29.2.12

Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!



Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!

ஒரு காலத்தில தென்காசிக்கு அருகில் உள்ள திருமலைக் கோவில் என்னும் திருக்கோவிலில் ஒரு வேல் மட்டும்தான் இருந்ததாம்.. பூவன்பட்டர் என்ற பெயரை உடைய அர்ச்சகர் ஒருவர் அவ்வேலுக்கு நித்திய பூஜை செய்து வந்தாராம். ஒரு நாள் முருகப்பெருமான் அவருடைய கனவில் வந்து, "இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் அருகில் உள்ள கோட்டைத் திரடு என்னும் கிராமத்தில் சிலை வடிவிலலுள்ளேன். எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியைத் தோண்டினால் நான் கிடைப்பேன். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக" என்று உத்தரவிட்டாராம்.

அந்தப் பகுதியில் அப்போது இருந்த சிற்றரசனுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு, பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தாராம்.

பிற்காலத்தில், பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள். கேரள எல்லையில் உள்ள திருமலைக் கோயிலையும் புதுப்பித்துக் கட்டினர்களாம். இக்கோவிலில் 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், கந்த கோட்டப் பித்ருக்கள் உறையும் தேவ படிக்கட்டுக்கள் என்கிறார்கள். ஆகவே முன்னோருக்கு இங்கே சென்று தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆகவே நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு, சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசலுக்குப் பிறகுகூட பார்ப்பதற்குச் சிலை அழகாக இருந்தது. கிராமத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம். நெல்லை மாவட்ட கிராமங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அது திருமலை முருகனின் பெயர். மேலும், சிலருக்கு குழந்தை பிறந்து, தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.

பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.

சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்புச் செய்தி!

இக்கோயிலில் திருப்பணி நடந்த காலத்தில், கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டனவாம். கனமான பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறுகள் மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டனவாம். சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டாம். தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும்போது, அப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட் படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையைக் கொடுத்து உருண்டு வரும் தூணைத் தடுத்து நிறுத்துவாராம்.  மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். அப்படி அற்புத சாதனைகளை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார் என்பார்கள். மேலும், வாழைமட்டைகளில் கற்களை ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்துச் சென்று கொடுத்துத் திருப்பணிக்கு உதவியுள்ளார். அவருக்கு அக்கோவிலில் சிலை இருக்கிறது.

சிவகாமி அம்மையார், இக்கோவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு அருகில் உள்ள அச்சன்புதூரில் வசித்து வந்தாராம். அவரது கணவரின் பெயர்
கங்கைமுத்து தேவர் அத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் வேண்டினார் சிவகாமி அம்மையார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். அதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது.

அவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய ஒரு மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அதை ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தாராம்.

 மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தாராம் அந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பெற்றார்.
------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 14
விசாக நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 16ஆவ்து நட்சத்திரம்
வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். 
அருள்மிகு திருமலைக் கோவில்
விசாக நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்
-----------------------------
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி கிராமம் - 627 807,
செங்கோட்டை தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருவிழாக்கள்:  சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.
இறைவனின் பெயர்: முத்துக்குமாரசுவாமி
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
செங்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.
 
விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கேட்பதைக் கொடுப்பார் முருகப்
பெருமான். அந்த நம்பிக்கையோடு சென்று வழிபடுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

51 comments:

  1. திருமலை என்றால் திருப்பதி என்றே எண்ணத்திற்கு மாற்றாக, இதோ ஒரு தென்காசித் திருமலை என்று எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். விசாகம் நடசத்திரக்காரரகளுடன் நாங்களும் சென்று வருகிறோம்.
    அந்த சிவகாமி அம்மையாரின் சிரத்தையும், உழைப்பும் பாராட்டுக்குரியன‌. அவருடைய மனதில் உருவான எண்ணமே கோவிலாக இன்று நிதர்சனமாக உள்ளது.நேரில் அழைத்துச் செல்வது போல விளக்கியுள்ளீர்கள். நன்றி ஐயா!

    ReplyDelete
  2. அந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.
    அவர் ஏதோ ஒரு தொழில் செய்து சம்பாதிக்கிறார். எனவே வங்கி சேமிப்பு இருக்கலாம். கார்டும் இருக்கலாம். பிச்சைக்காரரகளில் பலர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தஞ்சையில் ஒரு 'நாள் தோறும் சேமிப்பு திரட்டுபவர்' பிச்சைக்காரர்களையே தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளார். தினமும் வங்கி முடியும் நேரத்தில் ஒரு மூட்டை சில்லறை நாணயங்களைக் கொண்டு கொட்டி எண்ணச் சொல்கிறார் என்று வங்கிப்பணியாளர்கள் சலித்துக் கொள்வார்கள்..

    மாஹாத்மாஜி அவர் கூறியதுபோலவே தன் இறுதி நாட்கள் வரை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரும் அவ்வாறே!
    கற்பதற்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு சூழலும் ஒரு அநுபவப் பாடமே.

    ReplyDelete
  3. //// kmr.krishnan said...
    திருமலை என்றால் திருப்பதி என்றே எண்ணத்திற்கு மாற்றாக, இதோ ஒரு தென்காசித் திருமலை என்று எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். விசாகம் நடசத்திரக்காரரகளுடன் நாங்களும் சென்று வருகிறோம்.
    அந்த சிவகாமி அம்மையாரின் சிரத்தையும், உழைப்பும் பாராட்டுக்குரியன‌. அவருடைய மனதில் உருவான எண்ணமே கோவிலாக இன்று நிதர்சனமாக உள்ளது.நேரில் அழைத்துச் செல்வது போல விளக்கியுள்ளீர்கள். நன்றி ஐயா!/////

    அதிகமான மலைக்கோவில்கள் உள்ளது எம்பெருமான் முருகனுக்கத்தானே சுவாமி! பழநி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிச் சோலை, திருத்தணி, மருத மலை என்று எங்கெல்லாம் மலை இருக்கிறதோ அங்கெல்லாம் முருகன் இருப்பான் கிருஷ்ணன் சார்! அனால் முருகனின் தாய் மாமா, ஒரே ஒரு மலையை வைத்து பல செஞ்சுரிகளை அடித்து இனறும் அவுட்டாகாமல் ஆடிக்கொண்டிருக்கிறார்! ஆட்டத்தைக் காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது! அவருடைய ஆட்டத்திற்கான ஸ்பான்சர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  4. திருமலை முத்துக்குமரா பண்பொழி யுறையும்
    திருச்செந்தூரழகா, முருகா, மூக்கா -மூவா
    திருவரம் தரும்வேலா, நாதா, தேவாதிதேவா!
    திருக்கயிலை அதிரத்தேன்கவி பாடும்தமிழ் புலவா!
    திருவே!, திருவின்திருவே!!; குருவே!, குருவின்குருவே!!
    திருவாய் மலர்வாய் செவ்வாய் அலர்வாய்நின்
    திருமேனித் தழுவஅனுமதி தருவாய் இறைவா!
    திருக்குமரா செந்தில்வேலாயென தாருயிர்நண்பா!

