+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிரடி அண்ணாசாமிகள்!
எண் ஒன்பது
ஒன்பதாம் எண் செவ்வாய்க்கு உரியது. 9,18, 27ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உரிய அதிர்ஷ்ட எண் ஒன்பதேயாகும். இந்த எண்ணிற்கு உரியவர்கள் அதிரடியான குணங்களை உடையவர்கள். சற்று முரட்டுத்தனம் இருக்கும்.துணிச்சல் மிகுந்திருக்கும். செயல்களில் வேகம் இருக்கும்.
இந்த எண்காரர்களில் பலர் வேலை அமைவதிலும், பண விஷயங்களிலும் அதிர்ஷ்டமுடையவர்களாக இருப்பார்கள். பணம் தேடிவரும். அதே சமயத்தில் பணத்தை வந்த வேகத்தில் செலவும் செய்வார்கள்.
“வந்ததை வரவில் வைப்போம்
சென்றதை செலவில் வைப்போம்”
என்று ஏகாந்தமாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் ”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” எனும் வள்ளுவரின் வாக்குக்கேற்ப வாழ்வதற்கு இந்த எண்காரர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உலகத்தோர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காகப் பாடுபடுவார்கள். தங்களால் இயன்றதைச் செய்வார்கள். பெருந்தன்மை மிக்கவர்கள். சுயநலம் இல்லாதவர்கள். காதல் என்று இறங்கிவிட்டால், நல்ல காதலனாக அல்லது காதலியாக விளங்கக்கூடியவர்கள். சக மனிதர்களை மதிக்கக்கூடியவர்கள். மனித நேயம் மிகுந்தவர்கள். சிலர் பொது சேவையில் இறங்கிவிடுவார்கள். பேருக்காக இல்லாமல் உண்மையிலேயே மற்றவர்களுக்காக எதையும் யோசிக்காமல் செய்யக்கூடியவர்கள் இவர்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லாத குணமாக இருந்தாலும், இந்த எண்காரர்களுக்கு அது சாத்தியப்படும். அதற்காக தங்களுடைய விருப்பங்களையும் தேவைகளையும் குறைத்துக் கொள்வார்கள்.
3 மற்றும் 6ஆம் எண்ணுடையவர்களுடன் இயற்கையாகவே இவர்களுக்கு நல்ல தொடர்புகள் உண்டாகும். உலக நன்மைக்காகத் தியாகங்களைச் செய்யக்கூடியவர்கள் இவர்கள்
Career options: designers, photographers, politicians, lawyers, teachers, healers, statesperson, writers, philosophers and artists.
செவ்வாய் யுத்தத்திற்கான கிரகம். இந்த எண்காரகள் நியாயத்திற்காக சண்டைபோடக்கூடியவர்கள். எங்காவது அநியாயத்தைக் கண்டால் கொதித்து எழுவார்கள். எதற்கும் வாக்குவாதம் செய்வதற்கோ அல்லது சண்டையிடுவதற்கோ தயங்கமாட்டார்கள், துவக்கத்தில் எதிர்ப்பு இருந்தாலும், தங்களுடைய மனவலிமை,மனஉறுதி, துணிச்சல் ஆகியவற்றின் காரணமாக முடிவில் இவர்களே வெற்றி பெறுவார்கள்.
யாருக்கும் அடிமைப்பட்டு இருக்கமாட்டார்கள். தங்களுடைய போர்க்குணத்தால், பல எதிரிகளை இவர்கள் உருவாக்கிக்கொள்ள நேரிடும்.
சிலருக்குத் தீ விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. ஆகவே ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இல்லாதவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவர்களுக்கு அறிவுரைகள் அறவே பிடிக்காது. நண்பர்களிடமும், உறவினர் களிடமும் அடிக்கடி வாதிட நேரிடும். தங்களின் காதலுக்காக எதையும் செய்யத்தயங்காதவர்கள் இவர்கள்.
இராணுவம், காவல்துறை, விளையாட்டுத்துறை, ஆகிய துறைகள் இவர்களுக்கு உகந்த துறையாகும். அவற்றில் சேரும் வாய்ப்புக்கிடைத்தவர்கள், அவற்றில் பெரிய வெற்றி பெறுவார்கள்
”தாக்குதலே சிறந்த தற்காப்பு’ என்பது இவர்களுடைய கொள்கையாக இருக்கும் Attack is the best form of defense
குறைகள் இல்லையா? ஏன் இல்லை? உண்டு: They can also be aloof, distracted, moody and possessive by nature. They are often disappointed with their achieved results.
