6.6.12

Mental Health மாயமான் வேட்டை!

 

Mental Health மாயமான் வேட்டை!

மனவளக் கட்டுரை

“If money help a man to do good to others, it is of some value;
but if not, it is simply a mass of evil, and the sooner
it is got rid of, the better.” ---- Swami Vivekananda

பணம் மற்றவர்களுக்கு உதவுவதற்காக எனும்போது அதற்கு மதிப்புண்டு. மகிச்சியுண்டு. தனக்கு மட்டுமே பணம் எனும்போது, தீமைகளின் கூட்டணியோடு அது அவனுக்குக் கிடைக்கும் நல்லவற்றை எல்லாம் அழித்துவிடும்.
- சுவாமி விவேகானந்தா
------------------------------------------------------------------------
மாயமான் வேட்டை.

பணம் என்பது மாயமான். பணத்தைத் தேடி அலைந்தவன் எவனுமே அதைப் பிடித்ததாக வரலாறு இல்லை. அதோடு பல மகிழ்ச்சியான தருணங்களைத் தொடர்ந்து அவன் பறிகொடுக்க நேரிடும்.

மாயமானைத் தேடிப்போன ஸ்ரீராமனின் கதை உங்களுக்குத் தெரியும். தன் அன்பு மனைவி சீதையை அவன் பறிகொடுத்தான். பல போராட்டங்களுக்குப் பிறகு அவளை மீட்டான் என்பது தனிக்கதை. இங்கே அவன் பறிகொடுத்ததை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்.

பணம் வேண்டாமா?
வேண்டும்!
எந்த அளவு?
அந்த அளவுதான் இங்கே மாயமான்!
பணத்திற்கு ஏது அளவு?
அதனால்தான் அது மாயமான் எனப்படுகின்றது!

இன்றையத் தேதியில் ஒரு தனி மனிதனுக்கு 100 கோடி என்பது போதுமானதா இல்லையா? அந்த நூறு கோடி அல்லது அதற்கு அதிகமான பணம் உள்ளவர்கள் நம் நாட்டிலேயே ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். 100லட்சம் கோடிக்கும் மேல் சொத்துள்ள உள்ள செல்வந்தர்களும் பலர் இருக்கிறார்கள். என்னால் பட்டியல் இடமுடியும். அவர்களில் போதும் என்று சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா - சொல்லுங்கள்?

அவர்கள் அததனை பேரும் இன்னும் பணத் தேடலில் உள்ளார்கள். மாயமானைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் Top பணக்கார்கள் என்றில்லை, உலகின் Top பணக்காரர்களையும் எடுத்துக் கொள்ளூங்கள் அவர்களில் யாரும் போதும் என்று சொன்ன பாடில்லை.

குப்பனும் சுப்பனும் ஒன்று போட்டு பக்கத்தில் 3 சைபர்கள் போட்டால் என்ன தொகை வருமோ அதற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொல்லும் பணக்காரர்கள் ஒன்று போட்டு பக்கத்தில் 7 சைபர்கள் அல்லது பத்து சைபர்கள் போட்டால் என்ன தொகை வருமோ அதற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அலைச்சல் ஒன்றுதான்.  சைபர்கள் மட்டும் வேறுபடும்.

தேடுபவர்களுக்கெல்லாம் பணம் கிடைக்குமா? கிடைத்தால், இன்று நீங்களும் நானும்  மட்டுமல்ல, இந்தியாவின் 110 கோடி மக்களும் கோடீஸ்வரர்களாக அல்லவா இருக்க வேண்டும்?

தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்கிறார்களே, இறைவனிடம் கேட்டால் கூட, வருந்திப் பிரார்த்தனை செய்தால்கூடக் கிடைக்காதா?

இறைவன் உங்கள் தேவைகளுக்கு உதவுவார். ஆசைகளுக்கு, உதவ மாட்டார்!

”நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்றார் கவியரசர் கண்ணதாசன்.

நீ நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், அப்புறம் இறைவனுக்கு இங்கே என்ன வேலை? உன ஜாதகத்திற்கு இங்கே என்ன வேலை? நீ வாங்கி வந்த வரம் என்ன ஆவது?

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும்.உனக்குப் பணம் வரவேண்டும் என்றால் வரும். இல்லையென்றால் இல்லை.உன் கையில் பணம் தங்க வேண்டுமென்றால் தங்கும். இல்லையென்றால் இல்லை!

உன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும் பணம் போய்விடும்! வேலியிட்டுத்  தடுத்தாலும் அது நிற்காது. கையில் AK47 உடன் காவலாளியைப் போட்டுப் பாதுகாத்தாலும் அது நிற்காது. காவலாளியை ஒரே மிதியாக மிதித்துவிட்டு அது
போய்விடும்.

ஏன் அப்படி?

அதுதான் விதி. விதிக்கப்பெற்றது.

சரி, உங்களுக்கும் கோடீஸ்வரனுக்கும் என்ன வித்தியாசம்?

சரக்கடிக்கப் பையில் இருநூறு ரூபாயை வைத்துக் கொண்டு, பாருக்கு நீங்கள் போக வேண்டும். அவன் வீட்டிலேயே பார் (Bar) வைத்திருப்பான். அவன் 40 லட்ச ருபாய் மதிப்புள்ள பென்ஸ் காரில் போவான். நீங்கள் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வோல்வோ பஸ்சில் போவீர்கள்.

அவன் இரண்டாயிரம் செலவில் ஸ்டார் ஓட்டலில் இரவு டின்னரை வெட்டுவான். நீங்கள் ரோடுசைடு கையேந்தி பவனில் 50 ருபாய்க்கு வயிறு முட்டச் சாப்பிடுவீர்கள்.