    அப்பன் ஞானப்பண்டிதனின் அருளை பெற
    அன்பர்களை ஆற்றுப் படுத்தும் அற்புதப் பதிவு...
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. இன்றைய பதிவு மிக அருமை.கடவுளையே தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டியின் கதையைப் படித்த போது,கண்ணில் நீர் துளிர்த்தது. பக்தியில் பல வகை உண்டு எனினும் தாய்மை கலந்த பக்தியின் சக்தியை தங்களின் பதிவு மூலம் நன்கு அறிய முடிந்தது.உலகிலேயே மிக உயர்ந்த சாம்ராஜ்யம் 'பகவந் நாம சாம்ராஜ்யம்'என்று கூறுவார்கள்.முருக பக்தர்கள் அந்த சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர்கள் என்பதை அம்மையாரின் வைராக்கியம் நன்கு உணர்த்தியது.இங்கே(கர்நாடகாவில் )முருகனை நாக வடிவில் வணங்கும் வழக்கம் உள்ளது. முருகன் ஞான சக்தி என்பதால் அவ்வாறு வணங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். அருகாமையில் உள்ள மிகப் பழமையான 'சஜ்ஜன் ராவ் சர்க்கிள்'முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை சிருங்கேரி மஹா ஸ்வாமிகளின் முன்னிலையில் கோலாகலமாக நடந்தேறியது. தங்களுடைய பதிவிலும் திருமலை முருகன் கோவிலைப் பற்றிய செய்தி!,மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நன்றி!.

    ReplyDelete
  6. முதன் முதலில் ஒரு முருகன் கோயில் நட்சத்திரக் கோயிலாக வருகிறது. பெரும்பாலும் சோழ மண்டல சிவன் கோயில்களே நட்சத்திரக் கோயில்களாக வந்துள்ளன. இன்று முருக பக்தரான நம்மாளின் நட்சத்திரக் கோயில்.
    வேண்டியபடி குழந்தை வரம் கிடைக்காவிட்டாலும் தீவிர பக்தையான தேவரம்மா சிவகாமி அம்மையார் மனத்தைக் கவர்ந்தார்.

    அறுபடைகளில் செந்தூர் மட்டுமே கடலைச் சார்ந்தது. மலையையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன். குன்றிருக்கும் இடம் தோறும் குடியிருக்கும் குமரக் கடவுள் அண்ணனுக்கு மலை உச்சியை விட்டுக் கொடுத்து வயலுக்கு போனது திருச்சியில்.

    எனக்கென்னமோ 'ஹான்ட்ஸ் அப்' சொன்னதைக்கேட்டு திகிலடைந்து பார்ப்பது போல் இருக்கிறது. நவீன கால சாண்ட்டா கிளாஸ் மாறுவேடத்தில் வந்து, என் நன்னடத்தையைப் பாராட்டி ஏ.டி.எம் வழியாக என் கணக்கில் பணத்தைப் போடுகிறார்...மாத்தி யோசிச்சா தப்பா? தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. /////தேமொழி said...
    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'
    --- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

    செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
    --- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

    முடி வெட்டும் தொழில் செய்யும்
    தோழந்தான் இல்லையேல்
    நமக்கெல்லாம் ஏது அழகு
    நதி நீரில் நின்று துணி
    துவைப்பவன் இல்லையேல்
    வெளுக்குமா உடை அழுக்கு
    எந்த தொழில் செய்தாலென்ன
    செய்யும் தொழில் தெய்வமென்று
    பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
    ---வாலி

    முடிதிருத்தும் சிறுவனைப் போல் போலவே சிறுமிகளும் காலம் காலமாக வீட்டு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப் பட்டதுண்டு.
    குழந்தை தொழிலாளிகளுக்கு கல்வி தடைபட்டால் அது வருத்ததிற்குரியது.
    சொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.////

    நம்ம பாரதியை விட்டுட்டீங்களே சகோதிரியாரே!

    "சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
    பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.

    ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
    யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்."

    அன்னச் சத்திரங்கள் ஆயிரமாயிரம் நாட்டிய காலங்கள் உண்டு...
    பல இல்லங்கள் கூட அப்பூதியடிகளின் இல்லமாக இருந்ததுண்டாம்...
    பாலும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...
    அப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...

    அன்ன சத்திரம் ஆயிரம் வேண்டாம்; அதைவிட புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி...
    இப்போது அதுவும் விலைக்கே விற்கப் படுகிறது...
    படிக்க அறிவு போய் பணம் இருந்தால் பட்டமும் பட்டயமும் வீடு தேடி வருகிறது...

    அதையும் மீறி கஷ்டப் பட்டுப் படித்தவனும் பெட்டி நிறைய கொடுக்காததால் அவன் வயிறு நிறைய மாட்டீங்கிறது..
    அதையும் மீறி எப்படியோ அத்தனையும்தொலைத்து பெட்டியைக் கொடுத்தவனும் தான் அரிச்சந்திரனாக எப்படி இருக்க முடியும்..
    அப்படி இருந்தாலும் மேலதிகாரி சும்மா விடுவானா? என்னமோ... 2020-ஒளிருமாம், ஒளிரட்டும்.

    ReplyDelete
  8. விஷப் பாலும் / பாழும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...
    அப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...

