27.2.12

Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!




Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!

சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில் வழித்தடத்தில், ஜோலார் பேட்டைக்கு முன்னதாக இருக்கும் ஊர் வாணியம்பாடி. சென்னையில் இருந்து அந்த ஊரின் தூரம் சுமார் 200 கிலோமீட்டர்கள். அங்கிருந்து ஜோலார் பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தூரம். ரம்மியமான ஊர். பாலாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

அருகில் ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 1,200 அடிகள் உயரத்தில் உள்ள ஊர். தோல் பதனிடுதல், மற்றும் தோலால் செய்யப்படும் ஆடைகள், கையுறைகள் போன்ற பொருட்களால் அறியப்படும் ஊர்.

பலருக்கும் தெரிந்த ஊர்தான். ஆனாலும் அந்த ஊரின் பெயர்க் காரணம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்!

உங்களுக்குத் தெரியுமா?

வாருங்கள், இன்று அதைத் தெரிந்து கொள்வோம்!
------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 13
புனர்பூச நட்சத்திரம்
நட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரம். குரு பகவானுக்கு உரிய நட்சத்திரம். ஸ்ரீராமர் அவதரித்த நட்சத்திரம் இது.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி,
----------------------------------
த்ற்பெருமை பேசலாமா? அதுவும் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா பேசலாமா? அவருக்குப் போதாத நேரம், பேசினார். யாருடன் பேசினார்? தன்
அன்பு மனைவி சரஸ்வதி தேவியாரிடம் பேசினார்.

"மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதைப்போல, மக்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனறு எனது பெயரைத்தான் முதலில் கூறுவார்கள்.ஏனென்றால்
உயிர்களைப் படைக்கும் நான்தான் அவர்கள் இருவரையும் விடப் பெரியவன்"

அதைக்கேட்டு கலைமகள் சிரித்து விட்டார். அது அவருக்குப் போதாத நேரம்.

கோபம் கொண்ட பிரம்மா, தன் மனைவியை சபித்து, பேசும் சக்தியற்றவளாகி விட்டார்.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பவளுக்கு, வீணை செய்யும் ஒலியில் இருப்பவளுக்கு, பேசும் சக்தியில்லை என்றால் என்ன ஆகும்? கொடுமையல்லவா?

வருத்தமடைந்த சரஸ்வதி, அவரைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்துவிட்டார். வந்தவர் சிருங்கேரியில் யாரும் அறியாத இடத்தில் இருந்து தவம் செய்யத் துவங்கி விட்டார்.

சரஸ்வதி தேவியார் தவமிருந்த சிருங்கேரியின் தற்போதைய தோற்றம்
சிருங்கேரி, கர்நாடக் மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலை வாசக ஸ்தலம். துங்கபத்ரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ரம்மியமான இடம்.
பிற்காலத்தில் ஆதி சங்கரர் அந்த ஸ்தலத்தில் 12 ஆண்டுகள் தங்கி தன் சீடர்களுக்குப் போதனைகள் செய்த இடம்.

தேவியைப் பிரிந்த பிரம்மா, பல சிரமங்களுக்கிடையே தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரைக் கண்டுபிடித்தார். சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்படிச் செல்கையில், வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் ஒரு நாள் தங்கினார். அதனால் மகிழ்ந்த சிவபெருமானும், பார்வதியும் சரஸ்வதிக்கு அருள்செய்து, மீண்டும் பேசும் சக்தியைக் கொடுத்ததுடன், அவரைப் பாடும்படி கேட்டுக்கொண்டனர். வாணியும் பேசும் சக்தி பெற்று தன் இனிய குரலில் பாடினார். (கலை) வாணி பாடிய தலம் என்பதால், அந்த இடம் வாணியம்பாடி ஆனது. 
-----------------------------------------------------------------------------
இறைவனாரின் பெயர்: அதிதீஸ்வரர்
அம்பிகை: பெரியநாயகி,
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
புராணப் பெயர் : வாணியம்மைபாடி 
தற்போதையப் பெயர்: வாணியம்பாடி
மாவட்டம் : வேலூர்
திருவிழாக்கள்: சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை .

முகவரி:
அருள்மிகு அதிதீஸ்வரர்
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்,
திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!

80 comments:

  1. வணக்கம் ஐயா,
    அவதார மூர்த்திகளுள் அனைவருக்கும் பிடித்த தெய்வம் என்றால் அது நிச்சயம் இராம பிரானாக தான் இருப்பார்...பெண்களுக்கு அவரை தான் மிகவும் பிடிக்கும்;எனக்கும் மிகவும் பிடித்த அவதார மூர்த்தியும் அவர்தான்...
    இராமரின் புணர்பூசம் நட்சத்திர வரலாற்றில் 'சரஸ்வதி' தேவியின் கதை இடம்பெற்றுள்ளது...இந்நட்சத்திரக்காரர்களை நான் பார்த்ததே இல்லை...அவர்களும் இராமரை போன்று இருப்பார்களா,சந்திரன் ஆட்சி பெறுவதால் நல்ல மனமுடையவர்களாக இருப்பார்களோ என்று ஒரு எண்ணம்!!!


    'வாணியம்பாடி' பெயர்க் காரணம் இன்று தான் தெரிந்தது ஐயா...இனி ஒவ்வொரு ஊர்களின் பெயர்களை பிரித்து ஆராய்ந்தால் ஓரளவு வரலாறு கிடைக்கிறதா என்று ஆராயலாம் என்று நினைக்கின்றேன்...நல்ல பதிவுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ஆஹா...எனக்கு மிகவும் பிடித்த இந்தி நடிகை மாதுரி தான்...அவரது சிரிக்கும் முகத்தை மறக்க முடியுமா?...எனக்கு அவரது நடிப்பு தான் மிகவும் பிடிக்கும்;"ஹ‌ம் ஆப்கே ஹேன் கௌன்" படம் எனக்கு அவர் நடித்த படங்களில் மிகவும் பிடித்தது...நல்ல நடிகை;இன்று அதே அழகுடன் இருக்கிறார்...

    "ஃபெமிலி"யோடு ச‌ங்க‌ர‌ன்கோவிலுக்கு செல்லுகிறார்,"ச‌ங்க‌ர‌ன்"..."சிவ‌ ச‌ம்போ"...

    ReplyDelete
  3. வாணியம்மை பாடிய ஊர் பற்றிய அரியத் தகவல் கொண்ட
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. Cha chancE illai sir.
    Idhukku thaan oorla ellarum Dumil Kuppam Dictionary padikkanumnu solluranga.

    ReplyDelete
  5. காலை வணக்கம் ஐயா!

    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  6. காலை வணக்கம் ஐயா.

    பதிவிற்கு நன்றி.

    மொபைல் வெர்சன் அருமையாக வேலை செய்கிறது. முன்பெல்லாம் Page load Error வரும். இனி அந்தப் பிரச்சனை இல்லை.

    ReplyDelete
  7. ஆதியில் நாங்கள் திருநெல்வேலிக்காரார்கள் என்பதால் சிருங்கேரி (சாரதா) சங்கர மடம்தான் எங்களுக்கு ஆதி குருபீடம்.
    சன்னியாசம் கொடுக்கும் போது ஒவ்வொரு மடத்தைச்சேர்ந்தவர்களும் ஒவ்வொரு பெயரைத்தான் கொடுக்க வேண்டும் என்பது ஒரு நடைமுறை அந்தப் பெயர்களை வைத்து அந்த சன்னியாசி எந்த மடத்தின் சீடர் என்று அறிய முடியும். உதாரணமாக பாரதி, சரஸ்வதி, கிரி, புரி,ஆன‌ந்தா என்பவை முடிவில் வரும் பெயர் கொடுப்பார்கள்.

    ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சன்னியாசம் கொடுத்த குருவின் திருநாமம் தோதாப்'புரி' என்பதாகும்.புரி என்ற பெயர் சிருங்கேரி மடத்தில் கொடுக்க வேண்டிய பெயராம். அந்த வகையில் ஸ்ரீராமகிருஷ்ணமடமும் சிருங்கேரி மடத்தின் அத்வைதக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட ஒரு அமைப்புத்தான்.

    சேலம்,கோவை, மதுரை,நெல்லை,ராமனாதபுரம், செட்டிநாடு ஆகியவற்றிலும் சிருங்கேரி மடத்திற்கு சீடர்கள் மிகப் பலர் உண்டு.
    சாரதா என்பதற்கு சரஸ்வதி என்பதே பொருள்.

    வாணியம்பாடிக்கு சரஸ்வதி சம்பந்தம் என்பது இப்போதுதான் மனதில் பதிந்தது.'வாணி'என்ற பெயருடன் தொடர்புள்ளது என்பது நீங்கள் சொல்லிய பிறகுதான் உறைத்தது.மிக்க நன்றி.

    தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு என்று சில பகுதிகள் உள்ளன அல்லது அவர்களே அப்படி ஒதுங்கி வாழ்ந்து உருவாக்கிக் கொண்டு விட்டனர். அதில் வாணியம்பாடிக்கு முக்கிய இடம் உண்டு.

