Astrology சந்திரனும் சட்னியும்!
பயிற்சிப் பாடம்
இட்லியைக் கண்டுபிடித்தது மாண்புமிகு தமிழன்தான் என்று நமக்குத் தெரியும். அதுபோல இட்லிக்கான சாம்பாரைக் கண்டுபிடித்ததும் தமிழன்தான் அதிலும் சந்தேகமில்லை. ஆனால் சட்டினியைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் சொல்லலாம்
சட்டினியில்தான் எத்தனை வகைகள்! எங்கள் பகுதி வீடுகளில் அசத்தலாகச் சட்னி செய்வார்கள். விதம் விதமாகச் செய்வார்கள். அதனால் தெரியும். இட்லிக்கான சாம்பாரையும் விதம் விதமாக்ச் செய்வார்கள். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன்.
சட்னியை வகைப்படுத்தியுள்ளேன் பாருங்கள்:
1. தேங்காய் சட்னி (இதில் 4 வகைகள் உள்ளன)
2. தக்காளி சட்னி (இதில் அரைத்துக் கொதிக்க வைக்கும் சட்னி, வதக்கி அரைக்கும் சட்னி என்று இரண்டு வகைகள் உள்ளன)
3. சின்னவெங்காயம், புளிச் சட்னி
4. கொத்தமல்லிச் சட்னி
5. பொதினாச் சட்னி
6. கசகசாச் சட்னி
7. உளுத்தம் பருப்பு சட்னி
8. கத்தரிக்காய் சட்னி,
9. உருளைக்கிழங்கு சட்னி
10. பீர்க்கங்காய் (தோல்) சட்னி
11. பலகாய்ச் சட்னி
12. எள்ளுச் சட்னி
முதலில் தேங்காய்ச் சட்னியை எடுத்துக்கொள்வோம். எங்களூர் (கோவையில்) அன்னபூர்ணா உணவங்களில் தேங்காய்ச் சட்னி சூப்பராக இருக்கும். பொங்கல் அதைவிட சூப்பராக இருக்கும். அந்த இரண்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது கிறங்கிப் போய்விடுவீர்கள்.
நீங்கள் உணவுக்காதலராக இருந்தால், இந்தப் பிறவி எடுத்ததன் பலன் கிடைத்துவிட்டதாக அப்போது உணர்வீர்கள்!
வீடுகளில் பொதுவாகத் தேங்காயுடன் பொட்டுக்கடலையைச்
சேர்த்து விடுவார்கள். சுவை மாறிவிடும். தமன்னா தனியாக ஆடினால்
பார்க்கமுடியும். கூட்டத்தோடு (பின்னணியில் 50ற்கும் மேற்பட்ட
நடனப் பெண்களுடன்) ஆடினால் எப்படிப் பார்க்க முடியும்?
அந்தத் தேங்காய், பொட்டுக்கடலையுடன் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கும்போது ஒரு சுவை இருக்கும். வரமிளகாய் மட்டும் சேர்த்து அரைக்கும்போது சுவை வேறாக இருக்கும்.
ஒருமுறை எங்கள் பகுதி செல்வந்தர் வீட்டுத் திருமணம் ஒன்றில் காலைப் பலகாரம் சாப்பிடும்போது, தேங்காய்ச் சட்னி அற்புதமாக இருந்தது. அதி சுவையாக இருந்தது. அத்தனை சுவையுடன் அதுவரை சாப்பிட்டதில்லை. தேங்காய் காரணமாக இருக்குமா? விடக்கூடாது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு, சமையல் கட்டிற்குச் சென்று, சமையல் மேஸ்திரியை அணுகிப் பேச்சுக் கொடுத்தேன். தேங்காய் சட்னி சுவையாக இருப்பதன் ரகசியத்தைக் கேட்டேன்.
அவர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். சட்டென்று பதில் சொன்னார்:
”அதில் ரகசியம் ஒன்றும் இல்லை அப்பச்சி. தேங்காயுடன் முந்திரிப் பருப்பைப் போட்டு அரைத்திருக்கிறோம்.”
”முந்திரிப் பருப்பா?”
”ஆமாம். போடும் முன்பாக இளஞ்சூட்டில் நன்றாக வதக்கிவிடுவோம். ஆனால் சிவக்க விடாமல் வதக்க வேண்டும்”
”என்ன அளவு?”
”50 தேங்காய்க்கு இரண்டு கிலோ முந்திரிப்பருப்பு!”
முந்திரிப் பருப்பு விற்கிற விலையில் நமக்கெல்லாம் கட்டுபடியாகாது. ஆத்தாடி ...என்று பேசாமல் திரும்பி வந்து விட்டேன்!
--------------------------------------------------------------
’வாத்தி (யார்) இந்தச் சட்னி கதைக்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?”
“இருக்கிறது ராசா! சந்திரன் தான் தேங்காய். மற்ற கிரகங்களை எல்லாம் இஞ்சி, பச்சை மிளகாய், வர மிளாய், முந்திரிப் பருப்பாக்கி விதம்
விதமாகச் சட்னி அரைக்கபோகிறேன்”
“எப்போது?”
“அவசர வேலை இருக்கிறது. வெளியூர்ப் பயணம். அதனால் நாளைக்கு (17.7.2012) அரைத்துப் பறிமாறுகிறேன். பொறுத்திரு ராசா!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
2
வாழ்க வளமுடன்!