இவர்களுடைய முக்கியக் குறைபாடு: எதையும் யோசிக்காமல் சட்டென்று இறங்கிவிட்டுப் பின்னால், விளைவுகளுக்காக அவதிப்படுவார்கள்.
இந்த எண்காரர்களில், பெரும்பாலோருடைய வாழ்க்கை, உடலை வறுத்திச் செய்ய வேண்டியதாக இருக்கும். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.
வலிகளைப் பொறுத்துத் கொள்ளும் அல்லது சகித்துக்கொள்ளும் தன்மை மிகுந்தவர்கள் இவர்கள். அது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரமாகும்.
செவ்வாய் வலுவாக இல்லாவிட்டால், எவராக இருந்தாலும், நிர்வாகத் திறமை இருக்காது அல்லது குறைந்துவிடும்.
உகந்த நிறம்: சிவப்பு
உகந்த நவரத்தினம்: பவளம்
உகந்த உலோகம்: copper
உகந்த கிழமை: செவ்வாய்க்கிழமை
உகந்த நாட்கள்: 9, 18 & 27
நட்பு எண்கள்: 1, 2 & 3
தகாத எண்கள்: 4, & 5
உரிய வேலை: அமைப்பாளர்கள், மேலாளர்கள் (Organizers, managers)
தொழிலுக்கும், திருமணத்திற்கும் உகந்த எண்கள்: 1, 3, 6, 9
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தைத் தினமும் ஒன்பது முறை அல்லது 108 முறைகள் சொல்லிப் பயனடையலாம்:
"Om Krim Kum Kujaya Namah"
The word 'Krim' in above mantra denotes Karana Shakti, the power of action, work, motivation, and transformation.
......................................................
அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தைச் சொல்லிப் பயனடையலாம்:
Gayatri Mantra for Mars:
"Om Angarkaya vidmahe, bhoomipalaya dhimahi, tanno Kujah prachodayat"
"ஓம் அங்காரஹாய வித்மஹே
பூமிபாலாய (புத்ராய) தீமஹி.
தந்நோ குஜ ப்ரசோதயாத்!”
This
Gayatri mantra consists of three parts. The first is the chants to the
Mars. The second is the mantra proper. The third is a summary of the
mantra's energies.
The Gayatri mantra is chanted at
sunrise, noon and sunset. At dawn it is called Gayatri, the youthful
form of the Goddess, consort of Lord Brahma, the creator. It is called
Savitri, the mature form, at noon, the consort
of Lord Shiva. It is called Sarasvati, the elderly form, at sunset, the consort of Lord Vishnu.
Dharani-garbha-sambhutam
vidyut kanti-samaprabham ('சமப்ரபம்')
Kumaram shakti -hastam cha
mangalam pranamamyaham
When translated in English, it means:
"I
offer my obeisances to Shree Mangala, the god of the planet Mars, who
was born from the womb of the earth goddess. His brilliant effulgence is
like that of lightning, and he appears as a youth carrying a spear in
his hand."
எல்லா நவக்ரஹங்களுக்கான ஸ்லோகம்
"ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ"
---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
என்ன இருக்கு ஒன்பது பற்றி சொல்ல
ReplyDeleteஎதனுடனும் சேராதது இந்த ஒன்பது..
இந்த எண்ணுக்குரியவர்களுக்காக
இந்த பாடலை சுழல விடுகிறோம்.
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன்
கண்டேன்
வந்தேன்
ஐயா தங்கள் பாடத்துக்கு நன்றி. ஒரு பொதுவான கேள்வி ஒருவருக்கு பிறந்த எண் முக்கியமா அல்லது விதி எண் முக்கியமா? ஒரு எடுத்துக்காட்டுடன் விடை அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஐயா,
ReplyDeleteமற்றுமொரு அருமையான பதிவை வெளியிட்டமைக்கு நன்றி. இவர்கள் தான் போராட்டம் இல்லையெனில் போராடிக்கும் என்பார்கள்.இவர்களுக்கு வாயை விட கைதான் நீளம்.யாருக்கும்,எதற்கும் பயப்படதாவர்கள்.பேச்சே மிரட்டல் தொணியில் தான் இருக்கும் "வேண்டாம் தம்பி என்கிட்ட வச்சுக்கதா" நான் ரொம்பக் குணம் கெட்டவன் என்று எதிரிகளை ஆரம்பித்திலேயே மிரட்டி வைப்பார்கள்.ஏதோ ஒரு யுத்தகளத்தில் இருப்பது போன்ற மன நிலையில் தான் இருப்பார்கள்.மெதுவான செயல்பாடுகளை வெறுப்பார்கள்,முடிந்தவரை போராடிவிட்டு "கிட்டாதாயின் வெட்டென மற" எனும் அவ்வை வாக்கிற்கிணங்க உடனே அடுத்த இலக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுவார்கள். நல்ல உடல்வலிமை இருக்கும், இவர்களில் சிலர் நோஞ்சானாக இருந்தாலும் மனவலிமை,உடல்வலிமையுடன் தான் இருப்பர்.இவர்களது மூலதனம் தைரியம் தான்.
