆனந்திற்கும் நன்றிகள் பல!
    அய்யர் அவர்களுக்கும் நன்றிகள் பல (இது பழைய பாக்கி சொல்லாமல் போனது பலநேரம் வந்துருத்தும்)

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா!

    தனது ஆருயிர் தம்பி காதலிக்கும் பெண் குறத்தி என்று தெரிந்தும் கெளரவம் பார்க்காமல் தம்பியின் காதலியை தம்பிக்கே அடைய செய்த தெய்வம் ஒன்று என்றால் அது விக்னேஸ்வர்தான்.

    தமிழகத்தில் பிள்ளையார் பட்டி, திருச்சியில் மலைக்கோட்டை பிள்ளையார் , திருவனந்தபுரத்தில் பழவன்காடி பிள்ளையார், மும்பையில் விக்னேஷ்வர் என சகல இடத்திலையும் வீற்று இருந்து சகல தோஷங்களை தீர்த்து வைக்கும் தெய்வம் அல்லவா கணேசமூர்த்தி.

    தம்பி முருகனின் கனவை, ஆசையை, எண்ணத்தை, நோக்கத்தை, பூர்வசென்ம உறவை , குறத்தி வள்ளியின் தவத்தை, வேண்டுதலையும் ஏற்று கொள்ள செய்த தெய்வம் ஒன்று என்றால் அது ஒரே ஒரு சைவ தெய்வம் விக்கி ( விக்னேஷ்வர்) தான் .

    குறத்தியையும் தனது ஆருயிர் தம்பியின் மனைவியாக ஆக்க யானை வடிவத்தில் வந்து கிழட்டு கிழவனாக வந்த சுப்பிரமணியனிடம் அடைக்கலம் புக செய்தவர் அல்லவா!

    ReplyDelete
  13. ஐயா!

    எப்படி ஐயா உங்களால் மட்டும் இப்படி எல்லாம் எழுத முடிகின்றது . பணம், பெயர், புகல், தன்மானம் என்று எத்தனையோ இருந்து கொண்டு மனிதர்கள் நின்மதி இல்லாமல் ஓடும் உலகத்தில் அனைத்தினையும் ஒதிக்கிவிட்டு எல்லாமே ஆண்டவனின் ஆணை என்று பாடம் நடத்த முடிகின்றது எல்லாம் வல்ல தெய்வம் தங்களுக்கு அணைத்து பாக்கியதினையும் தர எம்பெருமான் ஸ்ரீ பால சுப்பிரமணியனை வேண்டுகின்றேன் வாத்தியார் அய்யா உளமார!.

    --
    Life is beautiful !!!

    ¨`•.•´¨) Always
    `•.¸(¨`•.•´¨) Keep
    (¨`•.•´¨)¸.•´ Smiling!
    `•.¸.•

    ReplyDelete
  14. ///ஜி ஆலாசியம்said...
    அய்யர் அவர்களுக்கும் நன்றிகள் பல (இது பழைய பாக்கி சொல்லாமல் போனது பலநேரம் வந்துருத்தும்)///

    சொல்லாமலே உணர்வோம் தோழரே
    சொல்லில் சேர்த்தே சமைத்த உம்

    தோழமை பெற்றே மகிழ்கிறோம்
    தோன்றும் உம் எண்ணத்தில் ஒருதுளி

    தோன்றா துணையாய் நிற்கும் இறையருள் பேரொளி
    தோள் தட்டியே வளர்க்கும் வளர்க்கட்டும்

    வணக்கமும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  15. /////Blogger murugan said...
    வணக்கம் ஐயா,
    என் மனத்தெல்லாம் அமைதியான ஜோதி வடிவத்தையும் லிங்க வடிவதிலும் லாயிக்கின்றது மற்றெல்லாம் உருவ வழிபாட்டில் பயம் அதிக சிந்தனை வருகிறது, சின்ன வயதில்,என் அப்பா பாட்டனார், வாழ்ந்து வளர்ந்த விரிஞ்சிபுரம் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வேன் ஸ்ரீ ருத்ரம் ஓதுவார்கள், பிறகு பூஜை பிரசாதம் சிவபுராணத்தை எங்கள் குடும்பம் அனைவரும் பாடுவோம், ஆனால் இப்பொழுதுள்ள கிரிவலம் பிரதோஷம் எல்லாம் எனக்கு தெரியாது,
    g r murugan////

    ஆமாம், சில விஷயங்கள் வயதான பிறகுதான் தெரியவரும். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    அற்புதமாய் ஓர் பக்தி பாடல் ,ஓர் நல்ல
    பாடகர், காலை முருகனின் அருள்
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ''மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
    மடியிலே வைத்த மயிலே!''
    சதியினால் தீயோர் தரும் துயரினை
    விதியென பொறுப்பதும் முறையோ
    பதியினைப் படைத்த தேவியே -நினைக்
    கதியென வரும் பக்தனைகாத்து நற்
    கதியினை தரும் அணங்கே!
    விதியேது மதியேது சதியேது -நினை
    கதியென்றே வந்து சரணடைந்த பின்னே
    இரவேது பகலேது இன்பமேது துன்பமேது
    இடைவிடாது நினைத் தொழும் போது
    இடைவெளிதான் ஏது அம்மே!
    கனவேது நினைவேது காணும் யாவும்
    நினதென்ற எண்ணம் மட்டும் நீங்காது
    எனதுள்ளே கருக்கொண்டு வளர்ந்திட்ட போது
    உறவேது பிரிவேது உண்மை உணர்ந்தபோது
    பிறப்பிறப்பேது நினதுபாதம் பற்றியபோது!
    ''மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
    மடியிலே வைத்த மயிலே!''
    கவியரசுவின் வரிகளே கரைகளென இருந்து பாயும் எனது கவி!
    அப்பன் முருகனின் பாடல் இனிய தேவ கானமென ஒலித்தது !
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    விதியேது மதியேது சதியேது -நினை
    கதியென்றே வந்து சரணடைந்த பின்னே”
    என்ற வரிகள் சிறப்பாக உள்ளன! நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  18. ////Blogger அய்யர் said...
    விதியால் மாய்க்கின்றவனை
    விரல் எழுத்தில் காட்டிய கவிகோவே
    உன்
    எண்ணங்களை எடுத்துச் சொல்லும்
    எம் கருத்தை ஏற்கவில்லையே..
    எழுத்தில் சொல்வது இவர்களுக்கு புரியலையாம்
    ஏட்டில் சொன்னால் படிக்க பொழுதில்லையாம்
    மாறுபட்ட உலகத்தில்
    மானிடனாய் பிறந்திட்டதாலே
    சாகும் வரை வாழ பழகுவது
    சாதரணமானதில்லை தானோ///

