3.2.12

பல்லாங்குழியின் வட்டத்தைப் பார்த்துக் கிறங்கிய பெண்!

பல்லாங்குழியின் வட்டத்தைப் பார்த்துக் கிறங்கிய பெண்!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஐந்து

பாடல்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
--------------------------------------------------------------

பெண்குரல்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவ்வந்தி பூவின் நடுவே பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

ஹம்மிங்.....

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

ஹம்மிங்.....

ஆண்குரல்:
அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்துக் காத்திரு

பெண்குரல்
தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்குமச் சிமிழில் பதுக்க முடியாதா!

ஆண்குரல்:
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதறிவிடும்
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பெண்குரல்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்

ஆண்குரல்:
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

ஹம்மிங்..........

பெண்குரல்:
அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுத்தது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்லக் காசு தந்தாய் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்

ஆண்குரல்:
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கே உபயம் எதற்கு ஆராய்சி

பெண்குரல்:
இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

ஆண்குரல்:
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

பெண்குரல்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்

இருவரும்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்

பெண்குரல்:
செவ்வந்தி பூவின் நடுவே பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்

இருவரும்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன்

ஹம்மிங்.......

----------------------------------------------------
படம் : ஆனந்தம் (2001)
பாடல் : பல்லாங்குழியின்
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரணி
நடிப்பு: அப்பாஸ் & சிநேகா
இயக்கம்: லிங்குசாமி

-----------------------------------------------------
கானொளி: http//youtube/RDe5Tha4IqI
Our sincere thanks to the person who uploaded the song in the net


------------------------------------------------------------------------------------

38 comments:

  1. ஐயா வணக்கம்!

    எப்படி தங்களால் மட்டும் என்றும் பதினாறு போல செயல்பட முடிகின்றது .

    அந்த " சூட்சுமத்தை ", மட்டும் கூறுங்கள் ஐயா . மேற்கண்ட சூட்சுமம் தெரியாமல் தான் 33 தாண்டியும் கன்னி கலங்காத கண்ணனாக இன்றும் இருக்கின்றேன் ஐயா :-)))

    --

    ReplyDelete
  2. நல்ல இனிமையான பாடல், அருமையான வரிகள், நினைவுக்கு கொண்டுவந்ததற்கு நன்றி ஐயா, அதற்குள் படம் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்ப முடியவில்லை.

    "தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
    இந்த நாணயம் போதாதா"
    இது கொஞ்சம் ஆபத்து , அப்படியே உண்மை என்று நினைத்துவிட்டால் என்னாவது, பிழைக்கத் தெரியாத பெண்.

    "செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதறிவிடும்
    செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்"
    த்சோ ..த்சோ ..என்ன வரிகள்? ஆனால் திருமணதிற்கு பிறகும் ஆண்கள் இப்படி பாட உத்திரவாதம் கொடுக்க மாட்டார்களா?

    கவிஞர் நா. முத்துகுமார் அருமையாக எழுதியுள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமார் நல்ல இசையமைப்பாளர், மென்மையான பாடல்களாக இசை அமைப்பார்.

    "கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்"
    வரிகள் 3:11 இடத்தில் வரும் காட்சிக்கு பொருத்தமாக இருந்திருக்கும், படத்தின் இயக்குனரும் தொகுப்பாளரும் இன்னமும் கொஞ்சம் சிரத்தையாக வேலை செய்து பாடாலைப் போலவே, பாடல் காட்சியும் மனதில் இடம் பிடிக்கச் செய்திருக்கலாம்.

    தேவையிலாத தோழர் தோழியர் கூட்டமும், உடற்பயிற்சி போன்ற அசைவுகளும் பெரும்பாலான தமிழ்ப் பாடல்களை கெடுத்துவிடுகிறது.

    ReplyDelete
  3. பாடலில் சொன்ன எல்லாப் பொருள்களும் வட்டம் என்று 'ரௌண்டு'கட்டி அடிக்கிறாரோ கவிஞர்?

    இசை நன்றாக அமைந்துள்ளது என்றாலும் பாடல் வரிகள் ஏதோ வலிந்து எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.

    என்னதான் புதுமை செய்தாலும், காதல் காட்சிகளில் நாயகனும் நாயகியும் மரத்தைச் சுற்றுவது மட்டும் மாறாமல் உள்ளது,பார்த்தீர்களா?

    இசைக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  4. உசிலி உசிலி என்று வாத்தியார் அடிக்கடை சொல்லி வருகிறாரே அதுபற்றி அறிய கீழ்க்கண்ட வலைப்பூவைக் காணவும்.

    http://thulasidhalam.blogspot.com/

    "துளசி விலாஸில் இன்று (ஈஸிபீஸி) உசிலி" என்ற கட்டுரையைப்பார்க்கவும்
    நாள்:12 ஜனவரி 2012.