    ReplyDelete
  9. //// kmr.krishnan said...
    அந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.
    அவர் ஏதோ ஒரு தொழில் செய்து சம்பாதிக்கிறார். எனவே வங்கி சேமிப்பு இருக்கலாம். கார்டும் இருக்கலாம். பிச்சைக்காரரகளில் பலர் வங்கிக் கணக்கு

    வைத்துள்ளனர். தஞ்சையில் ஒரு 'நாள் தோறும் சேமிப்பு திரட்டுபவர்' பிச்சைக்காரர்களையே தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளார்.

    தினமும் வங்கி முடியும் நேரத்தில் ஒரு மூட்டை சில்லறை நாணயங்களைக் கொண்டு கொட்டி எண்ணச் சொல்கிறார் என்று வங்கிப்பணியாளர்கள் சலித்துக்

    கொள்வார்கள்..
    மாஹாத்மாஜி அவர் கூறியதுபோலவே தன் இறுதி நாட்கள் வரை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரும் அவ்வாறே!
    கற்பதற்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு சூழலும் ஒரு அநுபவப் பாடமே./////

    ஆமாம்! பதிவுகளின் மேன்மையே அவற்றை வாசிப்பவர்களும் கற்றுக்கொள்கிறார்கள்.அவர்களின் பின்னூட்ட வாயிலாக எழுதுபரும் கற்றுக்கொள்கிறார்!

    ReplyDelete
  10. //// ஆலாசியம் said...
    திருமலை முத்துக்குமரா பண்பொழி யுறையும்
    திருச்செந்தூரழகா, முருகா, மூக்கா -மூவா
    திருவரம் தரும்வேலா, நாதா, தேவாதிதேவா!
    திருக்கயிலை அதிரத்தேன்கவி பாடும்தமிழ் புலவா!
    திருவே!, திருவின்திருவே!!; குருவே!, குருவின்குருவே!!
    திருவாய் மலர்வாய் செவ்வாய் அலர்வாய்நின்
    திருமேனித் தழுவஅனுமதி தருவாய் இறைவா!
    திருக்குமரா செந்தில்வேலாயென தாருயிர்நண்பா!
    அப்பன் ஞானப்பண்டிதனின் அருளை பெற
    அன்பர்களை ஆற்றுப் படுத்தும் அற்புதப் பதிவு...
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

    நல்லது. திரு'வோடு இருக்கும் உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. /// Parvathy Ramachandran said...
    இன்றைய பதிவு மிக அருமை.கடவுளையே தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டியின் கதையைப் படித்த போது,கண்ணில் நீர் துளிர்த்தது. பக்தியில் பல

    வகை உண்டு எனினும் தாய்மை கலந்த பக்தியின் சக்தியை தங்களின் பதிவு மூலம் நன்கு அறிய முடிந்தது.உலகிலேயே மிக உயர்ந்த சாம்ராஜ்யம் 'பகவந் நாம

    சாம்ராஜ்யம்'என்று கூறுவார்கள்.முருக பக்தர்கள் அந்த சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர்கள் என்பதை அம்மையாரின் வைராக்கியம் நன்கு

    உணர்த்தியது.இங்கே(கர்நாடகாவில் )முருகனை நாக வடிவில் வணங்கும் வழக்கம் உள்ளது. முருகன் ஞான சக்தி என்பதால் அவ்வாறு வணங்குகிறார்கள்

    என்று நினைக்கிறேன். அருகாமையில் உள்ள மிகப் பழமையான 'சஜ்ஜன் ராவ் சர்க்கிள்'முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை சிருங்கேரி மஹா

    ஸ்வாமிகளின் முன்னிலையில் கோலாகலமாக நடந்தேறியது. தங்களுடைய பதிவிலும் திருமலை முருகன் கோவிலைப் பற்றிய செய்தி!,மிகவும்

    மகிழ்ச்சியடைந்தேன். நன்றி!.////

    முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். அழ்கு என்றால் நெகிழ்ச்சி. முருக பக்தர்கள் எல்லாம் நெகிழ்ச்சியில் வைராக்கியம் உடையவர்களாக மாறிவிடுகிறார்கள். அது இயற்கையே! முருகனைப் பார்க்கும்போதும் மகிழ்ச்சிதான். அவனுடைய பக்தர்களைப் பார்க்கும்போதும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  12. //// தேமொழி said...
    முதன் முதலில் ஒரு முருகன் கோயில் நட்சத்திரக் கோயிலாக வருகிறது. பெரும்பாலும் சோழ மண்டல சிவன் கோயில்களே நட்சத்திரக் கோயில்களாக

    வந்துள்ளன. இன்று முருக பக்தரான நம்மாளின் நட்சத்திரக் கோயில்.
    வேண்டியபடி குழந்தை வரம் கிடைக்காவிட்டாலும் தீவிர பக்தையான தேவரம்மா சிவகாமி அம்மையார் மனத்தைக் கவர்ந்தார்.
    அறுபடைகளில் செந்தூர் மட்டுமே கடலைச் சார்ந்தது. மலையையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன். குன்றிருக்கும் இடம் தோறும்

    குடியிருக்கும் குமரக் கடவுள் அண்ணனுக்கு மலை உச்சியை விட்டுக் கொடுத்து வயலுக்கு போனது திருச்சியில்.
    எனக்கென்னமோ 'ஹான்ட்ஸ் அப்' சொன்னதைக்கேட்டு திகிலடைந்து பார்ப்பது போல் இருக்கிறது. நவீன கால சாண்ட்டா கிளாஸ் மாறுவேடத்தில் வந்து, என்

    நன்னடத்தையைப் பாராட்டி ஏ.டி.எம் வழியாக என் கணக்கில் பணத்தைப் போடுகிறார்...மாத்தி யோசிச்சா தப்பா? தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா.////

    திருவானைக்கோவில், தாயும் தந்தையும், ஸ்ரீரங்கத்தில் தாய்மாமன், ஊருக்கு மதியில் உள்ள மலையில் அண்ணன் என்று எல்லோரும் இடம்பிடித்துவிட்டதால், மற்றுமொரு பழநியை உருவாக்காமல் பால முருகன் வயலூரில் செட்டிலாகிவிட்டார் தாயே!

