14.8.12

Astrology - Popcorn Post மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

Astrology - Popcorn Post  மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

Popcorn Post No.20
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி இருபது

மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் திரைப்பட நாயகிகளைப் பற்றி எழுத உள்ளேன் என்று நினைப்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது  ஜோதிடத் தில், முக்கிய மறைவிடங்களான ஆறாம் வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீட்டைப் பற்றியது.

அவற்றிற்கு தீய இடங்கள் என்று பெயர் (inimical places)

இயற்கை சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன், புதன் ஆகியோர் அங்கே சென்று அமரக்கூடாது. அமர்ந்தால் அவர்களால் கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் உரிய விதத்தில், உரிய காலத்தில் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும்!

அதைவிட முக்கியமாக அந்த இடங்களுக்கு வேறு சூட்சமங்களும், வேறு முக்கிய செயல்களும் உள்ளன.

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
மறைவிடங்களின் முக்கியத்துவம்!

1.எட்டாம் வீடு ஒரு மனிதன் வாழும் காலத்தையும், அவனுக்கு மரணம் ஏற்படும் விதத்தையும் சுட்டிக்காட்டும்.

2.ஆறாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதிகளின் (Owners) நிலைப்பாட்டை வைத்து மரணம் ஏற்படும் காலத்தையும் தெரிந்து  கொள்ளலாம்.

3. ஆறாம் வீட்டிலும், 8ஆம் வீட்டிலும் தீய கிரகங்கள் இருந்தாலும், அதாவது அங்கே சென்று அவர்கள் குடியிருந்தாலும், ஆறாம் வீட்டு  அதிபதியும், எட்டாம் வீட்டு அதிபதியும் தீயவர்களாக இருந்தாலும், அவர்களில் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களுடைய தசாபுத்திக் காலங்களில் ஜாதகன் போர்டிங் பாஸ் வாங்கிவிடுவான். மேலே போய்விடுவான். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல!

4. எட்டாம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் (That is the planets aspecting the eighth house) மரணம் இயற்கையாக இருக்குமா அல்லது  இயற்கையில்லாமால் துன்பம் நிறைந்ததாக இருக்குமா என்று தெரியவரும்.

5. எட்டாம் வீட்டைத் தங்கள் பார்வையில் வைத்திருக்கும் சுபக்கிரகங்கள் ஜாதகனுக்கு இயற்கையான மரணத்தைக் கொடுக்கும். இயற்கையான மரணம் என்பது உடற்கோளாறுகளை வைத்தோ அல்லது மூப்பின் காரணமாக (old age) உடல் உறுப்புக்கள் செயல்பாட்டை  இழந்தோ வருவதாகும்

மரணத்தில், சாலை விபத்து, தீ விபத்தில் துவங்கி 28ற்கும்
மேற்பட்ட மரணங்கள் இருக்கின்றன.  அவற்றை வைத்துப் பத்துப்  பக்கங் களுக்கு  விரிவாக எழுதலாம். தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்

பார்ப்கார்ன பொட்டலம் 200 கிராம் அளவுதான். அதில் இந்த அளவுதான் கொடுக்க முடியும். தலை வாழை இலை போட்டு, செட்டி நாட்டு சமையலாக ஏழு வகை வெஞ்சனங்களுடன் (காய்கறிகளுடன்) ஒரு நாள் விருந்து படைக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

31 comments:

  1. அய்யா காலை வணக்கம்

    ReplyDelete
  2. Good Morning Sir,

    Interesting article.

    Once I have read in the internet, that, If a lord of the 8th house, who is naturally malefic, is positioned in the same 8th house, it confers Sarala yoga, which actually gives long life span.

    If it is right, can we consider this as an exception, while determining the longevity of a person?

