3.11.11

Astrology ஒப்பற்ற துறவி ஒருவரின் ஜாதகம்!

--------------------------------------------------------------------------------------
Astrology  ஒப்பற்ற துறவி ஒருவரின் ஜாதகம்!

ஒப்பற்ற என்றால் ஒப்பு உவமை சொல்ல முடியாத என்று பொருள். No chance for any comparison என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அப்படிப்பட்ட துறவி யார்? சுவாமி விவேகானந்தரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் அது!!!!

இன்று சுவாமி விவேகானந்தாரின் ஜாதகத்தின் மேன்மையைப் பார்ப்போம். நன்றாகக் கவனிக்கவும்...அலசுவோம் என்ற சொல்லை நான் பயன்படுத்த வில்லை. மேன்மையை மட்டும் பார்ப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மட்டுமே பாருங்கள். தேவையில்லாத  கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்!

சுவாமிஜியைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்காக, அவரைப் பற்றிய செய்திகளுக்கான வலைப் பக்கத்தின் சுட்டியைக்  கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படித்துவிட்டு, பிறகு இங்கே வாருங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது.

செய்திகளுக்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda

இந்தப் பதிவு நமது வகுப்பறை மாணவமணி விசுவநாதன் (விசு அய்யர்) அவர்களுக்கு சமர்ப்பணம். அவர்தான் தொடர்ந்து கேட்டுக்
கொண்டிருந்தார்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுவாமிஜி 12.01.1863ஆம் தேதியன்று காலை 6:33 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தார்.
4.7.1902ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.
வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் 5 மாதங்கள் 22 நாட்கள் மட்டுமே!
நட்சத்திரம்: ஹஸ்தம், கன்னி ராசி
லக்கினம்: தனுசு
கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் 22 நாட்கள்


ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்:
முதன்மைக் கிரகமான சூரியன் லக்கினத்தில்
அவர் இந்த ஜாதகத்தின் பாக்கியாதிபதி. இங்கே வந்து அமர்ந்ததால் ராஜயோகங்களைக் கொடுத்தார்.
லக்கினாதிபதியான குரு பகவான் பதினொன்றில், லாபஸ்தானத்தில் (குறைந்த முயற்சி, அதிகப் பலன் தரும் அமைப்பு அது)
கர்மகாரகன் சனி முக்கியமான கேந்திரத்தில் (பத்தாம் வீட்டில்)
அத்துடன் அந்த வீட்டுக்குரிய புதனுடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை செய்துகொண்டு பலத்த யோகத்துடன் அமர்ந்துள்ளார்.
புதனும் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து நிபுனா யோகம்
குருவும், செவ்வாயும் (இருவரும் திரிகோண அதிபதிகள்) ஒருவருக்கொருவர் நேரடிப்பார்வையில்
பன்னிரெண்டாம் இடத்து ராகு தொடர் பயண அனுபவங்களைக் கொடுத்தான்.

கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
சூரியன் - 5 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
குரு - 7 பரல்கள்
சனி - 5 பரல்கள்
புதன் - 4 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்

நான்கு கிரகங்கள் அதீத வலிமையுடன் இருப்பதைப் பாருங்கள். சுக்கிரனும், புதனும் சராசரியான பரல்களுடன் உள்ளன. செவ்வாய்க்கு மட்டும்தான் பரல்கள் குறைவு. ஆனால் அதை செவ்வாய் கோணத்தில் அமர்ந்து சரிகட்டிவிட்டது. ஆக மொத்தம் அனைத்துக்கிரகங்களுமே  வலிமையாக உள்ளன.

மேன்மைகள்:

1. திரிகோணம் ஏறிய சூரியன் அவருக்கு நல்ல உடல் வலிமையையும், தாக்குப் பிடிக்கும் சக்தியையும் கொடுத்தான் He also confered will power

2. லக்கினத்தில் வந்தமர்ந்த பாக்கியதிபதி சூரியன் அவருக்கு மக்களிடையே மதிப்பு, மரியாதை, பெயர், புகழ் என்று எல்லாவற்றையும்  வழங்கினான். ஆத்மகாரகனும், பாக்கியாதிபதியுமான சூரியன் லக்கினத்தில் அமர்ந்து ராஜ யோகத்தைக் கொடுத்தான். துறவிகளில் அவர்  ராஜாவாக இருந்தார். மைசூர் மகாராஜா, ராமநாதபுரம் அரசர் சேதுபதி ராஜா போன்ற பல ராஜாக்கள் அவருக்கு சீடர்களாக இருந்தார்கள்!

3. தனுசுராசி நெருப்பு ராசியாகும். உலகறிந்த ஆன்மீகத் தலைவராக்கியது அந்த லக்கினத்தின் விஷேசமாகும். இன்னொரு நெருப்பு ராசியான  சிம்மத்தின் அதிபதி சூரியன் இங்கே வந்து அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அதுவும் இந்த மேன்மைக்குக் காரணம்

4. லக்கினாதிபதி 11ல் அமர்ந்ததால், அவர் எடுத்துச் செய்த பணிகளில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது.

5. பத்தாம் அதிபதி புதன் இரண்டில், பரிவர்த்தனை யோகத்துடன் அமர்ந்தது, அவரை ஒரு தலை சிறந்த பேச்சாளர் ஆக்கியது. இரண்டாம்  வீடு வாக்கு ஸ்தானம் என்பதை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். கேட்பவர்களைக் கிறங்க வைக்கும் பேச்சுத் திறமை அவரிடம் இருந்தது.

6. செவ்வாய் 5ல் திரிகோணம் மற்றும் சொந்த வீட்டில் இருந்ததால், அவருக்கு அதீத செயல் திறனும், துரிதமாக முடிவெடுக்கும் திறனும்  இருந்தது.

7. சூரியனும், சந்திரனும் வலிமையாக,  கோணம் & கேந்திர பலத்துடனும், சுயவர்க்கத்தில் தலா 5 பரல்களுடனும் இருந்ததால், ஜாதகருக்கு  நல்ல தந்தையும், தாயும் கிடைத்தார்கள். இளம் வயது வாழ்க்கை மெச்சும்படியாக அமைந்தது.

8. வித்தைகளுக்கும் கல்விக்கும் காரகனான புதன் பரிவர்த்தனை யோகத்தில். அத்துடன் மனகாரகனும் சுபகிரகமுமான சந்திரனின் பார்வையில்  4ஆம் வீடு. ஜாதகரை இளங்கலை பட்டப் படிப்பு வரை படிக்க வைத்தன அவை. அந்தக் காலத்தில் பட்டப்படிப்பு என்றால் சும்மாவா?  பேப்பரை திருத்தினவனெல்லாம் வெள்ளைக்காரன். அதை மனதில் வையுங்கள்.

9. பத்தாம் இடத்துச் சனி ஜாதகரை (அவர் `நுழையும் துறையின் மூலம்) வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வலிமை உடையது.
தலைமைப் பொறுப்பில் இருந்த அனைவருக்கும் இது நடந்துள்ளது. விவேகானந்தருக்கும் அப்படியே நடந்தது. ஆன்மீக உலகத்தின் நம்பர் ஒன்
ஆக ஆனார்! உலகம் முழுவதும் அறியப்பட்டார். மக்கள் கூட்டத்தை வசியப்படுத்துவதில் அவருக்கு நிகரானவர் எவருமில்லை.

10. மறைவிடங்கள் வலிமையாக இருந்தால்தான் துறவியாக முடியும் (3, 6, 8 &12th Houses) அவற்றின் பரல்களைக் கூட்டிப் பாருங்கள்
30 + 35 + 32 + 31 = மொத்தம் 128.  337 வகுத்தல் 3 = 112 மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு இருந்தது 128 (16 பரல்கள்  அதிகம்) அதனால்தான் முழுத்துறவியானார்

11. இரண்டாம் இடத்ததிபதி சனீஷ்வரன் 10ல் அமர்ந்து அவருக்கு ராஜயோகத்தைக் கொடுத்ததோடு, லட்சக் கணக்கான மக்களை பக்தி
மார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வலிமையையும் கொடுத்தான். அவரைப் புனிதராக்கினான். மனித நேயத்திற்குப் பாடுபட வைத்தான்.

12. இரண்டில் அமர்ந்த ஏழாம் இடத்துப் புதன், அவருக்கு உலகளாவிய புகழையும், மதிப்பையும் பெற்றுத் தந்தான்.

13. பன்னிரெண்டில் இருக்கும் ராகு அவரை நாடு முழுமைக்கும், ஏன் உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களுக்குப் பயணிக்க வைத்தான்.

