9.4.12

Numerology உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?

-----------------------------------------------------------------------
உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?

எண் ஏழு!

ஏழாம் எண் கேதுவிற்கு உரியது. சிந்தனையாளர்களுக்கும், தத்துவஞானி களுக்கும் உரியது.

கேது ஆன்ம மலர்ச்சிக்கு உரிய கிரகமாகும். அதன்காரணமாக இந்த எண்காரர்கள், ஆன்மீக சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். தான் யார், தன் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதைபற்றி எல்லாம் தெரிந்துகொள்ளும் முனைப்பாடு இருக்கும்.

எண் ஏழு எல்லா எண்களையும்விட ஆத்மார்ந்தமானது. ஆத்ம உணர்வு கொண்டது. ஆத்ம திருப்தியைத் தேடிப்பிடிக்கும் சக்தியை உடையது. ஏழாம் எண்காரர்கள் எதையும் தேடிப்பிடித்து, அறிந்து தெளியக் கூடியவர்கள்.

ஆராய்ந்தறியும் மனப்பான்மை கொண்டவர்கள். அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள். குறிப்பிட்ட செயலில் தன்முனைப்போடு செயலாற்றுபவர்களாக இருப்பார்கள். விஞ்ஞானபூர்வமாக எதையும் அனுகுபவர்களாக இருப்பார்கள். ஒருமுறைக்கு இருமுறை எதையும் சிந்தித்துத் செயல்படுபவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மற்றவர்களுக்குப் புதிரானவர்களாக இருப்பார்கள்.

உண்மையை விரும்புவர்களாக, உண்மையைத் தேடுபவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள். ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள்

இந்த எண்ணில் பிறந்த கலைஞர்கள், தங்கள் கனவுகளையும் எண்ணங்களையும், கவிதை அல்லது நாடக வடிவில் வெளிப்படுத்துவார்கள். எதையும் உன்னிப்பாகக் கவனிப்பதும், ஆராய்வதும் அவர்களுடன் பிறந்த இயற்கைக் குணமாகும்.
அதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே ஒரு உந்துசக்தி உடன் இருக்கும் (intuitive power). அந்த உந்துதலின் காரணமாக இந்த எண்ணில் பிறந்த சிலர்,மந்திர தந்திர சாஸ்திரங்கள், மாயாஜாலங்கள் போன்றவற்றில் ஈடுபாடு
கொண்டவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஜோதிடத்தில் அதீதமான ஆர்வம்/ஞானம் இருக்கும்.

அத்தகைய அதீத ஆற்றல்களால், இந்த எண்காரர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்குவார்கள். சிலருக்கு அத்திறமைகளை வைத்துப் பெரும் பொருள்/செல்வம் சேரும்.

ஏழாம் எண்காரர்கள் பழகுவதற்கு மென்மையானவர்கள். இனிமையானவர்கள். அதன் காரணமாக அவர்களைச் சுற்றி உள்ளவர்கள், தங்களுடைய ரகசியங் களையும், உணர்வுகளையும், அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

இந்த எண்காரர்கள் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், (ஓவியம், நடனம், நடிப்பு மற்றும்) இசைக்கலைஞர்களாகவும் பரிணமளிப்பார்கள்.அதாவது அந்தத் துறைகளுக்குச் சென்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

இந்த எண்காரர்கள் இயற்கையை இரசிப்பார்கள். அமைதியையும், நிம்மதியையும் அதிகம் விரும்புவார்கள். இன்னும் சொல்லப்போனால் அவற்றைப் போற்றுவார்கள்.

தங்களைச் சுற்றிப் பலர் வலம் வரும் வாய்ப்பு இருக்கும்போதும், அல்லது சூழ்நிலை இருந்தாலும், ஏழாம் எண்காரர்கள் தனிமை விரும்பிகள். தனிமையில் பணியாற்றும்போது சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

career choices: Scientist, religious leader, philosopher, scholar, preacher, sage, teacher, inventor, researcher.

மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவது இந்த எண்காரர்களுக்குச் சிரமமான விஷயம். தனிமை நல்லதுதான். ஆனால் தனிமைப்பட்டுப் போய்விடக்கூடாது. அதை இந்த எண்காரர்கள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

Intimacy might be difficult for them. Some of them can be cynical, selfish, egocentric,
withdrawn, aloof, lonely, overly reserved and suspicions. They should be careful not to
become too inward and isolated.

தங்களுக்கு உள்ள பொதுக்குணங்களால், இந்த எண்காரர்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். அதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல இந்த எண் உலகியல் வாழ்க்கைக்கு ஒத்துவராத எண்ணாகும்.
Number seven Can be a curse for worldly life. திருமண வாழ்வில் கசப்பு உண்டாகலாம். எந்த வயதில் வேண்டுமென்றாலும் உண்டாகலாம். ஆகவே இந்த எண்காரர்கள் அவற்றில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்

நட்பு எண்கள்: 8, 6, 5
பகையான எண்கள்: 1, 2, 9
உரிய நாள்: திங்கட்கிழமை
உரிய நிறம்: வெண்மை
நவரத்தினக்கல்: வைடூரியம் (Cat's eye)


----------------------------------------------------------
உரிய தொழில்கள்: கலைஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையளர்கள், திரைப்படத்தயாரிப்பாளர்கள்.
திருமணம் மற்றும் தொழிலுக்கு இசைந்து வரக்கூடிய எண்கள்: 3, 6, 7

நமது வகுப்பறையில் எத்தனை ஞானிகள் அல்லது ஞானிகளாகப் போகிறவர்கள் இருக்கிறீர்கள்? ஏழாம் எண்ணிற்கு உரியவர்கள் இருக்கிறீர்கள்? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++=====

வாழ்க வளமுடன்!