    ReplyDelete
  13. //// ஆலாசியம் said...
    /////தேமொழி said...
    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'
    --- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
    செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
    --- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    முடி வெட்டும் தொழில் செய்யும்
    தோழந்தான் இல்லையேல்
    நமக்கெல்லாம் ஏது அழகு
    நதி நீரில் நின்று துணி
    துவைப்பவன் இல்லையேல்
    வெளுக்குமா உடை அழுக்கு
    எந்த தொழில் செய்தாலென்ன
    செய்யும் தொழில் தெய்வமென்று
    பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
    ---வாலி
    முடிதிருத்தும் சிறுவனைப் போல் போலவே சிறுமிகளும் காலம் காலமாக வீட்டு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப் பட்டதுண்டு.
    குழந்தை தொழிலாளிகளுக்கு கல்வி தடைபட்டால் அது வருத்ததிற்குரியது.
    சொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.////
    நம்ம பாரதியை விட்டுட்டீங்களே சகோதிரியாரே!

    "சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
    பக்தியுடன் போற்றி நின்றால் பய மனைத்துந் தீரும்.
    ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்,
    யாதானுந் தொழில் புரிவோம், யாதுமவள் தொழிலாம்."

    அன்னச் சத்திரங்கள் ஆயிரமாயிரம் நாட்டிய காலங்கள் உண்டு...
    பல இல்லங்கள் கூட அப்பூதியடிகளின் இல்லமாக இருந்ததுண்டாம்...
    பாலும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...
    அப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...

    அன்ன சத்திரம் ஆயிரம் வேண்டாம்; அதைவிட புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி...
    இப்போது அதுவும் விலைக்கே விற்கப் படுகிறது...
    படிக்க அறிவு போய் பணம் இருந்தால் பட்டமும் பட்டயமும் வீடு தேடி வருகிறது...

    அதையும் மீறி கஷ்டப் பட்டுப் படித்தவனும் பெட்டி நிறைய கொடுக்காததால் அவன் வயிறு நிறைய மாட்டீங்கிறது..
    அதையும் மீறி எப்படியோ அத்தனையும்தொலைத்து பெட்டியைக் கொடுத்தவனும் தான் அரிச்சந்திரனாக எப்படி இருக்க முடியும்..
    அப்படி இருந்தாலும் மேலதிகாரி சும்மா விடுவானா? என்னமோ... 2020-ஒளிருமாம், ஒளிரட்டும்./////

    நம்பிக்கைதான் வாழ்க்கை! ஒளிரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  14. //// ஆலாசியம் said...
    விஷப் பாலும் / பாழும் கலி முற்ற முற்ற சோறும் விலைக்கு வந்ததாம்...
    அப்போது அதைப் பலரும் பாவம் என்றேக் கூறினாராம்...////

    இல்லை! மக்களுக்கு பாவமும் பழகிவிட்டது. பாவம் செய்ய யாரும் இப்போது பயப்படுவதில்லை. அதுவும் வாழ்க்கையின் விதிமுறையாகிவிட்டது.

    ReplyDelete
  15. என்ன பார்க்கிரிங்க தம்பி-எனக்கும்
    இருக்கிறது ATM கார்ட்
    எடுக்க வந்தது பனம்தான்-அதுவும்
    ஒரு நாள் செலவுக்குத்தான்.

    என்ன புரியலையா தம்பி- பனத்தை
    சட்டைப் பையில் வைத்தால்
    போதவில்லை
    அப்படி இருக்கு விலைவாசி

    இன்னும்புரியலியா தம்பி-எதுவும் விற்கும் விலையில்
    கோனிபையில் கொண்டு சென்றால் மட்டுமே வாங்கமுடிகிறது
    ஒருநாள் பொழுதுக்கு
    போதுமானதாகவும் இருக்கிறது
    இப்போ புரிந்ததா தம்பி.

    ReplyDelete
  16. இந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்!

    ReplyDelete
  17. இன்றைய பதிவில் உள்ள கோவில் இதுவரை நான் கேள்விப்படாதது, கதையும்தான். தலவரலாற்றுடன், மேலதிகத் தகவல்களையும் தருவதால் எல்லா நட்சத்திரக்காரர்களுமே ஆர்வத்துடன் படிக்க இயல்கிறது.

    ReplyDelete
  18. அந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.//

    இதுவரை உங்களுக்கு 'மைனரோபோபியா' மட்டும்தானே இருந்தது? இப்ப என்னன்னா யாரைப்பார்த்தாலும் பயமா இருக்கு, பயமா இருக்குன்னு பின்னூட்டம் வருது?

    ReplyDelete
  19. //// Uma said...
    இந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்!////

    தட்டச்சுப்பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சரி செய்துவிட்டேன். ப்ரொஃபைலில் தம்மாத்தூண்டு படத்தைப் போட்டிருக்கீறீர்கள். எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா? மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

    ReplyDelete
  20. //// Uma said...
    இன்றைய பதிவில் உள்ள கோவில் இதுவரை நான் கேள்விப்படாதது, கதையும்தான். தலவரலாற்றுடன், மேலதிகத் தகவல்களையும் தருவதால் எல்லா நட்சத்திரக்காரர்களுமே ஆர்வத்துடன் படிக்க இயல்கிறது.////

    தங்கள் நட்சத்திரத்துடன் முடித்துக்கொண்டு விடக்கூடாது. அனைவரும் எல்லாப் பதிவுகளையும் படிக்க வேண்டும் - அத்ற்கு பதிவுகள் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று சற்று சிரத்தை எடுத்து எழுதுகிறேன் சகோதரி. உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  21. kmr.krishnan said...
    ///. பிச்சைக்காரரகளில் பலர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தஞ்சையில் ஒரு 'நாள் தோறும் சேமிப்பு திரட்டுபவர்' பிச்சைக்காரர்களையே தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளார்////

    //அந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில்//

    "குப்பை சேகரிப்பவர்" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.இணையத்தில் வரும் ஜோக்குகள் நம்மை போட்டு வாங்குது.உதாரணத்துக்கு.....பால்போடறவர்.........பால்காரர்.ஆட்டோ ஓடுபவர் .....ஆட்டோகாரர் அப்போ.பேப்பர்போடறவர்............பேப்பர்காரர்.அப்படின்னா ........பிச்சை போடறவர் .........பிச்சைகாரரா???!!!!

