படத்தில் இருக்கும் வி.ஐ.பி யாரென்று தெரிகிறதா? |
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினாறு
புரட்சித் தலைவரின் பழைய படப் பாடல் ஒன்று உள்ளது: “ஹலோ...ஹலோ சுகமா? இப்போ நீங்க நலமா?” என்ற பல்லவியுடன் துவங்கும். படம் ‘தர்மம் தலை காக்கும்’
நான்காம் வீடுதான் சுக ஸ்தானம். அந்த வீடு நன்றாக இருந்தால் இந்தப் பல்லவிக்கு வேலையே இல்லை. ஆசாமி எப்போதும், எந்த சூழ்நிலையிலும் சுகமாக இருப்பான்.
அந்த வீடு நன்றாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? சுகக்கேடுதான்.
சுகககேடு மட்டுமா? வேறு சில கேடுகளும் உள்ளன. அவற்றை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------
கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கெடுதி செய்யும் செம்பாம்பு நாலில்நிற்க
சீளப்பா செனித்த மனை சுத்தபாழாம்
சென்மனுக்கு கிரகமுண்டு விதியும் கூறு
கூளப்பா குளிகனுமே சேர்ந்து நிற்க
குடியிருக்க குச்சில்லை கறவையில்லை
ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம்
அத்திடலில் அரவுக்கு சாந்தி செய்க!
- புலிப்பாணி முனிவர்
நான்காம் வீட்டில் சனி, ராகு, அல்லது கேது போன்ற தீமையான கிரகங்கள் இருப்பது சுகக்கேடு. நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள். தாய், கல்வி, சுகம் (வீடு, வண்டி வாகனங்கள்). சரி, நான்காம் வீடு அடிபட்டுப்போயிருந்தால்
இந்த இலாக்காக்கள் மூன்றுக்குமே கேடா?
அது பொது விதி! தாய்க்கு சந்திரனும், கல்விக்கு புதனும், சுகத்திற்கு சுக்கிரனும் மந்திரிகள் (authorities) அவர்களுடைய நிலைமையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் (உச்சம் பெற்று இருந்தாலும் அல்லது கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கப் பரல்களில் 5ம் அல்லது 5ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் ஜாதகனுக்குக் கைகொடுத்து விடுவார்கள்) அவன் தப்பித்துவிடுவான்.
இல்லை என்றால் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டியதாயிருக்கும்.
அந்த வீட்டில் கேது வந்து அமர்ந்திருந்தால், அது கேடானது என்று முனுசாமி (அதாங்க முனிவர்) அடித்துச் சொல்கிறார். அது பொதுப் பலன் என்றாலும் கொஞ்சமாவது வேலை செய்யும்.
என்னென்ன கேடு என்கிறார்? ஜாதகன் பிறந்த வீடு பாழாகிப் போகும் என்கிறார். அதாவது அடையாளமின்றிப் போகலாம். அதுவும் கேதுவுடன் மாந்தியும் சேர்ந்திருந்தால், கேட்கவே வேண்டாம், ஜாதகனுக்கு குடியிருக்க வீடு இருக்காது. வீட்டில் மாடு, கன்று இருக்காது.
முனுசாமி காலத்தில் மாடு கன்றுகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அத்துடன் ஜாதகனுடைய தாய்க்கும் அது கெடுதியானது என்கிறார்.
அரவுக்கு சாந்தி செய்க என்கிறார். அதுதான் பரிகாரம் என்கிறார். பாம்பை வளர்த்து வணங்கவும் முடியாது. பாம்புப் புற்றில் தினமும் பால் வார்க்கவும் முடியாது. இன்றைய வாழ்க்கை முறையில் அதெல்லாம் சாத்தியமில்லை.
ஆகவே எல்லாம் வல்ல இறைவனைத் தினமும் மனம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டும். அத்துடன் ஜென்ம நட்சத்திரத்தன்று கேது ஸ்தலத்திற்கும் சென்று கேது பகவானை வழிபட்டு வரலாம்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===
good morning sir. arumaiyana pathivu
ReplyDeletegood morning sir ...