51 comments:

  1. நானும் இந்த நம்பர் தான். அத்தனையும் உண்மை.
    http://astrovanakam.blogspot.in/

    ReplyDelete
  2. ஐயா ,


    அருமை ஞானகாரகனின் எண் அல்லவா?.ஞானத்திற்குப்பஞ்சமா.இவர்கள் தான் அறிவுச்சுரங்கம் ஆயிற்றே?.அடுக்களை முதல் அணுவிஞ்ஞானம் வரைக்கும் பேசுவார்கள்.ஆனால் இவர்களுக்கு எந்தவொரு விஷயமும் மிகப்பெரிய போராட்டத்திற்குப்பிறகே அமையும்.பலதடைகளை,இடையூறுகளை அனுபவித்துத்தான் ஒவ்வொன்றையும் அடைய வேண்டியிருக்கும்.ஆனால் ஒன்றை இழந்துதான் மற்றொன்றை அடைவார்கள்.காரணம் கேதுவின் முழு ஆதிக்கமும் உள்ள போது இப்படித்தான் இருக்கும்.அதாவது நெறிப்படுத்துதல் என்பதை கேது மிகவும் முறையாகச் செய்பவர்.அதன் மூலம் தான் ஞானம் வரும்,வாழ்க்கையின் தத்துவத்தை அவர் யாராக இருந்தாலும் உணர்த்தாமல் விடுவதில்லை.எப்போதுமே எதையோ ஒன்றை இழந்தது போல் தான் இருப்பார்கள்.



    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இவர்களுக்கு அனுபவமே கைகொடுக்கும்,அன்று அத்தனை பேர் முன்னிலையில் நம்மை அவ்வளவு கேவலப்படுத்தினார்களே என்று வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்ந்த சின்னசின்ன விஷயங்களை நினைத்து வருந்துவார்கள்.அவ்வாறே அவர்களது மனமும் நெறிப்பட்டு விடும்.



    மேலும் கேதுவின் முழு ஆதிக்க‌மும் இருப்ப‌தால் ஆன்மிக‌த்தின்பால் மன‌ம் நாட்ட‌ம் கொள்ளும்,சில‌ர் குறிப்பிட்ட‌வ‌ய‌திற்கு மேல் ம‌ட‌ம்,மார்க்க‌ம் என்று செல்ல‌வும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்,மொத்த‌தில் ப‌ட்டையும்,ருத்திராட்சக்கொட்டையுமாக‌ இருப்பார்க‌ள்.ஞான‌ப்ப‌ழ‌மாக‌ காட்சிய‌ளிப்பார்க‌ள்.மதம் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.


    எல்லோரையும் போல் உலக சுகங்களை நினைத்து ஏங்குவர்.அதற்காக பிரம்மபிரயத்தனம் எல்லாம் செய்வர்,ஆனால் அது கிடைக்கும் போது அவர்களே அதை வெறுத்தும் விடுவர். உதாரணம் சொன்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவி தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக குண்டுமணி தங்கம் கூட அணியாமல் இருந்தவர்.எல்லாரும் சொல்வார்கள் எவ்வளவோ இருக்கு அவரிடம் ஆனால் குண்டுமணித்தங்கம் கூட அணியாமல் இருக்கிறார் என்பார்கள்.வாழ்வின் நிலையாமையை கேதுபகவான் உணர்த்திவிடுவார்.



    கையில் காசு இல்லாத போது அதை நினைத்து ஏங்குவர்,ஆனால் கையில் கிடைக்கும்போது இவை எல்லாம் அச்சடித்த காகிதங்கள் என்று அள்ளி எறிந்துவிடுவதும் உண்டு.உதாரணம் சொன்னால் பட்டினத்தார் அவர்களை சொல்லாம்.ஏனெனில் கேது சம்பந்தப்படும்போது எல்லாம் தடை,தாமதம் என்று மிகப்பெரிய போராட்டத்திற்குப்பிறகு தான் கிடைக்கும்,அந்தப்போராட்டத்தில் மனம் பக்குவப்பட்டுவிடும்,எல்லாம் மாயை என்று உணர்த்திவிடுவார்.



    9 கிரகங்களில் கேதுபகவான் தான் மிகவும் வலிமையானவர்.அதை நமது ஜோதிடம் அழகாகச் சொல்கிறது.அதாவது கெடுதல் செய்வதனாலும், நன்மை செய்வதானாலும் கேதுவை மிஞ்ச ஆள் இல்லை.கிரகவலிமையை பழைய ஜோதிட நூல்கள் அழகாகச் சொல்கின்றன அதாவது புதனை விட செவ்வாய்,செவ்வாயை விட சனி,சனியை விட குரு,குருவை விட சுக்கிரன்,சுக்கிர‌னை விட‌ சூரிய‌ன்,சூரிய‌னை விட‌ ச‌ன்திர‌ன்,ச‌ன்திர‌னை விட‌ ராகு,ராகுவை விட‌ கேதுவும் வ‌லிமையான‌வ‌ர்க‌ள் எனச் சொல்கிற‌து.



    அதையே அறிவியலும் ராகு,கேது என்பவை குறிக்கும் புள்ளிகள் முறையே செறிவு மிகுந்த(கற்பனை செய்யமுடியாத அளவுக்கு) மின்காந்த அலைகள் நிறைந்த இடங்கள் எனக்குறிக்கிறது.எவ்வளவு வலிமையான பொருளும் அந்த இடத்தை நெருங்கும்போது தன் வலிமையை முற்றிலும் இழந்து செயலிழந்து போவதாகவும் குறிக்கிறது.காலசர்ப்பதோஷத்தில் அனைத்துக்கிரகங்களும் ராகு,கேதுவின் பிடிக்குள் சிக்கித்தான் சின்னாபின்னமாகி செயலிழந்து விடுகின்றன.இப்போது புரியும் ராகு,கேதுவின் வலிமை.


    கேது ஆளும் நட்சத்திரங்களான அசுவினி,மகம்,மூலம் இவற்றில் பிறந்தோர் எப்போதுமே பெரியவிஷயங்களை முன்னிறுத்தியே காய்களை நகர்த்துவர்.அதில் வெற்றியடையும் வரை போராடி ஜெயித்தும்விடுவர்.