    ReplyDelete
  8. ஆதி சங்கர பகவத் பாதரின் கதை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இருப்பினும் சில தகவல்கள். ஆதிசங்கரரின் சீடரும்,சிருக்கேரி பீடத்தின் முதல் பீடாதிபதியும் ஆன சுரேச்வராச்சாரியாரின் பூர்வாசிரமப் பெயர்,மண்டலமிச்ரர் என்பதாகும்.வேதத்தின் கர்ம காண்டத்தை மட்டும் பின்பற்றும் 'பூர்வ மீமாம்சகம்'எனும் மதத்தைச்சார்ந்தவர் (அக்கால இந்தியாவில் இந்து மதத்தில் இருந்த பல பிரிவுகளில் இதுவும் ஒன்று. இப்போ 'நியூட்டனின் மூன்றாம் விதி'ன்னு சொல்றாங்களே,அதை நம்ம ஒரு மதமாகவே ஃபாலோ பண்ணிட்டிருந்தோம்.இம்மதத்தின் படி, செயல்களும் விளைவுகளும் தான் மெய்யே தவிர,கடவுள் இல்லை.வேதம் சொல்லும் எல்லா நியமங்களையும் இவர்கள் பின்பற்றுவார்கள்).
    இவர் ப்ரஹ்மாவின் அம்சம். இவர் மனைவி சரசவாணி மஹா பண்டிதை.சரஸ்வதியின் அம்சம். ஆதிசங்கரரிடம் வாதில் தோற்று,மண்டல மிச்ரர் சந்நியாசம் மேற்கொண்டபோது, அவர் மனைவி ஆதி சங்கரரிடம், 'நான் யார் கண்ணுக்கும் புலப்படாமல் உங்களை பின் தொடர்ந்து வருவேன். எங்கு என்னைத் திரும்பிப் பார்க்கிறீர்களோ அங்கு நான் நிலைகொள்வேன்'என்று கூறுகிறாள். சிருங்கேரியை ஆசாரியார் அடைந்தபோது, அங்கு, ஒரு தவளையின் பிரசவத்திற்கு,ஒரு பாம்பு குடைபிடித்து, வெயிலில் இருந்து காத்த அதிசயத்தைக் கண்டார். கொலுசொலி கேளாமல் திரும்பிப் பார்த்த போது, அம்பிகை அங்கு நிலை கொண்டாள்.சர்வ ஞான ஸ்வரூபிணியான சாரதாம்பிகையாக அம்பிகையை அங்கு பிரதிஷ்டை செய்து, சுரேச்வராச்சாரியாரை முதல் சாரதா பீடாதிபதியாக நியமனம் செய்தார்.சாரதாம்பிகையை தரிசித்தால் சரஸ்வதியின் அருளால்,கல்வி மட்டுமின்றி,மிகவுயர்ந்த ஞானமும் அடையலாம்.

    ReplyDelete
  9. கோயில் தகவலுக்கு நன்றி ஐயா.

    what an irony : Practical Advice for the just Married Couples
    "ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா
    வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா"
    என்று கனவு காண வேண்டாம்....
    "உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
    கணக்கினிலே தவறு செய்த குற்றமடி"
    என்று பாடும் காலமும் வரும்...

    ReplyDelete
  10. வானியம்பாடி பெயர் காரனம் அறிந்திராத ஒன்று.நன்றிகள் அய்யா.

    இதேபோல், சிதம்பரம் பக்கத்தில் இருக்கும் காட்டுமன்னார்குடி-திருச்சி சாலையில் "பூந்தனல்லூர்" என்ற கிராமம் இருக்கிறது. இது "பூவிழுந்தநல்லூர்" என்ற பெயர் மருவி வந்தது.

    பெயர் வரக்காரனம் ராவனன் சீதையை தூக்கிக் கொண்டு போகும் போது சீதையின் தலையிலிருந்து ஒரு பூ தவறி இங்கே விழுந்துவிடுகிறது.சீதையை தேடி ஹனுமான் போகும் போது இந்த பூவை பார்த்து சீதை சென்ற திசையை தீர்மானிக்கிறார். சீதையின் பூ விழுந்ததால் இப்பெயர் வந்தது .

    குறிப்பு; ஊமா அவர்களே உங்களுக்காகவே மிகவும் கவனமாக தட்டச்சு செய்துள்ளேன். நேற்றைய திறுத்தம் மானவி அல்ல மனைவி.

    வகுப்பறையில் எழுதி பெயர் வாங்கும் கன்மனிகளும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் கன்மனிகளும் இருக்கிறார்கள்.இதில் நீங்கள் எந்த ரகம் என்று உங்களூக்கே தெரியும். உங்களைப் போன்று இருவர் வேண்டாம் நீங்கள் ஒருவர் இருந்தாலே போதும் இருந்தால் வகுப்பறை..................................................................

    (சும்மா நாகேஷ் பானி திருவிளையாடல் கலாய்ப்பு-தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்)

    ReplyDelete
  11. வாத்தியார் ஐயா வணக்கம்.

    சில நபர்கள் கூற கேள்விபட்டு இருக்கேன் நாம் ஒன்றை நினைப்போம் அதனை போல நடந்து விடும் என்று அவ்வாறுதான் பாருங்கள் இன்றைய வகுப்பறை பாடமும் கூட.

    சரி ஐயா கூற வந்ததை கூறி விடுகின்றேன் . எமது MBA உடைய ஒரிஜினல் சேர்டிபிகட் நேற்று இரவில் தான் வாங்கி வந்தேன் நான் வாழும் நாட்டின் university ன் study சென்டரில் இருந்து .. வாங்கி வந்த பின்னர் நித்தமும் 24 கோல்ட் முலாம் பூச பட்ட கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் பொற்பாதத்தில் வைத்து மன வேதனையுடன் இன்றைக்கு கிடைத்தது மிகவும் சரியாக பத்து வருடத்திற்கு முன்னர் கிடைத்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் மிகவும் அற்புதமாக இருந்து இருக்குமே என்ற வேதனையுடன் தான் நைட் ஷிப்ட்க்கு சென்று விட்டு வந்து இன்றைய பாடத்தினை பார்த்தால் சரஸ்வதி தேவியின் படத்துடன் கூடிய பாடம் . எனக்கு என்னையே நப்ப முடியவில்லை ஐயா நடப்பதுமாயமா என்று ?

    ReplyDelete
  12. //// Ananthamurugan said...
    Super pativu ayya!nalla vilakkam.////

    நல்லது கண்ணா! நன்றி!

    ReplyDelete
  13. //// R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    அவதார மூர்த்திகளுள் அனைவருக்கும் பிடித்த தெய்வம் என்றால் அது நிச்சயம் இராம பிரானாக தான் இருப்பார்...பெண்களுக்கு அவரை தான் மிகவும் பிடிக்கும்;எனக்கும் மிகவும் பிடித்த அவதார மூர்த்தியும் அவர்தான்...
    இராமரின் புணர்பூசம் நட்சத்திர வரலாற்றில் 'சரஸ்வதி' தேவியின் கதை இடம்பெற்றுள்ளது...இந்நட்சத்திரக்காரர்களை நான் பார்த்ததே இல்லை...அவர்களும் இராமரை போன்று இருப்பார்களா,சந்திரன் ஆட்சி பெறுவதால் நல்ல மனமுடையவர்களாக இருப்பார்களோ என்று ஒரு எண்ணம்!!!
    'வாணியம்பாடி' பெயர்க் காரணம் இன்று தான் தெரிந்தது ஐயா...இனி ஒவ்வொரு ஊர்களின் பெயர்களை பிரித்து ஆராய்ந்தால் ஓரளவு வரலாறு கிடைக்கிறதா என்று ஆராயலாம் என்று நினைக்கின்றேன்...நல்ல பதிவுக்கு நன்றி ஐயா.../////

    ஆமாம். கோனியம்மன் புதூர்தான் காலப்போக்கில் கோயம்புத்தூர் ஆகிவிட்டது. சென்னப்ப நாயக்கர் பட்டிணம்தான் சென்னையாகிவிட்டது!

    ReplyDelete
  14. //// R.Srishobana said...
    ஆஹா...எனக்கு மிகவும் பிடித்த இந்தி நடிகை மாதுரி தான்...அவரது சிரிக்கும் முகத்தை மறக்க முடியுமா?...எனக்கு அவரது நடிப்பு தான் மிகவும் பிடிக்கும்;"ஹ‌ம் ஆப்கே ஹேன் கௌன்" படம் எனக்கு அவர் நடித்த படங்களில் மிகவும் பிடித்தது...நல்ல நடிகை;இன்று அதே அழகுடன் இருக்கிறார்...
    "ஃபெமிலி"யோடு ச‌ங்க‌ர‌ன்கோவிலுக்கு செல்லுகிறார்,"ச‌ங்க‌ர‌ன்"..."சிவ‌ ச‌ம்போ"...////

    அவருக்கு எங்கே சம்போவெல்லாம் தெரியப்போகிறது? பணம்! பணம்! பணம்! அவ்வளவுதான்!

    ReplyDelete
  15. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    வாணியம்மை பாடிய ஊர் பற்றிய அரிய தகவல் கொண்ட
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. //// காலிங்கன் said...
    Cha chancE illai sir.
    Idhukku thaan oorla ellarum Dumil Kuppam Dictionary padikkanumnu solluranga.////

    டுமில் குப்பம் டிக்‌ஷ்னரியா? என்ன சாமி சொல்லுகிறீர்கள்?

    ReplyDelete
  17. //// Sathish K said...
    காலை வணக்கம் ஐயா!
    பதிவிற்கு நன்றி.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. //// Sathish K said...
    காலை வணக்கம் ஐயா.
    பதிவிற்கு நன்றி.
    மொபைல் வெர்சன் அருமையாக வேலை செய்கிறது. முன்பெல்லாம் Page load Error வரும். இனி அந்தப் பிரச்சனை இல்லை./////

    மொபைல் வெர்சன் வேலை செய்தால் எனக்கும் சந்தோஷம்தான்!

