12.4.12

Astrology எது (டா) புத்தாண்டு?


Astrology எது (டா) புத்தாண்டு?

தமிழனைப்போல குழம்பி நிற்பதற்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. எடுத்ததற்கெல்லாம் குழம்பி நிற்பான். அத்தனை அப்பாவி!

சாதாரண விஷயத்திற்குக்கூட் குழம்பி நிற்பான்.

தமிழ்ப் புத்தாண்டு எப்போது? அதுதான் கேள்வி!

தை மாதம் முதல் நாள்தான் தமிழர் திருநாள் அன்றுதான் தமிழனுக்குப் புத்தாண்டு என்று அய்யா சொல்கிறார்.

இல்லை வேத ஆகமங்களின்படி சித்திரை மாதம் முதற் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அம்மா சொல்கின்றார்!

எது உண்மை?

புத்தாண்டை தமிழ்ப்புத்தாண்டு, மலையாளப் புத்தாண்டு, கன்னடப் புத்தாண்டு என்று வர்ணம் கொடுத்துப் பிரிக்காதீர்கள்.

மற்றவர்களை விட்டுவிடுவோம். ஜோதிடம் கற்கும் நாம் தெளிவாக இருக்க வேண்டாமா?

சனியில் தமிழ்ச்சனி, மலையாளச் சனி என்று தனித்தனியாகவா சனி இருக்கிறது?

கட்டி அனைப்பதிலும், போட்டுத் தள்வதிலும், உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரே சனிதான்!

அதுபோல ஜோதிடம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது!
-------------------------------------------
எப்போது புத்தாண்டு?

சூரியன் ஒரு சுற்றை (ஒரு ஆண்டிற்கான சுற்றை) முடித்து விட்டு அடுத்த சுற்றைத் துவக்கும் நாள்தான் புத்தாண்டு. ஒரு சுற்றை முடிக்க அவருக்கு 365.25 நாட்கள் ஆகின்றன. அதை மனதில் வையுங்கள்.

அடுத்த சுற்றை அவர் எங்கே துவங்குவார்?

சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒவ்வொருமுறையும் மேஷ்ராசியில்தான் அவர் துவங்குவார். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு மாதம். 12 ராசிகளை அவர் கடந்து  முடிக்கையில் ஒரு ஆண்டும் முடிந்துவிடும்.

மேஷராசியில்தான் ஜீரோ டிகிரி (பாகை) ஆரம்பம். மீன ராசியின் முடிவில் 360ஆவது பாகை இருக்கும். மேஷத்தில் அவர் காலடி எடுத்துவைக்கும் நாள்தான்  புது நாள். புத்தாண்டின் முதல் நாள். நாளை மாலை (13.4.2012 வெள்ளிக்கிழமை) 7.30 மணி அளவில் அவர் மேஷத்தில் நுழைந்துவிடுகிறார். ஆகவே  நாளை மாலைதான் நமக்குப் புத்தாண்டு!

அனைவரும் புது வருடத்தைக் கொண்டாடுங்கள்!

புத்தாண்டில் உங்களுக்கு எல்லா நலன்களும் கூடிவர உங்களுக்காக பழநிஅப்பனைப் பிரார்த்திக்கின்றேன்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------
வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆனாலும் வகுப்பிற்கு விடுமுறை இல்லை. பாடங்கள் வரும். பின்னூட்ட்டங்களுக்கான பதிலகள் மட்டுமே தாமதமாகும்.
பொறுத்துக்கொள்ளூங்கள்!

Chart one
Chart Two
 6.30 மணிக்கு மீனத்தில் இருக்கும் சூரியன் (Chart one) 7.30 மணிக்கு மேஷத்திற்கு (chart two) வந்து விடுவதைப் பாருங்கள்.


அந்த நேரத்தில், சூரியனின் அமர்ந்திருக்கும் இடத்தின் பாகைகளைப் பாருங்கள் 0.01:08
++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

38 comments:

  1. வணக்கம் ஐயா,
    'தை' முதல் நாள் நிகழும் 'மகர சங்கிராந்தி'யை தமிழ் புத்தாண்டோடு இணைத்து தானும் குழம்பி,மக்களையும் குழப்பி விட்டார்கள் அரசியல்(குழப்ப?)வாதிகள்...