    சமானிய மனித வாழ்வில் பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக வைத்து நகர்வதால் நம்மில் 100 க்கு 99 சதவீதம் பேர் கஷ்டம் என்ற ஒன்று வரும்போது தான் பணத்தால் தீர்க்கமுடியாத விஷயங்களும் இந்த உலகில் இருக்கின்றன என்றுஉணர்ந்து வருந்துகிறோம்.மன்னர்களும் வந்து வணங்கிய துறவிகளும் இப்பாரத மண்ணில் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கேதுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் தான்.நாடாளும் மன்னனும் பிடிசாம்பலாவான் ஒருநாள், வாழும்வரைதான் எதுவும் என்பதை உணர்ந்து வீடுபேற்றை அடைய கேதுபகவானின் ஆசி தேவை.ஜோதிடத்தில் கேது என்றாலே மிகவும் தீயகிரகம்,தீமை செய்வது மட்டுமே அவருக்கு வேலை எனும் கருத்து நிலவுகிறது.


    அவரன்றி ஞானம் கிட்டாது,தவ நிலை எய்த அவரது அருள்கடாட்சம் தேவை.கேது பகவானின் மேன்மை அறிந்து போற்றுவோமாக!!!!!!

    ReplyDelete
  3. அருமையான பதிவைத் தந்ததற்கு நன்றி.

    திரு. ராஜாராம் அவர்களின் மேலதிகத் தகவல்களும் அருமை. நன்றி..

    ReplyDelete
  4. நல்ல பதிவு அய்யா!நன்றி.

    ராஜாராமுக்குச் சின்ன வாத்தியார் பட்டமும், ஆனந்துக்கு பதவி உயர்வு கொடுத்து உதவித் தலைமை ஆசிரிய‌ர் பட்டமும் அளிக்க‌லாமா?

    ராஜாராமுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு அய்யா!நன்றி.

    ராஜாராமுக்குச் சின்ன வாத்தியார் பட்டமும், ஆனந்துக்கு பதவி உயர்வு கொடுத்து உதவித் தலைமை ஆசிரிய‌ர் பட்டமும் அளிக்க‌லாமா?

    ராஜாராமுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. அய்யா வணக்கம்,
    நான் தங்களுடைய மாணவன் என்பது தங்களுக்கு தெரிந்ததே
    நான் தொடர்ந்து நான் தாங்கள் நடத்தும் மேல்நிலை பாடங்களை படிக்க விரும்புகிறேன்
    அய்யா அவர்கள் எனக்கு அந்த பொன்னான வாய்ப்பை வழங்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி..

    ReplyDelete
  7. Ayya, Ponaal pogattum poda paattu sariyaaka porunthumaa inge?

    ReplyDelete
  8. இன்று பக்தி.

    இது என் இராண்டாவது மகள் (REHAAN) ரேஹான் அவர்களின் பிறந்த தேதி.

    கூட்டு எண்ணுக்கு தோதாக வைக்கப்பட்ட பெயர்.

    மண்ணின் பக்தி ,அமைதி, ஈகை , இறையுணர்வு ,இவர்களின் பலம்.

    பலவீனம்;சொந்தமாக குழம்பி போவார்கள்.

    பக்தியில் முக்தி அடைந்த நம் ஊர் பிரபலம் ; வாரியார்

    உலகுக்கு ; இயேசு பிரான்

    ReplyDelete
  9. Rajaram said...ஞானகாரகனின் எண் அல்லவா?.ஞானத்திற்குப்பஞ்சமா.இவர்கள் தான் அறிவுச்சுரங்கம் ஆயிற்றே......

    தொடரட்டும் உங்களின் பங்களிப்பு.

    ReplyDelete
  10. ஏழு இதை எந்த எண்ணுடனும்
    வகுத்துப் பாருங்கள் வரும் விடையை பார்த்து ஆச்சரியபடலாம்.

    ஏழாம் அறிவு..
    ஏழு பிறப்பு

    ஏழு உலகம்
    வானவில்லும் ஏழு
    சுவரங்களும் ஏழு

    உயிர் பிறப்பை நிர்ணயிக்கும்
    ஏழு வாரங்கள்..

    success என்ற வார்த்தையிலும் ஏழு எழுத்துக்கள்
    failure என்ற வார்தையிலும் ஏழு எழுத்துக்கள்


    என நீளும் பட்டியலில்
    இஸ்லாத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த எண்ணின் பலத்தை
    நட்பிற்கினிய சப்பான் தோழர் சொல்லுவார்

    எண்களைப் பற்றி வகுப்பறை தோழர்கள் எண்ணிக் கொண்டிருப்பதால்

    எண்ணங்களை பற்றி அய்யர் எண்ணிக் கொண்டிருக்கிறார்..

    ReplyDelete
  11. ஏழு இதை எந்த எண்ணுடனும்
    வகுத்துப் பாருங்கள் வரும் விடையை பார்த்து ஆச்சரியபடலாம்.

    ஏழாம் அறிவு..
    ஏழு பிறப்பு

    ஏழு உலகம்
    வானவில்லும் ஏழு
    சுவரங்களும் ஏழு

    உயிர் பிறப்பை நிர்ணயிக்கும்
    ஏழு வாரங்கள்..

    success என்ற வார்த்தையிலும் ஏழு எழுத்துக்கள்
    failure என்ற வார்தையிலும் ஏழு எழுத்துக்கள்


    என நீளும் பட்டியலில்
    இஸ்லாத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த எண்ணின் பலத்தை
    நட்பிற்கினிய சப்பான் தோழர் சொல்லுவார்

    எண்களைப் பற்றி வகுப்பறை தோழர்கள் எண்ணிக் கொண்டிருப்பதால்

    எண்ணங்களை பற்றி அய்யர் எண்ணிக் கொண்டிருக்கிறார்..

    ReplyDelete
  12. ஹி. ஹி. ஹீ. ...எனக்கென்னமோ இந்த எண் உள்ளவர்கள் கொஞ்சம் போரடிக்கிற ஆட்கள் மாதிரி தோன்றுகிறது. அசந்தா அடுத்தவங்களையும் சாமியராக்கிடுவாங்க போலிருக்கிறது. நல்ல வேலை எனக்குத் தெரிந்தும் என்னைச்சுற்றியும் இந்த எண் உள்ளவர்கள் யாரும் இல்லை. நல்ல தகவல் உள்ள பதிவு, நன்றி ஐயா.