தொண்டையைக் கடந்துவிட்டால் எல்லா உணவும் ஒன்றுதான். அதை நினைவில் வையுங்கள்!

ஏஸி இல்லாமல் அவனுக்குத் தூக்கம் வராது. பாயின்றி, வெறும் தரையில் கூட உங்களால் தூங்க முடியும். உங்களுக்குச் சேவை செய்ய அன்பான மனைவி இருப்பாள். அவனுடைய மனைவியை மாதர் சங்கம், அரிமா சங்கம், லோனவானா கிளப் போன்ற அமைப்புக்களில்தான் தேட வேண்டும்.

பணம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா?
கையில் தங்குமா அல்லது தங்காதா?

மாயமான் வேண்டாம்.
மாங்கனி போதும்.
அதாவது கிடைக்குமா? அல்லது கிடைக்காதா?

வாழ்க்கையில் நல்ல தாய் கிடைக்கவில்லை.
நல்ல மனைவி கிடைக்கவில்லை.
நல்ல வேலையும் கிடைக்கவில்லை.
அது ஏன்? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது.
அதுதான் வாழ்க்கை!
அதுதான் வாங்கி வந்த வரம்!

வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
நம்மால் செய்யக்கூடியதும் அதுதான்!

அன்புடன்
வாத்தியார்


Mental health describes a level of psychological well-being, or an absence of a mental disorder.[1][2] From the perspective of 'positive psychology' or 'holism', mental health may include an individual's ability to enjoy life, and create a balance between life activities and efforts to achieve psychological resilience.[1] Mental health can also be defined as an expression of emotions, and as signifying a successful adaptation to a range of demands.
நன்றி: விக்கிபீடியா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

37 comments:

  1. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று
    நினைத்து மனிதன் அப்படியே இருந்து விட்டால்
    பிரச்சனை எதுவும் கிடையாது.ஆனால் எனது
    பொருள் எனது சொத்து,எனது எனது என்று
    மனிதன் ஆசைகளை வளர்த்து கொண்டு அலைகிறான்.

    ஆசை என்பது இறைவன் கொடுக்கவில்லை
    மனிதனாக வளர்த்து கொண்ட விபரீத குணம் அது.

    ஆசைகளை வளர்த்துக் கொள்வதும் அதை
    நிறைவேற்றிக் கொள்வதற்காக அலைவதும் அதில்
    கர்ம வினைகளை சேர்த்து கொள்வதும் முழுக்க
    முழுக்க மனிதனின் செயலாகும்.

    மனிதன் என்பவன் முதல் முதலில் ஒரறிவு
    உயிரினமாகத்தான் தோன்றுகிறான்.பிறகு
    படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாகிறன்.
    புல்லாகிப் பூண்டாகி ஊர்வனவாய்
    பறப்பனவாய்
    சில பிறவிகளை இடையில் கழிக்கிறான்.

    அந்த பிறவிகளில் கர்மவினை என்று
    பெரியதாக எதுவுமில்லை.அதனால் வேதனையும்
    அதிகமில்லை.உணவுக்காக அலைகிறான்.
    தேடுகின்றான்.கிடைத்தால் உண்கிறான்.
    இல்லாவிட்டால் பட்டினி கிடக்கிறான்.உணவுக்காக
    சண்டை நடப்பதுண்டு.ஆனால் அதில் சூதுவாது
    எதுவும் கிடையாது.வஞ்சம் பழிதீர்த்தல்
    போன்றவை கிடையாது.பசி தீர்ந்தால் எல்லாம்
    தீர்ந்துவிடும்.

    இப்படி இருந்த ஆன்மா முன்னேற வேண்டும்
    என்பதற்காகவே இறைவன் ஆறாவது அறிவைக் கொடுத்தான்.

    ''இந்த அறிவு கொடுக்கப்பட்டதே இறைவனை
    நாம் உணரவேண்டும் என்பதற்காகத்தான்''

    ஆனால் ஆறாவது அறிவு வந்ததும் மனிதனுக்கு
    ஆசை என்பது ஆரம்பித்து விடுகிறது.
    இந்த இடத்தில் தான் கர்ம வினையும் தொடங்குகிறது.

    ஆறாவது அறிவு என்பது இறைவன் நமக்கிட்ட வரம்.
    அதை தவறாக உபயோகித்து ஆசைகளை
    வளர்த்து கொள்வது மனிதனின் பாவம்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  2. இந்த மாயமான் வேட்டையில் அதிகம் சிக்கித் தவிப்பது மத்திய வகுப்பினரே!

    ஆசை இருக்கலாம்..அதுவே லட்சியத்திற்கு அடிப்படை..லட்சியம் என்பது அடையக்கூடிய இலக்காக இருக்க வேண்டும்..அடைய முடியாத இலக்கே பேராசை எனப்படும்..பேராசையின் அடிப்படை பொறாமை..அதற்கு மருந்து காலமே!

    சிந்திக்க வைக்கும் கட்டுரையைத் தந்த ஐயாவிற்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. பணம், பதவி போன்ற மாயமான்களை தேடும் பயணம் இலக்கை அடையாது.... இறைவனை நோக்கி செல்லும் பயணம், இலக்கை (இறைவனை) அடைந்த பின்னர் தொடராது...

    இதைத்தான் கண்ணதாசன் சொன்னாரோ?

