5.6.12

Astrology அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

Doubts: கேள்வி பதில் பகுதி 22

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திரெண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.86
செந்தில் குமார்

Dear Sir,
I thank you for teaching astrology lessons for all. I have some basic astrology knowledge now. I have some doubts kindly clear the doubts.

1. Sir, when a graha utcham in amsam that graham has full power even that is in enemy house in rasi right sir.

செவ்வாய் சனிவீட்டில்தான் உச்சமடைகிறார். அது அவருக்குப் பகை வீடுதான். இருந்தாலும் உச்சமானதற்கான பலனைத் தன் தசா/புத்திகளில் ஜாதகனுக்கு அவர் தருவார். அதுபோல உச்சமான மற்ற கிரகங்களும் தரும். கவலை எதற்கு?

2. My doubt is when graham has parivarthanai yogam only in amsam that is 3 and 11th graham that is sevvai in 3rd house and suriyan in 11th house and 4th and 7th graham that is guru in 4th house and bhutan in sevanth house in amsam for muthunam lagnam is it has power sir and will they do good things in their dasas.Kindly clear my doubts.
Best Regards,
R.Senthilkumar.

அம்சம் என்றால் என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். Navamsam is the magnified version of a Rasi Chart பரிவர்த்தனை பெற்றதற்கான பலன்கள் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்திகளில் நிச்சயம் கிடைக்கும்!
---------------------------------------------------------------------
email.No.87
சரவண குமார்
Dear Sir,

1. I read in our lessons if Mandhi present in 11th place, That is good. If Guru also Joined with Madhi in 11th, is that good for the native?(11=Kumbam)
Thanks
Saravana

இரண்டு லாட்டரிகள் ஒரே சமயத்தில் அடித்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். 11ஆம் வீடு கும்பம் என்றால் லக்கினம் மேஷம்.
மேஷத்திற்கு குரு பாக்கியாதிபதி. அவர் 11ல் (லாபத்தில்) அமர்வது நல்லதுதான்!
------------------------------------------------------
email.No.88
ரவிச்சந்திரன்

Respected Sir,

I humbly request u to clarify one of my doubt.
Both Bride and Bridegroom are affected by Kala Sharpa Dhosa in their own
horoscope each and finished that period as per Lagna Astawarga paral.(Age 27
bride and 31 bride groom) before marriage. In Both horoscope, Ragu is in 5th
house. Can both do marry or not?
will ragu not affect puthra dhosa when kala sarpa dhosa period completed?
I am awaiting for ur precious answer.

இருவருக்கும் ஐந்தில் ராகு இருப்பதால், நட்சத்திரங்களை வைத்து
மகேந்திரப் பொருத்தம் உள்ளதா என்று பாருங்கள். அதோடு இருவருக்கும், ஐந்தாம் வீடு, அதன் அதிபதி இருக்கும் வீடு, காரகன் குரு இருக்கும் வீடு
ஆகிய வீடுகளில் அஷ்டகவர்க்கப்பரல்கள் 28ற்குமேல் இருக்கிறதா
என்றும் பாருங்கள்
------------------------------------------------------------------
email.No.89
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,

I have one doubt, For kumba lagnam simma rasi, if Bhudhan is in kanni with suriyan.
But bhudhan is in vakram and vargothamam, If it is so what will be effect for the person in studies and carrier development. waiting for your positive reply
chandrasekarn

கல்விக்குப் பார்க்க வேண்டிய இடம் 4ஆம் வீடு. 4ஆம் வீட்டின் வலிமை,
அதன் அஷ்டகவர்க்கப்பரல்கள், அதன் அதிபதியின் வலிமை, அந்த வீடு
பெறும் பார்வைகள், அதன் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள், அம்சத்தில் அவருடைய நிலைமை, அஷ்டகவர்க்கத்தில் அவருடைய சுய வர்க்கப்பரல்கள் என்பதோடு, வித்யா காரகன் புதனையும் பார்க்க வேண்டும். புதன் எட்டில் இருந்தாலும், உச்சமாக இருப்பதுடன், வர்கோத்தமும் பெற்றிருக்கிறார். புதன் வக்கிரம் அடைந்ததை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். அவருடைய சுயவர்க்கப் பரல்களையும் பாருங்கள். சும்மா அலசினால், போதாது. நன்றாகக் கல்லில் அடித்துத் துவைத்து அலச வேண்டும்.
அடித்துத் துவைத்து அலசுவது எப்படி என்று முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலில் பழைய பாடங்களை நன்றாகப் படியுங்கள்.
--------------------------------------------------------
email.No.90
R.ஹரிகரன்

ஐயா,
அய்யா லக்னத்தில் மாந்தி உடன் சந்திரன் உள்ளது. இதன் பலன் என்ன தயவு செய்து விளக்கவும்.