அறிவிப்பு
நமது வகுப்பறையின் மாணவர் திரு. கண்ணன் சீதாராமன் திருப்பதி பாத யாத்திரை செல்கிறார். சக மாணவர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பியுள்ளார். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேருமென்று கவியரசர் கண்ணதாசன் சொல்லுவார். ஆகவே வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் அவருடன் சென்று திரும்பலாம்
பாதயாத்திரை 21.7.2012 சனிக்கிழமையன்று துவங்குகிறது. அதன் விவரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்
பாதயாத்திரை 21.7.2012 சனிக்கிழமையன்று துவங்குகிறது. அதன் விவரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்
அவ்ருடைய மின்னஞ்சல் முகவரி: kseetharaman007@gmail.com
அலைபேசி எண்ணை அவர் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதையும் வெளியிட்டு இருப்பேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
" திருமலா திருப்பதி பாத யாத்திரை !:,
பற்றிய ஸ்கேன் காப்பியை வகுப்பில் ஏற்றுங்கள் . 1000 நபர்கள் வந்தாலும் பரவாக இல்லை வெங்கட் உள்ளார் .மேலும் தங்களுடைய மாணவன் இந்த
' கண்ணன் சீதாராமன் "!
உள்ளான் . ஒரே ஒரு தகுதி மற்றும் பாத யாத்திரையாக வருபவரிடம் வேண்டும் . விரத
" கட்டுபாடும் ",
மற்றும் வேண்டும் என்று மிகவும் தெள்ள தெளிவாக எல்லோருடைய கண்ணில் படும் அளவிற்கு தலைப்பை தாருங்கள் ஐயா !
இதனை விட மிகவும் சிறப்பான வழி இருப்பின் அதனை கூறுங்கள் . அந்த
கட்டு பாடு
" 41 நாட்கள் மனசு சுத்தம் மற்றும் உடல் சுத்தம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி மற்ற வர்கள் அடுத்த வருடம் வாருங்கள் ", என்று
அப்பொழுது
அந்த " கண்ணனின் கருணை ", இருப்பின் அனைவரையும் அழைத்து
செல்லுகின்றோம் என்று " பாத யாத்திரை குருநாத சுவாமி ", கூறியதை
கூறுங்கள்.
இதனை எழுதுவது விழுப்புரம் மற்றும் உளுந்தூர் பேட்டையை இடையில்
" திரு நாவலூர் "!
என்ற இடத்தில அங்கு உள்ள பெருமாளை
அர்ச்சனை செய்து கும்பிட்டு வந்த உடன் திடீர் என்று எண்ணம் தோன்றியது
அதனால் கூறுகின்றேன் வாழ்கையில் எவ்வளவோ சந்திக்க வேண்டிய உள்ளது நாம்
நல்லது தானே ஐயா செய்கின்றோம்
அன்புடன் மாணவன்.
கண்ணன் சீதாராமன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணன் சீதாராமன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
பல நாட்களாக நமது பொதுவான தலைப்பு பேசப்படவில்லையே என்ற குறையைத் தீர்த்து வைத்தீர்கள் ஐயா!ஒரு முறை என் மகளின் திருமண விருந்தின் 'மெனு லிஸ்டை'க் கூட ஒரு பதிவாக அளித்துள்ளேன் ஐயா!
ReplyDelete'ராமன் எத்தனை ராமனடி' என்பது போல 'சட்டினி எத்தனை சட்டினியடி!'என்று பாடலாம் போல உள்ளது.
தேங்காய் சட்டினியில் 'சலவை சட்டினி' என்று தஞ்சாவூர் பக்கம் கூறுவார்கள்.
அதென்ன, சட்டினியை வெளுக்கப் போட்டு சலவை செய்வீர்களா என்று கேட்டால்,தேங்காய் துருவும் போது கொஞ்சம் கூட அடித்தேங்காய் கலக்காமல்
விழுதை எடுத்து, தாளித்தலிலும் , மிளகாய் ஆகியவையாலும் வெள்ளை நிறம் மாறாமல் செய்வதாம் சலவைச் சட்டினி.
கோங்குரா சட்டினி,கெண்டகாயி சட்டினி, என்று ஆந்திரா பக்கம் போனால் ஒரே காரசாரம் தான்.அதே கர்னாடகா பக்கம் எல்லாவற்றிலும் கொஞ்சம் இனிப்புச் சுவை தூக்கல்.
கண்ணன் சீதாராமன் அழைப்புக்கு நன்றி. கலந்து கொள்ள முடியாத சூழல்.
அய்யா காலை வணக்கம்
ReplyDeleteசட்னி வகைகள் அசத்துகின்றன. சட்னியைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரியாது. ஆனால் எங்கள் வீட்டில் சட்னியைத் தேடிக் கொண்டேதான் இருக்க வேண்டும்! பெரும்பாலும் மிளகாய்ப் பொடியிலேயே ஓட்டி விடுவார்கள்!! தேங்காய்ச் சட்னியில் கொத்துமல்லி சேர்த்தால் அது ஒரு வாசனைதான். தேங்காய் சட்னியில் வரமிளகாயுடன் ஒரு பல் பூண்டு வைத்து அரைப்பவர்களும் இருக்கிறார்கள். சில வீடுகளில் வேர்க்கடலை சட்னியும் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளச் செய்வார்கள்.