    ReplyDelete
  19. //// kmr.krishnan said...
    ஆதியில் நாங்கள் திருநெல்வேலிக்காரார்கள் என்பதால் சிருங்கேரி (சாரதா) சங்கர மடம்தான் எங்களுக்கு ஆதி குருபீடம்.
    சன்னியாசம் கொடுக்கும் போது ஒவ்வொரு மடத்தைச்சேர்ந்தவர்களும் ஒவ்வொரு பெயரைத்தான் கொடுக்க வேண்டும் என்பது ஒரு நடைமுறை அந்தப் பெயர்களை வைத்து அந்த சன்னியாசி எந்த மடத்தின் சீடர் என்று அறிய முடியும். உதாரணமாக பாரதி, சரஸ்வதி, கிரி, புரி,ஆன‌ந்தா என்பவை முடிவில் வரும் பெயர் கொடுப்பார்கள்.
    ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சன்னியாசம் கொடுத்த குருவின் திருநாமம் தோதாப்'புரி' என்பதாகும்.புரி என்ற பெயர் சிருங்கேரி மடத்தில் கொடுக்க வேண்டிய பெயராம். அந்த வகையில் ஸ்ரீராமகிருஷ்ணமடமும் சிருங்கேரி மடத்தின் அத்வைதக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட ஒரு அமைப்புத்தான்.
    சேலம்,கோவை, மதுரை,நெல்லை,ராமனாதபுரம், செட்டிநாடு ஆகியவற்றிலும் சிருங்கேரி மடத்திற்கு சீடர்கள் மிகப் பலர் உண்டு.சாரதா என்பதற்கு சரஸ்வதி என்பதே பொருள்.
    வாணியம்பாடிக்கு சரஸ்வதி சம்பந்தம் என்பது இப்போதுதான் மனதில் பதிந்தது.'வாணி'என்ற பெயருடன் தொடர்புள்ளது என்பது நீங்கள் சொல்லிய பிறகுதான் உறைத்தது.மிக்க நன்றி.
    தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு என்று சில பகுதிகள் உள்ளன அல்லது அவர்களே அப்படி ஒதுங்கி வாழ்ந்து உருவாக்கிக் கொண்டு விட்டனர். அதில் வாணியம்பாடிக்கு முக்கிய இடம் உண்டு./////

    சாரதா என்ற பெயர் உடையவர்கள் எல்லாம் இயற்கையிலேயே அறிவு ஜீவிகளாக இருப்பார்கள். அது என் அனுபவம்!

    ReplyDelete
  20. //// Parvathy Ramachandran said...
    ஆதி சங்கர பகவத் பாதரின் கதை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இருப்பினும் சில தகவல்கள். ஆதிசங்கரரின் சீடரும்,சிருக்கேரி பீடத்தின் முதல் பீடாதிபதியும் ஆன சுரேச்வராச்சாரியாரின் பூர்வாசிரமப் பெயர்,மண்டலமிச்ரர் என்பதாகும்.வேதத்தின் கர்ம காண்டத்தை மட்டும் பின்பற்றும் 'பூர்வ மீமாம்சகம்'எனும் மதத்தைச்சார்ந்தவர் (அக்கால இந்தியாவில் இந்து மதத்தில் இருந்த பல பிரிவுகளில் இதுவும் ஒன்று. இப்போ 'நியூட்டனின் மூன்றாம் விதி'ன்னு சொல்றாங்களே,அதை நம்ம ஒரு மதமாகவே ஃபாலோ பண்ணிட்டிருந்தோம்.இம்மதத்தின் படி, செயல்களும் விளைவுகளும் தான் மெய்யே தவிர,கடவுள் இல்லை.வேதம் சொல்லும் எல்லா நியமங்களையும் இவர்கள் பின்பற்றுவார்கள்).
    இவர் ப்ரஹ்மாவின் அம்சம். இவர் மனைவி சரசவாணி மஹா பண்டிதை.சரஸ்வதியின் அம்சம். ஆதிசங்கரரிடம் வாதில் தோற்று,மண்டல மிச்ரர் சந்நியாசம் மேற்கொண்டபோது, அவர் மனைவி ஆதி சங்கரரிடம், 'நான் யார் கண்ணுக்கும் புலப்படாமல் உங்களை பின் தொடர்ந்து வருவேன். எங்கு என்னைத் திரும்பிப் பார்க்கிறீர்களோ அங்கு நான் நிலைகொள்வேன்'என்று கூறுகிறாள். சிருங்கேரியை ஆசாரியார் அடைந்தபோது, அங்கு, ஒரு தவளையின் பிரசவத்திற்கு,ஒரு பாம்பு குடைபிடித்து, வெயிலில் இருந்து காத்த அதிசயத்தைக் கண்டார். கொலுசொலி கேளாமல் திரும்பிப் பார்த்த போது, அம்பிகை அங்கு நிலை கொண்டாள்.சர்வ ஞான ஸ்வரூபிணியான சாரதாம்பிகையாக அம்பிகையை அங்கு பிரதிஷ்டை செய்து, சுரேச்வராச்சாரியாரை முதல் சாரதா பீடாதிபதியாக நியமனம் செய்தார்.சாரதாம்பிகையை தரிசித்தால் சரஸ்வதியின் அருளால்,கல்வி மட்டுமின்றி,மிகவுயர்ந்த ஞானமும் அடையலாம்.////

    இயறகை எழில் கொஞ்சும் இடத்தில் தேவி நிலை கொண்டதில் பக்தர்கள் அனைவருக்கும் சந்தோஷம்தான்! அன்னையைப் பார்ப்பதோடு, இயற்கையின் அழகையும் பார்த்துவிட்டு வரலாமே!

    ReplyDelete
  21. //// தேமொழி said...
    கோயில் தகவலுக்கு நன்றி ஐயா.
    what an irony : Practical Advice for the just Married Couples
    "ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா
    வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா"
    என்று கனவு காண வேண்டாம்....
    "உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
    கணக்கினிலே தவறு செய்த குற்றமடி"
    என்று பாடும் காலமும் வரும்.../////

    வந்துவிட்டது. இப்போது நடக்கும் பல திருமணக் கோளாறுகளுக்கு இதுதான் காரணம் 5 Eக்கள்'
    Education, Employment, Exposure, Economical freedom & Ego

    ReplyDelete
  22. //// thanusu said...
    வானியம்பாடி பெயர் காரனம் அறிந்திராத ஒன்று.நன்றிகள் அய்யா.
    இதேபோல், சிதம்பரம் பக்கத்தில் இருக்கும் காட்டுமன்னார்குடி-திருச்சி சாலையில் "பூந்தனல்லூர்" என்ற கிராமம் இருக்கிறது. இது "பூவிழுந்தநல்லூர்" என்ற பெயர் மருவி வந்தது.
    பெயர் வரக்காரனம் ராவனன் சீதையை தூக்கிக் கொண்டு போகும் போது சீதையின் தலையிலிருந்து ஒரு பூ தவறி இங்கே விழுந்துவிடுகிறது.சீதையை தேடி ஹனுமான் போகும் போது இந்த பூவை பார்த்து சீதை சென்ற திசையை தீர்மானிக்கிறார். சீதையின் பூ விழுந்ததால் இப்பெயர் வந்தது .
    குறிப்பு; ஊமா அவர்களே உங்களுக்காகவே மிகவும் கவனமாக தட்டச்சு செய்துள்ளேன். நேற்றைய திறுத்தம் மானவி அல்ல மனைவி.
    வகுப்பறையில் எழுதி பெயர் வாங்கும் கன்மனிகளும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் கன்மனிகளும் இருக்கிறார்கள்.இதில் நீங்கள் எந்த ரகம் என்று உங்களூக்கே தெரியும். உங்களைப் போன்று இருவர் வேண்டாம் நீங்கள் ஒருவர் இருந்தாலே போதும் இருந்தால் வகுப்பறை..................................................................
    (சும்மா நாகேஷ் பானி திருவிளையாடல் கலாய்ப்பு-தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்)////

    உமா வை ஊமாவாக்கி மறுபடியும் மாட்டிக்கொண்டுள்ளீர்களே!:-)))
    இரண்டு சுழி ன வரும் இடத்தில் எல்லாம் முன்று சுழி ண் வரவேண்டும். அதையும் கவனியுங்கள்

    ReplyDelete
  23. //// arul said...
    arumayana pathivu////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. //// kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    சில நபர்கள் கூற கேள்விபட்டு இருக்கேன் நாம் ஒன்றை நினைப்போம் அதனை போல நடந்து விடும் என்று அவ்வாறுதான் பாருங்கள் இன்றைய வகுப்பறை பாடமும் கூட.
    சரி ஐயா கூற வந்ததை கூறி விடுகின்றேன் . எமது MBA உடைய ஒரிஜினல் சேர்டிபிகட் நேற்று இரவில் தான் வாங்கி வந்தேன் நான் வாழும் நாட்டின் university ன் study சென்டரில் இருந்து .. வாங்கி வந்த பின்னர் நித்தமும் 24 கோல்ட் முலாம் பூச பட்ட கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் பொற்பாதத்தில் வைத்து மன வேதனையுடன் இன்றைக்கு கிடைத்தது மிகவும் சரியாக பத்து வருடத்திற்கு முன்னர் கிடைத்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் மிகவும் அற்புதமாக இருந்து இருக்குமே என்ற வேதனையுடன் தான் நைட் ஷிப்ட்க்கு சென்று விட்டு வந்து இன்றைய பாடத்தினை பார்த்தால் சரஸ்வதி தேவியின் படத்துடன் கூடிய பாடம் . எனக்கு என்னையே நப்ப முடியவில்லை ஐயா நடப்பதுமாயமா என்று ?/////

    உணர்ச்சிவயப்படாதீர்கள். ஒற்ற சம்பவங்கள். அவ்வளவுதான். யதார்த்தமாக எடுத்துக்கொள்ளுங்கள் கண்ணன்!

    ReplyDelete
  25. SP.VR. SUBBAIYA said...
    ////வருத்தமடைந்த சரஸ்வதி, அவரைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்துவிட்டார். வந்தவர் சிருங்கேரியில் யாரும் அறியாத இடத்தில் இருந்து தவம் செய்யத் துவங்கி விட்டார்///

    அப்படியென்றால்!!!செல்போனை சுவிட்ச் ஆப் செய்து நாட் reachable ஆகி விட்டார்களோ.கலைவாணி காலத்திருந்தே இது வாடிக்கையாகிவிட்டது.

    இதிலிருந்து,பாடம் கற்றுகொள்வது என்னவென்றல் life parner ஆக இருந்தாலும்,குழந்தையாக இருந்தாலும் வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் u turn அடிச்சு சரண்டர் ஆகி விடுங்கள்.

    "எதுக்கு பிரச்சனையை பெரிதாக்கணும்.பின்பு solve செய்யணும்.attack cause not effect.