ReplyDeleteநாளில் வந்தமர்ந்த கேதுவும் தான்
ReplyDeleteநாடு கடத்தும் பிறந்த வீட்டிலிருந்தே
தாயிற்கு நோவுறும் சுகவாழ்வை கெடுக்கும்
மேஷம் கன்னி விருச்சிகமானால்
வேதனைக் குறையும் நல்வினை விளையும்
நல்கிரகம்தான் நான்கைப் பார்த்தால்
நந்தவனமாக வாழ்வும் பூத்துக் குலுங்கும்
அறிந்தவர் தெரிந்தவரிலிருந்து கண்டவரை!?
நான்காம் வீட்டில் கேது வந்தமர்தவர்களின் தாய் நோவுருகிறாள்...
அல்லது உயர்கல்வி வரைச் சென்றாலும் அதை முடிக்கமுடியாமல் தடுமாறச் செய்கிறது...
சுகக் கேடு அல்லது தாயிடமும் நண்பர்களிடமும் அன்பை பெறாமல் தனிமைப் படுத்தப் படுகிறது,
அல்லது நாடு கடத்தப் படுகிறது; முக்கியமாக பிறந்த வீட்டில் இருந்து இடமாற்றம் பெறுகிறது...
அதற்கு எதிர் பத்தாம் வீட்டில் ராகு அமர்கிறான் அவனும் நல்லவர்களின் சேர்க்கை பார்வைப் பெறாமல்
போனால் குடியும் கூத்துமாடி வாழ்வில் சுகக் கேடே அடைகிறான்...
அதைப் பற்றிய பாப் கார்னை வேறொரு நாளில் பொரிப்பீர்கள் அதுவரை காத்து இருக்கிறோம்.
அருமையானப் பதிவு! புலிப்பாணி முனுசாமியின் பாடலை தேம்பாவணி போல் தீதறு விளக்கம் தந்த பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
i dnrya pathvu nanrga ullthu ..engaludya close relation jathakathil 4 il kathu 18 vayathil .amma illai .. marriage..30 vayathil.. three years marriage life wife illai . death. .... . panam erukkurathu nallajob erukkurutu nimmathy illai age 34 ...
ReplyDeleteஅந்தப் பெண் முன்னால் நடிகை, இந்நாள் மேலவை (ராஜ்யசபா) உறுப்பினர் ஜெயப்பிதா என்று உடனே தெரிந்தது. பக்கத்தில் இருப்பவர் சமஜ்வாடி கட்சி முன்னால் பொதுச் செயலாளர் திரு அமர்சிங் என்று அறிந்துக் சற்று நேரம் பிடித்தது. ராகு கேது ஸ்தலமான காலஹஸ்தியில் பரிகார பூஜை செய்தார்களாமே.
ReplyDeleteசலங்கை ஒலி ஜெயப்ரதா வை மறக்க முடியுமா
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
ReplyDeleteநான்காம் வீடு மீனம், நான்கின் அதிபதி குரு 12 ல் கேது உடன் மறைந்தால் இந்த மூன்று இலாகா களுக்கு நன்மையா அல்லது கேடா?
please Reply me..
அன்புடன் ,
ஜான்
////சனி, ராகு, கேது நான்கில் இருந்தால் சுகக்கேடு,தாய்க்கு கேடு///
ReplyDeleteஅய்யா எனக்கு துலா லக்னம் சனி நான்கில் .கேதுவும் அங்கேதான். அந்த வீட்டின் பரல்கள் 29 சனியின் சுயபரல்கள் 5 . எனக்கென்று வீடு கட்ட நினைத்து துவங்கியபோது நான் நினைத்ததைவிட பெரிய வீடாக கட்டி முடிக்கும்படி என் விருப்பத்தையும் மீறி அமைந்து போனது.அதே போன்று காரும் சின்ன கார் வாங்கினால் போதும் என நினைத்தேன் அதுவும் பெரிய காராகவே அமைந்து விட்டது. என் தாயார் இன்னும் ஆரோக்கியமாக் இருக்கிறார். இன்னும் கண்ணாடி கூட போடவில்லை.எனக்கும் என் தாயாருக்கும் அத்தனை நல் உறவு. எனக்காக எப்போதும் பிரார்த்தனையிலேயே இருப்பார். நான் நன்றாக இருப்பதற்கு காரணம் என் தாயாரின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் என்றே நான் நினைப்பேன். ஆனால் நான் பிறந்தவுடன் என் தந்தை வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் ,சொந்த வீடும் இல்லை. நான் பிறந்தவுடன் என் பெற்றோருக்குத்தான் சுககேடும் வறுமையும் வளர்ந்தபின் அதை நானே நீக்கி விட்டேன்.