    ReplyDelete
  13. ஏழு உலக அதிசயங்கள்....சப்த ரிஷிகள் ...ஏழுமலையானே வெங்கடா ரமணா ......

    ReplyDelete
  14. அய்யர் said... எண்ணங்களை பற்றி அய்யர் எண்ணிக் கொண்டிருக்கிறார்..

    எதற்கு எண்ணிக்கொண்டு , என்னிக்கொண்டு மனதில் உள்ளதை பூட்டு உடையுங்கள் , காசா பணமா?

    ReplyDelete
  15. ///thanusu said...
    அய்யர் said... எண்ணங்களை பற்றி அய்யர் எண்ணிக் கொண்டிருக்கிறார்..

    எதற்கு எண்ணிக்கொண்டு , என்னிக்கொண்டு மனதில் உள்ளதை பூட்டு உடையுங்கள் , காசா பணமா?///

    காசு பணம் என்றால் பரவாயில்லை..
    சம்பாதித்தது போதும் என்ற நிலையிலும்
    பணம் சம்பாதிப்பது சுலபம் தானே..

    இது எண்ணங்கள்..
    என்ன விலை தந்தாலும் வாங்க முடியாதது..

    அங்கு வந்த பிறகு
    அதன் மதிப்பு உங்களுக்கு புரியும்

    அது வரை காத்திருக்கிறோம்
    அன்பு வாழ்த்துக்களை தந்த படி

    ReplyDelete
  16. ஐயாவிற்கு வணக்கம்!

    எனது மகனார் 7ம் தேதி பிறந்தவர்! ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே 100 வருடக் காலண்டர் அத்துபடி! தேதி சொன்னால் கிழமை சொல்லுவார்! தற்போது ராகுதிசை நடப்பதால் சற்று மந்தபுத்தி நிலவினாலும், கணக்குப் பரிட்சைக்கு மட்டும் படிக்காமலே சென்று எழுதிவிடுவார்!

    கலைத்துறையிலும் ஈடுபாடு அதிகம்!

    ReplyDelete
  17. வணக்கம் அய்யா. என் பெரிய மகனின் எண் ஏழு. கூட்டு எண் இரண்டு. வயது மூன்றுதான் ஆகிறது. போக போக தான் தெரியும் எப்படி இருக்கிறான் என்று.
    இப்போ வரைக்கும் , அவர் இடது கை பழக்கம் உள்ளவன். ஒவ்வொரு முறையும் டாக்டர் ஆபீஸ் செல்லும் போது அங்கு இருபர்வர்கள் , "Oh left hand, who knows he may become
    president , as in US history most of the presidents are left handed". எங்களுக்கு முதல் முறை கேட்க நல்லா இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சொல்வதால் , நம்மை நன்றாக ஒட்டி எடுகிறார்கள் என்று வழிந்து விட்டு வருவோம். ஆனால் அவனுடைய புரிந்து கொள்ளும் திறனும் விதியசமாகதான் உள்ளது. எனது இரண்டாம் மகனின் நக்ஷத்ரம்
    மகம் .கேது பகவானின் ஆதிக்கம். கேது திசை நடக்கிறது. என் கணவருக்கும் கேது திசை என் தந்தைக்கும் கேது திசை ....தம்பிக்கு ராகு திசை.....சும்மா சொல்லக் கூடாது , கடவுள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை நடத்தி வருகிறார்.

    @ rajaram, நிறைய தகவல்கள் சேகரித்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    kalai seattle