என்னுடன் என் மாமா இருக்கிறார். என்ன நடக்கும் சொல்லுங்கள் என்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி. மாமா என்றால் தாய் மாமாவா. பெண்ணைக் கொடுத்தவகையில் மாமாவா அல்லது வேறு வகையில் மாமாவா?
உங்களுக்கும் அவருக்கும் எந்த விதத்தில் உறவு? ஏதாவது கொடுக்கல் வாங்கள் உள்ளதா? உங்களின் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? உங்களின் தகுதி என்ன? என்று பல விஷயங்கள் தெரிய வேண்டாமா?
தெரியாமல் எதைச் சொல்வது?

லக்கினம் என்று எழுதினீர்களே? என்ன லக்கினம்? லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? சந்திரன் உச்சமான நிலையில் உள்ளாரா? அல்லது நீசமாகிப் படுத்திருக்கிறா? என்பதை எல்லாம் சொன்னீர்களா? சொல்ல வேண்டாமா?

பொதுப்பலனாகச் சொன்னால், சந்திரன் மனகாரகன் (authority for mind) அவருடன், தீய கிரகங்கள் ஒன்றாக இருப்பது நல்லதல்ல! மன உளைச்சல் இருக்கும். எந்த அளவு அந்த உளைச்சல் இருக்கும் என்பது ஜாதகத்தின்
மற்ற அம்சங்களை வைத்து மாறுபடும்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்யும் முன்பு, வழக்கு
சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் (supporting documents) எல்லாம் சரியாக
உள்ளதா என்று பார்க்காமல் இருப்போமா? அதுபோல ஒரு
கேள்வியைக் கேட்குமுன்பு, அது சம்பந்தப்பட்ட விஷயங்களைச்
சொல்லிக் கேள்வியைக் கேட்பதுதான் முறையான செயல் ஆகும்!
புரிகிறதா நண்பரே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!



32 comments:

  1. Good morninggg Sir!

    Attendence Sir.... Me Present Sir....

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்

    உள்ள்ளேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. /////Blogger Bhuvaneshwar said...
    Good morninggg Sir!
    Attendence Sir.... Me Present Sir....//////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  4. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  5. ////Blogger eswari sekar said...
    good morning sir//////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. Dear Sir,

    I have doubt that if Moon,Guru and Mandi in kadaga lagnam .Is Mandi will affect as GURU is exalted in kadagam & Moon is ruling plant in kadagam.

    ReplyDelete
  7. /////Blogger arul said...
    nice post//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. /////Blogger seenivasan said...
    Dear Sir,
    I have doubt that if Moon,Guru and Mandi in kadaga lagnam .Is Mandi will affect as GURU is exalted in kadagam & Moon is ruling plant in kadagam./////

    இரண்டு சுபக்கிரகங்கள் உள்ளன. மாந்தி அமர்ந்துள்ளதால் சந்திரதிசை, மற்றும் சந்திரபுத்திகளில் மட்டும் பாதிப்புக்கள் இருக்கும்!

    ReplyDelete
  9. /////Blogger ஜி ஆலாசியம் said...
    உள்ளேன் ஐயா!

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. மிக நல்ல மீள் பதிவைத் தந்தமைக்கு நன்றி. அடித்துத் துவைத்து அலசும் படமும், அற்புத ஐடியா தரும் பில்கேட்ஸ் படமும் சூப்பர்.

    ReplyDelete
  11. மீள்பதிவுதான் இருந்தும், வாத்தியாரே மீண்டும் எடுத்து நடத்துவது போல் உள்ளது.

