Devotional சிற்றாடை உடுத்திய சின்னஞ்சிறு பெண்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று இன்று வகுப்பறையின் பக்தி அரங்கத்தை நிறைக்கிறது. கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
__________________________________
பாடல்: சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
பல்லவி:
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடைஉடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)
அனுபல்லவி:
பெண்அவளின் கண்அழகைப் பேசி முடியாது
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)
சரணம்:
மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணம் எல்லாம் நிறைவாள்
பின்னல்சடை போட்டுப் பிச்சிப்பூச் சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)
பாடியது: சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
பாடலாக்கம்: அவரின் மைத்துனர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
சிந்துபைரவி ராகம்
கானொளி : http://youtu.be/bEH4G1A8P8I
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ReplyDeleteவணக்கம் அய்யா . வெள்ளி கிழமை அம்மன் பாட்டு போட்டு அமர்களபடுத்தியாச்சு.
பெண் தெய்வங்கள் எல்லாம் கொஞ்சம் உக்ரம் ஜாஸ்தி ஆகத்தான் இருப்பார்கள் என்று கேள்வி.
அதிலும் துர்க்கை அம்மனிடம் இன்னும் ஜாஸ்தியாக. பொதுவாக ஆண் தெய்வங்கள் கொஞ்சம் இளகிய சுபாவம் போல் தான் தெரிகிறார்கள்.
அதை பற்றி ஜோதிடத்தில் எதாவது சொல்லி இருக்காங்களா? விளக்கம் ஆன்மீக ரீதியில் இருந்தாலும் சொல்லுங்களேன்.
காலை வணக்கம் ஐயா.
ReplyDeleteநல்லதொரு மென்மையான பாடல் சீர்காழியாரும், டி.எம்.எஸ்.ம் போல் பக்திப்பாடலைப் பாட இன்னொருவர் பிறந்து வந்தால் தான் உண்டு.
பதிவிற்கு நன்றி.
Good morning!padal arumai!
ReplyDeleteஅருமையான பாடல்!
ReplyDeleteநன்றி!!
/////Kalai said...
ReplyDeleteஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
வணக்கம் அய்யா . வெள்ளி கிழமை அம்மன் பாட்டு போட்டு அமர்களபடுத்தியாச்சு.
பெண் தெய்வங்கள் எல்லாம் கொஞ்சம் உக்ரம் ஜாஸ்தி ஆகத்தான் இருப்பார்கள் என்று கேள்வி.
அதிலும் துர்க்கை அம்மனிடம் இன்னும் ஜாஸ்தியாக. பொதுவாக ஆண் தெய்வங்கள் கொஞ்சம் இளகிய சுபாவம் போல் தான் தெரிகிறார்கள்.
அதை பற்றி ஜோதிடத்தில் எதாவது சொல்லி இருக்காங்களா? விளக்கம் ஆன்மீக ரீதியில் இருந்தாலும் சொல்லுங்களேன்.//////
புராணக்கதைகள்தான் வித்தியாமான பல செய்திகளைச் சொல்கின்றன. ஜோதிடம் சொல்லவில்லை!
/// Sathish K said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா.
நல்லதொரு மென்மையான பாடல் சீர்காழியாரும், டி.எம்.எஸ்.ம் போல் பக்திப்பாடலைப் பாட இன்னொருவர் பிறந்து வந்தால் தான் உண்டு.
பதிவிற்கு நன்றி./////
உண்மைதான். நல்லது.நன்றி நண்பரே!
//// Ananthamurugan said...
ReplyDeleteGood morning!padal arumai!/////
காலை வணக்கம்!நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
//// V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅருமையான பாடல்!
நன்றி!!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
இங்கே லால்குடியில் ஸ்ரீமதி(பெருந்திருப்பிராட்டியார்) அம்பாளுக்கு நாள்தோறும் புத்தாடை யாராவது கொண்டு சேர்க்கிறார்கள். இன்று என்ன நிறப்புடவையில் அம்பாள் தரிசனம் என்று கேட்பது இங்கு ஒரு பேச்சுத் துவக்கம்.