    ReplyDelete
  18. Blogger rajesh said...
    நானும் இந்த நம்பர் தான். அத்தனையும் உண்மை.
    http://astrovanakam.blogspot.in/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. Blogger Rajaram said...
    ஐயா ,
    அருமை ஞானகாரகனின் எண் அல்லவா?.ஞானத்திற்குப்பஞ்சமா.இவர்கள் தான் அறிவுச்சுரங்கம் ஆயிற்றே?.அடுக்களை முதல் அணுவிஞ்ஞானம் வரைக்கும் பேசுவார்கள்.ஆனால் இவர்களுக்கு எந்தவொரு விஷயமும் மிகப்பெரிய போராட்டத்திற்குப்பிறகே அமையும்.பலதடைகளை,இடையூறுகளை அனுபவித்துத்தான் ஒவ்வொன்றையும் அடைய வேண்டியிருக்கும்.ஆனால் ஒன்றை இழந்துதான் மற்றொன்றை அடைவார்கள்.காரணம் கேதுவின் முழு ஆதிக்கமும் உள்ள போது இப்படித்தான் இருக்கும்.அதாவது நெறிப்படுத்துதல் என்பதை கேது மிகவும் முறையாகச் செய்பவர்.அதன் மூலம் தான் ஞானம் வரும்,வாழ்க்கையின் தத்துவத்தை அவர் யாராக இருந்தாலும் உணர்த்தாமல் விடுவதில்லை.எப்போதுமே எதையோ ஒன்றை இழந்தது போல் தான் இருப்பார்கள்.
    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இவர்களுக்கு அனுபவமே கைகொடுக்கும்,அன்று அத்தனை பேர் முன்னிலையில் நம்மை அவ்வளவு
    கேவலப்படுத்தினார்களே என்று வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்ந்த சின்னசின்ன விஷயங்களை நினைத்து வருந்துவார்கள்.அவ்வாறே அவர்களது மனமும் நெறிப்பட்டு விடும்.
    மேலும் கேதுவின் முழு ஆதிக்க‌மும் இருப்ப‌தால் ஆன்மிக‌த்தின்பால் மன‌ம் நாட்ட‌ம் கொள்ளும்,சில‌ர் குறிப்பிட்ட‌வ‌ய‌திற்கு மேல் ம‌ட‌ம்,மார்க்க‌ம் என்று
    செல்ல‌வும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்,மொத்த‌தில் ப‌ட்டையும்,ருத்திராட்சக்கொட்டையுமாக‌ இருப்பார்க‌ள்.ஞான‌ப்ப‌ழ‌மாக‌ காட்சிய‌ளிப்பார்க‌ள்.மதம் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.
    எல்லோரையும் போல் உலக சுகங்களை நினைத்து ஏங்குவர்.அதற்காக பிரம்மபிரயத்தனம் எல்லாம் செய்வர்,ஆனால் அது கிடைக்கும் போது அவர்களே அதை வெறுத்தும் விடுவர். உதாரணம் சொன்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவி தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றத்திற்காக குண்டுமணி தங்கம் கூட அணியாமல் இருந்தவர்.எல்லாரும் சொல்வார்கள் எவ்வளவோ இருக்கு அவரிடம் ஆனால் குண்டுமணித்தங்கம் கூட அணியாமல் இருக்கிறார்
    என்பார்கள்.வாழ்வின் நிலையாமையை கேதுபகவான் உணர்த்திவிடுவார்.
    கையில் காசு இல்லாத போது அதை நினைத்து ஏங்குவர்,ஆனால் கையில் கிடைக்கும்போது இவை எல்லாம் அச்சடித்த காகிதங்கள் என்று அள்ளி எறிந்துவிடுவதும் உண்டு.உதாரணம் சொன்னால் பட்டினத்தார் அவர்களை சொல்லாம்.ஏனெனில் கேது சம்பந்தப்படும்போது எல்லாம் தடை,தாமதம் என்று
    மிகப்பெரிய போராட்டத்திற்குப்பிறகு தான் ிடைக்கும்,அந்தப்போராட்டத்தில் மனம் பக்குவப்பட்டுவிடும்,எல்லாம் மாயை என்று உணர்த்திவிடுவார்.
    9 கிரகங்களில் கேதுபகவான் தான் மிகவும் வலிமையானவர்.அதை நமது ஜோதிடம் அழகாகச் சொல்கிறது.அதாவது கெடுதல் செய்வதனாலும், நன்மை
    செய்வதானாலும் கேதுவை மிஞ்ச ஆள் இல்லை.கிரகவலிமையை பழைய ஜோதிட நூல்கள் அழகாகச் சொல்கின்றன அதாவது புதனை விட
    செவ்வாய்,செவ்வாயை விட சனி,சனியை விட குரு,குருவை விட சுக்கிரன்,சுக்கிர‌னை விட‌ சூரிய‌ன்,சூரிய‌னை விட‌ ச‌ன்திர‌ன்,ச‌ன்திர‌னை விட‌ ராகு,ராகுவை
    விட‌ கேதுவும் வ‌லிமையான‌வ‌ர்க‌ள் எனச் சொல்கிற‌து.
    அதையே அறிவியலும் ராகு,கேது என்பவை குறிக்கும் புள்ளிகள் முறையே செறிவு மிகுந்த(கற்பனை செய்யமுடியாத அளவுக்கு) மின்காந்த அலைகள்
    நிறைந்த இடங்கள் எனக்குறிக்கிறது.எவ்வளவு வலிமையான பொருளும் அந்த இடத்தை நெருங்கும்போது தன் வலிமையை முற்றிலும் இழந்து செயலிழந்து போவதாகவும் குறிக்கிறது.காலசர்ப்பதோஷத்தில் அனைத்துக்கிரகங்களும் ராகு,கேதுவின் பிடிக்குள் சிக்கித்தான் சின்னாபின்னமாகி செயலிழந்து
    விடுகின்றன.இப்போது புரியும் ராகு,கேதுவின் வலிமை.
    கேது ஆளும் நட்சத்திரங்களான அசுவினி,மகம்,மூலம் இவற்றில் பிறந்தோர் எப்போதுமே பெரியவிஷயங்களை முன்னிறுத்தியே காய்களை நகர்த்துவர்.அதில் வெற்றியடையும் வரை போராடி ஜெயித்தும்விடுவர்.
    சமானிய மனித வாழ்வில் பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக வைத்து நகர்வதால் நம்மில் 100 க்கு 99 சதவீதம் பேர் கஷ்டம் என்ற ஒன்று வரும்போது தான் பணத்தால் தீர்க்கமுடியாத விஷயங்களும் இந்த உலகில் இருக்கின்றன என்றுஉணர்ந்து வருந்துகிறோம்.மன்னர்களும் வந்து வணங்கிய துறவிகளும் இப்பாரத மண்ணில் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கேதுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் தான்.நாடாளும் மன்னனும்
    பிடிசாம்பலாவான் ஒருநாள், வாழும்வரைதான் எதுவும் என்பதை உணர்ந்து வீடுபேற்றை அடைய கேதுபகவானின் ஆசி தேவை.ஜோதிடத்தில் கேது என்றாலே
    மிகவும் தீயகிரகம்,தீமை செய்வது மட்டுமே அவருக்கு வேலை எனும் கருத்து நிலவுகிறது.
    அவரன்றி ஞானம் கிட்டாது,தவ நிலை எய்த அவரது அருள்கடாட்சம் தேவை.கேது பகவானின் மேன்மை அறிந்து போற்றுவோமாக!!!!!!/////

    ஆகா, கேது பகவானைப் போற்றுங்கள். நல்லது. உங்களின் மேலதிகத் தகவல்களுக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  20. ////Blogger Parvathy Ramachandran said...
    அருமையான பதிவைத் தந்ததற்கு நன்றி.
    திரு. ராஜாராம் அவர்களின் மேலதிகத் தகவல்களும் அருமை. நன்றி..////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. ////Blogger kmr.krishnan said...
    நல்ல பதிவு அய்யா!நன்றி.
    ராஜாராமுக்குச் சின்ன வாத்தியார் பட்டமும், ஆனந்துக்கு பதவி உயர்வு கொடுத்து உதவித் தலைமை ஆசிரிய‌ர் பட்டமும் அளிக்க‌லாமா?
    ராஜாராமுக்குப் பாராட்டுக்கள்./////