    ReplyDelete
  5. 'தாடி சொன்னா கேப்போம்' என்று துளசியம்மா தன் பிளாகில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.அந்த தாடி யார் என்று சரியாகச் சொன்னால் பருப்பு உசிலி பரிசாகப் பார்சலில் அனுப்பப்படும்

    ReplyDelete
  6. /////Blogger kannan said...
    ஐயா வணக்கம்!
    எப்படி தங்களால் மட்டும் என்றும் பதினாறு போல செயல்பட முடிகின்றது .
    அந்த " சூட்சுமத்தை ", மட்டும் கூறுங்கள் ஐயா . மேற்கண்ட சூட்சுமம் தெரியாமல் தான் 33 தாண்டியும் கன்னி கலங்காத கண்ணனாக இன்றும்

    இருக்கின்றேன் ஐயா :-)))/////

    அதற்கு ஒரு மருந்து உள்ளது. தினமும் மூன்று வேளை ஒரு முழுக்கரண்டி அளவிற்குச் சாப்பிடுங்கள். ஒரு மண்டலம் சாப்பிடுங்கள். கவலைகள், பிரச்சினைகளை மறந்து சுறுசுறுப்பாகச் செயல் படலாம். மருந்து ஃப்ரீ. செல்வில்லை:

    மருந்து இதோ:

    ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
    ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி

    வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
    வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
    ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

    ஒலியும் ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
    ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
    தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
    வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி

    கண்டதும் காதல் வழியாது
    கண்டதால் வெட்கம் கழியாது
    பூனையில் சைவம் கிடையாது
    ஆண்களில் ராமன் கிடையாது
    புரட்சிகள் ஏதும் செய்யாமல்
    பெண்ணுக்கு நன்மை விளையாது
    கண்ணகி சிலைதான் இங்குண்டு
    சீதைக்கு தனியாய் சிலையேது

    ஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசி
    பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசி
    பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
    அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
    சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்?
    ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
    இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?

    ReplyDelete
  7. /////Blogger தேமொழி said...
    நல்ல இனிமையான பாடல், அருமையான வரிகள், நினைவுக்கு கொண்டுவந்ததற்கு நன்றி ஐயா, அதற்குள் படம் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதை

    நம்ப முடியவில்லை.
    "தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
    இந்த நாணயம் போதாதா"
    இது கொஞ்சம் ஆபத்து , அப்படியே உண்மை என்று நினைத்துவிட்டால் என்னாவது, பிழைக்கத் தெரியாத பெண்.
    "செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதறிவிடும்
    செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்"
    த்சோ ..த்சோ ..என்ன வரிகள்? ஆனால் திருமணதிற்கு பிறகும் ஆண்கள் இப்படி பாட உத்திரவாதம் கொடுக்க மாட்டார்களா?
    கவிஞர் நா. முத்துகுமார் அருமையாக எழுதியுள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமார் நல்ல இசையமைப்பாளர், மென்மையான பாடல்களாக இசை அமைப்பார்.
    "கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்"
    வரிகள் 3:11 இடத்தில் வரும் காட்சிக்கு பொருத்தமாக இருந்திருக்கும், படத்தின் இயக்குனரும் தொகுப்பாளரும் இன்னமும் கொஞ்சம் சிரத்தையாக வேலை

    செய்து பாடாலைப் போலவே, பாடல் காட்சியும் மனதில் இடம் பிடிக்கச் செய்திருக்கலாம்.
    தேவையிலாத தோழர் தோழியர் கூட்டமும், உடற்பயிற்சி போன்ற அசைவுகளும் பெரும்பாலான தமிழ்ப் பாடல்களை கெடுத்துவிடுகிறது.//////

    ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பின்னூட்டமிட்ட மேன்மைக்கு நன்றி சகோதரி. கவிஞர்கள், மற்றும் இசையமைப்பாளர்களின் உழைப்பு சில படங்களின் காட்சி அமைப்பில் கரைந்து போய்விடுவதென்னமோ உண்மைதான்.

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    பாடலில் சொன்ன எல்லாப் பொருள்களும் வட்டம் என்று 'ரௌண்டு'கட்டி அடிக்கிறாரோ கவிஞர்?
    இசை நன்றாக அமைந்துள்ளது என்றாலும் பாடல் வரிகள் ஏதோ வலிந்து எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.
    என்னதான் புதுமை செய்தாலும், காதல் காட்சிகளில் நாயகனும் நாயகியும் மரத்தைச் சுற்றுவது மட்டும் மாறாமல் உள்ளது,பார்த்தீர்களா?
    இசைக்கு நன்றி அய்யா!///////

    கட்டம் கட்டி அடிப்பது எழுத்தாளர்களுக்குப் பிடித்த விஷயம்.
    ரவுண்டு கட்டி அடிப்பது கவிஞர்களுக்குப் பிடித்த விஷயம்.