    புரிகிறவர்களுக்குப் புரியட்டும். புரிந்துகொள்ள முடியாதவர்களுக்குப் புரியாமலே போகட்டும்! - இதுவும் கவியரசர் சொன்னதுதான்

    ReplyDelete
  19. /////Blogger kmr.krishnan said...
    கணொளியும் பாடலும் நல்ல தேர்வு. மது பாலகிருஷ்ணனின் குரலில் நல்ல காம்பீர்யம்.குழைவுகளும் நன்கு விழுகின்றன.
    தன் முதுகு யாருக்கும் தெரிவதில்லை.'ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு'என்னும் பொய்யா மொழிக்கு ஒரு விளக்கம் போன்ற கவியரசரின் கவிதையில் நல்ல சொல்லாட்சி.அளித்த உங்களுக்கு நன்றி ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  20. ////Blogger krishnababuvasudevan said...
    Pakthi paravasam adienthen nantri vanagam, vagpuariyel seraa mudiymaa.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger ananth said...
    பக்தி பாடல் மற்றும் கவிதையோடு அந்தந்த வாரத்தின் ஆக்கங்களை முடித்துக் கொள்வது அருமை.
    ஆலாசியம் அவர்கள் தன் கவிதை எழுதும் திறனை அவ்வப் போது காட்டி வருகிறார். அதுவும் நன்று. நமக்கு கவிதையெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!!

    ReplyDelete
  22. ////Blogger Parvathy Ramachandran said...
    நல்ல பாடல்கள் தந்த அருமையான பதிவு. மலையாள மொழியில் மது பாலகிருஷ்ணனின் குரலினிமை கட்டிப் போடுகிறது. "மயில் வாகனமேறிப்போ மனமே!!, வேலழகன்டே கல்யாணம் காணாம்" வரியில் வரும் சங்கதிகள் அழகு. ஓம் என்னும் மந்திரத்தில் ஆடும் வேலனை எம்மொழியில் பாடினாலும் அழகுதானே!!!
    கவியரசரின் பாடல் சிறப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
    கவியரசுவின் வரிகளே கரைகளென இருந்து பாயும் சகோதரர் ஆலாசியம் அவர்களின் கவிதையும் அற்புதம். மிக்க நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. ////Blogger Maaya kanna said...
    வணக்கம் ஐயா!
    தனது ஆருயிர் தம்பி காதலிக்கும் பெண் குறத்தி என்று தெரிந்தும் கெளரவம் பார்க்காமல் தம்பியின் காதலியை தம்பிக்கே அடைய செய்த தெய்வம் ஒன்று என்றால் அது விக்னேஸ்வர்தான்.
    தமிழகத்தில் பிள்ளையார் பட்டி, திருச்சியில் மலைக்கோட்டை பிள்ளையார் , திருவனந்தபுரத்தில் பழவன்காடி பிள்ளையார், மும்பையில் விக்னேஷ்வர் என சகல இடத்திலையும் வீற்று இருந்து சகல தோஷங்களை தீர்த்து வைக்கும் தெய்வம் அல்லவா கணேசமூர்த்தி.
    தம்பி முருகனின் கனவை, ஆசையை, எண்ணத்தை, நோக்கத்தை, பூர்வசென்ம உறவை , குறத்தி வள்ளியின் தவத்தை, வேண்டுதலையும் ஏற்று கொள்ள செய்த தெய்வம் ஒன்று என்றால் அது ஒரே ஒரு சைவ தெய்வம் விக்கி ( விக்னேஷ்வர்) தான் .
    குறத்தியையும் தனது ஆருயிர் தம்பியின் மனைவியாக ஆக்க யானை வடிவத்தில் வந்து கிழட்டு கிழவனாக வந்த சுப்பிரமணியனிடம் அடைக்கலம் புக செய்தவர் அல்லவா!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  24. /////Blogger Maaya kanna said...
    ஐயா!
    எப்படி ஐயா உங்களால் மட்டும் இப்படி எல்லாம் எழுத முடிகின்றது . பணம், பெயர், புகழ், தன்மானம் என்று எத்தனையோ இருந்து கொண்டு மனிதர்கள் நின்மதி இல்லாமல் ஓடும் உலகத்தில் அனைத்தினையும் ஒதிக்கிவிட்டு எல்லாமே ஆண்டவனின் ஆணை என்று பாடம் நடத்த முடிகின்றது எல்லாம் வல்ல தெய்வம் தங்களுக்கு அணைத்து பாக்கியதினையும் தர எம்பெருமான் ஸ்ரீ பால சுப்பிரமணியனை வேண்டுகின்றேன் வாத்தியார் அய்யா உளமார!./////

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி! தருகிறவர் மொத்தமாக அதை வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் சேர்த்துத் தரட்டும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com