11.7.12

Astrology - Popcorn Posts: ஒழுக்கமற்ற தன்மைக்கான (immoral) ஜாதக அமைப்பு என்ன?

Astrology - Popcorn Posts: ஒழுக்கமற்ற தன்மைக்கான (immoral) ஜாதக அமைப்பு என்ன?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினொன்று

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்"
- திருவள்ளுவர்.

(ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பைத் தருவதால், அவ்வொழுக்கம் உயிரைவிட மேலானதாகப் பேணிக் காக்கப்படும்)

முற்காலத்தில் எல்லா மக்களும் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகக் கருதி, அதைக் கடைப்பிடித்தார்கள். ஆணோ அல்லது பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள். சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களைத்  தண்டிப்பதற்கு யாரும் இல்லை. எந்த அமைப்பும் இல்லை. அதிகம் படித்தவர்களாகவோ அல்லது செல்வந்தர்களாகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையில் ஒழுக்கத்தை மீறினாலும் அது தப்பில்லை என்ற நிலையே இன்று காணப்படுகிறது.

தென் இந்தியாவில் உள்ள பெரிய நகரம் இன்றில் கருத்தடை மாத்திரைகள்தான் அதிகமாக விற்கிறதாம். பல இளம் பெண்களின் கைப்பையில் லிப் ஸ்டிக்குடன் கருத்தடை மாத்திரைகளும் தவறாமல் இருக்குமாம். எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!
---------------------------------------------------------------
ஒழுக்கமற்றவர்களை இம்மாரல் கேரக்டர் என்பார்கள்.

immoral = wicked, sinful, ஒழுக்கமற்ற, கெட்ட, தீய, பாவகரமான, நெறியற்ற என்று பொருள்
immorality:
1. The quality or condition of being immoral.
2.An immoral act or practice.
3.The quality of not being in accord with standards of right or good conduct

சரி, அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்தால், அல்லது ஒருவருக்கொருவர் பார்வையில் இருந்தால், ஜாதகனின் அல்லது ஜாதகியின் ஒழுக்கத்திற்கு வேட்டு வைத்துவிடுவார்கள். வேட்டு வைப்பது என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

Venus and Mars cause immorality.

ஏழாம் வீடு இவ்விருகிரகத்தாலும் பாதிக்கபெற்றிருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகி ஒழுக்கமற்றவர்களாக இருப்பார்கள்.

பத்தாம் வீடு அல்லது பத்தாம் வீட்டின் அதிபதி பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தாலும் ஜாதகன் அல்லது ஜாதகி ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள்.
---------------------------------------------------------------
மனிதர்களில் இரண்டு வகை:

1.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளுடன் வாழ்பவர்கள் ஒரு வகை
2.எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை

இரண்டாம் வகை ஆசாமிகளிடம் நீங்கள் கேட்டால் என்ன சொல்வார்கள்?

What is wrong in it yaar? Life is short, enjoy it yaar என்பார்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
அறிவிப்பு:
அஷ்டகவர்க்கப்பாடங்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் துவங்க உள்ளன. இங்கே, எழுதினால் திருட்டுப்போகும் என்பதால் தனித் தளத்தில் துவங்க உள்ளது. உண்மையில் ஆர்வமுள்ளவர்கள் அவ்குப்பில் சேர விண்ணப்பிக்கலாம். அதற்கென்று தனியான விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் தங்கள் சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்வி கேட்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்! பாடங்களை முழுமையாகப் படித்து மனதில் ஏற்றினால், உங்கள் ஜாதகத்தையும், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஜாதகங்களை நீங்களே அலசலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  classroom2007@gmail.com
Please mention as 'Ashtagavarka Class" in the subject box of the mail

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++==============

41 comments:

  1. ஒழுக்கம் எனப்படுவது யாது என
    ஒருவரும் சொன்னதாக தெரியவில்லை

    தவறு செய்ய வாய்ப்பினை தேடிக் கொண்டு இருப்பவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்

    வாய்ப்பு கிடைத்தால் தவறு செய்வார்கள் இல்லையெனில் அவர் போக்கில் இருப்பர் என்பவர்கள் சாதரண ஒழுக்கமில்லாதவர்

    வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருப்பவரே ஒழுக்கம் நிறைந்த சீலர்கள் என்பது அய்யரின் கருத்து..

    ஆரோக்கியமான மாற்றுக் கருத்துக்கள் அரங்கேறலாம்..

    ReplyDelete
  2. ஒழுக்க நிலையை எண்ணத்தில் கொண்டே மற்ற மதங்களில் உள்ளது போல

    இந்து மதத்திலும்
    சாதுர் மாத (விரத)சிறப்பு உள்ளது

    வருடத்தில் மூன்றில் ஒரு பகுதியான 4 மாதங்கள் குறித்து செய்யும் விரதம்

    இது பற்றிய கூடுதல் தகவல்
    சதோதரி பார்வதியாரே
    படைத்து தருவார் என்று நம்புகிறோம்

    வாத்தியாரும் அதனை அன்பு கூர்ந்து அனுமதிக்க வேண்டும் என

    அன்பு வேண்டுகோள் தந்து
    மனக்கதவை தட்டிவிட்டு
    காத்திருக்கின்றோம்

    அன்பு திறவுகோல் கொண்டு
    திறக்கப்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்.

    மற்ற வகுப்பறை தோழர்களும்
    மனம் உவந்து இந்த வேண்டுகோளினை ஆதரிக்க வேண்டுகிறோம்..

    ஒரு கூட்டு பிராத்தனையை இன்று முதல் 5 நாட்களுக்கு தொடரலாம் என கருதுகிறோம்..

    ReplyDelete
  3. Blogger அய்யர் said...
    ஒழுக்கம் எனப்படுவது யாது என
    ஒருவரும் சொன்னதாக தெரியவில்லை
    தவறு செய்ய வாய்ப்பினை தேடிக் கொண்டு இருப்பவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்
    வாய்ப்பு கிடைத்தால் தவறு செய்வார்கள் இல்லையெனில் அவர் போக்கில் இருப்பர் என்பவர்கள் சாதரண ஒழுக்கமில்லாதவர்
    வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருப்பவரே ஒழுக்கம் நிறைந்த சீலர்கள் என்பது அய்யரின் கருத்து..
    ஆரோக்கியமான மாற்றுக் கருத்துக்கள் அரங்கேறலாம்../////////

    ஒழுக்கமின்மையையும் யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? அது மட்டும் எப்படித் தானாக வந்து தொற்றிக்கொள்கிறது?
    நெறிமுறைகள் தவறாத தனி மனிதக் கட்டுப்பாடுதான் ஒழுக்கம்!
    போதுமா விசுவநாதன்?
    இன்னும் வேண்டுமென்றால், சொல்லுங்கள், மனவளம் பகுதியில் விரிவாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. /////Blogger அய்யர் said...
    ஒழுக்க நிலையை எண்ணத்தில் கொண்டே மற்ற மதங்களில் உள்ளது போல
    இந்து மதத்திலும்
    சாதுர் மாத (விரத)சிறப்பு உள்ளது
    வருடத்தில் மூன்றில் ஒரு பகுதியான 4 மாதங்கள் குறித்து செய்யும் விரதம்
    இது பற்றிய கூடுதல் தகவல்
    சதோதரி பார்வதியாரே
    படைத்து தருவார் என்று நம்புகிறோம்
    வாத்தியாரும் அதனை அன்பு கூர்ந்து அனுமதிக்க வேண்டும் என
    அன்பு வேண்டுகோள் தந்து
    மனக்கதவை தட்டிவிட்டு
    காத்திருக்கின்றோம்
    அன்பு திறவுகோல் கொண்டு
    திறக்கப்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்.
    மற்ற வகுப்பறை தோழர்களும்
    மனம் உவந்து இந்த வேண்டுகோளினை ஆதரிக்க வேண்டுகிறோம்..
    ஒரு கூட்டு பிராத்தனையை இன்று முதல் 5 நாட்களுக்கு தொடரலாம் என கருதுகிறோம்.////////

    இப்போதுதான் ஒரு சுனாமியில் தத்தளித்துவிட்டு, அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறோம். மீண்டும் ஒரு சுனாமியை எதிர்கொள்ள வேண்டுமா விசுவநாதன்?

    மதம், இனம், ஜாதி இவற்றைப் பற்றிய எந்தக் கட்டுரைக்கும் வகுப்பறையில் இடமில்லை. மன்னிக்கவும்!

    ReplyDelete
  5. //மனிதர்களில் இரண்டு வகை:

    1.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளுடன் வாழ்பவர்கள் ஒரு வகை
    2.எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை//

    எப்படி வாழ்ந்தால் மனிதப்பிறப்பெடுத்த நோக்கம் ஈடேறுமோ, அப்படி வாழ்வதுதான் வாழ்க்கை. மனத்துக்கண் மாசிலன் ஆக வாழ்வதே சிறப்பு.

    ஜாதகக் கோளாறுகள், தனி மனித ஒழுக்க மீறலுக்கு ஒரு பெரும் காரணமாயினும், இவ்வித ஜாதக அமைப்பு உள்ளவர்கள், தொடர்ந்த இறைவழிபாட்டின் மூலமும், விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதாலும், தாக்கத்தைப் பெரும் அளவுக்குக் குறைக்கலாம் என நினைக்கிறேன்.

    மிக அருமையான, பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. நெறிமுறைகள் தவறாமல் (ஓழுக்கம்) இருக்கவே
    மதம் இனம் சாதி என்ற அமைப்புகள்..

    ஒழுக்கத்தை பற்றி சொல்லும் போது
    வேண்டாம் என சொல்லும் அது பற்றி சொல்லித்தானே தனிமனித கட்டுப்பாட்டினை சொல்லியாக வேண்டும்..

    சரிதானே..

    ReplyDelete
  7. ஒழுக்கம் தனி மனிதனுக்கு தனித் தனியானது.. அது எக்காலத்திலும் எந்த இடத்திலும், எல்லாச் சூழலிலும் அனைவருக்கும் பொதுவானது... ஆகவே சகோதரி பார்வதி கூறியது போல் இப்படி அமைப்புக் கொண்ட ஜாதககர்கள் தங்களின் இயல்பை அறிந்து இறைவழிபாட்டால் தங்களை நெறிப் படுத்திக் கொண்டால் மிகவும் நல்லதே!...

    ''உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்....
    வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்.''

    என்றக் கவிஞரின் வரிகளை விரித்துக் கூறும் (மறைவில் நின்று) பதிவாகவே கருதுகிறேன்.
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  8. குருவிற்கு வணக்கம்
    ஒழுக்கத்தின் பாடம் நன்றகயிருந்தது
    நன்றி

    ReplyDelete
  9. //சுக்கிரனும் செய்வாயும் சேர்ந்தால்/// இது பொது விதிதானேஅய்யா, ஒரு உதாரனத்துக்கு சிம்ம லகனத்துக்கு ஒன்பதில் சுக்ரனும் செய்வாயும் இருப்பதாக வைத்துக் கொள்வோம்,அப்போதும் இதே நிலைதானா.

    ReplyDelete
  10. Ayya,

    I have one small clarification on this. If Venus & Mars joins, it becomes Nubunathuva Yogam. In that case, is that yogam will yield bad results? As per your lessons, i thought this yoga people will be having keen or deep intelligent in their respective field.Please answer my questions?

    ReplyDelete
  11. அய்யர் said...வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருப்பவரே ஒழுக்கம் நிறைந்த சீலர்கள்

    SP.VR. SUBBAIYA said...நெறிமுறைகள் தவறாத தனி மனிதக் கட்டுப்பாடுதான் ஒழுக்கம்!

    வள்ளுவரும் சொல்லியுள்ளார் கல்வியக் கண்போன்றது என்று, ஆனால் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பப்படும் என்றார். மனவளக் கட்டுரை ஒன்றை எழுதுங்கள் அய்யா.

    நான் மது அருந்தமாட்டேன் ,பிடிக்காது. அப்படி யெனில் நான் ஒழுக்கமானவன். இது மிக சாதாரனம். எவன் ஒருவன் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்துக்கொண்டு மது அருந்தாமல் இருக்கிறானோ அவன் தான் ஒழுக்கமானவன்.என்னைவிட ஒழுக்கமானவன்.தவறு செய்ய வாய்ப்பிருந்தும் தவறு செய்யாமல் இருப்பவனே, தனிமனித நெறி முறைகள் மீறாத இவனே ஒழுக்கம் உள்ளவன்.

    ReplyDelete
  12. ஒழுக்கம் பற்றி எதுவும் பேசாமல் ஒழுங்காக விலகிக் கொள்கிறேன்.

    பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  13. பூர்வ புண்ணிய பலம் நன்றாக அமையப்பட்ட ஜாதருக்கு செவ்வாயும் சுக்கிரரும் சேர்ந்து இருந்தால் கூட ஒழுக்கம் குறைவு ஏற்படாது. மாறாக திருமண வாழ்வு மிகவும் இனிக்கும் என்பார்கள்.

    இந்த அமைப்பு இருந்தும் ஒழுக்கத்துடன் இருக்கும் ஆட்கள் உண்டு அல்லவா. தசா புக்திகளில் மனம் பேதலிக்க/சஞ்சலிக்க வாய்ப்பு உண்டோ என்னவோ. வாத்தியார் விளக்க பணிவுடன் வேண்டுகிறன்.

    உதாரணமாக செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து நாலாம் வீட்டில் என்றால் அவர் மண் சம்பந்தமான வேதியியல் படிப்பில் இருக்கலாம் (பத்தாம் வீட்டை பார்ப்பதால்). இது பொது விதி தானே..... வளர்பிறை சந்திரனின்/சுபர் பார்வை இருந்தால் ஒழுக்கம் தவற மாட்டார்களாமே?

    இது எனது தாழ்மையான கருத்து.

    வேலை நிமித்தம் அலைவதால் பின்னூட்டம் தொடர்ந்து இட முடியவில்லை. பல்க் ஆக பாடங்களை வீடு வந்த உடன் படிக்கிறேன்.

    எல்லாரும் நலமா? எல்லா நாளும் எல்லாருக்கும் இனிது அமைய இறையருளை வேண்டுகிறேன், நண்பர்களே.

    ReplyDelete
  14. ///இப்போதுதான் ஒரு சுனாமியில் தத்தளித்துவிட்டு, அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறோம். மீண்டும் ஒரு சுனாமியை எதிர்கொள்ள வேண்டுமா விசுவநாதன்?

    மதம், இனம், ஜாதி இவற்றைப் பற்றிய எந்தக் கட்டுரைக்கும் வகுப்பறையில் இடமில்லை. மன்னிக்கவும்!///

    சுனாமி ஒவ்வொரு முறையும் வராது அல்லவா..
    மேலும்
    தான் பெற்ற அனுபவத்தினால் பதிவினை அமைப்பவரும் பின்ஊட்டமிட விரும்புபவரும் தன் நிலை அறிந்தே செயல்படுவர்.

    பின் தொடரும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சார்பில் பொறுப்பு ஏற்கிறோம்..

    இனி அந்த நிலை
    இன்னொரு முறை வராது

    அய்யரின் உறுதிப்பாட்டினை தாங்கள் அறிவீர்கள்
    அதனால் தங்கள் முடிவில் மாற்றமும் உங்கள்
    மாணவர்களுக்காக அந்த வாயில் (திறந்து உள்ள) அந்த கதவின் வழி சென்ற வர அனுமதி கோருகிறோம்.

    இந்த வாரத்திற்கான அனுமதி பெற வேண்டி
    இன்று முதல் 5 நாட்கள் கூட்டு பிரார்த்தனையில் ... (விரும்புபவர்கள் கலந்து கொள்ளலாம்)

    ஒரு குழந்தை தவறு செய்து விட்டால் "அம்மாகிட்டே சாரி கேளு" என்று இன்றைய வர்கம் சொல்வது போல்

    எங்கள் காலத்தில்
    ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டால்
    கடவுளிடம் மன்னிப்பு கேள்
    என்று சொல்லுவார்கள்..

    அப்படியே
    இறைவன் திருமுன் வேண்டி நிற்கிறோம்
    இனிமை தரும் அன்பானை வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்...

    பின் தொடரும் 3000க்கும் மேற்பட்ட
    மாணவர்கள் சார்பில்..
    உரிமையுடன் பொறுப்பேற்று ...

    அன்புடன்
    அய்யர்

    ReplyDelete
  15. //இனி அந்த நிலை
    இன்னொரு முறை வராது//

    ததாஸ்து!! அமென்!!! அமீன்!!!!= அப்ப‌டியே ஆகட்டும்

    ReplyDelete
  16. என்னிடம் உள்ள சில ஜாதகத்தில் சொத்தையே (எதில் என்பது உங்களுக்கு புரியும்) இழந்தவருடைய ஜாதகத்தை பார்த்தேன் நீங்கள் சொல்வது மிகச்சரியே.
    அன்புடன்
    பொன்னமராவதி
    மணி

    ReplyDelete
  17. ellaam avaravar vaangittuvanthavram
    ethula yaarum yaaraiyum thappusollamudiyaathu.
    vithi valiyathu .

    ReplyDelete
  18. ஐயா...

    கும்ப மற்றும் சிம்ம லக்னத்திற்கு இவர்கள் (செவ் & சுக்கிரன்) தர்ம கர்மாதிபதி யோகம் தரக்கூடியவர்கள். அப்படி யோகத்தில் அமர்ந்தாலும் ஜாதகன் திரை மறைவில் ஒழுக்க கேடானவனாக இருப்பானா?

    பாடத்திற்கு நன்றி...

    ReplyDelete
  19. அய்யா,
    சுக்கிரன்+செவ்வாய் சேர்க்கை அதீதமான காம உணர்வுகளைத் தூண்டும் என்றாலும் அதில் நெறிமுறை தவற பாதிக்கப்பட்ட லக்கினமும்,லக்கினாதிபதியும் காரணமாக இருக்க மாட்டார்களா?.லக்கினம் தானே பிரதானம் நீங்கள் சொல்வது போல் "என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்". உணர்வை வெளிப்படுத்தும் விதம் கொச்சையாக அமைபவர்களுக்கு லக்கினம்,லக்கினாதிபதி,உடன் லக்கினத்தில் அமரும் மற்ற பாவ கிரகங்கள் என அனைவரும் காரணம் ஆகலாம்.எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை இறைவன் யாருக்கும் அளிக்கவில்லை.அது அவனவன் வாங்கி வந்த வரம்.

    ReplyDelete
  20. ////Arul said...

    கும்ப மற்றும் சிம்ம லக்னத்திற்கு இவர்கள் (செவ் & சுக்கிரன்) தர்ம கர்மாதிபதி யோகம் தரக்கூடியவர்கள். அப்படி யோகத்தில் அமர்ந்தாலும் ஜாதகன் திரை மறைவில் ஒழுக்க கேடானவனாக இருப்பானா?////

    இவர்கள் இருவருமே இயற்கையில் பகை கிரகங்கள் அதனால் தர்மகர்மாதிபதி யோகம் பெரிய பிரமாதமாக ஒன்றும் வேலை செய்யாது.தர்மகர்மாதிபதி என்பதற்காக அவர்கள் குணத்தை எல்லாம் மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.அதீத காம உணர்வு இருக்கும்,என்ன ஒன்று இடம்,பொருள்,ஏவல் என ஒரு வரைமுறையை தங்களது ஆதிபத்தியத்திற்காக தருவார்கள்.அவ்வளவு தான்.ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் தான் எப்போதுமே.

    ReplyDelete
  21. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    செவ்வாய் சுக்கிரன் இணைந்து உள்ள இடத்தை குரு அல்லது ஏதேனும் ஒரு சுபர் பார்வை இட்டால் ஜாதகர் அல்லது ஜாதகி தனது ஒழுக்கத்தில் உறுதியாக
    இருப்பார் என்று நம்ப முடியுமா அய்யா? தயவு செய்து விளக்க வேண்டும்.
    அன்புடன்,
    அரசு.

    ReplyDelete
  22. ///Blogger Parvathy Ramachandran said...
    //மனிதர்களில் இரண்டு வகை:
    1.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளுடன் வாழ்பவர்கள் ஒரு வகை
    2.எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பவர்கள் ஒரு வகை//
    எப்படி வாழ்ந்தால் மனிதப்பிறப்பெடுத்த நோக்கம் ஈடேறுமோ, அப்படி வாழ்வதுதான் வாழ்க்கை. மனத்துக்கண் மாசிலன் ஆக வாழ்வதே சிறப்பு.
    ஜாதகக் கோளாறுகள், தனி மனித ஒழுக்க மீறலுக்கு ஒரு பெரும் காரணமாயினும், இவ்வித ஜாதக அமைப்பு உள்ளவர்கள், தொடர்ந்த இறைவழிபாட்டின் மூலமும், விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதாலும், தாக்கத்தைப் பெரும் அளவுக்குக் குறைக்கலாம் என நினைக்கிறேன்.
    மிக அருமையான, பதிவைத் தந்தமைக்கு நன்றி ஐயா.//////

    இறைவழிபாடு காக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. ////Blogger அய்யர் said...
    நெறிமுறைகள் தவறாமல் (ஓழுக்கம்) இருக்கவே மதம் இனம் சாதி என்ற அமைப்புகள்..
    ஒழுக்கத்தை பற்றி சொல்லும் போது
    வேண்டாம் என சொல்லும் அது பற்றி சொல்லித்தானே தனிமனித கட்டுப்பாட்டினை சொல்லியாக வேண்டும்..
    சரிதானே..////

    மத அமைப்புக்களில் எத்தனை மடங்களில் ஒழுங்கீனம் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியுமா - தெரியாதா? அவற்றை எப்படி நல்வழிப் படுத்துவது? முயன்றால் முடிகிற செயலும் அல்ல அது! விலங்குகளுக்கு யார் சொல்லித்தருகிறார்கள். ஒரு சிங்கம் எத்தனை பசியாக இருந்தாலும், இன்னொரு சிங்கத்தை அடித்துத்திங்காது. தெருவில் அடிபட்டுக்கிடக்கும் நாயின் உடற்பகுதியை காகம் கொத்தித் திண்ணும். ஆனால் எத்தனை பசியாக இருந்தாலும் அதே வழியில் செல்லும் ஒரு புறாவோ அல்லது ஒரு குருவியோ அல்லது ஒரு கிளியோ விலகிச் சென்று விடும். இதெல்லாம் தெரியுமல்லவா உங்களுக்கு?

    ReplyDelete
  24. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ஒழுக்கம் தனி மனிதனுக்கு தனித் தனியானது.. அது எக்காலத்திலும் எந்த இடத்திலும், எல்லாச் சூழலிலும் அனைவருக்கும் பொதுவானது... ஆகவே சகோதரி பார்வதி கூறியது போல் இப்படி அமைப்புக் கொண்ட ஜாதககர்கள் தங்களின் இயல்பை அறிந்து இறைவழிபாட்டால் தங்களை நெறிப் படுத்திக் கொண்டால் மிகவும் நல்லதே!...
    ''உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்....
    வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்.''
    என்றக் கவிஞரின் வரிகளை விரித்துக் கூறும் (மறைவில் நின்று) பதிவாகவே கருதுகிறேன்.
    நன்றிகள் ஐயா!/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  25. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    ஒழுக்கத்தின் பாடம் நன்றாகயிருந்தது
    நன்றி///

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ///Blogger thanusu said...
    //சுக்கிரனும் செய்வாயும் சேர்ந்தால்/// இது பொது விதிதானேஅய்யா, ஒரு உதாரணத்துக்கு சிம்ம லகனத்துக்கு ஒன்பதில் சுக்ரனும் செய்வாயும் இருப்பதாக வைத்துக் கொள்வோம்,அப்போதும் இதே நிலைதானா.//////

    பொதுவிதிதான். உங்கள் ஜாதகத்தில் அப்படி இருந்தால் கவலை கொள்ளாதீர்கள். லகானை இறுக்கிப் பிடித்துக்கொள்ளுங்கள்:-))))

    ReplyDelete
  27. ////Blogger Ravichandran said...
    Ayya,
    I have one small clarification on this. If Venus & Mars joins, it becomes Nubunathuva Yogam. In that case, is that yogam will yield bad results? As per your lessons, i thought this yoga people will be having keen or deep intelligent in their respective field.Please answer my questions?/////

    புதன் சேரும்போதுதான் நீங்கள் சொல்லும் யோகம் வரும்!

    ReplyDelete
  28. /////Blogger thanusu said...
    அய்யர் said...வாய்ப்பு கிடைக்கும் போதும் தவறு செய்யாமல் இருப்பவரே ஒழுக்கம் நிறைந்த சீலர்கள்
    SP.VR. SUBBAIYA said...நெறிமுறைகள் தவறாத தனி மனிதக் கட்டுப்பாடுதான் ஒழுக்கம்!
    வள்ளுவரும் சொல்லியுள்ளார் கல்வியக் கண்போன்றது என்று, ஆனால் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பப்படும் என்றார். மனவளக் கட்டுரை ஒன்றை எழுதுங்கள் அய்யா.
    நான் மது அருந்தமாட்டேன் ,பிடிக்காது. அப்படி யெனில் நான் ஒழுக்கமானவன். இது மிக சாதாரணம். எவன் ஒருவன் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்துக்கொண்டு மது அருந்தாமல் இருக்கிறானோ அவன் தான் ஒழுக்கமானவன்.என்னைவிட ஒழுக்கமானவன்.தவறு செய்ய வாய்ப்பிருந்தும் தவறு செய்யாமல் இருப்பவனே, தனிமனித நெறி முறைகள் மீறாத இவனே ஒழுக்கம் உள்ளவன்./////

    உண்மைதான். நன்றி தனுசு!

    ReplyDelete
  29. ////Blogger kmr.krishnan said...
    ஒழுக்கம் பற்றி எதுவும் பேசாமல் ஒழுங்காக விலகிக் கொள்கிறேன்.
    பதிவுக்கு நன்றி ஐயா!////

    ஆமாம். கலியுகம். பேசினாலும் கேட்டுக்கொள்ள ஆள் வேண்டுமே! பேசாமல் இருப்பதே (நமக்கு) நல்லது!

    ReplyDelete
  30. ////Blogger arul said...
    nice post////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. Blogger Bhuvaneshwar said...
    பூர்வ புண்ணிய பலம் நன்றாக அமையப்பட்ட ஜாதருக்கு செவ்வாயும் சுக்கிரரும் சேர்ந்து இருந்தால் கூட ஒழுக்கம் குறைவு ஏற்படாது. மாறாக திருமண வாழ்வு மிகவும் இனிக்கும் என்பார்கள்.
    இந்த அமைப்பு இருந்தும் ஒழுக்கத்துடன் இருக்கும் ஆட்கள் உண்டு அல்லவா. தசா புக்திகளில் மனம் பேதலிக்க/சஞ்சலிக்க வாய்ப்பு உண்டோ என்னவோ. வாத்தியார் விளக்க பணிவுடன் வேண்டுகிறன்.
    உதாரணமாக செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து நாலாம் வீட்டில் என்றால் அவர் மண் சம்பந்தமான வேதியியல் படிப்பில் இருக்கலாம் (பத்தாம் வீட்டை பார்ப்பதால்). இது பொது விதி தானே..... வளர்பிறை சந்திரனின்/சுபர் பார்வை இருந்தால் ஒழுக்கம் தவற மாட்டார்களாமே?
    இது எனது தாழ்மையான கருத்து.
    வேலை நிமித்தம் அலைவதால் பின்னூட்டம் தொடர்ந்து இட முடியவில்லை. பல்க் ஆக பாடங்களை வீடு வந்த உடன் படிக்கிறேன்.
    எல்லாரும் நலமா? எல்லா நாளும் எல்லாருக்கும் இனிது அமைய இறையருளை வேண்டுகிறேன், நண்பர்களே.////

    இது பொது விதிதான். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்!

    ReplyDelete
  32. /////Blogger அய்யர் said...
    ///இப்போதுதான் ஒரு சுனாமியில் தத்தளித்துவிட்டு, அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறோம். மீண்டும் ஒரு சுனாமியை எதிர்கொள்ள வேண்டுமா விசுவநாதன்?
    மதம், இனம், ஜாதி இவற்றைப் பற்றிய எந்தக் கட்டுரைக்கும் வகுப்பறையில் இடமில்லை. மன்னிக்கவும்!///
    சுனாமி ஒவ்வொரு முறையும் வராது அல்லவா..
    மேலும் தான் பெற்ற அனுபவத்தினால் பதிவினை அமைப்பவரும் பின்ஊட்டமிட விரும்புபவரும் தன் நிலை அறிந்தே செயல்படுவர்.
    பின் தொடரும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சார்பில் பொறுப்பு ஏற்கிறோம்..
    இனி அந்த நிலை
    இன்னொரு முறை வராது
    அய்யரின் உறுதிப்பாட்டினை தாங்கள் அறிவீர்கள்
    அதனால் தங்கள் முடிவில் மாற்றமும் உங்கள்
    மாணவர்களுக்காக அந்த வாயில் (திறந்து உள்ள) அந்த கதவின் வழி சென்ற வர அனுமதி கோருகிறோம்.
    இந்த வாரத்திற்கான அனுமதி பெற வேண்டி
    இன்று முதல் 5 நாட்கள் கூட்டு பிரார்த்தனையில் ... (விரும்புபவர்கள் கலந்து கொள்ளலாம்)
    ஒரு குழந்தை தவறு செய்து விட்டால் "அம்மாகிட்டே சாரி கேளு" என்று இன்றைய வர்கம் சொல்வது போல்
    எங்கள் காலத்தில்
    ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டால்
    கடவுளிடம் மன்னிப்பு கேள்
    என்று சொல்லுவார்கள்..
    அப்படியே
    இறைவன் திருமுன் வேண்டி நிற்கிறோம்
    இனிமை தரும் அன்பானை வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்...
    பின் தொடரும் 3000க்கும் மேற்பட்ட
    மாணவர்கள் சார்பில்..
    உரிமையுடன் பொறுப்பேற்று ...
    அன்புடன்
    அய்யர்//////

    இது வகுப்பறை!
    பஜனை மடம் அல்ல!
    ஆத்திகர்கள், நாத்திகர்கள், மாற்று மதத்தினர், மாற்று இனத்தினர் என்று பலரும் இங்கே வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆகவே தேவையில்லாத மேட்டர்களை வலை ஏற்றி வகுப்பறையை யுத்த களமாக்க எனக்கு விருப்பமில்லை. எனவே என்னை விட்டுவிடுங்கள் விசுவநாதன். முன்பே சொன்னதுபோல் மதம், இனம், ஜாதி இவற்றைப் பற்றிய எந்தக் கட்டுரைக்கும் வகுப்பறையில் இடமில்லை. மன்னிக்கவும்!

    அதீத விருப்பம் இருந்தால், நீங்களே ஒரு வலைப் பதிவைத் துவங்கி நடத்துங்கள் விசுவநாதன். நண்பன் என்ற முறையில் அதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்.

    ReplyDelete
  33. ///Blogger GAYATHRI said...
    is any exceptions for this Ji?////

    இது பொது விதிதான். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்!

    ReplyDelete
  34. ////Blogger kmr.krishnan said...
    //இனி அந்த நிலை
    இன்னொரு முறை வராது//
    ததாஸ்து!! அமென்!!! அமீன்!!!!= அப்ப‌டியே ஆகட்டும்////

    உங்களின் புதுக் கூட்டணி வாழ்க! வளர்க!

    ReplyDelete
  35. ////Blogger mani said...
    என்னிடம் உள்ள சில ஜாதகத்தில் சொத்தையே (எதில் என்பது உங்களுக்கு புரியும்) இழந்தவருடைய ஜாதகத்தை பார்த்தேன் நீங்கள் சொல்வது மிகச்சரியே.
    அன்புடன்
    பொன்னமராவதி
    மணி///////

    நல்லது.உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. ////Blogger perumal shivan said...
    ellaam avaravar vaangittuvanthavram
    ethula yaarum yaaraiyum thappusollamudiyaathu.
    vithi valiyathu .////

    Yes, nothing is stronger than destiny! Thanks for your comments!

    ReplyDelete
  37. /////Blogger Arul said...
    ஐயா...
    கும்ப மற்றும் சிம்ம லக்னத்திற்கு இவர்கள் (செவ் & சுக்கிரன்) தர்ம கர்மாதிபதி யோகம் தரக்கூடியவர்கள். அப்படி யோகத்தில் அமர்ந்தாலும் ஜாதகன் திரை மறைவில் ஒழுக்க கேடானவனாக இருப்பானா?
    பாடத்திற்கு நன்றி.../////

    யோகம் ஒருபக்கம் அரங்கேறும். ஒழுக்கக்கேடு இன்னொரு பக்கம் அரங்கேறும்! முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு என்று சமயங்களில் திரைக்கு முன்னாலும் நிகழும்!

    ReplyDelete
  38. /////Blogger Rajaram said...
    அய்யா,
    சுக்கிரன்+செவ்வாய் சேர்க்கை அதீதமான காம உணர்வுகளைத் தூண்டும் என்றாலும் அதில் நெறிமுறை தவற பாதிக்கப்பட்ட லக்கினமும்,லக்கினாதிபதியும் காரணமாக இருக்க மாட்டார்களா?.லக்கினம் தானே பிரதானம் நீங்கள் சொல்வது போல் "என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்". உணர்வை வெளிப்படுத்தும் விதம் கொச்சையாக அமைபவர்களுக்கு லக்கினம்,லக்கினாதிபதி,உடன் லக்கினத்தில் அமரும் மற்ற பாவ கிரகங்கள் என அனைவரும் காரணம் ஆகலாம்.எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை இறைவன் யாருக்கும் அளிக்கவில்லை.அது அவனவன் வாங்கி வந்த வரம்./////

    லக்கினாதிபதி வக்கிரகதியில் இருந்தாலும், அல்லது நீசம் பெற்று இருந்தாலும் அல்லது 6,8 அல்லது 12 ம் இடங்களில் இருந்தாலும், அவரால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஆகவே இது பொதுவிதிதான். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களைவைத்துப் பலன்கள் மாறுபடும்!

    ReplyDelete
  39. /////Blogger Rajaram said...
    ////Arul said...
    கும்ப மற்றும் சிம்ம லக்னத்திற்கு இவர்கள் (செவ் & சுக்கிரன்) தர்ம கர்மாதிபதி யோகம் தரக்கூடியவர்கள். அப்படி யோகத்தில் அமர்ந்தாலும் ஜாதகன் திரை மறைவில் ஒழுக்க கேடானவனாக இருப்பானா?////
    இவர்கள் இருவருமே இயற்கையில் பகை கிரகங்கள் அதனால் தர்மகர்மாதிபதி யோகம் பெரிய பிரமாதமாக ஒன்றும் வேலை செய்யாது.தர்மகர்மாதிபதி என்பதற்காக அவர்கள் குணத்தை எல்லாம் மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.அதீத காம உணர்வு இருக்கும்,என்ன ஒன்று இடம்,பொருள்,ஏவல் என ஒரு வரைமுறையை தங்களது ஆதிபத்தியத்திற்காக தருவார்கள்.அவ்வளவு தான்.ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் தான் எப்போதுமே.////

    உங்களின் விளக்கத்திற்கு நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  40. /////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    செவ்வாய் சுக்கிரன் இணைந்து உள்ள இடத்தை குரு அல்லது ஏதேனும் ஒரு சுபர் பார்வை இட்டால் ஜாதகர் அல்லது ஜாதகி தனது ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பார் என்று நம்ப முடியுமா அய்யா? தயவு செய்து விளக்க வேண்டும்.
    அன்புடன்,
    அரசு.////

    அது பொதுவிதிதான். சுபக்கிரகங்கள் ஜாதகனைக் காக்கும் விதமாக ஜாதகத்தில் இருந்தால் நிச்சயம் காப்பாற்றும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com