14. சரி, தசா கணக்கைப் பார்ப்போம்:
அவர் பிறந்தது. 12.1.1863ல். பிறப்பில் சந்திர திசை இருப்பு. சுமார் 3 ஆண்டுகள், மூன்று மாதங்கள் + செவ்வாய் மகா திசை 7 ஆண்டுகள் +  ராகு மகா திசை 18 ஆண்டுகள். ஆக மொத்தம் 28 ஆண்டுகள். அதற்குப் பிறகு மே’ 1891ல் துவங்கிய லக்கினாதிபதி குருவின் திசையில்  எல்லாம் அரங்கேறியது. வெறும் 11 ஆண்டுகளில் அவர் உலகப் புகழ் பெற்றார்

15. அதே குரு திசையில், சந்திர புத்தி துவங்கியவுடன் அவர் முக்தியடைந்தார். உங்கள் மொழியில் சொன்னால் அவர் காலமானார். சந்திரன்  எட்டாம் இடத்துக்காரன். அதை நினைவில் வையுங்கள். அத்துடன் அவன் ஆயுள்காரகன் சனியுடன் கூட்டாக உள்ளான்.

Death (4 July 1902)

His tours, hectic lecturing engagements, private discussions and correspondence had taken their toll on his health. He was suffering from asthma, diabetes and other physical ailments. A few days prior to his demise, he was seen intently studying the almanac. Three days before  his death he pointed out the spot for this cremation - the one at which a temple in his memory stands today. He had remarked to several  persons that he would not live to be forty.

On the day of his death, he taught Shukla-Yajur-Veda to some pupils in the morning at Belur Math. He had a walk with Swami Premananda,  a brother-disciple, and gave him instructions concerning the future of the Ramakrishna Math. Vivekananda died at ten minutes past nine P.M. on July 4, 1902 while he was meditating. According to his disciples, this was Mahasamadhi.

Afterward, his disciples recorded that they had noticed "a little blood" in the Swami's nostrils, about his mouth and in his eyes. The doctors  remarked that it was due to the rupture of a blood-vessel in the brain, but they could not find the real cause of the death. According to his disciples, Brahmarandhra - the aperture in the crown of the head - must have been pierced when he attained Mahasamadhi. Vivekananda had
fulfilled his own prophecy of not living to be forty years old.

சாதனைகள் செய்வதற்கும், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும், வயதும், வாழும் காலத்தின் அளவும் முக்கியமல்ல என்பதுதான்  உண்மை. அதை அதிரடியாக நமக்கு உணர்த்திவிட்டுப்போனவர் சுவாமி விவேகானந்தா! அதை மனதில் வையுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------
அடிக்குறிப்பு:

இது  unofficial பதிவிற்கு அப்பாற்பட்டது. உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

1. விவேகானந்தரின் அன்னை புவனேஷ்வரி அம்மையார் காசி விஸ்வநாதரின் தீவிர பக்தை. ஆண் மகவு வேண்டி அந்த அம்மையார் கடும்  பிரார்த்தனைகள் செய்த காலத்தில், காசி விசுவநாதரே அந்த அம்மையாரின் கனவில் வந்து, நான் உனக்கு மகனாகப் பிறப்பேன் என்று  சொன்னாராம். விவேகானந்தர் பிறக்கும் முன்பாக அந்த அம்மையார் அதை அடிக்கடி நினைவு கூர்ந்து சொல்வாராம்.

2. நான் நாற்பது வயதிற்கு மேல் உயிர்வாழ மாட்டேன் என்று விவேகானந்தர் அடிக்கடி சொல்வாராம். அதன்படியே நடந்தது. அதாவது அவரே  தான் முக்தியடையும் நாளைத் தேடி, முக்தியடைந்ததாக ஒரு செய்தியும் உண்டு. அவருடைய தீவிர பக்தர்கள் (சீடர்கள்) அவர்  முக்தியடைந்ததாக மட்டுமே சொல்வார்கள்.

3. ஏழாம் அதிபதி புதன் ஆறாம் வீட்டுக்காரன் (வில்லன்) சுக்கிரனுடன் கூட்டணி போட்டு அந்த வீட்டிற்கு (அதாவது ஏழாம் வீட்டிற்கு)  எட்டில் அமர்ந்ததாலும், குடும்ப ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், குழந்தைகள் ஸ்தானம் ஆகியவற்றில் முறையே 25, 21, 21 என்று பரல்கள்  குறைந்து அந்த வீடுகள் வீக்காக இருப்ப தாலும் சுவாமி விவேகானந்தருக்கு (அவருடைய குருநாதரைப்போல அல்லாமல்) ஒரு பெண் துணைகூட இல்லாமல் போயிற்று. அத்துடன் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் ஒன்றாகச் சேர்ந்து கடுமையான புனர்பூ தோஷம். மனைவியைப்  பிரிந்து வாழ வேண்டிய தோஷம். அவர் மகான் அல்லவா? அதனால் காலதேவன், அவருக்கு இந்த சங்கடங்கள் எதுவும் ஏற்படமால் பார்த்துக்கொண்டான். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூன்று ஆசைகளும் அறவே இல்லாமல் வாழ்ந்த மகான் அவர்!

இவைகள் எல்லாம் ஜோதிடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள். இதை நான் நம்புகிறேனா அல்லது நீங்கள் நம்புகிறீர்களா என்பது  முக்கியமில்லை. இதைப் பதிவில் சொன்னால் சில ‘அரை டிக்கெட்டுகள்’ உள்ளே வந்து சான்று கேட்டு என் கழுத்தை அறுக்கும் அபாயம்  உண்டு. ஆகவே அடிக்குறிப்பில் (unofficialலாக)அவற்றைச் சொல்லியுள்ளேன்.

நன்றி, வணக்கத்துடன்
வாத்தி (யார்)
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

59 comments:

  1. சுவாமிஜி அவர்களின் ஒப்புயர்வற்ற வாழ்க்கையை அவரது ஜாதகத்தின் மூலம் விளக்கியது மிகவும் அருமை. வகுப்பறைப் பாடங்கள் நாளுக்கு நாள் மெருகேறிச்செல்கின்றன. வாத்தியார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    அவர் காலத்திலேயே பல அரை டிக்கெட்டுக்களை(வெள்ளையர்களையும் சேர்த்து) துணிவோடு எதிர் கொண்டு அவர்களை வாயடைக்கசெய்தவர், அதனாலேயே அவர் வீரத்துறவி என்றும் அழைக்கப்படுகிறார். ஆன்மீக வாழ்விலும் எதையும் சோதனை செய்து அறிந்த பின்னரே அதைப்பற்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்தவர்.

    ReplyDelete
  2. வேண்டுதலை நிறைவேற்றும்வகுப்பின்
    வேந்தரே,, வாழ்க நீ எம்மான்...

    "பிறர் முதுக்குக்கு பின்னால் நாம்
    செய்யும் வேலை தட்டி கொடுப்பது தான்"

    சுவாமிஜியின் இந்த பொன் மொழியினை
    சுவைபட கூறியமைக்கு சிறப்பு வாழ்த்து

    வேண்டுவார் வேண்டுவதே
    ஈவான் கண்டாய்

    என சொல்லும் அப்பர் தேவாரத்தை
    எமதுள்ளதிலிருந்து பதிவு செய்கிறோம்

    தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
    காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
    "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்"
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
    மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

    ReplyDelete
  3. மாக்களை மனிதராக்கிய அந்த
    மாமனிதரின் கைரேகை குறிப்புகள்

    medical palmistryஎனபுதுக்கோண ஆய்வுக்கு
    மெத்தவேதுவியது எனில்மிகையில்லை

    சுவாமிஜியை பற்றி எழுதச் சொன்னால்
    சொல்லாமலே வரும் வார்த்தைகள்..

    சக்தி தரும் அவ்வார்த்தைகள்
    புத்தியை தட்டி உத்வேகம் தரும்

    "இனிவரும் 50 ஆண்டிற்கு ஆதார
    சுருதி ஈடுஇணையற்ற இந்தியா" என்றார்

    12,02,1897ல் சென்னையில், கூட்டினால்
    1947ல் இந்திய சுதந்திரம் (1897+50=1947)

    அந்த மாமனிதரின் சொற்கள்
    அன்றுமட்டுமல்ல இன்றும், அன்றைய

    இளைஞருக்கும் முன்னேறும் இன்றைய
    இளைஞர்களுக்கும் ஒரு food supplement

    பின் ஊட்டம் எழுதச் சொன்னால் இப்படி
    பிசகின்றி எழுதலாம் பல பக்கம்

    நேரம் மற்றும் நீளம் கருதி
    நேர்த்தியாகவே நிறைவு செய்கிறோம்

    வணக்கமும் ..
    வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  4. மேன்மை பொருந்திய ஒரு அவதாரம். மேற்கத்திய 'அறிவு ஜீவிகளை' இந்தியாவை மதிப்புடன் நோக்க வைத்ததில் இவர்தான் முதலில் வருகிறார். வாத்தியார் எடுத்துக் கூறிய பாங்கு பாராட்டுக்குரியது. நன்றிகள் பல.