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
ReplyDeleteஉங்கள் அடுத்து வரும் பதிவுகளை படிக்க ஆவலுடன் உள்ளேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteசட்னி:
ReplyDeleteஎனக்கு தேங்காய் சட்னி தான் ரொம்ப இஷ்டம். கடையில் சாப்பிட்டால் அப்பா திட்டுவார் (மெடிக்கல் டிபார்ட்மென்ட் வேறா, கேட்கவா வேண்டும்?).
அவன் என்ன தண்ணீரை ஊற்றி அரைத்தானோ, யாருக்கு தெரியும் என்பார். சாம்பார் கொதிக்க வைத்து இருப்பதால் ஓரளவுக்கு safe என்பார்.
சட்னி பிரியர்கள் என்னை சினக்க வேண்டாம். நாம் எல்லாரும் ஒரே கூட்டம் :-)))
சரி.
//ஆனால் சட்டினியைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் சொல்லலாம்//
ஐயா, சட்னி பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது.
பூதப்பாண்டியன் மனைவியார் கொப்பெரும்பெண்டு பாடிய புறநாநூற்றுப்பாடலில் (புறநானூறு பாடல் 246) "வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி" என்ற குறிப்பு வருகிறது. வெள் எள் சாந்து என்பது எள்ளு சட்னி தான்.
எள்ளு சட்னியோடு பழைய சோற்றை பிழிந்தெடுத்து உண்ணும் வழக்கத்தையே அந்த ராணி அவ்வாறு சொல்லுகிறார். இன்றைக்கும் வெறும் சதத்துக்கு சாதத்துக்கு தொட்டுக்கொள்ள துவையலை பல இல்லங்களில் வைத்துக்கொள்கிறார்கள் இல்லையா....
(மிளகாய் நம் நாட்டு சமாசாரம் அல்ல. மெக்சிகோவில் இருந்து ஐரோப்பா போய் அங்கிருந்து இங்கே வந்திருக்கலாம் என பலர் அபிப்ராயப்படுகின்றனர். நாம் குறுமிளகையே பயன்படுத்தினோம்)
சட்னி என்பது வடநாட்டு மொழிகளில் இருந்து வந்து இருக்கலாம். தமிழ் சொல் அல்ல. தமிழ் சொல் துவையல் மற்றும் சம்மந்தி.
இன்றைக்கும் ஒரு தென்மாவட்டத்தில் உள்ள எனது வீட்டுப்பக்கம் யாரும் சட்னி என்றோ துவையல் என்றோ சொல்லுவதில்லை. சம்மந்தி என்றே சொல்லுகிறார்கள்.
இப்பொழுது சட்டென்று ஞாபகத்துக்கு வந்த பாடல் இது என்பதால் இதை மேற்கோள் காட்டினேன்.
மற்ற பாடல்கள் கூட உண்டு.
++++++
அனைவருக்கும் இந்த பொழுது பயனுள்ளதாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.
அன்புடன்,
புவனேஷ்
புவனேஷ்வர்! வாத்தியாரின் வேண்டுகோளை ஏற்று, இன்றைய பதிவுக்கு ஏற்ற
ReplyDeleteபுறப்பாடலை அளித்து, எள் புளி சம்மந்தியைப் பரிமாறியது நல்ல சாமர்த்தியம்.
அப்ப்பாடலைச் சொல்லியது "பூதபாண்டியந் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள்"
பெயரே சொல்லிவிட்டது அவள் "சதி"(உடன்கட்டை ஏற)செய்ய மனம் கொண்டவள் என்று! "தீப்பாய்வாள்"
"நான் என்ன மற்ற கைம் பெண்களைப் போன்று, அணிலின் உடலில் உள்ள வரிகளைப் போல வரிகள் உடைய (அரிவாளால் பிளக்கப்பட்ட) வெள்ளரிக்காயினுள் இருக்கும் வெண்மையான விதைகளைப் போன்ற, (நீரில் ஊறிய) அரிசிச் சோற்றினை நெய் ஊற்றிக் கொள்ளாமல் இலையில் பிழிந்து வைத்துக்கொண்டு, எள்ளையும் புளியையும் சேர்த்து அறைத்த துவையலைச் சேர்த்து உண்டுவிட்டு பாயில் படுத்துக்கிடந்து துக்கம் கொண்டாடுபவள் என்றா நினைத்தீர்கள்? எனக்குத் நீரும் நெருப்பும் ஒன்றுதான், அறிவீர்களா சான்றோர்களே?"
ஒரு துக்கமான சமயத்திலும் எவ்வளவு தகவலைச் சொல்கிறது இப்பாடல்.
அன்றும் இன்றும் அணிலுக்கு வரி உண்டு. வெள்ளரிக்காய் உண்டு.கைம்பெணகள் தங்கள் உயிரை வைத்துக் கொள்ள மட்டுமே எளிய உணவே உண்பார்கள்.எள் சட்டினி தயாரிப்பது.புளி உபயோகத்தில் இருந்தது.
உடன் கட்டை ஏறும் வழக்கம் அரச மகளிரிடம் ராஜஸ்தானைப் போல தமிழகத்திலும் இருந்துள்ளது.சாதாரண மகளிர் உடன்கட்டை ஏறுவதில்லை என்பதும் புலனாகிறது.
சட்டினியால் கிடைத்த தகவல்கள் சட்டினி போலவே நல்ல சுவை.நன்றி புவனேஷ்வர்.