    1
    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
    அணைத்தேன் அழகினை ரசித்தேன்

    2
    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
    நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
    கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
    அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
    மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
    இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
    நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
    உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

    இரண்டுபாடல்களுமே கவியரசர் கண்ணதாசன் எழுதியது. முதல் பாடலில் தேன் என்று முடியும் சொற்களாலும், அடுத்த பாடலில் காய் என்று முடியும் சொற்களாலும் ரவுண்டு கட்டி அடிப்பதைப் பாருங்கள். இதுபோல இன்னும் பல பாடல்கள் உள்ளன!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    உசிலி உசிலி என்று வாத்தியார் அடிக்கடை சொல்லி வருகிறாரே அதுபற்றி அறிய கீழ்க்கண்ட வலைப்பூவைக் காணவும். http://thulasidhalam.blogspot.com/
    "துளசி விலாஸில் இன்று (ஈஸிபீஸி) உசிலி" என்ற கட்டுரையைப்பார்க்கவும்
    நாள்:12 ஜனவரி 2012.//////

    பார்த்தேன்.பதிவிலேயே அதைச் சுவைத்தேன். சுட்டிக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ஒற்றை நாணயம் என்ற வார்த்தைக்கு பொருள் புரியவில்லை...
    அதுவாக இருக்கும் என்று நாமே எடுத்துக் கொண்டாலும்..
    அது எது என்பது தான் விடை பெறாத கேள்வியாக உள்ளது..?

    இந்த பாடலுக்கு அவர் இசைஅமைத்திருந்தால் என
    notes எழுதி பார்த்தோம்...

    அது.... அது தான்..!!

    ReplyDelete
  11. ///கட்டம் கட்டி அடிப்பது எழுத்தாளர்களுக்குப் பிடித்த விஷயம்.
    ரவுண்டு கட்டி அடிப்பது கவிஞர்களுக்குப் பிடித்த விஷயம்...///

    காய் பழம் சொல்லும் காதல் போதுமா..
    கற்பனையுடன் உவமை உருவகம் என

    அத்தனையையும்
    அள்ளி தரும் அவர்.. அவரே...

    இந்த பாடலினை பாருங்கள்..படம்
    இரு வல்லவர்கள்

    நான் மலரோடு தனியாக
    ஏன் இங்கு நின்றேன்? - என்
    மகராணி உனைக் காண
    ஓடோடி வந்தேன்

    நீ இல்லாமல் யாரோடு
    உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக
    தனியாக வந்தேன்

    நீ வருகின்ற வழிமீது
    யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

    உன் மலர்க்கூந்தல் அலைபாய
    அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது
    சுவை என்ன தந்தார்?

    பொன்வண்டு ஒன்று
    மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட
    கையாலே மெதுவாக மூட

    என் கருங்கூந்தல்
    கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன்
    உன்னிடம் உண்மை கூற

    ReplyDelete
  12. ///kmr.krishnan said...
    'தாடி சொன்னா கேப்போம்' என்று துளசியம்மா தன் பிளாகில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.அந்த தாடி யார் என்று சரியாகச் சொன்னால் பருப்பு உசிலி பரிசாகப் பார்சலில் அனுப்பப்படும்///

    தாடி = வாசுகியின் கணவர்

    ReplyDelete
  13. நல்லதொருப் பாடல்...
    நான் பல வேளைகளில் ரசித்துக் கேட்டப் பாடல்.
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  14. நல்ல பாடல். என்னுடைய கைபேசியில் அவ்வபொழுது கேட்கும் பாடல். இந்த படத்திற்கு பிறகு தான் ஸ்னேஹாவிற்கு marmakட் ஏறீயது.

    ReplyDelete
  15. திரைப்படப் பாடல்கள் இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று கவிஞர்கள் எழுதியது. இரண்டாவது திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதியது. முந்தையதில் கவித்துவம் இருக்கும். இரண்டாவதில் இயக்குனரின் விருப்பத்துக்குச் சொற்கள் கோர்க்கப் பட்டிருக்கும். இது இரண்டாவது வகை. நாணயம் மட்டும் வட்டம் அல்ல, வாழ்க்கையும் கூடத்தான். சில சொற்கள் மறைபொருளாக வேறு எவற்றையோ சொல்வதாகப் பல பாடல்கள் உண்டு. அவ்வகைப் பாடலுக்குத் தலைமை தாங்குவது "எலந்தப் பயம்" பாட்டு. அதில் 'எத்தனையோ பேருக்கிட்டே எலந்தப்பயம் பாத்தியே, அதிலே இம்மாம் சைசு பார்த்தியா' எனும் வரி அசிங்கத்தின் இமயம். ஆனால் அந்தப் பாடல்தான் தமிழ்நாட்டில் போடோ போடென்று போட்டது.

