-------------------------------------------------------------------------------------------
Astrology உலகம் பிறந்தது யாருக்காக?
வில்லியம் ஷேக்ஸ்பியர் (1564 - 1616), ஜான் கீட்ஸ் (1795 - 1821) சாமுவேல் ஜான்சன் (1709 - 1784) லார்ட் பைரன் (1788 - 1824) வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (1770 - 1850) ஜான் மில்டன் (1608 - 1674) என்று எண்ணெற்ற ஆங்கிலக் கவிராயர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வராத சிந்தனை நம் கவியரசர் கண்ணதாசனுக்கு வந்தது. அவர்கள் ஆங்கில மொழியில் எழுதியதால் அவர்களும் உலகப் புகழ் பெற்றார்கள். அவர்களுடைய கவிதைகளும், பாடல்களும் உலகப் புகழ்பெற்றன.
ஆனால் கவியரசர் ஒரு பிரதேச மொழியில் எழுதியதால், அவருடைய பாடல்கள், சிந்தனைகள் உலக மக்களைச் சென்றடையவில்லை.
ஆனாலும் நம்மைப் பெருமைப் படுத்தியுள்ளன. நம்மை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன. அதுபோதும் நமக்கு!!!
“உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியைவிரித்தாள் எனக்காக”
என்று அற்புதமாக, ஒரு மனித மனநிலையின் உச்சகட்ட
வெளிப்பாட்டை எடுத்துக்கூரும் விதமாகக் கவியரசர் எழுதினார்.
படம் பாசம் (1961) இதைவிட வேறு என்ன நிலை வேண்டும்?
‘உலகம் பிறந்தது எனக்காக’ என்னும் ஒரு வரியில் எல்லாம் அடங்கிவிட்டது. இந்த சிந்தனை அவருக்கு மட்டுமே உரித்தானது.
வேறு எந்தக் கவிஞனுக்கும் வந்ததாகத் தெரியவில்லை!
அத்தோடு விட்டாரா? சரணத்திலும் கலக்கலாக எழுதியிருப்பார்.
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
இப்படியொரு மனநிலைமை நமக்கு ஏற்படுமா? கற்பனையில் அல்ல - நிஜத்தில் ஏற்படுமா?
ஏற்படும்! அதற்கான தசாபுத்தி நடைபெறும் காலங்களில் அப்படி ஏற்படும். அதைப் பற்றிய பாடம்தான் இன்றையப் பாடம். படித்து மகிழுங்கள். மனதிலும் வைத்துக்கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------
சென்ற பாடத்தில் சந்திர மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்த்தோம். திசை புத்தி வரிசைகளில் ராகுவிற்கு அடுத்ததாக
வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர் குரு பகவான். இன்று
சந்திர மகா திசையில் குரு/வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
அது நடைபெறும் காலம் 16 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு 4 மாதங்கள்.
இருவருமே சுபக்கிரகங்கள். மிகவும் நன்மையான பலன்கள் நடைபெறும் காலம். மகிழ்ச்சி மேலோங்கி நிற்கும். பிறகென்ன? “உலகம் பிறந்தது எனக்காக ” என்று மகிழ்ச்சியோடு அக்காலத்தை எதிர்கொள்ளுங்கள்
பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!
தேறவே சந்திரதிசை வியாழபுத்தி
தீங்கில்லா மாதமது பதினாறாகும்
கூறவேயிருந்த அதன்பலன் தன்னைக்கேளு
குணமுடைய மாதர்களும் சோபனமேயுண்டாம்
சேரவே செட்டுடனே லாபமுண்டாம்
சென்னெல்முதல் விளைவாகுஞ் செல்வம் சேரும்
வீரவே வியாதியது நிவர்த்தியாகும்
வீரான மணியமுடன் வினையகலும்பாரே!
அடுத்து வியாழ திசையில் சந்திர புத்திக்கான பலன்கள் (அதுவும் 16 மாத காலமே) புத்திநாதன் சந்திரன் சுபக்கிரகம். போட்டி போட்டுக்கொண்டு குருவிற்கு இணையானதொரு பலன்களை அவரும் வாரி வழங்குவார்.

காணவே வியாழதிசை சந்திரபுத்தி
கனமுள்ள மாதமது பதினாறாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
சுகமுடைய கலியாணம் சோபனங்களுண்டாம்
பேணவே சிவிகைமுத்து வெண்குடையுமுண்டாம்
பெரிதான ராசாவால் பெருஞ்செல்வமுண்டாம்
பூணவேதாய்தந்தை மனைவியுடன் புத்திரன்
புகழுடன் வாழ்ந்திருப்பான் பூலோகந்தன்னில்!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
25.7.2011
=================================================
வாழ்க வளமுடன்!