ReplyDeleteபெரும்பாலும் மடிசார் வைத்து மாமிக்கட்டுதான் அம்பாளுக்குக் கட்டப்படுகிறது. நடுவில் ஒரு நாள் மாம்பழக்கட்டு என்று சொல்லப்படும் தெலுங்குப் புடவைக்கட்டு(எல்லோரும் சாதாரணமாக அப்படித்தான் அணிவர்)
கட்டியிருந்தார்கள். அதில் ஒரு பகுதி பாவடை தாவணி போல் தோற்ற மளிக்கும்.அன்று அம்பாள் சின்னஞ்சிறு பெண்ணாகவே இருந்தார்.
பாட்டு, பாடியமுறை, பாடியவரின் குரல், பாவம் அனைத்துமே சூப்பர். ஆசையாக மெடல் அனைத்தையும் குத்திக்கொண்டு, அவரது சிரித்த முகமும் நன்றாக இருந்தது.நன்றி
மிக அழகான பாடல்.சீர்காழியாரின் குரலில் என்னவொரு உருக்கம்!.கண் முன்னால் அப்படியே அம்மன் வந்து நின்றது போன்ற உணர்வு.பக்தியிசையின் ஈர்ப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
ReplyDeleteசிவகாமி அன்னை அவளின் அழகை
ReplyDeleteசீர்மேவியக் குரலில் சீர்காழியார்.
நன்றிகள் ஐயா!
"சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி" என்ற வரிகளில் நான் மதுரை மீனாட்சி போன்ற, அல்லது ஒரு சிறிய மரப்பாச்சி பொம்மை போன்ற துர்கையை கற்பனையில் வைத்திருந்தேன். நீங்கள் வங்காள துர்கைப் படத்தை போட்டுள்ளீர்கள்.
ReplyDeleteசீர்காழியின் இந்தப் பாடலையும் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டது. ஏறத்தாழ நான் மறந்துவிட்ட பாடல்களை ஒவ்வொன்றாக பதிவில் வெளியிட்டு நினைவிற்கு கொண்டு வருவதற்கு நன்றி ஐயா. மிக அருமையான பாடல். அண்ணாமலை பலகலையின் முன்னாள் இசைக்கலூரி முதல்வர். எனக்கு சீர்காழி அவர்கள் கச்சேரியை (அவர் தன் மகனுடன் இணைந்து நிகழ்த்தியதை) நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக பிழையின்றி பாடும் ஓரிரு கணீர் குரல் பாடகர்களில் மறக்க முடியாதவர் இவர்.
ஐயா..வணக்கம்!
ReplyDeleteஇந்தப் பாடலைப் போல காலத்தை வெல்லும் பாடல்கள் உருவாக்கம் பலகாரணிகளால் தடைபெற்றுள்ளது!
அவை நீங்கி நல்ல பாடல்களை உருவாக்க வேண்டியது வைரமுத்து,தாமரை போன்றோரின் கடமையாகிறது!
தினம் ஒரு தகவல்:The word "listen " contains the same letters as the word "silent".
ReplyDeleteஆனந்த முருகன் தன் அடையாளத்திற்குக் கொடுத்துள்ள சுவாமிகள் பற்றி அறிவாரா??அந்த சுவாமிகளின் சமஸ்கிருதப் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும்.எளிய தத்துவப்பாடல்கள். கர்நாடக இசை கச்சேரிகளில் தவறாமல் அவரது பாடல் ஒன்று உண்டு.அவரின் பெயரைச் சொல்லவும்.சொன்னால் என்ன தருவீர்கள் என்றால் நிறையப் புண்ணியம் தானாக வந்து சேரும்.
ReplyDeletejoke?????????!!
ReplyDeleteவகுப்பறையில்,மாணவன் ஆசிரியரிடம்,சார்,urine pass பண்ணிட்டு வரேன்!?.
ஆசிரியர் ஏதோ நினைவாக "ம்ம்,அதையாவது arrears இல்லாம பாஸ் பண்ணிட்டு வா!?
இரண்டு
ReplyDeleteவருகை பதிவுகளுடன்.. சில
ReplyDeleteவரிகள்..
பக்தி ததும்பும் அந்த
பாடலை ...