எனக்கு சனியால் தொல்லை இல்லை என நினைக்கிறேன் ,ஆனால்
நான்கில் கேது இருந்தால் கேடு முனுசாமி அடித்து சொல்கிறார் .இந்த கேதுவால் தான் எனக்கு பிரச்சினை என நினைக்கிறேன்
முனிவர் இந்த பாடலில் செம்பாம்பு (கேது செம்பாம்பு என்றும், ராகு கரும் பாம்பு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்) 4ல் இருந்தால் கெடுதி என்றும் உடன் குளிகன் இருந்தால் மிகக் கெடுதி என்று குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்கிறேன். ராகு கேது தனித்து இருந்தால் அதிக தீமை செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
ReplyDelete"இன்பமே எந்நாளும் துன்பமில்லை "
ReplyDeleteஎன்ற அப்பர் பெருமானின் தேவாரம் சிந்திக்க வைத்தது இன்றைய பதிவு..
பாம்பு பற்றிய மேலதிக தகவல் தர வேண்டுகிறோம்..
Good morning sir,
ReplyDeletepresent sir,
ஐயா..படத்தில் உள்ள மூன்றாம் நபரைத் தானே அடையாளம் கேட்கிறார்?
ReplyDeleteகோள் சாரத்தில் விருச்சிக ராசிக்காரரகளுக்கு கும்பத்தில் ராகு நின்ற சமயம்,அதாவது ராசிக்கு 4ல் ராகு நின்ற போது, வீடு நிலம் வாங்கவோ விற்கவோ செய்தார்கள்.பல விருச்சிக ராசி நண்பர்களைக் கேட்டு அறிந்த ஆராய்ச்சி இது. ராகுவோ கேதுவோ தீமை மட்டும் செய்வதில்லை என்பது புலனாய்ற்று..
ReplyDeleteந்ல்ல பதிவு அய்யா! நன்றி!
தொடர்ந்த வெளியூர்ப் பயணங்களில் இருப்பதால் வகுப்பறைக்கு வருவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. ஆயினும் பாடங்களைப் படித்து விடுகிறேன். இன்றைய பதிவு மிக அருமை. நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி. ஐயா.
ReplyDelete/////Blogger Balaji said...
ReplyDeletegood morning sir. arumaiyana pathivu/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger eswari sekar said...
ReplyDeletegood morning sir ...////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteநாளில் வந்தமர்ந்த கேதுவும் தான்
நாடு கடத்தும் பிறந்த வீட்டிலிருந்தே
தாயிற்கு நோவுறும் சுகவாழ்வை கெடுக்கும்
மேஷம் கன்னி விருச்சிகமானால்
வேதனைக் குறையும் நல்வினை விளையும்
நல்கிரகம்தான் நான்கைப் பார்த்தால்
நந்தவனமாக வாழ்வும் பூத்துக் குலுங்கும்
அறிந்தவர் தெரிந்தவரிலிருந்து கண்டவரை!?
நான்காம் வீட்டில் கேது வந்தமர்தவர்களின் தாய் நோவுருகிறாள்...
அல்லது உயர்கல்வி வரைச் சென்றாலும் அதை முடிக்கமுடியாமல் தடுமாறச் செய்கிறது...
