-------------------------------------------------------------------------------------
எப்போதும் பரவசநிலையில் இருப்பது எப்படி?
பக்தி மலர்
ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்களில் முதன்மையானவர் சுவாமி பிரமானந்தர்.
விவேகானந்தர் தானே முதல் சீடர் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால்
சுவாமி விவேகானந்தரே சுவாமி பிரமானந்தரை ஸ்ரீராமகிருஷ்ண
மடத்தின் முதல் தலைவராக ஆக்கினார்.
சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வருவதற்கு முன்னாரே
சுவாமி பிரமானந்தர் பரமஹம்ஸரிடம் வந்து அடைக்கலம் ஆகி
விட்டார். சந்நியாசப் பெயர் கிடைப்பதற்கு முன்னர் பிரமானந்தருடைய கூப்பிடும் பெயர் ராக்கால் என்பதாகும்.
அவர் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவருடைய
தந்தையார் ராக்கால் இளைஞர் ஆன பின்னர் தாரத்தை இழந்து
உடனே மறுமணம் செய்து கொண்டார். வந்த சிற்றனையுடன்
ராக்காலால் ஒத்துப்போக முடியவில்லை. அக்கால வழக்கப்படி
ராக்காலுக்கு குழந்தைத் திருமணமும் ஆகி அவருடைய மனைவியும் ராக்காலின் இல்லத்திலேயே வாழ்ந்து வந்தார். வீட்டில் தந்தையின்
மறுமணம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
மன நிம்மதி வேண்டி ராக்கால் பல இடங்களுக்கும் போய் வரலானார். அப்படித்தான் தட்சிணேஸ்வரக் கோயிலுக்கும் வந்து
ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் தரிசித்தார். கண்டதும் காதல் என்பது போல
குருவுக்கு சீடனையும், சீடனுக்கு குருவையும் பிடித்துப் போய் விட்டது.
அதன் பின்னர் அடிக்கடி வந்துபோய்க் கொண்டு இருந்த ராக்கால், ஒரு
கால கட்டத்திற்குப் பின்னர் வீட்டை மறந்து ஸ்ரீராமகிருஷ்ண
ருடனேயே தங்க ஆரம்பித்துவிட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் ராக்காலைப் பற்றி சொல்லும் போது அவர் ஒரு
நித்ய சூரி என்றும், பகவான் கண்ணன் அவதாரம் செய்தபோது இடைச் சிறுவர்களில் ஒருவராக இருந்தவர் என்றும் சொல்லியுள்ளார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னை சாரதாமணிதேவியாரை மணந்து
கொண்டார். அன்னை பூப்படைந்து கணவனுடன் வாழவரும்
முன்னரே ஸ்ரீராமகிருஷ்ணர் சந்நியாசம் பெற்றுக் கொண்டு விட்டார்.அன்னையின் ஒப்புதலின் பேரில் இருவரும் பிரமச்சரிய
விரத்ததினை மேற்கொண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு என்று சொந்தத்தில் குழந்தை இல்லை என்பது திண்ணமாகி விட்டது.
இந்நிலையில் ராக்காலின் வரவு அவர்களுக்கு ஒரு புத்திரன்
கிடைத்தது போல ஆயிற்று.
"ராக்கால் எனது அபிமான புத்திரன்" என்றே ஸ்ரீ ராமகிருஷ்ணர்
பலமுறை பலர் முன்னிலயில் பிரகடனம் செய்துள்ளார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீக வாரிசாக ராக்காலே எல்லோராலும்
ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.ஸ்ரீராமகிருஷ்ணரைப் போலவே
நிர்விகல்ப சமாதி நிலையையும், அவ்வப்போது பாவ சமாதியையும்
ராக்கால் என்ற சுவாமி பிரம்மானந்தரே அடையப் பெற்றார்.
எப்போதும் இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையில்
சுவாமி பிரமானந்தர் வாழ்ந்து வந்தார்.
சுவாமி பிரமானந்தர் ராக்காலாக இருந்த சமயம், அவருடைய இளம்
மனைவி தன்னுடைய தாயாரையும் அழைத்துக் கொண்டு
தட்சிணேஸ்வரம் வருவார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் தன்
கணவனைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி வேண்டுவார்.
"தாயே! நான் அவனை இங்கே பிடித்து வைத்துக்கொள்ளவில்லை.
அவனிடமே பேசி அவனைக் கவர்ந்து அழைத்துச் செல்லலாம்.