    ReplyDelete
  22. /// Uma said...
    அந்தக் குப்பை சேகரிப்பவரின் கண்களில் தெரியும் ஆக்கிரோஷம் பயமளிக்கிறது.//
    இதுவரை உங்களுக்கு 'மைனரோபோபியா' மட்டும்தானே இருந்தது? இப்ப என்னன்னா யாரைப்பார்த்தாலும் பயமா இருக்கு, பயமா இருக்குன்னு பின்னூட்டம் வருது?///

    கரெக்ட். தஞ்சையில் இருந்தவரைக்கும் துர்வாசரின் துணையோடு ஷேமமாக இருந்தார். லால்குடிக்குப் போன பிறகுதான் இந்த புதுப் பிரச்சினை!

    ReplyDelete
  23. என்ன பார்க்கிறீங்க தம்பி
    எனக்கும் இருக்கிறது ATM கார்ட்
    பணம் எடுக்கத்தான் வந்தேன்அதுவும்
    ஒரு நாள் பாக்கெட் செலவுக்குத்தான்

    என்ன புரிந்ததா தம்பி
    அரசியலுக்கு சூட்கேஸ்
    இது அன்றாட காட்சி.
    எங்களுக்கு சாக்குபேக்-நாங்கள்
    அன்றாட காய்ச்சி .

    என்ன புரியலியா தம்பி
    விலைவாசி விற்பது அப்படி .
    கோணிப்பையில் கொண்டு போனால்தான்
    ஆகுது கட்டுப்படி .

    ReplyDelete
  24. எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா//

    விரைவில் மாற்றுகிறேன்

    ReplyDelete
  25. ///தஞ்சையில் இருந்தவரைக்கும் துர்வாசரின் துணையோடு ஷேமமாக இருந்தார். ///

    துர்வாசரின் துணை??? ஐயா உங்களுக்கு இன்று சந்திராஷ்டமோ? :)))

    ReplyDelete
  26. /"குப்பை சேகரிப்பவர்" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.//

    ஆனந்தமுருகரே! 'ரேக் பிக்கர்' என்பதையே குப்பை சேகரிப்பவர் என்று சொல்லி, அவராவது ஏதோ ஒரு தொழில் செய்கிறார் அவர் வங்கிக்கணக்கும் கார்டும் வைத்திருக்கலாம்' என்று அவரைப் பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ?

    ReplyDelete
  27. 13ல் இருந்து கீழ்க்கணக்குச் சொல்லி வந்தவர் சரியாக சிவராத்திரி அன்று எண்ணுவதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் மெள‌னம்! பெரும்பாலும் சிவராத்திரி அன்று கிளம்பி கைலாய யாத்திரை சென்று இருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

    ReplyDelete
  28. //////////"குப்பை சேகரிப்பவர்" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.இணையத்தில் வரும் ஜோக்குகள் நம்மை போட்டு வாங்குது.உதாரணத்துக்கு.....பால்போடறவர்.........பால்காரர்.ஆட்டோ ஓடுபவர் .....ஆட்டோகாரர் அப்போ.பேப்பர்போடறவர்............பேப்பர்காரர்.அப்படின்னா ........பிச்சை போடறவர் .........பிச்சைகாரரா???!!!!////////

    ஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)

    ReplyDelete
  29. /////SP.VR. SUBBAIYA said...
    //// Uma said...
    இந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்!////

    தட்டச்சுப்பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சரி செய்துவிட்டேன். ப்ரொஃபைலில் தம்மாத்தூண்டு படத்தைப் போட்டிருக்கீறீர்கள். எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா? மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!//////

    அவுங்க கட்சியிலே கட் அவுட் கலாச்சாரமெல்லாம் இல்லியாம்..முற்போக்கு முன்னணியாம்..

    ReplyDelete
  30. ////////// kmr.krishnan said...
    /"குப்பை சேகரிப்பவர்" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.//

    ஆனந்தமுருகரே! 'ரேக் பிக்கர்' என்பதையே குப்பை சேகரிப்பவர் என்று சொல்லி, அவராவது ஏதோ ஒரு தொழில் செய்கிறார் அவர் வங்கிக்கணக்கும் கார்டும் வைத்திருக்கலாம்' என்று அவரைப் பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ?/////////

    எனக்குத் தெரிந்து ஒரு நபர் சென்னையில் (அம்பத்தூரில் சொந்தமாக வீடும் மனையும் உள்ளவர்.இன்றைய மதிப்பில் கோடியைத் தொடும்.மனைவி,மகன் என்று குடும்பமும் உண்டு. ) இன்றும் தெருவோரங்களில் கிடக்கும் பேப்பர் குப்பையை சேகரிப்பதைத்தொழிலாகக் கொண்டு சுற்றிவருகிறார்..பார்க்கும் போதெல்லாம் திட்டி ஏதாவது உருப்படியான வேறு வேலை செய்யக் கூடாதாய்யா? என்று என்னதான் திட்டினாலும் அவருக்கு உறைப்பதில்லை..அந்தாள் பத்தாம் அதிபதி என்னவாக எந்த நிலையில் இருக்கிறானோ?

    ReplyDelete
  31. minorwall said...
    ஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)

    சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் பக்கத்துல வந்து உக்காருன்னு சொல்லுவாங்களோ!!!

    ReplyDelete
  32. //ஆனந்தமுருகரே! 'ரேக் பிக்கர்' பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ?//

    வரவேற்கிறேன்!!!அய்யா!!பயத்தையும் வழிமொழிகிறேன்!!!திருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒரு தடவை சென்று வாருங்கள்!!எல்லாம் சரியாகிவிடும்!!என் சொந்த ஊரும் அதுதான்.

    ReplyDelete
  33. வாத்தியார் ஐயா வணக்கம்.

    ஐயா எல்லா வகையிலையும் தாங்கள் வெளுத்து வான்குகின்றிர்களே ஐயா.

    அது மட்டும் எப்படி ஐயா முடியுது தாங்களால் !

    என்னுடைய தாயாரின் தங்கை மகளுக்கு மூக்கமாள் என்று தான் பெயர் வைத்து உள்ளார்கள் ஐயா!

    முதல் குழந்தை யின் பெயர் மகேஷ் 6 வயது இருக்கும் பொழுது உடல் நலக்கொளாரால் இறந்து போனாள் .

