Astrology - Popcorn Post தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?
Popcorn Post No.19
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பத்தொன்பது
தங்கமே தங்கமே தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?" என்ற பழைய திரைப் படப் பாடல் ஒன்று உள்ளது. பாடல் அற்புதமாக இருக்கும். பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடியவுடன், நாயகி டி.ஏ.மதுரம், கேட்பார்:
”இந்தாங்கய்யா, இப்போ தங்கமேன்னு சொன்னது என்னைத் தானே?”
அதற்கு அவர் இப்படிப் பதில் சொல்வார்
”ஐயோ ஐயய்யோ ஐயய்யோ, இது என்னடா இது? இதோ பாரும்மா, இந்தப் பாட்டுப் பாடறேன் பாரு அதுல பித்தளைக் காசு, வெள்ளிக் காசு
வரைக்கும் வந்திருக்கு, தங்கம் கெடைக்கலே, அப்படி தங்கம் வந்திறுச்சுன்னா... தங்கமே அதான் என்று தான் பெறுவேனோ?”
தங்கத்தின் மேல் எல்லோருக்குமே ஒரு மோகம் உண்டு. இன்று வரைக்கும் ஒரு நம்பிக்கையான முதலீட்டு உலோகம் அதுதான்.
1931ஆம் ஆண்டு ஒரு பவுனின் விலை ரூ.13:00 மட்டுமே
இன்று அதனுடைய விலை ரூ.24,000/-
80 ஆண்டுகளில் சுமார் 1850 மடங்கு உயர்ந்துள்ளது.
19ஆம் ஆண்டில் கொத்தனாரின் (Mason) ஒரு நாள் சம்பளம் 0.25 காசுகள் அதாவது மாதம் சுமார் ஏழு ரூபாய்கள்
இன்று சாதரண ஹோட்டலில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.12
நல்ல ஹோட்டல்களில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.20
அதைவிடுங்கள், இன்று கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.500/-
அதே விகித்ததில் பார்த்தால் சுமார் 2000 மடங்கு உயர்ந்துள்ளது
தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கூலியும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது
இன்று பணியில் புதிதாகச் சேரும் ஒரு மென்பொறியாளரின் சம்பளம் சுமார் 25,000:00 ரூபாய்கள். (இன்றைய சந்தை விலையில் சுமார் ஒரு பவுன் காசு) கஷ்டப்பட்டுப் படித்து விட்டு, மாதச் சம்பளமாக ஒரு பவுன் காசிற்குத்தான் வேலை பார்க்க வேண்டியதுள்ளது
அன்று உங்கள் பாட்டனார் 1,300 ரூபாய் செலவில் 100 பவுன் காசுகளை வாங்கி வைத்துவிட்டுப் போயிருந்தார் என்றால், அதன் இன்றைய மதிப்பு 24 லட்ச ரூபாய்கள்
எப்படி ஒரு ஏற்றம் பார்த்தீர்களா?
----------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்
தங்கத்தின் விலை திடீரென்று ஏறுகிறது அல்லது இறங்குகிறது. ஜோதிடப்படி அதற்கு என்ன காரணம்?
செவ்வாய், குரு, சனி ஆகிய 3 கிரகங்களும் வக்கிரகதியில் சுழலும் போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற அரிய உலோகங்களின் விலை
சரியத் துவங்கும்
”சார், தங்கத்திற்கு அதிபதி குரு, வெள்ளிக்கு அதிபதி சுக்கிரன், அப்படியிருக்கும் போது, இங்கே சனிக்கும், செவ்வாய்க்கும் என்ன வேலை?” என்று யாரும் குறுக்குக்கேள்வி கேட்க வேண்டாம்.
பழைய நூல்களில் தங்கம், வெள்ளி விலை சரிவிற்கு இந்த மூன்று கிரகங்களின் வக்கிரகதியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்
குரு தனகாரகன், சனி கர்மகாரகன், செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம். ஒருவரைப் பொருளாதர ரீதியாக (தலை எழுத்தை மாற்றும் முகமாக) புரட்டிப்போடும் ஆற்றல் அந்த மூன்று கிரகங்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையில் இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
வக்கிரம் நிவர்த்தி ஆனவுடன் மீண்டும் ஏறத்துவங்கும்.
தங்கத்தை வாங்கி வைக்க (வீட்டில்தான்) விரும்புகிறவர்கள் அம்மூன்று கிரகங்களின் நிலைப்பாடுகளைக் கவனித்து, அரிய உலோகங்கள்
சரிவில் இருக்கும்போது வாங்க வேண்டும்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++
ayya vanakkam,
ReplyDeletethangamana Padhivu.
ஒரு முறை பஞ்சம் வந்துற்ற போது சீர்காழிப் பிள்ளையார் திருவீழிமிழலையில் ஒவ்வொரு நாளும் ஒரு படிக்காசு, பொற்காசு, இறைவனிடம் பாடிப் பரிசு பெற்று, அதைக் கொண்டு பசியால் வாடிய மக்களுக்கு உணவாக்கிப் படைத்தனராம்.
ReplyDeleteஅதைப்போல இறைவனாக பொற்காசு கொடுத்தால்தான் இனி பொன் கிடைக்க வழி. விலைகொடுத்து வாங்கத் திராணியில்லை.பதிவுக்கு நன்றி ஐயா!
========================================================================
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
(இது படிக்காசு சுவாமியருளியபோது ஓதியது.)
தங்கத்தின் விலை ஏற்ற, சரிவுகளுக்கும் ஜோசியத்தில் கணிக்க/ சொல்ல முடிவது ஆச்சர்யமளிக்கிறது.
ReplyDeleteஆஹா! இது புதியத் தகவல்...
ReplyDeleteஅறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா!
குருவிற்கு வணக்கம் ,
ReplyDelete"ஆச்சிரியம்""இதற்கும் இதில் வழி" ஜோதிடத்தில்.(ஏற்றம்,இறக்கம்)தங்கத்தின் விலையில்.
நன்றி ஜயா நன்றி
அய்யா காலை வணக்கம் , ஆபரணங்கள் விலை ஏற்ற இறக்கங்களுக்கு நவகிரகங்கள் காரணம் என்பது ,புதிய மற்றும் நல்ல தகவல் . நன்றி அய்யா .
ReplyDeleteதங்கத்தில் முதலீடு செய்து நியாயமாக லாபம் சம்பாதிக்க நினைக்கும் சாமானியர்களுக்கு இன்றைய பாப்கார்ன் போஸ்ட் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteநன்றி ஐயா.
காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteதங்கமான ஒரு பதிவு...
அன்புடன்,
ஜான்
அன்புள்ள அய்யாவுக்கு
ReplyDeleteவணக்கம் பல...
இன்றைய கால சூழலுக்கு ஏற்ப ஒரு இடுகை இது.
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் .
தாழ்மையுடன்
ரா.சரவணன்
present .sir
ReplyDeleteஆனந்தமுருகனின் சிறுகதையும் உங்களின் பதிவும் நன்று...நன்றி...
ReplyDeleteவருகை பதிவு
ReplyDeleteNeeyaa thangam unagu eean thangam
ReplyDeleteIts an golden article about gold..
ReplyDeleteThanks for your post......
////Blogger renga said...
ReplyDeleteayya vanakkam,
thangamana Padhivu./////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஒரு முறை பஞ்சம் வந்துற்ற போது சீர்காழிப் பிள்ளையார் திருவீழிமிழலையில் ஒவ்வொரு நாளும் ஒரு படிக்காசு, பொற்காசு, இறைவனிடம் பாடிப் பரிசு பெற்று, அதைக் கொண்டு பசியால் வாடிய மக்களுக்கு உணவாக்கிப் படைத்தனராம்.
அதைப்போல இறைவனாக பொற்காசு கொடுத்தால்தான் இனி பொன் கிடைக்க வழி. விலைகொடுத்து வாங்கத் திராணியில்லை.பதிவுக்கு நன்றி ஐயா!
========================================================================
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
(இது படிக்காசு சுவாமியருளியபோது ஓதியது.)/////
படிக்காசு சுவாமிகளின் மேன்மையான பாடலைத் அறியத் தந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteதங்கத்தின் விலை ஏற்ற, சரிவுகளுக்கும் ஜோசியத்தில் கணிக்க/ சொல்ல முடிவது ஆச்சர்யமளிக்கிறது./////
ஜோதிடத்தில் இன்னும் பல ஆச்சர்யங்கள் உள்ளன. பொறுத்திருங்கள். ஒவ்வொன்றாகத் தருகிறேன்!
/////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteஆஹா! இது புதியத் தகவல்...
அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா!////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம் ,
"ஆச்சிரியம்""இதற்கும் இதில் வழி" ஜோதிடத்தில்.(ஏற்றம்,இறக்கம்)தங்கத்தின் விலையில்.
நன்றி ஜயா நன்றி////
நல்லது. நன்றி உதயகுமார்!!
////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம் , ஆபரணங்கள் விலை ஏற்ற இறக்கங்களுக்கு நவகிரகங்கள் காரணம் என்பது ,புதிய மற்றும் நல்ல தகவல் . நன்றி அய்யா .////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////Blogger சரண் said...
ReplyDeleteதங்கத்தில் முதலீடு செய்து நியாயமாக லாபம் சம்பாதிக்க நினைக்கும் சாமானியர்களுக்கு இன்றைய பாப்கார்ன் போஸ்ட் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி ஐயா./////
உண்மைதான். நன்றி சரண்!
/////Blogger john said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
தங்கமான ஒரு பதிவு...
அன்புடன்,
ஜான்/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger saravanan said...
ReplyDeleteஅன்புள்ள அய்யாவுக்கு
வணக்கம் பல...
இன்றைய கால சூழலுக்கு ஏற்ப ஒரு இடுகை இது.
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் .
தாழ்மையுடன்
ரா.சரவணன்/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger eswari sekar said...
ReplyDeletepresent .sir////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!
/////Blogger Arul said...
ReplyDeleteஆனந்தமுருகனின் சிறுகதையும் உங்களின் பதிவும் நன்று...நன்றி.../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//////Blogger அய்யர் said...
ReplyDeleteவருகை பதிவு////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
//////Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteNeeyaa thangam unagu eean thangam/////
இது திரைப்பட வசனம். அதற்கு மட்டுமே பொருந்தும் நண்பரே!
////Blogger ravichandran said...
ReplyDeleteIts an golden article about gold..
Thanks for your post......////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
உங்கள் எழுத்து உங்கள் ஒரு தங்க மனிதன் எப்போதும் பதில் கோல்டன் வார்த்தைகளை நன்றி உள்ளது
ReplyDelete