    ReplyDelete
  26. SP.VR. SUBBAIYA said...
    ///உணர்ச்சிவயப்படாதீர்கள். ஒற்ற சம்பவங்கள். அவ்வளவுதான். யதார்த்தமாக எடுத்துக்கொள்ளுங்கள் கண்ணன்!///

    வாத்தியாரிடம் மிகவும் பிடித்தது!!அடுத்தவரின் மனஅழுத்தம்,நெருடல் அறிந்து பதில் கூறுவதுதான்,நன்றி அய்யா!!!

    ReplyDelete
  27. SP.VR. SUBBAIYA said...
    உமா வை ஊமாவாக்கி மறுபடியும் மாட்டிக்கொண்டுள்ளீர்களே!:-)))
    இரண்டு சுழி ன வரும் இடத்தில் எல்லாம் முன்று சுழி ண் வரவேண்டும். அதையும் கவனியுங்கள்

    எப்போதும் செய்யும் எழுதியை பயன்படுத்தாமல் நேற்றும் இன்றும் அழகியை பயன்படுத்தினேன்.கூடவே அவசரமும் வேறு அதனால் தான் இந்த பிழைகள்

    "ஊ"மை மட்டும் கவனிகிறாரா என்று வேண்டும் என்றே செய்ததுதான் .ஆனால் வாத்தியார் கவனித்து முதலில் வெளியிட்டு விட்டார் .

    அழகேன்றாலே ஆபத்து .அது சரியாகத்தான் இருக்கிறது

    மாட்டிக் கொள்ள ஒன்றுமில்லை, உமா எனக்கு நல்ல தோழி..

    ReplyDelete
  28. நல்ல பதிவு, நானும் வாணியம்பாடி பெயர்க்காரணம் இன்றுதான் தெரிந்துகொண்டேன். சிருங்கேரி கோயிலை
    அழகாகப் பராமரிக்கிறார்கள் என்பதை அறிய நீங்கள் வெளியிட்டுள்ள ஒரு படமே போதும். நான் போக விரும்பும் இடங்களின் பட்டியலில் சிருங்கேரியும் இருக்கிறது.

    ReplyDelete
  29. ஊமா அவர்களே உங்களுக்காகவே மிகவும் கவனமாக தட்டச்சு செய்துள்ளேன். நேற்றைய திறுத்தம் மானவி அல்ல மனைவி.//

    நான் காலையிலேயே பதிவைப்படித்துவிட்டேன். பின்னூட்டம் இப்போதுதான் பார்த்தேன், நீங்கள் வேண்டுமென்றே செய்திருந்த எழுத்துப்பிழையும் கண்ணில் பட்டது. வாத்தியார் பதில் அளித்திருந்ததும் தெரிந்தது.

    குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் கன்மனிகளும் இருக்கிறார்கள்//

    ஆஹா, தப்புத்தப்பா எழுதிட்டு பேச்சைப்பாருங்க மக்களே!

    சும்மா நாகேஷ் பானி திருவிளையாடல் கலாய்ப்பு-தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்)//

    அப்படியெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை.

    ReplyDelete
  30. சாரதா என்ற பெயர் உடையவர்கள் எல்லாம் இயற்கையிலேயே அறிவு ஜீவிகளாக இருப்பார்கள்.//

    பால சாரதா என் பெண்ணின் பெயர். எப்போது பார்த்தாலும் விளையாட்டுதான். முழு ஆண்டுத்தேர்வு தொடங்கிவிட்டது. நேற்று கணிதம் படிக்கவைத்துக்கொண்டிருந்தேன் படாதபாடுபட்டு. அப்போது அவள் சொன்னது 'இந்த கணிதத்தை யார் கண்டுபிடிச்சுத் தொலைச்சாங்கன்னே தெரியல'.

    ReplyDelete
  31. இதிலிருந்து,பாடம் கற்றுகொள்வது என்னவென்றல் life parner ஆக இருந்தாலும்,குழந்தையாக இருந்தாலும் வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் u turn அடிச்சு சரண்டர் ஆகி விடுங்கள்.
    "எதுக்கு பிரச்சனையை பெரிதாக்கணும்.பின்பு solve செய்யணும்.attack cause not effect.//

    குட் கீப் இட் அப்!

    ReplyDelete
  32. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் "ஊரும் பேரும்" எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் பல ஊர்களுக்குப் பெயர் காரணங்களை அழகாக எடுத்து விளக்கியிருக்கிறார். ஈரஓடை என்பது ஈரோடு என்று ஆயிற்று என்பதும் அதில் ஒன்றும். பல ஊர்களுக்குப் பெயர்க் காரணம் தெரிந்து கொள்ளும் போது நமக்கு ஆச்சரியம் ஏற்படும். முடிந்தால் இந்த நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள்.வாணியம்பாடி என்றதும் தோல் பதனிடும் தொழில்தான் நினைவுக்கு வருகிறதே தவிர அது வாஃக் தேவி சரஸ்வதி தேவிக்கு உரிய ஊர் என்பது தெரியாமல் இருந்தது. வாழ்க தங்கள் பணி.

    ReplyDelete
  33. Uma said.
    ///குட் கீப் இட் அப்!///

    thanks wish you(all)the same!!!!

    ReplyDelete
  34. /////உமா வை ஊமாவாக்கி மறுபடியும் மாட்டிக்கொண்டுள்ளீர்களே!:-)))
    இரண்டு சுழி ன வரும் இடத்தில் எல்லாம் முன்று சுழி ண் வரவேண்டும். அதையும் கவனியுங்கள்////
    அதுமட்டுமல்ல..
    'திறுத்தம்' 'திருத்தம்' ஆக திருத்தம் செய்யப்படவேண்டும்..
    'உங்களூக்கே' 'உங்களுக்கே' வாக இருந்தால்தான் சரி..(இது தனுசுக்கு)
    ஸ்டைலுக்கு கூலிங் க்ளாஸ் போடுவது தவிர எனக்கு கண்ணாடி போடவேண்டிய அவசியம் இல்லை..(இது ஆலாசியத்துக்கு.)

    ReplyDelete
  35. பார்வதி ராமச்சந்திரன், சி எஸ் சேகர் இருவரும் சமஸ்கிருதமும்,புராண இதிகாசங்களும், தத்துவங்களும் அறிந்தவர்கள் என்று பின்னூட்டங்களில் இருந்தும் எழுதும் கட்டுரைகளில் இருந்தும் தெரிய வருகிறது.அவ்ர்கள் இருவரும் வகுப்பறைக்கு இன்னும் அதிகம் விஷய தானம் செய்ய வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  36. உமாவை, ஊமா என்று அழைப்பதால் அவரை ஊமையாக்க நினைப்பவர்களைப்
    புறம் கண்டு வெற்றிவாகை சூடுவார் டெல்லிக்கே ராணி!

    ReplyDelete
  37. கூப்பிய கரங்களுடன் சங்கரன்கோவிலுக்குக்கிளம்பிடாருங்கோ மிட்சிபிசி தலீவரு!
    கையை ஃபெவிகால் போட்டு ஒட்டியாச்சாம். தேர்தல் முடியும் வரை பிரிக்க முடியாதாம்.அந்தக் கையை அப்படியே கோமதி அம்மனை நோக்கியும் திருப்பினா கேட்டது கிடைக்கும். வெள்ளை 'டர்கிடவலை'ப் பார்த்தா வடலூர் பக்தர் 'மாதுரி'யும் தோணுதுங்கோ!

    ReplyDelete
  38. சிறுவனிடம் துணிந்து முகத்தை நீட்டிய பெரியவரின் துணிவு பாராட்டுக்குரியது.
    காதையோ, உதட்டையோ, மூக்கையோ எடுத்துக் கையில் கொடுத்துவிடுவானோ என்று பயமாக இருக்கிறது. அப்படி அறுத்துக்கொண்டு ஓடும் 'போஸி'ல்தான் உட்கார்ந்து இருக்கிறான் பாருங்கள்.

    ஷூ பாலிஷ், ரயில் வண்டிகளில் சுத்தம் செய்வது, பிளாஸ்டிக் குப்பை பொறுக்குவது, முடமாக்கப்பட்டு பிச்சை எடுப்பது என்று எதிர்கால இந்திய
    'நரக'த்தில்,சாரி, நகரத்தில் உழல்கிறது. 2020ல் இந்தியாதான் சூப்பர் பவர்!

    ReplyDelete
  39. Uma said...
    அப்படியெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை.

    நன்றி உமா அவர்களே. உங்களின் பின்னூட்டத்தை எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன் .

    பணியில் இருந்தாலும் வேலை ஒன்றும் இல்லை .மூன்றாம் தேதி வரை நிறைய பின்னூட்டம் விடுவேன் அதன் பின் பிசியாகி விடுவேன்
    ஆழ்கடலில் கேஸ் லைனுக்கான பைப் லைன் போடும் பனி நான்காம் தேதி துவங்கும் அதன் பின் காலில் சக்கரம் தான் வகுப்புக்கும் முழுமையாக வர முடியாது .

    kmr.krishnan said...தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு என்று சில பகுதிகள் உள்ளன அல்லது அவர்களே அப்படி ஒதுங்கி வாழ்ந்து உருவாக்கிக் கொண்டு விட்டனர். அதில் வாணியம்பாடிக்கு முக்கிய இடம் உண்டு.

    வாணியம் பாடியைப் பற்றி எனக்கு தெரிந்த செய்தி ஒன்று. வாணியம்பாடிக்கு பக்கத்தில் உள்ள "ஆம்பூர்" முஸ்லிம்கள் வாழும் பகுதி .
    இந்த ஆம்பூர் பிரியாணிக்கு மிகவும் பிரபலம் . ஆம்பூர் பிரியாணி என்றே தனி recipe கொண்ட பிரியாணி. சற்றே காரம் தூக்கலாக இருக்கும் .

    ReplyDelete
  40. வாழ்க்கை நிலையாமை என்ற த‌த்துவம் உயர்வானதுதான்.ஆனால் சொல்லக் கூடாத இடத்தில் சொல்லலாமா? "என்னத்த கல்யாணம் என்னாத்த ஹனிமூன்!" என்று காரின் சொந்தக்காரர் சலித்துக் கொள்வதுபோல உள்ளது படம்.
    கால தேச வர்த்தமானம், இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமோ?!

