-------------------------------------------------------------------------------------
எது காலக்கேடு?
எது காலக் கேடானது? கவியரசர் கண்ணதாசன் தன் பாடல் ஒன்றின் மூலம் காலக்கேட்டிற்கு (அதாவது காலத்தை வீணடிப்பதற்கு) ஒரு சிறு விளக்கம் அளித்துள்ளார். நீங்கள் அதை அறிந்துகொள்ளும் முகமாக அப்பாடல் வரிகளை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்!
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++=
காலக்கேடு
பரம புருஷராம், பரம ஹம்சரை
பார்த்ததொரு சீடன் பகர்ந்தான் இம்மொழி
“ஐயா! நான்ஒரு அற்புத வித்தையைக்
கணக்கிலா ஆண்டுகள் கஷ்டப் பட்டுக்
கற்றுக்கொண்டேன்; கற்றதைச் சொல்கிறேன்
கங்கையின் மீது காலால் நடந்து
அக்கரை செல்வதே அந்த ஓர் வித்தையாம்
தத்துவம் அதன்பேர் ஜலஸ்தம்பம் எனல்
தாங்கள் அறிந்ததே; தலைதாழ்ந்த வணக்கம்!
பகவான் அவனைப் பார்த்துச் சிரித்தார்;
“தம்பி! இதென்ன தத்துவ வித்தை!
ஓரணாக் கொடுத்தால் ஓடக் காரன்
அக்கரை கொண்டு அழகாய்ச் சேர்ப்பான்
இதற்கா தம்பி இத்தனை ஆண்டுகள்?
காலக் கேடு! கடவுளை அடைய
இத்தனை ஆண்டுகள் முயற்சிகள் எடுத்தால்
இந்நேரம் நீ ஈச்வரன் அருகே!
- கவியரர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
எது காலக்கேடு?
எது காலக் கேடானது? கவியரசர் கண்ணதாசன் தன் பாடல் ஒன்றின் மூலம் காலக்கேட்டிற்கு (அதாவது காலத்தை வீணடிப்பதற்கு) ஒரு சிறு விளக்கம் அளித்துள்ளார். நீங்கள் அதை அறிந்துகொள்ளும் முகமாக அப்பாடல் வரிகளை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்!
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++=
காலக்கேடு
பரம புருஷராம், பரம ஹம்சரை
பார்த்ததொரு சீடன் பகர்ந்தான் இம்மொழி
“ஐயா! நான்ஒரு அற்புத வித்தையைக்
கணக்கிலா ஆண்டுகள் கஷ்டப் பட்டுக்
கற்றுக்கொண்டேன்; கற்றதைச் சொல்கிறேன்
கங்கையின் மீது காலால் நடந்து
அக்கரை செல்வதே அந்த ஓர் வித்தையாம்
தத்துவம் அதன்பேர் ஜலஸ்தம்பம் எனல்
தாங்கள் அறிந்ததே; தலைதாழ்ந்த வணக்கம்!
பகவான் அவனைப் பார்த்துச் சிரித்தார்;
“தம்பி! இதென்ன தத்துவ வித்தை!
ஓரணாக் கொடுத்தால் ஓடக் காரன்
அக்கரை கொண்டு அழகாய்ச் சேர்ப்பான்
இதற்கா தம்பி இத்தனை ஆண்டுகள்?
காலக் கேடு! கடவுளை அடைய
இத்தனை ஆண்டுகள் முயற்சிகள் எடுத்தால்
இந்நேரம் நீ ஈச்வரன் அருகே!
- கவியரர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
/// கடவுளை அடைய
ReplyDeleteஇத்தனை ஆண்டுகள் முயற்சிகள் எடுத்தால்
இந்நேரம் நீ ஈச்வரன் அருகே!////
உண்மை தான் செய்யும் வேலை ஆயிரமாயிரம் என்றாலும் வந்த வேலை என்னவோ இது தானே..
அருமையான கருத்தை சுமந்து அற்புதமாய் பிரசவித்த அற்புதப் பாடல்...
நன்றி...
அன்புடன்,
ஆலாசியம் கோ.
மிக அற்புதமான வரிகள். பகவான் ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளைக் கவிதையாக்கித் தந்த கவியரசர் கண்ணதாசன் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் குடியிருப்பார்.
ReplyDeleteபரமஹம்சர் விவேகானந்தர் பற்றி சிறிய வயதிலிருந்து கேட்டும், படித்தும், உணர்ந்த எனக்கு, அவர்கள் பற்றி எழுதுவது உவப்பாக இருக்கும். 10 கட்டுரைகளாவது வகுப்பறையில் எழுதியுள்ளேன் அவர்களைப்பற்றி.
