10.7.12

Astrology - Popcorn Posts: ஆசாமி உயிரோடு இருக்கிறானா அல்லது இல்லையா?

 Astrology - Popcorn Posts: ஆசாமி உயிரோடு இருக்கிறானா அல்லது இல்லையா?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பத்து

ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஜாதகன் உயிரோடு இருக்கிறானா அல்லது டிக்கெட் வாங்கிக்கொண்டு பரலோகம் போய்விட்டானா என்று  சட்டென்று  கண்டு பிடிக்க முடியுமா?

ஆன்லைனில் சட்டென்று சினிமா டிக்கெட் அல்லது இரயில் டிக்கெட் வாங்குவதுபோல ஜோதிடத்தில் எல்லாவற்றிற்கும் சட்டென்ற வழி
இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

ஒரு ஜோதிடரிம் ஒரு ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் கேட்கும்போது, அவர் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் அல்லது எடுத்துக் கொடுத்திருக்கும் ஜாதகம் உயிரோடு இருப்பவனின் ஜாதகம் என்ற நம்பிக்கையில்தான் அதைப் புரட்டிப் பார்ப்பார். நடைமுறை வழக்கமும் அதுதான்.

சில அகராதி பிடித்தவர்கள், ஜோதிடரைப் பரிசோதித்துப்பார்ப்பதற்காக (to check up the astrologer) சமயங்களில் அடாவடித்தனமாக அப்படிச் செய்வதும் உண்டு. அதாவது செத்துப்போன தங்கள் உறவினரின் ஜாதகத்தைக் கொடுத்து, பலன் கேட்பார்கள்.

இஷ்ட தேவதையின் அருள் உள்ளவர்கள், தேவி உபாசகர்கள், மந்திர சித்தி உள்ளவர்கள், அதாவது intuition power உள்ளவர்கள். பார்த்த உடனேயே கண்டுபிடித்து, கொண்டு வந்தவனை ஒரு விளாசு விளாசி, அனுப்பி வைத்து விடுவார்கள்.

கோவை புறநகர்ப் பகுதியான எட்டிமடையில், முன்பு (அக்காலத்தில்) ஒரு ஜோதிடர் இருந்தார். அவர் ஜாதகத்தைக் கையில் வாங்கியவுடனேயே கண்டு பிடித்துவிடுவார். அத்துடன் வந்தவனை ஒரு பார்வை பார்த்து ஒடச் செய்து விடுவார்.

பொதுவாக 90 சதவிகிதம், சொன்னால்தான், எட்டாம் வீட்டை அலசி ஜாதகனின் ஆயுசைக் கணித்து, இப்போது அவன் இருக்கிறானா அல்லது  இல்லையா என்று சொல்லுவார்கள். அதையும் சொல்லி, வந்தவனிடம் கேட்டு உறுதி செய்து கொள்வார்கள்.

ஆகவே, தெய்வத்தையும், ஜோதிடர்களையும் சோதனைக்கு உள்ளாக்காதீர் கள்.  ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் விட்டு விடுங்கள்.

சரக்கடித்துவிட்டு, உத்திரத்தைப் பார்த்தவாறு வீட்டிலேயே படுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23 comments:

  1. சோதியில் கலந்தவரை கொண்டு
    மீதியில் பலன் சொல்ல வேண்டுமென

    சோதிடரை சோதிக்கின்றனரா
    சோதிடத்தை சோதிக்கின்றனரா

    பாதகம் பேசுபவர்கள்
    சாதகமாகவும் பேசுவார்கள்

    சில நேரங்களில்..
    சில மனிதர்கள்..

    வாழ்விடங்களிலும் உண்டு..
    வகுப்பறையிலும் உண்டு..

    விட்டுவிடசொல்கிறீர் பிரச்சனையே
    (ஆணவ)கட்டில் இருப்பதால் தானே

    கவிஞரின் இந்த பாடல் வரிகளே
    கருத்தில் வந்தமையால் பகிர்ந்து கொள்கிறோம்..

    உள்ளத்தில் உள்ளது
    உதட்டிலே வந்ததா?

    உதட்டிலே வந்ததது
    உள்ளமே நினைத்ததா?