    ReplyDelete
  41. //// minorwall said...
    /////உமா வை ஊமாவாக்கி மறுபடியும் மாட்டிக்கொண்டுள்ளீர்களே!:-)))
    இரண்டு சுழி ன வரும் இடத்தில் எல்லாம் முன்று சுழி ண் வரவேண்டும். அதையும் கவனியுங்கள்////
    அதுமட்டுமல்ல..
    'திறுத்தம்' 'திருத்தம்' ஆக திருத்தம் செய்யப்படவேண்டும்..
    'உங்களூக்கே' 'உங்களுக்கே' வாக இருந்தால்தான் சரி..(இது தனுசுக்கு)
    ஸ்டைலுக்கு கூலிங் க்ளாஸ் போடுவது தவிர எனக்கு கண்ணாடி போடவேண்டிய அவசியம் இல்லை..(இது ஆலாசியத்துக்கு.)////

    ஹா..ஹா...

    இதுவரை இல்லை என்கிறீர்கள்:):)...
    நல்லது சந்தோசம் மைனர்.

    இங்கு தொடர்ந்த மாதிரி ஒரு பர்லாங்கு
    தூரம் பார்க்கத்தான் வெளியே (வழியே) இல்லையே!

    உங்களுக்குத் தான் தெரியுமே...
    அதனால வீட்டில எல்லோரும் கண்ணாடி போட்டாச்சு..
    கொடுமை என்னான்னா பெண்ணுக்கு கூட பத்து வயசுலத்தான்
    போட்டோம் பையனுக்கு ஏழிலே போட்டாச்சு..

    இங்கு பெரும்பாலோர் கண்ணாடி தான் அதே மாதிரி
    கண்ணாடிக் கடைக்கும் பஞ்சமில்லை...
    இவை யாவும் தாங்கள் கண்ணுற்று
    இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  42. // kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.

    சரி ஐயா கூற வந்ததை கூறி விடுகின்றேன் . எமது MBA உடைய ஒரிஜினல் சேர்டிபிகட்
    நேற்று இரவில் தான் வாங்கி வந்தேன் நான் வாழும் நாட்டின் university ன் study சென்டரில் இருந்து .///

    கத்தார் கண்ணன் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  43. வாணியம்பாடியுடன் மேலும் சில ஊர்களுக்கான ஆரம்பக்கால பெயரைத் தெரிந்துக் கொண்டேன். மகிழ்ச்சி.

    சிருங்கேரி என்றதும் சங்கர மடம் ஞாபகத்திற்கு வந்தது. கிழக்கே பூரி சங்கர மடம்,மேற்கே துவாரகை சங்கர மடம்,வடக்கே பத்ரிநாத் சங்கர மடம்,தெற்கே சிருங்கேரி சங்கரமடம். காஞ்சியில் உள்ளது உண்மையான சங்கர மடம்தானா, நான்கு திசைகளிலும் நான்கு சங்கர மடம் இருக்கும்போது காஞ்சியில் இருப்பது எந்த வகையில் வருகிறது என்று எங்களூர் பத்திரிகையில் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். எது எப்படியிருப்பினும் இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.

    ReplyDelete
  44. கண்ணனுக்கு கனிவு நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'
    --- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

    செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
    --- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

    முடி வெட்டும் தொழில் செய்யும்
    தோழந்தான் இல்லையேல்
    நமக்கெல்லாம் ஏது அழகு
    நதி நீரில் நின்று துணி
    துவைப்பவன் இல்லையேல்
    வெளுக்குமா உடை அழுக்கு
    எந்த தொழில் செய்தாலென்ன
    செய்யும் தொழில் தெய்வமென்று
    பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
    ---வாலி

    முடிதிருத்தும் சிறுவனைப் போல் போலவே சிறுமிகளும் காலம் காலமாக வீட்டு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப் பட்டதுண்டு.
    குழந்தை தொழிலாளிகளுக்கு கல்வி தடைபட்டால் அது வருத்ததிற்குரியது.
    சொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.

    ReplyDelete
  46. //காஞ்சியில் உள்ளது உண்மையான சங்கர மடம்தானா, நான்கு திசைகளிலும் நான்கு சங்கர மடம் இருக்கும்போது காஞ்சியில் இருப்பது எந்த வகையில் வருகிறது என்று எங்களூர் பத்திரிகையில் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். எது எப்படியிருப்பினும் இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.//

    போக விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே போய்விட்டீர்கள் ஆனந்த்.

    காஞ்சிமடம் தங்களை சர்வக்ஞபீடம் என்று அறிவிப்பு செய்துகொள்கிறார்கள்.
    சர்வக்ஞ என்றால் அனைத்துப்பீடங்களுக்கும் முதன்மையான, ஏனைய பீடங்களை உள்ளடக்கிய,தலைமை வகிக்கூடிய என்றெல்லாம் பொருள் கொள்ள‌லலாம்.

    தற்சமயம் காஞ்சிமடம் என்று அறியப்பட்டாலும், முன்னர் அது கும்பகோண‌ம் மடம் என்றே அறியப்ப‌ட்டது.சிக்குடையார்(சிறிய உடையார்) மடம் என்று பெயர்கொண்டதாக சிருங்கேரிமடத்தின் கிளை மடமாகத்தான் இருந்துள்ளது.
    ராஜா சரபோஜி காலத்தில் தஞ்சையில் ஆங்கிலேயர் ஆட்சி செல்வாக்குப் பெற்றது. அப்போது மைசூரில் திப்பு சுல்தான் ஆட்சி. திப்புவுக்கும் ஆங்கிலேயருக்கும் பகை. எனவே மைசூர் ராஜ்ஜியத்திற்கு தமிழகத்திலிருந்து
    போக்குவரத்துத் தடை இருந்தது.சிருங்கேரி மடம் சிக்குடையார் மடத்தின் மீது தனக்கு இருந்த நிர்வாகத்தை செய்ய முடியாத சூழலில் தன்னைத் தனி பீடமாக சரபோஜிமன்னர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதரவுடன் காஞ்சி மடம் உருவானது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

    எது எப்படி இருந்தாலும் இதனை சிருங்கேரி மடம் ஒரு பிரச்சனையாக்காமல்
    இப்போது அமைதி காக்கிறார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த 'மட' சண்டை பெரிய 'காண்ட்ரொவர்சி'தான்.

    ReplyDelete
  47. //// Uma said...
    நல்ல பதிவு, நானும் வாணியம்பாடி பெயர்க்காரணம் இன்றுதான் தெரிந்துகொண்டேன். சிருங்கேரி கோயிலை
    அழகாகப் பராமரிக்கிறார்கள் என்பதை அறிய நீங்கள் வெளியிட்டுள்ள ஒரு படமே போதும். நான் போக விரும்பும் இடங்களின் பட்டியலில் சிருங்கேரியும்
    இருக்கிறது./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  48. //// Uma said...
    சாரதா என்ற பெயர் உடையவர்கள் எல்லாம் இயற்கையிலேயே அறிவு ஜீவிகளாக இருப்பார்கள்.//
    பால சாரதா என் பெண்ணின் பெயர். எப்போது பார்த்தாலும் விளையாட்டுதான். முழு ஆண்டுத்தேர்வு தொடங்கிவிட்டது. நேற்று கணிதம்
    படிக்கவைத்துக்கொண்டிருந்தேன் படாதபாடுபட்டு. அப்போது அவள் சொன்னது 'இந்த கணிதத்தை யார் கண்டுபிடிச்சுத் தொலைச்சாங்கன்னே தெரியல'.////

    பெண்ணிற்கு, அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உள்ளது!

    ReplyDelete
  49. //// Thanjavooraan said...
    சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் "ஊரும் பேரும்" எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் பல ஊர்களுக்குப் பெயர் காரணங்களை அழகாக எடுத்து விளக்கியிருக்கிறார். ஈரஓடை என்பது ஈரோடு என்று ஆயிற்று என்பதும் அதில் ஒன்றும். பல ஊர்களுக்குப் பெயர்க் காரணம் தெரிந்து கொள்ளும் போது
    நமக்கு ஆச்சரியம் ஏற்படும். முடிந்தால் இந்த நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள்.வாணியம்பாடி என்றதும் தோல் பதனிடும் தொழில்தான் நினைவுக்கு
    வருகிறதே தவிர அது வாஃக் தேவி சரஸ்வதி தேவிக்கு உரிய ஊர் என்பது தெரியாமல் இருந்தது. வாழ்க தங்கள் பணி./////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  50. //// kmr.krishnan said...
    பார்வதி ராமச்சந்திரன், சி எஸ் சேகர் இருவரும் சமஸ்கிருதமும்,புராண இதிகாசங்களும், தத்துவங்களும் அறிந்தவர்கள் என்று பின்னூட்டங்களில் இருந்தும் எழுதும் கட்டுரைகளில் இருந்தும் தெரிய வருகிறது.அவ்ர்கள் இருவரும் வகுப்பறைக்கு இன்னும் அதிகம் விஷய தானம் செய்ய வேண்டும் என்று விரும்பிக்
    கேட்டுக் கொள்கிறேன்.////

    உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  51. //// kmr.krishnan said...
    கூப்பிய கரங்களுடன் சங்கரன்கோவிலுக்குக்கிளம்பிடாருங்கோ மிட்சிபிசி தலீவரு!
    கையை ஃபெவிகால் போட்டு ஒட்டியாச்சாம். தேர்தல் முடியும் வரை பிரிக்க முடியாதாம்.அந்தக் கையை அப்படியே கோமதி அம்மனை நோக்கியும் திருப்பினா
    கேட்டது கிடைக்கும். வெள்ளை 'டர்கிடவலை'ப் பார்த்தா வடலூர் பக்தர் 'மாதுரி'யும் தோணுதுங்கோ!////

    கைய நீட்டிப் பணம் வாங்குவதெப்படி? பெவிகால் மேட்டர் உண்மையல்ல!