நாட்டைக் காக்கும் ராணுவம்,காவல்துறைப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.சிறப்பாக சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தனது உச்சவீடான மகரத்தில் இருந்தால் போதும் ஒரு கிராமத்தில் இருந்தாலும் கிராம அளவில் அதிகாரமான நபராகவேயிருப்பர்.அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் விலைபோக மாட்டர்.சிறுவயதில் முரட்டுப்பயல் என்றெல்லாம் இவர்களைச் சொல்வர்.மனதில் எதையும் மறைத்து வைக்கத்தெரியாது,எதையும் நேரடியாகவே கேட்டுவிடுவர்.அந்தக் குணத்தாலே பலரும் இவர்களை வெறுப்பர்,இவர்கள் அன்புடன் கை குலுக்கினாலும் மற்றவர்களுக்கு இரும்புப் பிடியாகத்தான் இருக்கும்.செவ்வாய் பகவான் சுயஜாதகத்தில் நல்ல இடங்களில் இருந்தால் அடி,தடி,வம்பு,வழக்கு என்று இல்லாமல் சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்தத் தூண்டுவார்.
புதன் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு வாய் நீளம்,இவர்களுக்கு கை நீளம்.கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதற்கேற்ப இளகிய மனம் கொண்டவர்கள்.
பொதுவாக செவ்வாய் கிரகம் குறித்து நமது ஜோதிடம் சொல்வது கோபக்கிரகம்,சிவந்தமேனி உடையவர்.இதை அறிவியல் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஃபெர்ரஸ் ஆக்சைடு தாது நிறைந்து இருப்பது தான் செவ்வாய் கிரகம் செந்நிறமாக இருப்பதற்குக் காரணம் என்கிறது.உடலில் ரத்தத்தைக் குறிப்பவரும் அவரே.ரத்தம் சிவந்த நிறமாக இருக்கக்காரணமே அதில் உள்ள ஹீமோகுளோபின்(ஹீம் என்றால் லத்தீன் மொழியில் இரும்பு) தான்(சராசரியாக ஒரு துளி ரத்தத்தில் 8mg~14mg இருக்கவேண்டும்)காரணம்.சுய ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்படும் போது ரத்தசம்பந்தமான வியாதிகளால் பாதிப்பு ஏற்படுகிறது. செவ்வாய் தோஷம் என்பது நமது ஜாதகத்தில் இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்யும் போது Rh+என்று Report வரும். இங்கு தான் மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கைகோர்த்து நிற்கின்றன.
செவ்வாய் மேஷம்,விருச்சிகம் ராசிகளை ஆள்கிறார்.மேஷம் சரம்,விருச்சிகம் ஸ்திரம்.மேஷத்தில் பிறந்தோர் எதையும் மிகவேகமாக முடிக்கவேண்டும் என்பர்,"ஆறிய கஞ்சி பழங்கஞ்சி" சூட்டோடு சூடாக முடிக்கவேண்டும் என்பர்.ஆனால் விருச்சிகம் வேகத்துடன் விவேகமாகத் தான் காய் நகர்த்துவர்."ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் ஒன்றும் புதிதல்ல" என்பது போல் போராடி விட்டுக்கொடுக்காமல் ஜெயித்துவிடுவர்.மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் செவ்வாய் பகவான் ஆளும் நட்சத்திரங்கள் ஆகும்.
என் மனைவி 18ம் தேதி பிறந்தவர். ஜாதகத்தில் மகர செவ்வாய் வர்கோத்தமாக இருக்கிறார். 9ம் எண்ணிற்கு சொல்லப் பட்ட சில குணங்கள் ஒத்துப் போகிறது.