    ReplyDelete
  5. ////அந்தக் காலத்தில் பட்டப்படிப்பு என்றால் சும்மாவா? பேப்பரை திருத்தினவனெல்லாம் வெள்ளைக்காரன். அதை மனதில் வையுங்கள்.///

    ஹா...ஹா..ஹா... வாத்தியாரின் பாணி எப்போதும் அலாதியானது...

    அருமை.. அற்புதம்... சுவாமி விவேகானந்தரின் மேன்மையை விளக்கிய அவரின் ஜாதக பதிவு அருமையிலும் அருமை....

    ஒரு அல்ப ஆசை இருந்தும் ஒப்பிட்டதை கூறுகிறேன்...
    எனக்கும் தனுசு லக்னம்..
    லக்னாதிபதி பதினொன்றில் சுகிரனோடு..
    இரண்டில் உடச்ச செவ்வாய் என்றாலும்
    ஐந்தில் சந்திரனும் சனியும் (நீசம்)
    செவ்வாயுடனும், குருவுடனும் தொடர்பில் இருக்கிறார்கள்..

    சுவாமிக்கு ஒன்பதில் மாந்தி எனக்கு கேது பகவான்...

    ஒருவேளை சுவாமிஜியின் மீது பற்றுக் கொள்ளச் செய்வதும் இதுதானோ தெரியவில்லை.

    பதிவுக்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    பி.கு. சுவாமிஜிக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை என்று ஒருவர் வேறு ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தார் அதற்கு அந்தப் பதிவர் சரியான பதிலைத் தரவில்லை.. இங்கேயும் அது போன்ற கருத்து வருமாயின் சுவாமிஜி ஆற்றிய இந்தியத் தாய் பற்றிய சொற்பொழிவில் ஜாதகத்தை ஒத்துக் கொண்டு பேசியதன் ஆதாரம் இருக்கிறது என்பதை கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. Dear Sir,
    It's nice to see a Saint's horoscope. Today's lesson is very goog, sir.
    I have two doubts:
    i) In your olden lessons, if paralgal is less than 25 in lagna, his life is meaningless. But in Swami's horoscope, lagna paralgal is 24. But his life is fruitful to everyone, how?
    ii) For a person to get enlightment, ketu has to be aspected by Jupiter. But in his horoscope, it's not so. Is it any other reason to attain enlightment?
    Thank you sir.

    ReplyDelete
  7. Ayya Vanakkam, I am reading your blog last 3 months only. AMAZING.
    Also today's swamys jathaga menmai super.

    But 3,6,8 &12 veedukalin paralgal plus 16 enil pavangal athigam endru thane mattra pathivugalil sonnergal. Aanl indru oru MAGAAN jathagam enravudan athiye menmaiya kuruppittirukkirigale?

    Thanks /Sengotaian.P.K,tirupur.

    ReplyDelete
  8. ////Karthikeyan said...
    சுவாமிஜி அவர்களின் ஒப்புயர்வற்ற வாழ்க்கையை அவரது ஜாதகத்தின் மூலம் விளக்கியது மிகவும் அருமை. வகுப்பறைப் பாடங்கள் நாளுக்கு நாள் மெருகேறிச்செல்கின்றன. வாத்தியார் அவர்களுக்கு மிக்க நன்றி.

    அவர் காலத்திலேயே பல அரை டிக்கெட்டுக்களை(வெள்ளையர்களையும் சேர்த்து) துணிவோடு எதிர் கொண்டு அவர்களை வாயடைக்கசெய்தவர், அதனாலேயே அவர் வீரத்துறவி என்றும் அழைக்கப்படுகிறார். ஆன்மீக வாழ்விலும் எதையும் சோதனை செய்து அறிந்த பின்னரே அதைப்பற்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்தவர்./////

    மல்லிகை வாசத்தோடு வந்திருக்கும் கார்த்திகேயன் அவர்களின் எழுத்து, கருத்து நடை அப்படியே லால்குடியாரை பிரதிபலிக்கிறதே! என்னே? அதிசயம்.
    முதல் வருகை வகுப்பறைக்கு மாணவர்கள் சார்பாக வரவேற்கிறோம்.. வாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  9. /---
    சாதனைகள் செய்வதற்கும், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும், வயதும், வாழும் காலத்தின் அளவும் முக்கியமல்ல என்பதுதான் உண்மை. அதை அதிரடியாக நமக்கு உணர்த்திவிட்டுப்போனவர் சுவாமி விவேகானந்தா! அதை மனதில் வையுங்கள்!
    ----/
    உண்மைதான் ஐயா. இதற்கு உதாரணமாய் இன்னும் பலர் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார்கள்.
    1. மகாகவி பாரதி
    2. கணிதமேதை இராமானுஜம்
    3. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    நேரம்/வாய்ப்புக் கிடைத்தால் இந்த மேதைகளின் ஜாதகத்தையும் விளக்குங்கள் ஐயா.

    நா.துரைசாமி
    எர்ணாகுளம்

    ReplyDelete
  10. ஐயா,
    விவேகானந்தரின் ஜாதகத்தில் மேஷத்தில் சனிக்கு 0 பரல்கள்.
    இதனை எவ்வாறு பொருள் கொள்வது?
    எனது நண்பரின் ஆண் குழந்தைக்கு(அமாவாசை அன்று பிறந்தது) சனியின் (கன்னியில்) சுய பரல் 0.
    இதனை எவ்வாறு பொருள் கொள்வது?

    நன்றி
    நா.துரைசாமி

    ReplyDelete
  11. அய்யா,கோயம்புத்தூர் இல் இருந்து மகேஸ்வரி, நான் கடந்த பத்து மாதங்களாக ஜோதிடம் பயில்வதற்கு முயன்று வருகிறேன்,அதற்க்கு எங்கள் குடும்ப ஜோதிடர் வழிகாட்டினார். நான் கடந்த இரு நாட்களாகதான் தங்கள் ஜோதிட தளத்தை படித்தேன், என்னுடைய தேடலுக்கு தங்கள் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    மிக்க நன்றி...

    அஷ்ட வர்கத்தின் முக்கியத்துவம் புரிகிறது ..

    ReplyDelete
  12. 9ம் பார்வையாக 7ம் இடத்தை குரு பார்க்கும் பார்வைக்கு பலன் இல்லையோ..? பார்வை பலனையும் சேர்த்துத்தான் பரல் கணக்கென்றாலும் 27 பரல்கள் above average தானே அய்யா..?

    கடைசி பெஞ்ச் 'கண்மனி'யின் கேள்வியாக இதைக் கொள்ளுங்கள்..

    விளக்கம் அருமை. நன்றிகள்.

    ReplyDelete
  13. /////Blogger Karthikeyan said...
    சுவாமிஜி அவர்களின் ஒப்புயர்வற்ற வாழ்க்கையை அவரது ஜாதகத்தின் மூலம் விளக்கியது மிகவும் அருமை. வகுப்பறைப் பாடங்கள் நாளுக்கு நாள் மெருகேறிச்செல்கின்றன. வாத்தியார் அவர்களுக்கு மிக்க நன்றி.
    அவர் காலத்திலேயே பல அரை டிக்கெட்டுக்களை(வெள்ளையர்களையும் சேர்த்து) துணிவோடு எதிர் கொண்டு அவர்களை வாயடைக்கசெய்தவர், அதனாலேயே அவர் வீரத்துறவி என்றும் அழைக்கப்படுகிறார். ஆன்மீக வாழ்விலும் எதையும் சோதனை செய்து அறிந்த பின்னரே அதைப்பற்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்தவர்./////

    ஆமாம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. //////Blogger iyer said...
    வேண்டுதலை நிறைவேற்றும்வகுப்பின்
    வேந்தரே,, வாழ்க நீ எம்மான்...
    "பிறர் முதுக்குக்கு பின்னால் நாம்
    செய்யும் வேலை தட்டி கொடுப்பது தான்"
    சுவாமிஜியின் இந்த பொன் மொழியினை
    சுவைபட கூறியமைக்கு சிறப்பு வாழ்த்து
    வேண்டுவார் வேண்டுவதே
    ஈவான் கண்டாய்
    என சொல்லும் அப்பர் தேவாரத்தை
    எமதுள்ளதிலிருந்து பதிவு செய்கிறோம்

    தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
    காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
    "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்"
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
    மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே.//////

    நால்வர் பாடல்களைப் படிக்கும் வாய்ப்பும் நேரமும் எனக்கு இன்னும் கிட்டவில்லை. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  15. Blogger iyer said...
    மாக்களை மனிதராக்கிய அந்த
    மாமனிதரின் கைரேகை குறிப்புகள்
    medical palmistryஎனபுதுக்கோண ஆய்வுக்கு
    மெத்தவேதுவியது எனில்மிகையில்லை
    சுவாமிஜியை பற்றி எழுதச் சொன்னால்
    சொல்லாமலே வரும் வார்த்தைகள்..
    சக்தி தரும் அவ்வார்த்தைகள் புத்தியை தட்டி உத்வேகம் தரும்
    "இனிவரும் 50 ஆண்டிற்கு ஆதார
    சுருதி ஈடுஇணையற்ற இந்தியா" என்றார்
    12,02,1897ல் சென்னையில், கூட்டினால்
    1947ல் இந்திய சுதந்திரம் (1897+50=1947)
    அந்த மாமனிதரின் சொற்கள்
    அன்றுமட்டுமல்ல இன்றும், அன்றைய
    இளைஞருக்கும் முன்னேறும் இன்றைய
    இளைஞர்களுக்கும் ஒரு food supplement
    பின் ஊட்டம் எழுதச் சொன்னால் இப்படி
    பிசகின்றி எழுதலாம் பல பக்கம்
    நேரம் மற்றும் நீளம் கருதி
    நேர்த்தியாகவே நிறைவு செய்கிறோம்
    வணக்கமும் ..
    வாழ்த்துக்களும்...//////

    உங்களுடைய தொடர் பின் ஊட்டங்களுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  16. /////Blogger Srinivasa Rajulu.M said...
    மேன்மை பொருந்திய ஒரு அவதாரம். மேற்கத்திய 'அறிவு ஜீவிகளை' இந்தியாவை மதிப்புடன் நோக்க வைத்ததில் இவர்தான் முதலில் வருகிறார். வாத்தியார் எடுத்துக் கூறிய பாங்கு பாராட்டுக்குரியது. நன்றிகள் பல./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. Blogger தமிழ் விரும்பி said...
    ////அந்தக் காலத்தில் பட்டப்படிப்பு என்றால் சும்மாவா? பேப்பரை திருத்தினவனெல்லாம் வெள்ளைக்காரன். அதை மனதில் வையுங்கள்.///
    ஹா...ஹா..ஹா... வாத்தியாரின் பாணி எப்போதும் அலாதியானது...
    அருமை.. அற்புதம்... சுவாமி விவேகானந்தரின் மேன்மையை விளக்கிய அவரின் ஜாதக பதிவு அருமையிலும் அருமை....
    ஒரு அல்ப ஆசை இருந்தும் ஒப்பிட்டதை கூறுகிறேன்...
    எனக்கும் தனுசு லக்னம்..
    லக்னாதிபதி பதினொன்றில் சுகிரனோடு..
    இரண்டில் உடச்ச செவ்வாய் என்றாலும்
    ஐந்தில் சந்திரனும் சனியும் (நீசம்)
    செவ்வாயுடனும், குருவுடனும் தொடர்பில் இருக்கிறார்கள்..
    சுவாமிக்கு ஒன்பதில் மாந்தி எனக்கு கேது பகவான்...
    ஒருவேளை சுவாமிஜியின் மீது பற்றுக் கொள்ளச் செய்வதும் இதுதானோ தெரியவில்லை.
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.
    பி.கு. சுவாமிஜிக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை என்று ஒருவர் வேறு ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தார் அதற்கு அந்தப் பதிவர் சரியான பதிலைத் தரவில்லை.. இங்கேயும் அது போன்ற கருத்து வருமாயின் சுவாமிஜி ஆற்றிய இந்தியத் தாய் பற்றிய சொற்பொழிவில் ஜாதகத்தை ஒத்துக் கொண்டு பேசியதன் ஆதாரம் இருக்கிறது என்பதை கூறிக் கொள்கிறேன்.//////

    சுவாமிஜி தன்னுடைய இறுதி நாட்களில் பஞ்சாங்கத்தை அடிக்கடி புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த தகவல்களும் உண்டு ஆலாசியம். நன்றி!

    ReplyDelete
  18. /////Blogger dhilse said...
    Dear Sir,
    It's nice to see a Saint's horoscope. Today's lesson is very goog, sir.
    I have two doubts:
    i) In your olden lessons, if paralgal is less than 25 in lagna, his life is meaningless. But in Swami's horoscope, lagna paralgal is 24. But his life is fruitful to everyone, how?
    ii) For a person to get enlightment, ketu has to be aspected by Jupiter. But in his horoscope, it's not so. Is it any other reason to attain enlightment?
    Thank you sir./////

    ஒரு விதியை (Rule) மட்டும் வைத்து முடிவிற்கு வராதீர்கள். லக்கினத்தில் பரல்கள் குறைந்தால் என்ன? லக்கினம் என்னும் டீமில் வேறு யார் யார் உள்ளார்கள் என்று பாருங்கள். சச்சின், தோனி, யுவராஜ் என்று பாருங்கள். லக்கினாதிபதி குரு பதினொன்றில். பாக்கியாதிபதி லக்கினத்தில். அவர்கள் எல்லாம் அடித்து ஆடி ஸ்கோரை ஏற்றிவிடமாட்டார்களா?

    ReplyDelete
  19. /////Blogger redfort said...
    Ayya Vanakkam, I am reading your blog last 3 months only. AMAZING.
    Also today's swamys jathaga menmai super.
    But 3,6,8 &12 veedukalin paralgal plus 16 enil pavangal athigam endru thane mattra pathivugalil sonnergal. Aanl indru oru MAGAAN jathagam enravudan athiye menmaiya kuruppittirukkirigale?
    Thanks /Sengotaian.P.K,tirupur./////

    இதற்கு முன் உள்ள பின்னூட்டத்திற்கான பதிலைப் பாருங்கள். அதே பதில்தான் உங்களுக்கும்!

    ReplyDelete
  20. ////Blogger arul said...
    superb analysis//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  21. ////தமிழ் விரும்பி said...
    ////Karthikeyan said...
    சுவாமிஜி அவர்களின் ஒப்புயர்வற்ற வாழ்க்கையை அவரது ஜாதகத்தின் மூலம் விளக்கியது மிகவும் அருமை. வகுப்பறைப் பாடங்கள் நாளுக்கு நாள் மெருகேறிச்செல்கின்றன. வாத்தியார் அவர்களுக்கு மிக்க நன்றி.
    அவர் காலத்திலேயே பல அரை டிக்கெட்டுக்களை(வெள்ளையர்களையும் சேர்த்து) துணிவோடு எதிர் கொண்டு அவர்களை வாயடைக்கசெய்தவர், அதனாலேயே அவர் வீரத்துறவி என்றும் அழைக்கப்படுகிறார். ஆன்மீக வாழ்விலும் எதையும் சோதனை செய்து அறிந்த பின்னரே அதைப்பற்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்தவர்./////
    மல்லிகை வாசத்தோடு வந்திருக்கும் கார்த்திகேயன் அவர்களின் எழுத்து, கருத்து நடை அப்படியே லால்குடியாரை பிரதிபலிக்கிறதே! என்னே? அதிசயம்.
    முதல் வருகை வகுப்பறைக்கு மாணவர்கள் சார்பாக வரவேற்கிறோம்.. வாருங்கள் நண்பரே!////////

    ஆமாம். நீங்கள் எல்லாம் சீனியர் மாணவர். அப்படி வரவேற்பதுதான் நன்று!

    ReplyDelete
  22. /////Blogger கைகாட்டி said...
    சாதனைகள் செய்வதற்கும், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும், வயதும், வாழும் காலத்தின் அளவும் முக்கியமல்ல என்பதுதான் உண்மை. அதை அதிரடியாக நமக்கு உணர்த்திவிட்டுப்போனவர் சுவாமி விவேகானந்தா! அதை மனதில் வையுங்கள்!/////
    உண்மைதான் ஐயா. இதற்கு உதாரணமாய் இன்னும் பலர் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார்கள்.
    1. மகாகவி பாரதி
    2. கணிதமேதை இராமானுஜம்
    3. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    நேரம்/வாய்ப்புக் கிடைத்தால் இந்த மேதைகளின் ஜாதகத்தையும் விளக்குங்கள் ஐயா.
    நா.துரைசாமி
    எர்ணாகுளம்//////

    பார்க்கலாம். நன்றி!