    ReplyDelete
  52. //// kmr.krishnan said...
    சிறுவனிடம் துணிந்து முகத்தை நீட்டிய பெரியவரின் துணிவு பாராட்டுக்குரியது.
    காதையோ, உதட்டையோ, மூக்கையோ எடுத்துக் கையில் கொடுத்துவிடுவானோ என்று பயமாக இருக்கிறது. அப்படி அறுத்துக்கொண்டு ஓடும் 'போஸி'ல்தான்
    உட்கார்ந்து இருக்கிறான் பாருங்கள்.
    ஷூ பாலிஷ், ரயில் வண்டிகளில் சுத்தம் செய்வது, பிளாஸ்டிக் குப்பை பொறுக்குவது, முடமாக்கப்பட்டு பிச்சை எடுப்பது என்று எதிர்கால இந்திய
    'நரக'த்தில்,சாரி, நகரத்தில் உழல்கிறது. 2020ல் இந்தியாதான் சூப்பர் பவர்!////

    இப்போது சூப்பர் பவராக உள்ள நாடுகளில், இந்த வேலையைச் செய்வதற்கெல்லாம் ஆட்கள் இல்லை!

    ReplyDelete
  53. //// thanusu said...
    Uma said...
    அப்படியெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை.
    நன்றி உமா அவர்களே. உங்களின் பின்னூட்டத்தை எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன் .
    பணியில் இருந்தாலும் வேலை ஒன்றும் இல்லை .மூன்றாம் தேதி வரை நிறைய பின்னூட்டம் விடுவேன் அதன் பின் பிசியாகி விடுவேன்
    ஆழ்கடலில் கேஸ் லைனுக்கான பைப் லைன் போடும் பனி நான்காம் தேதி துவங்கும் அதன் பின் காலில் சக்கரம் தான் வகுப்புக்கும் முழுமையாக வர
    முடியாது////

    முதலில் வயிற்றுப் பிழைப்பு. பிறகுதான் (இந்த) வகுப்பறை!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////kmr.krishnan said...தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு என்று சில பகுதிகள் உள்ளன அல்லது அவர்களே அப்படி ஒதுங்கி வாழ்ந்து உருவாக்கிக் கொண்டு விட்டனர். அதில் வாணியம்பாடிக்கு முக்கிய இடம் உண்டு.வாணியம் பாடியைப் பற்றி எனக்கு தெரிந்த செய்தி ஒன்று. வாணியம்பாடிக்கு பக்கத்தில் உள்ள "ஆம்பூர்" முஸ்லிம்கள் வாழும் பகுதி
    இந்த ஆம்பூர் பிரியாணிக்கு மிகவும் பிரபலம் . ஆம்பூர் பிரியாணி என்றே தனி recipe கொண்ட பிரியாணி. சற்றே காரம் தூக்கலாக இருக்கும்////

    என்ன தூக்கலாக இருந்தாலும், நான் தொட முடியாது. சுத்தமான சைவம்! vegetarian

    ReplyDelete
  54. //// kmr.krishnan said...
    வாழ்க்கை நிலையாமை என்ற த‌த்துவம் உயர்வானதுதான்.ஆனால் சொல்லக் கூடாத இடத்தில் சொல்லலாமா? "என்னத்த கல்யாணம் என்னாத்த ஹனிமூன்!"
    என்று காரின் சொந்தக்காரர் சலித்துக் கொள்வதுபோல உள்ளது படம்.
    கால தேச வர்த்தமானம், இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமோ?!/////

    அதன் மீது ஒரு பேப்பரை ஒட்டி வாசகத்தை மறிதிருக்கலாம்! செய்யவில்லை!

    ReplyDelete
  55. //// ஆலாசியம் said...
    // kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    சரி ஐயா கூற வந்ததை கூறி விடுகின்றேன் . எமது MBA உடைய ஒரிஜினல் சேர்டிபிகட்
    நேற்று இரவில் தான் வாங்கி வந்தேன் நான் வாழும் நாட்டின் university ன் study சென்டரில் இருந்து .///
    கத்தார் கண்ணன் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!////

    அப்படியே இந்திய மண்ணில் நல்ல வேலை கிடைத்து, அவர் திரும்புவதற்கும் வாழ்த்துங்கள்!

    ReplyDelete
  56. //// ananth said...
    வாணியம்பாடியுடன் மேலும் சில ஊர்களுக்கான ஆரம்பக்கால பெயரைத் தெரிந்துக் கொண்டேன். மகிழ்ச்சி.
    சிருங்கேரி என்றதும் சங்கர மடம் ஞாபகத்திற்கு வந்தது. கிழக்கே பூரி சங்கர மடம்,மேற்கே துவாரகை சங்கர மடம்,வடக்கே பத்ரிநாத் சங்கர மடம்,தெற்கே சிருங்கேரி சங்கரமடம். காஞ்சியில் உள்ளது உண்மையான சங்கர மடம்தானா, நான்கு திசைகளிலும் நான்கு சங்கர மடம் இருக்கும்போது காஞ்சியில் இருப்பது
    எந்த வகையில் வருகிறது என்று எங்களூர் பத்திரிகையில் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். எது எப்படியிருப்பினும் இந்த சர்ச்சைக்குள் நான் போக
    விரும்பவில்லை .////

    எழுதிவிட்டீர்கள் அல்லவா? லால்குடிக்காரர் விடமாட்டார். பதில் தருவார். பொறுத்திருங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  57. //// தேமொழி said...
    கண்ணனுக்கு கனிவு நிறைந்த வாழ்த்துக்கள்////

    வாழ்க, சகோதர பாசம்!

    ReplyDelete
  58. //// தேமொழி said...
    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'
    --- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
    செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
    --- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    முடி வெட்டும் தொழில் செய்யும்
    தோழந்தான் இல்லையேல்
    நமக்கெல்லாம் ஏது அழகு
    நதி நீரில் நின்று துணி
    துவைப்பவன் இல்லையேல்
    வெளுக்குமா உடை அழுக்கு
    எந்த தொழில் செய்தாலென்ன
    செய்யும் தொழில் தெய்வமென்று
    பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே
    ---வாலி
    முடிதிருத்தும் சிறுவனைப் போல் போலவே சிறுமிகளும் காலம் காலமாக வீட்டு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பப் பட்டதுண்டு.
    குழந்தை தொழிலாளிகளுக்கு கல்வி தடைபட்டால் அது வருத்ததிற்குரியது.
    சொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்./////

    இல்லை. தன்னம்பிக்கையை, இறைவன் தருவான். உங்களுடைய பின்னூட்டங்கள் மூலம், சிறந்த பாடல் வரிகள் பலவற்றைத் த்ந்து அசத்துகிறீர்கள். வாழ்க
    உங்கள் பணி!

    ReplyDelete
  59. // kmr.krishnan said...
    //காஞ்சியில் உள்ளது உண்மையான சங்கர மடம்தானா, நான்கு திசைகளிலும் நான்கு சங்கர மடம் இருக்கும்போது காஞ்சியில் இருப்பது எந்த வகையில் வருகிறது என்று எங்களூர் பத்திரிகையில் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். எது எப்படியிருப்பினும் இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை.//
    போக விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே போய்விட்டீர்கள் ஆனந்த்.காஞ்சிமடம் தங்களை சர்வக்ஞபீடம் என்று அறிவிப்பு செய்துகொள்கிறார்கள்.
    சர்வக்ஞ என்றால் அனைத்துப்பீடங்களுக்கும் முதன்மையான, ஏனைய பீடங்களை உள்ளடக்கிய,தலைமை வகிக்கூடிய என்றெல்லாம் பொருள் கொள்ள‌லலாம்.
    தற்சமயம் காஞ்சிமடம் என்று அறியப்பட்டாலும், முன்னர் அது கும்பகோண‌ம் மடம் என்றே அறியப்ப‌ட்டது.சிக்குடையார்(சிறிய உடையார்) மடம் என்று
    பெயர்கொண்டதாக சிருங்கேரிமடத்தின் கிளை மடமாகத்தான் இருந்துள்ளது.
    ராஜா சரபோஜி காலத்தில் தஞ்சையில் ஆங்கிலேயர் ஆட்சி செல்வாக்குப் பெற்றது. அப்போது மைசூரில் திப்பு சுல்தான் ஆட்சி. திப்புவுக்கும் ஆங்கிலேயருக்கும் பகை. எனவே மைசூர் ராஜ்ஜியத்திற்கு தமிழகத்திலிருந்து போக்குவரத்துத் தடை இருந்தது.சிருங்கேரி மடம் சிக்குடையார் மடத்தின் மீது தனக்கு இருந்த நிர்வாகத்தை செய்ய முடியாத சூழலில் தன்னைத் தனி பீடமாக சரபோஜிமன்னர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதரவுடன் காஞ்சி மடம் உருவானது என்று ஓர்
    ஆய்வு கூறுகிறது.
    எது எப்படி இருந்தாலும் இதனை சிருங்கேரி மடம் ஒரு பிரச்சனையாக்காமல் இப்போது அமைதி காக்கிறார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த 'மட'
    சண்டை பெரிய 'காண்ட்ரொவர்சி'தான்./////

    மடங்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  60. சொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.//

    அப்படிப்பொதுவாகச் சொல்லிவிடமுடியாது என்று தோன்றுகிறது. என் கணவர் முன்பு வேலை பார்த்த
    அலுவலகத்தின் முதலாளி ஒரு சர்தார். அவர் அப்போது ஏழு நிறுவனங்களை நடத்திக்கொண்டிருந்தார். எழுதப்படிக்கத் தெரியாது. வெறும் கையெழுத்து மட்டுமே போடத்தெரியும். இதுபோல் எனக்குத்தெரிந்த படிக்காத மேதைகளின் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. படித்தும் தன்னம்பிக்கை இல்லாதவர்களைப்பார்த்திருக்கிறேன். படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் திட்டினார் என்று தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் இதற்கு உதாரணம்.

    ReplyDelete
  61. கண்ணனுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  62. பெண்ணிற்கு, அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உள்ளது!//

    ஹா ஹா, பதினொன்றில் ஆட்சி பெற்ற சூரியன். ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்.