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா,
    மிகவும் அருமையான பாடல்...இப்படம் வெளியான போது நான் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கின்றேன்...என் தந்தைக்கு எந்தவொரு இக்காலத்து படங்களையும்,பாடல்களையும்,நடிகர் நடிகைகளையும் பிடிக்காது(கொஞ்சம் பழமைவாதி என் தந்தை)...அதனால் எங்களையும் பார்க்கவும் விடமாட்டார்(டிஸ்கவரி மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் மட்டுமே பார்ப்போம்...இன்று வரை!!!)
    ஆயினும் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் ஒன்று மட்டுமே என்று நினைக்கின்றேன்...பாட்டு என்றால் இப்படி தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறி ரசிப்பார்,அதுவும் உண்மையே...இன்றும் இந்த பாடலை வானொலியில் கேட்டாலும் மிகவும் ரசிப்பார்...
    என் தந்தைக்கே இந்த பாடல் பிடித்திருந்தால்,தமிழ்நாட்டில் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்...ஏதோ சிறிது வளர்ந்து விட்டதால் எங்களை மட்டும் சில பாடல்களை பார்க்க விட்டாலும் என் தந்தைக்கு பழைய பாடல்கள் மட்டும் தான் பிடிக்கின்றது...அதனால் தான் என்னவோ எனக்கும் புதுபடங்களை விட பழைய படங்களின் பாடல்கள் நன்றாக தெரியும்...ஹிஹிஹி...இப்பாடலை கேட்டும் அதிக நாட்களாகி விட்டது...நல்ல பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  17. ஸ்நேஹாவுக்கு மல்லிப்பூவும்
    ரொம்ப எடுப்பா இருக்கு..
    இன்னிக்கு என்னைக்
    கிறங்க அடித்தது அதுதான் ..

    'மல்லிகை.. என் மன்னன் மயங்கும் முத்தான மலரல்லவோ?' என்ற அருமையான என் மனதை மயக்கும் பாடல் நினைவுக்கு வருகிறது..

    'நான் பூவெடுத்து வெக்கணும் பின்னாலே..அத வெக்கிறப்போ சொக்கணும் தன்னாலே..' என்ற தலைவர் பாடலும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  18. தஞ்சாவூரார் எந்தப் பாட்டை சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதை வைத்து அவரை 'என்றும் பதினாறு' கட்சியின் தலைவராக்கி முன்மொழிகிறேன்..

    ReplyDelete
  19. ஐயா, வணக்கம்! தற்காலத்தில் சிலாகித்து சொல்வது போல் ஒருசில பாடல்களே அமைகின்றன! அதில் இதுவும் ஒன்று! தங்கள் ரசனையில் எங்களுக்கும் பங்களித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  20. /////Blogger iyer said...
    ஒற்றை நாணயம் என்ற வார்த்தைக்கு பொருள் புரியவில்லை...
    அதுவாக இருக்கும் என்று நாமே எடுத்துக் கொண்டாலும்..
    அது எது என்பது தான் விடை பெறாத கேள்வியாக உள்ளது..?
    இந்த பாடலுக்கு அவர் இசைஅமைத்திருந்தால் என
    notes எழுதி பார்த்தோம்..
    அது.... அது தான்..!!//////

    திரையுலக மாமா கே.வி.மகாதேவன் இருந்து, அவர் இசையமைத் திருந்தால் பாடல் இன்னும் சூப்பராக ஒலிக்கும்!

    ReplyDelete
  21. //////Blogger iyer said...
    ///கட்டம் கட்டி அடிப்பது எழுத்தாளர்களுக்குப் பிடித்த விஷயம்.
    ரவுண்டு கட்டி அடிப்பது கவிஞர்களுக்குப் பிடித்த விஷயம்...///
    காய் பழம் சொல்லும் காதல் போதுமா..
    கற்பனையுடன் உவமை உருவகம் என
    அத்தனையையும்
    அள்ளி தரும் அவர்.. அவரே...
    இந்த பாடலினை பாருங்கள்..படம்
    இரு வல்லவர்கள்
    நான் மலரோடு தனியாக
    ஏன் இங்கு நின்றேன்? - என்
    மகராணி உனைக் காண
    ஓடோடி வந்தேன்
    நீ இல்லாமல் யாரோடு
    உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக
    தனியாக வந்தேன்
    நீ வருகின்ற வழிமீது
    யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய
    அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது
    சுவை என்ன தந்தார்?
    பொன்வண்டு ஒன்று
    மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட
    கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல்
    கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன்
    உன்னிடம் உண்மை கூற//////