    நானும் இதே கருத்தை சொல்லியபடியே என் தோழிகளுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை இன்று கூறினேன்...அறிந்திடாதவர்களுக்கு அறிந்திடும் பொருட்டு சரியான,தெளிவான விளக்கங்கள் தந்த வாத்தியார் ஐயாவுக்கு நன்றியையும்,வகுப்பறை சக மாணவர்களுக்கும் எனது 'இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை' முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  2. நந்தன வருடத்துற்கு
    வந்தனம் சொல்லி
    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. உத்தராயண காலம் ஆரம்பிக்கும் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதம் என்று அறிவித்ததற்கு பதில், தட்சிணாயனம் காலம் ஆரம்பிக்கும் ஆடி மாதத்தை ஆண்டின் முதல் மாதம் என்றுஅறிவித்திருக்க வேண்டும். அப்பொழுது அது பள்ளியில் ஒவ்வொரு முறையும் அந்த நேரம் புதிய ஆண்டு தொடங்கும் மாணவர்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும். பிறகு அடுத்த தலைமுறையினர் யார் வந்து சொன்னாலும் அதெல்லாம் கப்சா என்று சொல்லிவிட்டு ஜூலை 15 , 16 நாட்களில் புத்தாண்டு கொண்டாட ஆரம்பித்திருப்பார்கள் அல்லவா.

    எல்லாம் நம் வசதிக்குத்தானே, கவலைப் படாதீர்கள் இளைய தலைமுறையினரே நான் ஆட்சிக்கு வந்ததும் கடக ராசியில் சூரியன் வரும் ஆடி ஒன்றுதான் புத்தாண்டு என்பது என் முதல் தீர்மானமாக இருக்கும். அதுவரை சித்திரை ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருங்கள். (அப்படியே சட்ட சபை இருக்கைகளுக்கு மஞ்சள், பச்சை வண்ணங்கள் சரிப்பட்டு வராததால் வேறு ராசியான வண்ணம் எது என்பதை வாத்தியார் தெரிவிக்கவும், சட்டசபையை மீனம்பாக்கதிற்கு மாற்றலாமா, அல்லது ECR சாலை சரிப்படுமா என்ற யோசனையும் உள்ளது).

    வாத்தியாருக்கும், மற்ற அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க மகிழ்ச்சியுடன்.

    ReplyDelete
  4. பார்வதி, சுந்தரி, தேமொழி, அனைவருக்கும் நன்றிகள். நான் நலம், சுனாமி ஆபத்து இல்லை என்று புருனை அரசாங்கம் அங்கீகரித்ததால் இன்று திரும்ப புருனைக்கே வந்து விட்டோம்.

    ReplyDelete
  5. தை ஒன்றையும் , ஆடி ஒன்றையும் (தே.மோ.க) கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம்.

    ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கேர்ப்ப புத்தாண்டை மாற்றினாலும் மக்களின் மனதில் எப்போதும் இருப்பது சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருடப் பிறப்பு.

    ReplyDelete
  6. மிக அருமையான விளக்கங்களுடன் கூடிய அற்புதமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் நந்தன ஆண்டு பிறப்புநாள் முன் தின வாழ்த்துக்கள்!

    அற்புதமான விளக்கம் ஐயா..நன்றி..வணக்கம்!

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    தமிழ்ப் புத்தாண்டுக்கான விளக்கத்துடன் கூடிய பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.நன்றி!!

    அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. நித்திரையை கலைக்கும்
    சித்திரையே தமிழர் புத்தாண்டு என

    அம்மா சொன்னது
    சும்மா இல்லே உண்மையே என

    கட்டியம் சொல்லி வந்தது
    கருத்தான இன்றையவகுப்பறை பதிவு..

    அய்யா தை பற்றி சொல்வதெல்லாம்
    பொய்யே என சொல்லவைத்தது

    மேஷத்தில் தொடங்கி
    மீனத்தில் வந்து மீண்டும் தொடரும்

    நந்தன வருட புத்தாண்டு நன்மைகள்
    தந்தனம் என சொல்லியே வரட்டும்

    குந்தகங்கள் மாறி
    மந்தங்கள் பல நீங்கி

    சொந்தங்கள் கூடி சுகமாய் வாழ
    சாந்தம் (நிலத்திலும், நீரிலும்) நிலவ

    இறைவன் திருமுன்
    இப்பவும் வேண்டி நிற்கிறோம்..