    ReplyDelete
  23. /////Blogger கைகாட்டி said...
    ஐயா,
    விவேகானந்தரின் ஜாதகத்தில் மேஷத்தில் சனிக்கு 0 பரல்கள்.
    இதனை எவ்வாறு பொருள் கொள்வது?
    எனது நண்பரின் ஆண் குழந்தைக்கு(அமாவாசை அன்று பிறந்தது) சனியின் (கன்னியில்) சுய பரல் 0.
    இதனை எவ்வாறு பொருள் கொள்வது?
    நன்றி
    நா.துரைசாமி/////

    அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தும்போது அதை எல்லாம் விவரிக்கிறேன். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  24. /////Blogger Maheswari said...
    அய்யா,கோயம்புத்தூர் இல் இருந்து மகேஸ்வரி, நான் கடந்த பத்து மாதங்களாக ஜோதிடம் பயில்வதற்கு முயன்று வருகிறேன்,அதற்க்கு எங்கள் குடும்ப ஜோதிடர் வழிகாட்டினார். நான் கடந்த இரு நாட்களாகதான் தங்கள் ஜோதிட தளத்தை படித்தேன், என்னுடைய தேடலுக்கு தங்கள் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி...
    அஷ்ட வர்கத்தின் முக்கியத்துவம் புரிகிறது ../////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள். முக்கியமாக பழைய பாடங்களை!

    ReplyDelete
  25. ///////Blogger Govindasamy said...
    9ம் பார்வையாக 7ம் இடத்தை குரு பார்க்கும் பார்வைக்கு பலன் இல்லையோ..? பார்வை பலனையும் சேர்த்துத்தான் பரல் கணக்கென்றாலும் 27 பரல்கள் above average தானே அய்யா..?
    கடைசி பெஞ்ச் 'கண்மனி'யின் கேள்வியாக இதைக் கொள்ளுங்கள்..
    விளக்கம் அருமை. நன்றிகள்.//////

    பதிவின் இறுதியில் கொடுத்துள்ள 3 குறிப்புக்களில், கடைசிக் குறிப்பை மீண்டும் படியுங்கள். விளங்கும்!

    ReplyDelete
  26. அய்யா.,

    நிச்சயமாக நான் ஒரு நாள் இந்த கலையில் நன்றாக தேர்ச்சி பெருவேன் என்ற நம்பிக்கை எனக்குள் பிறக்கிறது...

    பதிவு அருமை., பின்னுட்த்தின் பதில்களோ அதை விட அருமை...

    நன்றி...நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  27. மன்னிக்கவும் இடையில் சில நாட்கள் வகுப்பறைக்கு வர இயலமைக்கு,

    நன்றி ஐயா,
    கடந்த நுற்றாண்டில் தோன்றிய அதியற்புதமனா மிகபெரும் ஆன்மிக தலைவர்,இளைஞர்,வழிகாட்டி!
    இந்து சமுதாயம் திக்கெட்டு நின்றபோது அதற்க்கு வலிமை தந்து,புத்துயிருட்டி,முடநம்பிக்கைகளை களைந்து,ஆன்மிகத்தில் பகுத்தறிவை புகுத்தி,காத்து மேன்மையுரச்செய்த ஒப்பற்ற துறவி சுவாமிஜி அவர்களின் ஜாதகத்தின் மேன்மையைப் பற்றி மிக அருமையாக விளக்கியதற்க்கு!

    மேலும் சுவாமியின் ஜாதகத்தில் பாக்கியதிபதி சூரியன் பலமாக திரிகோணத்தில் அமர்ந்த்தாலும் 9இல், மாந்தியின் நிலையால் தனது தந்தயை மிக இளமையிலே இழந்துள்ளர் என்று தோன்றுகிறது.

    மேலும் எனக்கும் தனுசு லக்னம்.லக்கினதிபதி குரு 7இல் இருந்து நேரடி பார்வை,9இல் புதனும்,சுக்கிரனும்,10இல் செவ்வாய் இருந்தும் அனைத்தும் ராகு&கேது பிடியில் லக்கினத்தை தவிர்த்து.இதனால்தான் என்னவோ ஸ்வமிஜியின் மிது அளவு கடந்த பக்திகொண்டுள்ளேன்.

    மிக்க நன்றிகள் ஐயா,

    முருகராஜன்.

    ReplyDelete
  28. சுவாமி விவேகானந்தருடைய ஜாதகம் அலசப்படுகிறது என்றதும் பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களைப் பார்த்தேன். ஒரு முக்கியமான நபரைக் காணோமே! அதிலும் சுவாமி விவேகானந்தர் விஷயமாக இருந்தும் அவர் இல்லாதது சற்று வெறுமையாகத் தெரிகிறது.

    ReplyDelete
  29. வணக்கம் அய்யா,
    இன்றைய பாடம் மிகவும் அருமை.சுவாமிஜியின் ஜாதக மேன்மையுடன் அவரது வாழ்க்கை குறிப்பும் நல்ல தகவல்.எங்கள் ஆச்சி சுவாமிஜியை கடவுள் என்று தான் என்னிடம் கன்னியாகுமரியில் உள்ள அவரது கோவிலை காட்டினார்.அய்யா,என் ஆதங்கம் எல்லாம் ஏன் சுவாமிஜி போன்றவர்கள் எல்லாம் சீக்கிரம் முக்தி பேற்றையடைங்கின்றனர் என்பது தான்.அதிலும் சுவாமிஜி மிக இளவயதிலேயே முக்தியடைந்தது வேதனை.
    உங்களின் இந்த தெளிவான அலசலுக்கு பிறகு வேறு என்ன சொல்ல!என் மூளைக்கு ஒன்று தான் விடுபட்டதாக தோன்றியது,அது சுக்கிரன்,புதன் சேர்க்கையால் வரும் நிபுணுவத்துவ யோகம் தான்.ஒரு வேளை 6ம் அதிபதியுடனான சேர்க்கை என்பதால் அந்த யோகத்தை கொள்ளக் கூடாதா? நல்ல பதிவிற்க்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  30. தங்களுடைய வரவேற்பிற்கு மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே.

    வகுப்பறைக்கு வருவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, வகுப்பறையின் அனைத்து பதிவுகளையும், பாடங்களையும், முக்கியமாக சீனியர் மாணவர்களான தங்களது, லால்குடியாறது, மைனர், ஆனந்த் ஆகியோரது பின்னூட்ட விவாதங்களையும் படித்துள்ளேன். எப்போதாவது பின்னூட்டங்களின் மூலம் எமது கருத்தையும் தெரிவித்துள்ளேன். அடியேனும் சிங்கப்பூரில் இருப்பதால் தங்களை தொடர்பு கொள்ள நினைத்ததுண்டு, ஆனால் செய்ததில்லை.
    /*மல்லிகை வாசத்தோடு வந்திருக்கும் கார்த்திகேயன் அவர்களின் எழுத்து, கருத்து நடை அப்படியே லால்குடியாரை பிரதிபலிக்கிறதே! என்னே?*/
    மன்னிக்கவும், அது மல்லிகை அல்ல, வெண் தாமரை. நான் லால்குடியில் பிறந்தவன், மேலும் பரமஹம்சர் மீதும், சுவாமிஜி மீதும் மிகவும் விருப்பமுடையவன், அதனால் அப்படியோ என்னவோ. இருப்பினும் பெரியவர் அளவுக்கு அனுபவமோ, எழுத்து வளமோ கண்டிப்பாக இல்லை, வெறும் வாசகன் மட்டுமே.

    அன்புடன்,
    கார்த்திகேயன்.

    ReplyDelete
  31. thank for writing about a geniuses.

    தங்கள் பாடங்களை மிகவும் ஆர்வமுடன் படித்து வருகிறேன், விரைவில் போம் இற்கு வந்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
    நன்றி ஆசிரியரே!!