என்னுடைய அனுமதி ஒன்றும் தேவையில்லை."என்பார்
ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
அந்தப் பெண்ணும் ராக்காலின் மாமியாரும் ராக்காலைத்
தோட்டத்திற்கு அழைத்துச் சென்று மன்றாடுவார்கள். ராக்கால்
அசைந்து கொடுக்க மாட்டார். அவர் எப்போதும் ஆண்டவன்
சிந்தனையில் இருப்பதால் அவர்கள் பேசுவது எதுவும் காதில் விழாது.
ஒருநாள் ராக்காலின் துணைவியார் ராக்காலின் வலது கையைப் பிடித்துக்கொண்டு தன் பக்கமாக இழுத்தார். அதனைப் பார்த்துக்
கொண்டு இருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மெய்க்காப்பாளர் இருதயன்
இடது கையைப்பற்றிக் கொண்டு தன் பக்கமாக விளையாட்டாக
இழுத்தார். இரண்டு பேரையும் பற்றி அறியாமல் ராக்கால் ஆனந்த பரவசநிலையில் இருந்தார். இதை கண்ணுற்ற ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே கூறினார்:
"இதுதான் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நடைபெறுகிறது. உலக
மாயை ஒருபக்கம் இழுக்கிறது. ஆன்மீகம் மறுபக்கம் இழுக்கிறது. பெரும்பாலானவர் கள் உலகமாயைக்குக் கட்டுப்பட்டு சம்சார
சாகரத்தில் சிக்கி விடுகிறார்கள். ராக்காலைப் போல பிறக்கும்
போதே ஆன்மீகத்துடன் பிறந்த நித்யசூரிகளே தப்பித்து சம்சாரத்தில்
சிக்காமல் கரை ஏறுகிறார்கள்"
ராக்கால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் முதல் தலைவராக இருந்த
சமயம், ஒரு ஊரில் இருந்த மடம். மற்றும் மிஷன் மையங்களில்
இருந்த சன்னியாசி களிடையே கருத்து ஒற்றுமை குறைந்து போன
செய்தி அவரிடம் கூறப்பட்டது. (ஒரே ஊரில் மடம், மிஷன் இரண்டுக்கும் மைங்கள் இருப்பதுண்டு. சென்னையில் மயிலையில் இருப்பது
மடமாகும் அங்கே ஆன்மீக நடவடிக் கையே அதிகமாக இருக்கும்
சமூக சேவை மிஷன் மையங்களில்தான் அதிகமாக இருக்கும்.
சென்னையில் தி.நகரில் இருப்பது மிஷன் மையம் ஆகும்.)
கருத்து ஒற்றுமை இல்லாத சன்னியாசிகளிடையே மீண்டும் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அந்த ஊருக்கு சுவாமி பிரமானந்தர் (முன்னர் ராக்கால்) சென்றார். முதலில் மடம் மையத்தில் அவர் சென்று தங்கினார். அங்கு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து எப்போதும் போல் பரவசநிலையில் இருப்பார். பேசுவது ஒன்றும் கிடையாது. மிஷன் சன்னியாசிகள் மடத்திற்கு அவரைக் காணவந்து அவர் முன்னிலையில் மடத்து சன்னியாசிகளுடன் சேர்ந்து அமந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவர்.
மாலையில் மிஷன் மையத்திற்கு சுவாமி பிரமானந்தர் செல்வார். அங்கேயும் காலையைப் போலவே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்.மடத்து சன்னியாசிகள் மிஷன் மையத்திற்கு வந்து மிஷன் சன்னியாசிகளுடன் சேர்ந்து அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவர். அங்கே மெளனமே மொழியாக இருக்கும்.
இதுபோல ஒருவாரம் கழிந்தது. சுவாமி பிரம்மானந்தர் கிளம்பி தலைமை மடத்திற்குச் செல்ல வேண்டிய நாள் வந்தது. மடம் , மிஷன் சன்னியாசிகளின் கூட்டுக் கூட்டத்தினைக் கூட்டினார்.
சமாதானம் பேச முற்பட்டார்."உங்களின் பிரச்சனை என்ன என்று விரிவாக மனம் விட்டு என்னிடம் கூறுங்கள்" என்று ஆரம்பித்தார்.
"பிரச்சனையா?அப்படி இப்போது ஒன்றும் இல்லையே! தங்களுடன்
அமர்ந்து தியானம் செய்த போதே எங்களுக்குள் இருந்த அகம்பாவம்
எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல அழிந்து விட்டது. நாங்கள்
இனி ஒற்றுமையாக இருப்போம்."என்றனர் 'கோரசா'க.
"சரி ஸ்ரீ குருதேவரின் பணிகளை ஒற்றுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வாருங்கள்" என்று ஆசி கூறி பேலூர் மடம் திரும்பினாராம் சுவாமி.