    இந்த பாடலினை சுழல விட்டபடியே..

    நலம் வாழ எந்நாளும்
    என் வாழ்த்துக்கள்

    தமிழ் கூறும் பல்லாண்டு
    என் வார்த்தைகள்

    இளவேனில் உன் வாசல் வந்தாடும்
    இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

    மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
    மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்

    இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
    எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

    விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
    நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
    இதிலென்ன பாவம்
    எதற்கிந்த சோகம் கிளியே..

    கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
    மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது

    கடல்களில் உருவாகும் அலையானது
    விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

    நிலவினை நம்பி இரவுகள் இல்லை
    விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை

    ஒரு வாசல் மூடி..
    மறுவாசல் வைப்பான் இறைவன்
    (மனதை தொட்ட வரிகள்)

    நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. புத்தாண்டிற்கு ஏற்ற... வாழ்வில் நம்பிக்கையூட்டவென தேர்ந்தெடுத்து, "நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்" என்ற பொருத்தமான நல்லதொரு பாடலைச் சுழலவிட்டதற்கு நன்றி

    ReplyDelete
  11. Guru Vanakkam,

    Wish you all happy Tamil New years day.

    Ramadu

    ReplyDelete
  12. வாத்தியாருக்கும், சக வகுப்பறைத் தோழர்களுக்கும் நந்தன ஆண்டு வாழ்த்துக்கள்.

    கீழே கண்டுள்ளது என் அம்மாஞ்சி கிருஷ்ணகுமார் எழுதி அனுப்பிய கவிதை.

    "கடல் குலுங்க
    அணு பிளக்க
    அனல் தெறிக்க
    குடி கெடுக்க
    நதி வற்ற
    மணல் அள்ளி
    வளம் குன்ற
    உதிரம் சுண்ட
    சுற்றம் அற்று
    போனாலும்
    கலங்காதிரு
    தமிழ் மனமே !

    மும்மதுரை கடலடியில் சென்ற பின்பும்
    நிற்கின்றோம் முச்சங்கம் கண்ட தமிழ்
    மனுவையும் ஈன்றெடுத்த பாண்டியனே
    பண்டிதன் என்போர் பரதத்தில் பலருண்டு

    பல பிரளயங்கள் முடிவிலும் ஒரு தொடக்கமுண்டு
    தொடங்கவே திரு ஒற்றி ஊரும் உண்டு

    திரு ஒற்றியூர் ஈசன்
    அடி ஒற்றி முடி தொட்டு
    வணங்கி வாழ்க வளமுடன் என்று
    வாழ்த்தும்
    சத்திய வாகீசன்
    கிருஷ்ணகுமார்"

    பின் குறிப்பு :
    சென்னையில் "நந்தனம்" என்று ஒரு இடத்திற்கு இதே நாளில் 60 வருடங்களுக்கு முன்பு பெயரிட்ட திரு .ராஜகோபாலாச்சாரியாரின் நினைவு போற்றுதற்குரியது.

    ReplyDelete
  13. என் நண்பரும், எங்கள் அலுவலக உயர் அதிகாரியாகப் பணியாற்றியவரும், சிறந்த கவிஞருமான திரு என்.வி.சுப்பராமன் அவர்கள் எழுதி அனுப்பிய கவிதையை என்னுடைய நந்தன வருட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தாக வகுப்பறை நண்பர்கள் யாவர்க்குமாய் அர்ப்பணிக்கிறேன்.

    நந்தன ஆண்டு

    நந்தன ஆண்டு பிறக்கட்டும்
    நல்லன எல்லாம் மலரட்டும்
    வந்தனை செய்து வரவேற்போம்
    நிந்தனை தன்னை மறந்திடுவோம்!

    அன்பும் அமைதியும் பெருகட்டும்
    அறங்கள் அனைத்தும் வளரட்டும்
    உழைப்பு நன்றாய் பெருகட்டும்
    ஊழல்கள் அனைத்தும் மறையட்டும்!

    நல்லவர் அரசு அமைக்கட்டும்
    வல்லவர் நாட்டைக் காக்கட்டும்
    தொல்லைகள் தொலைந்து போகட்டும்
    அல்லவை தேய்ந்து மடியட்டும்!