    நல்ல பாடல் ஒன்றை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி விசுவநாதன். இசையமைப்பாளர் வேதாவிற்காக கவியரசர் எழுதிய அத்தனை பாடல்களுமே சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  22. /////Blogger தேமொழி said...
    ///kmr.krishnan said...
    'தாடி சொன்னா கேப்போம்' என்று துளசியம்மா தன் பிளாகில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.அந்த தாடி யார் என்று சரியாகச் சொன்னால் பருப்பு உசிலி பரிசாகப் பார்சலில் அனுப்பப்படும்///
    தாடி = வாசுகியின் கணவர்//////

    சரியானவிடையாக இருக்கலாம். கே.எம்.ஆர்.கே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பார்சலில் உசிலியை அனுப்பிவைக்கப் போகிறார். அதை மட்டும் நேரில் வரும்போது வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிடுங்கள்

    ReplyDelete
  23. //////Blogger தமிழ் விரும்பி said...
    நல்லதொருப் பாடல்...
    நான் பல வேளைகளில் ரசித்துக் கேட்டப் பாடல்.
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!///////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  24. //////Blogger GAYATHRI said...
    நல்ல பாடல். என்னுடைய கைபேசியில் அவ்வபொழுது கேட்கும் பாடல். இந்த படத்திற்கு பிறகு தான் ஸ்னேஹாவிற்கு market ஏறீயது.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. //////Blogger Thanjavooraan said...
    திரைப்படப் பாடல்கள் இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று கவிஞர்கள் எழுதியது. இரண்டாவது திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதியது. முந்தையதில் கவித்துவம் இருக்கும். இரண்டாவதில் இயக்குனரின் விருப்பத்துக்குச் சொற்கள் கோர்க்கப் பட்டிருக்கும். இது இரண்டாவது வகை. நாணயம் மட்டும் வட்டம் அல்ல, வாழ்க்கையும் கூடத்தான். சில சொற்கள் மறைபொருளாக வேறு எவற்றையோ சொல்வதாகப் பல பாடல்கள் உண்டு. அவ்வகைப் பாடலுக்குத் தலைமை தாங்குவது "எலந்தப் பயம்" பாட்டு. அதில் 'எத்தனையோ பேருக்கிட்டே எலந்தப்பயம் பாத்தியே, அதிலே இம்மாம் சைசு பார்த்தியா' எனும் வரி அசிங்கத்தின் இமயம். ஆனால் அந்தப் பாடல்தான் தமிழ்நாட்டில் போடோ போடென்று போட்டது.////////

    ஜனரஞ்சகமான பாடல். கிராமத்து மக்களைச் சென்றடைந்ததால் பிரபலமானது. ஆனால் அந்தப் பாடலை எழுதியமைக்காக பின்னால் கவியரசரே வருத்தம் தெரிவித்தார்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  26. //////////////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    மிகவும் அருமையான பாடல்...இப்படம் வெளியான போது நான் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கின்றேன்...என் தந்தைக்கு எந்தவொரு இக்காலத்து படங்களையும்,பாடல்களையும்,நடிகர் நடிகைகளையும் பிடிக்காது(கொஞ்சம் பழமைவாதி என் தந்தை)...அதனால் எங்களையும் பார்க்கவும் விடமாட்டார்(டிஸ்கவரி மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் மட்டுமே பார்ப்போம்...இன்று வரை!!!)
    ஆயினும் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் ஒன்று மட்டுமே என்று நினைக்கின்றேன்...பாட்டு என்றால் இப்படி தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறி ரசிப்பார்,அதுவும் உண்மையே...இன்றும் இந்த பாடலை வானொலியில் கேட்டாலும் மிகவும் ரசிப்பார்...
    என் தந்தைக்கே இந்த பாடல் பிடித்திருந்தால்,தமிழ்நாட்டில் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்...ஏதோ சிறிது வளர்ந்து விட்டதால் எங்களை மட்டும் சில பாடல்களை பார்க்க விட்டாலும் என் தந்தைக்கு பழைய பாடல்கள் மட்டும் தான் பிடிக்கின்றது...அதனால் தான் என்னவோ எனக்கும் புதுபடங்களை விட பழைய படங்களின் பாடல்கள் நன்றாக தெரியும்...ஹிஹிஹி...இப்பாடலை கேட்டும் அதிக நாட்களாகி விட்டது...நல்ல பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...//////

    நல்லவேளை, உங்கள் தந்தை உங்களுக்குப் பெயரை மட்டும் மார்டனாக வைத்தார். கண்ணாம்பா, சாவித்திரி என்று பழைய பெயர்களை வைக்காமல்!