    உப்புக்கடல் நீரும்
    சக்கரை ஆகலாம்

    முப்பது நாளிலும் நிலவைப்பார்க்கலாம்

    சுட்ட உடல் கூட
    எழுந்து நடக்கலாம்

    நீ..சொன்னது எப்படி உன்மையாகலாம்

    ReplyDelete
  2. சோதிடம் என்பது மருத்துவ ஆலோசனை போலத்தான். குறிப்பாக மனோதத்துவ ஆலோசனைதான். நமக்கு இன்ன மாதிரி உள்ளது என்று சொல்லியே சோதிடரை அணுகவேண்டும் அது எந்த கிரஹத்தினால் அவ்வாறு உள்ளது, எப்போது அதிலிருந்து மாற்றம் கிடைக்கும், எந்த தெய்வத்தை வழிபடவேண்டும் என்று கூறுவதே சோதிடம்.

    ஆனால் ஏதாவது ஆவி, அல்லது இக்ஷிணி போன்றவைகளை வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஆள் முகத்தைப் பார்த்தவுடன் நடந்த சில தவறுகளையோ,
    செய்த பாவங்களையோ பிட்டுப் பிட்டு வைத்து அசத்தி விடுவார்கள். அவர்களுக்கு அந்த சக்தி அவர்களுடைய கிரஹ நிலமைகளை பொறுத்து சில காலம் இருக்கும். அவர்களுடைய சக்தியின் மூலம் வருமானம் பெருகினால் அவர்கள் அந்த சிறு தெய்வத்தை வழிபடுவதை குறைத்து விடுவார்கள்.அதனால் அந்த 'சக்தி'விரைவில் குறைந்துவிடும்.

    உங்கள் ஆக்க‌ம் நல்ல அறிவுரை ஐயா!பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  3. ///ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்////

    கமல் ஒரு படத்தில் சொல்வார் ஜோதிடம் உண்மை, ஜோதிடர் தான் பொய்.

    சிலர் வந்தவரை திருப்திசெய்ய நீ தேடுவதும் எதிர்பார்ப்பதும் உனக்கு நீ தேடாமலேயே கிடைத்துவிடும் அப்படி இப்படி என தவறான பலன் சொல்லி ஜோதிடத்தை காலிசெய்துவிடுகிறார்கள்.

    இன்றைய படமும் ஒருவகையில் அதைதான் சொல்கிறது.

    ReplyDelete
  4. /////ஆகவே, தெய்வத்தையும், ஜோதிடர்களையும் சோதனைக்கு உள்ளாக்காதீர் கள். ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் விட்டு விடுங்கள்.
    சரக்கடித்துவிட்டு, உத்திரத்தைப் பார்த்தவாறு வீட்டிலேயே படுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள்!///

    ஹி..ஹி..ஹி... இதை நம்பிக்கை இல்லாதவர்கள் புரிந்துக் கொண்டால் நன்றாகத் தான் இருக்கும்.. மனித மனம் எங்கே கேட்கிறது நம்பிக்கை இல்லாதவரை கலாய்ப்பதாக குதர்க்க வாதம் செய்வதைத் தானே விரும்புகிறது...

    பதிவு நன்று பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    பதிவுக்கு நன்றி ஜயா,

    ReplyDelete
  6. அய்யா நீங்கள் சொல்வது intuition power என்று நினைக்கிறேன். Inspiration power என்பது இதற்கு சரியான பதமா? ஆயுளைக் கணிப்பதற்கு கணித ரீதியான முறைகள்தான் சரியாக இருக்கும். ஜைமினி முறையில் ஆயுளைக் கணிப்பது ஓரளவு துல்லியமாக இருக்கிறது.

    கட்டங்களை மட்டும் பார்த்து சொல்வது post mortem மாதிரி ஆகி விடுகிறது. குறைந்தபட்சம் எட்டாம் இடம், மூன்றாம் இடம், ஏழாம் இடம், இரண்டாம் இடம் இவற்றோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஷட்பலத்தை வைத்து கணிப்பது ஓரளவு பொருந்தி வருகிறது.

    எட்டாம் இடம், மூன்றாம் இடம் ஆகியவை ஏழாம், இரண்டாம் இடங்களை விட வலுவாக இருந்தால் ஆயுள் நன்றாக இருக்கும் என்பது பொதுவான கருத்து.

    ReplyDelete
  7. ஜோதிடம் என்பது எல்லாருக்கும் கைவரும் விஷயமல்ல. இறைவனால் கொடுக்கப்படும் கொடை அது. மற்றையோருக்கு உதவி செய்வதற்காக, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அது கிடைக்கிறது.

    முறையாக, இதைக் கற்றுக் கொண்டவர்களை மதிப்பது தான் நம் கடமை. மதிக்க வேண்டியவர்களை, மதிக்கத் தகுந்தவர்களை மதிக்காது சோதிக்க நினைப்பது மடமை.