    "முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினேலே...
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே... "

    ReplyDelete
  4. "ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி
    ஆளினும் கடல்மீதினிலே
    ஆணை செலவே நினைவர் அழகேசன் நிகராக
    அம்பொன் மிக வைத்த பேரும்
    நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர்
    நெடுநாள் இருந்த பேரும்
    நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
    நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
    யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
    உறங்குவதுமாக முடியும்
    உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
    ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
    பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற
    பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூரண ஆனந்தமே."

    என்ற தாயுமானவ சுவாமிகள் திருவாக்கினை நினைவுபடுத்திய மிக அற்புதமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து'
    என்னும் அறிவுரையைப் பின்பற்றினால் வாழ்வில் நிம்மதி நிச்சயம் என்பதைத்
    தெளிவாக உணர்த்தும் பதிவு. மிக்க நன்றி

    ReplyDelete
  5. மிகவும் அற்புதமானக் கட்டுரை....

    ''கையில் கொஞ்சம் காசிருந்தால்
    நீதான் அதற்கு முதலாளி
    கழுத்துவரைக்கும் காசிருந்தால்
    அது தான் உனக்கு முதலாளி''
    என்ற வாலியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. தாங்கள் கூறியது போல் பணம் தேடுவதையே குறியாகக் கொண்டு கோடீஸ்வரர்களான பெரும்பாலானோரும் இன்னமும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் மற்ற அனைத்தையும் இழந்து அதையேத் தேடிக் கொண்டும் இருக்கிறார்கள். முக்கியமாக புண்ணியத்தை தேடுவதை மறந்தே போய்விட்டார்கள். மாறாக பாவக் கணக்கும் ஏறுகிறது.

    இந்தியாவில் இருக்கும் ஒரு பெரிய சமீபத்திய பணக்காரர் ஒருவரின் ஆரம்ப கால கதை ஒன்றை சமீபத்தில் கேட்டேன்... என்னத்த சொல்றது என்றேத் தோன்றியது..

    அவர் என்ன செய்து இருக்கிறார் இந்திய பழைய ஒரு ரூபாய் நாணயத்தை மக்களிடம் கொஞ்ச கூடுதல் விலைக்குப் பெற்றுக் கொண்டு அதில் இருக்கும் மற்ற உலோகங்களை பிரித்து அதை அப்போதைய சந்தை விலைக்கு விற்று பெரும் பணம் பார்த்து இருக்கிறார்.

    அவரே... நமது இந்திரா அம்மையார் இறந்த பிறகு... ராஜீவ் அவர்கள் பிரதமரான போது... அவரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறார் அது கிடைக்காது மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஒரு நாள் ராஜீவ் அவர்கள் மதிய உணவு முடித்து தனது அறைக்கு செல்லும் தூரத்தில் இருக்கும் இரண்டு மணித் துளிகள் தான் இவருக்கு பார்வை நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது... இவர் அவரிடம். வணக்கம் தெரிவித்து... தங்களின் தாயார் இறப்பதற்கு முன்பு ஒரு பதினெட்டு கோடி பணம் தந்து இருந்தார்கள் அதை நான் தங்களிடம் திருப்பித் தரவேண்டும் அதை எப்படி தரவேண்டும் என்று மாத்திரமே கூறினாராம்... இப்போது யார் பின்பு யார் செல்வது. அது போகட்டும் பிறகு அந்த பெரும் பணக்காரர் அரசில் பெரும் குத்தகைக்காரராக இருந்து.. இன்று சினிமாவில் அவர் பெயரே தலைப்பிட்டு வெளி வரும் அளவிற்கு பெரிய மில்லியனர்.

    இங்கு சீனர்களிடம் ஒரு பழமொழி இருக்கிறது.. ''கொள்ளையடிக்காமல் கோடீஸ்வரனாக முடியாது'' என்பது தான் அது.

    இறைவன் அருளால் நல்ல வழியில் மிகுந்த பணம் கிடைத்த வெகு சிலரே மீண்டும் அதை மக்களுக்கே கொண்டு சேர்கிறார்கள்..
    அப்படிப் பட்டவர்களின் செல்வமே ''ஊருணி சேர்ந்த நீராகிறது''

    நல்ல மனவளக் கட்டுரை ஐயா... பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. This is very apt article for todays generation.
    My father used to earn money for his family,but nowadays,the YOUNG GENERATION is working very hard only to pay EMI's to banks and not for themselves nor for their family.

    Enna vazhgada ithuu !!!


    Thanks
    Rathinavel.C

    ReplyDelete
  7. கடற் பயணத்திற்கு தண்ணீர் தேவையே
    தண்ணீர் தேவை என்பதற்காக

    கடல் நீரை கப்பலுக்குள் வைத்துக் கொண்டால்
    கடல் பயணம் கவலையில் முடியும்..

    அது போல வாழ்க்கை எனும் பயணத்திற்கு பணம் தேவையே..

    பணமே வாழ்க்கை என்றால் வாழ்க்கை பயணம் விபரீதமாக போய்விடும்

    "தங்க"மகன்களுக்கு தந்த
    தகவல்களை மதித்து வணங்குகிறோம்

    சுழலவிட பாடல் இருந்தும்
    அமைதியான வணக்கங்களுடன்

    ReplyDelete
  8. /// Bhogar said...
    ஆசை என்பது இறைவன் கொடுக்கவில்லை
    மனிதனாக வளர்த்து கொண்ட விபரீத குணம் அது./////


    சபாஷ்...
    சரியான விளக்கம்

    வரிக்கு வரி..
    அசத்துகிறீர்கள்..