சுகக் கேடு அல்லது தாயிடமும் நண்பர்களிடமும் அன்பை பெறாமல் தனிமைப் படுத்தப் படுகிறது,
அல்லது நாடு கடத்தப் படுகிறது; முக்கியமாக பிறந்த வீட்டில் இருந்து இடமாற்றம் பெறுகிறது...
அதற்கு எதிர் பத்தாம் வீட்டில் ராகு அமர்கிறான் அவனும் நல்லவர்களின் சேர்க்கை பார்வைப் பெறாமல்
போனால் குடியும் கூத்துமாடி வாழ்வில் சுகக் கேடே அடைகிறான்...
அதைப் பற்றிய பாப் கார்னை வேறொரு நாளில் பொரிப்பீர்கள் அதுவரை காத்து இருக்கிறோம்.
அருமையானப் பதிவு! புலிப்பாணி முனுசாமியின் பாடலை தேம்பாவணி போல் தீதறு விளக்கம் தந்த பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்! ஆமாம். நல்லவர்கள் சேர்க்கை அல்லது பார்வை முக்கியம். அதைப்பற்றி இன்னொரு நாள் விவரமாக எழுதுகிறேன்!
/////Blogger eswari sekar said...
ReplyDeletei dnrya pathvu nanrga ullthu ..engaludya close relation jathakathil 4 il kathu 18 vayathil .amma illai .. marriage..30 vayathil.. three years marriage life wife illai . death. .... . panam erukkurathu nallajob erukkurutu nimmathy illai age 34 .../////
கேட்பதற்கே வருத்தமாகத்தான் உள்ளது. இறையருள் புரியட்டும். அவர் வாழ்வில் மீண்டும் ஒரு மலர்ச்சி ஏற்படட்டும்!
////Blogger ananth said...
ReplyDeleteஅந்தப் பெண் முன்னால் நடிகை, இந்நாள் மேலவை (ராஜ்யசபா) உறுப்பினர் ஜெயப்பிரதா என்று உடனே தெரிந்தது. பக்கத்தில் இருப்பவர் சமஜ்வாடி கட்சி முன்னால் பொதுச் செயலாளர் திரு அமர்சிங் என்று அறிந்துகொள்ள சற்று நேரம் பிடித்தது. ராகு கேது ஸ்தலமான காலஹஸ்தியில் பரிகார பூஜை செய்தார்களாமே.////
கரெக்ட். கண்டு பிடித்துச் சொன்ன மேன்மைக்குப் பாராட்டுக்கள் ஆனந்த்!
////Blogger thanusu said...
ReplyDeleteசலங்கை ஒலி ஜெயப்ரதா வை மறக்க முடியுமா?/////
உண்மைதான். எப்படி மறக்க முடியும்? நன்றி தனுசு!
////Blogger john said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
நான்காம் வீடு மீனம், நான்கின் அதிபதி குரு 12 ல் கேது உடன் மறைந்தால் இந்த மூன்று இலாகாக்களுக்கு நன்மையா அல்லது கேடா?
please Reply me..
அன்புடன் ,
ஜான்////
பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். உங்களுக்கே தெரியவரும்!
/////Blogger thanusu said...
ReplyDelete////சனி, ராகு, கேது நான்கில் இருந்தால் சுகக்கேடு,தாய்க்கு கேடு///
அய்யா எனக்கு துலா லக்னம் சனி நான்கில் .கேதுவும் அங்கேதான். அந்த வீட்டின் பரல்கள் 29 சனியின் சுயபரல்கள் 5 . எனக்கென்று வீடு கட்ட நினைத்து துவங்கியபோது நான் நினைத்ததைவிட பெரிய வீடாக கட்டி முடிக்கும்படி என் விருப்பத்தையும் மீறி அமைந்து போனது.அதே போன்று காரும் சின்ன கார் வாங்கினால் போதும் என நினைத்தேன் அதுவும் பெரிய காராகவே அமைந்து விட்டது. என் தாயார் இன்னும் ஆரோக்கியமாக் இருக்கிறார். இன்னும் கண்ணாடி கூட போடவில்லை.எனக்கும் என் தாயாருக்கும் அத்தனை நல் உறவு. எனக்காக எப்போதும் பிரார்த்தனையிலேயே இருப்பார். நான் நன்றாக இருப்பதற்கு காரணம் என் தாயாரின் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் என்றே நான் நினைப்பேன். ஆனால் நான் பிறந்தவுடன் என் தந்தை வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் ,சொந்த வீடும் இல்லை. நான் பிறந்தவுடன் என் பெற்றோருக்குத்தான் சுககேடும் வறுமையும் வளர்ந்தபின் அதை நானே நீக்கி விட்டேன்.