    பின்னர் நீண்ட நெடு நாளா குழந்தை இல்லாமல் பிறந்தமையால் அவளுக்கு எங்களுடைய கோத்திரத்தின் தெய்வம் ஆன " சண்முகரின் " பெயரையே குழந்தைக்கு ( தங்கைக்கு ) வைத்து விட்டார்கள்.

    மேலும் ஆண் குழந்தை இல்லை என்று ஏங்குபவர்களும் இன்று கூட ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மலை ஏறி குழந்தை வரம் பெற்றவர்கள் ஏராளம் ஐயா.

    மலை ஏறும்பொழுது பாதி தூரம் சென்ற பின்னர் படி கட்டுகள் இரண்டாக பிரியும் ஒன்று செங்குத்தாக இருக்கும் மற்றது சாய்வாக இருக்கும் .

    அதில் செங்குத்தாக இருக்கும் படி கட்டின் வழியாக சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது எல்லோரிடையும் நன்பிக்கை ஐயா .

    எமது சமுகத்திற்கு ஏற்ற ஒரு தங்கும் மண்டபம் இன்றும் மலை மீது உள்ளது .

    அங்கு திரு விழாகாலங்களில் அன்ன தானம், குடி நீர் , மோர், பானகாரையம், என நிறைய அன்ன தானம் நடைபெறும் ஐயா .

    கந்த சஷ்டி சமயத்தில் ஆறு நாட்களும் மிகவும் சிறப்பாக இருக்கும் ஐயா.

    பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.

    இதனில் ஆரியங்காவு அய்யப்பன் கோவில் திருவிழா நாட்களில் சௌராஷ்ட்ர சமுகத்தை சாந்தவர்கள் வந்து மிகவும் சிறப்பாக விழாட்களை கொண்டாடுவர் ஐயா.

    புளியரையில் ஒரு " தெட்சிணாமூர்த்தி "கோவில் உள்ளது ஐயா ! இந்த திரு தளம் மிகவும் பிரபலியம் ஆகி கொண்டு வருகின்றது ஐயா .

    சென்னை மற்றும் வடக்கு தமிழகத்தை சார்ந்த நபர்கள் இந்த இயற்கை சூழலை பார்த்தால் மட்டும் போதும் தன்னையே மெய் மறந்து விடுவர் ஐயா .

    அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக இயற்க்கை வளம் நிறைந்த பகுதியாக இருக்கும் ஐயா .

    அச்சன் கோவில் என்பது கேரள பகுதில் உள்ளது ஆனால் அங்கு செல்லுவது என்பது இந்த திருமலைக்கோவில் வழியாக தான் செல்ல வேண்டும் .

    வகுப்பறைக்கு வரும் சக நண்பர்களும் மற்றும் பெரியவர்களும் ஒரு முறை வந்து திருமலை சுவாமியையும் , அய்யபனையும், தெட்சினாமூர்த்தியையும் தரிசனம் செய்ய வேண்டுகின்றேன் .

    ReplyDelete
  34. இறைவனுக்கு எவ்வளவு தொண்டு செய்தும் என்ன பிரயோஜனம். குழந்தை பாக்கியம் கிட்டவில்லையே. கர்ம வினைகள் எல்லாவற்றையும் விட வலிமையானவை போலும். அதை வெல்வதானால் இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.

    ReplyDelete
  35. முருகனை அழைத்து
    முன் நிறுத்திய பின்

    கருத்து உரை வழங்க வேண்டி
    கனிவுடனே தருகிறோம் வருகை பதிவு

    உம்மை பிடித்ததே அந்த
    உண்மையே முருகனருள் வலைப்பூ தான்

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  36. ATMல் பணம் எடுப்பவர்..
    பழைய தாள், பிளாஸ்டிக் சேகரிக்கும்

    தொழில் புரியும் தோழரும் அல்லர்
    சிலர் குறித்தது போல் பிச்சைக்காரரும்
    அல்லர்..

    எமது பார்வையில் அவர் ..
    ஒரு சித்தர்,...
    அவர் சொல்வது இது தான்..

    காந்தி படம் போட்ட
    கரன்சி நோட்டு

    சேர்த்து வைத்த குப்பை கட்டு
    சோர்வை தந்து வாழ்வு கெட்டு

    ஏற்றம் தரும் வாழ்வை எட்டு
    மாற்றம் வரவே இறையை ஒட்டு

    நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்..

    ReplyDelete
  37. ஆரோக்கியமான
    திருக்கயிலாய யாத்திரை
    மே மாத இறுதியில் தான் துவக்குகிறார்கள்

    ITBP அனுமதியும் சிரமமில்லாமல் அப்போது கிடைக்கும்..

    வாய்ப்பினை திருவருள் கூட்டினால்
    வணங்கி செல்ல காத்திருக்கிறோம்..

    மாசில்லா அன்பினை தரும்
    சிகு தோழருக்கு

    அன்பான வணக்கமும்
    அளவில்லா வாழ்த்துக்களும்

    ReplyDelete
  38. //// thanusu said...
    என்ன பார்க்கிறீங்க தம்பி
    எனக்கும் இருக்கிறது ATM கார்ட்
    பணம் எடுக்கத்தான் வந்தேன்அதுவும்
    ஒரு நாள் பாக்கெட் செலவுக்குத்தான்
    என்ன புரிந்ததா தம்பி
    அரசியலுக்கு சூட்கேஸ்
    இது அன்றாட காட்சி.
    எங்களுக்கு சாக்குபேக்-நாங்கள்
    அன்றாட காய்ச்சி .
    என்ன புரியலியா தம்பி
    விலைவாசி விற்பது அப்படி .
    கோணிப்பையில் கொண்டு போனால்தான்
    ஆகுது கட்டுப்படி .////

    கடலுக்கு அடியில் பைப் லைன் பணி என்ன ஆயிற்று? இன்று வேலைக்கு டும்மாவா?

    ReplyDelete
  39. /// Uma said...
    எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா//
    விரைவில் மாற்றுகிறேன்////

    மம்தா பானெர்ஜி அம்மையார் போன்று தோற்றமளிக்கும் படத்தைப் போடுங்கள். அப்போதுதான் மறற கட்சிகளைச் சமாளிக்க முடியும்!

