18.7.11

Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?

-----------------------------------------------------------------------------------------
 Astrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், சனிபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்த்தோம். அடுத்து  அதே சூரிய மகாதிசையில்  புதன்புத்தி, கேதுபுத்தி மற்றும் சுக்கிரபுத்தி
ஆகிய புத்திகள்  உள்ளன. அவற்றால் கிடைக்கும் பலன்களை முன்னதாகவே நடத்தப்பெற்ற பாடங்களில் பார்த்துவிட்டோம். ஆகவே சூரிய திசை நிறைவு பெறுகிறது. அடுத்து உள்ளது சந்திர மகாதிசை. அதன் மொத்த காலம் 10  ஆண்டுகள். அதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.

சந்திரன் சுபக்கிரகம். மனதுக்குக் காரகன் (authority for mind) தன்னுடைய திசை காலத்தில் சந்திரன் ஜாதகனுக்கு  மன மகிழ்ச்சியைக் கொடுப்பான். நிம்மதியைக் கொடுப்பான். வாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமாக வேண்டியது  அது இரண்டும்தானே! எந்த அளவு கொடுப்பான் என்பது ஜாதகத்தில் சந்திரனுடைய நிலைமை, சேர்க்கை, மற்றும்  வலிமையைப் பொறுத்து மாறுபடும்.

மொத்த திசை காலமான பத்து ஆண்டுகளுக்கும் அப்படி நடைபெறுமா என்றால், இருக்காது. அதன் மகாதிசையில்  உள்ளே நிலையும் பாப கிரகங்களான, தீய கிரகங்களான, சனி, ராகு ,கேது ஆகிய கிரகங்களின்
புத்தி காலங்களில் அவற்றின் கையே ஓங்கியிருக்கும். அவைகள்
மகாதிசை நாதனான சந்திரனை ஓரங்கட்டிவிட்டு,  தங்களின்
கைவரிசையைக் காட்டுவார்கள். அதை மனதில் கொள்க!
---------------------------------------------------------------
சந்திர திசையில் முதலில் அதன் சுயபுத்தி நடைபெறும். அதன் காலம் பத்து மாதங்கள். அதன் பலனுக்கான  பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

சொல்லவே சந்திரதிசை வருஷம் பத்தில்
   சுகமுடைய சந்திரபுத்தி மாதம்பத்து
நில்லவேயதனுடைய பலனைச் சொல்வோம்
   நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
   சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
    வேணபடி நிதிசேரும் விபரந்தானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
18.7.2011

---------------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

14 comments:

  1. சந்திரதசா எனக்கு வர இருக்கிறது,இன்னும் 4 ஆண்டுகளில்.ஆட்சியில் சந்திரன். பூச நடசத்திரகாரனல்லாவா நான்.சந்திரனுக்கு குருவின் நேர் பார்வை வேறு. ஆகவே இறுதிக் காலம் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.அத்துடன் 6 தசா முடிந்துவிடும்.அடுத்த‌ செவ்வாய் தசா யோககாரகன் தசா. எப்படியிருக்குமோ பார்ப்போம்.

    ReplyDelete
  2. பௌர்ணமியை ஒட்டி சந்திரன் பற்றிய
    பாடம்..

    நன்று ஐயா..

    இந்த கடலில் நீந்திக் கொண்டேயிருக்கிறோம்.

    நன்றி...

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  3. செவ்வாய் தசையில் பிறந்த எனக்கு சந்திர தசை வர வேண்டுமானால் 100 வயதிற்கு மேல் வாழ்ந்தால்தான் முடியும். தசா நாதராக வந்து தர முடியாததை புத்தி நாதராக வந்து (நல்லதோ/கெட்டதோ) தருவார்.

    ReplyDelete
  4. யாராவது பின் ஊட்டம் போட என
    யாருக்கோ உள்ளதை தமக்குள்ளதாக

    எப்போதும் சொல்வதும் கூடாது
    எதையாவது சொல்லனும் என

    சாதரண நாட்களை முழுநிலாவாக
    சும்மா சொல்ல நாம் பட்டரல்லவே

    மனக்காரகன் சந்திரன் என்பதினால்
    மனதில் பட்டதை சொல்லட்டும் என

    அவர்களுக்காக எப்போதும் போல்
    அமைதி கொள்வோம் அன்புடனே..

    இன்றைய வகுப்பின் குறள் சிந்தனை
    இதோ நமக்காக...

    சொல்லுக சொல்லிற் பயனுடைய யாராவது பின் ஊட்டம் போட என
    யாருக்கோ உள்ளதை தமக்குள்ளதாக

    எப்போதும் சொல்வதும் கூடாது
    எதையாவது சொல்லனும் என

    சாதரண நாட்களை முழுநிலாவாக
    சும்மா சொல்ல நாம் பட்டரல்லவே

    மனக்காரகன் சந்திரன் என்பதினால்
    மனதில் பட்டதை சொல்லட்டும் என

    அவர்களுக்காக எப்போதும் போல்
    அமைதி கொள்வோம் அன்புடனே..

    இன்றைய வகுப்பின் குறள் சிந்தனை
    இதோ நமக்காக...

    சொல்லுக சொல்லிற் பயனுடைய
    சொல்லற்க
    சொல்லில் பயனில்லா சொல்..

    சொல்லற்க
    சொல்லில் பயனில்லா சொல்..

    ReplyDelete
  5. " பௌர்ணமியை ஒட்டி "

    இந்த வார்த்தைக்கு விளக்கம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்..

    ReplyDelete
  6. அய்யர் அவர்களே!

    சொல்லுக சொல்லை கொஞ்சம் புரிகின்ற மாதிரி, நேரடியாக, மழுப்பலில்லாமல் ......