    ReplyDelete
  27. ////////Blogger minorwall said...
    ஸ்நேஹாவுக்கு மல்லிப்பூவும்
    ரொம்ப எடுப்பா இருக்கு..
    இன்னிக்கு என்னைக்
    கிறங்க அடித்தது அதுதான் ..
    'மல்லிகை.. என் மன்னன் மயங்கும் முத்தான மலரல்லவோ?' என்ற அருமையான என் மனதை மயக்கும் பாடல் நினைவுக்கு வருகிறது..
    'நான் பூவெடுத்து வெக்கணும் பின்னாலே..அத வெக்கிறப்போ சொக்கணும் தன்னாலே..' என்ற தலைவர் பாடலும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது..////////

    நினைவுக்கு வந்தால் தப்பில்லை. வாயில் வந்து அதுவும், வீட்டுக்காரம்மாள் இல்லை என்ற தெனாவெட்டில் வந்தால்தான் தப்பாகிவிடும். போதாதநேரம் அந்த சமயத்தில் பூரி தேக்கும் உருளக் கட்டையுடன் அவர் பின்னால் வந்து நின்றால் என்ன ஆகும்? கற்பனை செய்து பாருங்கள் மைனர்!

    ReplyDelete
  28. //////Blogger minorwall said...
    தஞ்சாவூரார் எந்தப் பாட்டை சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதை வைத்து அவரை 'என்றும் பதினாறு' கட்சியின் தலைவராக்கி முன்மொழிகிறேன்..///////

    இதுதானே வேண்டாம் என்கிறது! பாரதியைப் பற்றி அவர் எத்தனை பதிவுகள் போட்டிருக்கிறார். அதை நினைத்துத் தகுந்த முறையில் அவருக்குச் சிறப்புச் செய்யுங்கள் மைனர்!

    ReplyDelete
  29. ////////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயா, வணக்கம்! தற்காலத்தில் சிலாகித்து சொல்வது போல் ஒருசில பாடல்களே அமைகின்றன! அதில் இதுவும் ஒன்று! தங்கள் ரசனையில் எங்களுக்கும் பங்களித்தமைக்கு நன்றி!///////

    ஆமாம்! யான்பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!

    ReplyDelete
  30. //////// SP.VR. SUBBAIYA said...
    //////Blogger minorwall said...
    தஞ்சாவூரார் எந்தப் பாட்டை சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதை வைத்து அவரை 'என்றும் பதினாறு' கட்சியின் தலைவராக்கி முன்மொழிகிறேன்..///////

    இதுதானே வேண்டாம் என்கிறது! பாரதியைப் பற்றி அவர் எத்தனை பதிவுகள் போட்டிருக்கிறார். அதை நினைத்துத் தகுந்த முறையில் அவருக்குச் சிறப்புச் செய்யுங்கள் மைனர்!/////////

    'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
    கள்வெறி கொள்ளுதடி..
    உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
    உன்மத்தம் ஆகுதடி'என்று எனக்குத் தெரிந்த பாரதியின் வரிகள் பற்றி வலையிலே உலா வந்ததில் http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_26.html
    என்ற இந்த பக்கத்தைக் கண்டேன்..
    மேலதிகத் தகவல்களையும் அறிந்தேன்..

    இந்த வகையில் பார்த்தாலுமே பாரதியும் 'என்றும் பதினாறு' இயக்கத்து முன்னோடியாகவேதான் தோன்றுகிறான்..

    அந்தத் தளத்தின் கீழ்க்கண்ட விவரங்களில் பாடலின் பொருள் புரியவில்லை..நேரமிருந்தால் என் போன்ற ஆர்வக் கோளாறுகளுக்காக அய்யா தஞ்சாவூரார் அவர்கள் விளக்கவேண்டும்,,

    'குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி
    பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்
    இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
    குன்றமும் வனமும் கொழுதிரைப் புனலும்
    மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்

    பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?
    கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
    மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
    முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
    உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்

    வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
    கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடைக்கும்
    செயலையென் இயம்புவல் சிவனே!
    மயிலையிற் றென்றெவர் வகுப்புரங் கவட்கே?'