    உலகில் அமைதி ஓங்கட்டும்
    பலரும் நேர்மை காக்கட்டும்
    வளரும் கவிஞன் சிறக்கட்டும்
    உலகம் மகிழ்வொடு வாழட்டும்!

    என் வி சுப்பராமன்

    ReplyDelete
  14. புத்தாண்டு பற்றித் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
    அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  15. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ,
    பெரியோர்களை நமஸ்கரித்து வணங்குகிறேன்,
    சிறியவர்களை எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று நீடூடிவாழ வாழ்த்துகிறேன்.
    எல்லோருக்கும் நந்தன வருடம் ஆரோக்கியத்தையும்,மன மகிழ்ச்சி,நிம்மதியையும் தர எல்லாம்வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்.

    ReplyDelete
  16. ///thanusu said...
    பார்வதி, சுந்தரி, தேமொழி, அனைவருக்கும் நன்றிகள். நான் நலம், சுனாமி ஆபத்து இல்லை என்று புருனை அரசாங்கம் அங்கீகரித்ததால் இன்று திரும்ப புருனைக்கே வந்து விட்டோம்///
    தனுசு அவர்களே, தாங்கள் ந‌ல‌முட‌ன் இருப்ப‌து வாத்தியார் ஐயாவுக்கும் ,மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்குமே ந‌லமான‌ செய்தி தான்...க‌ட‌லில் சீற்ற‌ம் அதிக‌மாய் காண‌ப்ப‌ட்ட‌து என்ற‌ செய்தி உண்மையா?...

    ReplyDelete
  17. Guru vannakkam.
    Thanks for your clarification between Thamizar Thirunal and Tamil new day.

    My wishes to you all for a prosperous and happy nandhana new year

    ReplyDelete
  18. வாத்தியாருக்கும், சக மாணவர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

    ReplyDelete
  19. ////Blogger arul said...
    nice post////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    'தை' முதல் நாள் நிகழும் 'மகர சங்கிராந்தி'யை தமிழ் புத்தாண்டோடு இணைத்து தானும் குழம்பி,மக்களையும் குழப்பி விட்டார்கள் அரசியல் (குழப்ப?)வாதிகள்...
    நானும் இதே கருத்தை சொல்லியபடியே என் தோழிகளுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை இன்று கூறினேன்...அறிந்திடாதவர்களுக்கு அறிந்திடும் பொருட்டு சரியான,தெளிவான விளக்கங்கள் தந்த வாத்தியார் ஐயாவுக்கு நன்றியையும்,வகுப்பறை சக மாணவர்களுக்கும் எனது 'இனிய தமிழ் புத்தாண்டு
    வாழ்த்துகளை' முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.../////

    உங்களின் பாராட்டிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. ////Blogger thanusu said...
    நந்தன வருடத்துற்கு
    வந்தனம் சொல்லி
    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்////

    நல்லது நன்றி. உங்களுக்கும் எங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. ////Blogger தேமொழி said...
    உத்தராயண காலம் ஆரம்பிக்கும் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதம் என்று அறிவித்ததற்கு பதில், தட்சிணாயனம் காலம் ஆரம்பிக்கும் ஆடி மாதத்தை ஆண்டின் முதல் மாதம் என்றுஅறிவித்திருக்க வேண்டும். அப்பொழுது அது பள்ளியில் ஒவ்வொரு முறையும் அந்த நேரம் புதிய ஆண்டு தொடங்கும்

    மாணவர்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும். பிறகு அடுத்த தலைமுறையினர் யார் வந்து சொன்னாலும் அதெல்லாம் கப்சா என்று சொல்லிவிட்டு ஜூலை 15 ,
    16 நாட்களில் புத்தாண்டு கொண்டாட ஆரம்பித்திருப்பார்கள் அல்லவா.
    எல்லாம் நம் வசதிக்குத்தானே, கவலைப் படாதீர்கள் இளைய தலைமுறையினரே நான் ஆட்சிக்கு வந்ததும் கடக ராசியில் சூரியன் வரும் ஆடி ஒன்றுதான்
    புத்தாண்டு என்பது என் முதல் தீர்மானமாக இருக்கும். அதுவரை சித்திரை ஒன்றை புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருங்கள். (அப்படியே சட்ட சபை
    இருக்கைகளுக்கு மஞ்சள், பச்சை வண்ணங்கள் சரிப்பட்டு வராததால் வேறு ராசியான வண்ணம் எது என்பதை வாத்தியார் தெரிவிக்கவும், சட்டசபையை மீனம்பாக்கதிற்கு மாற்றலாமா, அல்லது ECR சாலை சரிப்படுமா என்ற யோசனையும் உள்ளது).
    வாத்தியாருக்கும், மற்ற அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க மகிழ்ச்சியுடன்./////

    வேறு ராசியான வண்ணம் - நீலம்தான்!
    சட்டசபையை ECR சாலையில் தொண்டி கடற்கரைக்கு அருகில் மாற்றிவிடலாம். ஹி..ஹி..எங்களுருக்கு மிக அருகில் உள்ள இடம்!