எனக்கு சனியால் தொல்லை இல்லை என நினைக்கிறேன் ,ஆனால்
நான்கில் கேது இருந்தால் கேடு முனுசாமி அடித்து சொல்கிறார் .இந்த கேதுவால் தான் எனக்கு பிரச்சினை என நினைக்கிறேன்/////
ஜெனித்த இல்லம் பாழ் (தந்தை வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது) என்ற முனுசாமியின் வாக்கு உங்கள் விஷயத்தில் பலித்து விட்டது அல்லவா?
/////Blogger ananth said...
ReplyDeleteமுனிவர் இந்த பாடலில் செம்பாம்பு (கேது செம்பாம்பு என்றும், ராகு கரும் பாம்பு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்) 4ல் இருந்தால் கெடுதி என்றும் உடன் குளிகன் இருந்தால் மிகக் கெடுதி என்று குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்கிறேன். ராகு கேது தனித்து இருந்தால் அதிக தீமை செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது./////
நல்லது. அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். ராகு கேது தனித்திருந்தாலும், சுபர்களின் பார்வை இல்லாவிட்டால், கெடுதியைத்தான் செய்வார்கள்!
/////Blogger அய்யர் said...
ReplyDelete"இன்பமே எந்நாளும் துன்பமில்லை "
என்ற அப்பர் பெருமானின் தேவாரம் சிந்திக்க வைத்தது இன்றைய பதிவு..
பாம்பு பற்றிய மேலதிக தகவல் தர வேண்டுகிறோம்..////
தந்தால் போயிற்று விசுவநாதன். பொறுத்திருங்கள். நேரம் கிடைக்கும்போது விவரமாக எழுதுகிறேன்!
/////Blogger sundari said...
ReplyDeleteGood morning sir,
present sir,////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!
///Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஐயா..படத்தில் உள்ள மூன்றாம் நபரைத் தானே அடையாளம் கேட்கிறார்?////
ஆமாம். ஆமாம். மலேசிய நண்பர் ஆனந்த் சரியாக பதில் சொல்லிவிட்டார். அவருடைய பின்னூட்டத்தைப் பாருங்கள்!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteகோள் சாரத்தில் விருச்சிக ராசிக்காரரகளுக்கு கும்பத்தில் ராகு நின்ற சமயம்,அதாவது ராசிக்கு 4ல் ராகு நின்ற போது, வீடு நிலம் வாங்கவோ விற்கவோ செய்தார்கள்.பல விருச்சிக ராசி நண்பர்களைக் கேட்டு அறிந்த ஆராய்ச்சி இது. ராகுவோ கேதுவோ தீமை மட்டும் செய்வதில்லை என்பது புலனாய்ற்று..
நல்ல பதிவு அய்யா! நன்றி!/////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteதொடர்ந்த வெளியூர்ப் பயணங்களில் இருப்பதால் வகுப்பறைக்கு வருவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. ஆயினும் பாடங்களைப் படித்து விடுகிறேன். இன்றைய பதிவு மிக அருமை. நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி. ஐயா. /////
பின்னூட்டம் முக்கியமில்லை. பதிவைப் படிப்பதுதான் முக்கியம். நீங்கள் பாடங்களை விடாமல் படிப்பது அறிந்து எனக்கும் மகிழ்ச்சியே!