    "பில் கேட்ஸ்' பற்றி படித்ததும் ஒன்று நினைவுக்கு வருகிறது. பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டவரை வேலைக்கு சேர்க்கும் போது மிகவும் திறமையான, படிப்பில் முதலிடம் பிடித்தவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. சுமாரான திறமை, மத்திம இடம் பிடித்தவர்களையே சேர்த்துக் கொள்கிறார்கள். ஏன் என்றால்
    அவர்களுக்கு தேவையானது அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும். மாறாக திறமையானவர்கள், முதலிடம் பிடித்த மாணவர்கள் ஏன் என்று ஒரு கேள்வி எழுப்புவார்கள், இதைவிட அது நல்லது செய்து பார்க்கவா, இது ஃபெயிலியர் ஆகும், என்று அவர்களின் தீர்மானத்தை ஆட்டிப்பார்ப்பார்கள், ஆகைய காரணங்களால் இப்படி ஒரு கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

    இதனை ஒரு ஜோக்காக கூட எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  12. கேள்வி பதில் படித்து ரசித்தேன். தாய் மாமா, பெண் கொடுத்த மாமா, 'வேறுவகை' மாமா... வயிறு நோகச் சிரித்தேன்.நன்றி ஐயா!

    ReplyDelete
  13. மைனரை வெறுப்பேத்த என்னால் முடிந்த
    மொக்கை கமெண்ட் - 1:

    http://eclipse.gsfc.nasa.gov/transit/venus/Map2012-2.GIF
    Geographic Visibility of 2012 June 06
    Note that due to the International Date Line the Western Hemisphere will see the transit on June 5.

    The global visibility of the 2012. The entire transit is visible from northwestern North America, Hawaii, the western Pacific, northern Asia, Japan, Korea, eastern China, Philippines, eastern Australia, and New Zealand.
    The Sun sets while the transit is still in progress from most of North America, the Caribbean, and northwest South America. Similarly, the transit is already in progress at sunrise for observers in central Asia, the Middle East, Europe, and eastern Africa,. No portion of the transit will be visible from Portugal or southern Spain, western Africa, and the southeastern 2/3 of South America.
    [REF: http://eclipse.gsfc.nasa.gov/transit/venus0412.html ]


    ஐயா வீனஸ் ட்ரான்ஸிட் முடிஞ்சவுடன் ஷோபியும் கலையும் வகுப்புக்கு வருவாங்களா?

    ReplyDelete
  14. மொக்கை கமெண்ட் - 2:
    ஐயா, google transliteration இல் ஃ எப்படி தட்டச்சு செய்வது என்று தெரிந்துகொண்டேன்.
    "Q " அல்லது "q" ஐ தட்டினால் ஃ கிடைக்கும்

    ReplyDelete
  15. ///thanusu said... "பில் கேட்ஸ்' பற்றி படித்ததும் ஒன்று நினைவுக்கு வருகிறது. பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டவரை வேலைக்கு சேர்க்கும் போது மிகவும் திறமையான, படிப்பில் முதலிடம் பிடித்தவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. சுமாரான திறமை, மத்திம இடம் பிடித்தவர்களையே சேர்த்துக் கொள்கிறார்கள். ஏன் என்றால்
    அவர்களுக்கு தேவையானது அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும். மாறாக திறமையானவர்கள், முதலிடம் பிடித்த மாணவர்கள் ஏன் என்று ஒரு கேள்வி எழுப்புவார்கள், இதைவிட அது நல்லது செய்து பார்க்கவா, இது ஃபெயிலியர் ஆகும், என்று அவர்களின் தீர்மானத்தை ஆட்டிப்பார்ப்பார்கள், ஆகைய காரணங்களால் இப்படி ஒரு கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.///

    எனக்கு நம்ம ஊர்ல பொண்ணு பாக்கறப்பவே இந்த டெக்னிக்க உபயோகிக்கிராங்கன்னு ஒரு சம்சயம்

    ReplyDelete
  16. email.No.90 பதில் எனக்கு மிகவும் பிடித்தது, நகைச்சுவையாக சொல்லி ஜோதிடம் என்பது எவ்வளவு பரந்து விரிந்தது, ஓரிரு பொதுவிதிகளை பார்த்து குழப்பிக் கொள்ளகூடாது என்று உங்கள் முறையில் விவரித்தது சிரிக்க வைத்தது. நன்றி ஐயா.