    ReplyDelete
  32. //////Blogger bhuvanar said...
    அய்யா.,
    நிச்சயமாக நான் ஒரு நாள் இந்த கலையில் நன்றாக தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் பிறக்கிறது...
    பதிவு அருமை., பின்னுட்டத்தின் பதில்களோ அதை விட அருமை...
    நன்றி...நன்றி
    பாண்டியன்////////

    நல்லது. நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  33. ////Blogger முருகராஜன் said...
    மன்னிக்கவும் இடையில் சில நாட்கள் வகுப்பறைக்கு வர இயலாமைக்கு,
    நன்றி ஐயா,
    கடந்த நுற்றாண்டில் தோன்றிய அதியற்புதமனா மிகபெரும் ஆன்மிக தலைவர்,இளைஞர்,வழிகாட்டி!
    இந்து சமுதாயம் திக்கெட்டு நின்றபோது அதற்க்கு வலிமை தந்து,புத்துயிருட்டி,முடநம்பிக்கைகளை களைந்து,ஆன்மிகத்தில் பகுத்தறிவை புகுத்தி,காத்து மேன்மையுரச்செய்த ஒப்பற்ற துறவி சுவாமிஜி அவர்களின் ஜாதகத்தின் மேன்மையைப் பற்றி மிக அருமையாக விளக்கியதற்கு!
    மேலும் சுவாமியின் ஜாதகத்தில் பாக்கியதிபதி சூரியன் பலமாக திரிகோணத்தில் அமர்ந்த்தாலும் 9இல், மாந்தியின் நிலையால் தனது தந்தையை மிக இளமையிலே இழந்துள்ளார் என்று தோன்றுகிறது.
    மேலும் எனக்கும் தனுசு லக்னம்.லக்கினதிபதி குரு 7இல் இருந்து நேரடி பார்வை,9இல் புதனும்,சுக்கிரனும்,10இல் செவ்வாய் இருந்தும் அனைத்தும் ராகு&கேது பிடியில் லக்கினத்தை தவிர்த்து. இதனால்தான் என்னவோ ஸ்வமிஜியின் மிது அளவு கடந்த பக்திகொண்டுள்ளேன்.
    மிக்க நன்றிகள் ஐயா,
    முருகராஜன்.///////

    நேரம் கிடைக்கும்போது வகுப்பறைக்கு வாருங்கள். அதில் தவறு ஒன்றுமில்லை!

    ReplyDelete
  34. /////Blogger Thanjavooraan said...
    சுவாமி விவேகானந்தருடைய ஜாதகம் அலசப்படுகிறது என்றதும் பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களைப் பார்த்தேன். ஒரு முக்கியமான நபரைக் காணோமே! அதிலும் சுவாமி விவேகானந்தர் விஷயமாக இருந்தும் அவர் இல்லாதது சற்று வெறுமையாகத் தெரிகிறது.//////

    வருவார். எதாவது வேலையால், கணினிப் பக்கம் தலை காட்ட முடியாமல் இருக்கலாம். உங்கள் கண்ணில் பட்டதை பின்னூட்டத்தின் மூலம் தெரியப் படுத்தியமைக்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  35. /////////Blogger R.Srishobana said...
    வணக்கம் அய்யா,
    இன்றைய பாடம் மிகவும் அருமை.சுவாமிஜியின் ஜாதக மேன்மையுடன் அவரது வாழ்க்கை குறிப்பும் நல்ல தகவல்.எங்கள் ஆச்சி சுவாமிஜியை கடவுள் என்று தான் என்னிடம் கன்னியாகுமரியில் உள்ள அவரது கோவிலை காட்டினார்.அய்யா,என் ஆதங்கம் எல்லாம் ஏன் சுவாமிஜி போன்றவர்கள் எல்லாம் சீக்கிரம் முக்தி பேற்றையடைங்கின்றனர் என்பது தான்.அதிலும் சுவாமிஜி மிக இளவயதிலேயே முக்தியடைந்தது வேதனை.
    உங்களின் இந்த தெளிவான அலசலுக்கு பிறகு வேறு என்ன சொல்ல!என் மூளைக்கு ஒன்று தான் விடுபட்டதாக தோன்றியது,அது சுக்கிரன்,புதன் சேர்க்கையால் வரும் நிபுணுவத்துவ யோகம் தான். ஒரு வேளை 6ம் அதிபதியுடனான சேர்க்கை என்பதால் அந்த யோகத்தை கொள்ளக் கூடாதா? நல்ல பதிவிற்க்கு நன்றி அய்யா.////

    அந்த யோகம் இருந்திருக்கிறதே! அவருடைய நிபுனத்துவத்திற்கு அது பின்புலமாக இருந்திருக்கிறது! நன்றி சகோதரி!

    ReplyDelete
  36. ////////////Blogger Karthikeyan said...
    தங்களுடைய வரவேற்பிற்கு மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே.
    வகுப்பறைக்கு வருவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, வகுப்பறையின் அனைத்து பதிவுகளையும், பாடங்களையும், முக்கியமாக சீனியர் மாணவர்களான தங்களது, லால்குடியாறது, மைனர், ஆனந்த் ஆகியோரது பின்னூட்ட விவாதங்களையும் படித்துள்ளேன். எப்போதாவது பின்னூட்டங்களின் மூலம் எமது கருத்தையும் தெரிவித்துள்ளேன். அடியேனும் சிங்கப்பூரில் இருப்பதால் தங்களை தொடர்பு கொள்ள நினைத்ததுண்டு, ஆனால் செய்ததில்லை.
    /*மல்லிகை வாசத்தோடு வந்திருக்கும் கார்த்திகேயன் அவர்களின் எழுத்து, கருத்து நடை அப்படியே லால்குடியாரை பிரதிபலிக்கிறதே! என்னே?*/
    மன்னிக்கவும், அது மல்லிகை அல்ல, வெண் தாமரை. நான் லால்குடியில் பிறந்தவன், மேலும் பரமஹம்சர் மீதும், சுவாமிஜி மீதும் மிகவும் விருப்பமுடையவன், அதனால் அப்படியோ என்னவோ. இருப்பினும் பெரியவர் அளவுக்கு அனுபவமோ, எழுத்து வளமோ கண்டிப்பாக இல்லை, வெறும் வாசகன் மட்டுமே.
    அன்புடன்,
    கார்த்திகேயன்.///////

    எல்லாம் பழக்கத்தால் வருவதுதான். நீங்களும் பழகிக்கொள்ளலாம்

    ReplyDelete
  37. /////Blogger Raja said...
    thank for writing about a geniuses.
    தங்கள் பாடங்களை மிகவும் ஆர்வமுடன் படித்து வருகிறேன், விரைவில் ஃபார்மிற்கு வந்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
    நன்றி ஆசிரியரே!!//////

    வந்தால் சரிதான். தொடர்ந்து படியுங்கள் ராஜா!

    ReplyDelete
  38. அந்தக் காலத்து self starter , go getter ..இந்தக்காலத்து enthusiyast எல்லோருக்கும் pioneer.
    such a great incomparable personality altogether..
    'Arise.. Awake..And stop not till the goal is reached.' என்று அடியெடுத்துக் கொடுத்த ஆசான் பற்றிய பதிவு..
    அவர் காசி விசுவநாதரின் அவதாரமாக கனவில் வந்தபடியே பிறந்தவர் என்பதும்..
    அவரே குறித்த தினத்திலே தியானத்திலே முக்தி அடைந்தார் என்பதும்
    அதுகுறித்த விக்கிபீடியாவின் விளக்கத்தில் அவரது சீடர்கள் கூறியபடி பிரம்மரந்திரா( the aperture in the crown of the head ) என்று சொல்லப்படுகிற மூளை நரம்புப் பகுதி ரத்த நாள வெடிப்பைக் காரணமாகக் கொண்டு அவர் இயற்கை அடைகிறார் என்ற செய்தி புதியது..
    வாத்தியாரின் ஜாதக விளக்கம் அருமை..நன்றி..
    இந்த பதஞ்சலி யோகா, குண்டலினி என்று பசும்பொன் அய்யா அவர்களும் பயின்றதாகக் கேள்விப்பட்டதாக ஞாபகம்..
    KMRK ,தஞ்சாவூரார் போன்ற பெரியோர் இதுகுறித்து விளக்கிச் சொல்வது புதியவர் எமக்கு நல்லது என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  39. தங்கள் பதிவிற்கு நன்றி - பயனுள்ள தகவல் - Vrajesh

    ReplyDelete
  40. UMA S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 3 November 2011 16:32
    subject sir, please put this in comment section

    அடடா, சிங்கத்தைக் கூண்டில் அடைத்து//
    கைகாட்டி, ஏழரை சனி ஆரம்பிக்கப்போகிறது, அதான் இப்படியெல்லாம்
    எனக்கு ரிஷபராசி..ஆறாமிடத்துக்கு சனி பெயர்வதாலே 'எதிரிகள் காணாமல் போவார்கள்' என்று ராசிபலன் படிச்சேன்.//

    என்ன ஒரு சந்தோசம் / வீரம்? நாங்க அவ்வளவு சீக்கிரமெல்லாம் காணாமல் போக மாட்டோம், இப்படி மெயில்
    மூலமாவாவது வருவோம். உங்கள் ஆசை நிராசையாகிவிட்டதில் மகிழ்வதோடு, என் தமிழ் ஆர்வத்துக்கு தடைபோட எந்த தீயசக்தியாலும் (இங்கு நான் தீயசக்தி என்று குறிப்பிடுவது என் அலுவலக ஐ.டி. பசங்களை, ஹி ஹி) முடியாது என்பதைக் கூறிக்கொள்ள விழைகிறேன்.