ReplyDeleteஎங்கிருந்தோ கேட்ட முணு முணுப்பால் இப்போது சற்றே தயங்கி நிறுத்தினேன்.
அந்தக்குறை எனக்கு இருக்கலாகாது என்று கவியரசர் கண்ணதாசன் வாய் மொழியாகப் பரமஹம்சர் மீண்டும் வகுப்பறையில் நுழைந்துவிட்டார்.
ஆம்! ஒரு யோகிக்குப் பரமஹம்சர், பக்தியில்லாத யோகாப்பியாசம்,தத்துவ விசாரணை, ஆகியவைகளால் பயன் இல்லை என்று கூறும்போது சொன்னதுதான் அந்த படகுக்காரன், ஜல்ஸ்தம்பனம் ஆகியவை.
ஐயாவின் வாசிப்பு, அறிவு வீச்சு ஆகியவை பிரம்மாண்டமாய் கண் முன் தெரிகிறது.
ஐயாவுக்கு நீண்ட ஆயுளும், சலியாத மனமும் அளிக்க அந்தப் பரமஹம்சரையே வேண்டுகிறேன்
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDelete/// கடவுளை அடைய
இத்தனை ஆண்டுகள் முயற்சிகள் எடுத்தால்
இந்நேரம் நீ ஈச்வரன் அருகே!////
உண்மை தான் செய்யும் வேலை ஆயிரமாயிரம் என்றாலும் வந்த வேலை என்னவோ இது தானே..
அருமையான கருத்தை சுமந்து அற்புதமாய் பிரசவித்த அற்புதப் பாடல்...
நன்றி...
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
/////Blogger Thanjavooraan said...
ReplyDeleteமிக அற்புதமான வரிகள். பகவான் ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளைக் கவிதையாக்கித் தந்த கவியரசர் கண்ணதாசன் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் குடியிருப்பார்./////
நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றி சார்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபரமஹம்சர் விவேகானந்தர் பற்றி சிறிய வயதிலிருந்து கேட்டும், படித்தும், உணர்ந்த எனக்கு, அவர்கள் பற்றி எழுதுவது உவப்பாக இருக்கும். 10 கட்டுரைகளாவது வகுப்பறையில் எழுதியுள்ளேன் அவர்களைப்பற்றி.
எங்கிருந்தோ கேட்ட முணு முணுப்பால் இப்போது சற்றே தயங்கி நிறுத்தினேன்.
அந்தக்குறை எனக்கு இருக்கலாகாது என்று கவியரசர் கண்ணதாசன் வாய் மொழியாகப் பரமஹம்சர் மீண்டும் வகுப்பறையில் நுழைந்துவிட்டார்.
ஆம்! ஒரு யோகிக்குப் பரமஹம்சர், பக்தியில்லாத யோகாப்பியாசம்,தத்துவ விசாரணை, ஆகியவைகளால் பயன் இல்லை என்று கூறும்போது சொன்னதுதான் அந்த படகுக்காரன், ஜல்ஸ்தம்பனம் ஆகியவை.
ஐயாவின் வாசிப்பு, அறிவு வீச்சு ஆகியவை பிரம்மாண்டமாய் கண் முன் தெரிகிறது.
ஐயாவுக்கு நீண்ட ஆயுளும், சலியாத மனமும் அளிக்க அந்தப் பரமஹம்சரையே வேண்டுகிறேன்//////
கிருஷ்ணன் சார், கவலை வேண்டாம். சலிப்பு வராமல் பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான்! நன்றி!
//ஓரணாக் கொடுத்தால் ஓடக் காரன்
ReplyDeleteஅக்கரை கொண்டு அழகாய்ச் சேர்ப்பான் சேர்ப்பான்
இதற்கா தம்பி இத்தனை ஆண்டுகள்?காலக் கேடு!//
உண்மைதான். 'Re-Invention of Wheel' என்பது போல.
//
ReplyDeleteஎன் அலுவலகத்தில் அனைத்து ப்ளாக்சையும் தடை செய்துள்ளதால் வகுப்பறையில் பின்னூட்டம் போட இயலவில்லை. கூடிய விரைவில் திரும்ப வருவேன் என நினைக்கிறேன். (சார் இந்த பின்னூட்டத்தை வகுப்பறையில் வெளியிடவும், நன்றி)
S. உமா, தில்லி
//
அடடா, சிங்கத்தைக் கூண்டில் அடைத்து விட்டார்களே!!
அந்தப் படகுக்காரர் படம் அருமை.பெரும்பாலும் திரிவேணி சங்கமம் அல்லது காசியில் படம் எடுக்கப்பட்டிருக்கலாம்.