    ReplyDelete
  17. 10,12 ம் வகுப்பு முடிவுகள் வந்திருக்கும் சமயத்தில் சஞ்சீவி போல,கல்வியின் பலத்தை அறிய வழிகாட்டியுள்ளார் வாத்தியார் ஐயா! நன்றிகள் உரித்தாகுக!

    ReplyDelete
  18. Guru Vanakkam,

    Your reply to Hari is too good.
    I couldn`t control my laugher

    //என்னுடன் என் மாமா இருக்கிறார். என்ன நடக்கும் சொல்லுங்கள் என்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி. மாமா என்றால் தாய் மாமாவா. பெண்ணைக் கொடுத்தவகையில் மாமாவா அல்லது வேறு வகையில் மாமாவா?//

    ReplyDelete
  19. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக நல்ல மீள் பதிவைத் தந்தமைக்கு நன்றி. அடித்துத் துவைத்து அலசும் படமும், அற்புத ஐடியா தரும் பில்கேட்ஸ் படமும் சூப்பர்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. ////Blogger thanusu said...
    மீள்பதிவுதான் இருந்தும், வாத்தியாரே மீண்டும் எடுத்து நடத்துவது போல் உள்ளது.
    "பில் கேட்ஸ்' பற்றி படித்ததும் ஒன்று நினைவுக்கு வருகிறது. பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டவரை வேலைக்கு சேர்க்கும் போது மிகவும் திறமையான, படிப்பில் முதலிடம் பிடித்தவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. சுமாரான திறமை, மத்திம இடம் பிடித்தவர்களையே சேர்த்துக் கொள்கிறார்கள். ஏன் என்றால்
    அவர்களுக்கு தேவையானது அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும். மாறாக திறமையானவர்கள், முதலிடம் பிடித்த மாணவர்கள் ஏன் என்று ஒரு கேள்வி எழுப்புவார்கள், இதைவிட அது நல்லது செய்து பார்க்கவா, இது ஃபெயிலியர் ஆகும், என்று அவர்களின் தீர்மானத்தை ஆட்டிப்பார்ப்பார்கள், ஆகைய காரணங்களால் இப்படி ஒரு கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
    இதனை ஒரு ஜோக்காக கூட எடுத்துக்கொள்ளலாம்./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger kmr.krishnan said...
    கேள்வி பதில் படித்து ரசித்தேன். தாய் மாமா, பெண் கொடுத்த மாமா, 'வேறுவகை' மாமா... வயிறு நோகச் சிரித்தேன்.நன்றி ஐயா!////

    உங்களை மகிழ்வித்தமைக்கு எனக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  22. ////Blogger தேமொழி said...
    மைனரை வெறுப்பேத்த என்னால் முடிந்த
    மொக்கை கமெண்ட் - 1:
    http://eclipse.gsfc.nasa.gov/transit/venus/Map2012-2.GIF
    Geographic Visibility of 2012 June 06
    Note that due to the International Date Line the Western Hemisphere will see the transit on June 5.
    The global visibility of the 2012. The entire transit is visible from northwestern North America, Hawaii, the western Pacific, northern Asia, Japan, Korea, eastern China, Philippines, eastern Australia, and New Zealand.
    The Sun sets while the transit is still in progress from most of North America, the Caribbean, and northwest South America. Similarly, the transit is already in progress at sunrise for observers in central Asia, the Middle East, Europe, and eastern Africa,. No portion of the transit will be visible from Portugal or southern Spain, western Africa, and the southeastern 2/3 of South America.
    [REF: http://eclipse.gsfc.nasa.gov/transit/venus0412.html ]
    ஐயா வீனஸ் ட்ரான்ஸிட் முடிஞ்சவுடன் ஷோபியும் கலையும் வகுப்புக்கு வருவாங்களா?/////

    பின்னூட்டங்கள் இல்லாததை வைத்து, வரவில்லை என்று கணக்குக் காட்ட முடியாது!:-)))

    ReplyDelete
  23. ////Blogger தேமொழி said...
    மொக்கை கமெண்ட் - 2:
    ஐயா, google transliteration இல் ஃ எப்படி தட்டச்சு செய்வது என்று தெரிந்துகொண்டேன்.
    "Q " அல்லது "q" ஐ தட்டினால் ஃ கிடைக்கும்////