சந்திரதசா குருபுக்திக்காக காத்திருக்கிறேன். குருதசா சந்திரபுக்தி எனக்கு இல்லை.பாடல்கள் எல்லாம் மிக எளிமையாக உள்ளனவே. எக்காலத்தில் யாரால் எழுதப்பட்டவையோ?
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDelete/////கவியரசர் ஒரு பிரதேச மொழியில் எழுதியதால், அவருடைய பாடல்கள், சிந்தனைகள் உலக மக்களைச் சென்றடையவில்லை.///
முற்றிலும் உண்மை... கவிச்சக்ரவர்த்தி கம்பனின் உலக மகா காப்பியம் ஏன் மில்டனின் "சுவர்க்க நீக்க கதை" - யை விட சிறந்த ஒருத் தமிழ்ப் பெருங்கடல் அருளிய இராமகாவியம் கலாச்சார துறைகளில் பணியாற்றும் "யுனெஸ்கோ" வை கூட ஐம்பதுகளில் தான் அடைந்ததாம்...
////ஆனாலும் நம்மைப் பெருமைப் படுத்தியுள்ளன. நம்மை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன. அதுபோதும் நமக்கு!!!/////
இல்லை போதாது என்று தான் சொல்லவேண்டும்... அவரின் படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்று உலகம் பரவனும்.. நிச்சயம் நடக்கும் என நம்புவோம்.
பதிவிற்கு நன்றிகள் ஐயா!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசந்திரதசா குருபுக்திக்காக காத்திருக்கிறேன். குருதசா சந்திரபுக்தி எனக்கு இல்லை.பாடல்கள் எல்லாம் மிக எளிமையாக உள்ளனவே. எக்காலத்தில் யாரால் எழுதப்பட்டவையோ?/////
புலிப்பாணி என்ற முனிவரால் எழுதப்பெற்றவை. ஆனால் சாராம்சத்தை இடைப்பட்ட காலத்தில் யாரோ எளிமைப் படுத்தியிருக்கலாம். அதனால்தான் அத்தனை எளிமை.
/////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
/////கவியரசர் ஒரு பிரதேச மொழியில் எழுதியதால், அவருடைய பாடல்கள், சிந்தனைகள் உலக மக்களைச் சென்றடையவில்லை.///
முற்றிலும் உண்மை... கவிச்சக்ரவர்த்தி கம்பனின் உலக மகா காப்பியம் ஏன் மில்டனின் "சுவர்க்க நீக்க கதை" - யை விட சிறந்த ஒருத் தமிழ்ப் பெருங்கடல் அருளிய இராமகாவியம் கலாச்சார துறைகளில் பணியாற்றும் "யுனெஸ்கோ" வை கூட ஐம்பதுகளில் தான் அடைந்ததாம்...
////ஆனாலும் நம்மைப் பெருமைப் படுத்தியுள்ளன. நம்மை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன. அதுபோதும் நமக்கு!!!/////
இல்லை போதாது என்று தான் சொல்லவேண்டும்... அவரின் படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்று உலகம் பரவனும்.. நிச்சயம் நடக்கும் என நம்புவோம்.
பதிவிற்கு நன்றிகள் ஐயா!////
உங்களுடைய ஆர்வத்திற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!
இப்போது எனது நடப்பு தசா புத்தி இதுதான். சார், ஒரு சந்தேகம், மகர லக்னத்துக்கு குரு 3 / 12 க்கு அதிபதி எனும்போது பலன் எப்படி எடுத்துக்கொள்வது? ஆனால் குருவும், சந்திரனும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் (கஜகேசரி யோகம்?) இருக்கின்றன, அதனால் நன்மை என்று எடுத்துக்கொள்வதா?
ReplyDeleteஎனக்கு இந்த சந்திர தசை நடக்க நான் 108 வயசு வரை இருக்கவேண்டும்..அவசியம்தானா?
ReplyDeleteஅனுபவித்த காம்பினேஷனில் சொல்லப்போனால் குரு தசை சந்திர புத்தி காலத்தில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்தது..
நான் ஜப்பானுக்கு வந்தது இந்த காலகட்டத்தில்தான்..அப்படி நடந்தது நல்லதா கெட்டதா என்று இன்னும் எனக்குப் புரியவில்லை..