ReplyDeleteபஜனை சம்பிரதாயத்தில் "சாதூலரா மீரு ரண்டி, பிருந்தாவன க்ஷேத்ரமு போத்தாமுண்டி" என்ற ஒரு தெலுங்குப் பாடல் பாடப்படும். இது படகுக்காரர்கள் பாடும் நாட்டார் வழக்கில் 'ஓடக்காரன் பாட்டு' பாணியில் பாடப்படும்.துடுப்புப்போடும் தாளக்கட்டில் பாடப்படும்.
பாடலின் பொருள்: "சாதுக்களே நீங்களும் வாருங்கள்(வந்து படகில் ஏறிக்கொள்ளுங்கள்) அனைவரும் பிருந்தாவன புண்ணிய பூமிக்குச் செல்வோம்"
கரையில் இருப்பவர்களை நோக்கி ஏற்கனவே படகில் ஏறிவிட்டவர்கள் கூப்பிடுவது போன்ற பாடல்.கேட்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.
'நல்லாரைத் துணைகோடல்' என்ற வள்ளுவரின் குறள், குரல் ஒலிக்கும் பாடல்.
சத் சங்கம் என்பதனை வலியுறுத்தும் பாடல் அது.
பல சொற்கள் சொல்ல முடியாததை ஒரு படம் உணர்த்திவிடும்.
இதுதான் ஃபோட்டோ ஜர்னலிசம்.
Blogger கைகாட்டி said...
ReplyDelete//ஓரணாக் கொடுத்தால் ஓடக் காரன்
அக்கரை கொண்டு அழகாய்ச் சேர்ப்பான் சேர்ப்பான்
இதற்கா தம்பி இத்தனை ஆண்டுகள்?காலக் கேடு!//
உண்மைதான். 'Re-Invention of Wheel' என்பது போல.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
///////Blogger கைகாட்டி said...
ReplyDelete// என் அலுவலகத்தில் அனைத்து ப்ளாக்சையும் தடை செய்துள்ளதால் வகுப்பறையில் பின்னூட்டம் போட இயலவில்லை. கூடிய விரைவில் திரும்ப வருவேன் என நினைக்கிறேன். (சார் இந்த பின்னூட்டத்தை வகுப்பறையில் வெளியிடவும், நன்றி)
S. உமா, தில்லி//
அடடா, சிங்கத்தைக் கூண்டில் அடைத்து விட்டார்களே!!////////
அலுவலக நேரத்தில் மட்டும்தானே அடைத்துவைக்க முடியும்? மற்ற நேரங்களை சிங்கம் பயன் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்!
///////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅந்தப் படகுக்காரர் படம் அருமை.பெரும்பாலும் திரிவேணி சங்கமம் அல்லது காசியில் படம் எடுக்கப்பட்டிருக்கலாம்.
பஜனை சம்பிரதாயத்தில் "சாதூலரா மீரு ரண்டி, பிருந்தாவன க்ஷேத்ரமு போத்தாமுண்டி" என்ற ஒரு தெலுங்குப் பாடல் பாடப்படும். இது படகுக்காரர்கள் பாடும் நாட்டார் வழக்கில் 'ஓடக்காரன் பாட்டு' பாணியில் பாடப்படும்.துடுப்புப்போடும் தாளக்கட்டில் பாடப்படும்.
பாடலின் பொருள்: "சாதுக்களே நீங்களும் வாருங்கள்(வந்து படகில் ஏறிக்கொள்ளுங்கள்) அனைவரும் பிருந்தாவன புண்ணிய பூமிக்குச் செல்வோம்"
கரையில் இருப்பவர்களை நோக்கி ஏற்கனவே படகில் ஏறிவிட்டவர்கள் கூப்பிடுவது போன்ற பாடல்.கேட்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.
'நல்லாரைத் துணைகோடல்' என்ற வள்ளுவரின் குறள், குரல் ஒலிக்கும் பாடல்.
சத் சங்கம் என்பதனை வலியுறுத்தும் பாடல் அது.
பல சொற்கள் சொல்ல முடியாததை ஒரு படம் உணர்த்திவிடும்.
இதுதான் ஃபோட்டோ ஜர்னலிசம்.///////
உங்களின் இரசனை உணர்விற்கும் அனுபவப் பகிற்விற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
ஆகா...அருமை அருமை
ReplyDeleteBlogger கைகாட்டி said...
ReplyDeleteஅடடா, சிங்கத்தைக் கூண்டில் அடைத்து விட்டார்களே!!
நல்ல டைமிங் .