அதற்கேற்ற வர்ணனையை
அன்பு தோழர் லால்குடி சகோதரர்
தந்தமையும் மகிழ்ச்சி..
தன்மையான வணக்கமும் வாழ்த்தும்
Guru Vanakkam,
ReplyDeleteThanks for posting this. This was one of the padamm My daughter danced(bharata natyam)during last navaratri season in India.
That was an highlight in her program.
Regards
RAMADU
திரு.நெரூர் சதாசிவன் சித்தர்,கரூர் அருகில் சமாதி உள்ளது.சரிதானே!மேலும் அவரை பற்றி நிறைய விவரங்கள் உண்டு.குறிப்பிடும் படியானது திரு.ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வந்து பிறகு இவர் சமாதிக்கு வந்து சென்றாராம்
ReplyDelete////kmr.krishnan said...
ReplyDeleteஇங்கே லால்குடியில் ஸ்ரீமதி(பெருந்திருப்பிராட்டியார்) அம்பாளுக்கு நாள்தோறும் புத்தாடை யாராவது கொண்டு சேர்க்கிறார்கள். இன்று என்ன நிறப்புடவையில் அம்பாள் தரிசனம் என்று கேட்பது இங்கு ஒரு பேச்சுத் துவக்கம்.
பெரும்பாலும் மடிசார் வைத்து மாமிக்கட்டுதான் அம்பாளுக்குக் கட்டப்படுகிறது. நடுவில் ஒரு நாள் மாம்பழக்கட்டு என்று சொல்லப்படும் தெலுங்குப் புடவைக்கட்டு(எல்லோரும் சாதாரணமாக அப்படித்தான் அணிவர்)
கட்டியிருந்தார்கள். அதில் ஒரு பகுதி பாவடை தாவணி போல் தோற்ற மளிக்கும்.அன்று அம்பாள் சின்னஞ்சிறு பெண்ணாகவே இருந்தார்.
பாட்டு, பாடியமுறை, பாடியவரின் குரல், பாவம் அனைத்துமே சூப்பர். ஆசையாக மெடல் அனைத்தையும் குத்திக்கொண்டு, அவரது சிரித்த முகமும் நன்றாக இருந்தது.நன்றி////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக அழகான பாடல்.சீர்காழியாரின் குரலில் என்னவொரு உருக்கம்!.கண் முன்னால் அப்படியே அம்மன் வந்து நின்றது போன்ற உணர்வு.பக்தியிசையின் ஈர்ப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை./////
உண்மைதான். உங்களின் நெகிழ்ச்சியான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////தமிழ் விரும்பி ஆலாசியம் said...
ReplyDeleteசிவகாமி அன்னை அவளின் அழகை
சீர்மேவியக் குரலில் சீர்காழியார்.
நன்றிகள் ஐயா!////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
/// தேமொழி said...
ReplyDelete"சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி" என்ற வரிகளில் நான் மதுரை மீனாட்சி போன்ற, அல்லது ஒரு சிறிய மரப்பாச்சி பொம்மை போன்ற துர்கையை கற்பனையில் வைத்திருந்தேன். நீங்கள் வங்காள துர்கைப் படத்தை போட்டுள்ளீர்கள்.////
சரியான் படம் கிடைக்கவில்லை. இணையத்தில் இருப்பதெல்லாம் உக்கிர காளியின் வடிவங்களே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சீர்காழியின் இந்தப் பாடலையும் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டது. ஏறத்தாழ நான் மறந்துவிட்ட பாடல்களை ஒவ்வொன்றாக பதிவில் வெளியிட்டு நினைவிற்கு கொண்டு வருவதற்கு நன்றி ஐயா. மிக அருமையான பாடல். அண்ணாமலை பலகலையின் முன்னாள் இசைக்கலூரி முதல்வர். எனக்கு சீர்காழி அவர்கள் கச்சேரியை (அவர் தன் மகனுடன் இணைந்து நிகழ்த்தியதை) நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக பிழையின்றி பாடும் ஓரிரு கணீர் குரல் பாடகர்களில் மறக்க முடியாதவர் இவர்./////
உண்மைதான். உங்களின் எண்ணப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
//// ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஐயா..வணக்கம்!