    என்னைக் கேட்டா எல்லாம் நடக்கிறது? உங்களின் விருப்பப்படி நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். யாருக்கு வேண்டுமென்றாலும் என்ன பட்டம்
    வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். காசா - பணமா? வாய்வார்த்தைதானே. தாராளமாகக் கொடுங்கள். அப்படியே தேமொழி அவர்களுக்கும், பார்வதி
    ராமச்சந்திரன் அவர்களுக்கும் என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதையும் சொல்லுங்கள். கடைசி பெஞ்சில் யார் யாரை உட்கார வைக்கலாம். முதல் பெஞ்சில் யார் யாரை உட்கார வைக்கலாம் என்பதையும் சொல்லுங்கள்.மணி அடிக்கும் வேலை யாருக்கு என்பதையும், சட்டாம்பிள்ளை வேலை யாருக்கு என்பதையும் நீங்களே சொல்லுங்கள்!:-))))

    ReplyDelete
  22. ////Blogger arul said...
    arumayana katurai////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. Blogger Bala said...
    அய்யா வணக்கம்,
    நான் தங்களுடைய மாணவன் என்பது தங்களுக்கு தெரிந்ததே
    நான் தொடர்ந்து நான் தாங்கள் நடத்தும் மேல்நிலை பாடங்களை படிக்க விரும்புகிறேன்
    அய்யா அவர்கள் எனக்கு அந்த பொன்னான வாய்ப்பை வழங்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி..////

    அடுத்த வண்டியில் (Next Batch) உங்களுக்கு இடம் உண்டு!

    ReplyDelete
  24. ////Blogger காலிங்கன் said...
    Ayya, Ponaal pogattum poda paattu sariyaaka porunthumaa inge?////

    ஆகா பொருந்தும். அத்துடன் இன்னொரு பாட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்: யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா..போங்க!

    ReplyDelete
  25. ///Blogger thanusu said...
    இன்று பக்தி.
    இது என் இராண்டாவது மகள் (REHAAN) ரேஹான் அவர்களின் பிறந்த தேதி.
    கூட்டு எண்ணுக்கு தோதாக வைக்கப்பட்ட பெயர்.
    மண்ணின் பக்தி ,அமைதி, ஈகை , இறையுணர்வு ,இவர்களின் பலம்.
    பலவீனம்;சொந்தமாக குழம்பி போவார்கள்.
    பக்தியில் முக்தி அடைந்த நம் ஊர் பிரபலம் ; வாரியார்
    உலகுக்கு ; இயேசு பிரான்////

    நல்லது. நன்றி தனுசு!

    ReplyDelete
  26. /////Blogger அய்யர் said...
    ஏழு இதை எந்த எண்ணுடனும்
    வகுத்துப் பாருங்கள் வரும் விடையை பார்த்து ஆச்சரியபடலாம்.
    ஏழாம் அறிவு..
    ஏழு பிறப்பு
    ஏழு உலகம்
    வானவில்லும் ஏழு
    சுவரங்களும் ஏழு
    உயிர் பிறப்பை நிர்ணயிக்கும்
    ஏழு வாரங்கள்..
    success என்ற வார்த்தையிலும் ஏழு எழுத்துக்கள்
    failure என்ற வார்தையிலும் ஏழு எழுத்துக்கள்
    என நீளும் பட்டியலில்
    இஸ்லாத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த எண்ணின் பலத்தை
    நட்பிற்கினிய சப்பான் தோழர் சொல்லுவார்
    எண்களைப் பற்றி வகுப்பறை தோழர்கள் எண்ணிக் கொண்டிருப்பதால்
    எண்ணங்களை பற்றி அய்யர் எண்ணிக் கொண்டிருக்கிறார்..////

    எங்களுக்காக் எண்ணுவதால், நீங்கள் எதை எண்ணினாலும் அது சரிதான் விசுவநாதன்!

    ReplyDelete
  27. ////Blogger தேமொழி said...
    ஹி. ஹி. ஹீ. ...எனக்கென்னமோ இந்த எண் உள்ளவர்கள் கொஞ்சம் போரடிக்கிற ஆட்கள் மாதிரி தோன்றுகிறது. அசந்தா அடுத்தவங்களையும்
    சாமியராக்கிடுவாங்க போலிருக்கிறது. நல்ல வேலை எனக்குத் தெரிந்தும் என்னைச்சுற்றியும் இந்த எண் உள்ளவர்கள் யாரும் இல்லை. நல்ல தகவல் உள்ள பதிவு, நன்றி ஐயா.////

    அதானே! எங்களை விட்டு விடுங்கடா சாமிகளா!

    ReplyDelete
  28. ///Blogger தேமொழி said...
    ஏழு உலக அதிசயங்கள்....சப்த ரிஷிகள் ...ஏழுமலையானே வெங்கடரமணா ......////

    ஓம்நமசிவாய!

    ReplyDelete
  29. ////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயாவிற்கு வணக்கம்!
    எனது மகனார் 7ம் தேதி பிறந்தவர்! ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே 100 வருடக் காலண்டர் அத்துபடி! தேதி சொன்னால் கிழமை சொல்லுவார்!