    நவீனக் கவிதையின் பின்புலம் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்தே உருவானது. ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைக்கான கருத்தமைவுகளும் இந்த மனோபாவத்திலிருந்தே வெளியாகியுள்ளன என்பது இயல்பானது. காதல் அடுத்தவன் பிரச்சினையாக இருக்கும்போது ரசிக்கத் தகுந்த ஒன்றெனவும் தன்னுடையதாக வரும்போது ரகசியமாகக் காப்பாற்ற வேண்டிய பிரமாணம் எனவும் இந்த மனோபாவம் வற்புறுத்துகிறது. எனவே, காதலியின் அடையாளங்களையோ, குறைந்தபட்சம் பெயரையோகூட வெளிப்படுத்துவது அத்துமீறலாகிறது. அதனால் கவிதைப் பெண்கள் பெரும்பான்மையும் மனைவியின் சாயலிலோ நிழலிலோ ஒண்டிக்கொள்கிறார்கள். தமிழில் இன்றளவும் ஆகச் சிறந்த காதல் கவிதைகளை எழுதிய பாரதியின் கண்ணம்மாகூட அவரது மனைவி செல்லம்மாளின் முகமூடியுடன்தான் நமக்கு அறிமுகமாகிறாள்.

    பாரதி கவிதைகளை அடிப்படையாக வைத்து அவரது வாழ்க்கையை அவரது வாய்மொழியாகப் பதிவு செய்ய முயன்ற முத்துக்கிருஷ்ணனின் வரலாற்று நூலில் (என்.சி.பி.எச். வெளியீடு)கண்ணம்மா என்பது செல்லம்மாள் அல்லவென்றும் பாரதியின் பிள்ளைப் பிராயத் தோழியென்றும் குறிப்பிட்டிருப்பது ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே படுகிறது. அச்சில் வெளிவந்த அவரது முதல் கவிதையான 'தனிமை இரக்கம்' காதலும் காமமும் பிணைந்தது.

    நன்றி courtesy http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_26.html

    ReplyDelete
  31. ///minorwall said...
    அவரை 'என்றும் பதினாறு' கட்சியின் தலைவராக்கி முன்மொழிகிறேன்.///

    பதினாறு பட்டியலில்
    பலர் உள்ளனர்.. அவரையும் சேர்த்து..

    ReplyDelete
  32. ///Thanjavooraan said...
    அவ்வகைப் பாடலுக்குத் தலைமை தாங்குவது "எலந்தப் பயம்" பாட்டு. அதில் 'எத்தனையோ பேருக்கிட்டே எலந்தப்பயம் பாத்தியே, அதிலே இம்மாம் சைசு பார்த்தியா' எனும் வரி ///

    தாங்கள் சொல்லும் அந்தப் பாடல்
    தாமே அதை சொல்லவில்லை

    புரிந்து கேட்பவரின் எண்ணத்தில்
    புரிய வைத்த பொருள் மாறலாம்..

    ஆனால்..

    இந்த பாடலில்
    ஒற்றை நாணயம் என்றால் ...?

    "பரிசு" என்ற 1963ல் வந்த அன்றைய படத்தில் கவிஞர் கண்ணதாசன்

    இப்படி ஒரு பாடல் அமைத்திருப்பார்


    எண்ண எண்ண இனிக்குது
    ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
    கண்னை வட்டமிட்டு மயக்குது
    அஞ்சு ரூபா
    கல்லால் அடித்த அடி வலிக்க வில்லை
    கண்ணால் அடித்த அடி வலிக்குது

    என்ற அந்த பாடல் புரிகிறது..
    சொல்வதும் சொல்ல வருவதும் புரிகிறது ஆனால்

    ஒற்றை நாணயம் என்ற சொல்லாட்சியும் புரியவில்லை
    சொல்ல வருவதும் புரியவில்லை..

    "புரியவில்லை" என்றால் கவிஞர் என சொல்லனும் என முன்னர் நமது வகுப்பறை தோழர் சொன்னது போல் சொல்ல முடிய வில்லையே...

    ReplyDelete
  33. தாடியென்பது வாசுகியின் கணவரேதான்.தேமொழியின் பதில் சரிதான்.பதிலளித்ததற்கு நன்றி. தற்சமயம் பரிசுபொருள் உசிலியை 'துளசிதள'த்திலிருந்தே எடுத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  34. ///kmr.krishnan said... தாடியென்பது வாசுகியின் கணவரேதான்.தேமொழியின் பதில் சரிதான்.பதிலளித்ததற்கு நன்றி. தற்சமயம் பரிசுபொருள் உசிலியை 'துளசிதள'த்திலிருந்தே எடுத்துக் கொள்ளவும்///

    "ஊரார் வீட்டு நெய்யே... என் பெண்டாட்டி கையே" என்ற "சொல்லடைவு" நினைவுக்கு வருகிறது .
    என்ன ஒரு தாராளம்?!?! அப்படின்னா? அந்த பக்குவத்தைப் படித்து நானே சமைத்துக் கொள்ளணுமா?
    (வீட்டிலிருப்பவர்களையும் என் சமையலால் கொல்ல வாய்ப்பிருக்கிறது)