    ReplyDelete
  63. வாணியன் என்பது வணிகன் , வாணிபம் என்பதுடனும் தொடர்பு படுத்தலாம்.
    அதாவது வணிகர்கள் வாழ்ந்த இடம் வாணியம்பாடி என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் வாணியுடன் தொடர்பு படுத்துவதே நன்றாக இருக்கிறது. அப்படியே இருக்க‌ட்டும்.

    ReplyDelete
  64. //// Uma said...
    சொந்தக்காலில் நிற்கும் தன்மானமும் உறுதியும் இருந்தாலும், கல்வி தரும் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.//
    அப்படிப்பொதுவாகச் சொல்லிவிடமுடியாது என்று தோன்றுகிறது. என் கணவர் முன்பு வேலை பார்த்த
    அலுவலகத்தின் முதலாளி ஒரு சர்தார். அவர் அப்போது ஏழு நிறுவனங்களை நடத்திக்கொண்டிருந்தார். எழுதப்படிக்கத் தெரியாது. வெறும் கையெழுத்து மட்டுமே போடத்தெரியும். இதுபோல் எனக்குத்தெரிந்த படிக்காத மேதைகளின் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. படித்தும் தன்னம்பிக்கை இல்லாதவர்களைப்பார்த்திருக்கிறேன். படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் திட்டினார் என்று தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் இதற்கு உதாரணம்.////

    தமிழ் நாட்டில் அசுர வளர்ச்சியில் உள்ள ஊர்கள் மூன்று. திருப்பூர். சிவகாசி, நாமக்கல். அங்குள்ள தொழில் முனைவோர்களின் உழைப்புதான் அதற்குக் காரணம். சுவாரசியம் என்னவென்றால் அங்கே கோலோச்சுகிறவர்கள் அனைவருமே பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர்கள். அல்லது அதுகூடப் படிக்காதவர்கள். ஆனால் அவர்களிடம் இன்று பல படித்தவர்கள் வேலை செய்கிறார்கள்.

    அறிவு வேறு, படிப்பு வேறு,திறமை வேறு. அறிவிற்கு 5ஆம் வீடு. கல்விக்கு 4ஆம் வீடு. திறமைக்கு செவ்வாய். பணத்திற்கு அண்டாவும் குழாயும் (Pipe) அண்டா 2ஆம் வீடு. குழாய் 11ஆம் வீடு.

    ReplyDelete
  65. //// Uma said...
    பெண்ணிற்கு, அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உள்ளது!//
    ஹா ஹா, பதினொன்றில் ஆட்சி பெற்ற சூரியன். ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்.////

    எதிர்கால மாயாவதி அல்லது மம்தா பானெர்ஜி

    ReplyDelete
  66. /// kmr.krishnan said...
    வாணியன் என்பது வணிகன் , வாணிபம் என்பதுடனும் தொடர்பு படுத்தலாம்.
    அதாவது வணிகர்கள் வாழ்ந்த இடம் வாணியம்பாடி என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் வாணியுடன் தொடர்பு படுத்துவதே நன்றாக இருக்கிறது. அப்படியே இருக்க‌ட்டும்.////

    அப்ப்டியே இருக்கட்டும் என்ன? அதுதான் வரலாறு!

    ReplyDelete
  67. ///SP.VR. SUBBAIYA said...
    தமிழ் நாட்டில் அசுர வளர்ச்சியில் உள்ள ஊர்கள் மூன்று. திருப்பூர். சிவகாசி, நாமக்கல். அங்குள்ள தொழில் முனைவோர்களின் உழைப்புதான் அதற்குக் காரணம். சுவாரசியம் என்னவென்றால் அங்கே கோலோச்சுகிறவர்கள் அனைவருமே பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர்கள். அல்லது அதுகூடப் படிக்காதவர்கள். ஆனால் அவர்களிடம் இன்று பல படித்தவர்கள் வேலை செய்கிறார்கள். ///

    உண்மை ஐயா. ஃபோர்ட் ஊர்தி நிறுவனர் ஹென்றி ஃபோர்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் கேலி செய்தாராம். அவர் முறையான கல்வி இல்லாததால் புத்திசாலி இல்லை என்று கூறினாராம் . அதற்கு ஃபோர்ட் எனக்குத் தெரியாததை, தேவையானசெய்தியை எனக்குக் கீழ் வேலை செய்யும் படித்தவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளும் அறிவு எனக்கு இருக்கிறது என்று சொன்னாராம்.

    ஆனால் "குங்குமப் பொட்டு கௌண்டர்" என்ற படத்தில் கவுண்டமணியும் சத்தியராஜும் பேசிக்கொள்ளும் ஒரு வசனம் என்னை மிகவும் சித்திக்க வைத்தது. தன் மகனை ஆங்கிலமொழி பயிற்று மொழியாக உள்ள பள்ளியில் சேர்க்கத் துடிப்பார் சத்திராஜ். அவரிடம் "படிக்காத மேதை காமராஜர் முதல்வராகவில்லையா?" என்று மணி கேட்பார். அதற்கு "அவர் படித்திருந்தால் இந்தியாவிற்கே பிரதமராக வந்திருப்பார்" என சத்தியராஜ் மடக்குவார். காமராஜ் இந்தியாவிற்கே பிரதமராக ஆகும் வாய்ப்பை தன் கல்வித் தகுதியை காரணம் காட்டி தவிர்த்ததே என் பின்னூட்டக் கருத்திற்கு காரணம்.

    ReplyDelete
  68. வாணியம்பாடி=வாணியன் ( வியாபாரி)+ பாடி (ஊர்) வணிகர் குடியிருப்பு. ஆயர் குடியிருப்பு ஆயர்பாடி ஆனது போல.
    தரங்கம்பாடி = தரங்கம் (அலை) + பாடி (பாடும்) கடலலை பாடுவதன் காரணமாக தரங்கம்பாடி என அந்த ஊருக்குப் பெயர் வந்தததாம். அதுபோல
    வாணியம்பாடி=வாணியம்மை +பாடி என்பது சரியாகத் தோன்றுகிறது.
    இரண்டும் பொருந்துகிறது. ஆனால் வாணியம்மை +பாடி பெயர் பொருத்தம் தல வரலாற்றுடன் ஒத்துப் போகிறது.

    ReplyDelete
  69. ///////அறிவு வேறு, படிப்பு வேறு,திறமை வேறு. அறிவிற்கு 5ஆம் வீடு. கல்விக்கு 4ஆம் வீடு. திறமைக்கு செவ்வாய். பணத்திற்கு அண்டாவும் குழாயும் (Pipe) அண்டா 2ஆம் வீடு. குழாய் 11ஆம் வீடு.//////

    இந்த எல்லா சரக்கையும் மிக்ஸ் பண்ணி காக்டெயிலா அடிச்சா பைப்பு தண்ணியிலே அண்டா ரொம்பிடும்..?

    ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்..

    ReplyDelete
  70. /////கூப்பிய கரங்களுடன் சங்கரன்கோவிலுக்குக்கிளம்பிடாருங்கோ மிட்சிபிசி தலீவரு!
    கையை ஃபெவிகால் போட்டு ஒட்டியாச்சாம். தேர்தல் முடியும் வரை பிரிக்க முடியாதாம்.அந்தக் கையை அப்படியே கோமதி அம்மனை நோக்கியும் திருப்பினா கேட்டது கிடைக்கும். வெள்ளை 'டர்கிடவலை'ப் பார்த்தா வடலூர் பக்தர் 'மாதுரி'யும் தோணுதுங்கோ!/////

    தங்களின் வாக்குப் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்..

    ReplyDelete
  71. //////SP.VR. SUBBAIYA said...
    //// kmr.krishnan said...
    கூப்பிய கரங்களுடன் சங்கரன்கோவிலுக்குக்கிளம்பிடாருங்கோ மிட்சிபிசி தலீவரு!
    கையை ஃபெவிகால் போட்டு ஒட்டியாச்சாம். தேர்தல் முடியும் வரை பிரிக்க முடியாதாம்.அந்தக் கையை அப்படியே கோமதி அம்மனை நோக்கியும் திருப்பினா
    கேட்டது கிடைக்கும். வெள்ளை 'டர்கிடவலை'ப் பார்த்தா வடலூர் பக்தர் 'மாதுரி'யும் தோணுதுங்கோ!////

    கைய நீட்டிப் பணம் வாங்குவதெப்படி? பெவிகால் மேட்டர் உண்மையல்ல!/////////

    நாங்க குடுக்குற கட்சி..கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள்..

    இந்தப் போட்டோவைப் பார்த்தீங்கன்னாத் தெரியும்..