    'நான் இதைச் சொன்னால் அப்படியாகிவிடும்,அதைச்சொன்னால் இப்படி ஆகிவிடும்' என்ற ஆலாபனை எப்போதுதான் முடியும் அய்யரவர்களே!?

    ReplyDelete
  7. ///////Blogger kmr.krishnan said...
    சந்திரதசா எனக்கு வர இருக்கிறது,இன்னும் 4 ஆண்டுகளில்.ஆட்சியில் சந்திரன். பூச நடசத்திரகாரனல்லாவா நான்.சந்திரனுக்கு குருவின் நேர் பார்வை வேறு. ஆகவே இறுதிக் காலம் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.அத்துடன் 6 தசா முடிந்துவிடும்.அடுத்த‌ செவ்வாய் தசா யோககாரகன் தசா. எப்படியிருக்குமோ பார்ப்போம்./////

    பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான் என்று விட்டு விடுங்கள். எல்லாம் நன்றாகவே இருக்கும் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    பௌர்ணமியை ஒட்டி சந்திரன் பற்றிய பாடம்..
    நன்று ஐயா..
    இந்த கடலில் நீந்திக் கொண்டேயிருக்கிறோம்.
    நன்றி...
    http://sivaayasivaa.blogspot.com
    சிவயசிவ//////

    நல்லது நன்றி சிவாய ஜானகிராமன்!

    ReplyDelete
  9. //////Blogger ananth said...
    செவ்வாய் தசையில் பிறந்த எனக்கு சந்திர தசை வர வேண்டுமானால் 100 வயதிற்கு மேல் வாழ்ந்தால்தான் முடியும். தசா நாதராக வந்து தர முடியாததை புத்தி நாதராக வந்து (நல்லதோ/கெட்டதோ) தருவார்./////

    இப்போது வயது என்ன நாற்பதா? 150 வயது வரை வாழ்வீர்கள். இருக்கும் நாடு அத்தனை செழிப்பானது (உங்கள் மனதைப்போல, மற்றும் பெயரைப்போல)

    ReplyDelete
  10. /////Blogger iyer said...
    யாராவது பின் ஊட்டம் போட என யாருக்கோ உள்ளதை தமக்குள்ளதாக எப்போதும் சொல்வதும் கூடாது
    எதையாவது சொல்லனும் என சாதரண நாட்களை முழுநிலாவாக சும்மா சொல்ல நாம் பட்டரல்லவே மனக்காரகன் சந்திரன் என்பதினால் மனதில் பட்டதை சொல்லட்டும் என அவர்களுக்காக எப்போதும் போல்
    அமைதி கொள்வோம் அன்புடனே..
    இன்றைய வகுப்பின் குறள் சிந்தனை இதோ நமக்காக...சொல்லுக சொல்லிற் பயனுடைய யாராவது பின் ஊட்டம் போட என யாருக்கோ உள்ளதை தமக்குள்ளதாக எப்போதும் சொல்வதும் கூடாது எதையாவது சொல்லனும் என சாதரண நாட்களை முழுநிலாவாக சும்மா சொல்ல நாம் பட்டரல்லவே/////////

    ஒன்னுமே புரியலே - விசுத் தம்பி
    உங்கள் உலகத்திலே!

    ReplyDelete
  11. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    " பௌர்ணமியை ஒட்டி " இந்த வார்த்தைக்கு விளக்கம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்..//////

    பெளர்ணமியை ஒட்டி, அமாவாசையை ஒட்டி என்பதை எல்லாம் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளூங்கள்.
    எல்லா நாளும் நல்ல நாட்களே! எல்லா நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே. எல்லாத் திதிகளுமே நன்மையானவையே!

    ராமபிரான் ஜனித்தது நவமி திதியில்
    பகவான் கிருஷ்ணர் அவதரித்து அஷ்டமி திதியில்!

    ReplyDelete
  12. ///'நான் இதைச் சொன்னால் அப்படியாகிவிடும்,அதைச்சொன்னால் இப்படி ஆகிவிடும்' என்ற ஆலாபனை எப்போதுதான் முடியும் அய்யரவர்களே!?.///

    தெளிவாக தானே சொல்லி உள்ளது
    தெளிவு எதில் என்பதில் புரியவில்லை

    ஆலாபனை செய்ய உங்கள்
    அய்யர் கச்சேரி நடத்தவில்லையே

    ஒருவருக்கு நல்லது என்பது மற்ற
    ஒருவருக்கு கெட்டதாக அமையும்

    இது தானே வாழ்க்கை முறை
    இதனால் அவரவர் மனநிலைக்கு

    அதனை அப்படி புரிந்து கொண்டு
    அதன்படியே அன்பு செய்யட்டும் என

    அமைதி கொள்கிறோம்..
    ஆரவாரம் துளியும் இன்றி..

    ReplyDelete
  13. ///ஒன்னுமே புரியலே - விசுத் தம்பி
    உங்கள் உலகத்திலே!///

    அப்படியென்றால்...

    ReplyDelete
  14. //////Blogger iyer said...
    ///ஒன்னுமே புரியலே - விசுத் தம்பி
    உங்கள் உலகத்திலே!///
    அப்படியென்றால்.../////

    உரை நடையை இரண்டு வரிகளாகப் பிரித்து எழுதாதீர்கள் என்றேன். ஒரே பின்னூட்டத்தை மூன்று முறை அடுத்தடுத்து அனுப்பாதீர்கள் என்றேன். வாத்தியார் சொல்வதைச் சற்றுச் செவி மடுத்துக் கேட்டால் பரவாயில்லை!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com