    அவ்வாறு நினைத்தால், ஸ்ரீமத் பாகவதத்தில் யாதவர்கள் சாம்பன் என்ற யாதவனுக்கு கர்ப்பிணி வேடமிட்டு, நாரதர், கண்வர்,விஸ்வாமித்ர முனிவர்களிடம், 'இவளுக்கு (சாம்பன்) என்ன குழந்தை பிறக்கும்?' என்று அவர்களை சோதிப்பதற்காகக் கேட்டு, அதன் மூலம், தம் குலமே அழிய வரம் அடைந்த கதை தான் நிகழும்.

    //இஷ்ட தேவதையின் அருள் உள்ளவர்கள், தேவி உபாசகர்கள், மந்திர சித்தி உள்ளவர்கள், அதாவது inspiration power உள்ளவர்கள். பார்த்த உடனேயே கண்டுபிடித்து, கொண்டு வந்தவனை ஒரு விளாசு விளாசி, அனுப்பி வைத்து விடுவார்கள்.//

    இது முற்றிலும் உண்மை. சில ஜோசியக் குடும்பங்களில், மிக அபூர்வமான, வழி வழியாக மட்டுமே உபதேசிக்கப்படும் மந்திரங்கள் உள்ளன. அவற்றை, முறையாக உச்சாடனம் செய்து அதற்காகச் சொல்லப்படும் கடுமையான நியமங்களை, உணவுக் கட்டுப்பாடு உட்பட, கடைப்பிடித்தால், அதன் பலனாக, ஜாதகத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்திலேயே, ஜாதகரின் முக்காலமும், ஜோதிடரின் மனக்கண் முன் விரியும். ஜாதகரின், முற்பிறவியை, கர்மவினைகளை ஆராய்ந்து ஜோதிடரால் பலன் சொல்ல இயலும். இது ஆன்ம பலத்தால் விளைவது. ஆனால் இந்த ஆன்ம பலத்தை சுய லாபத்துக்காகவோ, பணத்தாசை பிடித்தோ பயன்படுத்தினால் அதை இழப்பது உறுதி.

    இம்மாதிரி அபூர்வ மந்திரங்களில் பல வழக்கொழிந்தாலும் இன்னமும் சில இருக்கின்றன. வெகு சில குடும்பங்களில் உபாசிக்கப்பட்டும் வருகின்றன. நல்லதொரு பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. ஐயா, வணக்கம்.
    இந்த மாதிரி ஆட்கள் பொதுவாக (அவர்களுக்கே தெரியாமல்) சனி ஓரையில் தான் வருவார்கள் என்று கேள்வி. உண்மையா?

    ReplyDelete
  9. Blogger அய்யர் said...
    சோதியில் கலந்தவரை கொண்டு
    மீதியில் பலன் சொல்ல வேண்டுமென
    சோதிடரை சோதிக்கின்றனரா
    சோதிடத்தை சோதிக்கின்றனரா
    பாதகம் பேசுபவர்கள்
    சாதகமாகவும் பேசுவார்கள்
    சில நேரங்களில்..
    சில மனிதர்கள்..
    வாழ்விடங்களிலும் உண்டு..
    வகுப்பறையிலும் உண்டு..
    விட்டுவிடசொல்கிறீர் பிரச்சனையே
    (ஆணவ)கட்டில் இருப்பதால் தானே
    கவிஞரின் இந்த பாடல் வரிகளே
    கருத்தில் வந்தமையால் பகிர்ந்து கொள்கிறோம்..
    உள்ளத்தில் உள்ளது
    உதட்டிலே வந்ததா?
    உதட்டிலே வந்ததது
    உள்ளமே நினைத்ததா?
    உப்புக்கடல் நீரும்
    சக்கரை ஆகலாம்
    முப்பது நாளிலும் நிலவைப்பார்க்கலாம்
    சுட்ட உடல் கூட
    எழுந்து நடக்கலாம்
    நீ..சொன்னது எப்படி உன்மையாகலாம்/////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    சோதிடம் என்பது மருத்துவ ஆலோசனை போலத்தான். குறிப்பாக மனோதத்துவ ஆலோசனைதான். நமக்கு இன்ன மாதிரி உள்ளது என்று சொல்லியே சோதிடரை அணுகவேண்டும் அது எந்த கிரஹத்தினால் அவ்வாறு உள்ளது, எப்போது அதிலிருந்து மாற்றம் கிடைக்கும், எந்த தெய்வத்தை வழிபடவேண்டும் என்று கூறுவதே சோதிடம்.
    ஆனால் ஏதாவது ஆவி, அல்லது இக்ஷிணி போன்றவைகளை வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஆள் முகத்தைப் பார்த்தவுடன் நடந்த சில தவறுகளையோ,
    செய்த பாவங்களையோ பிட்டுப் பிட்டு வைத்து அசத்தி விடுவார்கள். அவர்களுக்கு அந்த சக்தி அவர்களுடைய கிரஹ நிலமைகளை பொறுத்து சில காலம் இருக்கும். அவர்களுடைய சக்தியின் மூலம் வருமானம் பெருகினால் அவர்கள் அந்த சிறு தெய்வத்தை வழிபடுவதை குறைத்து விடுவார்கள்.அதனால் அந்த 'சக்தி'விரைவில் குறைந்துவிடும்.
    உங்கள் ஆக்க‌ம் நல்ல அறிவுரை ஐயா!பதிவுக்கு நன்றி!///////

    காசு பண்ண முயற்சிக்கும்போது, அந்த சக்தி குறைவது மட்டுமல்ல, காணாமலும் போய்விடும். நானும் பார்த்திருக்கிறேன் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ////Blogger thanusu said...
    ///ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்////
    கமல் ஒரு படத்தில் சொல்வார் ஜோதிடம் உண்மை, ஜோதிடர் தான் பொய்.
    சிலர் வந்தவரை திருப்திசெய்ய நீ தேடுவதும் எதிர்பார்ப்பதும் உனக்கு நீ தேடாமலேயே கிடைத்துவிடும் அப்படி இப்படி என தவறான பலன் சொல்லி ஜோதிடத்தை காலிசெய்துவிடுகிறார்கள்.
    இன்றைய படமும் ஒருவகையில் அதைதான் சொல்கிறது.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  12. ////Blogger ஜி ஆலாசியம் said...
    /////ஆகவே, தெய்வத்தையும், ஜோதிடர்களையும் சோதனைக்கு உள்ளாக்காதீர் கள். ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் விட்டு விடுங்கள்.
    சரக்கடித்துவிட்டு, உத்திரத்தைப் பார்த்தவாறு வீட்டிலேயே படுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள்!///
    ஹி..ஹி..ஹி... இதை நம்பிக்கை இல்லாதவர்கள் புரிந்துக் கொண்டால் நன்றாகத் தான் இருக்கும்.. மனித மனம் எங்கே கேட்கிறது நம்பிக்கை இல்லாதவரை கலாய்ப்பதாக குதர்க்க வாதம் செய்வதைத் தானே விரும்புகிறது...
    பதிவு நன்று பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா!/////

    புதுக்கோட்டைக்காரராயிற்றே - நீங்கள் அறியாத குதர்க்க வாதங்களா? பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    பதிவுக்கு நன்றி ஜயா,/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger arul said...
    NICE POST////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger Balamurugan Jaganathan said...
    nice info Ayya...////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////Blogger sundari said...
    vanakkam sir,
    present sir./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. ////Blogger Jagannath said...
    அய்யா நீங்கள் சொல்வது intuition power என்று நினைக்கிறேன். Inspiration power என்பது இதற்கு சரியான பதமா? ஆயுளைக் கணிப்பதற்கு கணித ரீதியான முறைகள்தான் சரியாக இருக்கும். ஜைமினி முறையில் ஆயுளைக் கணிப்பது ஓரளவு துல்லியமாக இருக்கிறது.
    கட்டங்களை மட்டும் பார்த்து சொல்வது post mortem மாதிரி ஆகி விடுகிறது. குறைந்தபட்சம் எட்டாம் இடம், மூன்றாம் இடம், ஏழாம் இடம், இரண்டாம் இடம் இவற்றோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஷட்பலத்தை வைத்து கணிப்பது ஓரளவு பொருந்தி வருகிறது.
    எட்டாம் இடம், மூன்றாம் இடம் ஆகியவை ஏழாம், இரண்டாம் இடங்களை விட வலுவாக இருந்தால் ஆயுள் நன்றாக இருக்கும் என்பது பொதுவான கருத்து./////

    கரெக்ட். intuition power என்பதுதான் சரி! கவனக்குறைவினால் ஏற்பட்ட பிழை. திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. Blogger Parvathy Ramachandran said...
    ஜோதிடம் என்பது எல்லாருக்கும் கைவரும் விஷயமல்ல. இறைவனால் கொடுக்கப்படும் கொடை அது. மற்றையோருக்கு உதவி செய்வதற்காக, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அது கிடைக்கிறது.
    முறையாக, இதைக் கற்றுக் கொண்டவர்களை மதிப்பது தான் நம் கடமை. மதிக்க வேண்டியவர்களை, மதிக்கத் தகுந்தவர்களை மதிக்காது சோதிக்க நினைப்பது மடமை.
    அவ்வாறு நினைத்தால், ஸ்ரீமத் பாகவதத்தில் யாதவர்கள் சாம்பன் என்ற யாதவனுக்கு கர்ப்பிணி வேடமிட்டு, நாரதர், கண்வர்,விஸ்வாமித்ர முனிவர்களிடம், 'இவளுக்கு (சாம்பன்) என்ன குழந்தை பிறக்கும்?' என்று அவர்களை சோதிப்பதற்காகக் கேட்டு, அதன் மூலம், தம் குலமே அழிய வரம் அடைந்த கதை தான் நிகழும்.
    //இஷ்ட தேவதையின் அருள் உள்ளவர்கள், தேவி உபாசகர்கள், மந்திர சித்தி உள்ளவர்கள், அதாவது inspiration power உள்ளவர்கள். பார்த்த உடனேயே கண்டுபிடித்து, கொண்டு வந்தவனை ஒரு விளாசு விளாசி, அனுப்பி வைத்து விடுவார்கள்.//
    இது முற்றிலும் உண்மை. சில ஜோசியக் குடும்பங்களில், மிக அபூர்வமான, வழி வழியாக மட்டுமே உபதேசிக்கப்படும் மந்திரங்கள் உள்ளன. அவற்றை, முறையாக உச்சாடனம் செய்து அதற்காகச் சொல்லப்படும் கடுமையான நியமங்களை, உணவுக் கட்டுப்பாடு உட்பட, கடைப்பிடித்தால், அதன் பலனாக, ஜாதகத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்திலேயே, ஜாதகரின் முக்காலமும், ஜோதிடரின் மனக்கண் முன் விரியும். ஜாதகரின், முற்பிறவியை, கர்மவினைகளை ஆராய்ந்து ஜோதிடரால் பலன் சொல்ல இயலும். இது ஆன்ம பலத்தால் விளைவது. ஆனால் இந்த ஆன்ம பலத்தை சுய லாபத்துக்காகவோ, பணத்தாசை பிடித்தோ பயன்படுத்தினால் அதை இழப்பது உறுதி.
    இம்மாதிரி அபூர்வ மந்திரங்களில் பல வழக்கொழிந்தாலும் இன்னமும் சில இருக்கின்றன. வெகு சில குடும்பங்களில் உபாசிக்கப்பட்டும் வருகின்றன. நல்லதொரு பதிவிற்கு நன்றி ஐயா./////

    உங்களுடைய மேன்மையான, உணர்ந்தளித்த பதிலுடன் கூடிய பின்னூட்டத்திர்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. ///////Blogger Bhuvaneshwar said...
    ஐயா, வணக்கம்.
    இந்த மாதிரி ஆட்கள் பொதுவாக (அவர்களுக்கே தெரியாமல்) சனி ஓரையில் தான் வருவார்கள் என்று கேள்வி. உண்மையா?///////

    வருவார்களா? எங்கே வருவார்கள்? அது தெரியாமல் உண்மையா அல்லது பொய்யா என்று எப்படிச் சொல்வது ராசா?

    ReplyDelete
  20. //வருவார்களா? எங்கே வருவார்கள்? அது தெரியாமல் உண்மையா அல்லது பொய்யா என்று எப்படிச் சொல்வது ராசா?
    //

    I wasn't clear perhaps. I meant, I have heard that such people with intentions of testing the astrologer with a dead man's chart enter the astrologer's home or office in Sani Horai.

    ReplyDelete
  21. ///Blogger Bhuvaneshwar said...
    //வருவார்களா? எங்கே வருவார்கள்? அது தெரியாமல் உண்மையா அல்லது பொய்யா என்று எப்படிச் சொல்வது ராசா?
    //
    I wasn't clear perhaps. I meant, I have heard that such people with intentions of testing the astrologer with a dead man's chart enter the astrologer's home or office in Sani Horai.////

    அது போன்ற போக்கத்த ஆசாமிகளெல்லாம் - அவர்களே சனி போன்றவர்கள். அவர்களுக்கு ஏது ஹோரை?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com