ReplyDeleteமிக அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteDharani-garbha-sambhutam
vidyut kanti-samaprabha
Kumaram shakti -hastam cha
mangalam pranamamyaham
தாங்கள் தயவு செய்து பொறுத்தருள வேண்டும். இரண்டாம் வரி, 'சமப்ரபம்' என்றிருக்க வேண்டும். நன்றி.
என் மனைவின் எண்.அய்யா சொன்னதெல்லாம் சரியாக இருக்கிறது.
ReplyDeleteஇணையப் பிரச்சினை காரணமாக என்னால் தொடர்ந்து இருக்க முடியவில்லை .
எங்கள் கப்பல் இருக்கும் தென் சீன கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் ,நாங்கள் பக்கத்திலிருக்கும் மலேஷியாவின் "மிரி" எனும் துறைமுகம் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம்.
இரண்டு தினங்கள் வகுப்பறைக்கு வர முடியாது என நினைக்கிறேன்.
Rajaram said...செவ்வாய் தோஷம் என்பது நமது ஜாதகத்தில் இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்யும் போது Rh+என்று Report வரும். இங்கு தான் மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கைகோர்த்து நிற்கின்றன.
ReplyDeleteபுதிய செய்தி. நல்ல செய்தி. நண்பர்களிடமும் , குடும்பத்தாரிடமும் ஒரு சர்வே எடுக்கலாம் என நினைக்கிறேன்.
சென்னையில் இருக்கும் நமது வகுப்பறை கண்மணிகள் யாராவது நில அதிர்வை உணர்ந்தீர்களா?
ReplyDeleteஷோபனா அவர்களே தாங்கள் எப்படி உணர்ந்தீர்கள்.
எனக்கு இரண்டு பெண்கள் 18ம் தேதி பிறந்தவர்கள். குணங்கள் ஓரளவு பொருந்துகின்றன.பதிவுக்கு நன்றி!
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDelete///// உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” எனும் வள்ளுவரின் வாக்குக்கேற்ப வாழ்வதற்கு இந்த எண்காரர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்./////
ஒன்பதாம் எண்காரர் களுக்குத் தகுந்த தேவையான அறிவுரையினை வழங்கியுள்ளீர்கள்.
//Rajaram said...செவ்வாய் தோஷம் என்பது நமது ஜாதகத்தில் இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்யும் போது Rh+என்று Report வரும். இங்கு தான் மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கைகோர்த்து நிற்கின்றன.//
ReplyDeleteஅநேகமாக இது பொதுக்கருத்து என எண்ணுகிறேன். எனக்கும் என் கணவருக்கும் செவ்வாய் தோஷம் உள்ளது. எனக்கு, பி பாஸிடிவ், அவருக்கு ஏ பாஸிடிவ்.
//hanusu said...
சென்னையில் இருக்கும் நமது வகுப்பறை கண்மணிகள் யாராவது நில அதிர்வை உணர்ந்தீர்களா? //
தாங்கள் பாதுக்காப்பாக இருக்கும் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இங்கே பெங்களூரிலும் நில அதிர்வு இருந்தது.
thanusu said...
ReplyDeleteசென்னையில் இருக்கும் நமது வகுப்பறை கண்மணிகள் யாராவது நில அதிர்வை உணர்ந்தீர்களா?
ஷோபனா அவர்களே தாங்கள் எப்படி உணர்ந்தீர்கள்.//
பயங்கரமான நிலநடுக்கம் கடவுளே யாருக்கும் எதும் ஆககூடாது எல்லா ரொம்ப கஷ்ட படுவங்க என்று கவலை பட்டேன் அப்புறம் இந்தோனேஷியா மக்களைப்பற்றி கவலைப்ப்ட்டேன் மொத்ததில் ரொம்ப டென்ஷன் இன்னும் வ்ருமோ அடுக்குமாடி குடியிருப்பு என்ன பண்றது எல்லாம் சனிஷ்வர பகவனிடத்தில் தானிருமக்கிறது. த்ங்களின் அக்கறைக்கு நன்றி.