    ReplyDelete
  40. /// தேமொழி said...
    ///தஞ்சையில் இருந்தவரைக்கும் துர்வாசரின் துணையோடு ஷேமமாக இருந்தார். ///
    துர்வாசரின் துணை??? ஐயா உங்களுக்கு இன்று சந்திராஷ்டமோ? :)))////

    கே.முத்துராம்கிருஷ்ணரின் நண்பர் அவர். அது அவருடைய செல்லப்பெயர். யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லையா? ஒரு க்ளூ தருகிறேன். அவர் பெய்ரில் வேங்கடம் இருக்கும். சீதை மணாளனும் இருப்பார்

    ReplyDelete
  41. //// kmr.krishnan said...
    13ல் இருந்து கீழ்க்கணக்குச் சொல்லி வந்தவர் சரியாக சிவராத்திரி அன்று எண்ணுவதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் மெள‌னம்! பெரும்பாலும் சிவராத்திரி அன்று கிளம்பி கைலாய யாத்திரை சென்று இருக்கலாம் என்று யூகிக்கிறேன்.////

    வருவார். வருவார். வந்து விட்டார். கடைசியிலுள்ள பின்னூட்டங்களைப் பாருங்கள்!

    ReplyDelete
  42. /// minorwall said...
    //////////"குப்பை சேகரிப்பவர்" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.இணையத்தில் வரும் ஜோக்குகள் நம்மை போட்டு வாங்குது.உதாரணத்துக்கு.....பால்போடறவர்.........பால்காரர்.ஆட்டோ ஓடுபவர் .....ஆட்டோகாரர் அப்போ.பேப்பர்போடறவர்............பேப்பர்காரர்.அப்படின்னா ........பிச்சை போடறவர் .........பிச்சைகாரரா???!!!!////////
    ஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)////

    டபுள் டிஜிட்டிலே பிச்சை போட்டால், போடுகிறவன் கூடிய சீக்கிரம்.........ஆக வேண்டியதுதான்! நல்ல வழியாய்ச் சொல்லுங்கள் மைனர்!

    ReplyDelete
  43. /// minorwall said...
    /////SP.VR. SUBBAIYA said...
    //// Uma said...
    இந்தியா ஒளிகிறது என்பதை ஒளிர்கிறது என்று மாற்றிவிடுங்கள் சார்!////
    தட்டச்சுப்பிழை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சரி செய்துவிட்டேன். ப்ரொஃபைலில் தம்மாத்தூண்டு படத்தைப் போட்டிருக்கீறீர்கள். எதிர்கட்சித் தலைவியைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தலைவியின் முகம் பளிச்'சென்று தெரிய வேண்டாமா? மைனர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!//////
    அவுங்க கட்சியிலே கட் அவுட் கலாச்சாரமெல்லாம் இல்லியாம்..முற்போக்கு முன்னணியாம்..////

    மம்தாவோடு மோதுகிறோம் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள் மைனர்!

    ReplyDelete
  44. //// minorwall said...
    ////////// kmr.krishnan said...
    /"குப்பை சேகரிப்பவர்" நன்றாக இருக்கிறது.பிச்சைக்காரர் என்பது நெருடலாக இருப்பது போல் தெரிகிறது.அதோடில்லாமல்,அவர் பேப்பர் collect செய்பவர் மாதிரி இருக்கிறார்.//
    ஆனந்தமுருகரே! 'ரேக் பிக்கர்' என்பதையே குப்பை சேகரிப்பவர் என்று சொல்லி, அவராவது ஏதோ ஒரு தொழில் செய்கிறார் அவர் வங்கிக்கணக்கும் கார்டும் வைத்திருக்கலாம்' என்று அவரைப் பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ?/////////
    எனக்குத் தெரிந்து ஒரு நபர் சென்னையில் (அம்பத்தூரில் சொந்தமாக வீடும் மனையும் உள்ளவர்.இன்றைய மதிப்பில் கோடியைத் தொடும்.மனைவி,மகன் என்று குடும்பமும் உண்டு. ) இன்றும் தெருவோரங்களில் கிடக்கும் பேப்பர் குப்பையை சேகரிப்பதைத்தொழிலாகக் கொண்டு சுற்றிவருகிறார்..பார்க்கும் போதெல்லாம் திட்டி ஏதாவது உருப்படியான வேறு வேலை செய்யக் கூடாதாய்யா? என்று என்னதான் திட்டினாலும் அவருக்கு உறைப்பதில்லை..அந்தாள் பத்தாம் அதிபதி என்னவாக எந்த நிலையில் இருக்கிறானோ?////

    வேஸ்ட் ஈஸ் வெல்த் மைனர்!

    ReplyDelete
  45. //// Ananthamurugan said...
    minorwall said...ஆமாம்..சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் அவரெல்லாம் இன்னிய தேதிக்குப் பிச்சைக்காரர்தான்..(கவுண்டமணி காலத்துலேயே இந்த ஜோக் ரொம்பப் பிரபலம்.)
    சிங்கிள் டிஜிட்டிலே பிச்சை போட்டால் பக்கத்துல வந்து உக்காருன்னு சொல்லுவாங்களோ!!!////

    சொல்ல மாட்டார்கள். அதற்காக டபுள் டிஜிட்டில் போட்டால் உட்காரும் நிலமை வரலாம்!

    ReplyDelete
  46. /// Ananthamurugan said...
    //ஆனந்தமுருகரே! 'ரேக் பிக்கர்' பிச்சைக்காரரகளிடமிருந்து வேறுபடுத்தி மதிப்புடனேயே குறிப்பிட்டுள்ளேன்.கவனிக்கவில்லையோ?//
    வரவேற்கிறேன்!!!அய்யா!!பயத்தையும் வழிமொழிகிறேன்!!!திருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒரு தடவை சென்று வாருங்கள்!!எல்லாம் சரியாகிவிடும்!!என் சொந்த ஊரும் அதுதான்.////

    யாருக்கு சரியாகிவிடும்? எத்தனை ஊர் தண்ணீரைக் குடித்தவர் அவர்! அவரிடம் போய் இதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே!