    ஆனால் பின்பகுதியில்
    சிறு இடறல்...
    (மனிதன் என்பதற்கு பதில் உயிர்கள் என சொல்லி இருக்கலாம்)

    ///மனிதன் என்பவன் முதல் முதலில் ஒரறிவு உயிரினமாகத்தான் ///

    அன்பு வணக்கங்களடன் வாழ்த்துக்களை
    அள்ளித் தந்தபடியே..

    ReplyDelete
  9. குருவிற்கு வணக்கம்
    மாயமான் வேட்டை
    பதிவு "அதிக ஆசைப்பாடல்" "விரலுக்ஏற்ற வீக்கம்"
    இருப்பதை வைத்து மகிழ்ச்சியக வாழலாம்

    என்ற கருத்தினை தெளிவுப்படுத்துகிறது.
    (எல்லேருக்கும் ஆசை அதிகம் தான்)
    நன்றி

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது மனவளக் கட்டுரைகள் ஐயா.
    அழகிய படம், ஆனாலும் சீதையின் படத்தைப் பார்த்தவுடன், மீண்டும் சீதையா? என அரண்டு போய்விட்டேன் என்பதே உண்மை.
    பிறகு பாட்டுடைத் தலைவி மாயமான் என்று தெரிந்ததும் நிம்மதி வந்தது.

    வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் உள்ள வித்தியாசம் புரியாததால் வரும் குழப்பமே மாயமான் வேட்டைக்கு காரணாம்.
    ஆனானப்பட்ட கடவுள் அவதாரத்திற்கே மாயமான் தனக்குத் தேவையா எனத் தோன்றாமல் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேடி அலைந்து துன்பத்தில் விழுந்து வருந்திய பொழுது நாமெல்லாம் எந்த மூலைக்கு?

    "பணம் வேண்டாமா?
    வேண்டும்!
    எந்த அளவு?
    அந்த அளவுதான் இங்கே மாயமான்!
    பணத்திற்கு ஏது அளவு?
    அதனால்தான் அது மாயமான் எனப்படுகின்றது!"

    என்ற வரிகள் அருமையாக கட்டுரையையை சுருக்கமாக எளிதில் புரியும் வண்ணம் சொல்லிவிட்டது. ஐயா வாரம் ஒரு மனவளக் கட்டுரை எழுதக் கூடாதா?

    ReplyDelete
  11. நம்மிடம் உல்லதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்த்தாளூம் நம்மிடம் இல்லாததை சுட்டி காட்டி நம்மை நோக அடிக்கிரர்கல்.

    Life has become a race running for the money. We struck at middle, not possible of going back or reaching the destination.

    It is true, we forget to enjoy the life.

    ReplyDelete
  12. நம்மிடம் உல்லதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்த்தாளூம் நம்மிடம் இல்லாததை சுட்டி காட்டி நம்மை நோக அடிக்கிரர்கல்.

    Life has become a race running for the money. We struck at middle, not possible of going back or reaching the destination.

    It is true, we forget to enjoy the life.

    ReplyDelete
  13. Dear sir,
    Ambition is important -with out Ambition life is nothing For Example " One want to become a saint also, he has to plan & work to become a saint. a] he has to find a place,find a guru , practising of good habits and leaving bad habits.so one has to work in any form even if one wants to sit idle also he has to work,, How ?
    " Nothing in our hand as said by Subbaiah teacher" However one has to move along with world or otherwise thrill of the world will not be there
    so Moral of the story " let the world move on as it is and let us move along with world and let me enjoy all the post & comments"
    Thanks to classroom & Teacher and all people who has commented.

    ReplyDelete
  14. /////Blogger Bhogar said...
    அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று
    நினைத்து மனிதன் அப்படியே இருந்து விட்டால்
    பிரச்சனை எதுவும் கிடையாது.ஆனால் எனது
    பொருள் எனது சொத்து,எனது எனது என்று
    மனிதன் ஆசைகளை வளர்த்து கொண்டு அலைகிறான்.
    ஆசை என்பது இறைவன் கொடுக்கவில்லை
    மனிதனாக வளர்த்து கொண்ட விபரீத குணம் அது.
    ஆசைகளை வளர்த்துக் கொள்வதும் அதை
    நிறைவேற்றிக் கொள்வதற்காக அலைவதும் அதில்
    கர்ம வினைகளை சேர்த்து கொள்வதும் முழுக்க
    முழுக்க மனிதனின் செயலாகும்.
    மனிதன் என்பவன் முதல் முதலில் ஒரறிவு
    உயிரினமாகத்தான் தோன்றுகிறான்.பிறகு
    படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாகிறன்.
    புல்லாகிப் பூண்டாகி ஊர்வனவாய் பறப்பனவாய்
    சில பிறவிகளை இடையில் கழிக்கிறான்.
    அந்த பிறவிகளில் கர்மவினை என்று
    பெரியதாக எதுவுமில்லை.அதனால் வேதனையும்
    அதிகமில்லை.உணவுக்காக அலைகிறான்.
    தேடுகின்றான்.கிடைத்தால் உண்கிறான்.
    இல்லாவிட்டால் பட்டினி கிடக்கிறான்.உணவுக்காக
    சண்டை நடப்பதுண்டு.ஆனால் அதில் சூதுவாது
    எதுவும் கிடையாது.வஞ்சம் பழிதீர்த்தல்
    போன்றவை கிடையாது.பசி தீர்ந்தால் எல்லாம்
    தீர்ந்துவிடும்.
    இப்படி இருந்த ஆன்மா முன்னேற வேண்டும்
    என்பதற்காகவே இறைவன் ஆறாவது அறிவைக் கொடுத்தான்.
    ''இந்த அறிவு கொடுக்கப்பட்டதே இறைவனை
    நாம் உணரவேண்டும் என்பதற்காகத்தான்''
    ஆனால் ஆறாவது அறிவு வந்ததும் மனிதனுக்கு
    ஆசை என்பது ஆரம்பித்து விடுகிறது.
    இந்த இடத்தில் தான் கர்ம வினையும் தொடங்குகிறது.
    ஆறாவது அறிவு என்பது இறைவன் நமக்கிட்ட வரம்.
    அதை தவறாக உபயோகித்து ஆசைகளை
    வளர்த்து கொள்வது மனிதனின் பாவம்.
    ஓம் சரவணபவ நம////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!! உங்களைப் பற்றி எழுதுங்கள் (மின்னஞ்சலில்) எந்த ஊரில் இருக்கிறீர்கள்? என்ன பணி செய்கின்றீர்கள்? பழநி முருகனைப் பிரதிஷ்டை செய்த போகர் மாமுனியின் பெயரைப் புனைப் பெயராகக் கொண்ட நோக்கம் என்ன?