    ReplyDelete
  72. ////////தேமொழி said...
    ///SP.VR. SUBBAIYA said...
    தமிழ் நாட்டில் அசுர வளர்ச்சியில் உள்ள ஊர்கள் மூன்று. திருப்பூர். சிவகாசி, நாமக்கல். அங்குள்ள தொழில் முனைவோர்களின் உழைப்புதான் அதற்குக் காரணம். சுவாரசியம் என்னவென்றால் அங்கே கோலோச்சுகிறவர்கள் அனைவருமே பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர்கள். அல்லது அதுகூடப் படிக்காதவர்கள். ஆனால் அவர்களிடம் இன்று பல படித்தவர்கள் வேலை செய்கிறார்கள். ///

    உண்மை ஐயா. ஃபோர்ட் ஊர்தி நிறுவனர் ஹென்றி ஃபோர்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் கேலி செய்தாராம். அவர் முறையான கல்வி இல்லாததால் புத்திசாலி இல்லை என்று கூறினாராம் . அதற்கு ஃபோர்ட் எனக்குத் தெரியாததை, தேவையானசெய்தியை எனக்குக் கீழ் வேலை செய்யும் படித்தவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளும் அறிவு எனக்கு இருக்கிறது என்று சொன்னாராம். ////////
    ஹென்றி போர்ட் 'o' ப்ளட் க்ரூப் ப்பைச் சேர்ந்தவர் என்று படித்தேன்..'o' நெகடிவ் வகை மட்டுமே அனைவருக்கும் சேரக் கூடியது..ரத்த தானத்தில் முதலிடம் இவர்களுக்கே..
    யுனிவர்சல் டோனர். ஆனா தனக்கு ஏதாவது ஒண்ணு ஆனா தன் இனத்து(.'o' நெகடிவ் இனம்) ரத்தம் மட்டுமே சேர்க்கமுடியும்...'o' நெகடிவ் வகை பார்ன் லீடர்ஸ்..என்று படித்தேன்..இங்கே ஜப்பானில் ப்ளட் க்ரூப் பற்றிய ஆராய்ச்சி பிரபலம்..நம்மூர் பிரபலங்களின் ப்ளட் க்ரூப் பற்றி யாருக்காவது தெரியுமா?சோதிடம், புராணம்,பழைய விஞ்ஞானம் இதுகுறித்து என்ன சொல்கிறது?யாருக்காவது தெரியுமா? முக்கியமா KMRK & தேமொழி?
    (முதுகலை, இளங்கலை ஆராய்ச்சி ஆர்வத் துடிப்பு உள்ளவர்கள்என்ற காரணத்தால்)

    ReplyDelete
  73. ///minorwall said...
    ...'o' நெகடிவ் வகை பார்ன் லீடர்ஸ்..என்று படித்தேன்..இங்கே ஜப்பானில் ப்ளட் க்ரூப் பற்றிய ஆராய்ச்சி பிரபலம்..நம்மூர் பிரபலங்களின் ப்ளட் க்ரூப் பற்றி யாருக்காவது தெரியுமா?சோதிடம், புராணம்,பழைய விஞ்ஞானம் இதுகுறித்து என்ன சொல்கிறது?யாருக்காவது தெரியுமா? முக்கியமா KMRK & தேமொழி?///

    மைனர் இந்தப் படத்தில நீங்க மீசை வச்ச சாய்பாபா மாதிரி இருக்கீங்க. ஆனா அருள் கொடுக்காம அடிக்க வர்ற மாதிரி இருக்கு. ஹி..ஹீ.

    O negative blood group எனக்கு(மகனுக்கும்). பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் வகுப்பு தலைவியாக ஓரிரு முறை இருந்தது தவிர எதையம் தலைமையேற்று நடத்தவில்லை இதுவரை. born donor ஆகப் பிறந்திருக்கலாம் ஆனால் born leader ???, தலைமைப்பதவியைத் தேடிப் போனதில்லை. வாய்ப்பு வந்தால் தானாகத் திறமை வெளிப்படலாம்.

    உயிருக்கு ஆபத்தான ரத்தம் உறையாத குறைபாடுள்ள ஃஹீமோபிலியா என்ற நோய் அரச குடும்பங்களில் உண்டு, அதனால் royal disease என்று அதை சொல்வார்கள் என்பது தெரியும். அரச குடும்பத்தினரை blue blood என்று குறிப்பிடுவதும் தெரியும். ரத்த வகைக்கும் தலைமைப் பதவிக்கும் தொடர்பு இதுவரைக் கேள்விப் பட்டதில்லை.

    Briggs Myers personality test முடிவுகளை பன்னிரண்டு ராசிகளுடனும் ஒப்பிட்டு பார்க்க நினைத்ததுண்டு. ஆனால் நானும் மாமாவும் ISTJ என்று ஒரே முடிவு வந்ததும் அந்த ஆசையை விட்டொழித்து விட்டேன்.

    ReplyDelete
  74. ///////தேமொழி said...
    ///minorwall said...
    ...'o' நெகடிவ் வகை பார்ன் லீடர்ஸ்..என்று படித்தேன்..இங்கே ஜப்பானில் ப்ளட் க்ரூப் பற்றிய ஆராய்ச்சி பிரபலம்..நம்மூர் பிரபலங்களின் ப்ளட் க்ரூப் பற்றி யாருக்காவது தெரியுமா?சோதிடம், புராணம்,பழைய விஞ்ஞானம் இதுகுறித்து என்ன சொல்கிறது?யாருக்காவது தெரியுமா? முக்கியமா KMRK & தேமொழி?///

    மைனர் இந்தப் படத்தில நீங்க மீசை வச்ச சாய்பாபா மாதிரி இருக்கீங்க. ஆனா அருள் கொடுக்காம அடிக்க வர்ற மாதிரி இருக்கு. ஹி..ஹீ.////

    அடிக்குற கைதான் அணைக்கும்...?

    ////O negative blood group எனக்கு(மகனுக்கும்).///
    அட்ரா சக்கை..

    மத்தபடி உங்களுக்கும் உங்க பையனுக்கும் எப்போ எந்த அவசரத் தேவை வந்தாலும் மைனரைக் கூப்பிடலாம்..ஏன்னா ரத்த சம்பந்தம் உள்ள ஆட்களாகிவிட்டோமே?

    ஆமா? அது இன்னாது அது ISTJ?

    ReplyDelete
  75. நாங்களும் o+ தானுங்கோ! 33 முறை இரத்ததானம் செய்த அனுபவமும் உண்டுங்கோ. born leader தானா என்பதையெல்லாம் மத்தவங்க‌தான் சொல்லணும். ஓர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் என்னை ஒரு முறை
    born teacher என்று பாராட்டியிருக்காருங்கோ.55 வயதுக்குப்பின்னர் இரத்தம் கொடுப்பதை நிறுத்தியாச்சு. இரத்ததான அனுபவத்தையும் பதிவு எழுதணும்.
    நினைவு படுத்திய மைனருக்கு நன்றி.

    ReplyDelete
  76. ///minorwall said...
    மத்தபடி உங்களுக்கும் உங்க பையனுக்கும் எப்போ எந்த அவசரத் தேவை வந்தாலும் மைனரைக் கூப்பிடலாம்..ஏன்னா ரத்த சம்பந்தம் உள்ள ஆட்களாகிவிட்டோமே?

    ஆமா? அது இன்னாது அது ISTJ?///

    என் ரத்தத்தின் ரத்தமே !!! :)))))))))))

    மேலும் தேடியதில் Ronald Reagan, Indira Gandhi, Prince William, Prince Charles, Queen Elizabeth ஆகிய தலைவர்கள் "O" Negative group எனத் தெரிந்தது.

    ISTJ ?
    ...That is my Personality Type: ISTJ (introversion, sensing, thinking, judgment) type

    More info on Myers-Briggs Type Indicators:
    http://en.wikipedia.org/wiki/Myers-Briggs_Type_Indicator

    To take a Personality Type test go to:
    http://www.humanmetrics.com/cgi-win/JTypes1.htm

    ReplyDelete
  77. @themozhi

    http://www.indiastudychannel.com/forum/73837-The-attitude-behaviour-personnel-with-O-negative-blood-group.aspx
    இந்தத் தளத்திலே நேற்று ரத்த சம்பந்தமான சில பக்கங்களின் லிங்க்குகளை, விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்..அதிலே நான் படித்த வரையிலே நால்வரின் ஆராய்ச்சி முடிவுகளையும் பார்த்தால் Type 'o௦' மக்கள் extrovert என்றே சொல்லப்பட்டிருக்கிறது..இந்தப் பக்கத்திலுள்ள விவரங்கள்..
    http://www010.upp.so-net.ne.jp/abofan/mystery-e.htm

    Observations by Dr. Peter J. D'Adamo
    about Type O

    Extroverted
    Strong
    Leader
    Confident
    Pragmatic
    Strategic
    Patient
    Logical

    Blood Type-Personality Characterizations
    by other 4 researchers.

    Masahiko Nomi

    Extroverted
    Strong
    Expressive


    Peter Constantine
    Extroverted
    Outspoken



    Raymond Cattell
    Stable



    Hans Eysenck
    Extroverted



    Blood Type-Personality Test aswww.dadamo.com
    Extroverted
    Practical
    Decisive
    Lives in the present

    ReplyDelete
  78. @KMRK,

    ரத்ததான சேவை பற்றிய விஷயத்திலும் தாங்களே முன்னோடி..தகவலுக்கு நன்றி..

    நான் குறிப்பிட்டிருந்த விஷயத்திலே 'o' நெகடிவ் மட்டுமே
    யுனிவர்சல் டோனர்.
    எல்லோருக்கும் தானமாகக் கொடுக்கலாம்..
    தனக்கென்று வரும்போது 'o' நெகடிவ் மட்டுமே சேரும்..

    இது முழுக்கமுழுக்கத் தனித்தன்மை வாய்ந்த இயற்கையிலே பிறப்பிலே விளைந்த முக்கியமான விஷயம் ஆதலால் இதுகுறித்துச் சொல்ல விழைந்தேன்..

    சாதி,சமுதாயம், இனம், மதம், மொழி,கலாச்சாரம் என்று என்னதான் மனிதன் வேலிபோட்டுப் பிரித்து வைத்திருந்தாலும் பெற்றவரோ உடன் பிறந்தோரோ உற்றார் உறவினரோ இல்லை சொந்த சாதி சனமோ,மதமோ தன் விருப்பத்துக்கு ரத்தத்தை ஆபத்தில் ரத்தம் தேவைப்படும் எல்லோருக்கும் கொடுத்துவிடமுடியாது..சேராது..

    எல்லோருக்கும் சேரும் ஒரே வகை
    'O ' நெகடிவ் தான்..

    பேதங்கள் எல்லாம் கடந்து மனித சமுதாயத்தில் இயற்கை 'o' நெகடிவ் ஆட்களுக்கு மட்டுமேஅளித்திருக்கும் தனித்தன்மையான கொடை என்று தோன்றியதால் இப்படிப் பகிர்ந்துகொள்கிறேன்.

    இருக்கும் வாசகருக்குள் விவரங்களை வெளியிட்ட அளவிலே அந்த வகையில் தற்சமயம் நானும் தேமொழி, அவர் பையன் என்று மூவர் மட்டுமே இந்தக் கூட்டணியில் இங்கே கலந்துகொள்ள முடியும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com