    ReplyDelete
  41. //////////// Blogger Karthikeyan said...
    தங்களுடைய வரவேற்பிற்கு மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே.
    வகுப்பறைக்கு வருவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, வகுப்பறையின் அனைத்து பதிவுகளையும், பாடங்களையும், முக்கியமாக சீனியர் மாணவர்களான தங்களது, லால்குடியாறது, மைனர், ஆனந்த் ஆகியோரது பின்னூட்ட விவாதங்களையும் படித்துள்ளேன். எப்போதாவது பின்னூட்டங்களின் மூலம் எமது கருத்தையும் தெரிவித்துள்ளேன்.//////////

    அதானே..நம்ம கார்த்தியைப் பார்த்து..ச்சே..புத்சா வந்துகிரார்ந்னு சொல்லி..பொக்கே எல்லாம் கொடுத்து ..

    ச்சே..ச்சே..என்ன ஆலாசியம் நீங்க இப்புடிப் பண்ணிட்டீங்க..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..

    விவேகானந்தர் வேற சின்ன வயசுலே முக்தி அடைஞ்சுட்டார்..இதெல்லாம் என்னாலத் தாங்க முடியலே..ரெண்டு லார்ஜ் இறக்கினாத்தான் சரியாகும் போலே..

    என்ன சொல்றீங்க பாண்டியன்..?

    கார்த்தி லூஸ்லே விடுங்க..பதிலுக்கு சிங்கப்பூர்ல ஆலாசியத்தை நேர்ல பார்க்கும்போது ஒரு ஸ்பெஷல்
    NE water பாட்டில் ப்ரெசென்ட் கொடுத்து கணக்கைத் தீர்த்துக்குங்க..ஆமாம்..

    ReplyDelete
  42. ////இப்படி மெயில்
    மூலமாவாவது வருவோம்.///

    ஏழரைச் சனி அதுவும் விரையச் சனி தன வேலையக் காட்டாம இருப்பாரா?விரையம் கால விரையத்தோடு விட்டார்னா சரிதான்..

    ////என் தமிழ் ஆர்வத்துக்கு தடைபோட எந்த தீயசக்தியாலும் (இங்கு நான் தீயசக்தி என்று குறிப்பிடுவது என் அலுவலக ஐ.டி. பசங்களை, ஹி ஹி) முடியாது என்பதைக் கூறிக்கொள்ள விழைகிறேன்.////

    ஐ.டி. பசங்களை தீய சக்தி ஆக்கிடுச்சா? சுத்தி உள்ளவுங்களைஎல்லாம் பார்த்தா இப்படித்தான் தெரியும்..கன்ஃபார்ம் ஆயிடுச்சு..

    ReplyDelete
  43. //////Blogger minorwall said...
    அந்தக் காலத்து self starter , go getter ..இந்தக்காலத்து enthusiyast எல்லோருக்கும் pioneer.
    such a great incomparable personality altogether..
    'Arise.. Awake..And stop not till the goal is reached.' என்று அடியெடுத்துக் கொடுத்த ஆசான் பற்றிய பதிவு..
    அவர் காசி விசுவநாதரின் அவதாரமாக கனவில் வந்தபடியே பிறந்தவர் என்பதும்..
    அவரே குறித்த தினத்திலே தியானத்திலே முக்தி அடைந்தார் என்பதும்
    அதுகுறித்த விக்கிபீடியாவின் விளக்கத்தில் அவரது சீடர்கள் கூறியபடி பிரம்மரந்திரா( the aperture in the crown of the head ) என்று சொல்லப்படுகிற மூளை நரம்புப் பகுதி ரத்த நாள வெடிப்பைக் காரணமாகக் கொண்டு அவர் இயற்கை அடைகிறார் என்ற செய்தி புதியது..
    வாத்தியாரின் ஜாதக விளக்கம் அருமை..நன்றி..
    இந்த பதஞ்சலி யோகா, குண்டலினி என்று பசும்பொன் அய்யா அவர்களும் பயின்றதாகக் கேள்விப்பட்டதாக ஞாபகம்..
    KMRK ,தஞ்சாவூரார் போன்ற பெரியோர் இதுகுறித்து விளக்கிச் சொல்வது புதியவர் எமக்கு நல்லது என்று நினைக்கிறேன்..//////

    நல்லது. நீங்கள் கேட்டுள்ள விளக்கம் கிடைக்கும் மைனர்.

    ReplyDelete
  44. Blogger vrajesh said...
    தங்கள் பதிவிற்கு நன்றி - பயனுள்ள தகவல் - Vrajesh/////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. வகுப்பிற்கு தாமதமாக வருகிறேன்.இணைய தொடர்பு துண்டிகபட்டதே காரணம் .

    ஆசிரியர் அவர்களே விவேகானந்தரின் மேன்மையை விளக்கும் போது உங்களை பேராசிரியர் என்றே அழைக்க தோன்றுகிறது.அதனை விளக்கமாக இருந்தது பாடம் .

    ராம கிருஷ்ணரை சந்தித்த பின்பே அவர் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது.இது 1881 இல் நடந்தது . அப்போது அவருக்கு ராஹு தசை சனி புக்தி. நரேந்ந்திரநாத் என்ற விவேகானந்தரின் வாழ்வில் அவரின் சகோதரர் எப்போதும் அவர் உடன் வந்து உள்ளார். இதற்கு காரணம் செய்வாய் 5 இல் ஆட்சியில் அமர்ந்ததாலா .

    ReplyDelete
  46. ////Karthikeyan said...
    தங்களுடைய வரவேற்பிற்கு மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே.

    வகுப்பறைக்கு வருவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, வகுப்பறையின் அனைத்து பதிவுகளையும், பாடங்களையும், முக்கியமாக சீனியர் மாணவர்களான தங்களது, லால்குடியாறது, மைனர், ஆனந்த் ஆகியோரது பின்னூட்ட விவாதங்களையும் படித்துள்ளேன். எப்போதாவது பின்னூட்டங்களின் மூலம் எமது கருத்தையும் தெரிவித்துள்ளேன். அடியேனும் சிங்கப்பூரில் இருப்பதால் தங்களை தொடர்பு கொள்ள நினைத்ததுண்டு, ஆனால் செய்ததில்லை.////



    அப்படியா! வாருங்கள் நாம் சந்திப்போமே! என்ன நண்பரே இப்படி யோசித்துக் கொண்டு இருந்து விட்டீர்கள்.. நானும் எதேச்சியாக தான் உங்களை கவனித்தேன்...எனது மின் அஞ்சல் முகவரி alasiam_g@yahoo.com தொடர்பு கொள்ளுங்கள். அவசியம் சிந்திப்போம்...

    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  47. minorwall said...
    //////////// Blogger Karthikeyan said...

    ///அதானே..நம்ம கார்த்தியைப் பார்த்து..ச்சே..புத்சா வந்துகிரார்ந்னு சொல்லி..பொக்கே எல்லாம் கொடுத்து ..

    ச்சே..ச்சே..என்ன ஆலாசியம் நீங்க இப்புடிப் பண்ணிட்டீங்க..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..////

    எதோ என் சாக்கில் இன்னைக்கு உள்ள அனுப்பனும்... சரி செய்யுங்க.. எதுக்கும் கொஞ்சம் பார்த்துக்கங்க.. ஆமாம்..

    ReplyDelete
  48. /////விவேகானந்தர் வேற சின்ன வயசுலே முக்தி அடைஞ்சுட்டார்..இதெல்லாம் என்னாலத் தாங்க முடியலே..ரெண்டு லார்ஜ் இறக்கினாத்தான் சரியாகும் போலே..
    என்ன சொல்றீங்க பாண்டியன்..?///

    ஹி..ஹி..ஹி...ஒரு ஆசைக்கு கூட இப்படி பேசவிட மாட்டீங்களே!