    ReplyDelete
  47. //// kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    ஐயா எல்லா வகையிலையும் தாங்கள் வெளுத்து வாங்குகின்றிர்களே ஐயா.
    அது மட்டும் எப்படி ஐயா முடியுது தாங்களால் !
    என்னுடைய தாயாரின் தங்கை மகளுக்கு மூக்கமாள் என்று தான் பெயர் வைத்து உள்ளார்கள் ஐயா!
    முதல் குழந்தை யின் பெயர் மகேஷ் 6 வயது இருக்கும் பொழுது உடல் நலக்கொளாரால் இறந்து போனாள் .
    பின்னர் நீண்ட நெடு நாளா குழந்தை இல்லாமல் பிறந்தமையால் அவளுக்கு எங்களுடைய கோத்திரத்தின் தெய்வம் ஆன " சண்முகரின் " பெயரையே குழந்தைக்கு ( தங்கைக்கு ) வைத்து விட்டார்கள்.
    மேலும் ஆண் குழந்தை இல்லை என்று ஏங்குபவர்களும் இன்று கூட ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மலை ஏறி குழந்தை வரம் பெற்றவர்கள் ஏராளம் ஐயா.
    மலை ஏறும்பொழுது பாதி தூரம் சென்ற பின்னர் படி கட்டுகள் இரண்டாக பிரியும் ஒன்று செங்குத்தாக இருக்கும் மற்றது சாய்வாக இருக்கும் .
    அதில் செங்குத்தாக இருக்கும் படி கட்டின் வழியாக சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது எல்லோரிடையும் நன்பிக்கை ஐயா .
    எமது சமுகத்திற்கு ஏற்ற ஒரு தங்கும் மண்டபம் இன்றும் மலை மீது உள்ளது .
    அங்கு திரு விழாகாலங்களில் அன்ன தானம், குடி நீர் , மோர், பானகாரையம், என நிறைய அன்ன தானம் நடைபெறும் ஐயா .
    கந்த சஷ்டி சமயத்தில் ஆறு நாட்களும் மிகவும் சிறப்பாக இருக்கும் ஐயா.
    பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.
    இதனில் ஆரியங்காவு அய்யப்பன் கோவில் திருவிழா நாட்களில் சௌராஷ்ட்ர சமுகத்தை சாந்தவர்கள் வந்து மிகவும் சிறப்பாக விழாட்களை கொண்டாடுவர் ஐயா.புளியரையில் ஒரு " தெட்சிணாமூர்த்தி "கோவில் உள்ளது ஐயா ! இந்த திரு தளம் மிகவும் பிரபலியம் ஆகி கொண்டு வருகின்றது ஐயா .
    சென்னை மற்றும் வடக்கு தமிழகத்தை சார்ந்த நபர்கள் இந்த இயற்கை சூழலை பார்த்தால் மட்டும் போதும் தன்னையே மெய் மறந்து விடுவர் ஐயா .
    அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக இயற்க்கை வளம் நிறைந்த பகுதியாக இருக்கும் ஐயா .
    அச்சன் கோவில் என்பது கேரள பகுதில் உள்ளது ஆனால் அங்கு செல்லுவது என்பது இந்த திருமலைக்கோவில் வழியாக தான் செல்ல வேண்டும் .
    வகுப்பறைக்கு வரும் சக நண்பர்களும் மற்றும் பெரியவர்களும் ஒரு முறை வந்து திருமலை சுவாமியையும் , அய்யபனையும், தெட்சினாமூர்த்தியையும் தரிசனம் செய்ய வேண்டுகின்றேன் ./////

    மேலதிகத்தகவல்களுக்கு நன்றி சேட்டா!

    ReplyDelete
  48. //// ananth said...
    இறைவனுக்கு எவ்வளவு தொண்டு செய்தும் என்ன பிரயோஜனம். குழந்தை பாக்கியம் கிட்டவில்லையே. கர்ம வினைகள் எல்லாவற்றையும் விட வலிமையானவை போலும். அதை வெல்வதானால் இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.////

    பிறப்பே கர்ம வினையினால்தானே! அது இல்லாமல் பிறப்பு எப்படி சாத்தியம்?

    ReplyDelete
  49. //// அய்யர் said...
    முருகனை அழைத்து
    முன் நிறுத்திய பின்
    கருத்து உரை வழங்க வேண்டி
    கனிவுடனே தருகிறோம் வருகை பதிவு
    உம்மை பிடித்ததே அந்த
    உண்மையே முருகனருள் வலைப்பூ தான்
    வணக்கமும்
    வாழ்த்துக்களும்////

    முருகனருள் முன்னிற்கும். நீங்கள் வருவீர்கள் என்று தெரியும் சுவாமி!

    ReplyDelete
  50. //// அய்யர் said...
    ATMல் பணம் எடுப்பவர்..
    பழைய தாள், பிளாஸ்டிக் சேகரிக்கும்
    தொழில் புரியும் தோழரும் அல்லர்
    சிலர் குறித்தது போல் பிச்சைக்காரரும்
    அல்லர்..
    எமது பார்வையில் அவர் ..
    ஒரு சித்தர்,...
    அவர் சொல்வது இது தான்..
    காந்தி படம் போட்ட
    கரன்சி நோட்டு
    சேர்த்து வைத்த குப்பை கட்டு
    சோர்வை தந்து வாழ்வு கெட்டு
    ஏற்றம் தரும் வாழ்வை எட்டு
    மாற்றம் வரவே இறையை ஒட்டு
    நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்..////

    நீங்கள் சொன்னால் சரிதான் சுவாமி!

    ReplyDelete
  51. //// அய்யர் said...
    ஆரோக்கியமான
    திருக்கயிலாய யாத்திரை
    மே மாத இறுதியில் தான் துவக்குகிறார்கள்
    ITBP அனுமதியும் சிரமமில்லாமல் அப்போது கிடைக்கும்..
    வாய்ப்பினை திருவருள் கூட்டினால்
    வணங்கி செல்ல காத்திருக்கிறோம்..
    மாசில்லா அன்பினை தரும்
    சிகு தோழருக்கு
    அன்பான வணக்கமும்
    அளவில்லா வாழ்த்துக்களும்////

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    எப்போது சென்றாலும் கைலாய யாத்திரை சிறப்பாக அமைய பழநிஅப்பன் அருள்வானாக!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com