ஐயா, இது வரும் வகுப்பில் நடைபெறப் போகும் முற்றும் துறந்த சன்யாசியின் முழுமையான ஜாதக அலசலுக்கான ஒரு முன்னோட்டமோ?
ReplyDeleteவணக்கம் அய்யா,
ReplyDeleteமிகவும் அருமையான தத்துவம்.அய்யா,எனக்கு தத்துவங்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.அதை கேட்டு கொஞ்சமாவது முயற்சி செய்து நாம் வாழ்ந்தாலும் நல்லதொரு வாழ்க்கையை வாழலாம் அல்லவா...இதுவே தத்துவம் தான்,ஆனால் கொஞ்சம் பழசு.
விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்?
ReplyDeleteநாம் எதைத் தேடுகிறோமோ அதுதான் நமக்குக் கிடைக்கும்..
பரமஹம்சர் தேடல் குறித்துக் கொடுத்திருக்கும் பதிலில் இதைத்தான் அறிய முடிகிறது..
நம்மில் பலரும் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பது அவரவருக்குத்தான் வெளிச்சம்..
//////// SP.VR. SUBBAIYA said... அலுவலக நேரத்தில் மட்டும்தானே அடைத்துவைக்க முடியும்? மற்ற நேரங்களை சிங்கம் பயன் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்!//////
ReplyDeleteசிங்கம் வெட்டிவேட்டையை நடத்துவதே இந்த அலுவலக நேரத்தில்தான்..நீங்க வேற..
ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியுது..சனிப்பெயர்ச்சி வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..
எனக்கு ரிஷபராசி..ஆறாமிடத்துக்கு சனி பெயர்வதாலே 'எதிரிகள் காணாமல் போவார்கள்' என்று ராசிபலன் படிச்சேன்..
அது போலவே நடந்துடுச்சு..
/////Blogger Raja said...
ReplyDeleteஆகா...அருமை அருமை/////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger thanusu said...
ReplyDeleteBlogger கைகாட்டி said...
அடடா, சிங்கத்தைக் கூண்டில் அடைத்து விட்டார்களே!!////
நல்ல டைமிங்//////
ஓ...ரசிக்கவா செய்கிறீர்கள்?. சிங்கத்தின் ஹிட் லிஸ்ட்டில் ஏற்கனவே இரண்டுபேர்கள் இருக்கிறார்கள்!
///////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா, இது வரும் வகுப்பில் நடைபெறப் போகும் முற்றும் துறந்த சன்யாசியின் முழுமையான ஜாதக அலசலுக்கான ஒரு முன்னோட்டமோ?/////
இருக்கலாம் அம்மணி!
//////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
மிகவும் அருமையான தத்துவம்.அய்யா,எனக்கு தத்துவங்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.அதை கேட்டு கொஞ்சமாவது முயற்சி செய்து நாம் வாழ்ந்தாலும் நல்லதொரு வாழ்க்கையை வாழலாம் அல்லவா...இதுவே தத்துவம் தான், ஆனால் கொஞ்சம் பழசு.//////
இளைய பெண்மணி - நீங்கள் சொன்னால் சரிதான்!
/////Blogger minorwall said...
ReplyDeleteவிதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்?
நாம் எதைத் தேடுகிறோமோ அதுதான் நமக்குக் கிடைக்கும்..
பரமஹம்சர் தேடல் குறித்துக் கொடுத்திருக்கும் பதிலில் இதைத்தான் அறிய முடிகிறது..
நம்மில் பலரும் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பது அவரவருக்குத்தான் வெளிச்சம்..///////
தேடல் இருந்தால் சரிதான்! எதை வேண்டுமென்றாலும் தேடட்டும். தற்போது 70 சதவிகிதம் பேர்கள் பணத்தைத் தவிர வேறு எதையும் தேடுவதில்லை! அதுதான் அவலம்!
///////Blogger minorwall said...
ReplyDelete//////// SP.VR. SUBBAIYA said... அலுவலக நேரத்தில் மட்டும்தானே அடைத்துவைக்க முடியும்? மற்ற நேரங்களை சிங்கம் பயன் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்!//////
சிங்கம் வெட்டிவேட்டையை நடத்துவதே இந்த அலுவலக நேரத்தில்தான்..நீங்க வேற..
ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியுது..சனிப்பெயர்ச்சி வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு..
எனக்கு ரிஷபராசி..ஆறாமிடத்துக்கு சனி பெயர்வதாலே 'எதிரிகள் காணாமல் போவார்கள்' என்று ராசிபலன் படிச்சேன்..
அது போலவே நடந்துடுச்சு..//////
அவரும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் விருச்சிகராசிக்காரராம். ஏழரைச் சனி துவங்க இருப்பதால் இப்படி எல்லாம் நடக்கிறதாம்.