    ReplyDelete
  35. ///iyer said...ஒற்றை நாணயம் என்ற சொல்லாட்சியும் புரியவில்லை
    சொல்ல வருவதும் புரியவில்லை..///

    ஐயா, அந்தப் பெண்ணுக்கு காதலன் தன் நினைவாக அவளிடம் கொடுத்துச் சென்ற ஒற்றை நாணயத்தைப் பார்த்த பிறகு, எந்த ஒரு வட்டத்தைப் பார்த்தாலும் அவன் கொடுத்த ஒற்றை நாணயம் நினைவு வருகிறதாம். அந்த நாணயம் தங்கத்தை விட உயர்ந்ததாம், யார் கண்ணிலும் பட விட மாட்டாளாம், சாமிகிட்ட கூட கொடுக்க மாட்டாளாம்.
    படத்தின் கதை தெரியாதவர்களுக்கும் பொருள் புரியுமாறு எழுதுவது எல்லோருக்கும் வராது. அதனால்தான் இந்நாள் கவிஞர்கள் அந்த முயற்சியில் இறங்குவதில்லை போலிருக்கிறது. இதே ரீதியில் போனால் இவர்கள் பாடல்களுக்கும் கோனார் தமிழுரை தேவையேற்படும்.

    "வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
    வந்ததும் வந்தாய் துணையுடன் வந்தாய்
    துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
    தூயவளே நீ வாழ்க "
    என்று கவியரசர் நான்கு வரியில் "நெஞ்சிலோர் ஆலயம்" படத்தின் கதையை படம் பார்க்காதவர்களும் புரிந்து கொள்ளும்படி சொன்னார். பாடலை பலமுறைக் கேட்டிருந்தாலும் நான் பார்த்தது என்னவோ பழைய படமாகத்தான். ஆனால் எந்தக் குழப்பமும் பாட்டைக் கேட்டு வந்ததேயில்லை. கொசுறு தகவல்: இந்தப் படம் ஹிந்தியில் படமாக்கப் பட்ட பொழுது கவியரசரின் இந்தப் பாடலைப் போல் நான்கு வரியில் கதை சொல்ல முடியாமல் பாலிவுட் கவிஞர்கள் திணறினார்களாம்.

    ReplyDelete
  36. ///படத்தின் கதை தெரியாதவர்களுக்கும் பொருள் புரியுமாறு எழுதுவது எல்லோருக்கும் வராது.///

    ஆமாம் சகோதரியாரே...
    கதை இது தான் என நாமே புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும்...
    உவமையை காட்டும் செயல் இந்த பாட்டில் இல்லை என்பது தான், ஒற்றை என்பதற்கு ஒரு ரூபா நாணயம் என்று எப்படி பொருள் கொள்வது சகோதரியாரே...அய்யரின் தாக்கம்..இது தான்..

    தமிழ் சொல்லும் உவமையின் இலக்கணம் இது தானே..


    பண்பும் தொழிலும் பயனும்
    என்று இவற்றின்
    ஒன்றும் பலவும் பொருளொடு
    பொருள் புணர்ந்து
    ஒப்புமை தோன்றச் செப்புவது
    உவமை

    உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, உரள மான, இயைப ஏய்ப்ப போன்ற உவமை உருபுகள் தான் இல்லை..

    நால்வகையாக பொருள்களை இயைபு படுத்தவும் இல்லை.

    இருபத்து நான்கு வகைகளை உடைய உவமையில் இது எந்த வகையோ...
    தமிழ்இலக்கண பாடமா நடத்த முடியும்

    தமிழே வாழ்க...
    தரணி போற்ற வளர்க..

    ReplyDelete
  37. இந்தப் பாடலில் அய்யர் எழுப்பிய கேள்விகளைப் போலே எனக்கும் புரியாமல் ஏதோ கேட்கிறோம் என்று கேட்டு வைப்பதுதான்..

    அப்படியொன்றும் மனதை உருக்கும் ட்யூனும் கூட இல்லை..

    அனால் சினேகாவுக்காக இந்தப் பாடலை பலமுறை பார்த்ததுண்டு..(கவனிக்கவும் பார்த்ததுண்டு என்றுதான் சொன்னேனே தவிர கேட்டதுண்டு என்று சொல்லவில்லை..)
    அதனால்தான் எனது கமென்டிலே ஆரம்பத்திலிருந்தே கவிஞரை விமர்சிப்பதிலிருந்து விலகி சினேகா பக்கமாக, சினேகா மல்லிகையின் வாசம் பக்கமாக என் வாசத்தைத் திருப்பினேன்..

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com