    ReplyDelete
  23. ////Blogger thanusu said...
    பார்வதி, சுந்தரி, தேமொழி, அனைவருக்கும் நன்றிகள். நான் நலம், சுனாமி ஆபத்து இல்லை என்று புருனை அரசாங்கம் அங்கீகரித்ததால் இன்று திரும்ப
    புருனைக்கே வந்து விட்டோம்.////

    நல்லது. வெஜிடபிள் புலவு சாதத்தை வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இருங்கள்.

    ReplyDelete
  24. /////Blogger thanusu said...
    தை ஒன்றையும் , ஆடி ஒன்றையும் (தே.மோ.க) கட்சிக்காரர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம்.
    ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கேர்ப்ப புத்தாண்டை மாற்றினாலும் மக்களின் மனதில் எப்போதும் இருப்பது சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருடப்
    பிறப்பு.////

    அதானே! உண்மை எப்போதும் உண்மைதான் .உண்மைக்கு ஒரே வடிவம்தான் வடிவேலன் கையில் இருக்கும் வேலைப்போல!

    ReplyDelete
  25. ////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான விளக்கங்களுடன் கூடிய அற்புதமான பதிவைத் தந்தமைக்கு நன்றி. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்./////

    உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    அனைவருக்கும் நந்தன ஆண்டு பிறப்புநாள் முன் தின வாழ்த்துக்கள்!
    அற்புதமான விளக்கம் ஐயா..நன்றி..வணக்கம்!/////

    நல்லது நன்றி. உங்களுக்கும் எங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. ////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    தமிழ்ப் புத்தாண்டுக்கான விளக்கத்துடன் கூடிய பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.நன்றி!!
    அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!/////

    நல்லது நன்றி. உங்களுக்கும் எங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  28. ///Blogger அய்யர் said...
    நித்திரையை கலைக்கும்
    சித்திரையே தமிழர் புத்தாண்டு என
    அம்மா சொன்னது
    சும்மா இல்லே உண்மையே என
    கட்டியம் சொல்லி வந்தது
    கருத்தான இன்றையவகுப்பறை பதிவு..
    அய்யா தை பற்றி சொல்வதெல்லாம்
    பொய்யே என சொல்லவைத்தது
    மேஷத்தில் தொடங்கி
    மீனத்தில் வந்து மீண்டும் தொடரும்
    நந்தன வருட புத்தாண்டு நன்மைகள்
    தந்தனம் என சொல்லியே வரட்டும்
    குந்தகங்கள் மாறி
    மந்தங்கள் பல நீங்கி
    சொந்தங்கள் கூடி சுகமாய் வாழ
    சாந்தம் (நிலத்திலும், நீரிலும்) நிலவ
    இறைவன் திருமுன்
    இப்பவும் வேண்டி நிற்கிறோம்..////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  29. ////Blogger Surya said...
    fantastic explanation/////

    உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. /////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Wish you all happy Tamil New years day.
    Ramadu/////