முதலில் சனீஷ்வரனைத்தான் ஒரு கை பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார். ஜப்பான் எல்லாம் அதற்கு அடுத்த ரவுண்டில்தான் வரும்!
படம் அருமை இதில் உள்ளவரைஎங்கோ
ReplyDeleteபார்த்தது போல் உள்ளது..
சத்தமே இல்லாத போது என் வீட்டிலே
சத்தம் இடியோ என பயப்படுபவர்..
தான் கற்ற சிறு வித்தைகளையே
தமக்கு மட்டுமே தெரியும் எனசொல்லி
ஜலஸ்தம்பம் என
ஜம்பம் பேசும்
இவர்களுக்கு குருதேவரின் பதில்
இன்றைய பாணியில் சொன்னால் பஞ்ச்
தாழ்வு மனப்பாண்மையில் இருப்பவர்
தன்னை விட மற்றவருக்கு கிடைத்தது
உயர்வானதென எண்ணுபவர்கள் என
உளவியல் சாத்திரம் சொல்கிறது.
இது இருப்பவர்கள் ஆனந்தமாக
இருக்கவே முடியாது
ஓட்டலுக்கு போனால் கூட பக்கத்தில்
ஒட்கார்ந்திருப்பவருக்கு வந்த தோசை
ரோஸ்ட்டு எனக்கும் வந்துள்ளது
வேஸ்டு என அங்கலாய்க்கும் கருத்து
எங்கள் ஹிப்னாடிக் கூட்டத்தில் பேசியது
எமது காதில் ஒளிக்கிறது.. அதனை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்
உங்கள் அனுமதியுடனே.. இன்று
அப்பரின் இந்த தேவாரத்தை
"விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகிலவை ஒன்றுமில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின்று அறுப்பது நமச்சி வாயவே"
அப்படியே பிரதிபலிக்கும்
பாரதியின் இந்த வரிகளை
பகிர்ந்து கொள்கிறோம்..
"அக்னி குஞ்சு ஒன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு அழல்
வீரத்தில் குஞ்சொன்றும் மூப்பென்றும் உண்டோ தத்திரிகிட தத்தரிகிட தோம்"
இந்த பாடல் வரிகள் தானோ
இவர் சீடருக்கு logo வரைய தந்ததோ
என
எண்ணத் தோன்றுகிறது..
எதுவாக இருந்தாலும்
நல்லதே நினைபோம் பாசிடிவ்வாக
நண்மையே நடக்கும் எப்போதும்..
(நண்மைக்கு 3 சுழி போட்டது எழுத்துப்பிழை அல்ல.. நன்மை கூடுதலாக கிடைக்கட்டும் என சிம்பாளிக்காக..)
Guru vanakkam,
ReplyDeleteSorry for the delayed entry to the class room.
Enjoyed the writing skills of KMRK,IYER, MINORWALL and others.
Good night guys,
Regards
Ramadu.
///நம்மில் பலரும் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பது அவரவருக்குத்தான் வெளிச்சம்///
ReplyDeleteபைத்தியம் ... பைத்தியம்..
எல்லாரும் பைத்தியம்..
சிலருக்கு பண பைத்தியம்
சிலருக்கு ரேஸ் பைத்தியம்
சிலருக்கு ஷேர் பைத்தியம் ஒரு
சிலருக்கு கடவுள் பைத்தியம் ஆனால்
கடவுளுக்கோ பிறவியை
கடக்க வேண்டிய உயிர்கள் மீது
பைத்தியம்.. பைத்தியம்.. அதனாலே
பித்தா என சுந்தரர் பாடியுள்ளார்
அந்த தேவார பாடலினை
அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்ள
பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா
எத்தான் மறவாதேநினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
வணக்கம்,
ReplyDeleteபழமையான தத்துவம் . காலக்கேடு என்பதற்கு அவர் கூறிய அர்த்தம் மனிதனாய் பிறந்து காலத்தை வீணாக்கி விட்டாயே .
தவம் எடுத்து மனித உடலை பெற்றோம் . அந்த ஈஸ்வரனை அடைவதற்கு . படகு ஓட்டியின் நல்ல நேரம் தான் அந்த மகானின் தத்துவம் கிடைத்தது . சனி மகா தசையில் தான் ஒருவனுக்கு தத்துவத்தை உணர்வதர்கும் , அறிவதற்கும் நேரம் கிடைக்கும் . நல்ல சிந்தனைக்குள்ள கருத்து.
சந்திரசேகரன் சூர்யநாராயணன் .