இந்தப் பாடலைப் போல காலத்தை வெல்லும் பாடல்கள் உருவாக்கம் பலகாரணிகளால் தடைபெற்றுள்ளது!
அவை நீங்கி நல்ல பாடல்களை உருவாக்க வேண்டியது வைரமுத்து,தாமரை போன்றோரின் கடமையாகிறது!////
எல்லாமே வியாபாரம் என்றாகிவிட்டது. நீங்கள் சொல்கின்றபடி யாராவ்து முன்வந்து, எழுதி, பாடி, இசையமைத்து, வெளியிட்டால் நன்றாக இருக்கும்!
/// kmr.krishnan said...
ReplyDeleteஆனந்த முருகன் தன் அடையாளத்திற்குக் கொடுத்துள்ள சுவாமிகள் பற்றி அறிவாரா?? அந்த சுவாமிகளின் சமஸ்கிருதப் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். எளிய தத்துவப்பாடல்கள். கர்நாடக இசை கச்சேரிகளில் தவறாமல் அவரது பாடல் ஒன்று உண்டு.அவரின் பெயரைச் சொல்லவும்.சொன்னால் என்ன தருவீர்கள் என்றால் நிறையப் புண்ணியம் தானாக வந்து சேரும்.////
நல்லது. நன்றி!
/////Ananthamurugan said...
ReplyDeletejoke?????????!!
வகுப்பறையில்,மாணவன் ஆசிரியரிடம்,சார்,urine pass பண்ணிட்டு வரேன்!?.
ஆசிரியர் ஏதோ நினைவாக "ம்ம்,அதையாவது arrears இல்லாம பாஸ் பண்ணிட்டு வா!?////
நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாம் தொகுத்து வார மலருக்கு அனுப்புங்கள். இங்கே சிலரது கண்ணில் படாமல் போய்விடும்! மேலும் பின்னூட்டப் பெட்டி அதற்கான இடமும் அல்ல!~
//// அய்யர் said...
ReplyDeleteஇரண்டு///
நல்லது. சஸ்பென்ஸை சீக்கிரம் முடித்து வையுங்கள்!
/// அய்யர் said...
ReplyDeleteவருகை பதிவுகளுடன்.. சில
வரிகள்..
பக்தி ததும்பும் அந்த பாடலை ...
அதற்கேற்ற வர்ணனையை
அன்பு தோழர் லால்குடி சகோதரர்
தந்தமையும் மகிழ்ச்சி..
தன்மையான வணக்கமும் வாழ்த்தும்////
உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி!
//// RAMADU Family said...
ReplyDeleteGuru Vanakkam,
Thanks for posting this. This was one of the padamm My daughter danced (bharata natyam) during last navaratri season in India.
That was an highlight in her program.
Regards
RAMADU////
உங்கள் செல்விக்கு வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி!
SP.VR. SUBBAIYA said...
ReplyDelete///நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாம் தொகுத்து வார மலருக்கு அனுப்புங்கள். இங்கே சிலரது கண்ணில் படாமல் போய்விடும்! மேலும் பின்னூட்டப் பெட்டி அதற்கான இடமும் அல்ல!~///
நல்லது அய்யா!!?
நாமசங்கீர்த்தனம் என்றாலே சதாசிவ பிரமேந்த்ரர் ஞாபகம் வரும்.மைசூர் அரசின் ஆஸ்தான வித்துவானாக இருந்து இருக்கிறார்.கரூர்,அருகே தான்தோன்றிமலை பெருமாள் தரிசனம் திருப்திக்கு நிகரானது.சுயம்பு மூர்த்திக்கு ஜன ஆகர்ஷன யந்திரம் எழுதி வழிபட்டார்.
ReplyDeleteசபாஷ் ஆனந்தமுருகன் ! சதாசிவ பிரம்மம்த்தைப்பற்றி நிறையத்தெரிந்து வைத்துள்ளீர்கள்.அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDeleteவெங்கலக்குரளுக்கு சொந்த காரர் ஆன சீர்காழி கோவிந்தராஜனின் குழல் வளமே தநீதான் இல்லையா ஐயா,