ஐயா, தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி. பதிவிற்கான படத்தில் ஒரு அதிரடி 'அண்ணிசாமியும்' இருப்பதுபோல் தெரிகிறது. எனக்கு 9ஆம் எண் ஆட்களைப் பிடித்திருக்கிறது. சுவராசியமானவர்கள் போலிருக்கிறது. குணநலன்களைப் படித்தால் 'நிழல் நிஜமாகிறது' படத்தின் 'சமய சஞ்சீவி' கமலஹாசன் பாத்திரம் நினைவிற்கு வருகிறது. 'நான் காற்றடிக்கும்பொழுதுதான் சிகரெட் பற்றவைப்பேன்' என்று அவர் தன்னைப்பற்றி விளக்குவார், அது போன்ற குண நலன்கள் உள்ளவர்கள் போலிருக்கிறது. பெரும்பாலும் நம்நாட்டின் திரைப்பட கதாநாயகர்கள் 9 ஆம் எண் ஆட்கள் போல்தான் சித்தரிக்கப் படுகிறார்கள்.
ReplyDeleteதனுசு சுனாமி எச்சரிக்கை என்றதும் உங்களைத்தான் நினைத்தேன், பாத்திரமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
ReplyDelete///செவ்வாய் தோஷம் என்பது நமது ஜாதகத்தில் இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்யும் போது Rh+என்று Report வரும். இங்கு தான் மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கைகோர்த்து நிற்கின்றன.///
ReplyDeleteஇந்தத் தகவல் சரியா ராஜாராம்? என் கணவருக்கு 12இல் செவ்வாய், எனக்கு 4இல் செவ்வாய். ஆனால் எனக்கு செவ்வாய் ஆட்சி என்பதால் செவ்வாய் தோஷம் இல்லை என்றும் ஆகிறது. நாங்கள் இருவரும் Rh negative வகையைச் சேர்ந்தவர்கள்.
நீங்கள் வழங்கும் அதிகப்படியான தகவல்களுக்கு நன்றி.
/////Blogger அய்யர் said...
ReplyDeleteஎன்ன இருக்கு ஒன்பது பற்றி சொல்ல
எதனுடனும் சேராதது இந்த ஒன்பது..
இந்த எண்ணுக்குரியவர்களுக்காக
இந்த பாடலை சுழல விடுகிறோம்.
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன்
கண்டேன்
வந்தேன்///////
பாடலுக்கு நன்றி விசுவநாதன்!
Blogger Maheswaran said...
ReplyDeleteஐயா தங்கள் பாடத்துக்கு நன்றி. ஒரு பொதுவான கேள்வி ஒருவருக்கு பிறந்த எண் முக்கியமா அல்லது விதி எண் முக்கியமா? ஒரு எடுத்துக்காட்டுடன்
விடை அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்./////
வலதுகை முக்கியமா? இடதுகை முக்கியமா? என்று கேட்பதைப்போல உள்ளது. இரண்டும் முக்கியம்தான்
/////Blogger Rajaram said...
ReplyDeleteஐயா,
மற்றுமொரு அருமையான பதிவை வெளியிட்டமைக்கு நன்றி. இவர்கள் தான் போராட்டம் இல்லையெனில் போராடிக்கும் என்பார்கள்.இவர்களுக்கு வாயை
விட கைதான் நீளம்.யாருக்கும்,எதற்கும் பயப்படதாவர்கள்.பேச்சே மிரட்டல் தொணியில் தான் இருக்கும் "வேண்டாம் தம்பி என்கிட்ட வச்சுக்கதா" நான் ரொம்பக் குணம் கெட்டவன் என்று எதிரிகளை ஆரம்பித்திலேயே மிரட்டி வைப்பார்கள்.ஏதோ ஒரு யுத்தகளத்தில் இருப்பது போன்ற மன நிலையில் தான்
இருப்பார்கள்.மெதுவான செயல்பாடுகளை வெறுப்பார்கள்,முடிந்தவரை போராடிவிட்டு "கிட்டாதாயின் வெட்டென மற" எனும் அவ்வை வாக்கிற்கிணங்க உடனே
அடுத்த இலக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுவார்கள். நல்ல உடல்வலிமை இருக்கும், இவர்களில் சிலர் நோஞ்சானாக இருந்தாலும்
மனவலிமை,உடல்வலிமையுடன் தான் இருப்பர்.இவர்களது மூலதனம் தைரியம் தான்.
