1.8.11

Astrology ஓட்டத்தில் நான்காம் இடம் யாருக்கு?

---------------------------------------------------------------------------------------------
Astrology ஓட்டத்தில் நான்காம் இடம் யாருக்கு?

சென்ற பாடங்களில் சந்திர மகாதிசையில் நடைபெறும் பலன்களைப் பார்த்தோம். சந்திரனுக்கு அடுத்து செவ்வாய் திசைநடைபெறும். செவ்வாய் திசைக்கான பலன்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

இந்திய ஜோதிடத்தில் செவ்வாய்க்கு, அங்காரகன், குஜன் என்று வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் ஒரு தீய கிரகம் (Malefic Planet) சூரியனில் இருந்து நான்காம் இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கிரகம். மேஷமும், விருச்சிகமும் செவ்வாய்க்கு உரிய ராசிகளாகும். அந்த ராசிகளுக்கு அவர் அதிபதி. அந்த லக்கினக்காரகளுக்கு அவர்தான் அதிபதி. மகரராசியில் உச்சம் பெறும் அவர் அதற்கு நேர் எதிர் ராசியான கடகத்தில் நீசமைடைவார்

கடகம் மற்றும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு அவர் யோககாரகன். அதாவது யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்

Kuja is a karaka, or indicator, of brother and siblings, assertion, aggressiveness, soldiers and military endeavors, mechanical ability, engineers and surgeons, commanders and rulers, accidents, violence and war, ambition, strength, arguments and conflict, passion and desire.

செய்வாய் தன்னைத் தீவிரமாக வணங்குபவர்களுக்கு உதவி செய்யும் தன்மையை உடையவர். கடன் தொல்லை, வறுமை, நோய்வாய்ப் பட்டிருப்பவர்கள் ஆகியோர் செவ்வாயைத் தீவிரமாக வணங்குவது மிகுந்த நன்மை பயக்கும்!
--------------------------------------------------------------------
செவ்வாய் திசையின் மொத்த காலம் ஏழு ஆண்டுகள். அதில் வரும் மற்ற கிரக புத்திகளின் காலம் வேறுபடும்.

முதலில் செவ்வாய் திசையில், அதன் சுயபுத்திக்கான (Own Period) பலனைப் பார்ப்போம்

பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!


ஆமென்றசேய் திசை வருஷம் ஏழில்
   அங்காரகன் புத்திநாள் நூற்றி நாற்பத்திஏழு
போமென்ற அதன்பலனை புகழக்கேளு
   புகழான அரசர்பகை ஆயுதத்தால்பீடை
தாமென்ற சத்துருவால் வியாதியதுகாணும்
   தனச்சேதம் உடல்சேதம் தானேஉண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாம்
   நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப்பகையே


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
1.8.2011

-------------------------------------------------------------------------------------------



வாழ்க வளமுடன்!

4 comments:

  1. செவ்வாய் தசா வரும் சமயம் கிட்டத்ததட்ட 75 வயதை நெருங்கிக் கொண்டு இருப்பேன்.நான் கடக லக்னம் கடக ராசிக்காரன் என்பதால் செவ்வாய் இரட்டையோககாரகர்.
    ஆனால் செவ்வாய் 7வது தசா ஆக வருகிறார்.பார்ப்போம் என்னதான் செய்கிறார் என்று.நீங்கள் சொல்வது போல அந்த பழனியப்பன் துணைதான் காப்பாற்றும்.செவ்வாய்க்கு ஆன தெய்வம் முருகன்தானே. அப்புறம் கவலைக்கு ஏது இடம்?

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்.

    திருச்செந்தூர் குரு ஸ்தலம் தானே இல்லை செவ்வாய் எம்பெருமான் முருக பெருமானை வழிபட்ட ஸ்தலமா ஐயா.

    படித்த பாடம் எல்லாம் மறந்து போகி விட்டது ஐயா.

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    செவ்வாய் தசா வரும் சமயம் கிட்டத்ததட்ட 75 வயதை நெருங்கிக் கொண்டு இருப்பேன்.நான் கடக லக்னம் கடக ராசிக்காரன் என்பதால் செவ்வாய் இரட்டையோககாரகர்.
    ஆனால் செவ்வாய் 7வது தசா ஆக வருகிறார்.பார்ப்போம் என்னதான் செய்கிறார் என்று.நீங்கள் சொல்வது போல அந்த பழனியப்பன் துணைதான் காப்பாற்றும்.செவ்வாய்க்கு ஆன தெய்வம் முருகன்தானே. அப்புறம் கவலைக்கு ஏது இடம்?/////

    பழநி அப்பனை வணங்கினால் போதும். எல்லா சிக்கல்களுக்கும் அவனிடம் ஒரே மருந்துதான்! அவனருள்தான் அந்த மருந்து. அதைத்தான் ‘முருகனருள் முன்னிற்கும்’ என்பார்கள்

    ReplyDelete
  4. /////Blogger kannan said...
    ஐயா வணக்கம்.
    திருச்செந்தூர் குரு ஸ்தலம் தானே இல்லை செவ்வாய் எம்பெருமான் முருக பெருமானை வழிபட்ட ஸ்தலமா ஐயா.
    படித்த பாடம் எல்லாம் மறந்துபோய்விட்டது ஐயா.////

    முருகப்பெருமானின் படைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு. குருவிற்கும் அங்கே சந்நிதானம் உள்ளது.

    மறந்தால் என்ன? மீண்டும் படியுங்கள். ஆழ்ந்து படியுங்கள். மறக்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com