    தற்போது ராகுதிசை நடப்பதால் சற்று மந்தபுத்தி நிலவினாலும், கணக்குப் பரிட்சைக்கு மட்டும் படிக்காமலே சென்று எழுதிவிடுவார்!
    கலைத்துறையிலும் ஈடுபாடு அதிகம்!////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. ////Blogger Kalai said...
    வணக்கம் அய்யா. என் பெரிய மகனின் எண் ஏழு. கூட்டு எண் இரண்டு. வயது மூன்றுதான் ஆகிறது. போக போக தான் தெரியும் எப்படி இருக்கிறான் என்று.
    இப்போ வரைக்கும் , அவர் இடது கை பழக்கம் உள்ளவன். ஒவ்வொரு முறையும் டாக்டர் ஆபீஸ் செல்லும் போது அங்கு இருபர்வர்கள் , "Oh left hand, who knows he may become president , as in US history most of the presidents are left handed". எங்களுக்கு முதல் முறை கேட்க நல்லா இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சொல்வதால் , நம்மை நன்றாக ஒட்டி எடுகிறார்கள் என்று வழிந்து விட்டு வருவோம். ஆனால் அவனுடைய புரிந்து கொள்ளும் திறனும் விதியசமாகதான் உள்ளது. எனது இரண்டாம் மகனின் நக்ஷத்ரம்
    மகம் .கேது பகவானின் ஆதிக்கம். கேது திசை நடக்கிறது. என் கணவருக்கும் கேது திசை என் தந்தைக்கும் கேது திசை ....தம்பிக்கு ராகு திசை.....சும்மா சொல்லக் கூடாது , கடவுள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை நடத்தி வருகிறார்.
    @ rajaram, நிறைய தகவல்கள் சேகரித்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
    kalai seattle////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  31. Dear Sir,

    Hope you are doing good. After long time....I am able to attend the class.

    For number 2, you mentioned that guys should marry number 7.

    But now in this numerology 7 class, 7 cannot mingle with 2.

    This is confusing a bit. Me and my wife are 2 and 7 respectively.


    Thanks
    Shankar

    ReplyDelete
  32. Dear Sir,

    Thanks for your blog and your service.

    My DOB is May 7, 1979. Almost all of the characteristics that you have mentioned here suits me.

    My lagna-adipathi is Mercury (mithuna). There is a lot of influence of characteristics of #5 also in my life.

    Is it possible that planets depending on their strength in horoscope, influence people apart from numberology from taking into account Date of birth?

    Thanks,

    Siva

    ReplyDelete
  33. நான் தொடர்ந்து நான் தாங்கள் நடத்தும் மேல்நிலை பாடங்களை படிக்க விரும்புகிறேன்
    அய்யா அவர்கள் எனக்கு அந்த பொன்னான வாய்ப்பை வழங்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி..

    ReplyDelete
  34. ஐயா ,
    என் வாழ்வில் 7 எண் தொடர்ந்து வருகிறது நான் பிறந்த எண் 7 (16 ) என் திருமண நிச்சயதார்த்த நாள் 25 என் மகனும் மகளும் பிறந்தநாள் 25
    இப்படியாக 7 என்னை சூழ்ந்து உள்ளது . அவர்களுக்கு 2 மற்றும் 3 வயதே ஆனாலும் பக்தியுடன் இர்ருகிரார்கள் நானும் அவ்வணமே .
    நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்தும் தீயவை உட்பட .கேது பகவான் என் ஜாதகத்தில் பன்னிரண்டில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

    ReplyDelete
  35. /////Blogger அய்யர் said...

    காசு பணம் என்றால் பரவாயில்லை..
    சம்பாதித்தது போதும் என்ற நிலையிலும்

    பணம் சம்பாதிப்பது சுலபம் தானே..

    இது எண்ணங்கள்..
    என்ன விலை தந்தாலும் வாங்க முடியாதது..

    அங்கு வந்த பிறகு
    அதன் மதிப்பு உங்களுக்கு புரியும்

    அது வரை காத்திருக்கிறோம்
    அன்பு வாழ்த்துக்களை தந்த படி///


    உலகின் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று..பெர்முடா,ப்ளோரிடா மற்றும் போர்டேரிகோ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முக்கோண வடிவ கடல் பகுதியே பெர்முடா முக்கோணம் எனபடுகிறது.

    இந்த பகுதியினூடாக செல்லும் கப்பல் மற்றும் விமானகளில் பல மாயமாக மறைவதும்,விபத்துகுள்ளவதும் புரிந்து கொள்ளமுடியாத புதிராக உள்ளது..

    அந்த பகுதில் என்ன நடக்கிறதென்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    அதை விட கடினமாக இருக்கிறது..!உங்கள் புதிர்!!!வழக்கம் போல் அமைதியாக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  36. தேமொழி said...
    ///ஹி. ஹி. ஹீ. ...எனக்கென்னமோ இந்த எண் உள்ளவர்கள் கொஞ்சம் போரடிக்கிற ஆட்கள் மாதிரி தோன்றுகிறது. அசந்தா அடுத்தவங்களையும் சாமியராக்கிடுவாங்க போலிருக்கிறது. நல்ல வேலை எனக்குத் தெரிந்தும் என்னைச்சுற்றியும் இந்த எண் உள்ளவர்கள் யாரும் இல்லை///

    நாமெல்லாம் அசந்து விடுவோமா என்ன?? பனங்காட்டு நரி,சலசலப்புகெல்லாம் அஞ்சாது (அஞ்சமாட்டோம் ) ......!!

    ReplyDelete
  37. SP.VR. SUBBAIYA said...
    ///Blogger தேமொழி said...
    ஏழு உலக அதிசயங்கள்....சப்த ரிஷிகள் ...ஏழுமலையானே வெங்கடரமணா ......////

    ஓம்நமசிவாய!


    வந்தேமாதரம் ........!!!

    ReplyDelete
  38. நான் இருபத்தைந்தாம் தேதி பிறந்தவன். இந்த குணாதிசயங்கள் பெரும்பாலும் பொருந்துகின்றன. அனைத்து விடயங்களிலும்
    காரியத் தடைகள் உண்டு. விநாயகரை வழிபடுவது பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும் என்பது என் நம்பிக்கை.

    ஒரு சந்தேகம். கிரிகோரியன் நாட்காட்டியும், இந்தியாவின் சந்திர அடிப்படையிலான நாட்காட்டியும் வேறு வேறு அடிப்படை கொண்டவை அல்லவா? அப்படி இருக்கையில் இது எப்படி நமக்கு பொருந்துகிறது என்பதுதான் அதிசயமாக உள்ளது.

    ReplyDelete
  39. 7 ஆம் எண்ணிற்குரிய பதிவு மிக சிறப்பாக பதிவிட்டமைக்கு நன்றி!