    ஈ கலப்பை மென்பொருளுக்கும் அதுதான் தட்டசுக் key

    ReplyDelete
  24. ////Blogger தேமொழி said...
    ///thanusu said... "பில் கேட்ஸ்' பற்றி படித்ததும் ஒன்று நினைவுக்கு வருகிறது. பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் வெளி நாட்டவரை வேலைக்கு சேர்க்கும் போது மிகவும் திறமையான, படிப்பில் முதலிடம் பிடித்தவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை. சுமாரான திறமை, மத்திம இடம் பிடித்தவர்களையே சேர்த்துக் கொள்கிறார்கள். ஏன் என்றால்
    அவர்களுக்கு தேவையானது அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும். மாறாக திறமையானவர்கள், முதலிடம் பிடித்த மாணவர்கள் ஏன் என்று ஒரு கேள்வி எழுப்புவார்கள், இதைவிட அது நல்லது செய்து பார்க்கவா, இது ஃபெயிலியர் ஆகும், என்று அவர்களின் தீர்மானத்தை ஆட்டிப்பார்ப்பார்கள், ஆகைய காரணங்களால் இப்படி ஒரு கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.///
    எனக்கு நம்ம ஊர்ல பொண்ணு பாக்கறப்பவே இந்த டெக்னிக்க உபயோகிக்கிராங்கன்னு ஒரு சம்சயம்////

    என்ன டெக்னிக்கை உபயோகித்தாலும் தலை எழுத்தை மாற்ற முடியுமா? வருகிற தேவதை அல்லது பிசாசு வந்தே தீரும்!:-))))

    ReplyDelete
  25. ////Blogger தேமொழி said...
    email.No.90 பதில் எனக்கு மிகவும் பிடித்தது, நகைச்சுவையாக சொல்லி ஜோதிடம் என்பது எவ்வளவு பரந்து விரிந்தது, ஓரிரு பொதுவிதிகளை பார்த்து குழப்பிக் கொள்ளகூடாது என்று உங்கள் முறையில் விவரித்தது சிரிக்க வைத்தது. நன்றி ஐயா.////

    அந்தக் கேள்விக்கான பதில் வழக்கமான பாணியில் எழுதியதுதான். அது உங்களை மகிழ்வித்தது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. ////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    10,12 ம் வகுப்பு முடிவுகள் வந்திருக்கும் சமயத்தில் சஞ்சீவி போல,கல்வியின் பலத்தை அறிய வழிகாட்டியுள்ளார் வாத்தியார் ஐயா! நன்றிகள் உரித்தாகுக!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////Blogger ramadu said...
    Guru Vanakkam,
    Your reply to Hari is too good.
    I couldn`t control my laugher
    //என்னுடன் என் மாமா இருக்கிறார். என்ன நடக்கும் சொல்லுங்கள் என்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி. மாமா என்றால் தாய் மாமாவா. பெண்ணைக் கொடுத்தவகையில் மாமாவா அல்லது வேறு வகையில் மாமாவா?//

    அந்தக் கேள்விக்கான பதில் வழக்கமான பாணியில் எப்போதும் போல எழுதியதுதான். அது உங்களை மகிழ்வித்தது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். நன்றி ராமுடு காரு!

    ReplyDelete
  28. தேமொழி! சகோதரி கோடி கோடி நன்றிகள் ஃ தேடி கொடுத்ததற்கு!

    இதை நான் தேடி களைத்து "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல" என்று பாட்டெல்லாம் பாடி ஓய்ந்து போய் விட்டேன்.

    தலைவன் பால் ஊடல் கொண்ட, கண்டோர் தமக்கு அச்சத்தை விளைவிக்கும் தணல் போன்ற கொடிய கண்களை உடைய ஆண் சிங்கம் வாழும் மலையில் வளர்ந்த பசிய மூங்கில் ஒத்த தோளுடைய தலைவியை, தோழியானவள் தலைவனோடு சேர்த்து வைத்து போல மிக்க நலம் புரிந்தீர்கள்! வந்தனம் :)

    ReplyDelete
  29. ////Bhuvaneshwar said... தேமொழி! சகோதரி கோடி கோடி நன்றிகள் ஃ தேடி கொடுத்ததற்கு!...///

    அஃதே அஃதே :))))))))
    ___________________________________

    நினைவிற்கு வந்த சில குறள்கள்.....

    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.

    நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com