நாட்டைக் காக்கும் ராணுவம்,காவல்துறைப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.சிறப்பாக சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தனது உச்சவீடான
மகரத்தில் இருந்தால் போதும் ஒரு கிராமத்தில் இருந்தாலும் கிராம அளவில் அதிகாரமான நபராகவேயிருப்பர்.அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் விலைபோக
மாட்டர்.சிறுவயதில் முரட்டுப்பயல் என்றெல்லாம் இவர்களைச் சொல்வர்.மனதில் எதையும் மறைத்து வைக்கத்தெரியாது,எதையும் நேரடியாகவே
கேட்டுவிடுவர்.அந்தக் குணத்தாலே பலரும் இவர்களை வெறுப்பர்,இவர்கள் அன்புடன் கை குலுக்கினாலும் மற்றவர்களுக்கு இரும்புப் பிடியாகத்தான்
இருக்கும்.செவ்வாய் பகவான் சுயஜாதகத்தில் நல்ல இடங்களில் இருந்தால் அடி,தடி,வம்பு,வழக்கு என்று இல்லாமல் சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்தத்
தூண்டுவார்.
புதன் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு வாய் நீளம்,இவர்களுக்கு கை நீளம்.கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதற்கேற்ப இளகிய மனம் கொண்டவர்கள்.
பொதுவாக செவ்வாய் கிரகம் குறித்து நமது ஜோதிடம் சொல்வது கோபக்கிரகம்,சிவந்தமேனி உடையவர்.இதை அறிவியல் செவ்வாய் கிரகத்தின்
மேற்பரப்பில் ஃபெர்ரஸ் ஆக்சைடு தாது நிறைந்து இருப்பது தான் செவ்வாய் கிரகம் செந்நிறமாக இருப்பதற்குக் காரணம் என்கிறது.உடலில் ரத்தத்தைக்
குறிப்பவரும் அவரே.ரத்தம் சிவந்த நிறமாக இருக்கக்காரணமே அதில் உள்ள ஹீமோகுளோபின்(ஹீம் என்றால் லத்தீன் மொழியில் இரும்பு) தான்(சராசரியாக
ஒரு துளி ரத்தத்தில் 8mg~14mg இருக்கவேண்டும்)காரணம்.சுய ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்படும் போது ரத்தசம்பந்தமான வியாதிகளால் பாதிப்பு
ஏற்படுகிறது. செவ்வாய் தோஷம் என்பது நமது ஜாதகத்தில் இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்யும் போது Rh+என்று Report வரும். இங்கு தான்
மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கைகோர்த்து நிற்கின்றன.
செவ்வாய் மேஷம்,விருச்சிகம் ராசிகளை ஆள்கிறார்.மேஷம் சரம்,விருச்சிகம் ஸ்திரம்.மேஷத்தில் பிறந்தோர் எதையும் மிகவேகமாக முடிக்கவேண்டும் என்பர்,"ஆறிய கஞ்சி பழங்கஞ்சி" சூட்டோடு சூடாக முடிக்கவேண்டும் என்பர்.ஆனால் விருச்சிகம் வேகத்துடன் விவேகமாகத் தான் காய் நகர்த்துவர்."ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் ஒன்றும் புதிதல்ல" என்பது போல் போராடி விட்டுக்கொடுக்காமல் ஜெயித்துவிடுவர்.மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் செவ்வாய் பகவான்
ஆளும் நட்சத்திரங்கள் ஆகும்.////
தகவல் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜாராம்!
/////Blogger ananth said...
ReplyDeleteஎன் மனைவி 18ம் தேதி பிறந்தவர். ஜாதகத்தில் மகர செவ்வாய் வர்கோத்தமாக இருக்கிறார். 9ம் எண்ணிற்கு சொல்லப் பட்ட சில குணங்கள் ஒத்துப் போகிறது./////
நல்லது. நன்றி ஆனந்த்!
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி.
Dharani-garbha-sambhutam
vidyut kanti-samaprabha
Kumaram shakti -hastam cha
mangalam pranamamyaham
தாங்கள் தயவு செய்து பொறுத்தருள வேண்டும். இரண்டாம் வரி, 'சமப்ரபம்' என்றிருக்க வேண்டும். நன்றி.//////
திருத்தம் செய்துவிட்டேன். எடுத்துச் சொன்ன மேன்மைக்கு நன்றி சகோதரி!
/////Blogger thanusu said...
ReplyDeleteஎன் மனைவின் எண்.அய்யா சொன்னதெல்லாம் சரியாக இருக்கிறது.