    ReplyDelete
  3. இயற்கையில் சுபகிரஹங்களாக இருப்பவைகளே, அதாவது குரு, சுக்ரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவர்களே 6,8,12 அதிபர்களாகவும் இருந்தால்.....? இதில் என்ன கூடுத‌ல் சிக்கல் என்றால் அவர்கள் ஒரு நல்ல வீட்டுக்கும் அதிபர்களாவதால் அவர்களால் நன்மையா தீமையா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.உதாரணமாக கடகத்திற்கு குரு 6,9 இரண்டுக்கும் உடையவர். 'முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை. பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்ற தமாஷ் போலத்தான்.

    என்னைப் போல கிழவர்களுக்கு உபயோகமான பதிவு.இன்னும் விளக்கமாக எழுதினால் மூட்டையெல்லாம் கட்ட செள‌கரியமாக இருக்கும். ஆனால் பொதுவில் எழுதினால் இளைஞர்கள் குழம்புவதுடன் சிலர் பயந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு. ஆகவே சிறிது மறைக்க வேண்டிய தலைப்புத்தான்.
    பதிவு அதற்கான கட்டுப்பாட்டுடன் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    மண் வாசனைக் கதைகளுக்கு விண்ணப்பித்துள்ளேன்.

    ReplyDelete
  4. அன்புள்ள வாத்தியார் அவர்கட்கு வணக்கம். உங்களிடம் ஜோதிடபாடங்கள் மற்றும் ஆன்மீக கட்டுரைகளை படித்ததனால் மரணத்தைப்பற்றிய தெளிவு ஏற்பட்டுவிட்டது.எனவே மரணத்தைப்பற்றி அருசுவையாக உங்கள் கைவண்ணத்தில் சாப்பிட ஆசை. சீக்கிரம் பறுமாருங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். நன்றிகள்.

    ReplyDelete
  5. Respected Sir,

    Thanks for post. Other two houses are hided in the post (6th and 12th house). Hope those also will be posted soon...

    With kind regards,
    Ravichandran

    ReplyDelete
  6. Dear sir,

    thank you for the good tips about life.

    I have Guru in 8 th place who is my lagna lord and having mutual aspect of Sun who is placed himself in second house so I will have comfortable Boarding pass which will not give much trouble.
    thanks
    G.seenivasan.

    ReplyDelete
  7. Guruvirkku vnakkam

    nalla pathivu
    Nandri iyya

    ReplyDelete
  8. நான்காம் பதிவாய் மலரும் தங்களின் கதை புத்தகம் ஏதாவது வழியில் பெற முயற்சிக்கிறேன் ஐயா!

    ஆறாம் வீட்டிற்கும் எட்டாம் வீட்டிற்கும் அதன் அதிபதிகளுக்கும் உள்ளத் தொடர்பைக் கொண்டு மரணக் காலமும் விதமும் நடந்தேறப் படுகிறது.... என்பதை அடிகோடிட்டு வந்தப் பதிவு...

    பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  9. எனக்கு சுப கிரகங்கள் மறைவிடங்களில் இருக்கிறார்கள். 5,9ம் இடங்களில் 4 பாப கிரகங்கள். மொத்தமாக தீய அமைப்பு என்று சொல்ல வரவில்லை. இது இதற்குரிய வகையில் நல்ல அமைப்புதான். நல்ல, தீய அமைப்பு என்பது நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

    ReplyDelete
  10. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்////

    உங்களின் வருகைப் பதிவிற்கும், காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger Rajan said...
    Good Morning Sir,
    Interesting article.
    Once I have read in the internet, that, If a lord of the 8th house, who is naturally malefic, is positioned in the same 8th house, it confers Sarala yoga, which actually gives long life span.
    If it is right, can we consider this as an exception, while determining the longevity of a person?/////

    சனீஷ்வரன் ஆயுள்காரகன். அவர் ஆயுள் ஸ்தானத்தைத் தன் பார்வையில் வைத்திருந்தால் நீண்ட ஆயுளைத்தருவார்! அதுதான் நீண்ட ஆயுளுக்கான முதல் விதி!

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    இயற்கையில் சுபகிரஹங்களாக இருப்பவைகளே, அதாவது குரு, சுக்ரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவர்களே 6,8,12 அதிபர்களாகவும் இருந்தால்.....? இதில் என்ன கூடுத‌ல் சிக்கல் என்றால் அவர்கள் ஒரு நல்ல வீட்டுக்கும் அதிபர்களாவதால் அவர்களால் நன்மையா தீமையா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.உதாரணமாக கடகத்திற்கு குரு 6,9 இரண்டுக்கும் உடையவர். 'முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை. பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்ற தமாஷ் போலத்தான்.
    என்னைப் போல கிழவர்களுக்கு உபயோகமான பதிவு.இன்னும் விளக்கமாக எழுதினால் மூட்டையெல்லாம் கட்ட செள‌கரியமாக இருக்கும். ஆனால் பொதுவில் எழுதினால் இளைஞர்கள் குழம்புவதுடன் சிலர் பயந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு. ஆகவே சிறிது மறைக்க வேண்டிய தலைப்புத்தான்.
    பதிவு அதற்கான கட்டுப்பாட்டுடன் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    மண் வாசனைக் கதைகளுக்கு விண்ணப்பித்துள்ளேன்./////

    உங்களை யார் கிழவர் என்று சொல்வார்கள். மனதளவில், உற்சாகத்தில் நீங்கள் இன்றும், என்றும் இளைஞர்தான்!

    ReplyDelete
  13. /////Blogger sadan raj said...
    அன்புள்ள வாத்தியார் அவர்கட்கு வணக்கம். உங்களிடம் ஜோதிடபாடங்கள் மற்றும் ஆன்மீக கட்டுரைகளை படித்ததனால் மரணத்தைப்பற்றிய தெளிவு ஏற்பட்டுவிட்டது.எனவே மரணத்தைப்பற்றி அறுசுவையாக உங்கள் கைவண்ணத்தில் சாப்பிட ஆசை. சீக்கிரம் பறிமாருங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். நன்றிகள்.////

    எழுதிவிட்டால் போகிறது பாளையங்கோட்டைக்காரரே!

    ReplyDelete
  14. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Thanks for post. Other two houses are hided in the post (6th and 12th house). Hope those also will be posted soon...
    With kind regards,
    Ravichandran////

    முன்பே நிறைய எழுதியிருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger அய்யர் said...
    ம்..
    வருகை பதிவு../////

    வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்? அது என்ன ம்.. என்ற அலுப்பு ஒலி?

    ReplyDelete
  16. /////Blogger seenivasan said...
    Dear sir,
    thank you for the good tips about life.
    I have Guru in 8 th place who is my lagna lord and having mutual aspect of Sun who is placed himself in second house so I will have comfortable Boarding pass which will not give much trouble.
    thanks
    G.seenivasan.////

    உண்மைதான். கவலையின்றி இருங்கள். உங்கள் பெயரில் அந்த ஏழுமலை வாசன் இருக்கிறாரே - அவரையும் பிரார்த்தனை செய்யுங்கள்!

    ReplyDelete
  17. ////Blogger eswari sekar said...
    vanakam sir ../////

    உங்களின் வருகைப் பதிவிற்கும், வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. /////Blogger Udhaya Kumar said...
    Guruvirkku vnakkam
    nalla pathivu
    Nandri iyya////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  19. ////Blogger ஜி ஆலாசியம் said...
    நான்காம் பதிவாய் மலரும் தங்களின் கதை புத்தகம் ஏதாவது வழியில் பெற முயற்சிக்கிறேன் ஐயா!
    ஆறாம் வீட்டிற்கும் எட்டாம் வீட்டிற்கும் அதன் அதிபதிகளுக்கும் உள்ளத் தொடர்பைக் கொண்டு மரணக் காலமும் விதமும் நடந்தேறப் படுகிறது.... என்பதை அடிகோடிட்டு வந்தப் பதிவு...
    பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    கரூரில் உள்ள உங்கள் உறவினர் மூலம், இதற்கு முன் வெளியான புத்தகங்களைப் பெற்றுக் கொண்டீர்கள். நினைவிருக்கலாம். அவருடைய முகவரியைக் கொடுங்கள். அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்!

    ReplyDelete
  20. ////Blogger ananth said...
    எனக்கு சுப கிரகங்கள் மறைவிடங்களில் இருக்கிறார்கள். 5,9ம் இடங்களில் 4 பாப கிரகங்கள். மொத்தமாக தீய அமைப்பு என்று சொல்ல வரவில்லை. இது இதற்குரிய வகையில் நல்ல அமைப்புதான். நல்ல, தீய அமைப்பு என்பது நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.////

    உங்களுக்கு உள்ள மனப்பக்குவம் எல்லோருக்கும் இருக்க வேண்டுமே - ஆனந்த்?

    ReplyDelete
  21. "2ku athipathi 7ku athipathi than maranathai kodukkum enpathu vithi" enru ungal katturail padithen. Kulappa maka ullathu ayya.. Thavaru irunthal mannikkavum

    ReplyDelete
  22. Respected sir,

    I support kmr.krishnan views.The post is incomplete I feel.benefics aspecting the 8th house gives peaceful death is okay,even if, 8th lord is malefic, his placement in 8th gives good longevity, further Lagna lord strength has the big role in Ayul matters is my humble opinion.

    ReplyDelete
  23. respected sir, I got a doubt If the 6th and 8th house planet got interchange (6th lord in 8th, 8th in 6th) in case of ரிசபம் லக்னம்
    both the planets guru as well as sukuran are good planets , guru is in the 6th house and sukuran is in 8th house along with Saturn who is 9th and 10th lord as well as கும்ப ராசி அதிபதி . Who is the worst வில்லன் during சனி மகா தசா குரு புக்தி each lord guru got 6points Saturn 2 and Venus got 4, 6th house got 32 and 8th 22( பரல்கள் ). Guru is alone in 6th house and from 12th house செவ்வாய் seeing him. Is that good planet like guru will be harmful and end’s life

    ReplyDelete
  24. Sir,

    I'm Simma Lagnam , Thulaam raasi , Visaaka nakshathiram , For me in 6th house(from Lagna) Rahu is there , and in 8th House No one and in 12th house(Kadaga Lagna ) Guru is there (With Kethu). Now i'm in sani thisaa with sukkira buthi . Is this locations are good or having bad effects?

    Thanks in advance

    Kannan

    ReplyDelete
  25. /////Blogger yishun270 said...
    respected sir, I got a doubt If the 6th and 8th house planet got interchange (6th lord in 8th, 8th in 6th) in case of ரிசபம் லக்னம்
    both the planets guru as well as sukuran are good planets , guru is in the 6th house and sukuran is in 8th house along with Saturn who is 9th and 10th lord as well as கும்ப ராசி அதிபதி . Who is the worst வில்லன் during சனி மகா தசா குரு புக்தி each lord guru got 6points Saturn 2 and Venus got 4, 6th house got 32 and 8th 22( பரல்கள் ). Guru is alone in 6th house and from 12th house செவ்வாய் seeing him. Is that good planet like guru will be harmful and end’s life/////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

    ReplyDelete
  26. /////Blogger Nanjil Kannan said...
    Sir,
    I'm Simma Lagnam , Thulaam raasi , Visaaka nakshathiram , For me in 6th house(from Lagna) Rahu is there , and in 8th House No one and in 12th house(Kadaga Lagna ) Guru is there (With Kethu). Now i'm in sani thisaa with sukkira buthi . Is this locations are good or having bad effects?
    Thanks in advance
    Kannan /////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! எனக்கு தற்சமயம் அதற்கு நேரமில்லை.

    ReplyDelete
  27. Thank you so much Sir, I can understand your difficulties defiantly you will not have time to answer every one. May be you can consider for few people if they have very difficult situation and you have some time for them to help.

    ReplyDelete
  28. In 8th plase saniuden santiran iruntha palan enna

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com