சுவாமி பிரம்மானந்தரின் வாழ்வு இறைச் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றுமே இல்லாத வாழ்வு.அமைதியும் ஆன்ம நேயமும் வேண்டுபவர்களுக்கு நல்ல வழிக்காட்டுதல் இந்த சுவாமியின் சரிதத்தில் கிடைக்கும்.
வாழ்க சுவாமி பிரமானந்தரின் திரு நாமம்!
கே. முத்துராமகிருஷ்ணன், லால்குடி.
முகாம்:இலண்டன் மாநகரம்
பி.கு: இலண்டனில் இருந்து கையில் குறிப்பு ஒன்றும் இல்லாமல் நினைவில் இருந்து எழுதுகிறேன் விவரம் அறிந்தவர்கள் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
"தியானம் அகம்பாவத்தை சுட்டெரிக்கும் மயானம்"
ReplyDeleteநல்ல பதிவு
நன்றி!
அன்புடன் வணக்கம்
ReplyDeleteஆழ் நிலை தியானம் கைவரபெர்றறவ்ர்கள் [.நிர் விகல்ப சமாதி நிலை.]
அவர்கள் முகம் கண்டாலே இந்த உலக வாழவியல் மறந்து விடும்.!!!
[நீங்கள் எழுதியதில்...!! **பி.கு **..தான் பிழை.!!!அதற்கு தகுந்தார் போல் ""பரிசு.."" கழித்து... கொண்டு
வாத்தியார் அய்யாவிடம் சொல்லி பெற்று கொள்ளலாம் !!! .] .
வணக்கம் கிருஷ்ணன் ஐயா,
ReplyDelete//உலக மாயை ஒருபக்கம் இழுக்கிறது. ஆன்மீகம் மறுபக்கம் இழுக்கிறது.
பெரும்பாலானவர் கள் உலகமாயைக்குக் கட்டுப்பட்டு சம்சார சாகரத்தில்
சிக்கி விடுகிறார்கள். //
சத்தியமான வார்த்தைகள் ஐயா..
ஒருவேளை தப்பித் தவறி ஆன்மீக நெறிக்கு வந்தாலும் இன்றைய காலச் சூழல் அவர்களை மீண்டும் சம்சார சாகரத்திற்கே தள்ளி விடுகிறது.
அருமையான பதிவு..
நன்றி..
என் கட்டுரையை வெளியிட்டு ஆதரவு அளித்தமைக்கு நன்றி ஐயா!
ReplyDeleteசுவாமி பிரமானந்தரின் மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா? சுவாமியின் சரிதத்திலும்,ஸ்ரீராமகிருஷ்ணரின் சரிதத்திலும் நான் அளித்துள்ள தகவலுக்கு மேல் எதுவும் அந்த மாதரசியைப் பற்றி
செய்தி ஒன்றும் கிடைக்கவில்லை.சுவாமியின் மாமியாரே சுவாமியின் உயர்நிலையை நன்கு புரிந்து கொண்டு தன் மகளைச் சமாதானம் செய்து மீண்டும் மீண்டும் சுவாமியைத் தொந்திரவு செய்வதில் இருந்து விலக்கினார் என்று படித்துள்ளேன்.அன்னை சாரதாமணி தேவியாரின் தியாகத்திற்குச் சற்றும் குறைவில்லாத தியாகம் ராக்காலின் மனைவியார் செய்த தியாகமும்தான்.
அந்த மாதரசி எவ்வாறு வாழ்ந்தார், அவருடைய உணவுக்கும் உடைக்கும் என்ன செய்தார் போன்ற மேல் அதிகத் தகவல் யாருக்காவது தெரியுமானால் ஆதாரத்துடன் எனக்குச் சொல்லுங்கள்.கல்கத்தாவில் வாழ்பவர்களுக்கோ, அல்லது வங்காளிகளுடன் தொடர்பு இருப்பவர்களுக்கோ இது சாத்தியமாகலாம். அப்படி சரியான தகவல் அளிப்பவர்களுக்கு என் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
வேறு நிலையில் இருந்து சொன்னால்
ReplyDeleteவேறு மாதிரி போய்விடும் என்பதினால்
இன்றைய வகுப்பிற்கு வராமல்
இயல்பான என் நிலைக்கு போகிறேன்
கடல் கடந்து சென்றாலும்
மடல் திறந்து எழுதும் எண்ணங்களுக்கும்
எழுத்துலகம் வியந்து பார்க்கும்
எட்டாத உமது நினைவுத்திறத்திக்கும்
வாழ்த்துக்கள் .. வணக்கங்கள்..
வழக்கம் போல் திருக்குறள் சிந்தனை
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்