இணையப் பிரச்சினை காரணமாக என்னால் தொடர்ந்து இருக்க முடியவில்லை .
எங்கள் கப்பல் இருக்கும் தென் சீன கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் ,நாங்கள் பக்கத்திலிருக்கும் மலேஷியாவின் "மிரி" எனும் துறைமுகம் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம்.
இரண்டு தினங்கள் வகுப்பறைக்கு வர முடியாது என நினைக்கிறேன்./////
பாதுகாப்புதான் முக்கியம். மெதுவாக வாருங்கள்.
/////Blogger V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
///// உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” எனும் வள்ளுவரின் வாக்குக்கேற்ப வாழ்வதற்கு இந்த எண்காரர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்./////
ஒன்பதாம் எண்காரர் களுக்குத் தகுந்த தேவையான அறிவுரையினை வழங்கியுள்ளீர்கள்./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!!
/////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா, தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி. பதிவிற்கான படத்தில் ஒரு அதிரடி 'அண்ணிசாமியும்' இருப்பதுபோல் தெரிகிறது. எனக்கு 9ஆம் எண்
ஆட்களைப் பிடித்திருக்கிறது. சுவராசியமானவர்கள் போலிருக்கிறது. குணநலன்களைப் படித்தால் 'நிழல் நிஜமாகிறது' படத்தின் 'சமய சஞ்சீவி' கமலஹாசன்
பாத்திரம் நினைவிற்கு வருகிறது. 'நான் காற்றடிக்கும்பொழுதுதான் சிகரெட் பற்றவைப்பேன்' என்று அவர் தன்னைப்பற்றி விளக்குவார், அது போன்ற குண
நலன்கள் உள்ளவர்கள் போலிருக்கிறது. பெரும்பாலும் நம்நாட்டின் திரைப்பட கதாநாயகர்கள் 9 ஆம் எண் ஆட்கள் போல்தான் சித்தரிக்கப் படுகிறார்கள்./////
அண்ணிசாமி முதலில் இருக்கிறார். அவரை நீங்கள்தான் கண்டுபிடித்திருக்கிறீர்கள்! உங்கள் கண்ணிலிருந்து தப்பமுடிய்டுமா என்ன?
சாட்டிங் (Chatting) பின்னூட்டங்களுக்கு வாத்தியார் பதிலளிக்கவில்லை. சமபந்தப்பட்டவர்களே ஒருவருக்கொருவர் பதில் கூறிக்கொள்வார்கள் என்று விட்டுவிட்டார்!
ReplyDeleteநமக்கு கூட்டு எண் இது.அய்யா,கூறியது பெரும்பாலும் ஒத்துவருகிறது.
ReplyDeleteRajaram said...
///வேண்டாம் தம்பி என்கிட்ட வச்சுக்கதா" ///
உண்மை.அதற்காகவே கராத்தே கற்றுகொண்டேன்.கூடவே ,ஆறு வருடம் இடைவிடாத ஜிம் பயிற்சி!!!!
\\\"கிட்டாதாயின் வெட்டென மற" எனும் அவ்வை வாக்கிற்கிணங்க\\\
"கிட்டுமாயின் சட்டென நினை " எனது வாழ்வியல்!!!
//ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தனது உச்சவீடான
மகரத்தில் இருந்தால் போதும் ஒரு கிராமத்தில் இருந்தாலும் கிராம அளவில் அதிகாரமான நபராகவேயிருப்பர்.அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் விலைபோக மாட்டர்.\\
அதே போல்தான் செவ்வாய் மகரத்தில் உள்ளது.அதிகாரம் எப்பொழுதும் உண்டு.மிகவும் சரி.இவ்வளவு,சிறிய வயதில் மிகப்பெரிய பதிவிகள் எல்லாம் வகித்து வந்தாயிற்று.
பிறந்த எண்:3 என்றாலும் எனக்கு கலப்பு கலவைதான்.பெரும்பாலும் செவ்வாய் கிழமைகளில் எந்த வேலையும் ஆரம்பித்தால் வெற்றியாக முடிகிறது.
பலசமயம் 100 அடி உயரத்துக்கு உயர்த்தி செல்கிறது. சில சமயம் பரமபத பாம்புபோல் சர்.பேக் டு பெவிலியன். சறுக்கி விழுவதால் சிராய்ப்புகல்தான்.
அடிகள் இல்லை.கார்த்திகேயன் காப்பாற்றுகிறார் !!!!