    ReplyDelete
  15. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    இந்த மாயமான் வேட்டையில் அதிகம் சிக்கித் தவிப்பது மத்திய வகுப்பினரே!
    ஆசை இருக்கலாம்..அதுவே லட்சியத்திற்கு அடிப்படை..லட்சியம் என்பது அடையக்கூடிய இலக்காக இருக்க

    வேண்டும்..அடைய முடியாத இலக்கே பேராசை எனப்படும்..பேராசையின் அடிப்படை பொறாமை..அதற்கு மருந்து காலமே!
    சிந்திக்க வைக்கும் கட்டுரையைத் தந்த ஐயாவிற்கு நன்றிகள்!/////

    உண்மைதான். தேடிக்குவித்த செல்வத்தால், இறுதியில், பயனில்லை என்பதை காலதேவன் அனைவருக்கும் ஒரு நாள் உணரவைப்பான்! நன்றி!

    ReplyDelete
  16. ////Blogger மகேஸ்வரன் said...
    பணம், பதவி போன்ற மாயமான்களை தேடும் பயணம் இலக்கை அடையாது.... இறைவனை நோக்கி செல்லும் பயணம்,

    இலக்கை (இறைவனை) அடைந்த பின்னர் தொடராது...
    இதைத்தான் கண்ணதாசன் சொன்னாரோ?
    "முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினேலே...
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே... "/////

    பணத்தேடலுக்கு மட்டும் அல்ல - மொத்த வாழ்க்கைக்கும் சேர்த்துத்தான் அந்த வரிகள் சொல்லப்பட்டுள்ளன!!

    ReplyDelete
  17. //////Blogger Parvathy Ramachandran said...
    "ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி
    ஆளினும் கடல்மீதினிலே
    ஆணை செலவே நினைவர் அழகேசன் நிகராக
    அம்பொன் மிக வைத்த பேரும்
    நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர்
    நெடுநாள் இருந்த பேரும்
    நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
    நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
    யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
    உறங்குவதுமாக முடியும்
    உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
    ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
    பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற
    பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூரண ஆனந்தமே."
    என்ற தாயுமானவ சுவாமிகள் திருவாக்கினை நினைவுபடுத்திய மிக அற்புதமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. 'போதுமென்ற

    மனமே பொன் செய்யும் மருந்து'
    என்னும் அறிவுரையைப் பின்பற்றினால் வாழ்வில் நிம்மதி நிச்சயம் என்பதைத்
    தெளிவாக உணர்த்தும் பதிவு. மிக்க நன்றி///////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும், தாயுமானவ சுவாமிகளின் பாடல் வரிகளுக்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. //////Blogger ஜி ஆலாசியம் said...
    மிகவும் அற்புதமானக் கட்டுரை....
    ''கையில் கொஞ்சம் காசிருந்தால்
    நீதான் அதற்கு முதலாளி
    கழுத்துவரைக்கும் காசிருந்தால்
    அது தான் உனக்கு முதலாளி''
    என்ற வாலியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. தாங்கள் கூறியது போல் பணம் தேடுவதையே குறியாகக் கொண்டு கோடீஸ்வரர்களான பெரும்பாலானோரும் இன்னமும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் மற்ற அனைத்தையும் இழந்து அதையேத் தேடிக் கொண்டும் இருக்கிறார்கள். முக்கியமாக புண்ணியத்தை தேடுவதை மறந்தே
    போய்விட்டார்கள். மாறாக பாவக் கணக்கும் ஏறுகிறது.
    இந்தியாவில் இருக்கும் ஒரு பெரிய சமீபத்திய பணக்காரர் ஒருவரின் ஆரம்ப கால கதை ஒன்றை சமீபத்தில் கேட்டேன்...
    என்னத்த சொல்றது என்றேத் தோன்றியது..
    அவர் என்ன செய்து இருக்கிறார் இந்திய பழைய ஒரு ரூபாய் நாணயத்தை மக்களிடம் கொஞ்ச கூடுதல் விலைக்குப் பெற்றுக் கொண்டு அதில் இருக்கும் மற்ற உலோகங்களை பிரித்து அதை அப்போதைய சந்தை விலைக்கு விற்று பெரும் பணம் பார்த்து இருக்கிறார்.
    அவரே... நமது இந்திரா அம்மையார் இறந்த பிறகு... ராஜீவ் அவர்கள் பிரதமரான போது... அவரை சந்திக்க நேரம் கேட்டு
    இருக்கிறார் அது கிடைக்காது மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஒரு நாள் ராஜீவ் அவர்கள் மதிய உணவு முடித்து தனது அறைக்கு செல்லும் தூரத்தில் இருக்கும் இரண்டு மணித் துளிகள் தான் இவருக்கு பார்வை நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது... இவர் அவரிடம். வணக்கம் தெரிவித்து... தங்களின் தாயார் இறப்பதற்கு முன்பு ஒரு பதினெட்டு கோடி பணம் தந்து இருந்தார்கள் அதை நான்
    தங்களிடம் திருப்பித் தரவேண்டும் அதை எப்படி தரவேண்டும் என்று மாத்திரமே கூறினாராம்... இப்போது யார் பின்பு யார் செல்வது. அது போகட்டும் பிறகு அந்த பெரும் பணக்காரர் அரசில் பெரும் குத்தகைக்காரராக இருந்து.. இன்று சினிமாவில் அவர் பெயரே தலைப்பிட்டு வெளி வரும் அளவிற்கு பெரிய மில்லியனர்.
    இங்கு சீனர்களிடம் ஒரு பழமொழி இருக்கிறது.. ''கொள்ளையடிக்காமல் கோடீஸ்வரனாக முடியாது'' என்பது தான் அது.
    இறைவன் அருளால் நல்ல வழியில் மிகுந்த பணம் கிடைத்த வெகு சிலரே மீண்டும் அதை மக்களுக்கே கொண்டு
    சேர்கிறார்கள்..
    அப்படிப் பட்டவர்களின் செல்வமே ''ஊருணி சேர்ந்த நீராகிறது''
    நல்ல மனவளக் கட்டுரை ஐயா... பகிர்வுக்கு நன்றிகள்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  19. //////Blogger Rathinavel.C said...
    This is very apt article for todays generation.
    My father used to earn money for his family,but nowadays,the YOUNG GENERATION is working very hard only to pay EMI's to banks and not for themselves nor for their family.
    Enna vazhgada ithuu
    Thanks
    Rathinavel.C////

    முதலில் கடன் அட்டையைச் சொல்லுங்கள். ஆண்டிற்கு 36% வட்டி!

    ReplyDelete
  20. /////Blogger அய்யர் said...
    கடற் பயணத்திற்கு தண்ணீர் தேவையே
    தண்ணீர் தேவை என்பதற்காக
    கடல் நீரை கப்பலுக்குள் வைத்துக் கொண்டால்
    கடல் பயணம் கவலையில் முடியும்..
    அது போல வாழ்க்கை எனும் பயணத்திற்கு பணம் தேவையே..
    பணமே வாழ்க்கை என்றால் வாழ்க்கை பயணம் விபரீதமாக போய்விடும்
    "தங்க"மகன்களுக்கு தந்த
    தகவல்களை மதித்து வணங்குகிறோம்
    சுழலவிட பாடல் இருந்தும்
    அமைதியான வணக்கங்களுடன்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  21. //////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    மாயமான் வேட்டை
    பதிவு "அதிக ஆசைப்பாடல்" "விரலுக்ஏற்ற வீக்கம்"
    இருப்பதை வைத்து மகிழ்ச்சியக வாழலாம்
    என்ற கருத்தினை தெளிவுப்படுத்துகிறது.
    (எல்லேருக்கும் ஆசை அதிகம் தான்)
    நன்றி/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////Blogger தேமொழி said...
    உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது மனவளக் கட்டுரைகள் ஐயா.
    அழகிய படம், ஆனாலும் சீதையின் படத்தைப் பார்த்தவுடன், மீண்டும் சீதையா? என அரண்டு போய்விட்டேன் என்பதே
    உண்மை.
    பிறகு பாட்டுடைத் தலைவி மாயமான் என்று தெரிந்ததும் நிம்மதி வந்தது.
    வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் உள்ள வித்தியாசம் புரியாததால் வரும் குழப்பமே மாயமான்
    வேட்டைக்கு காரணாம்.
    ஆனானப்பட்ட கடவுள் அவதாரத்திற்கே மாயமான் தனக்குத் தேவையா எனத் தோன்றாமல் விருப்பத்திற்கு முக்கியத்துவம்
    கொடுத்து தேடி அலைந்து துன்பத்தில் விழுந்து வருந்திய பொழுது நாமெல்லாம் எந்த மூலைக்கு?
    /////"பணம் வேண்டாமா?
    வேண்டும்!
    எந்த அளவு?
    அந்த அளவுதான் இங்கே மாயமான்!
    பணத்திற்கு ஏது அளவு?
    அதனால்தான் அது மாயமான் எனப்படுகின்றது!"/////
    என்ற வரிகள் அருமையாக கட்டுரையையை சுருக்கமாக எளிதில் புரியும் வண்ணம் சொல்லிவிட்டது. ஐயா வாரம் ஒரு மனவளக் கட்டுரை எழுதக் கூடாதா?//////

    எனது சிறுகதைகளும் மன வளத்திற்காக எழுதப்படுபவைதான். என்ன கதை வடிவில் இருக்கும். வட்டார வழக்கில் இருக்கும்.
    உங்கள் விருப்பப்படி முடிந்த போதெல்லாம் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) மனவளக் கட்டுரைகளையும் எழுதுகிறேன் சகோதரி!

    ReplyDelete
  23. //////Blogger GAYATHRI said...
    நம்மிடம் உல்லதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்த்தாளூம் நம்மிடம் இல்லாததை சுட்டி காட்டி நம்மை நோக அடிக்கிறார்கள்.
    Life has become a race running for the money. We struck at middle, not possible of going back or reaching the destination. It is true, we forget to enjoy the life.////

    நல்லது. உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. /////Blogger seenivasan said...
    Dear sir,
    Ambition is important -with out Ambition life is nothing For Example " One want to become a saint also, he has to plan &
    work to become a saint. a] he has to find a place,find a guru , practising of good habits and leaving bad habits.so one has
    to work in any form even if one wants to sit idle also he has to work,, How ?
    " Nothing in our hand as said by Subbaiah teacher" However one has to move along with world or otherwise thrill of the
    world will not be there
    so Moral of the story " let the world move on as it is and let us move along with world and let me enjoy all the post &
    comments"
    Thanks to classroom & Teacher and all people who has commented./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டுமென்று குறிக்கோள் வைத்து சம்பாதிக்க முயன்றால் அதை அடைய முடிவது கடினம். நமக்குத் தெரிந்த தொழிலை சிறப்பாகச் செய்தால் பணம் தானாக வருகிறது.

    பணக்காரனாக வேண்டும் என்ற குறிக்கோள் இருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரன் ஆவதில்லை. தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி திறமையை வளர்த்துக் கொள்பவர்கள்தான் பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள்.

    நான் மேலே சொன்னது நேர்மையான முறையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

    ReplyDelete
  27. நல்ல மன நலக் கட்டுரை ஐயா!

    "ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி ஆளினும் கடல் மீது ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்தபேரும்..
    ............ யோசிக்கும் வேளையில் பசி ஆற உண்பதும் உறங்குவதுமாக முடியும்....."(தயுமானவர்){அளகேசன்=குபேரன்;அம்பொன்=தங்க நாணயம்}

    சாப்பாடு ஒன்றைத் தவிர மற்றது எதையும் போதும் என்று யாரும் சொல்வதில்லை.அதிலும் கூட 4 நாட்கள் சேர்ந்தார்ப் போல விருந்து சாப்பிட்டால் 5ம் நாளன்று வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமும் போதும் என்று தோன்றிவிடும்.

    நல்ல பசி, நல்லதூக்கம், ஆரோக்கியமான உடல், புரிதலுடன் மனைவி, அனுசரணையான குழந்தைகள்(மருமகள்), சொத்துச் சண்டையிடாத சகோதரம் இவைதான் செல்வம். நாசிக்கில் அச்சடிக்கும் நோட்டால் என்ன பயன்?

    ReplyDelete
  28. 11 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல வார இதழின் சிறப்பு மலரில் சிறு கட்டுரை ஒன்று படித்தேன்.

    நம் நாட்டில் உள்ள வளங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை கோடி மக்கள் பிறந்தாலும் அனைவரின் தேவையையும் நிறைவேற்றும். ஆனால் இவற்றால் ஒரே ஒரு மனிதனின் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாது.-எவ்வளவு பெரிய உண்மை.

    இதை சொன்னவர் காந்தி. ஆண்டு 1910களில்.

    ReplyDelete
  29. //////Blogger Jagannath said...
    இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டுமென்று குறிக்கோள் வைத்து சம்பாதிக்க முயன்றால் அதை அடைய முடிவது கடினம். நமக்குத் தெரிந்த தொழிலை சிறப்பாகச் செய்தால் பணம் தானாக வருகிறது.
    பணக்காரனாக வேண்டும் என்ற குறிக்கோள் இருப்பவர்கள் பெரும்பாலும் பணக்காரன் ஆவதில்லை. தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி திறமையை வளர்த்துக் கொள்பவர்கள்தான் பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள்.
    நான் மேலே சொன்னது நேர்மையான முறையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.////

    நேர்மையா? பத்து சதவிகித மக்கள்கூட தேறமாட்டார்கள்!

    ReplyDelete
  30. ////Blogger kmr.krishnan said...
    நல்ல மன நலக் கட்டுரை ஐயா!
    "ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி ஆளினும் கடல் மீது ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்தபேரும்..
    ............ யோசிக்கும் வேளையில் பசி ஆற உண்பதும் உறங்குவதுமாக முடியும்....."(தயுமானவர்){அளகேசன்=குபேரன்;அம்பொன்=தங்க நாணயம்}
    சாப்பாடு ஒன்றைத் தவிர மற்றது எதையும் போதும் என்று யாரும் சொல்வதில்லை.அதிலும் கூட 4 நாட்கள் சேர்ந்தார்ப் போல விருந்து சாப்பிட்டால் 5ம் நாளன்று வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமும் போதும் என்று தோன்றிவிடும்.
    நல்ல பசி, நல்லதூக்கம், ஆரோக்கியமான உடல், புரிதலுடன் மனைவி, அனுசரணையான குழந்தைகள்(மருமகள்), சொத்துச் சண்டையிடாத சகோதரம் இவைதான் செல்வம். நாசிக்கில் அச்சடிக்கும் நோட்டால் என்ன பயன்?////

    90 சதவிகித மக்கள் அதை உணரவில்லை! அதுதான் சோகம்! பல சீரழிவுகளுக்குக் காரணம்!

    ReplyDelete
  31. /////Blogger சரண் said...
    11 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல வார இதழின் சிறப்பு மலரில் சிறு கட்டுரை ஒன்று படித்தேன்.
    நம் நாட்டில் உள்ள வளங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை கோடி மக்கள் பிறந்தாலும் அனைவரின் தேவையையும் நிறைவேற்றும். ஆனால் இவற்றால் ஒரே ஒரு மனிதனின் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாது.-எவ்வளவு பெரிய உண்மை.
    இதை சொன்னவர் காந்தி. ஆண்டு 1910களில்./////

    அவர் சொன்னது எதையுமே நாம் செய்யவில்லை. சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடச் சொன்னார். எதற்காகச் சொன்னார் என்பது இப்போது தெரிகிறதல்லவா?