    எனது பிறந்த கூட்டு தேதி எண் 7 தான், கிட்டதட்ட பதிவில் வருவது போல் தான் உள்ளது ஆனால் ஞானி அளவிற்கு இல்லை.

    நன்றி.

    ReplyDelete
  40. ////Blogger hotcat said...
    Dear Sir,
    Hope you are doing good. After long time....I am able to attend the class.
    For number 2, you mentioned that guys should marry number 7.
    But now in this numerology 7 class, 7 cannot mingle with 2.
    This is confusing a bit. Me and my wife are 2 and 7 respectively.
    Thanks
    Shankar////

    எண் இரண்டு சந்திரனுக்கு உரியது. சந்திரன் சுபக்கிரகம். அது மற்ற எண்களை ஏற்றுக்கொள்கிறது. உங்கள் துணைவியார்தான் சந்திரனின் ஆதிபத்திய்த்தின் கீழ் வருகிறார் அல்லவா? இருவரில் ஒருவருக்கு அந்த அமைப்பு உள்ளதால் கவலையை விடுங்கள்

    ReplyDelete
  41. ////Blogger Trading Options said...
    Dear Sir,
    Thanks for your blog and your service.
    My DOB is May 7, 1979. Almost all of the characteristics that you have mentioned here suits me.
    My lagna-adipathi is Mercury (mithuna). There is a lot of influence of characteristics of #5 also in my life.
    Is it possible that planets depending on their strength in horoscope, influence people apart from numberology from taking into account Date of birth?
    Thanks,
    Siva/////

    முன்பு பின்னூட்டத்தில் ஒருவர் குறிப்பிட்டுள்ளதைப்போல ஒவ்வொன்றும் தனிதன்மை உடையவை. அலோபதி, ஹோமியோபதி மருந்துகளைப் போல.
    இரண்டையும் போட்டுக்குழப்பிக்கொள்ளாதீர்கள்!

    ReplyDelete
  42. ////Blogger dubai saravanan said...
    நான் தொடர்ந்து நான் தாங்கள் நடத்தும் மேல்நிலை பாடங்களை படிக்க விரும்புகிறேன்
    அய்யா அவர்கள் எனக்கு அந்த பொன்னான வாய்ப்பை வழங்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி..////

    அடுதத வண்டியில் (next batch) உங்களுக்கு இடமுண்டு!

    ReplyDelete
  43. ////Blogger jagvettri@gmail.com said...
    ஐயா ,
    என் வாழ்வில் 7 எண் தொடர்ந்து வருகிறது நான் பிறந்த எண் 7 (16 ) என் திருமண நிச்சயதார்த்த நாள் 25 என் மகனும் மகளும் பிறந்தநாள் 25
    இப்படியாக 7 என்னை சூழ்ந்து உள்ளது . அவர்களுக்கு 2 மற்றும் 3 வயதே ஆனாலும் பக்தியுடன் இர்ருகிரார்கள் நானும் அவ்வணமே .
    நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்தும் தீயவை உட்பட .கேது பகவான் என் ஜாதகத்தில் பன்னிரண்டில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது ./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. ////Blogger Jagannath said...
    நான் இருபத்தைந்தாம் தேதி பிறந்தவன். இந்த குணாதிசயங்கள் பெரும்பாலும் பொருந்துகின்றன. அனைத்து விடயங்களிலும்
    காரியத் தடைகள் உண்டு. விநாயகரை வழிபடுவது பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும் என்பது என் நம்பிக்கை.
    ஒரு சந்தேகம். கிரிகோரியன் நாட்காட்டியும், இந்தியாவின் சந்திர அடிப்படையிலான நாட்காட்டியும் வேறு வேறு அடிப்படை கொண்டவை அல்லவா? அப்படி இருக்கையில் இது எப்படி நமக்கு பொருந்துகிறது என்பதுதான் அதிசயமாக உள்ளது./////

    எண் கணித மேதை சீரோவே சொல்லியிருக்கிறார். இதை நான் இந்தியாவில்தான் கற்றுக்கொண்டேன் என்று! ஆகவே எல்லாம் இங்கிருந்து போனவைதான்!

    ReplyDelete
  45. ////Blogger முருகராஜன் said...
    7 ஆம் எண்ணிற்குரிய பதிவு மிக சிறப்பாக பதிவிட்டமைக்கு நன்றி!
    எனது பிறந்த கூட்டு தேதி எண் 7 தான், கிட்டதட்ட பதிவில் வருவது போல் தான் உள்ளது ஆனால் ஞானி அளவிற்கு இல்லை.
    நன்றி.////

    ஞானம் பின்னால் வரலாம்! பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  46. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    ஏழாம் எண்ணிற்கு .
    தாங்கள் கொடுத்துள்ள பலன்கள்
    யாவும் பெரும்பகுதி பொருந்தி வருகிறது.
    நன்றி!!

    ReplyDelete
  47. வணக்கம் ஐயா,
    இந்த எண்ணில் பிறந்த எனது தோழிக்கு தாங்கள் கூறிய அனைத்தும் மிக சரியாக பொருந்தும்...அவளிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமும் அவளுடைய ஆன்மிகப் பேச்சு தான்...எங்கள் இருவருக்கும் உள்ள பெரிய ஒற்றுமை பக்திமான்கள் என்பது தான்...தனிமை விரும்பி என்றாலும் என்னிடம் மட்டுமே நெருக்கமாக இருப்பாள்,அதிக தோழிகளை விரும்பமாட்டாள்...நல்ல தகவல் நிறைந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  48. Dear sir,

    You are always Right... Bcoz me too born on this Number....so only i realise that each and every line is true....

    Thank You for your Great job...

    ReplyDelete
  49. Dear sir,

    You are always Right... Bcoz me too born on this Number....so only i realise that each and every line is true....

    Thank You for your Great job...

    ReplyDelete
  50. Dear Sir,

    I am Sakthi , I am Your great fan after Reading CGETTINAD MAN VASANAI KATAHAIGAL....Then I follow you in this Blog...You are Always Right...Bcoz Me too Born on this Number...Each and Every Line You said is True....

    Thank you For Your Great job...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com