அன்புள்ள வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம்.இதைத்தான் எதிர்பார்க்கிறோம். தங்கள் கைபக்குவத்தில் சுவையுடன் விருந்தாக பறுமாரும் ஜோதிடபாட கட்டுரைகளை. சீக்கிரம் தாருங்கள், நாங்களும் ருசித்து சாப்பிட்டு மனதில் பதியவைத்துகொள்கிறோம்.நன்றிகள்.
ReplyDeleteலால்குடி ஐயா, வணக்கம்.
ReplyDelete//அப்ப்பாடலைச் சொல்லியது "பூதபாண்டியந் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள்" //
எனது கவனக்குறைவால் அம்மையாரின் பெயரை தவறாக கொப்பெரும்பெண்டு என தட்டச்சி விட்டேன் (கோப்பெருந்தேவி நினைவில்); சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி. தவறுக்கு மன்னிக்கவும்.
பாண்டியன் தேவி உடன்கட்டை ஏறியது பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
எங்கே வாய் இருக்க மாட்டாமல் நான் எதையாவது உடன்கட்டை அது இது என சொல்லப்போக, அந்த எனது பின்னூட்டங்களினால் ஏதும் controversy வந்து அதனால் வாத்தியார் மற்றும் பல பெரியோர்களின் மனம் புண்பட்டு விடுமோ என அடியேன் அஞ்சினேன். ஆதலின் அம்மையார் தீப்பாய்ந்ததை பற்றி ஒன்றும் கூறாமல், சட்னியோடு மட்டும் சம்பந்தம் உடைய வரிகளை கூறி அத்தோடு விட்டு விட்டேன்.
நன்றி, ஐயா.
வணக்கங்களுடன்,
புவனேஷ்
//புவனேஷ்வர்! வாத்தியாரின் வேண்டுகோளை ஏற்று, இன்றைய பதிவுக்கு ஏற்ற
ReplyDeleteபுறப்பாடலை அளித்து, எள் புளி சம்மந்தியைப் பரிமாறியது நல்ல சாமர்த்தியம்.//
தங்கள் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், ஐயா.
பக்கோடா பாசந்தி என
ReplyDeleteமுன்னர் வந்த பதிவோ என
எண்ணி மகிழ்ந்தோம்.. எனினும்
எழுத்துக்களால் மகிழ்ந்தோம்..
இட்லி ஆகா..
சாப்பிட்டு எத்தனை நாட்களாயிற்று..
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஉள்ளேன் ஜயா
சட்டினி சுவையக இருந்தது .
நன்றி
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteஉள்ளேன் ஜயா
சட்டினி சுவையக இருந்தது .
நன்றி
வணக்கம் சார்,
ReplyDeleteஅந்த பொங்களில் ரொம்ப நெய் டாலடா எல்லாம் கலந்திருக்கும் ரொம்ப நல்லாயிருக்கும் ஆனால் நம்ப சாப்பிட கூடாது தேங்காய் சட்டினி ரொம்ப ருசிதான் ஆனால் நம்ப அடிகடி சாப்பிடகூடாது இதயத்திற்கு நல்லதில்லை மேலும் சாப்பிடுவது மட்டும் வாழ்க்கையில்லை நம்பயெல்லாம் கடின உழைப்பளிகள் இல்லை எல்லாம் மேஜை உத்தியோகம் பார்பவர்கள்தான் இங்கே இருப்பவர்கள் எப்படியோ கோவைக்கு வ்ருவேன் சுற்றுலாக்கு அப்போ போய் சாப்பிடுவேன்.
சந்திர னென்னும் இட்டிலியோடு
ReplyDeleteபலவித சட்னியையும் ஆவலோடு எதிர்கொண்டு நானும்...
நன்றிகள் ஐயா!
'அம்புலியைக் குழம்பாக்கி அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து' என்று தான் படித்திருக்கிறேன். அம்புலி(சந்திரன்)யைத் தேங்காயாக உருவகப்படுத்தி, மற்ற கிரகங்கள் அதனோடு இணைவதன் பலன்களை விளக்கும் பதிவுகளுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteசட்னி (சம்மந்தி) லிஸ்ட் அருமை.
தக்காளியோடு, சின்ன வெங்காயம் கொத்துமல்லி விதை சேர்த்துச் செய்யும் சட்னி சற்றே இனிப்புச் சுவையோடு அருமையாக இருக்கும். ஊத்தப்பம், ரவா தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன். பீர்க்கங்காய் போல் புடலையைக் கீறி உட்புறம் இருக்கும் விதையை வதக்கி, தேங்காயோடு அரைத்துச் செய்யும் புடலைச் சட்னி, பரங்கிக்காய் சட்னியும் சுவையாக இருக்கும்.
பலகாய் சட்னி சப்பாத்திக்கு நல்ல இணை. எள்ளுச் சட்னி போல், கொள்ளுச் சட்னி டயட் பிரியர்களுக்கு வரப்பிரசாதம். 'முருகன் இட்லிக் கடை' யில் இட்லியுடன் எழுவங்கோட்டை மல்லிச் சட்னி என்று தருவார்கள். பலமுறை கஜகர்ணம் அடித்தும் அதன் சுவை கொண்டுவர இயலவில்லை.
இட்லிக்குத் தாளிதம் செய்த சட்னியும் பஜ்ஜிக்கு தாளிதம் செய்யாத சட்னியும்
இணை என்று கண்டுபிடித்த மாமேதை யார் எனத் தெரியவில்லை.
சட்னி பற்றிய புறநானூற்றுப் பாடலை, நினைவுபடுத்திய சகோதரர் புவனேஷ்வருக்கும் விளக்கிய திரு.கே.எம்.ஆர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இயலுமாயின் பாடலை முழுமையாகத் தருமாறு வேண்டுகிறேன்.
அன்புடைய சகோதரி பார்வதி அவர்களின் வார்த்தைக்கு இணங்கி அப்பாடலை கீழே கொடுத்துள்ளேன்.
ReplyDeleteடிஸ்கி: பாடலின் பொருள்/அன்றைய சமூக வழக்குகள் பற்றி எந்த விவாதத்துக்கும் அடியேன் தயாராக இல்லை - மிக்க தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
+++++
பின்னணி:
பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்த ஒல்லையூர் நாட்டைச் சோழமன்னன் ஒருவன் வென்று தன் ஆட்சிக்குள்ளாக்கிக்கொண்டான். பிறகு, பூதப்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் ஒல்லையூர் நாட்டைச் சோழனிடம் இருந்து வென்று, மீண்டும் பாண்டிய நாட்டோடு சேர்த்துக்கொண்டான். அந்த வெற்றியால், பூதப்பாண்டியன், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். புறநானூற்றுப் பாடல் - 71 பூதப்பாண்டியனால் இயற்றப்பட்டது. பெருங்கோப்பெண்டு பூதப்பாண்டியனின் மனைவி. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.
+++++
பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!
+++++
உரை:
பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் மணாளன் மாண்ட பின் அவன் ஈமத்தீஇடை வீழ்ந்து நீ இறந்து படுவாயாக” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணிலினது முதுகின்கண் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெண்மை பொருந்திய, மணமுள்ள, நெய் கலவாத, சோற்றுப்பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய சாந்து/துவைலோடு, புளியிட்டுச் வேக வைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறு பரல் கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் இழிந்த வாழ்வினை உடைய கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லேன். பெரிய பாழ் நிலக்காடாகிய சுடுகாட்டில் கரிய மரக்கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு ஏறுதற்கு அரியதாக இருக்கலாம்; எனக்கோ, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.
This comment has been removed by the author.
ReplyDeleteAcknowledgement/Reference:
ReplyDeletehttp://puram400.blogspot.in/
This is a blog where you would find more Puranaanooru poems and I have taken the above explanation from this site and modified it just a little bit to avoid being labelled a plagiarist.
சந்திரனும் சட்னியும்... நல்ல பகிர்வு நன்றி ! தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபல நாட்களாக நமது பொதுவான தலைப்பு பேசப்படவில்லையே என்ற குறையைத் தீர்த்து வைத்தீர்கள் ஐயா!ஒரு முறை என் மகளின் திருமண விருந்தின் 'மெனு லிஸ்டை'க் கூட ஒரு பதிவாக அளித்துள்ளேன் ஐயா!
'ராமன் எத்தனை ராமனடி' என்பது போல 'சட்டினி எத்தனை சட்டினியடி!'என்று பாடலாம் போல உள்ளது.
தேங்காய் சட்டினியில் 'சலவை சட்டினி' என்று தஞ்சாவூர் பக்கம் கூறுவார்கள்.
அதென்ன, சட்டினியை வெளுக்கப் போட்டு சலவை செய்வீர்களா என்று கேட்டால்,தேங்காய் துருவும் போது கொஞ்சம் கூட அடித்தேங்காய் கலக்காமல் விழுதை எடுத்து, தாளித்தலிலும் , மிளகாய் ஆகியவையாலும் வெள்ளை நிறம் மாறாமல் செய்வதாம் சலவைச் சட்டினி.
கோங்குரா சட்டினி,கெண்டகாயி சட்டினி, என்று ஆந்திரா பக்கம் போனால் ஒரே காரசாரம் தான்.அதே கர்னாடகா பக்கம் எல்லாவற்றிலும் கொஞ்சம் இனிப்புச் சுவை தூக்கல்.
கண்ணன் சீதாராமன் அழைப்புக்கு நன்றி. கலந்து கொள்ள முடியாத சூழல்./////
எழுதும்போது உங்களை நினைத்துக்கொண்டேன். குறை தீர்ந்தது என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Gnanam Sekar said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம்////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!
////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteசட்னி வகைகள் அசத்துகின்றன. சட்னியைக் கண்டுபிடித்தவர் யார் என்று தெரியாது. ஆனால் எங்கள் வீட்டில் சட்னியைத் தேடிக் கொண்டேதான் இருக்க வேண்டும்! பெரும்பாலும் மிளகாய்ப் பொடியிலேயே ஓட்டி விடுவார்கள்!! தேங்காய்ச் சட்னியில் கொத்துமல்லி சேர்த்தால் அது ஒரு வாசனைதான். தேங்காய் சட்னியில் வரமிளகாயுடன் ஒரு பல் பூண்டு வைத்து அரைப்பவர்களும் இருக்கிறார்கள். சில வீடுகளில் வேர்க்கடலை சட்னியும் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளச் செய்வார்கள்./////
ஆகா, இந்தச் சட்னிவகைகளை வீட்டில் எடுத்துச் சொல்லுங்கள். பொடிக்குக் கொடி காட்டிவிடுவார்கள்
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
உங்கள் அடுத்து வரும் பதிவுகளை படிக்க ஆவலுடன் உள்ளேன்./////
ஆகா, நானும் எழுதுவதற்குச் சற்றும் குறையாத ஆர்வத்துடன் இருக்கிறேன். நன்றி புவனேஷ்வர்!
Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteசட்னி:
எனக்கு தேங்காய் சட்னி தான் ரொம்ப இஷ்டம். கடையில் சாப்பிட்டால் அப்பா திட்டுவார் (மெடிக்கல் டிபார்ட்மென்ட் வேறா, கேட்கவா வேண்டும்?).
அவன் என்ன தண்ணீரை ஊற்றி அரைத்தானோ, யாருக்கு தெரியும் என்பார். சாம்பார் கொதிக்க வைத்து இருப்பதால் ஓரளவுக்கு safe என்பார்.
சட்னி பிரியர்கள் என்னை சினக்க வேண்டாம். நாம் எல்லாரும் ஒரே கூட்டம் :-)))
சரி.
//ஆனால் சட்டினியைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் சொல்லலாம்//
ஐயா, சட்னி பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது.
பூதப்பாண்டியன் மனைவியார் கொப்பெரும்பெண்டு பாடிய புறநாநூற்றுப்பாடலில் (புறநானூறு பாடல் 246) "வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி" என்ற குறிப்பு வருகிறது. வெள் எள் சாந்து என்பது எள்ளு சட்னி தான்.
எள்ளு சட்னியோடு பழைய சோற்றை பிழிந்தெடுத்து உண்ணும் வழக்கத்தையே அந்த ராணி அவ்வாறு சொல்லுகிறார். இன்றைக்கும் வெறும் சதத்துக்கு சாதத்துக்கு தொட்டுக்கொள்ள துவையலை பல இல்லங்களில் வைத்துக்கொள்கிறார்கள் இல்லையா....
(மிளகாய் நம் நாட்டு சமாசாரம் அல்ல. மெக்சிகோவில் இருந்து ஐரோப்பா போய் அங்கிருந்து இங்கே வந்திருக்கலாம் என பலர் அபிப்ராயப்படுகின்றனர். நாம் குறுமிளகையே பயன்படுத்தினோம்)
சட்னி என்பது வடநாட்டு மொழிகளில் இருந்து வந்து இருக்கலாம். தமிழ் சொல் அல்ல. தமிழ் சொல் துவையல் மற்றும் சம்மந்தி.
இன்றைக்கும் ஒரு தென்மாவட்டத்தில் உள்ள எனது வீட்டுப்பக்கம் யாரும் சட்னி என்றோ துவையல் என்றோ சொல்லுவதில்லை. சம்மந்தி என்றே சொல்லுகிறார்கள்.
இப்பொழுது சட்டென்று ஞாபகத்துக்கு வந்த பாடல் இது என்பதால் இதை மேற்கோள் காட்டினேன்.
மற்ற பாடல்கள் கூட உண்டு.
++++++
அனைவருக்கும் இந்த பொழுது பயனுள்ளதாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.
அன்புடன்,
புவனேஷ்////
சம்மந்தி என்கின்ற சொல் புதிது. எங்கள் பகுதியில் துவையல் என்றும் சொல்வார்கள்! செய்திப் பகிர்வுகளுக்கு நன்றி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபுவனேஷ்வர்! வாத்தியாரின் வேண்டுகோளை ஏற்று, இன்றைய பதிவுக்கு ஏற்ற
புறப்பாடலை அளித்து, எள் புளி சம்மந்தியைப் பரிமாறியது நல்ல சாமர்த்தியம்.
அப்ப்பாடலைச் சொல்லியது "பூதபாண்டியந் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள்"
பெயரே சொல்லிவிட்டது அவள் "சதி"(உடன்கட்டை ஏற)செய்ய மனம் கொண்டவள் என்று! "தீப்பாய்வாள்"
"நான் என்ன மற்ற கைம் பெண்களைப் போன்று, அணிலின் உடலில் உள்ள வரிகளைப் போல வரிகள் உடைய (அரிவாளால் பிளக்கப்பட்ட) வெள்ளரிக்காயினுள் இருக்கும் வெண்மையான விதைகளைப் போன்ற, (நீரில் ஊறிய) அரிசிச் சோற்றினை நெய் ஊற்றிக் கொள்ளாமல் இலையில் பிழிந்து வைத்துக்கொண்டு, எள்ளையும் புளியையும் சேர்த்து அறைத்த துவையலைச் சேர்த்து உண்டுவிட்டு பாயில் படுத்துக்கிடந்து துக்கம் கொண்டாடுபவள் என்றா நினைத்தீர்கள்? எனக்குத் நீரும் நெருப்பும் ஒன்றுதான், அறிவீர்களா சான்றோர்களே?"
ஒரு துக்கமான சமயத்திலும் எவ்வளவு தகவலைச் சொல்கிறது இப்பாடல்.
அன்றும் இன்றும் அணிலுக்கு வரி உண்டு. வெள்ளரிக்காய் உண்டு.கைம்பெணகள் தங்கள் உயிரை வைத்துக் கொள்ள மட்டுமே எளிய உணவே உண்பார்கள்.எள் சட்டினி தயாரிப்பது.புளி உபயோகத்தில் இருந்தது.
உடன் கட்டை ஏறும் வழக்கம் அரச மகளிரிடம் ராஜஸ்தானைப் போல தமிழகத்திலும் இருந்துள்ளது.சாதாரண மகளிர் உடன்கட்டை ஏறுவதில்லை என்பதும் புலனாகிறது.
சட்டினியால் கிடைத்த தகவல்கள் சட்டினி போலவே நல்ல சுவை.நன்றி புவனேஷ்வர்.////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!
////Blogger sadan raj said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம்.இதைத்தான் எதிர்பார்க்கிறோம். தங்கள் கைபக்குவத்தில் சுவையுடன் விருந்தாக பறுமாரும் ஜோதிடபாட கட்டுரைகளை. சீக்கிரம் தாருங்கள், நாங்களும் ருசித்து சாப்பிட்டு மனதில் பதியவைத்து கொள்கிறோம். நன்றிகள்./////
நல்லது அப்படியே செய்யுங்கள். என் எழுத்தின் நோக்கமும் அதுதான் சதன்ராஜ்! நன்றி!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteலால்குடி ஐயா, வணக்கம்.
//அப்ப்பாடலைச் சொல்லியது "பூதபாண்டியந் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள்" //
எனது கவனக்குறைவால் அம்மையாரின் பெயரை தவறாக கொப்பெரும்பெண்டு என தட்டச்சி விட்டேன் (கோப்பெருந்தேவி நினைவில்); சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி. தவறுக்கு மன்னிக்கவும்.
பாண்டியன் தேவி உடன்கட்டை ஏறியது பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
எங்கே வாய் இருக்க மாட்டாமல் நான் எதையாவது உடன்கட்டை அது இது என சொல்லப்போக, அந்த எனது பின்னூட்டங்களினால் ஏதும் controversy வந்து அதனால் வாத்தியார் மற்றும் பல பெரியோர்களின் மனம் புண்பட்டு விடுமோ என அடியேன் அஞ்சினேன். ஆதலின் அம்மையார் தீப்பாய்ந்ததை பற்றி ஒன்றும் கூறாமல், சட்னியோடு மட்டும் சம்பந்தம் உடைய வரிகளை கூறி அத்தோடு விட்டு விட்டேன்.
நன்றி, ஐயா.
வணக்கங்களுடன்,
புவனேஷ்/////
நல்லது. உங்களின் விளக்கத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDelete//புவனேஷ்வர்! வாத்தியாரின் வேண்டுகோளை ஏற்று, இன்றைய பதிவுக்கு ஏற்ற
புறப்பாடலை அளித்து, எள் புளி சம்மந்தியைப் பரிமாறியது நல்ல சாமர்த்தியம்.//
தங்கள் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், ஐயா./////
அதை யதார்த்தமாகத்தான் அவர் எழுதியுள்ளார்!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteபக்கோடா பாசந்தி என
முன்னர் வந்த பதிவோ என
எண்ணி மகிழ்ந்தோம்.. எனினும்
எழுத்துக்களால் மகிழ்ந்தோம்..
இட்லி ஆகா..
சாப்பிட்டு எத்தனை நாட்களாயிற்று../////
யாரப்பா அங்கே? அய்யருக்கு பத்து இட்லி பார்சல்! ஹாட்பேக்கில் வைத்து உடனே அனுப்பிவையுங்கள்!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
உள்ளேன் ஜயா
சட்டினி சுவையக இருந்தது .
நன்றி/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger sundari said...
ReplyDeleteவணக்கம் சார்,
அந்த பொங்களில் ரொம்ப நெய் டாலடா எல்லாம் கலந்திருக்கும் ரொம்ப நல்லாயிருக்கும் ஆனால் நம்ப சாப்பிட கூடாது தேங்காய் சட்டினி ரொம்ப ருசிதான் ஆனால் நம்ப அடிகடி சாப்பிடகூடாது இதயத்திற்கு நல்லதில்லை மேலும் சாப்பிடுவது மட்டும் வாழ்க்கையில்லை நம்பயெல்லாம் கடின உழைப்பளிகள் இல்லை எல்லாம் மேஜை உத்தியோகம் பார்பவர்கள்தான் இங்கே இருப்பவர்கள் எப்படியோ கோவைக்கு வ்ருவேன் சுற்றுலாக்கு அப்போ போய் சாப்பிடுவேன்.////
337 நமஹ! 337 நமஹ! 337 நமஹ! என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டியதுதான். ஆகிறது ஆகட்டும் சகோதரி!:-))))
////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteசந்திர னென்னும் இட்டிலியோடு
பலவித சட்னியையும் ஆவலோடு எதிர்கொண்டு நானும்...
நன்றிகள் ஐயா!//////
எழுதுவதற்குச் சற்றும் குறையாத ஆர்வத்துடன் அடியவனும் இருக்கிறேன். நன்றி ஆலாசியம்!
////Blogger Parvathy Ramachandran said...
ReplyDelete'அம்புலியைக் குழம்பாக்கி அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து' என்று தான் படித்திருக்கிறேன். அம்புலி(சந்திரன்)யைத் தேங்காயாக உருவகப்படுத்தி, மற்ற கிரகங்கள் அதனோடு இணைவதன் பலன்களை விளக்கும் பதிவுகளுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
சட்னி (சம்மந்தி) லிஸ்ட் அருமை.
தக்காளியோடு, சின்ன வெங்காயம் கொத்துமல்லி விதை சேர்த்துச் செய்யும் சட்னி சற்றே இனிப்புச் சுவையோடு அருமையாக இருக்கும். ஊத்தப்பம், ரவா தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன். பீர்க்கங்காய் போல் புடலையைக் கீறி உட்புறம் இருக்கும் விதையை வதக்கி, தேங்காயோடு அரைத்துச் செய்யும் புடலைச் சட்னி, பரங்கிக்காய் சட்னியும் சுவையாக இருக்கும்.
பலகாய் சட்னி சப்பாத்திக்கு நல்ல இணை. எள்ளுச் சட்னி போல், கொள்ளுச் சட்னி டயட் பிரியர்களுக்கு வரப்பிரசாதம். 'முருகன் இட்லிக் கடை' யில் இட்லியுடன் எழுவங்கோட்டை மல்லிச் சட்னி என்று தருவார்கள். பலமுறை கஜகர்ணம் அடித்தும் அதன் சுவை கொண்டுவர இயலவில்லை.
இட்லிக்குத் தாளிதம் செய்த சட்னியும் பஜ்ஜிக்கு தாளிதம் செய்யாத சட்னியும்
இணை என்று கண்டுபிடித்த மாமேதை யார் எனத் தெரியவில்லை.
சட்னி பற்றிய புறநானூற்றுப் பாடலை, நினைவுபடுத்திய சகோதரர் புவனேஷ்வருக்கும் விளக்கிய திரு.கே.எம்.ஆர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இயலுமாயின் பாடலை முழுமையாகத் தருமாறு வேண்டுகிறேன்./////
உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும், சமையல் அனுபவச் செய்திகளுக்கும் நன்றி சகோதரி!
//////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteஅன்புடைய சகோதரி பார்வதி அவர்களின் வார்த்தைக்கு இணங்கி அப்பாடலை கீழே கொடுத்துள்ளேன்.
டிஸ்கி: பாடலின் பொருள்/அன்றைய சமூக வழக்குகள் பற்றி எந்த விவாதத்துக்கும் அடியேன் தயாராக இல்லை - மிக்க தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
+++++
பின்னணி:
பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்த ஒல்லையூர் நாட்டைச் சோழமன்னன் ஒருவன் வென்று தன் ஆட்சிக்குள்ளாக்கிக்கொண்டான். பிறகு, பூதப்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் ஒல்லையூர் நாட்டைச் சோழனிடம் இருந்து வென்று, மீண்டும் பாண்டிய நாட்டோடு சேர்த்துக்கொண்டான். அந்த வெற்றியால், பூதப்பாண்டியன், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். புறநானூற்றுப் பாடல் - 71 பூதப்பாண்டியனால் இயற்றப்பட்டது. பெருங்கோப்பெண்டு பூதப்பாண்டியனின் மனைவி. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.
+++++
பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!
+++++
உரை:
பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் மணாளன் மாண்ட பின் அவன் ஈமத்தீஇடை வீழ்ந்து நீ இறந்து படுவாயாக” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணிலினது முதுகின்கண் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெண்மை பொருந்திய, மணமுள்ள, நெய் கலவாத, சோற்றுப்பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய சாந்து/துவைலோடு, புளியிட்டுச் வேக வைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறு பரல் கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் இழிந்த வாழ்வினை உடைய கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லேன். பெரிய பாழ் நிலக்காடாகிய சுடுகாட்டில் கரிய மரக்கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு ஏறுதற்கு அரியதாக இருக்கலாம்; எனக்கோ, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.////
நீண்ட பின்னூட்டத்திற்கும் விளக்கங்களுக்கும் நன்றி புவனேஷ்வர்!
/////Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteAcknowledgement/Reference:
http://puram400.blogspot.in/
This is a blog where you would find more Puranaanooru poems and I have taken the above explanation from this site and modified it just a little bit to avoid being labelled a plagiarist.////
மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நண்பரே!
///////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசந்திரனும் சட்னியும்... நல்ல பகிர்வு நன்றி ! தொடர வாழ்த்துக்கள்.../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
புறப்பாடலின் என் விளக்கத்தில் 'பாயில்லாமல் படுத்துக்கிடந்து' என்று இருக்க வேண்டும்;
ReplyDeleteஇன்று வலையுலகத்தில் பல செய்திகளும் கிடைக்கின்றன.
புவனேஷ்வர் சுட்டியுள்ளது போன்ற வலை தளங்களை அன்பர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தலாம்.
அப்பாடலில் இருக்கும் பல சமூகச் செய்திகளை அழகாக நமது தஞ்சாவூரார் கூறுவார். சமூகத்தில் இருக்கும் சான்றோர்கள் 'தீப்பாய வேண்டாம்' என்று அறிவுறுத்தியது முக்கியமான ஒரு செய்தி.
வெள்ளரி விதையைப் போன்ற அரிசி என்பது ஒரு குறிப்பு. நமது நெல் வகைகள் நூற்றுக்கும் மேலாக இருந்துள்ளன. எந்தச் சோற்றுக்கு எந்த அரிசி பயன் படுத்தப்பட வேண்டும் என்ற குறிப்பெல்லாம் கிடைக்கிறது.
//கர்னாடகா பக்கம் எல்லாவற்றிலும் கொஞ்சம் இனிப்புச் சுவை தூக்கல்.//
ReplyDeleteYes! கர்நாடகாவில் நம்மூரில் காரசாரமாக உள்ள சாம்பாரில் வெல்லம் சேர்ப்பதும் மாங்காய் சேர்ப்பதும் சகஜம்.
மிக அருமையான தலைப்பூ! என்ன..அவசரத்தில் சிட்னி என்று வாசித்துவிட்டேன்!
ReplyDelete-ஜவஹர் கோவிந்தராஜ்