உரிய வேலை: அமைப்பாளர்கள்,சரியாகத்தான் சொல்றிங்க...!!!
//வலிகளைப் பொறுத்துத் கொள்ளும் அல்லது சகித்துக்கொள்ளும் தன்மை மிகுந்தவர்கள் இவர்கள். அது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரமாகும்.//
வேற என்ன பண்ணமுடியும்..எவ்ளோ..அடிச்சாலும் தாங்கித்தான் ஆகவேண்டும்.(ரொம்ப நல்லவனோ)
/இவர்களுடைய முக்கியக் குறைபாடு: எதையும் யோசிக்காமல் சட்டென்று இறங்கிவிட்டுப் பின்னால், விளைவுகளுக்காக அவதிப்படுவார்கள்./
இந்த இடத்தில் லக்னாதிபதி சனி காப்பாற்றிவிடுவார்."நாம எப்போதும் முன்வச்ச காலை பின் வைக்கிறது இல்லை. திரும்பி நடந்துதுருவோம்...!!
தேமொழிக்கு எனது நன்றி,
ReplyDeleteஎனது அண்ணா கல்கி மற்றும் தமிழ் ஆர்வத்தினால் எனது அக்காவிற்கு பூங்குழலி என்றும் எனக்கு சந்தனக்குழலி என்றும் பெயர் வைத்தார் ,ஆனால்
பள்ளி,கல்லூரிகளில் இந்த பெயர் உச்சரிப்பில் பலர் தடுமாறும் போது
எனக்கே, என்ன பெயர் இது ?என நினைக்கவைக்கும்.
தேமொழி என்பது கூட ஒரு அரிதான பெயர் தான்,கண்டிப்பாக இப்பெயரை
தேர்வு செய்தவர்கள் தமிழ் பற்றின் காரணமாகத் தான் தேர்ந்து எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் .
சில தினங்களுக்கு முன் எல்லோரையும் கலாய்த்து அருமையான
ஒரு பதிவை கொடுத்து இருந்தீர்கள்,அதற்கே பாராட்டி, பின்னுட்டம் இட நினைத்தேன் ,அதற்கான இந்த சந்தர்ப்பம் அளித்தமைக்கும் ,தங்களின் பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும் உரித்தாகட்டும் .
தேமொழிக்கு எனது நன்றி,
ReplyDeleteஎனது அண்ணா கல்கி மற்றும் தமிழ் ஆர்வத்தினால் எனது அக்காவிற்கு பூங்குழலி என்றும் எனக்கு சந்தனக்குழலி என்றும் பெயர் வைத்தார் ,ஆனால்
பள்ளி,கல்லூரிகளில் இந்த பெயர் உச்சரிப்பில் பலர் தடுமாறும் போது
எனக்கே, என்ன பெயர் இது ?என நினைக்கவைக்கும்.
தேமொழி என்பது கூட ஒரு அரிதான பெயர் தான்,கண்டிப்பாக இப்பெயரை
தேர்வு செய்தவர்கள் தமிழ் பற்றின் காரணமாகத் தான் தேர்ந்து எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் .
சில தினங்களுக்கு முன் எல்லோரையும் கலாய்த்து அருமையான
ஒரு பதிவை கொடுத்து இருந்தீர்கள்,அதற்கே பாராட்டி, பின்னுட்டம் இட நினைத்தேன் ,அதற்கான இந்த சந்தர்ப்பம் அளித்தமைக்கும் ,தங்களின் பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும் உரித்தாகட்டும் .
வணக்கம் ஐயா,
ReplyDeleteஎன் அண்ணனின் எண் 9 தான்...அவருக்கு விளையாட்டு,ராணுவத்தில் சேர மிகவும் ஆர்வப்பட்டார்,ஆனால் எங்கள் தந்தை அனுமதி தரவேயில்லை...சாலையில் யாரேனும் காயப்பட்டாலும் முதலில் ஓடி சென்று உதவுவது அவர் தான்...தாங்கள் கூறிய அத்துனை பொது குணாதிசயங்களோடு அதீத கோபமும் உண்டு...
ராஜாராம் அவர்கள் கூறியதும் மிக சரியாக என் அண்ணனுக்கு பொருந்துகிறது...வீண்வம்புக்கு செல்லமாட்டார்,வம்பிழுத்து விட்டால் பின்வாங்கமாட்டார் என் அண்ணன்...நன்றி...
நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா...