2.8.11

Astrology தன்னை மறப்பதற்கு என்ன வேண்டும்?

---------------------------------------------------------------------------------------
Astrology தன்னை மறப்பதற்கு என்ன வேண்டும்?

காவிரிக் கரையின் தோட்டத்திலே
கானம் வந்தது தோழியரே
கானம் வந்த வழியினிலே
கண்ணன் வந்தான் தோழியரே - ஆஹா
கண்ணன் வந்தான் தோழியரே


வயதையும் மறந்து ஒவ்வொருவரையும் துள்ள வைக்கும் பாடல் இது. துவழ வைக்கும் பாடல் இது. இந்த மாதிரி மனதை மயக்கும் பல பாடல்களை எழுயதால்தான் கவியரசர் கண்ணதாசன், நம் மனதில் என்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

தத்துவப் பாடல்களில்கூடக் காதல் வரிகளை அவர் நுழைத்து நம்மைக் கிறங்க அடித்திருப்பார்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா


என்று தத்துவ சாரத்தில் பாடலின் பல்லவியைத் தொடுத்தவர். சரணத்தில் காதலுக்குள் நுழைந்து விடுகிறார். வரிகளைப் பாருங்கள்.

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்


தன்னை மறப்பதற்கு என்ன வேண்டும் என்கிறார் பார்த்தீர்களா?

சிலருக்கு, தன்னை மறப்பதற்கு ஒரு குவாட்டர் இருந்தால் போதும். அவர்களுக்கு ராகு கோலோச்சும். ஆகவே குவாட்டரும் கையுமாக அலைவார்கள். சிலருக்கு குரு கோலோச்சும்,"what is next?" என்று ஆக்க பூர்வமாக அலைவார்கள். சிலருக்கு சுக்கிரன் கோலோச்சும், உலக இன்பங்களில் தங்களைப் பறி கொடுப்பார்கள். எல்லாம் ஜாதகப் பலன்.
----------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் செவ்வாய் மகாதிசையில், அதன் சுயபுத்திப் பலன்களைப் பார்த்தோம். அடுத்து செவ்வாய் மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

அதன் காலம் ஒரு ஆண்டும் பதினெட்டு நாட்களும் ஆகும்.

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பகையான சேய்திசை ராகுபுத்தி
   பாங்கில்லா நாளதுவும் வருஷம்ஒன்று
துகையில்லா நாளதுவும் பதினெட்டாகும்
   துன்பங்கள் சுரதோஷம் வாதபீடை
வகையில்லாசத்துருவும் அக்கினியுண்டாம்
   வளங்கொடியாள் விரோதமது வகையுடனேகாட்டும்
நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்
   நன்மையில்லா நிலைவிட்டு நடப்பான்காணே!


அந்த இரண்டு கிரகங்களும் மகாதிசை மாறும்போது என்ன செய்யும்? ராகு மகா திசையில் செவ்வாய் புத்தி எப்படி இருக்கும்? அது ஒன்றும் சொல்லும்படியாக இருக்காது. தீமைகள் நிரைந்ததாகத்தான் இருக்கும். பல்லைக்கடித்துக் கொண்டு அந்தக் காலகட்டத்தைக் கடக்க முயற்சிக்க வேண்டியதுதான். இறைவழிபாடு தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

கேளப்பா ராகுதிசைசெவ்வாய்புத்தி
   கேடான நாளதுவும் வருஷம்ஒன்று
நாளப்பா நாளதுவும் பதினெட்டாகும்
   நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளு
ஆளப்பா அக்கினியும் சோரபயமுண்டாம்
   அடிபணியும் தேவதையால் அவதியுண்டாம்
பாளப்பா பாவையரும் பலனுந்தீதாம்
   பாழாகும்பொருள் சிலவும் பலவிதந்தானே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
2.8.2011

-----------------------------------------------------------------------------------------
இலக்கியச் சோலை நாளை வெளிவரும்!

வாழ்க வளமுடன்!

10 comments:

  1. நான் இரண்டையும் அனுபவித்திருக்கின்றேன்....சிரமமான காலக் கட்டம் தான் ஐயா.

    ReplyDelete
  2. ராகு ராகுதான். எங்கிருந்தாலும் எப்போது வந்தாலும் பிரச்சனைதானோ ஐயா!?

    ReplyDelete
  3. good lesson

    http://astrovanakam.blogspot.com/

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!

    வாத்தியாருக்கு ஈடு வாத்தியார் தான்.

    ReplyDelete
  5. Sir, KADAKA LAGNAM, SEVVAI YOGAKARAHAN VAGRAM ADAINTHAL ENNA AAGUM

    ReplyDelete
  6. /////Blogger Ramachandran S said...
    நான் இரண்டையும் அனுபவித்திருக்கின்றேன்....சிரமமான காலக் கட்டம் தான் ஐயா.////

    அனுபவபூர்வமான தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. Blogger kmr.krishnan said...
    ராகு ராகுதான். எங்கிருந்தாலும் எப்போது வந்தாலும் பிரச்சனைதானோ ஐயா!?/////

    90 சதவிகிதம் அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளலாம் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger rajesh said...
    good lesson
    http://astrovanakam.blogspot.com///////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger kannan said...
    வணக்கம் ஐயா!
    வாத்தியாருக்கு ஈடு வாத்தியார் தான்./////

    ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனிதன்மையும், திறமையும் உண்டு. யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல கண்ணன். எல்லோருக்கும் மதிப்பெண் 337 தானே? மறந்துவிட்டீர்களா?

    ReplyDelete
  10. //////Blogger vitaspirit said...
    Sir, KADAKA LAGNAM, SEVVAI YOGAKARAHAN VAGRAM ADAINTHAL ENNA AAGUM/////

    வக்கிரம் பெற்றால் அந்த யோக பலன்கள் குறைந்துவிடும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com