    ////கார்த்தி லூஸ்லே விடுங்க..பதிலுக்கு சிங்கப்பூர்ல ஆலாசியத்தை நேர்ல பார்க்கும்போது ஒரு ஸ்பெஷல்
    NE water பாட்டில் ப்ரெசென்ட் கொடுத்து கணக்கைத் தீர்த்துக்குங்க..ஆமாம்../////

    ஹா..ஹா..ஹா... நண்பன்யா!!! உங்க கோபம் புரியுது மைனர் என்னன்னு சொல்லி வாங்குறது, அதோடு நீங்களும் வந்த உடனே கெளம்பிட்டீங்களா...... உங்களுக்குத் தான் தெரியுமே எங்க வீட்டை சுத்தி தான் சிங்கப்பூரில் சொர்க்கபுரி இருக்குதுன்னு...

    பொதுவா..கோவில் பக்கத்திலே குடியிருப்பவன் கோவிலுக்கே போவதில்லை....

    என்னை கார்த்திகேயன் தைரியமாக சந்திப்பார் என்பதை உறுதி செஞ்சுட்டீங்க..

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. //பன்னிரெண்டாம் இடத்து ராகு தொடர் பயண அனுபவங்களைக் கொடுத்தான்.//

    அத்துடன் லக்னாதிபதி குரு சர ராசியில் இருப்பது சதா சஞ்சார யோகம். நிரந்தரமாக எங்கும் தங்க மாட்டார்கள்.

    எனது உறவுக்காரர் ஒருவர். கர்ம காரகன் சனி இரண்டில் 0 பரலுடன் உள்ளார். சனி தசை 2014 வரை உள்ளது. ஒழுங்காக ஒரு வேளைக்கும் செல்வதில்லை. சென்றாலும் எந்த வேலையிலும் நீடித்து இருப்பதில்லை.

    ReplyDelete
  51. சுவாமி விவேகானந்தரின் ஜாதக மேன்மையை விளக்கியதற்கு நன்றி ஐயா.

    "சாதனைகள் செய்வதற்கும், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும், வயதும், வாழும் காலத்தின் அளவும் முக்கியமல்ல என்பதுதான் உண்மை" என அவர் மேன்மையை உணர்த்திய பின் மிகவும் அழுத்தமாக எடுத்துரைக்கப் பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.

    "பிறர் முதுக்குக்கு பின்னால் நாம் செய்யும் வேலை தட்டி கொடுப்பது தான்" என்றும் ஐய்யர் ஐயா அவர்களின் பின்னூட்டம். ஆகவே, வகுப்பறை பாடங்கள், மற்றும் பின்னோட்டங்கள் மூலம் நான் அறியும் வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். அதனால் உங்கள் வகுப்புகளை நான் தவற விட விரும்புவதில்லை.

    "சாது யோகம்" என்னும் யோகம் சுவாமி விவேகானந்தருக்கு இருப்பதாக அறிந்தேன். நேரம் கிடைத்தால் அதை விளக்க முடியுமா? அது என் மகனுக்கும் இருப்பதால் தெரிந்து கொள்ளும் ஆர்வம். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  52. அப்படி என்றால் சதா சஞ்சார யோகம்... பன்னிரெண்டில் இருக்கும் ராகுதிசையில் நடந்ததாகக் கொள்ளலாமா?
    எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு...இருந்தும் இது என்னமோ பந்தடிக்கப் பட்ட வேலையாக இல்லை.. ஒவ்வொருமுறையும் புது அனுபவத்தையே கற்றேன்.. அதாவது அனுபவமும், கைப் பொருளும் படிப்படியாக உயர்ந்துக் கொண்டே தான் வந்தது... அதோடு இது எனக்கு சூரிய திசையின் பிற்பகுதியில் நடந்தது எனலாம்... அப்போது ஏழரை சனியும் கூட....

    இருந்தாலும் எனது ஜாதக யோகங்கள்
    சனி- நீசபங்க யோகம்,
    ஆதி யோகம்,
    கஜகேசரி யோகம்,
    பர்வத யோகம்,
    மாத்ரு மூலதன யோகம் (இது அம்மா மட்டுமே பெரிய சொத்தாக எனக்கு இருந்தார்கள், வேறு அவர்கள் வழியில் கிடைக்கவில்லை)
    இவைகளுக்கு இடையே
    சதா சஞ்சார யோகமும்...
    சதா சஞ்சார யோகமும் குரு லாப ஸ்தானத்திலே இருந்ததால் லாபத்தோடு கூடிய அலைச்சல் இடமாற்றம் எனக் கொள்ளலாமா?
    நன்றி..
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  53. ////தேமொழி said...
    சுவாமி விவேகானந்தரின் ஜாதக மேன்மையை விளக்கியதற்கு நன்றி ஐயா.

    "சாதனைகள் செய்வதற்கும், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும், வயதும், வாழும் காலத்தின் அளவும் முக்கியமல்ல என்பதுதான் உண்மை"////

    அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் சகோதிரி....

    "ஒரு நாள் வாழ்ந்தாலும் ரோஜாவைப் போல வாழவேண்டும் என்பார்கள்"

    நம்ம வாத்தியார் சொலவது போல்... உலகிற்கு நல்லவைகளை கொடுக்க வந்தவர்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளில் போய்விடுகிறார்கள்... அது தான் ஆண்டவன் ஆணையோ? விதை போட வந்தவர்களாகவே தோன்றுகிறது...

    ReplyDelete
  54. (அனுபவமே வேறொன்றும் இல்லை!)

    சதா சஞ்சார யோகம் சூரிய திசை என்றேன் அல்லவா!
    சூரியன் எங்கே என்று சொல்லவில்லையே அவன்...
    பன்னிரெண்டாம் வீட்டில்... (சுவாமிக்கு ராகு பன்னிரெண்டாம் வீட்டில்)
    நன்றி.

    ReplyDelete
  55. //ஒரு முக்கியமான நபரைக் காணோமே! அதிலும் சுவாமி விவேகானந்தர் விஷயமாக இருந்தும் அவர் இல்லாதது சற்று வெறுமையாகத் தெரிகிறது.//

    'பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்
    பத்தர் சொன்னதும் பன்னப்படுவதோ?'
    (பத்தர்=பகதர்)

    நானோ சுவாமிஜியின் பக்தன்.நான் சொல்வதில் என்ன சிற‌ப்பு? ஆகவே மற்றவர்களுக்காகக் காத்து இருந்தேன், கடைசிப் பின்னூட்டமாகப் போட.

    ReplyDelete
  56. அன்புடைய வாத்தியாரே,
    எமக்கோர் ஐயம்.
    ஞானியர் மகாசமாதி அடைகின்றனரே, அவர்களும் இந்த உடல் எப்பொழுது மரணமடைய வேண்டும் என்று கணித்து அப்பொழுது தான் தங்கள் உடலை உதறுவார்களோ? (அதை மரணம் என்று அழைக்க மனம் ஒவ்வவில்லை - காலதேவன் பலவந்தமாக உயிரையும் உடலையும் நம் விருப்பமின்றி பிரித்தால் மரணம். தானே பற்றற்று, உடலை உதறுவது மகாசமாதி இல்லையா...... அவர்களும், இந்த உடல் இந்த தசா புக்தியில் மரணம் அடைய வேண்டும் என்று அறிந்து/கணித்து உடலை விடுவாரா, அல்லது ஞானியானதும் அவர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் விட்டு விட அதிகாரம் உள்ளதா?
    நன்றி.........
    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.......

    ReplyDelete
  57. அன்புடைய வாத்தியாரே,
    எமக்கோர் ஐயம்.
    ஞானியர் மகாசமாதி அடைகின்றனரே, அவர்களும் இந்த உடல் எப்பொழுது மரணமடைய வேண்டும் என்று கணித்து அப்பொழுது தான் தங்கள் உடலை உதறுவார்களோ? (அதை மரணம் என்று அழைக்க மனம் ஒவ்வவில்லை - காலதேவன் பலவந்தமாக உயிரையும் உடலையும் நம் விருப்பமின்றி பிரித்தால் மரணம். தானே பற்றற்று, உடலை உதறுவது மகாசமாதி இல்லையா...... அவர்களும், இந்த உடல் இந்த தசா புக்தியில் மரணம் அடைய வேண்டும் என்று அறிந்து/கணித்து உடலை விடுவாரா, அல்லது ஞானியானதும் அவர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் விட்டு விட அதிகாரம் உள்ளதா?
    நன்றி.........
    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.......

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com