    நல்லது நன்றி. உங்களுக்கும் எங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. Blogger kmr.krishnan said...
    வாத்தியாருக்கும், சக வகுப்பறைத் தோழர்களுக்கும் நந்தன ஆண்டு வாழ்த்துக்கள்.
    கீழே கண்டுள்ளது என் அம்மாஞ்சி கிருஷ்ணகுமார் எழுதி அனுப்பிய கவிதை.
    "கடல் குலுங்க
    அணு பிளக்க
    அனல் தெறிக்க
    குடி கெடுக்க
    நதி வற்ற
    மணல் அள்ளி
    வளம் குன்ற
    உதிரம் சுண்ட
    சுற்றம் அற்று
    போனாலும்
    கலங்காதிரு
    தமிழ் மனமே !
    மும்மதுரை கடலடியில் சென்ற பின்பும்
    நிற்கின்றோம் முச்சங்கம் கண்ட தமிழ்
    மனுவையும் ஈன்றெடுத்த பாண்டியனே
    பண்டிதன் என்போர் பரதத்தில் பலருண்டு
    பல பிரளயங்கள் முடிவிலும் ஒரு தொடக்கமுண்டு
    தொடங்கவே திரு ஒற்றி ஊரும் உண்டு
    திரு ஒற்றியூர் ஈசன்
    அடி ஒற்றி முடி தொட்டு
    வணங்கி வாழ்க வளமுடன் என்று
    வாழ்த்தும்
    சத்திய வாகீசன்
    கிருஷ்ணகுமார்"
    பின் குறிப்பு :
    சென்னையில் "நந்தனம்" என்று ஒரு இடத்திற்கு இதே நாளில் 60 வருடங்களுக்கு முன்பு பெயரிட்ட திரு .ராஜகோபாலாச்சாரியாரின் நினைவு
    போற்றுதற்குரியது./////

    வாழ்க உங்கள் அம்மாஞ்சி உறவினர் வளர் கவிதை தந்ததினால்!
    நந்தன வருடத்தின் பெயரை சென்னையின் ஒரு பகுதிக்குப் பெரியவர் சூட்டியதன் காரணம் இன்று உங்களால அனைவருக்கும் தெரியவந்துள்ளது. அத்ற்கும் ஒரு
    நன்றி!

    ReplyDelete
  32. /////Blogger Thanjavooraan said...
    என் நண்பரும், எங்கள் அலுவலக உயர் அதிகாரியாகப் பணியாற்றியவரும், சிறந்த கவிஞருமான திரு என்.வி.சுப்பராமன் அவர்கள் எழுதி அனுப்பிய

    கவிதையை என்னுடைய நந்தன வருட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தாக வகுப்பறை நண்பர்கள் யாவர்க்குமாய் அர்ப்பணிக்கிறேன்.
    நந்தன ஆண்டு

    நந்தன ஆண்டு பிறக்கட்டும்
    நல்லன எல்லாம் மலரட்டும்
    வந்தனை செய்து வரவேற்போம்
    நிந்தனை தன்னை மறந்திடுவோம்!

    அன்பும் அமைதியும் பெருகட்டும்
    அறங்கள் அனைத்தும் வளரட்டும்
    உழைப்பு நன்றாய் பெருகட்டும்
    ஊழல்கள் அனைத்தும் மறையட்டும்!

    நல்லவர் அரசு அமைக்கட்டும்
    வல்லவர் நாட்டைக் காக்கட்டும்
    தொல்லைகள் தொலைந்து போகட்டும்
    அல்லவை தேய்ந்து மடியட்டும்!

    உலகில் அமைதி ஓங்கட்டும்
    பலரும் நேர்மை காக்கட்டும்
    வளரும் கவிஞன் சிறக்கட்டும்
    உலகம் மகிழ்வொடு வாழட்டும்!
    என் வி சுப்பராமன்///////

    நல்லது. நன்றி கோபாலன் சார்!
    திரு என்.வி.சுப்பராமன் அவர்கள் எழுதிய கவிதைக்கும் ஒரு விசேட நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  33. //////Blogger பிரகாசம் said...
    புத்தாண்டு பற்றித் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
    அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்/////

    உங்களின் பாராட்டிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!!

    ReplyDelete
  34. /////Blogger santhanakuzhali said...
    எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ,
    பெரியோர்களை நமஸ்கரித்து வணங்குகிறேன்,
    சிறியவர்களை எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று நீடூடிவாழ வாழ்த்துகிறேன்.
    எல்லோருக்கும் நந்தன வருடம் ஆரோக்கியத்தையும்,மன மகிழ்ச்சி,நிம்மதியையும் தர எல்லாம்வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்./////

    உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!
    உங்களுக்கும் எங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. ////Blogger balajikrishnan10 said...
    Guru vannakkam.
    Thanks for your clarification between Thamizar Thirunal and Tamil new day.
    My wishes to you all for a prosperous and happy nandhana new year/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. /////Blogger ananth said...
    வாத்தியாருக்கும், சக மாணவர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக./////

    உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி ஆனந்த்!
    உங்களுக்கும் எங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com