    ReplyDelete
  32. மனவளர் கட்டுரை எனக்கு மிக அதிகம் பிடிக்கும்.ஆனால் மிக தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளேன்.
    நல்ல கட்டுரை, தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகள் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் அய்யா.

    வரும்போது ஏதும் கொண்டுவருவதில்லை, போகையில் ஏதும் கொண்டு செல்வதுமில்லை இதனை கண்ணாரக்கண்டும் அவன் மனம் மாறுவதில்லை.
    மனிதன் பிணம் ஆன பின்பும் பணம் தான் அவன் பெருமையை பேசும் எனும் நினைவிலேயே ஒரு கூட்டம் இருக்கிறது.அதனால் இந்த மாயமான் செய்யும்
    மாயம்தான் எத்தனை எத்தனை.இதை இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு சேர்த்தால் சரி எனலாம். கஷ்டப்படாமல் இஷ்டப்பட்டதை சேர்க துடிக்கையில் தான் என்ன சொல்வது.
    புத்தர் தான் நினைவுக்கு வருகிறார்.

    ReplyDelete
  33. ///Blogger thanusu said...
    மனவளர் கட்டுரை எனக்கு மிக அதிகம் பிடிக்கும்.ஆனால் மிக தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளேன்.
    நல்ல கட்டுரை, தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகள் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் அய்யா.
    வரும்போது ஏதும் கொண்டுவருவதில்லை, போகையில் ஏதும் கொண்டு செல்வதுமில்லை இதனை கண்ணாரக்கண்டும் அவன் மனம் மாறுவதில்லை.
    மனிதன் பிணம் ஆன பின்பும் பணம் தான் அவன் பெருமையை பேசும் எனும் நினைவிலேயே ஒரு கூட்டம் இருக்கிறது.அதனால் இந்த மாயமான் செய்யும்
    மாயம்தான் எத்தனை எத்தனை.இதை இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு சேர்த்தால் சரி எனலாம். கஷ்டப்படாமல் இஷ்டப்பட்டதை சேர்க துடிக்கையில் தான் என்ன சொல்வது.
    புத்தர் தான் நினைவுக்கு வருகிறார்.///

    மனவளக்கட்டுரைகளை எழுதுவதில் எனக்கும் ஆர்வம் அதிகமாக உண்டு. நேரமின்மை காரணமாக அடிக்கடி எழுதமுடிவதில்லை. முடிந்தவரை தொடர்ந்து எழுதுகிறேன். உங்களின் விருப்பத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  34. வாத்தியார் ஐயா வணக்கம்.

    நம்மலுடைய இதிகாசம் ஆன இராமாயணமும் , மகா பாரதத்தின் கதாநாயகர்கள் வனவாசம் ஆன பதினான்கு வருடத்தை எப்படி தான் களித்தார்களோ ஐயா!

    முட்டை இடும் கோழிக்குதான் குண்டி வலி தெரியும் என்பார்கள் .

    ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட ஒரு கதையாக அவர்கள் பிறந்து வளர்ந்த விதத்தை அவர்கள் வாழ்ந்த இடத்தில இருந்து பாருங்கள் அப்பொழுது தான் அவர்கள் பட்ட வேதனை என்னவாக இருக்கும் என்பது புரிய வரும் .

    தன்னுடைய துணையாள் கூட பதினான்கு வருடம் eppadi thaan களித்தார்களே loo.

    அவர்களின் வேதனை என்னவாக இருந்து இருக்கும் . கொஞ்சம் அவர்களின் ய்யோசித்து பாருங்கள் வேதனை என்ன வென்று தெரிய வரும்.

    எதற்கு நான் இங்கு கூற வருகின்றேன் என்றால் அடியவனும் இன்றைய தினத்தில் வரைக்கு 14 வருடம் ஆகி விட்டது வனவாசம் கூட இல்லை ஐயா ! பரதேசம் கிளம்பி ஐயா! . மிகவும் சரியாக கூறுவது என்றால் 05 / 04 / 1998 .( ennudaiya thanthaiyaar maranam adainthu ) எனக்கே இந்த வழி என்றால்

    " பஞ்ச பாண்டவருக்கும் ,"

    ." சீதா ராமனும் ",

    அவர்களுடன் உயிரின் மேலான லக்ஷ்மனனுக்கும் எந்த அளவிற்கு வேதனை இருந்து இருக்கும் .

    சிந்தித்து கூட பார்க்க முடிய வில்லை தன்னையே அறியாமல் தாரை தாரையாக ஆனந்த கண்ணிர் வருகின்றது.

    நன்றி ஐயா!

    ReplyDelete
  35. From Adhi Sankarar's Bhajagovindam

    "Moodha jahihi dhanagama trishnam, Guru sadbuddhim manasi vitrishnam
    Yallabhase nija karmo pattam, Vittam tena vinodaya chittam"

    Meaning: Oh fool! Give up (here, in this world) the greed for amassing wealth. Direct your good intellect (here: Mind) towards the thoughts of the Real. Be happy with whatever you get as a result of your actions in the past.

    ReplyDelete
  36. From Adhi Sankarar's Bhajagovindam

    "Moodha jahihi dhanagama trishnam, Guru sadbuddhim manasi vitrishnam
    Yallabhase nija karmo pattam, Vittam tena vinodaya chittam"

    Meaning: Oh fool! Give up (here, in this world) the greed for amassing wealth. Direct your good intellect (here: Mind) towards the thoughts of the Real. Be happy with whatever you get as a result of your actions in the past.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com